அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9219 topics in this forum
-
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ். மாவட்டத்தில் சிங்களத் தேசியக் கட்சி ஒன்று ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்வதே குதிரைக்கொம்பாக இருந்து வந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி என்று தம்மை உருமாற்றிக் கொண்டுள்ள ஜே.வி.பி சுளையாக ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டமை ஒரு புறநடை என்று கூடச் சொல்லலாம். யாரும் எதிர்பார்க்காத வகையில் – எதிர்வு கூறல்களுக்கு அப்பாற்பட்டு இந்த முடிவு அமைந்திருந்தது. போர் தின்ற மண்ணில், தமிழ்த் தேசியத்தின் தடத்தில் வீறுகொண்டெழுந்த தேசத்தில் திருப்புமுனையாக நடந்தேறிய இந்த வரலாற்று வெற்றியை தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுமா என்ற சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது. தமிழ்த் தேசியம் பேசியபடி காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த…
-
- 0 replies
- 406 views
- 1 follower
-
-
எழுக தமிழ் பேரணி ஏற்படுத்தியுள்ள அரசியல் அதிர்வுகள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையினால், யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட “எழுக தமிழ்” பேரணி, அரசாங்கத்துக்கு நெருக்குதல் ஏற்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்டு இருந்தால் அந்த நோக்கம் எந்தளவுக்கு நிறைவேறியது என்பதை, எதிர்காலத்தில் தான் பார்க்கக் கூடியதாக இருக்கும். அதாவது, அந்தப் பேரணியினால் உண்மையிலேயே அரசாங்கம் நெருக்குதலுக்கு உள்ளாகியதா? அதனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் மாற்றம் காணப்படுகிறதா என்பது, வரப் போகும் நாட்களில்தான் காணக் கூடியதாக இருக்கும். இப்போதைக்கு அரசாங்கம், அதனை அவ்வளவாகப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. …
-
- 0 replies
- 371 views
-
-
அரசைக் குழப்பும் ”20” – தாயகன் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளதாக மார்தட்டிக்கொள்ளும் கோத்தபாய-மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன அரசு ,தமது முதல் இலக்கான 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மிக இலகுவாக நிறைவேற்றிவிடலாமென்ற நினைப்பில் அவசர,அவசரமாக அதனை தம் விருப்பப்படி தயாரித்து வர்த்தமானியில் வெளியிட்டுவிட்டு இப்போது அந்த 20 ஆவது திருத்தத்திலுள்ள விடயங்களுக்கு வரும் எதிர்ப்புக்களையும் தவறுகளையும் பார்த்து ”ஆப்பிழுத்தகுரங்கின்” நிலையில் தடுமாறுகின்றது. இலங்கையை மாறி மாறி ஆட்சிசெய்யும் அரசுகள் தமது அரசை பலப்படுத்தும் விதத்திலும் தமது பதவிகளை தக்கவைக்கும் ,நீடிக்கும் வகையிலும் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வருவ…
-
- 0 replies
- 685 views
-
-
போர்க் காலத்தில் ராஜபக்ச அரசாங்கமானது தமக்கு எதிராகச் செயற்பட்ட ஊடகவியலாளர்களைக் குறிவைத்து வேட்டையாடியது. இதனால் தமது உயிரைப் பாதுகாப்பதற்காக அப்பாவி ஊடகவியலாளர்கள் இந்தியாவிற்குத் தப்பியோடினர். அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியா தன்னிடம் அடைக்கலம் புகுந்த சிறிலங்காவின் ஊடகவியலாளர்களுக்கு நுழைவுவிசைகளை வழங்கியது. தமது அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இந்தியா நுழைவுவிசைகளை வழங்கியது தொடர்பில் இந்தியா மீது ராஜபக்சாக்கள் கோபங் கொண்டனர். இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக மகிந்தவால் பசில், கோத்தபாய, லலித் வீரதுங்க அடங்கிய குழுவினர் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். அப்போது சிறிலங்க…
-
- 0 replies
- 376 views
-
-
சுன்னாகம் தண்ணீரின் உண்மை நிலை என்ன? அருணன் நிமலேந்திரா – அம்ரித் பெர்னான்டோ:- சுன்னாகம் தண்ணீரின் உண்மை நிலை என்ன? அருணன் நிமலேந்திரா அம்ரித் பெர்னான்டோ இரண்டு இலட்சம் மக்களின் வாழ்வை அபாயத்துக்குள்ளாக்கும் அறிஞர்களின் அறிக்கை? இலங்கையில் தமிழர்களின் கடைசி அடையாளமாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் தனது கல்வியை, ஒழுக்க விழுமியத்தை, தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்து வருகிறதா? தண்ணீர் மக்களது அடிப்படையான உரிமை Water is the basic human rights இலங்கையில் 30 வருடங்களுக்கு மேலாக நீண்ட யுத்தம் முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் முடிவுக்கு வந்தாலும் இன்றுவரை தமிழ் மக்கள் பல்வேறு…
-
- 0 replies
- 649 views
-
-
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு? - யதீந்திரா தமிழர்களுக்கு எப்படியானதொரு அரசியல் தீர்வு வரப்போகிறது? இப்படியொரு கேள்வியை எழுப்பினால் இரண்டு விதமான பதில்களை காணலாம். ஒரு சாரார் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்பார்கள். இன்னொரு சாராரோ ஏதோ ஒன்று வரத்தான் போகிறது, ஆனால் அது என்னவென்றுதான் தெரியவில்லை என்பார்கள். ஒப்பீட்டடிப்படையில் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்று சொல்வோரே அதிகம். சிறிலங்காவின் கடந்தகால வரலாற்றின் அடிப்படையில் நோக்கினால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்று சொல்வோரின் வாதம் தர்க்கரீதியில் வலுவுடையதாகும். ஏனெனில் கடந்த காலத்தில் இலங்கைத் தீவை வெற்றிகரமாக ஆட்சிசெய்த எந்தவொரு அரசாங்கங்களும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்கவில்லை…
-
- 0 replies
- 522 views
-
-
ஐ.நா வரைபு: ‘ஆப்பிழுத்த குரங்கு’கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இப்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வுகளில், இலங்கையும் பேசுபொருளாக உள்ளது. இதை மையப்படுத்தி நடக்கும் ஆர்ப்பரிப்புகள், ‘ஆப்பிழுத்த குரங்கு’களை நினைவூட்டுகின்றன. குறிப்பாக, ஈழத்தமிழ் அரசியலைத் தங்கள் சட்டைப்பைக்குள் வைத்திருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ‘புலம்பெயர் புத்திசாலி’களை நினைக்கும் போது, சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இலங்கை அரசாங்கம், மேற்குலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறது. ஏற்கெனவே, இலங்கை அரசாங்கம் ஏற்று அனுசரணை வழங்கிய ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே இம்முறை, இலங்கைக்கு எத…
-
- 0 replies
- 516 views
-
-
கேள்விக்குறியாகும் தொழிலாளர்களின் இருப்பு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு நலன்களையும் தீர்மானிக்கின்ற கூட்டு ஒப்பந்தம் பெரும் இழுபறிகளுக்கும் மத்தியில் அண்மையில் கைச்சாத்திடப்பட்டமை தெரிந்த விடயமாகும். எனினும் இக்கூட்டு ஒப்பந்தத்தின் சரத்துகள் சிலவற்றை கம்பனியினரும் தோட்ட நிர்வாகமும் மீறி செயற்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த அதிருப்தி நிலைக்கு மத்தியில் தற்போது சர்வதேச சந்தையில் தேயிலையின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது. இவ்அதிகரிப்பின் காரணமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய நிலுவைப் பணத்தினை வழங்க வேண்டும் என்று இப்போ…
-
- 0 replies
- 528 views
-
-
-
- 0 replies
- 658 views
-
-
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மற்றொரு சர்வதேச பிரேரணை எம்.எஸ்.எம். ஐயூப் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இலங்கையின் அரச தலைவர்கள், படை அதிகாரிகளைக் குறி வைத்து, ஒரு பிரேரணையை நிறைவேற்றி, மூன்று மாதங்கள் முடிவடையும் முன்னர், ஐரோப்பிய நாடாளுமன்றமும் இலங்கை அரசாங்கத்தைக் கதி கலங்கச் செய்யும் வகையில், பிரேரணை ஒன்றைக் கடந்த 10 ஆம் திகதி நிறைவேற்றியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் மூலம், போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள், போர்க் குற்றங்களை விசாரிக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்தந்த நாடுகளிலேயே சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, பேரவையின் உறுப்பு நாடுகள் கேட்டுக் கொள்ளப்பட்டன. ஐரோப்பிய …
-
- 0 replies
- 614 views
-
-
வழி மொழிதலா? வழி மாற்றமா? கவிஞர் காசியானந்தன் இதற்கான தெளிவை ஈழமக்களே பெற்றுக் கொள்வதற்கு, 1975ஆம் ஆண்டின் காங்கேசன்துறை மக்கள் ஆணை, 1976ஆம் ஆண்டின் தமிழர் ஒற்றுமை முன்னணியின் வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1977ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை, 1987ஆம் ஆண்டின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சுதுமலைப் பிரகடனம் என்னும் ஈழத் தமிழினித்தின் வரலாற்றுத் திருப்புமுனைகள் நான்கும் குறித்த மிகச் சுருக்கமான பார்வை ஒன்று இக்காலத்தின் தேவையாகிறது. ஈழத்தமிழரின் இறைமை அவர்களிடமே மீண்டுவிட்டதை நிரூபித்த மக்களாணை 22.05. 1972இல் நாடற்ற தேச இனமாக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்கள், சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் தன்னிச்சையாகப் பிரக…
-
- 0 replies
- 360 views
-
-
-
- 0 replies
- 730 views
-
-
ஆயர்களின் அறிக்கை – நிலாந்தன்! November 21, 2021 2019 இலிருந்து கத்தோலிக்க திருச்சபையின் நான்கு தமிழ் ஆயர்களும் இணைந்து வடக்கு கிழக்கு கத்தோலிக்க ஆயர் மன்றம் என்ற பெயரில் ஓர் அணியாக செயல்பட்டு வருகிறார்கள். வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் அபிலாசைகளை அதிகம் பிரதிபலிக்கும் விதத்தில் இவ்வாறு தமிழ்ப்பகுதி ஆயர்கள் ஓரணியாக நிற்பது வரவேற்கத்தக்கதே. தெற்கில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஓரினச் சாய்வுடையவராக பார்க்கப்படும் ஒரு சூழலில் நான்கு வடகிழக்கு ஆயர்களும் ஒன்றிணைந்து முடிவெடுப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் உடையது. கர்தினால் மல்கம் ரஞ்சித் ஈஸ்டர் குண்டுவெடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தும் கருத்துக்கள் சர்ச்சைக்குரியவை. ஆட்சியைக் கைப்பற்…
-
- 0 replies
- 657 views
-
-
ஏன் இவ் வரைபை இந்தியாவிடம் கொடுக்க இப்போது அவசரம் காட்டுகிறார்கள் என்பது புரியவில்லை? – சுமந்திரன் இணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்புவதற்காக தமிழ் கட்சிகள் தயாரிக்கப்பட்டுள்ள வரைபை இந்தியாவிடம் கொடுக்க இப்போது ஏன் அவசரம் காட்டப்படுகிறது என்பது குறித்து தன்ககு எதுவும் தெரியாதென்றும், இவ்விடயம் தொடர்பில் தனக்கு பல கேள்விகள் இருப்பதாகவும் த.தே.கூட்டமைப்பின் பா.மன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலை எண்ணைக்குதம், இலங்கையின் மேற்கு முனையும இந்தியாவிற்கு கொடுப்பதாக செய்திகள் வருகின்ற இப்படியான நேரந்தில் இந்தியாவுக்கு 13 ஆம் திருத்தம் தொடர்பில் அவசரமாக ஒரு கடிதம் கொடுக்கப்பட …
-
- 0 replies
- 313 views
-
-
கொழும்பில் இராணுவ தலைமையகத்தில் செவ்வாய்க் கிழமை (25/04/2006) சிறிலங்காவின் இராணுவத்தளபதியைக் குறி வைத்து நடாத்தப் பட்ட குண்டுத்தாக்குதல் சமாதானப் பேச்சு வார்த்தைகளைச் சீர்க்குலைக்கும் நடவடிக்கையாகவும் சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான எண்ணக்கருத்தை உருவாக்கு முகமாகவும் நடாத்தப்பட்டது என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது. விடுதலைப் புலிகளால் இக்குண்டுத் தாக்குதலுக்கான தொடர்பு உறுதியாக மறுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் இக் குண்டுத்தாக்குதலால் நன்மையடையக் கூடிய சக்திகள் யார் என்பதை நாம் இனங்கண்டு கொள்ள வேண்டும். அதியுச்சப் பாது காப்பு வலையத்தில் இராணுவத்தின் உயர் பதவி வகிக்கும் ஒருவரைத் தேடிச் சென்று அழிப்பது என்பது அதுவும் நீண்ட நேரம் காத்திருந்து அ…
-
- 0 replies
- 1.4k views
-
-
கடன் சுமையிலிருந்து மீண்டு வரும் இலங்கை - பேராசிரியர் எம்.சுனில் சாந்த (சப்ரகமுவ பல்கலைக்கழகம்) இலங்கை சுதந்திரம் அடைந்த போது, இலங்கையின் பொருளாதாரமானது அந்நியச் செலாவணியால் அபிவிருத்தியடைந்திருந்தது. அப்போது இலங்கையின் வெளிநாட்டு இருப்புகளின் அளவு, மூன்றரை வருடங்களுக்கு நாட்டின் செலவைத் தாங்கிக் கொள்ளுமவுக்குப் போதுமானதாகவிருந்தது. குறித்த நாட்களில், வெளிநாட்டுச் சொத்து வளங்கள் உயர் மட்டத்தில் காணப்பட்டதுடன், ஜப்பான் போன்ற நாடுகளின் பொருளாதார நிலையோடும், ஆசிய வலயத்தின் இரண்டாவது பலம்பொருந்திய பொருளாதாரமாகவும் காணப்பட்டது. எனினும், இந்த நாட்டின் வெற்றிகரமான செயற்பாட்டால் ஏற்பட்ட ப…
-
- 0 replies
- 647 views
-
-
சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு ஒன்றுபடுவோம் தமிழ் தேசியத்தை நேசிக்கும் தமிழ் மக்களும் தமிழ்கட்சிகளும் ஒன்றுபட்டு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு ஒன்றை ஒருமுகமாக முன்வைத்து போராடுவதற்கு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலின் முடிவுகள் வழிவகுத்துள்ளன. தென் இலங்கையிலும் அரசியல் மாற்றம் ஏற்படவுள்ளது. இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் 70 வீதமான சிங்கள மக்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி சிங்கள மக்களையும் சிங்கள நாட்டையும் முன்னேற்றி வருவதையும் தமிழ் மக்கள் எல்லா வழிகளிலும் இனரீதியாக ஒதுக்கப்பட்டு வருவதையும் அறிவீர்கள். எமது அடிப்படை உரிமைகளைப் ப…
-
- 0 replies
- 569 views
-
-
இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என்ற நம்பிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மொட்டு கட்சியின் செல்வாக்கை மக்கள் மத்தியில் உயர்த்த பல முயற்சிகள் எடுத்து வருகின்றார். முதலாவதாக பாராளுமன்றத் தேர்தலையே நடத்த வேண்டும் என்ற பிடிவாதத்துடன் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பொது ஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவின் சகல முயற்சிகளையும் தவிடு பொடியாக்கி விட்டார் ஜனாதிபதி ரணில். கட்சியை ஆரம்பித்ததிலிருந்து அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பல மறைமுக பணிகளை ஆற்றிய பஸில் ராஜபக்ச தனது தவறான கொள்கைகளால் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை சம்பாதித்துக்கொண்டிருக்கின்றார். கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக்கியதே மகிந்தவும் பஸிலும் செய்த தவறுகள். அதை நியாயப்…
-
- 0 replies
- 414 views
-
-
நல்லிணக்கத்துக்கான சம்பந்தனின் இருமுனைப் போராட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சில காலமாக நிலவி வரும் கருத்து முரண்பாடுகள், சில வெளிநாடுகளின், குறிப்பாக இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 10ஆம் திகதி வட மாகாணத்துக்குச் சென்ற இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா, இந்த விடயத்தைப் பற்றி வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடி இருக்கிறார். அந்த அளவுக்கு அது இந்தியாவுக்கு முக்கியமாக இருக்கிறது. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சிறந்ததோர் நிலைமை உருவாகியிருக்கும் இந்தத் தருணத்தில், பிரதான தமிழ் அரசியல் சக்தியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப…
-
- 0 replies
- 504 views
-
-
விட்டுக்கொடுப்பு அரசியல் செய்யப்பழகும் தமிழ்க்கட்சிகள் June 23, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — உள்ளூராட்சி தேர்தல்களை பொறுத்தவரை, தென்னிலங்கையில் எதிரணி அரசியல் கட்சிகளுக்கும் வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் மூன்று ஒற்றுமைகளை காணக்கூடியதாக இருந்தது. இரு தரப்புகளுக்கும் பொது அரசியல் எதிரியாக ஆளும் தேசிய மக்கள் சக்தி விளங்குகிறது என்பது முதல் ஒற்றுமை. ஆளும் கட்சியை எதிர்த்து இரு முனைகளிலும் கட்சிகளினால் ஒன்றுபட்டு களமிறங்க முடியாமல் போனமை இரண்டாவது ஒன்றுமை. தேர்தல்கள் முடிவடைந்து ஒரு மாதத்துக்கும் கூடுதலான காலம் கடந்துவிட்ட நிலையில், உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதற்கு மற்றைய கட்சிகளின் ஆதரவை நாடி பேச்சுவார்த்கைளை நடத்துவது மூன்றாவது…
-
- 0 replies
- 200 views
-
-
தையிட்டி: அனுரவின் தீர்வு என்ன? நிலாந்தன். யாழ் நகரத்தில் நோ லிமிட் திறக்கப்படுகையில் தையிட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் நிலப் பறிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிராகப் போராடிக் கொண்டிருந்தார்கள்.இந்த இரண்டு நிகழ்வுகளிலும் எங்கே சனக்கூட்டம் அதிகம் என்று கேட்டு முகநூலில் பதிவுகள் பகிரப்பட்டன. நோ லிமிட் திறப்பு விழாவில் ஒப்பீட்டளவில் அதிக தொகை நின்றது என்பதே உண்மை. காலையிலிருந்து இரவு வரையிலும் அங்கே பறை மேளம் முழங்கிக் கொண்டிருந்தது. மக்கள் வெள்ளம் அலை மோதியது.அந்தப் பகுதியில் போக்குவரத்து செய்வது கடினமாக இருந்தது. ஆனால் அதற்காக நோ லிமிட்டுக்கு போனவர்கள் எல்லாருமே தையிட்டி போராட்டத்துக்கு ஆதரவில்லை அல்லது எதிரானவர்கள் என்று முடிவெடுக்க தேவையில்லை. ஒரு மக்கள்…
-
- 0 replies
- 125 views
-
-
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயம் பலதரப்பினரி டையேயும் பரபரப்பையும் பல்வேறு எதிர்பார்ப்புக்களையும் ஏற்படுத்தியிருந்த பின்ன ணியில் பல சம்பவங்கள் நடந்தேறியுள் ளன. மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள் என்பவற்றிற்குப் பொறுப்பு கூறும் வகையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அரசாங்கம் பல ஒப்புதல்களை அளித்திருந்தது. ஆயினும் உள்நாட்டில், அத்தகைய ஒப்பு தல்களுக்கு முரணான வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அத்துடன் அவற்றுக்கு நேர் முரணான வகையில் அரசியல் ரீதியாகவும், அரசாங்கத்தின் நிலைப்பாடு ரீதியாகவும் சாதாரண அரசியல்வாதிகள் தொடக்கம், அரச தலைவர்களான ஜனாதிபத…
-
- 0 replies
- 443 views
-
-
விடிவு வராது: இப்போதைக்கு ‘வீடியோ’தான் தெய்வீகன் மட்டக்களப்பில் கிராம சேகவர் ஒருவருக்கு எதிராக பௌத்த பிக்கு ஒருவர் மேற்கொண்ட வெறித்தனமான - இனவாத தாக்குதல் தொடர்பான காணொளி ஒன்று, கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையங்களில் பரவலாக உலாவுகிறது. “தமிழர்கள் எல்லோரும் புலிகள்தான்; உங்கள் எல்லோரையும் கொன்றொழிப்பேன்” என்று அடிவயிற்றிலிருந்து குரலெடுத்துக் குழறும் அந்த மதகுருவின் பேச்சுக்கு எந்த மறுபேச்சும் இல்லாமல் அந்தக் கிராமசேவகர் சிலைபோல நிற்கிறார். தொடர்ந்தும் தனது குரூரமான முகபாவங்களால் திரட்டிய பல கெட்டவார்த்தைகளை அந்தக் கிராம சேவகரின் மீது கொட்டித்தீர்க்கிறார் அந்தப் பிக்கு. அந்தக் கிராமசேவகர் எந்தப் பதிலும்…
-
- 0 replies
- 306 views
-
-
ஜெனீவா காலத்திலும் அரசாங்கத்தின் விடாப்பிடியான நிலைப்பாடு -மொஹமட் பாதுஷா நாட்டில், கடந்த ஒரு வருட காலமாக கொவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புபட்ட நெருக்கடிகள் பற்றியே, பேசிக் கொண்டிருக்கின்றோம். கொரோனா வைரஸ் தொற்றாமல் பாதுகாப்பது, தொற்றியவர்களுக்கு சிகிச்சையளிப்பது ஆகியவற்றைத் தாண்டி, பேசப்பட்ட ஒரேயொரு விடயம் ஜனாஸா எரிப்பு விவகாரமாகும். ஆனால், மேற்குறிப்பிட்ட எந்த நெருக்கடியும் இதுவரை முடிவுக்கு வரவில்லை. வைரஸ் பரவலோ, மரணங்களோ முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. எல்லா விடயங்களிலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலைப் பின்பற்றும் இலங்கை, ‘உடல்களை அடக்கம் செய்யவும் முடியும்' என்ற வழிகாட்டலை மட்டும் பின்பற்றவில்லை. ஒரு நாடு என்ற அடிப்படையில், இலங்க…
-
- 0 replies
- 537 views
-
-
13ஆவது திருத்தமும் சிங்களக் கடுந்தேசியவாதமும் - நிலாந்தன் 30 ஜூன் 2013 இலங்கை-இந்திய உடன்படிக்கை எனப்படுவது ஒரு கெடுபிடிப் போரின் குழந்தை. கெடுபிடிப்போரின் நிலைமைகளுக்கேற்ப அது உருவாக்கப்பட்டது. எனது முன்னைய கட்டுரையில் கூறப்பட்டது போல அது வன்புணர்வின் மூலம் பிறந்த ஒரு குழந்தைதான். இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் வெங்கடேஸ்வரன் அதை ''செத்துப் பிறந்த குழந்தை' என்று ஒரு முறை வர்ணித்திருந்தார். ஜெயவர்த்தன அரசாங்கம், விடுதலைப்புலிகள் இயக்கம், பிரேமதாஸ அரசாங்கம் மற்றும் ஜே.வி.பி. ஆகிய நான்கு தரப்பும் சேர்ந்து அதைச் செயலிழக்கச் செய்தன. எப்பொழுது விடுதலைப்புலிகள் இயக்கமும், பிரேமதாஸ அரசாங்கமும் கூட்டுச் சேர்ந்து ஐ.பி.கே.எவ்.ஐ வெளியேறுமாறு கேட்டனவோ அப்பொழுதே இந்…
-
- 0 replies
- 612 views
-