அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணை விடயத்தில் உயர் நீதிமன்றத்தினால் அனுப்பப்பட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட சட்ட வியாக்கியானமானது சட்ட வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதேவேளை அது இதுவரை நீதித்துறைக்கும் நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டமியற்றும் துறைக்கும் இடையில் நிலவி வந்த பிணக்கை அரசியல் நெருக்கடியாக மாற்றிவிட்டது என்றே தெரிகிறது. நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளானது சட்டங்கள் அல்லவென்றும் எனவே அவற்றின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு நீதியரசர் ஒருவருக்கு எதிராக நீதி விசாரணை செய்யும் அதிகாரம் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் வியாக்க…
-
- 0 replies
- 527 views
-
-
தனிநாடு கோருகிறாரா விக்கினேஸ்வரன் - கவிஞர் தீபச்செல்வன். இலங்கையின் புதிய பாராளுமன்றத்தில் வடக்கின் முன்னாள் முதல்வரும் நீதியரசருமான விக்கினேஸ்வரனுக்கு எதிராக கடும் அலை வீசுகின்றது. ஆனால் இந்த எதிர்ப்பு என்பது விக்கினேஸ்வரனுக்கு எதிரான எதிர்ப்பல்ல. ஈழத் தமிழ் மக்களுக்கும் அவர்களின் கோரிக்கைகளுக்கும் அபிலாசைகளுக்கும் எதிரான எதிர்ப்பு. காலம் காலமாக இலங்கை பாராளுமன்றத்திலும் சிங்களப் பேரினவாதிகளின் மனங்களிலும் மண்டிய இனவாத்தின் எதிர்ப்பே. இலங்கைப் பாராளுமன்றம் என்பது தமிழர்களுக்குமான இடமாக இருந்தால் இந்த எதிர்ப்பலை எழுந்திருக்காது. அது சிங்களப் பாராளுமன்றமாக இருப்பதனால்தான் இத்தனை எதிர்ப்பும் வன்மமும். அப்படி என்ன தான் பேசிவிட்டார் விக்கினேஸ்வரன்? அல்லது அப்ப…
-
- 0 replies
- 424 views
-
-
சீனாவை எதிர்கொள்ளல் இந்தியப் பொருளாதாரத் திட்டங்களுக்கு எதிரான சிங்கள அரசியல் கட்சிகளின் போராட்டங்களை ஜனநாயகமாகவும், சீனாவுக்கு எதிரான மென்போக்கு எதிர்ப்புகளை அன்பாகவும் சித்தரிக்கும் சிங்கள ஆட்சியாளர்கள், ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கையைப் பயங்கரவாதமகக் காண்பிக்கும் அநியாயம் பற்றியும் உரத்துச் சொல்ல வேண்டும்.— -அ.நிக்ஸன்- இந்தியா- சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் செய்து கொண்ட சீக்கா எனப்படும் விரிவான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடானது (Comprehensive Economic Cooperation Agreement (CECA) தொடர்பாகக் கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் பாராளுமன்ற்தில் இடம்பெற்ற விவாதத்தில் சூடான விவாதம் இ…
-
- 0 replies
- 481 views
-
-
தமிழர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம்... - It is a powerful film மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் - ஒரு சுருக்கமான வரைவு (The Battle of Algiers - By Gillo Pontecorvo) உலக வரைப்படத்தில் ஆப்பிரிக்காவின் தலைப்பகுதியில் துனிஷியாவுக்கும் மொராக்கோவுக்கும் இடையில் ஸ்பெயினுக்கும் கீழே இருக்கும் நாடுதான் அல்ஜீரியா. கொடிய மிருகங்கள் நிறைந்த அந்த காட்டு நிலப்பகுதியை நெடுங்காலமாக ஆதி பழங்குடியினர் மட்டுமே தங்களுக்கான வாழ்விடமாக புழங்கி வந்தனர். காலமெனும் மேகங்கள் அந்த காட்டுப்பகுதியின் மேல் மெல்ல கடந்து போக மொராக்கோ துனிஷியா வழியாக வந்த ஆப்பிரிக்கர்களும் ரோமர்களும் காஸ்தானியர்களும் இதர ஐரோப்பியர்களும் இந்த இடத்தைப் பண்படுத்தி நி…
-
- 0 replies
- 693 views
-
-
தமிழர்கள் சீனாவை நோக்கிப் போவார்களா? நிலாந்தன் 2017 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தமிழ் ஊடகவியலாளர் 10 பேருக்கு சீனா சென்றுவர ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தது. சீனப் பயணத்தின்போது தமிழ் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய சீன அரசாங்கத்தின் பிரதானி ஒருவர் பின்வரும் தொனிப்பட கருத்து தெரிவித்துள்ளார்… யுத்த காலத்தில் சீனா மட்டுமல்ல இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகள் அரசாங்கத்திற்கு உதவின. யுத்தம் முடிந்தபின் தமிழ் மக்கள் இந்தியாவை நோக்கிப் போகிறார்கள் ஆனால் சீனாவை நோக்கி வருகிறார்கள் இல்லை என்று. அவர் கூறியது உண்மை. கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத் தமிழர்கள் இந்தியாவை நோக்கித்தான் அதிகமாக போகிறார்கள். சீனாவை நோக்கி அனேகமாக போகவில்லை. அதே…
-
- 0 replies
- 369 views
-
-
அம்பாந்தோட்டையில் சீனாவின் பிரசன்னம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-08-13#page-9
-
- 0 replies
- 312 views
-
-
மலையகமும் உள்ளூராட்சி மன்றங்களும் இவ்வாரம் பேசுபொருளாக தொடர்ந்து பல தரப்பினாலும் 'உள்ளூராட்சி மன்ற' விடயங்கள் பற்றி அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்களை விகிதாசார, வட்டார முறை என்ற கலப்பு முறையில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இது இவ்வாறிருக்க உள்ளூராட்சி தேர் தல்கள் சட்டமூலமும் பாராளுமன்றத்தில் ேநற்று 120 வாக்குகளால் நிறைவேற்று பட்டுவிட்டது. இது உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டமூலமே தவிர 'பிரதேச சபைக்கான திருத்த சட்டமூலம்' அல்ல. பிரதேச சபை திருத்தம் தொடர்பில் இன்னும் சரியான முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையி…
-
- 0 replies
- 727 views
-
-
குழப்பதற்கு காரணம் கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களா…? நரேன்- ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டு 8 வருடங்கள் கடந்த நிலையிலும் தமிழ் தேசிய இனம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மை வாக்குகளினால் ஆட்சிக்கு வந்த மைத்திரி – ரணில் அரசாங்கமும் தமிழ் மக்களின் உடைய மனநிலையை புரிந்து உளப்பூர்வமானதாக அவர்களது நாளாந்தப் பிரச்சனைகளைக் கூட தீர்க்க முன்வரவில்லை. தமிழ் மக்கள் தமது தலைமையாக கருதுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கூட தமிழ் மக்களது அபிலாசைகளை புரிந்து அதற்கு ஏற்றவகையில் காத்திரமாக செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றத…
-
- 0 replies
- 422 views
-
-
இனவாத நிலைப்பாடு நாட்டுக்கு நன்மை தரப் போவதில்லை இனவாத நிலைப்பாடு நாட்டுக்கு நன்மை தரப் போவதில்லை “அரச தலைவர் அவர்களே! மிகச் சிரமமானதொரு வேலையை நாம் மேற்கொண் டோம். ரொட்டி சுடும் கல்லைச் சூடாக்க நாங்கள் வருடக் கணக்கான நாள்களை புகையில் கழித்தோம். அவ்விதம் அந்தக் கல்லை, ரொட்டி சுடுவதற்காகவே நாம் சூடாக்கிக் கொடுத்தோம். ஆனால் தற்போது பார்க்கும்போது அது தீப்பற்றி மூண்டெரிகிறது. நாங்கள் அதனை ரொட்டி சுடுவதற்காகத்தான் தயார் செய்தோம். ஆனால் அந்த ரொட்டி தற்போது கருகிச் சாம்பராகிப் போயுள்ளது.’’ 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம்…
-
- 0 replies
- 458 views
-
-
இலங்கை அரசாங்கம் நியாயமான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என பிரித்தானிய பாதுகாப்பு செயலர் கூறியுள்ளார். பிரித்தானியாவில் வெளிவிவகார செயலர் லியாம் பொக்ஸ் அவர்களுக்கு அவரது கட்சிக்குள்ளேயும், அதிகாரிகளினாலும் , மனித உரிமை வாதிகளினாலும் மிகப்பெரிய நெருக்கடிகள் அண்மையில் எழுந்தன. போரில் சிங்கள அரசு தமிழர்களை கொன்று குவிக்கும் வேளையிலும், அதன் பின்னர் போர்க்குற்ற விசாரணைகளினை இலங்கை அரசு புறம் தள்ளும் வேளைகளிலும் சிறிலங்கா இனவாத தலைவர் மஹிந்த இராஜபக்ஷவை லியாம் பொக்ஸ் அவர்கள் சந்தித்துவந்துள்ளார். இதற்கு ஒருபடி மேலே சென்று மஹிந்த இராஜபக்ஷவை இலண்டனில் வைத்து சந்தித்தார். இந்த வேளைகளில் மஹிந்த இராஜபக்ஷவின் போர்க்குற்றத்திற்கு எதிராக தமிழர்கள் திரண்டு இலண்டன் மா …
-
- 0 replies
- 572 views
-
-
அமைச்சர்கள் மீதான விசாரணையும் நீதி தவறிய நீதியரசரும் இலங்கை வரலாற்றில் முதலாவது வடக்கு மாகாண சபைக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் வாரியத்தை சட்டத்திற்கு முரணாக கூண்டோடு நீக்கி வடக்கு அரசியலில் மட்டுமல்ல ஒட்டுமொத்த சிறிலங்காவிலும் பூகம்பத்தை ஏற்படுத்தியவர் வடக்கு மாகாண முதலமைச்சர் முன்னாள் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள். 2017ம் ஆண்டின் அவரது சாதனையாக இதனை கருதமுடியும். 2009 இறுதி யுத்தத்தில் சர்வதேச மனிதஉரிமை சட்டங்களை புறந்தள்ளி இனப்படுகொலையை முன்னெடுத்த இராசபக்சவின் தலைமையிலான சிறிலங்கா அரசு 2009 வைகாசி திங்கள் 19ம் நாளுடன்; தனது வெறியாட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து தமிழர்களின் தாயக பிரதேசத்தை தனது இராணுவ வல்லாதிக்கத்திற்குள் கொண்டு வந்…
-
- 0 replies
- 351 views
-
-
பேரவையை அலைக்கழிக்கும் முன்னணி புருஜோத்தமன் தங்கமயில் / 2018 நவம்பர் 28 புதன்கிழமை, மு.ப. 01:07 Comments - 0 தேர்தலைப் பிரதானப்படுத்திய அரசியல் கூட்டணிகள், இலாப நட்டக் கணக்கின் அடிப்படையில் தோற்றம் பெறுபவை. அங்கு கொள்கை, கோட்பாடுகளுக்கான இடம் என்பது, இரண்டாம் பட்சமானதே. அதனால்தான், முன்னாள் வைரிகளான சந்திரிகாவும் ரணிலும், தமது பொது வைரியான மஹிந்தவை எதிர்கொள்வதற்கான கூட்டணியை, 2014இல் அமைக்க முடிந்தது. இப்போது, மைத்திரியும் மஹிந்தவும், ரணிலை எதிர்கொள்வதற்காகப் புதிய உடன்பாட்டுக்கு வந்திருப்பதும் அதன்போக்கிலானதுதான். அப்படியான நிலையொன்று, கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் தேசிய அரசியலிலும் குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது. தமிழ்த் தேசியக் …
-
- 0 replies
- 1.6k views
-
-
பூர்வீக தேசத்தை அடைவதே திபெத்தியர்களின் கனவு; ஒரு கள ஆய்வு ( லியோ நிரோஷ தர்ஷன் ) திபெத் பூமியின் கூரை என்று அழைக்கப்படும் நாடு. பௌத்த சமயம், சீன, இந்தியப் பண்பாடுகள், மேற்கத்திய பண்பாடுகளின் தாக்கங்கள் மற்றும் இஸ்லாமியத் தாக்கங்கள் ஆகியவற்றை உள்வாங்கிய ஒரு தனித்துவம் மிக்க பண்பாடாகும். இந்தியாவின் தலைப் பாகமாக இருக்கும் இயமமலைத் தொடரில் திபெத் தேசம் காணப்பட்டதால், அதனை தனதாக்கிக் கொள்வதற்காக சீனா திபெத் மீது மேலாதிக்கத்தை கடுமையாக செலுத்த தொடங்கியது. இதனால் ஏற்பட்ட மோதல்களினால் பல்லாயிரம் கணக்கான திபெத்தியர்கள் உயிரிழந்ததுடன் பல்வேறு தேசங்களுக்கு அகதிகளாகவும் சென்றனர். அவ்வாறு சென்ற திபெத்தியர்கள் இன்றும் தமது பூர்வீகத்தை இழந்து பல்வேறு தேசங்களில் அக…
-
- 0 replies
- 921 views
-
-
"யாழ் மீனவனின் துயரம்" "தரைமேல் பிறக்க வைத்தான்- எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான். கரைமேல் இருக்க வைத்தான்- பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்." கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கையில் கண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் முன்புறத்தில் இரு மீன் கோட்டுருவமும் பின்புறத்தில் "பரத திஸ" என்றும் காணப்படுகிறது. இதில் வரும் மீன் சின்னங்கள் மீன்பிடி தொழிலோடு பரததிஸ என்பவனுக்குள்ள தொடர்பைக் காட்டுகின்றது. இதில் முன்னொட்டுச் சொல்லாக வரும் பரத என்பது பரதவ சமூகத்தைக் குறிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இவ்வாறு புராணங்களிலும் பண்டைய இலக்கியத்திலும் புகழ் பெற்ற பரதவ சமூகம், மருதம…
-
- 0 replies
- 420 views
-
-
தமிழ்த்தேசிய வட்டகையில் நிராகரிக்க முடியாத ஒரு சக்தியாக சுமந்திரன்! May 30, 2024 — கருணாகரன் — தமிழ்த்தேசிய அரசியலில் எல்லா முடிவையும் எடுக்கும் ஆளாக இப்போது சுமந்திரன் வளர்ச்சியடைந்துள்ளாரா? அல்லது தமிழ்ச் சூழலில் அப்படியொரு நிலை உருவாகியுள்ளதா? அல்லது அப்படிக் கருதப்படுகிறதா? ஏனென்றால், தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான தீர்மானத்தை வெற்றியடைய வைப்பதற்கும் சுமந்திரன் தேவைப்படுகிறார். தமிழரசுக் கட்சியின் தலைவிதியைத் தீர்மானிப்பதற்கும் சுமந்திரனே தேவையாக இருக்கிறார். ஜனாதிபதித் தேர்தல் உட்பட அனைத்துத் தேர்தல்களையும் கையாள்வது, பதவியில் இருக்கும் ஆட்சியாளர்களோடு தொடர்புகளைப் பேணுவது, அவர்களைக் கையாள்வது, வெளிநாட்டுப் பிரதிநிதிகளோடு பேசுவ…
-
- 0 replies
- 369 views
-
-
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான தாயக - புலம்பெயர் உறவு புருஜோத்தமன் தங்கமயில் / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 01:04 Comments - 0 “நாங்கள் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்துவிட்டதால் மாத்திரம், ஈழத்தமிழர் அரசியலைப் பேசுவதற்கான தகுதியை இழந்துவிட்டோமா, எமக்கான அங்கிகாரத்தையும் பேசுவதற்கான தகுதியையும் பெறுவதற்கு, நாங்கள் என்ன செய்ய வேண்டும்? மீண்டும் தாயகத்துக்குத் திரும்ப வேண்டுமா” என்கிற ஆதங்கத்தை, இந்தப் பத்தியாளரிடம், அவரின் வயதையொத்த புலம்பெயர் ஊடகத்துறை நண்பரொருவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிப்படுத்தினார். கிட்டத்தட்ட அதேமாதிரியான ஆதங்கத்தை, சமூக ஊடகமொன்றில், கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒருவரும், அண்மையில் வெளிப்படுத்தி இருந்தார். …
-
- 0 replies
- 886 views
-
-
பலமடையுமா, பிளவுபடுமா? கே. சஞ்சயன் / 2019 ஜூலை 19 வெள்ளிக்கிழமை, மு.ப. 05:44 Comments - 0 ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்யும் விடயத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான பொதுஜன பெரமுன, தீர்க்கமான முடிவு ஒன்றுக்கு வந்து விட்ட நிலையிலும், ஐக்கிய தேசியக் கட்சி தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை நிறுத்த மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்து விட்டார். அதற்குப் பொதுஜன பெரமுனவுக்கு உள்ளேயும், ஒன்றிணைந்த எதிரணிக்குள்ளேயும் மாற்றுக் கருத்துகள், எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும், மஹிந்த ராஜபக்ஷ எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால், இந்த எதிர்ப்புகளால் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியில் நிறுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது…
-
- 0 replies
- 561 views
-
-
தமிழ்த் தேசியப் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைவதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கடந்த நாடாளுமன்றத்தில் 13 ஆசனங்கள். இந்த முறை ஒன்பது ஆசனங்கள். மருத்துவர் அர்ஜுனாவின் அரசியல் நிலைப்பாடுகள் ஸ்திரமானவை அல்ல. எனினும் அவரையும் இணைத்துக் கொண்டால் பத்து ஆசனங்கள். தமிழ்த் தேசியத் தரப்புக்குக் கிடைக்காத ஆசனங்கள் தமிழ்த் தேசிய பரப்புக்கு வெளியே போயிருக்கின்றன. வடக்கில் மொத்தம் ஐந்து என்பிபி வேட்பாளர்களும் கிழக்கில் இரண்டு என்பிபி தமிழ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இருவரும் வடக்கிலிருந்தும், பிள்ளையான் கிழக்கில் இருந்தும் சென்றார்கள். மூன்று வேறு கட்சிகளைச் சேர்ந்த மூன்று தமிழ் பிரதிநிதிகள். இப்பொழுது …
-
- 0 replies
- 458 views
-
-
அரச பாதீடு: மாற்றமா, ஏமாற்றமா? March 1, 2025 — கருணாகரன் — அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியில் சமூக, அரசியல் மட்டத்திலும் பொருளாதார வட்டாரங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. “இது ஒரு மாறுதலான வரவு செலவுதிட்டம். மக்கள் நலன், தேசியப் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை முன்னிலைப்படுத்தியதாக இந்த வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது” என்கிறது அரசாங்கம். அரசாங்கத்தை ஆதரிப்போரின் கருத்தும் இதுவே. ஆனால், “இதில் எந்தப் புதுமையும் இல்லை. ஐ.எம். எவ்யையும் ரணில் விக்கிரமசிங்கவையும் கடந்து எந்தப் புதுமையையும் காணமுடியவில்லை. ஐ.எம்.எவ் – ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டு வடிவத்தின் இன்னொரு பிரதிமையே இந்த வரவு செலவுத் திட்டம்” என்கின்ற…
-
- 0 replies
- 268 views
-
-
கோட்டபாயவின் நடுநிலை வெளிவிவகாரக் கொள்கை வெற்றியளிக்குமா? - யதீந்திரா நாங்கள் ஒரு சிறிய நாடு. உலக அதிகார மோதல்களுக்குள் நாம் தலையிட விரும்பவில்லை. நாங்கள் ஒரு நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கையையே கடைப்பிடிக்க விரும்புகின்றோம் – இது கோட்டபாய தனது பதவியேற்பு உரையில் கூறிய விடயங்கள். இலங்கையின் அரசியல் வரலாற்றில் நடுநிலை வெளிவிவகாரக் கொள்கை என்பது புதிய விடயமல்ல. வெளிவிவகாரக் கொள்கையில் நடுநிலை என்னும் நிலைப்பாட்டின் பிதாமகர் பண்டாரநாயக்க ஆவார். இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை என்பது இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த இரண்டு பிரதான கட்சிகளின் கொள்கை நிலைப்பாட்டுடன் தொடர்புபட்ட ஒன்றாகும். இதன் பிதாமகர்களாக ஜக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபகரான னு.ளு.சேனநாயக்கவும் சிறிலங்கா சுதந்தி…
-
- 0 replies
- 561 views
-
-
விகாரைகளுக்குள்ளிருந்து வராத நல்லிணக்கம் - நிலாந்தன் அண்மை நாட்களில் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன ஒரு விடயத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். ‘நல்லிணக்கம் தொடர்பான செய்தியை வடக்குக்கு எடுத்துச் செல்வதிலும் பார்க்க தெற்கிற்கே கொண்டு செல்ல வேண்டும்’ என்பதே அது. கடந்த புதன் கிழமை பண்டாரநாயக்கா ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அவர் ஒரு மாநாட்டில் உரையாற்றி இருக்கிறார். கலை இலக்கியத்தை அனுபவிப்பது தொடர்பான ஒரு மாநாடு அது. அதில் அவர் நல்லிணக்கத்திற்கான செய்தியை தெற்குக்குக் கொண்டு செல்லுமாறு இலக்கியவாதிகள், கலைஞர்கள் ஊடகவியலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.’ அரசியல்வாதிகளால் மட்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது மதத்தலைவர்கள், கலைஞர்கள், க…
-
- 0 replies
- 814 views
-
-
Published By: Vishnu 29 Sep, 2025 | 09:43 PM ஆர்.ராம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியானது தனது முதலாவது வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்த முதலாவது ஆண்டானது, அரசாங்கத்தின் முயற்சிகள், எச்சரிக்கையான செயற்பாடுகள், முக்கிய பொருளாதார விடயங்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான வியூகங்கள் என்று பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியதொரு காலகட்டமாகும். இவ்வாறான நிலையில், ஜனாதிபதி அநுரகுமாரவின் முதலாவது ஆட்சிக்காலத்தினை நோக்கும்போது அரசியல் ரீதியாக அதன் அடைவுமட்டங்களை பார்ப்பதிலும், பொருளாதார ரீதியான அடைவுமட்டங்களில் கவனம் செலுத்துவது தான் பொருத்தமானதாக இருக்கும். ஏனென்றால் அரசாங்கம், அரசியல் ரீதியான விடயங்களை விடவும், சமூக, பொருளாதார ரீதியான விடயங்களுக்கே தாங்கள் முக்கியத்…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
செல்வி. ஜெயலலிதாவின் தலைமையிலான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 131 இடங்களில் வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையில் மீண்டும் தமிழ் நாட்டின் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. இதன் மூலமாக ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் ஆகியிருக்கிறார். மேலும், இதன் மூலமாக ஆறாவது தடவையாகவும் முதலமைச்சராகியிருக்கும் அரசியல் தலைவர் என்னும் பெருமையையும் அவர் பெற்றிருகின்றார். ஜெயலலிதாவின் வெற்றி ஆச்சரியம் தரும் செய்தியல்ல. அது ஏலவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். தேர்தல் காலத்தில் தொடர்ச்சியாக கருத்துக்கணிப்பு என்னும் பெயரில் வெளிவந்த தகவல்கள் எந்தளவிற்கு அரசியல்தனமானது என்பதும் இந்த வெற்றியின் மூலம் உறுதியாகியிருக்கின்றது. அரசியல் நிகழ்ச்சிநிரல்களை விழுங்கியிருக்கும் தனியார் அமைப்புக்களு…
-
- 0 replies
- 441 views
-
-
தொற்றுத்தடுப்புத் திட்டங்களின் சமூக பொருளாதார விளைவுகள் கொரோனா தொற்றுப் பரம்பல் முழு உலகத்திற்கும் பேரதிர்ச்சியாக வந்திருக்கிறது. தொற்றுப்பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்கான பரந்துபட்ட திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. நோர்வேயில் அத்திட்டங்கள் இதுவரை வெற்றிகரமான விளைவுகளைத் தந்துள்ளன. ஆயினும் பெரும்பகுதி சமூகம் இயக்கம் முடக்கப்பட்டமையினால் மிக மோசமான சமூக விளைவுகளை இத்திட்டங்கள் ஏற்படுத்தியிருக்கின்றன. தொற்றுப்பரம்பல் கட்டுப்படுத்தல் திட்டங்களின் சமூக பொருளாதார விளைவுகளை ஆராய்வதற்கென மார்ச் 25, நோர்வேயின் சுகாதாரத் திணைக்களம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. கட்டுரையாளரை (பேராசிரியர் Steinar Holden) அதன் தலைவராகக் கொண்டு, நோர்வேயின் மத்திய கருத்தாய்வு நிறுவனம், மத்திய வ…
-
- 0 replies
- 380 views
-
-
செக்கு மாடு ஊர் போய்ச் சேராது’ சமஷ்டி ஆட்சிமுறைமை உள்ளடங்காதவாறு, அரசமைப்பில் திருத்தம் செய்யப்பட்டு, அதனூடாகத் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படும். சமஷ்டி ஆட்சி முறைமையின் கொள்கைகளை உள்ளடக்காத வகையிலும் எத்தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும், அரசமைப்பில் திருத்தம் செய்யப்படும். தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு, அரசியல் நோக்கங்களைப் பின்னணியாகக் கொண்டிராத வகையில் வழங்கப்படும். பொருளாதாரத்தை மேம்படுத்தினால், இனங்களுக்கிடையே எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறாது என்பதே, அரசாங்கத்தின் கொள்கை ஆகும். இவ்வாறு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்து உள்ளார். இவ்வாறாகக் கருத்துத் தெரிவிப்பவர்கள…
-
- 0 replies
- 727 views
-