அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9222 topics in this forum
-
ஜே.வி.பி.யும் ஜனாதிபதி தேர்தலும் வீ.தனபாலசிங்கம் ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்காக ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட மாபெரும் பேரணியின்போது கொழும்பு காலிமுகத்திடலில் பெருக்கெடுத்த மக்கள் வெள்ளம் நிச்சயமாக அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் இலங்கையில் வேறு எந்த அரசியல் பேரணியிலும் நாம் கண்டிராததாகும். சுமார் 30 அரசியல் கட்சிகள், குழுக்கள், சிவில் சமூக மற்றும் புத்திஜீவிகள் அமைப்புக்களை உள்ளடக்கிய இந்த இயக்கத்தின் பேரணி இடதுசாரி ஆதரவாளர்களுக்கு குறிப்பாக, பழைய இடதுசாரிக்கட்சிகள் பெரும் செல்வாக்குடன் செயற்பட்ட காலகட்ட அனுபவங்கைளைக் கொண்டவர்களுக்கு ஒரு ' மருட்சியை ' ஏற்…
-
- 0 replies
- 409 views
-
-
மதகுருமாரின் அரசியல் பிரவேசமும் ஆதிக்கமும் மொஹமட் பாதுஷா / 2020 ஜனவரி 03 , மத போதகர்களின் வாழ்க்கை என்பது, அர்ப்பணிப்புகள் நிறைந்தது. அதுவும், இல்லறமும் இன்னபிற இன்பங்களும் அற்ற துறவுநிலை, மிகவும் உன்னதமாகவே கருதப்படுகின்றது. அந்தவகையில், எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மத போதகர்கள், துறவிகள் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள். இந்த மதிப்பு, எதுவரைக்கும் என்றால், அவர்கள் தமது மதக் கடமைகளையும் போதனைகளையும் முன்மாதிரியாகவும் கண்ணியமாகவும் முறையாகவும் செய்வது வரைக்குமானதாக இருக்கும். ஆனால், இலங்கையில் மத போதகர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்வோரில் சிலர், செய்கின்ற அபத்தமான காரியங்களின் காரணமாக, அவ்வாறனவர்கள் மீதான விமர்சனப் பார்வையொன்று, எழ…
-
- 0 replies
- 514 views
-
-
ஜெனீவா எதிர் கொழும்பு: மீண்டும் ஆரம்பித்த மோதல் எம்.எஸ்.எம். ஐயூப் இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையுடன் மீண்டும் மோத ஆரம்பித்துள்ளது. இலங்கை அரசாங்கமாக இருந்தாலும் அது, மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவின் அரசாங்கம் என்பதாலேயே, இந்த நிலைமை உருவாகியிருக்கிறது. கடந்த வருடம், இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைப் பேரவையில், இலங்கை தொடர்பான ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், அந்த இணை அனுசரணையை இம்முறை வாபஸ் பெற்றுக் கொண்டது. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் 2012, 2013, 2014 ஆகிய …
-
- 0 replies
- 437 views
-
-
-
வடகிழக்கில் அரசின் 100 விகாரைகள்! தமிழர் கலாசார மரபுரிமை அழிப்பு! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் நல்லிணக்கம் என்ற சொல் இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் காலத்தில்தான் அறிமுகமானது. ஈழத் தமிழ் மக்கள்மீது மிகக் கொடிய இனப்படுகொலை போரை நடாத்திவிட்டு அந்தப் போரரையே நல்லிணக்கத்திற்காக நடத்தியதாக கூறியவர் மகிந்த ராஜபக்ச. அத்துடன் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், தமிழ் நிலத்தில் இராணுவ ஆக்கிரமிப்புக்களையும் சிங்களக் குடியேற்றங்களையும் தமிழர் கலாசார உரிமை மீறல்களையும் தீவிரவாக முன்னெடுத்தபோது அதற்கு நல்லிணக்க நடவடிக்கை என்றே பெயர் சூட்டினார் மகிந்த ராஜபக்ச. உலகில் மனிதாபிமானத்திற்காக, இனப்படுகொலை போர்…
-
- 0 replies
- 706 views
-
-
தடுமாற்றமான அணுகுமுறைகளினால் வாய்ப்புக்களைத் தவறவிடும் அரசாங்கம் இலங்கையில் இதுகாலவரையில் பதவியில் இருந்த அரசாங்கங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கத்தைப் போன்று வேறு எந்தவொரு அரசாங்கமுமே படுமோசமான ஊழல் மோசடிகள், எதேச்சாதிகாரம், அதிகார துஷ்பிரயோகம், சட்டத்தின் ஆட்சி சீர் குலைவு, குடும்ப அரசியல் ஆதிக்கம் மற்றும் உரிமை மீறல்களுடன் கூடுதலான அளவுக்கு அடையாளப்படுத்தப்பட்டதில்லை. அந்தக் கெடுதிகள் எல்லாவற்றையும் இல்லாதொழித்து ஜனநாயகத்தை மீட்டெடுத்து புதியதொரு அரசியல் கலாசாரத்தை அறிமுகம் செய்து நல்லாட்சியை ஏற்படுத்தப் போவதாக நாட்டு மக்களுக்கு வா…
-
- 0 replies
- 465 views
-
-
ஜெய்ஷங்கரின் உரை மிரட்டலா? -எம்.எஸ்.எம். ஐயூப் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்ஷங்கரின் இலங்கை விஜயம், தமிழ் அரசியல் கட்சிகளுக்குப் பெரும் எதிர்பார்ப்பை அளித்துள்ளதாகத் தெரிகிறது. இலங்கை வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் வௌியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர், கடந்த ஆறாம் திகதி கொழும்பில் நடத்திய கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டின் போது, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுலாக்குவது தொடர்பாக, மீண்டும் வலியுறுத்தியமையே அதற்குக் காரணமாகும். இந்தியத் தலைவர்களின் இந்த வலியுறுத்தல், ஏதும் புதிய விடயமல்ல; இலங்கைத் தலைவர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்தாலோ, இந்தியத் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தாலோ, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுலாக்க வேண்டும் …
-
- 0 replies
- 683 views
-
-
ஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு - நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை இலங்கைத் தீவின் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே The debrief என்ற யூடியூப் சனலில் ரோயல் ரெய்மெண்ட்டிற்கு மிக நீண்ட நேர்காணலை வழங்கியிருந்தார்.நேர்காணலில் அவர் பல விடயங்களைப் பற்றியும் கதைக்கிறார். அதில் ஓரிடத்தில் அவர் கூறுகிறார்….”இலங்கை ஒரு சிறிய நாடு அதன் பொருளாதாரமும் சிறியது ஆனால் அதன் அமைவிடம் காரணமாக அதற்குள்ள கேந்திர முக்கியத்துவத்தை கருதிக்கூறின் அது ஒரு பெரிய நாடு”என்று. அதுதான் உண்மை. இந்துமகா சமுத்திரத்தில் இலங்கைத் தீவின் அமைவிடம்தான் அதன் பலம். அதேசமயம் அதுதான் அதன் துயரமும். இது சிங்கள மக்களுக்கும் பொருந்தும் தமிழ் மக்களுக்கும் பொருந்தும். கடந்த பல தசாப்தங்களாக தமிழ் …
-
- 0 replies
- 536 views
-
-
சம்பந்தனுக்குப் பின்னர் கூட்டமைப்புத் தலைவர்? – அகிலன் October 18, 2021 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குப் பின் தான் தலைமைப் பதவிக்குத் தகுதியானவர் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருப்பது தமிழ் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மட்டுமன்றி, பிரதான கட்சியாக இருக்கின்ற தமிழரசுக் கட்சிக்குள்ளும் இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. சுமந்திரன் கொழும்பில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே, “கூட்டமைப்பின் தலைமைப்பதவிக்கு தான் தகுதியானவர்” என சுமந்…
-
- 0 replies
- 435 views
-
-
யுத்தமின்றி சத்தமின்றி சீரழிகிறது ஒரு சமூகம் மனுக்குலம் தோற்றம் பெற்ற காலத்திலிருந்தே அந்தந்த கால கட்டத்துக்கு ஏற்றாற் போன்று மனித கலாசாரமும் தொற்றிக்கொண்டு மனித வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துகொண்டது. ‘மனித நாகரிகம்’ என்றதான வார்த்தை ஒன்று அறிமுகமாவதற்கு முன்பாக மனிதனால் அவ்வப்போது அறியப்பட்ட கலாசாரங்களே அன்று அவரவரது கல்வியாகவும் இருந்து வந்தது எனலாம். மனித நாகரிகம் வெளிப்பட்டதன் பின்னால் கலாசாரம், கல்வித்துறை, தனிமனித சுதந்திரம், அடிப்படை உரிமை என்ற அனைத்து வகையான அம்சங்களும் சருகாய் ஆகிப்போயின என்பதுதான் உண்மை. மொழி உரிமை என்ற பெறுமதி மிக்கதான சொற்பதமானது கலாசாரம் என்ற பதத்துக…
-
- 0 replies
- 544 views
-
-
பெளத்த மேலாதிக்கத்தில் தீர்வு சாத்தியமாகுமா? இன்றைய சூழலில் தமிழ் மக்கள் குறிப்பாக சிறுபான்மை மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அனைத்துக்கும் அரசியல் மயப்பட்ட தீர்வொன்று காணப்பட வேண்டுமென்ற உண்மைநிலை அனைத்து தரப்பினராலும் உணரப்பட்டிருக்கின்றபோதும் அவற்றுக்கான சவால் எங்கிருந்து பிறந்து வருகிறதென்றால் மத பீடங்களிலிருந்து பிறந்து வருவதே ஜீரணிக்க முடியாத ஒரு விடயமாக காணப்படுகிறது. பௌத்த மதமென்பது இலங்கையில் ஒரு மதமாக மாத்திரம் பேணப்படுவதற்கு அப்பால் அரசியலை வழிநடத்தும் சூத்திரமாகவும் சிங்கள மொழியை காக்கும் காப்பாகவும் வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. இதற்கு ஆதாரந்தான் இவ்வாரம் இடம்பெற்ற முக்கிய…
-
- 0 replies
- 573 views
-
-
வீழ்ச்சியின் விளிம்பில் ராஜபக்ஷர்கள் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, கோட்டா ஆதரவாளர்களிடமிருந்து, “இந்நாட்டுக்கு ஹிட்லரைப் போன்ற ஒரு தலைவர் வேண்டும்; அது, கோட்டா தான்” என்ற தொனியிலான முழக்கங்களை இந்நாடு கேட்டது. ‘எதற்கும் துணிந்தவன்; எல்லாம் வல்லவன்’ என்ற பிம்பம் கோட்டாவைப் பற்றி பெருப்பித்துக் கட்டப்பட்டது. இதன் பின்னணியில், இலங்கையில் சர்ச்சையான முறையில் பணம் சம்பாதித்திருந்த வணிகர்கள் பலரும், தம்மை நாட்டை நேசிக்கும் தொழில் நிபுணர்களாகக் காட்டிக்கொண்ட ஒரு கூட்டமும் பௌத்த மதத் தலைவர்களைக் கொண்ட ஒரு குழாமும் இருந்தது. ‘சிங்கள - பௌத்தம்’ என்ற பேரினவாத நிகழ்ச்சி நிரல் முன்னிறுத்தப்பட்டது. ‘சிங்கள - …
-
- 0 replies
- 581 views
-
-
ஈராக்கின் நெருக்கடி தொடர்கதையா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) ஈராக்கின் வடபகுதியில் அமைந்திருக்கும் குர்திஸ்தான் மாகாணத்தில் தொன்றுதொட்டு ஒரு தேசிய இனமாக வாழ்ந்த குர்தீஸ் இனமக்கள் ஓட்டமான் அரசாட்சிக்குப் பின்னர் தமக்குத் தனிநாடு வேண்டும் என்கின்ற அபிலாஷைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தினார்கள். அவர்களுடைய தனிநாட்டு முஸ்தீபுகள் சதாம் ஹுசைன் ஆட்சிக்கு முன்னரும், சதாம் ஹுசைன் ஆட்சிக்காலத்திலும் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட்டன. சதாமின் காலத்தில் குர்தீஸ் கிளர்ச்சிகளை அடக்குவதற்கு சதாமின் இராணுவம் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி கிளர்ச்சிகள…
-
- 0 replies
- 646 views
-
-
தமிழர்கள் பேசுவது இனவாதம் என்றால் சிங்களவர்கள் பேசுவது இனவெறியாகும் யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் கூறிய விடயங்களே இவ்வாறானதொரு கட்டுரையை எழுதத் தூண்டியது. அவர் தன்னை ஒரு ஓய்வு பெற்ற இராஜதந்திரியாக அடையாளப்படுத்திக் கொண்டார். இந்த யாழ்ப்பாணத்தான் இப்படித்தான். சும்மா இனவாதம் பேசிக் கொண்டிருப்பான். தமிழ் அரசியல் எண்றாலே இனவாதம்தானே! எங்கட ஆக்களிட்ட வேறு என்ன இருக்குது? இப்படியான நபர்களை எதிர்கொள்ளும் போது, அவர்களுக்கான ஆகச் சிறந்த பதில் மௌனம் மட்டுமே! ஆனால் தமிழர்கள் மத்தியில் இப்படியான ஒரு தரப்பும் உண்டு. தமிழ்ச் சூழலில் இடதுசாரிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோரில் சிலரும் இப்படிப் பேசுவதுண்டு. …
-
- 0 replies
- 1.4k views
-
-
பாரம்பரிய இனத்துவ-தேசியவாதத்தின் தோல்வி? - யதீந்திரா இலங்கையின் பொருளாதார நெருக்கடி, இனத்துவ மற்றும் மதப்பிணைப்பு தேசியவாதம் தொடர்பில் கேள்விகளை முன்நிறுத்துகின்றது. கோட்டபாய ராஜபக்சவின் வெற்றியானது, சிங்கள பௌத்த-தேசியவாதத்தின் மீளெழுச்சியாகவே நோக்கப்பட்டது. கோட்டபாயவும், சிங்கள-பௌத்த இனத்தின் நவீன காவலானாகவே தன்னை முன்னிறுத்திக்கொண்டார். இந்த பின்புலத்தில்தான், தன்னையொரு சிங்கள-பௌத்த தலைவனாக பிரகடணம் செய்தார். நான்தான், நீங்கள் தேடிய தலைவன் என்றார். இவைகளெல்லாம் சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் எழுச்சிக்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் புத்துணர்வையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. கோட்டபாய ஒரு விடயத்தை திரும்பத்…
-
- 0 replies
- 609 views
-
-
ஜி-20 இல் ஒலிக்கம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் தற்போது G20 தலைவர் பதவியை வகிக்கும் இந்தியா, குறிப்பாக பசுமை மேம்பாடு, காலநிலை நிதி மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) மற்றும் உலக அமைதி ஆகியவற்றில் முன்னேற்றத்தை துரிதப்படுத்துதல் ஆகிய துறைகளில் உலக நிலைத்தன்மையை நோக்கி ஈர்க்கக்கூடிய அளவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. டிசெம்பர் 1, 2022 முதல் நவம்பர் 30, 2023 வரை பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்தியா G20 ஐ வழிநடத்தும். G20 இல் இதுவரை இல்லாத 43 பிரதிநிதிகள் தலைவர்கள்- இந்த வருடம் செப்டம்பரில் நடைபெறும் இறுதி புதுடெல்லி உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். G20 இலக்குகளை அடைவதற்காக நாடு தொடர்ச்சியான நிகழ்வுகளை…
-
- 0 replies
- 698 views
-
-
வடக்கின் ‘சுற்றுலா அரசியல்’ கே. சஞ்சயன் / 2018 ஒக்டோபர் 05 வெள்ளிக்கிழமை, மு.ப. 08:36 கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி, நல்லூரில் தியாகி திலீபனின் நினைவு நாள் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க, யாழ். மாநகரசபை மைதானத்தில், தேசிய சுற்றுலா நாள் நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளில், ஒன்றில், யாழ். மாநகர மேயரும், இன்னொன்றில், வட மாகாண முதலமைச்சரும் பங்கேற்றிருந்தார்கள். இருவருமே, அரசியலில் எதிரெதிர் முகாம்களில் இருக்கின்றவர்கள். திலீபன் நினைவு நிகழ்வு நடக்கும்போது, யாழ். மாநகர சபைப் பகுதியில், வேறு நிகழ்வுகள் நடத்தக்கூடாது என்று, தடுக்கும் முயற்சிகள் மாநகர சபையால் மேற்கொள்ளப்பட்டன. அது, வடமாகாண முதலமைச்சர் பங்கேற்கும், தேசிய சுற்று…
-
- 0 replies
- 1.9k views
-
-
தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கிக் கொண்டிருக்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இணையப் பாதுகாப்பு விதிகளும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபும் இன ஒடுக்கலுக்கு மேலும் வழி வகுக்கும் தம் மீதான விமர்சனங்களைத் தடுக்கும் நோக்கில் அமைதிகாக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகள் இணையங்கள் ஊடாக ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதாகக் கூறிக் கொண்டு அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள இணையவழிப் பாதுகாப்பு எனப்படும் "நிகழ் நிலைக்காப்புச் சட்ட வரைபு" (Online Safety Bill ) அரசியல் - பொருளாதார நோக்கில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கருத்துக்கள் வலுப் பெற்றுள்…
-
- 0 replies
- 303 views
-
-
வடக்கு, கிழக்குத் தேர்தல் வியூகம்: பலமடைய வேண்டிய தாயகம் Editorial / 2019 ஜனவரி 22 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:14 Comments - 0 -இலட்சுமணன் பதின்மூன்றாவது திருத்தத்தின் ஊடாக அமையப்பெற்ற மாகாண சபை ஆட்சியை, தமிழர் தரப்புக் காத்திரமாகப் பயன்படுத்தியிருந்தால், இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் அரசியல் போராட்டத்துக்கு, முற்றுப் புள்ளி வைத்திருக்க முடியும். எடுத்தவுடனேயே எல்லாமும் கிடைத்துவிடுமென்றால் எதுவுமே நிறுத்தப்பட்டதாகத்தான் இருக்கும். 2008ஆம் ஆண்டு, தமிழர்களின் பூர்வீக பூமி என்று சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகவும் 13இன் ஊடாகவும் இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. வடக்கு மாகாண சபைத் தே…
-
- 0 replies
- 516 views
-
-
மன்னார் முரண்பாடுகள்: நாம் என்ன செய்ய வேண்டும்? புருஜோத்தமன் தங்கமயில் / 2019 மார்ச் 06 புதன்கிழமை, மு.ப. 12:54 Comments - 0 மன்னார், திருக்கேதீஸ்வர கோவில் நுழைவு வளைவு உடைப்பு மற்றும் முரண்பாடுகள், தமிழ்ச் சூழலில் மதவாத, சாதியவாத, பிரதேசவாத, சந்தர்ப்பவாத உரையாடல்களை மீண்டும் தோற்றுவித்து இருக்கின்றன. தமிழ் மக்களிடம் எப்போதுமே, ‘இருகோடுகள் தத்துவம்’ கோலொச்சி வந்திருக்கின்றது. ஒரு பிரச்சினையை மறைக்க, அதைக் காட்டிலும் உணர்ச்சிகரமான இன்னொரு பிரச்சினையைத் தோற்றுவித்தல், திணித்தல் எனும் நிலை. அது, வெளி எதிரிகளால் மாத்திரமல்ல, உள்ளிருக்கும் எதிரிகளாலும் திட்டமிட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அதுவும், வாக்கு அரசியல் கோலொச்ச ஆரம்பித்த புள்…
-
- 0 replies
- 611 views
-
-
“5ஆண்டுகளாக TNPF ஓர் இலட்சியவாதக் கட்சியாகவே சிறுத்துக் காணப்பட்டது. திருப்பகரமான தருணங்களில் அறிக்கைகளை விடுவது, பேட்டிகளை வழங்குவதற்குமப்பால் அடிமட்ட வலையமைப்பை பலப்படுத்தி இருக்கவில்லை.” “கடந்த ஐந்தாண்டுகளாக அக்கட்சியானது ஓர் இலட்சியவாதக் கட்சியாகவே சிறுத்துக் காணப்பட்டது. திருப்பகரமான தருணங்களில் அறிக்கைகளை விடுவது, பேட்டிகளை வழங்குவது என்பதற்குமப்பால் அக்கட்சியானது அடிமட்ட வலையமைப்பைப் போதியளவு பலப்படுத்தி இருக்கவில்லை.” கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து அது அனுபவித்து வரும் ஏகபோகத்திற்கு இப்பொழுது சோதனைக் காலம் தொடங்கிவிட்டது போலத் தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளிலும் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் படிப்படியாக அதிகரித்து வந்த அதிருப்தியும் சலிப்பு…
-
- 0 replies
- 252 views
-
-
‘தியனன்மென்’ சதுக்கப் படுகொலை: கட்டுக்கதையின் 30 ஆண்டுகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜூன் 13 வியாழக்கிழமை, மு.ப. 05:18Comments - 0 சில வரலாற்று நிகழ்வுகள் பற்றி, நமக்குச் சொல்லப்பட்டுள்ளவை உண்மையா, பொய்யா என்பதைத் தேடி அறியும் வாய்ப்பு, சில சமயங்களில் ஏற்படுகிறது. அவ்வாறு அவை தேடி அறியப்படும் போது, பொய்கள் எவ்வாறு உண்மையை விட, வலிமையானவையாக, வரலாறெங்கும் நிறுவப்பட்டிருப்பதைக் காண முடியும். வரலாற்றை எழுதுவோர் யார், எமக்குச் சொல்லப்படும் செய்திகள் யாருடைய செய்திகள் போன்ற கேள்விகளை, நாம் தொடர்ந்து கேட்கவும் ஆராயவும் வேண்டும். சில பொய்கள், தொடர்ந்து சொல்லப்படுகின்றன. அதன் மூலம், அதை மீளவும் உண்மை என நிறுவும் காரியங்கள் தொடர்ந்து நடக்கின்றன. …
-
- 0 replies
- 813 views
-
-
தேர்தல் கால ஞானம்: ஹரீஸின் ‘மன்னிப்பு’ அரசியல் முகம்மது தம்பி மரைக்கார் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், கடந்த வியாழக்கிழமையன்று (05) முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோரி, உரையொன்றை ஆற்றியிருந்தார். தமது கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் கூறிய உபதேசம் ஒன்றை, தாம் மீறி விட்டதாகவும் அதற்காக முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோருவதாகவும் அந்த உரையில் ஹரீஸ் தெரிவித்திருந்தார். “ரணிலின் பஸ்ஸில் ஏறக் கூடாது என்று, மறைந்த தலைவர் அஷ்ரப் கூறிய உபதேசத்தை, நாங்கள் மீறி விட்டோம். அதற்காக, சமூகத்திடம் மன்னிப்புக் கோருகிற…
-
- 0 replies
- 384 views
-
-
தோல்வி ஹிட்லரை அசைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இதை அவர் ஒரு தோல்வியாகக்கூட எடுத்துக்கொள்ளவில்லை. முந்தய உலகப்போரில் ஜேர்மனி அடைந்ததே அது தோல்வி. பிரிட்டன் அத்தியாயம் என்பது ஒரு சறுக்கல் மட்டும் தான். பெரும் சறுக்கல் கூட இல்லை. சிறு தடுமாற்றம். நடக்கும் போது கால் இடறினால் என்ன செய்வோம்? இடிந்து போயா உட்கார்ந்துவிடுவோம்? என்று பிரிட்டனுடனான போரின் தோல்வியை பெரிதாக எடுத்து கொள்ளாமல் தனது நோக்கங்களில் உறுதியாக இருந்தார் ஹிட்லர். ஏப்ரல் 1941 தொடக்கத்தில் ஜேர்மனி பார்டிக் நாடுகள் மீது தாக்குதல் தொடுத்தது. கிறீஸ், யூகோஸ்லாவியா இரண்டும் ஜேர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டன. மே மாத இறுதியில் கிரேக்க தீவான கிறெரே (Crete) ஜேர்மனி வசமானது. எஸ்டோனியா, லாட்வியா, லித்துவேனியா மூன்றைய…
-
- 0 replies
- 764 views
-
-
ஒற்றையாட்சிக்குள் ஒடுங்குவதற்கு தமிழர்கள் தயார்படுத்தப்படுகிறார்களா? தேர்தல்கள் ஆணைக்குழு, அடுத்த ஆண்டு முக்கியமான இரு தேர்தல்களை நடத்துவது தொடர்பில் முன்களப் பணிகளை ஆரம்பித்துள்ளது. முதல் காலாண்டுப் பகுதியில் புதிய அரசியலமைப்பினை அங்கீகரிப்பது தொடர்பிலான பொது வாக்கெடுப்பையும் இரண்டாம் காலாண்டில் உள்ளூராட்சி தேர்தலையும் நடத்துவது தொடர்பிலான முன்னெடுப்புக்கள் அவை. ஆக, 2017ஆம் ஆண்டின் ஆரம்பம், தமிழ் மக்கள் மத்தியில் முக்கியமான தீர்மானமொன்றை எடுக்குமாறு கோரவுள்ளது. இலங்கையின் கடந்த கால அரசியலமைப்புக்களின் வடிவமைப்பிலோ, நிறைவேற்றத்திலோ தமிழ் மக்கள் தங்களைப் பங்காளிகளாக வைத்துக் கொண்டதில்லை. அல்லது அதனை, பௌத்த - சிங்கள மைய சக்திகள் அனுமதித்ததில்லை. த…
-
- 0 replies
- 447 views
-