அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
கோமா நிலையில் பொதுச்சபை.. தமிழர் நிலை..? | இரா மயூதரன்
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியாவின் '13' பூச்சாண்டியும் தமிழ்க்கட்சிகளும் | இரா மயூதரன்
-
- 0 replies
- 498 views
-
-
-
Published By: DIGITAL DESK 7 01 OCT, 2024 | 10:47 AM பாகம் 1 டி.பி.எஸ். ஜெயராஜ் அமெரிக்க பத்திரிகையாளர் எட்கார் சினோவின் ' சீன வானில் சிவப்பு நட்சத்திரம் ' (Red Star over China ) என்ற நூல்தான் கட்டுரைக்கு இந்த தலைப்பை வைப்பதற்கு தூண்டுதல் அளித்தது. சீனக் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங்குடனும் செஞ்சேனையுடனும் தனது ஊடாட்டம் பற்றிய உயிர்களையுடைய விபரிப்பாக அமைந்த அந்த முதலில் 1937 ஆம் ஆண்டில் பிரசுரமானது. மாவோ என்று அறியப்பட்ட மாவோ சேதுங்கைப் பற்றி அந்த நேரத்தில் மேற்குலகில் பெரிதாகத் தெரியாது. பல வருடங்கள் கழித்து மாவோவின் தலைமையில் கம்யூனிஸ்டுகள் சீனாவில் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது ' சீன வானில் சிவப்பு நட்சத்திர…
-
-
- 7 replies
- 1k views
- 1 follower
-
-
-நஜீப் பின் கபூர்- 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நாம் நிறைய கட்டுரைகளை எழுதி மக்களைத் தெளிவுபடுத்தி வந்திருந்தோம். நமது கருத்துகள் அப்போது பக்கச்சார்பாக இருந்தது என்று சிலருக்கு யோசிக்க இடமிருந்தது. ஆனால் நாம் யதார்த்தத்தை தான் சொல்லி வந்திருக்கின்றோம் என்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகின்றோம். இன்றும் அதேபோல கள நிலைவரங்களையும் யதார்த்தங்களையும் தான் எமது வாசகர்களுக்கு சொல்லலாம் என்று எதிர்பார்க்கின்றோம். அனேகமான ஊடகங்களும் அரசியல்வாதிகளும் மக்களைக் கடந்த காலங்களில் பிழையான தகவல்களை-நம்பிக்கைகளைக் கொடுத்து ஏமாற்றி வந்திருக்கின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாம் வலியுறுத்தி சொன்ன சில தகவல்களை மீண்டும் ஒருமுறை சுருக்கமாக இங்கு …
-
- 0 replies
- 407 views
- 1 follower
-
-
மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர் September 29, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இரு வருடங்களுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றம் ஜனாதிபதியாக தெரிவு செய்தபோது இலங்கை வரலாறு கண்டிராத மக்கள் கிளர்ச்சியினால் இறுதியில் பயனடைந்தவர் அவரே என்று கூறப்பட்டதுண்டு. ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் அந்த கிளர்ச்சியின் உண்மையான பயனாளி யார் என்பதை உலகிற்கு காட்டியது. இடதுசாரி அரசியல் கட்சிகளினதும் அவற்றின் தொழிற் சங்கங்களினதும் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட 1953 ஆகஸ்ட் ஹர்த்தால் போராட்டத்துக்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புணர்வை பயன்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் எஸ்.டபிள்யூ. ஆர…
-
-
- 21 replies
- 1.2k views
- 1 follower
-
-
-
-
- 42 replies
- 2.3k views
- 1 follower
-
-
இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தரும் செய்தி என்ன?(கேள்வி, பதில் வடிவில்) September 27, 2024 — வி. சிவலிங்கம் — கேள்வி: நடந்து முடிந்த 9வது ஜனாதிபதித் தேர்தல் என்பது பல வகைகளில் வித்தியாசமானது எனக் குறிப்பிடப்படுகிறது. அவை எவை? பதில்: சுதந்திரத்திற்குப் பின்னதான தேர்தல்களில் இத் தேர்தல் என்பது மிகவும் அமைதியாக நடைபெற்றதாக பலரும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இத் தேர்தலை ஐரோப்பிய நாடுகளில் இடம்பெறும் அமைதியான தேர்தல்களோடு பலரும் ஒப்பிடுகின்றனர். இதற்கான பிரதான காரணம் நாடு பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கியுள்ள நிலையில் தேர்தல் செலவினம் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதை சாமான்ய மக்களே புரிந்திருந்த நிலையில் அவ…
-
- 0 replies
- 373 views
-
-
அனுர செய்யக்கூடிய மாற்றம்? - நிலாந்தன் இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு நசுக்கப்பட்ட ஒரமைப்பு, இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட ஓரமைப்பு, அதன் தலைவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இன்றி என்கவுண்டரில் கொல்லப்பட்டவர். அப்படிப்பட்ட ஓரமைப்பின் தலைவர் இப்பொழுது நாட்டின் அரசுத் தலைவராக வந்திருக்கிறார். ஆயுதப் போராட்டத்தில் தொடங்கி அரசுத் தலைவர் பதவி வரையிலுமான இந்த வளர்ச்சியை ஏற்கனவே ஓர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களாகிய தமிழ் மக்கள் ஆர்வத்தோடு பார்க்க வேண்டும். அதன் பொருள் அனுரவின் மாற்றம் என்ற கோஷத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ, அல்லது இனப்பிரச்சினைக்கான அவருடைய தீர்வை நம்ப வேண்டும் என்பதோ அல்ல. ஆயுதப் போராட்டத்தில் தொடங்கி அரசுத் தலைவர் வரையிலு…
-
- 1 reply
- 521 views
- 1 follower
-
-
பொது வேட்பாளர் பெற்ற வெற்றிகள் – நிலாந்தன். பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தியமை என்பதே முதலாவது வெற்றி. ஏனெனில் ஓர் அரசுடைய தரப்பு வைக்கும் தேர்தலை அரசற்ற தரப்பு எப்படி படைப்புத்திறனோடும் புதுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் எதிர்கொள்ள முடியும் என்பதற்கு பொது வேட்பாளர் ஒரு முன்னுதாரணம். அரசற்ற தரப்பு ஒன்று அரசாங்கம் நடத்தும் ஒரு தேர்தலை தன்னுடைய கூட்டு விருப்பை வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாக பயன்படுத்தியது ;அத்தேர்தல் களத்தைத் தேசத்தைத் திரட்டும் ஒரு பயில் களமாகாகக் கையாண்டமை என்பது முதலாவது வெற்றி. இரண்டாவது வெற்றி, பொது வேட்பாளர் தமிழ் மக்களை ஐக்கியப் படுத்துவதில் முதற்கட்டத் திரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அரியநேத்திரன் பெற்ற வாக்குகள் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரம்.…
-
-
- 10 replies
- 1k views
- 1 follower
-
-
புரட்சி – கருப்பு பட்டன் – கபர கொய்யான் – கொல்லப்பட்ட 60,000 இளைஞர்கள்: இலங்கையின் ரத்த கதை! SelvamSep 23, 2024 13:57PM மோகன ரூபன் இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக்கா வெற்றி பெற்றிருக்கிறார். இலங்கையில் அதிபர் பொறுப்பேற்ற முதல் இடதுசாரி தலைவர் என்ற பெருமையை இன்று அவர் பெற்றிருக்கிறார். 1987ஆம் ஆண்டு ஜே.வி.பி. என்ற ஜனதா விமுக்தி பெரமுனா (மக்கள் விடுதலை முன்னணி) அமைப்பில் இணைந்த இவர், இப்போது அந்த அமைப்பின் தலைவரும் கூட. அனுர குமார திசநாயக்கா, இலங்கையின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள இந்த நேரத்தில், நான் கொழும்பு நகரில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில், 1971ஆம் ஆண்டு ஜே.வி.பி. நடத்திய (அல்லது நடத்த முயன்ற) புரட்சியைப்பற்றி இப்போது நினைவு…
-
-
- 4 replies
- 797 views
-
-
26 SEP, 2024 | 12:24 PM பிரசாத் வெலிக்கும்புர தென்னிலங்கையின் பிராந்தியங்களில் இருந்து குறிப்பாக, சிங்கள பௌத்தர்கள் அதிக பெரும்பான்மையாக வாழும் பாகங்களில் இருந்து பெரும்பான்மையானவர்களின் ஆதரவைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறார். இதற்கு மாறாக, சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளின் குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கூடுதலான ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள். அதன் விளைவாக, திசாநாயக்கவுக்கு வாக்களிக்கவில்ல…
-
- 0 replies
- 189 views
- 1 follower
-
-
25 SEP, 2024 | 11:00 AM "மாலைதீவு விவகாரத்தில் கடைப்பிடித்ததை போன்று இலங்கை விவகாரத்திலும் இந்தியா பொறுத்திருந்து பார்க்கும் அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்." "நெருக்கடியான நேரங்களில் முதலில் உதவிக்கு ஓடிவருகின்ற நட்பிணக்கமும் அன்பாதரவும் கொண்ட ஒரு பிராந்திய வல்லரசு இந்தியா என்பதை இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுராகுமார திசாநாயக்க புரிந்துகொள்வதற்கு புதுடில்லி கால அவகாசத்தை வழங்கவேண்டும்." "தற்போது ஆட்சியதிகாரத்துக்கு வந்துவிட்ட ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) அதன் பிரத்தியேகமான சிங்கள தேசியவாதத்தைக் கைவிட்டு சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக தமிழர்களின் அக்கறைகளை கையாளுவதற்கு சகல சமூகங்களையும் அரவணைக்கும் அணுகுமுறையைக் கடை…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
சிங்கள பாடப் புத்தகங்களில் தமிழர்கள் இந்தியாவிலிருந்து வந்ததாகவும் சிறுபான்மை இனம் என்றால் கீழ்சாதி என்றும் பெரும்பான்மை இனம் என்றால் மேல்சாதி என்றும் சிங்களத்தில் சொல்கிறார்கள். நடந்து முடிந்த தேர்தல் அடுத்துவரும் தேர்தல் என்று பலதையும் தொட்டுச் செல்கிறார்கள்.
-
- 0 replies
- 429 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-
-
அனுரவின் அதிரடி மாற்றங்களும்! வரப்போகும் மாவீரர் தினமும்!
-
- 0 replies
- 1.3k views
-
-
இவரைப்பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை.அரகலய போராட்டத்தில் முன்நின்றிருக்கிறார்.மிகமிக தெளிவாக பேசுகிறார். இவரின் கதையைக் கேட்டால் செந்தில் தொண்டமான் மேல் கெட்ட கோபம் வருகிறது.
-
-
- 5 replies
- 841 views
- 1 follower
-
-
தீபச்செல்வன் தியாக தீபம் திலீபன் பற்றிய பாடல் ஒன்றை பெருமளவான சிங்கள மக்களும் இளைஞர்களும் கேட்டு வருகிறார்கள். 2009 இனப்படுகொலைப் போர் முடிந்த தருணத்திலேயே திலீபனுக்காக சில சிங்களக் கவிஞர்கள் கவிதைகளை எழுதியிருந்தார்கள். திலீபன் தமக்காகவும் தியாக நோன்பிருந்தார் என்ற பார்வை பெருமளவான சிங்கள உறவுகளிடையே இருக்கிறது உண்மையில் ஈழ விடுதலைப் போராளிகள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்களல்ல, அவர்கள் ஒட்டுமொத்த இலங்கைத் தீவுக்கும் காவலாக இருந்தார்கள். இதனை கடந்த காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில் பல சிங்கள மக்களே ஒப்புக் கொண்டதையும் நாம் கண்டிருக்கிறோம். திலீபனின் நினைவேந்தல் ஊர்தி இன்று தியாக தீபம் திலீபனின் வீரவணக்கப் படத்தை தாங்கியபடி ஊர்தி …
-
- 0 replies
- 559 views
- 1 follower
-
-
நாங்களும் விதைக்கப் பட்டவர்களே-பா.உதயன் They tried to bury us. They didn’t know we were seeds.” அவர்கள் எங்களை புதைக்க நினைத்தார்கள் ஆனால் நாங்கள் விதைகள் என்று அவர்களுக்குத் தெரியாது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமாரா திசநாயக்கா சொன்ன முதல் வாக்கியம் இது. எந்த இனமாக இருந்தாலும் அந்த இனத்தின் விடுதலைக்காக போராடும் விடுதலைப் போராளிகளை ஆட்சியாளர்களும் அடக்குமுறையாளரும் கொன்று புதைக்கலாம் என்று தான் நினைகிறார்கள் ஆனால் அவர்கள் புதைக்க நினைப்பதெல்லாம் விதை என்பதை மறந்து விடுகிறார்கள். ஒரு காலம் பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் இன்னொரு காலம் விடுதலைப் போராளிகளே. உங்களைப் போலவே ஒரு காலம் மாற்றம் வேண்டியும், சம நீதி வேண்டியும், எமக்க…
-
- 0 replies
- 301 views
-
-
Published By: RAJEEBAN 25 SEP, 2024 | 02:48 PM By SHIHAR ANEEZ ECONOMYNEXT – இலங்கையின் திறந்த பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றும்போது மார்க்சிச ஜேவிபியின் செயற்பாட்டாளர் போன்று சமூக அநீதிகளிற்கு எதிராக கருத்து தெரிவித்தவேளை அவர் கேலி செய்யப்பட்டார். எனினும் இலங்கையின் பிரதமராவேன் என ஹரிணி ஒருபோதும் எண்ணவில்லை. கொழும்பின் உயர்குழாமை சேர்ந்த குடும்பத்தின் இளையவரான 55 வயதான ஹரிணி இலங்கையின் 16 வது பிரதமராக பதவிபிரமாணம் செய்துகொண்டுள்ளார். இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் அவர். பிஷப் கல்லூரியின் பழைய மாணவியான அவர் இளவயதிலேயே அநீதிக்கு எதிராக குரல்கொடுத்தவர். அது தனது தந…
-
-
- 48 replies
- 7.3k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
Published By: RAJEEBAN 23 SEP, 2024 | 11:56 AM எரிக்சொல்ஹெய்ம் இடதுசாரி அனுரகுமார திசநாயக்க வார இறுதியில் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாரம்பரிய உயர்குழாமிற்கு வெளியே ஒருவரை இலங்கை மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்வது சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில் இதுவே முதல் தடவை. ஏகேடி என அழைக்கப்படும் திசநாயக்க அனுராதபுரத்தில் மிகவும் சாதாரண குடும்ப பின்னணியை கொண்டவர். அவரது கட்சியோ அல்லது கூட்டணியோ கடந்த காலத்தில் ஆட்சிக்கு அருகில் இருந்ததில்லை. பொருளாதார நெருக்கடியின் போது வறிய ஏழ்மையான நிலையில் உள்ள இலங்கையர்கள் அனுபவித்த வலிக்கு இந்த தேர்தல் முடிவு ஒரு சான்று. …
-
- 1 reply
- 327 views
- 1 follower
-
-
இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மெஜாரிட்டி - புதிய ஜனாதிபதியால் சட்டமியற்ற முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் 9-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுர குமார திஸாநாயக்க கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 23 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் 9-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றுள்ள நிலையில், எதிர்கால அரசியல் திட்டங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக இலங்கை அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அநுர குமார திஸாநாயக்க த…
-
- 0 replies
- 544 views
- 1 follower
-
-
புருஜோத்தமன் தங்கமயில் “…தமிழ்ப் பொது வேட்பாளரான பாக்கியசெல்வம் அரியநேத்திரன், தமிழர் தாயகத்தில் ஐந்து இலட்சத்துக்கும் குறையாமல் வாக்குகளைப் பெற்றாக வேண்டும். அப்போதுதான், அது தமிழ்த் தேசிய அரசியலின் வெற்றியாக பார்க்கப்படும்....” என்று தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் அண்மைய youtube செவ்வியொன்றில் தெரிவித்திருந்தார். இந்தப் பத்தியாளரோ, சில வானொலிச் செவ்விகளில் 160,000 முதல் 180,000 வரையான வாக்குகளை அரியநேத்திரன் பெறுவார் என்று கூறி வந்திருக்கிறார். ஆனால், இந்தப் பத்தியாளர் எதிர்வுகூறியதைக் காட்டிலும் 46,343 வாக்குகளை அவர் அதிகம் பெற்றிருக்கிறார். அதேவேளை, பொது வேட்பாளருக்காக சொந்தக் கட்சியின் முடிவுக்கு எதிராக நின்று வாக…
-
-
- 8 replies
- 728 views
- 2 followers
-