Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தேரும் தேசியமும் - நிலாந்தன் தென்மராட்சியில் வரணியில் ஒரு கோயிலில் கனரக வாகனத்தின் உதவியோடு தேர் இழுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் போதியளவு ஆட்கள் இல்லாத காரணத்தால், வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டியிருந்ததாகவும், அவ்வாறு வேறு சமூகங்களுக்கு, அதாவது சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க விரும்பாத ரீதியில் நிர்வாகம் தேரை இழுப்பதற்கு கனரக வாகனத்தைப் பயன்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இச் சம்பவம் இணையப் பரப்பில் குறிப்பாக முகநூலில் கடும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே அண்மையில் சிவசேனா என்ற ஓர் அமைப்பு பசு வதை தொடர்பாக சர்ச்சையைக் கிளப்பிய அதே தென்மராட்ச…

  2. மாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா? புருஜோத்தமன் தங்கமயில் / 2018 ஜூன் 20 புதன்கிழமை, மு.ப. 01:14 Comments - 0 வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வர வேண்டும் என்பது மாவை சேனாதிராஜாவின் ஒரு தசாப்த காலக் கனவு. இறுதி மோதல்களுக்குப் பின்னரான, அரசியல் கள யதார்த்தங்களை உள்வாங்கி, மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்தது முதல், முதலமைச்சர் கனவு மாவையிடம் நீடிக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியலில் தற்போது இயங்கிக் கொண்டிருப்பவர்களில், இரா.சம்பந்தனுக்குப் பிறகு, சிரேஷ்ட நிலையில் இருப்பவர் மாவை ஆவார். அவருக்கு, 50 ஆண்டுகளை அண்மித்த, கட்சி அரசியல் அனுபவம் உண்டு. சுமார் 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்திலும் அங்கம் வகிக்க…

  3. சர்ச்சையில் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பொதுவேட்பாளராக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நிறுத்தப்படுவாரா என்று ஊகங்கள் உலாவிக் கொண்டிருந்த போது, அமைச்சர் சரத் பொன்சேகாவிடம், ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவர், “சங்கக்கார நல்ல மனிதர்; திறமையான கிரிக்கெட் வீரர் தான். ஆனால், அவருக்கு அரசியல் தெரியாது; நானே, அரசியலுக்கு வந்து, ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பின்னர் தான், அரசியலைக் கற்றுக் கொண்டேன்” என்று பதிலளித்திருந்தார். இவ்வாறு கூறியிருந்தாலும், அவர் இப்போதும் கூட, அரசியலைச் சரிவரக் கற்றுக் கொள்ளவில்லை என்பதே உண்மை. …

  4. அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி - புருஜோத்தமன் தங்கமயில் 2018 ஒக்டோபர் 31 புதன்கிழமை, மு.ப. 12:17Comments - 0 நாட்டு மக்களின் இறைமை மீண்டும் ஒருதடவை கேலிப்பொருளாகியுள்ளது. மக்கள் ஆணையைப் பெற்று, ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, அதே மக்களின் ஆணையைப்பெற்று, ஜனநாயக மரபுகளுக்கும் அரசமைப்புக்கும் உட்பட்டு, ஆட்சியமைத்த அரசாங்கமொன்றைப் பலவந்தமாகப் பதவி நீக்கியிருக்கின்றார். இது, அரசமைப்பு மீதான அச்சுறுத்தல் மாத்திரமல்ல, மக்களின் இறைமையைப் பாதுகாக்கின்ற, பொறிமுறைகள் மீதான தாக்குதலும் ஆகும். மக்களின் இறைமையைப் பாதுகாக்கும் பொறிமுறைகளில், நாடாளுமன்றமும் நீதித்துறையும் சட்டத்தின் ஆட்சியும் பிரதானமானவை. ஜனாதிபதிப் பதவியும் அதன் ஒரு வடிவமே. …

  5. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை, அரசாகவும் அரசியலாகவும் கொண்டதன் விளைவா? April 28, 2019 தீபச்செல்வன்.. ஏப்ரல் 21 இலங்கையின் வரலாற்றில் ஓர் கறுப்பு நாள். யேசு பிரான் உயிர்த்ழுந்த நாளில் பிரார்த்தனைகளுடன் இருந்த மக்கள், ஆயிரமாயிரம் கனவுகளுடன் பாடல்களைப் பாடிய குழந்தைகள் என 360பேர் பலியெடுக்கப்பட்டுள்ளனர். யேசுவின் முகத்தின்மீது, மாதா சொருபம்மீது குருதி தெறிந்திருந்த அந்தக் காட்சியே பெரும் மனிதப் பலியின் கொடூரத்தால் இருதயத்தை வலிக்கச் செய்கிறது. எவரும் கற்பனை செய்திராத இக் கொடுஞ் செயல் நமக்கு பல விடயங்களை உணர்த்துகிறது. இலங்கை அரசைப் பொறுத்தவரையிலும், இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவரையிலும் ஈழத் தமிழ் மக்கள்தான் எதிரிகள் என்று நினைத்த வண்ணமுள்…

  6. விக்னேஸ்வரனும் தீர்ப்பும் என்.கே. அஷோக்பரன் / 2019 ஓகஸ்ட் 12 திங்கட்கிழமை, மு.ப. 01:20 Comments - 0 இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால், அண்மையில் அரசமைப்பு ரீதியாகவும் தமிழர் அரசியல் தொடர்பிலும் இனப்பிரச்சினைத் தீர்வுடன் தொடர்பு மிக்கதுமானதொரு தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்புக்குள் பொதிந்துள்ள அரசமைப்பு முக்கியத்துவம், வௌிப்பார்வைக்குப் பலருக்குப் புலப்படாது போயிருக்கலாம். அது, இந்தத் தீர்ப்பின் முக்கியத்துவத்தை, தனிநபர்களின் அரசியல் பிரச்சினையாகப் பார்க்கும், அணுகும் போக்கை ஏற்படுத்தியிருக்கலாம்; ஆனால், இவற்றைத் தாண்டி, இந்தத் தீர்ப்பு, இந்த நாட்டின் அரசமைப்பையும் அதிகாரப் பகிர்வுக் கட்டமைப்பையும் அரசியலையும் குறிப்பாக, இனப்பிரச…

  7. மக்கள் யாருடைய பக்கம்? மக்களின் பக்கம் யார்? April 7, 2025 — கருணாகரன் — உள்ளுராட்சி சபைத் தேர்தலையொட்டி வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் அரசியற் கூட்டுகள் சில புதிதாக உருவாகியுள்ளன. இந்தக் கூட்டுகளின் பிரதான நோக்கம் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுப்பதாகும். இரண்டாவது, தமிழ்த்தேசிய அரசியலை அல்லது பிராந்திய அரசியலை (சமூகப் பிராந்திய அரசியல் (Socio-regional politics) மற்றும் புவியற் பிராந்திய அரசியல் 9 Geo-regional politics) மேலும் தொடர்வது. பிராந்திய அரசியலைத் தக்க வைத்துக் கொள்வதன் மூலமே அரசியல் அரங்கில் தம்மை நிலைப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை. இதற்காக அவை தமது கொள்கை (அப்படி ஏதேனும் இருந்தால்) கோட்பாடு, உடன்பாடு, முரண்பாடு எல்லாவற்றையும் கடந்து கூட்டு வைத…

  8. உதட்டில் ஐக்கியம்; மனதில் குரோதம் -இலட்சுமணன் தமிழ்த் தேசிய அரசியல் சூழ்நிலையானது, மிகவும் மோசமானதொரு வரலாற்றுச் சிக்கலுக்குள் சிக்குண்டு போயுள்ளது. தமிழ்த் தேசியத்தின் அரசியல் விடுதலை தொடர்பாக, கடந்த 22 ஆண்டுகளாக அஹிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தி, தனது உரிமையை நிலைநிறுத்தப் போராடி இருக்கிறது தமிழினம். இத்தகைய போராட்டச் சூழலில், எண்ணங்களில் தோன்றாததும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாத, ‘சுயநல அபிலாசைகள்’ தமிழ் அரசியலில் இன்று முனைப்புப் பெற்றுள்ளன. தமிழரின் அரசியல் விடுதலை தொடர்பாக, பல்வேறு துயர்நிறைந்த அனுபவங்களை, வரலாற்று ரீதியாக அனுபவித்த இனத்துக்குச் சாபக்கேடானதோர் அரசியல் சூழல் தோற்றம் பெற்றுள்ளது. இந்…

  9. பேச்சாளர்களின் பட்டியலில் கலாநிதி தயான் ஜெயதிலகவின் பெயர் காணப்பட்ட போது, இதற்கான அனுமதியை வழங்குவதற்கு மங்கள மறுத்தார். இக்கருத்தரங்கானது அதிபர் செயலகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டது என்பதைக் கூட மங்கள தனது கவனத்திற் கொள்ளவில்லை. இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. கருத்தரங்கு ஒன்றை நடத்துவதற்கு லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவகத்தின் மண்டபம் ஒன்றை தந்துதவுமாறு சில வாரங்களுக்கு முன்னர் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது. மைத்திரிபால சிறிசேன அந்தக் கருத்தரங்கின் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் இக்கர…

  10. நினைவு கூர்தல் – 2020 நிலாந்தன் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு மேலாக இதே தலைப்பில் நினைவுகூர்தல் தொடர்பாக எழுதிவருகிறேன். ஆனால் தாயகத்தில் நினைவு கூர்தல் தொடர்பில் கடந்த 11 ஆண்டுகளாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெரிய திருப்திகரமான மாற்றங்கள் ஏதும் ஏற்பட்டிருப்பதாக தெரியவில்லை. நினைவுகூர்தலை அதன் கோட்பாட்டு அர்த்தத்தில் அதன் ஆழமான பொருளில் விளங்கி முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த 11 ஆண்டுகளாக குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு வளர்ச்சியை அடைந்திருப்பதாக தெரியவில்லை. முதலாவதாக நினைவுகூர்தல் என்றால் என்ன ? அது தனிய கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்வது மட்டும் அல்ல. கொல்லப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெறுவதற்கான ஒரு போராட்டத்திலிருந்து பிரிக்கப்படவியலாத ஒரு பகுதியே ந…

  11. சமூக இடைவெளியும் சமூகங்களின் இடைவெளியும் காரை துர்க்கா / 2020 ஜூன் 09 எங்கள் வாழ் நாளில், காலத்துக்குக் காலம், புதிது புதிதாகப் பெயர்கள் வருகின்றனளூ உதடுகளில் வாழ்கின்றனளூ மறைந்து விடுகின்றன. அந்தவகையில், தற்போதைய கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில், 'சமூக இடைவெளி' என்ற சொல், அடிக்கடி எல்லோராலும் பயன்படுத்தப்படுகின்ற பிரபல்யமான சொல்லாகப் பரிணமிக்கின்றது. அதாவது, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எம்மையும் எம்மைச் சுற்றி உள்ளவர்களையும் பாதுகாக்கும் பொருட்டு, தனிநபர்கள் தங்களுக்கிடையே பேணிக்கொள்ள வேண்டிய இடைவெளியே (தூரம்) 'சமூக இடைவெளி' ஆகும். ஆனாலும், எங்கள் சமூகத்தில், 'சமூக இடைவெளி' பிரமாணத்துக்கு ஏற்றவாறு பேணப்படுகின்றதா என்பது, முற்றிலும் கேள்விக்குரியதாகவே காணப்…

  12. பிரித்தானியாவின் வட அயர்லாந்து மீதான சட்ட அதிகார எல்லையை முடிவுக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருந்த சின் பெயின் (Sinn Fein), ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரித்தானிய வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்ததையடுத்து, ஐக்கிய அயர்லாந்து உருவாக்கத்துக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் அங்கமாகவே, குறித்த வாக்களிப்பு முடிவு தொடர்பான செய்திகள் வெளிவந்து குறுகிய நேரத்துக்குள்ளேயே, வட அயர்லாந்தின் ஜனநாயக திடசங்கற்பத்தை ஆங்கில வாக்குகள் தடம்புரள வைத்துள்ளன. இது, ஐக்கிய அயர்லாந்தின் தேவையை மீளவும் கோடிட்டு காட்டுகிறது என சின் பையினின் தலைமைத்துவம் தெரியப்படுத்தியுள்ளது. வட அயர்லாந்தின் 56% மக்கள் ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றித்திற்குள் தொடர…

    • 0 replies
    • 578 views
  13. கொவிட்-19: அதிகரிக்கும் தொற்று சொல்வது என்ன? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜூலை 02 முடிந்தது என்று நம்புவதற்கு தான், எல்லோருக்கும் விருப்பம். ஆட்சியாளர்களும் இவ்வாறே இதை, மக்களும் நம்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், யாதார்த்தம் என்னவோ வேறுபட்டதாக இருந்து விடுகிறது. ‘முடிந்தது’ என்றும் ‘ஒழித்து விட்டோம்’ என்றும், பெருமைப் பேச்சுகள் ஒருபுறம் பேசப்பட்டாலும், இன்னொருபுறம் அழிவு மெதுமெதுவாக முன்னகர்ந்து, ஒரு பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை, நாம் கண்முன்னால் காண்கின்றோம். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நாமும் இல்லை. அதை வெளிப்படையாக, மக்களுக்குச் சொல்லும் மனநிலையில், அரசாங்கங்களும் இல்லை. உயிர்களுக்கும் இலாபத்துக…

  14. 13 ஒழிக்கப்படுமா.? வெறுமையாகுமா.? எதிர்பார்த்தபடி – சொல்லியபடி 19 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்கும் திட்டம் நிறைவுக்கு வருகின்றது. வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 20 ஆவது திருத்தத்திற்கு இனி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறவேண்டியது மட்டுமே மீதமுள்ளது. 150 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள ராஜபக்ச அரசாங்கத்திற்கு இது ஒன்றும் கடினமான வேலையல்ல. 20 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்ததும் புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதே கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் திட்டம். இதற்கு அவர்கள் முன்வைக்கும் கோஷம் அது ‘ஒரே நாடு; ஒரே சட்டம்’ என்பதுதான். அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டம் என்பது மேலோட்டமாகப் பார்த்தால் சரியானதாக – நன்மையானதாக – அனைத்து மக்களுக்கும் பொதுவானதாகத் தோன்றல…

  15. மாவீரர் தினமும் வடக்கும் கிழக்கும் அடக்­கு­மு­றை­களும் ஆதிக்க கெடு­பி­டி­களும் எங்கு இறுகிப் போகின்­றதோ அங்­கெல்லாம் முரண்­பா­டு­களும் மோதல்­களும் புரட்சி உணர்­வு­களும் வெடித்து வெளிக்­கி­ளம்­பு­கின்­றன என்­ப­தற்கு வடக்கில் இம்­முறை அமை­தி­யா­கவும் அடக்­க­மா­கவும் நினைவு கொள்­ளப்­பட்ட மாவீரர் தினம் சிறந்த உதா­ர­ண­மாகும். ஆயிரம் ஆயிரம் அக்­கி­னிப்­பந்­து­க­ளாக, எரி நட்­சத்­தி­ரங்­க­ளாக துருவ தார­கை­க­ளாக எமது விடு­தலை வானை அழ­கு­ப­டுத்­திய, இனத்தின் இருப்­புக்­காக இன்­னு­யிர்­களை ஈகம் செய்த மாவீ­ரர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்த அணி திர­ளுங்கள் என வடக்கின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சிறீ­தரன் மாவீரர் தினத்தை முன்­னிட்டு பாரா­ளு­மன்றில் அ…

  16. ஈழத்தமிழர் மனிதஉரிமைகள் குறித்த சிறப்பான அணுகுமுறை தேவை 12 Views இம்மாதம் 9ஆம் திகதி அனைத்துலக மன்றத்தின் ‘இனஅழிப்பால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்ணியத்துடன் நினைவு கூரும் அனைத்துலக நாளாக’ இக்குற்றச் செயல் இடம்பெறாது முன்கூட்டியே தடுப்பதை வலியுறுத்தும் நோக்கில் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மறுநாள் 10ஆம் திகதி உலகின் முக்கியமான நாள், ‘அனைத்துலக மனித உரிமைகள் தினம்.’. ஆயினும் இந்த அனைத்துலக மரபுசாசனங்களுக்கோ அல்லது அனைத்துலக சட்டங்களுக்கோ, முறைமைகளுக்கோ சிறிதளவேனும் மதிப்பளிக்காது ஈழத்தமிழர்களைச் சிறீலங்கா இனஅழிப்புச் செய்து, இன்று இனத்துடைப்புச் செய்து வருவது உலகறிந்த உண்மை. சிறீலங்கா தனது ஈழத்தமிழின அழிப்பின…

  17. http://tamilworldtoday.com/archives/4860 http://tamilworldtoday.com/home பூகோள அரசியல் சூட்சுமங்களுடன் பின்னிப்பிணைந்த இலங்கைத் தீவுக்காக 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற கால அடையாள வர்ணிப்பு அப்படியே சற்று மாற்றிப்போட்டால், 'விக்கிலீக்ஸ்' முதல் கேர்ணல் ஹரிகரன் வரையான புள்ளிகள் பழைய புகுதல் தொடர்பான விடயதானங்களை வழங்குவது புரிகிறது! 87 இல் உருவாக்கப்பட்ட இந்தோ-ஶ்ரீலங்கா ஒப்பந்தத்தின் பின்னணியில் புலிகளுக்கு இந்தியா நிதியுதவி செய்ததாகக் கூறும் விக்கிலீக்சின் செய்தி மற்றும் புலிகளுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சி அளித்த அளித்த விடயம் குறித்து கோத்தாபயவே விசாரணை நடாத்தலாம் என்ற ஹரிகரனின் எள்ளல் செய்தி வரை சில விடயங்கள் புலப்படுத்தப்படுகின்றன. அதாவது 2009 இற்க…

    • 0 replies
    • 531 views
  18. நினைவுத்தூபி அழிப்பு: அறத்தின் மீதான ஆக்கிரமிப்பு -புருஜோத்தமன் தங்கமயில் போர் வெற்றி வாதத்துக்கு எதிராக முளைக்கும் சிறிய புல்லைக்கூட, விட்டு வைத்துவிடக் கூடாது என்பது ராஜபக்‌ஷர்களின் ஒரே நிலைப்பாடு. அதுபோல, பௌத்த சிங்கள மேலாதிக்க மனநிலையைக் கேள்விக்கு உள்ளாக்கும் எந்தவோர் அம்சத்தையும், நாட்டின் எந்தப் பாகத்திலும் அனுமதித்துவிடக் கூடாது என்பது, தென் இலங்கையின் குறிக்கோள். அப்படியான நிலையில், இறுதிப் போர் கொடூரங்களை நினைவுறுத்திக் கொண்டு நிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி(கள்), தென் இலங்கையின் கண்ணில் விழுந்த பெரிய துரு(க்கள்). அந்தத் துருக்களை அகற்றிவிட வேண்டும் என்பதற்காக சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளையும், தென் இலங்கையும் அதன் ஆட்சியாள…

  19. அ.தி.மு.க அரசியல்: பிரதமர் நரேந்திர மோடி விரும்பும் ராஜீவ் வழிமுறை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளை; இன்னொரு புறம், திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா; மூன்றாவது பக்கம், திராவிடக் கட்சிகள் தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்த, பொன் விழா ஆகும். ஆனால், இந்த விழாக்களை எல்லாம், இப்போது அ.தி.மு.கவுக்குள் நடந்து கொண்டிருக்கும் ‘பேட்டிப் போர்’ மற்றும் ‘அறிக்கைப் போர்’ ஆகியன மிஞ்சி விட்டன. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை, ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டாடிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, இது எதிர்பாராத சோதனை. ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்கொண்டு வந்த எடப்பாட…

  20. இருவேறு வெளியுறவு அணுகுமுறைகள்? நிலாந்தன். தமிழ் கட்சிகள் இந்தியாவை நோக்கி தயாரித்த ஆவணம் இனிமேல்தான் இந்திய தூதரகத்திடம் கையளிக்கப்படும் என்று தெரிகிறது. அது கையளிக்கப்படுவது என்பது ஒரு சம்பிரதாயபூர்வ நிகழ்வு. இங்கு அதைவிட முக்கியமானது என்னவெனில் பெரும்பாலான தமிழ் கட்சிகள் ஒன்றுகூடி இந்தியாவை தமிழ் மக்களுக்கு ஆதரவாக தலையிட வேண்டும் என்று கேட்டிருப்பது தான். இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியே நிற்கிறது. அக்கட்சியானது கூட்டுக் கோரிக்கை முன் வைக்கப் பட வேண்டும் என்பதனை எதிர்க்கிறதா? அல்லது அக்கோரிக்கையாக 13 ஆவது திருத்தம் முன்வைக்கப்படுவதை எதிர்க்கிறதா ? என்பதனை உத்தியோகபூர்வமாக தெளிவுபடுத்த வேண்டும். அதாவது இந்தியாவுடன் என்கேஜ் பண்ண வேண்டும் என்ற வெளியுற…

  21. ஈழத்தமிழ் நோக்கு நிலையிலிருந்து இந்தியாவை அணுகுவது! - நிலாந்தன். February 13, 2022 கடந்த ஞாயிற்றுக்கிழமை சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் “நாங்களும் இந்தியாவின் தலையீட்டைக் கோரித்தான் நிற்கிறோம்” என்று கூறுகிறார். அவருடைய கட்சி கிட்டு பூங்காவில் ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட பிரகடனத்திலும் இந்தியா ஒரு நட்பு சக்தி என்று கூறப்பட்டிருக்கிறது. இந்தியத் தலையீட்டைக் கேட்பது என்று முடிவெடுத்தால் ஆறு கட்சிகளின் கூட்டு அழைத்தபோது அதில் இணைந்து கூட்டுக்கோரிக்கையின் வடிவத்தை மாற்றியிருந்திருக்கலாந்தானே? மேலும், 13க்கு எதிராக அக்கட்சி மக்கள் மத்தியில் தெரிவிக்கும் கருத்துக்…

  22. இலங்கையின், பொருளாதாரத்தினைப் பிடித்துள்ள... சீனாவின் பொறி? தவறான பொருளாதார திட்டமிடல் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் தோல்வியடைந்துள்ளது. இதனால் சீனாவின் மூலோபாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த இலங்கைத் தீவு நாடு கடன்களின் பொறியில் சிக்கியுள்ளது. கொரோனா தொற்றுநோய் மற்றும் ரஷ்யா – உக்ரைன் போரின் அதிர்ச்சிகளுக்குப் பிறகு, சீனாவின் கடன் இராஜதந்திரம் இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களை அதிகரித்து நெருக்கடியை அதிகப்படுத்தியது. ஏற்கனவே, இலங்கை அந்நியச் செலாவணி நெருக்கடியில் சிக்கிய நிலையில், தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க 10 ஆண்டுகளுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சலுகைக் கடன்களை வழங்க சீனா முன்வந்தது. இத்தொகையுடன் சீனக் கடன்கள் 6.5 ப…

  23. அகதிகளாகும் இலங்கையர்! காத்திருக்கும் ஆபத்து

    • 0 replies
    • 359 views
  24. சிறு­பான்­மை­க­ளுக்குள் பகைமை பெரும்­பான்­மையின் ஆளுமை 1946 ஆம் ஆண்டு செர் ஐவர் ஜெனிங்ஸ் இயற்­றிய சோல்­பரி யாப்பில் ஒரு ஷரத்து இவ்­வாறு இடம்­பெற்­றி­ருந்­தி­ருக்க வேண்டும். அதா­வது சிறு­பான்­மை­களின் பூரண சம்­ம­தமும் அவர்­களின் அடிப்­படை உரி­மை­களின் உள்­ள­டக்­கமும் பல்­லின நீதி­ய­ர­சர்­களின் அங்­கீ­கா­ர­மு­மின்றி யாப்பை மாற்ற முடி­யாது. என்று அமைத்­தி­ருக்க வேண்டும். அப்­படிச் செய்­தி­ருந்தால், சிறு­பான்மைக் காப்­பீட்டுச் சட்­ட­மான 29 ஆம் ஷரத்து நிலைத்து இருந்­தி­ருக்கும். எனினும், பாரா­ளு­மன்­றத்தால் யாப்பை இரத்­தாக்க முடி­யாது என்று மட்­டுமே ஐவர் ஜெனிங்ஸ் குறிப்­பிட்­டி­ருந்தார். அதனால் தான் 1972 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்­துக்கு வெளியே …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.