அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
கலப்பு நீதிப்பொறிமுறையை நிறுவுதல்; நிலைப்பாட்டை கொள்கை அறிக்கையாக வௌியிடவும்! படம் | The Wall Street Journal பொறுப்புக் கூறல் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்களைக் கண்டித்து வடக்கு கிழக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த 23 பொது அமைப்புக்கள் மற்றும் 121 சிங்கள, தமிழ், முஸ்லிம் செயற்பாட்டாளர்களால் நேற்று அறிக்கையொன்று வௌியிடப்பட்டது. அறிக்கையின் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது. --------------------------- 2015ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வில் இலங்கை உட்பட ஏனைய நாடுகளின் ஏகோபித்த சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்ட ஜெனீவாப் பிரேரணையை அமுல்படுத்துவதற்கு இலங்கை …
-
- 0 replies
- 406 views
-
-
தமிழகத்தின் நிலைமையோ இன்று கன்னடத்தில் இருந்து வந்தவர்களும்,தெலுங்கர்களும் , மலையாளிகளும் வந்து தமிழகத்தை அடக்கி ஆள்வதும்.மலையாள நிறுவனங்கள் தமிழக பொருளாதாரத்தை கொள்ளையடிப்பதும்,தமிழகத்தின் வளங்கள் பிற இனத்தவருக்கு வழங்கப்பட்டதும்.தமிழகத்தில் உயர்பதவிகளை பிற இனத்தவர் ஆக்கிரமிப்பதும்.தமிழ் தமிழ் எனச்சொல்லி ஒரு கூட்டமும்,பார்ப்பானிய ஆதரவு என ஒரு கூட்டமும் கொள்ளையடிப்பதும் இங்கே தான். பணக்காரன் கொலை செய்தால் தற்கொலை என்பதும் ,அதே ஒரு ஏழை கொலைசெய்தால் அவனுக்கு ஆயுள் தண்டனை அளிப்பதும் இங்கே எழுதப்படாத அரசியல் நீதி ஆகிப்போனது.இந்தியாவை போன்றதொரு பாரம்பரியம்மிக்க நாட்டில் மதத்தால் பிரித்து மோதவிடுவதும்,அரசு அலுவலகங்களில் லஞ்சமும்,அரசு அலுவலர்களின் பொறுப்ப…
-
- 0 replies
- 982 views
-
-
யாருக்கு கை கொடுக்கும் மஹிந்த என்கிற அரசியல் கருவி? ராஜபக்ஷவை முன்னிறுத்தி, மீண்டுமொரு அரசியல் சதுரங்கத்தை ஆடுவதற்கு தென்னிலங்கை தயாராகின்றது. அதிகாரங்களின் அரசனாக அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, பேரரசனாகும் கனவோடு அரசியலமைப்பில் பல திருத்தங்களைச் செய்து நகரந்து கொண்டிருந்த போது, தேர்தல் சதுரங்கத்தில் வெட்டி வீழ்த்தப்பட்டார். ஜனாதிபதித் தேர்தலில் வீழ்த்தப்பட்ட வடு கொஞ்சமும் தணிவதற்கு முன்பே, பொதுத்தேர்தல் களத்தில் இறங்கி அங்கும் சூடுபட்டுக் கொண்டார். இன்றைக்கு முன்னாள் ஜனாதிபதியாக, சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக ஆற்றாமையோடு அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றார். மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்துக்கு செல்வதே திரு…
-
- 0 replies
- 465 views
-
-
வேலைவாய்ப்பின்றி இருக்கும் முன்னாள் போராளிகள் – அமந்த பெரேரா சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது முடிவடைந்து ஏழு ஆண்டுகளாகிய போதிலும், பெரும்பாலான முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தற்போதும் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு போராட்டங்களைச் சந்திக்கின்றனர். இவர்கள் வாழும் பிரதேசங்களில் பல பில்லியன் டொலர்களில் முதலீடு மேற்கொள்ளப்பட்ட போதிலும் இவர்கள் தமக்கான தொழிலைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னாள் தமிழ்ப் புலிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி மற்றும் தொழிற் பயிற்சிகள் தொடர்பான கட்டாய ‘புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தில்’ சிவலிங்கம் ருவேந்திரதாசும் மூன்று ஆண்டுகள் பயிற்சிகள் பெற்…
-
- 0 replies
- 488 views
-
-
நல்லாட்சி கட்டுகதைகள்: வடக்கு, கிழக்கிற்கு 65,000 உலோக வீடுகள் படம் | Global Education வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த நான்கு வருடங்களில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு பல்வேறு ஒப்பந்தக்காரர்களிடம் இருந்தும் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி பகுதியில் விலைகோரல்களை கேட்டிருந்தது. சிவில் சமூக அமைப்புகளினால் விடுக்கப்பட்ட அறிக்கையொன்று (ஆங்கிலம், சிங்களம் அல்லது தமிழில் இங்கு கிடைக்கும்) இந்தத் திட்டம் பற்றி முக்கிய கரிசனைகளை எழுப்புகின்றபோதிலும், கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில மேலதிக விடயங்களும் அங்கு உள்ளன. மாகாண அல்லது மாவட்ட அதிகாரிகளினால் அதிக அற…
-
- 0 replies
- 444 views
-
-
மக்கள்பேரவை மாற்றம் தருமா? விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் உரிமைக்கான போராட்டத்தை முன்னகர்த்த வேண்டிய கூட்டமைப்பானது தனது தேசியப்பணியை கைவிட்டு நீண்டதூரம் சென்றுவிட்டது. தமிழ்மக்களின் ஆதரவுபெற்ற அமைப்பு என்ற பலத்தை பயன்படுத்தி தமிழ்மக்களின் உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைக்காமல் வெளிநாட்டு அரசுகள் என்ன சொல்லுகின்றதோ அதற்கு ஆமாம் போடும் சாமியாக வந்து அதிக நாட்கள் கடந்துவிட்டன. இப்போது கூட்டமைப்பானது இன்னும் கீழிறங்கி தற்போதைய மைத்திரி அரசு என்ன சாக்குப்போக்குகளை சொல்லுகின்றதோ அதனையே தானும் ஒப்புவிக்க தயாராகிவிட்டது. போர்க்குற்றங்கள் பற்றிய விடயத்திலும் சரி சர்வதேச விசாரணை என்ற விடயத்திலும் சரி க…
-
- 0 replies
- 710 views
-
-
அரசியலமைப்பும் அபிலாஷைகளும் எஸ்.மோகனராஜன் சட்டத்தரணி இலங்கையில், 1995, 1997, 2000ஆம் ஆண்டு ஆகிய மூன்று சந்தர்ப்பங்களில் அரசியலமைப்பு வரைபுகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. 1995ஆம் ஆண்டு, சந்திரிகா அம்மையாரால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்பு, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோடு பேசி, நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கும் அரசியலமைப்பினை புதுப்பித்து மாற்றம் கொண்டுவர சுதந்திரக் கட்சி முன்வந்தபோதும் ஐ.தே.க எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை. அவ்வரைவு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முன்வைக்கப்பட்டதன் பின், அவர்களுடனும் எவ்வித ஒருமைப்பாடும் ஏற்படாத நிலையில், 1995ஆம் ஆ…
-
- 0 replies
- 702 views
-
-
அரசியலமைப்பு மாற்றமும் தமிழ்க்குடியானவர்களும் - நிலாந்தன்:- 24 ஜனவரி 2016 அரசியலமைப்பை சீர்திருத்துவதா? அல்லது புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதா? என்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளேயே இரு வேறு கருத்துக்கள் இருப்பதாகத் தெரிகிறது. யு.என்.பி. அணியினர் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறுவதாகவும் ஆனால் எஸ்.எல்.எவ்.பி.யினர் அரசியலமைப்பைத் திருத்தினால் போதும் என்று கருதுவதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் பிரதமர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் அரசியலமைப்புத் சீர்திருத்தம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அண்மை வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை வைத்துப்பார்த்தால் ஒரு புத…
-
- 0 replies
- 628 views
-
-
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் இந்திய, அமெரிக்க ஆர்வங்களும் - யதீந்திரா தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஒவ்வொரு தரப்பினரும் தங்களின் விரும்பங்களுக்கேற்ப கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு தரப்பினர் இவ்வாறு கூறுகின்றனர் – தமிழ் மக்களுக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் 'திம்பு' கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். திம்பு கோட்பாடுகள் என்றால் என்ன? ஒரு சில அரசியல் விமர்சகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இதனை உச்சரித்துக் கொண்டாலும் கூட, இது தொடர்பில் ஏதேனும் புரிதல் தமிழ் சமூகத்தில் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் இது தொடர்பில் ஏதும் தேடல்கள் இருப்பதாகவும் இப்பத்தி கற்பனை செய்…
-
- 0 replies
- 441 views
-
-
சமஷ்டி முறையும் சந்தர்ப்பவாதமும் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தேடுவது தொடர்பாகவும் நிறைவேற்று ஜனாதிபதி முறை மற்றும் விகிதாசாரத் தேர்தல் முறை ஆகியவற்றினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடுவது தொடர்பாகவும் இலங்கைக்கு நீண்டதொரு வரலாறு இருக்கிறது. இந்த முயற்சிகளின் போது காணப்பட்ட முக்கியமானதொரு விடயம் என்னவென்றால், ஆளும் கட்சி தீர்வு தேட முயற்சிக்கும் போதெல்லாம் எதிர்க்கட்சி, அதற்குக் குழி பறிக்க முற்பட்டமையே. இம் முறையும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், புதியதோர் அரசியலமைப்பை கொண்டு வர முயற்சிக்கும் போது, அரசாங்கம் அதற்கான ஆலோசனைகளை முன்வைக்கும் முன்னரே, முன்னாள் ஜனாதிபதியின் நண்பர்களான எதிர்க்கட்சிக் குழு…
-
- 0 replies
- 667 views
-
-
மகிந்தருக்கு தமிழீழம் குடுக்கத்தான் விருப்பம்? கையிலிருந்த நாளிதழை வாசிக்கத் தொடங்கினான் சின்னத்தம்பி. 13ஐ கடக்க கூடாது என்று மகிந்தர் சொல்லியிருக்கிறார் பாத்தியளே புதினத்தை என்றபடி இரத்தினத்தாரின் முக்கத்தைப் பார்த்தான் சின்னத்தம்பி. உது என்னடா புதினம்? மகிந்தர் எதைக் குடுக்கச் சொன்னவர் எண்டு பார் அதுதான் புதினம் என்றார் கந்தையா. எதும் குடுக்கச் சொன்னவரோ என்றபடி உற்றுப் பார்த்தது ஆலமரம். உவர்தானே 13 பிளஸ் எண்டு கதைச்சுக் கொண்டு எல்லாத்தையும் செய்தவர். பிறகென்ன 13ஐ கடக்கக்கூடாது எண்டுறார் என்றார் இரத்தினத்தார். உவரின்டை பிளான் ஒண்டையும் குடுக்கக்கூடாது எண்டதுதான். சும்மா பதின்மூன்று பதின்று பிளஸ் பிளஸ் எண்டு எங்கடை சனங்களை இனப்படுகொலை செய்…
-
- 0 replies
- 741 views
-
-
தேசியப் பொங்கல் விழா? அரசுத்தலைவர் மைத்திரி கடந்த மாதம் வலி வடக்கில் அமைந்திருக்கும் கோணப்புலம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையத்தி;ற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன் போது அவர் இடம்பெயர்ந்த மக்களின் தற்காலிகக் குடியிருப்புகளுக்குள் சென்று அவர்களோடு அருகிருந்து உரையாடியும் உள்ளார். அவருடைய வருகையின் பின் அந்த முகாமில் உள்ள சிறுவர்கள் அவரை ‘மைத்திரி மாமா’ என்று அழைப்பதாக இடம்பெயர்ந்தோர் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு செயற்பாட்டாளர் சொன்னார். மைத்திரி விஜயம் செய்த அந்த வீட்டின் குடும்பத் தலைவி அவருடைய வருகை பற்றிக் கூறும்போது அதை ஏதோ கடவுளின் வருகை போல வர்ணித்ததாகவும் மேற்படி செயற்பாட்டாளர் சொன்னார். அவர் இந்த வழியால்தான் வந்தார். இங்கேதான்…
-
- 1 reply
- 812 views
-
-
இந்தியாவும் தமிழ் மக்கள் பேரவையும் by A.Nixon படம் | OMLANKA இனப்பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை இந்தியாவின் தலையீடு உள்ளது. குறைந்தது இரண்டு வருடத்திற்கு ஒருமுறையேனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புதுடில்லிக்குச் சென்று இந்தியப் பிரதமரைச் சந்திப்பது அல்லது இந்திய வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடுவது பின்னர் அந்தச் சந்திப்பு தொடர்பாக அதீத நம்பிக்கையுடன் ஊடகங்களுக்கு கருத்துச் சொல்வது வழமை. ஆனால், கடந்த ஒரு வருடமாக இந்தியா பற்றிய பேச்சுக்களை விட மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து பேசுகின்ற பண்பை காணமுடிகின்றது. அதுவும் இந்திய மத்திய அரசின் ஆசீர்வாதத்துடன்தான் என்று சில விமர்சகர்கள் கூறுகின…
-
- 0 replies
- 545 views
-
-
மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து அனுமதிக்கும் சிறிலங்கா – பிரித்தானிய ஊடகம் JAN 12, 2016 | 0:00by நித்தியபாரதி சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்ற மீறல்கள் தொடர்பான உள்ளக விசாரணை பக்கச்சார்புடையதாகவும் வினைத்திறனற்றதாகவும் காணப்பட்ட போதே அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது. இவ்வாறு பிரித்தானியாவின் TheGuardian நாளிதழில், Jason Burke எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. மைத்திரிபால சிறிசேன அதிபராகப் பொறுப்பேற்று ஒரு ஆண்டு ஆகிய பின்னரும் கூட, சித்திரவதைகள், சட்ட ரீதியற்ற தடுப்பு போன்ற பல்வேறு மீறல்கள் சிறிலங்காவில் தொடர அனுமதிக…
-
- 9 replies
- 727 views
-
-
கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம்? - யதீந்திரா படம் | THE WEEK இந்த ஆண்டு, இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் நிகழவுள்ளன. அதில் முதன்மையானது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு. இந்தத் தீர்வு எவ்வாறு அமையும் என்பது தொடர்பான தகவல்கள் ஆங்காங்கே தெற்கின் அரசியல் தலைவர்களின் கருத்துக்களிலிருந்து ஊகிக்கப்படுகிறது. அவ்வாறான கருத்துக்களிலிருந்து ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, முன்வைக்கப்படவுள்ள அல்லது கிடைக்கவுள்ள அரசியல் தீர்வு இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையின் கீழ்தான் நிகழவுள்ளது. இதற்கான ஒரு வகை மாதிரியாகவே தாம் ஒஸ்ரியன் அரசியல் யாப்பை கருத்தில் கொள்வதாக அண்மையில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். தற்போது புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மக்களின் கருத்தற…
-
- 4 replies
- 812 views
-
-
83 இலங்கையில் இனக்கலவரம் நடந்து முடிந்த நேரம் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்திற்கு சென்றுவிட்டு tube இல் வீடு திரும்புகின்றேன் .ஊர்வலத்தில் தந்த நோட்டிஸ்கள் சில எனது bag இல் இருந்தது .தமிழ் முகங்களை காணும் போது கொடுப்பதற்காக வைத்திருந்தேன் . Dollieshill Station தமிழ் முகம் என்று நம்பி நோட்டிசை நீட்டிவிட்டேன் .தந்தான் பாரு பேச்சு ஆங்கிலம்,சிங்களத்தில் .ஒரு வசனம் இன்றும் மனதில் இருக்கு " இந்த கலவரத்துடன் நிற்காது முழு தமிழர்களையும் கடலுக்குள் தள்ளி முடித்துவிடுவோம் " நானும் விடாமல் "எமது விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதம் வருது அடுத்த பொங்கலுக்கு தமிழ் ஈழம் எழுமென்றால் பண்ணிப்பாரும் " அடுத்த ஸ்டேசனில் நான் இறங்கிவிட்டேன் . இரண்டு வருடங்கள் ஓடியிருக்கும்.இந்திய …
-
- 0 replies
- 801 views
-
-
சவூதி அரேபியாவில் பாரியளவில் தலை துண்டிப்பு தண்டனைகள் அரபு உலகில் வாஷிங்டனின் மிக நெருக்கமான கூட்டாளியான சவூதிஅரேபியாவின் சர்வாதிகார முடியாட்சி, ஒரேதடவையில் 47 கைதிகளைக்கொன்று, இரத்தஆற்றுடன் இந்த புத்தாண்டை வரவேற்றது. அரச படுகொலைகளின் இந்த அலை, அவ் அரசராட்சியில் 12 வெவ்வேறுசிறைசாலைகளில் நடத்தப்பட்டன. அவற்றில் எட்டு இடங்களில், மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் தலைதுண்டித்துக் கொல்லப்பட்டார்கள்,அதேவேளையில் வேறு நான்கு இடங்களில் துப்பாக்கிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆளும் அரச குடும்பத்தின் முற்றுமுழுதான அதிகாரத்தைஎதிர்க்க நினைக்கும் எவரொருவருக்குமான ஒரு பயங்கர எச்சரிக்கையாக,பின்னர் அந்த தலையற்ற சடலங்கள் சிலுவையில் அறையப்பட்டுபொதுவிடத்தில் தொங்கவ…
-
- 0 replies
- 727 views
-
-
தமிழ் மக்கள் பேரவை - காலத்தின் தவிர்க்க முடியாத பிரசவம் சி.அ.யோதிலிங்கம் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை தலைவராகவும் இருதய நோய் வைத்திய நிபுணர் பூ.லக்ஸ்மன், மட்டக்களப்பு தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதி வசந்தராசா ஆகியோரை இணைத்த தலைவர்களாகவும் கொண்டு தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பு பிறப்பெடுத்திருக்கின்றது. தனித்த அரசியல்வாதிகளை மட்டும் கொண்டிராமல் சிவில் சமூக அமைப்புக்களையும் இணைத்த ஒன்றாக இது உருவாகியிருக்கிறது. இத்தகைய அமைப்பு தமிழ் அரசியலுக்கு புதிது தான். ஆனால் காலத்தின் தேவைக்கு ஏற்ப இது தவிர்க்க முடியாத ஒன்றென்றே கூற வேண்டும். தற்போது தமிழ் மக்களுக்கு தேவையானது தேர்தலில் கூத்தடிக்கும் அரசியற் கட்சிகளல்ல. மாறாக தமிழ் மக்களின் அனைத்து வ…
-
- 0 replies
- 1k views
-
-
2016 - தீர்வா அல்லது சவாலா? - யதீந்திரா 2016 - சம்பந்தனின் நம்பிக்கைக்குரிய ஆண்டு. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது சம்பந்தன் ஒரு விடயத்தை தொடர்ச்சியாக அழுத்திக் கூறிவந்தார். அதாவது, 2016 இல் ஒரு நல்ல அரசியல் தீர்வு கிடைக்கும், ஆனால் அது என்ன மாதிரியான அரசியல் தீர்வு என்பது தொடர்பில் சம்பந்தன் இதுவரை எதுவும் சொல்லவில்லை. ஆட்சிமாற்றத்தின் பின்னர் இப்பத்தியாளரிடம் பேசும்போது சம்பந்தன் ஒரு விடயத்தை கூறியிருந்தார். அதாவது, நான் சில்லறைத் தீர்வு எதனையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றார். ஆனால் தமிழ் மக்களின் சார்பில் வைக்கவேண்டிய வரைபை வைத்தால் அல்லவா அரசாங்கம் முன்வைக்கும் தீர்வாலோசனை பெறுமதியானதா அல்லது சில்லறையானதா என்பதை புரிந்துகொள்ள முடியும். இப்படி க…
-
- 0 replies
- 728 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் தோற்றத்தின் பின்புலம் என்ன? – மறைக்கப்படும் உண்மைகள் கோசலன் 12/30/2015 இனியொரு.. காலனியத்திற்கு பிந்தைய இலங்கையின் வரலாறு முழுவதும் தேசிய இன ஒடுக்குமுறையினதும், ஆயுதப் போராட்டங்களதும், இனப்படுகொலையினதும் வரலாறே. இந்த வரலாற்றின் இரத்தம் படிந்த காலப்பகுதிகள் மீட்சி பெற மாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் இலங்கை அரசு வழங்கத் தயாரில்லை. வன்னியில் சாரிசாரியாக மக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னர், மக்கள் சுந்த்திரமாக வாழ்வதாக இலங்கை அரசு கூறிக்கொள்கிறது. இராணுவம் வெளியே வருவதில்லை; சிவில் நிர்வாகம் இராணுவத் தலையீடின்றி நடைபெறுகிறது; புலனாய்வுத்துறையின் கெடுபிடிகள் முன்னைப்போல் இல்லை. அறுபது வருடகால நீண்ட ஒடுக்குமுறைக்கு முகம்கொடு…
-
- 2 replies
- 1k views
- 1 follower
-
-
கனவு மெய்ப்பட வேண்டும்…! 2016 எனும், புதிய ஆண்டுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். புதினப்பலகை நிறுவக ஆசிரியர் கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் இழப்பு உள்ளிட்ட சோகங்கள், தமிழர் தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் ஏற்பட்ட பெரு வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள், அரசியல் திருப்பங்கள், வரலாற்றுப் பாடங்கள் என பலவற்றைத்தந்த 2015ஆம் ஆண்டு நேற்றுடன் விடை பெற்றிருக்கிறது. சென்ற ஆண்டு- துன்பங்கள், துயரங்கள், வரலாற்றுத் திருப்பங்கள் என்பனவற்றை மட்டுமன்றி, படிப்பினைகளையும் தமிழர்களுக்குத் தந்திருக்கிறது. பிறந்துள்ள புதிய ஆண்டு , இலங்கைத் தீவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே இருக்கப் போகிறது. ஏனென்றால், இந்த ஆண்டில், பல்வேறு வாக்குறுதிகளை நி…
-
- 0 replies
- 797 views
-
-
சம்பந்தன் – விக்னேஸ்வரன் சந்திப்பு: பேசப்பட்டது என்ன? by A.Nixon - on December 31 படம் | AP Photo, Dhaka Tribune தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் வட மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையே இடம்பெற்ற சந்திப்பு எதற்காக என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் இந்த முரண்பாடுகள் ஒவ்வொருவருக்கும் இடையேயான தாழ்வுச் சிக்கல் தற்போதைய அரசியல் சூழலில் தேவைதான என்ற கேள்விகள் எழுகின்றன. விக்னேஸ்வரனையும் அவர் சார்ந்த அணியினரையும் ஆதரிக்க ஒரு குழுவினரும் சம்பந்தனையும் அவர் சார்ந்த செயற்பாட்டாளர்களையும் ஆதரிக்க வேறு ஒரு பிரிவினரும் இருக்கின்றனர். உறுப்பினர்களில் மாற்றமில்லை ஆனால், 60 ஆண்டுகால அரசியல் போராட்டம் ஒன்றை சந்தித்த…
-
- 0 replies
- 796 views
-
-
தமிழ் மக்கள் (ஆண்கள்) பேரவை நளினி ரட்ணறாஜா December 28, 2015 படம் | Conciliation Resources நாட்டின் மொத்த சனத்தொகையில் 52% பெண்களையும் மொத்த வாக்காளார்களில் 58% பெண் வாக்காளர்களையும் கொண்டுள்ள இலங்கையில், அரசியலில் பெண்கள் வகிக்க வேண்டிய பங்கின் முக்கியத்துவத்தை இன்னும்கூட ஆண் அரசியல்வாதிகளும், ஆண் அரசியல் தலைமைகளும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. புரியாமல் இருக்கிறார்களா அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார்களா என்பது எனக்கு இன்னும் புதிராகவே இருக்கிறது. தொடர்ந்து ஆறு தசாப்தங்களாக பெண்கள் வகிக்க வேண்டிய அரசியல் பாத்திரம் ஆண்களால் மறுக்கப்பட்டேதான் வந்திருக்கிறது. அத்துடன், சிறுபான்மை மக்களுக்கு சிறு நன்மையேனும் ஆண் அரசியல் தலைமையால் கிடைக…
-
- 0 replies
- 1.2k views
-
-
அப்போது ஆயுதங்களுடன் போராடியவர்கள் இப்போது பசி வேதனையுடன் போராடுகின்றனர் போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த போதிலும் தற்போதும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இவர்கள் சாதாரண மக்களாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதே மிகப் பாரிய பிரச்சினை. இவ்வாறு சண்டே லீடர் வாரஇதழில், Tharidu Jayawardana, Idunil Ussgoddarachchi, Udaya Karthikan, R Indumathi ஆகியோர் இணைந்து எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவின் குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த போது செல்வியும் தனது ரி-56 ரக துப்பாக்கியைத் தூக்கியெறிந்தார். இதன் பின்னர் மீண…
-
- 0 replies
- 685 views
-
-
தமிழ் மக்கள் பேரவை: சாதிக்குமா பாதிக்குமா? நிர்மானுசன் பாலசுந்தரம் சிங்களவர்கள் வாக்காளர்களாக அதாவது கட்சி சார்ந்து சிந்திக்கிறார்கள். ஆனால், தமிழர்களோ இனம் சார்ந்து சிந்திக்கிறார்கள். இது சிங்களவர்களிடம் உள்ள பலவீனமாகவும், தமிழர்களின் பலமாகவும் காணப்படுகிறது என சிரால் லக்திலக்க அவர்கள் 2005 - 2006 காலப்பகுதியில் அடிக்கடி கூறுவார். சிரால் தற்போது சிறிலங்கா சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் இணைப்பாளராக இருக்கின்றார். சிங்கள மக்கள் தொடர்பாக சிராலுக்கிருந்த ஆதங்கத்தோடு இந்த கட்டுரையாளருக்கு உடன்பாடில்லை. அதேவேளை, சிங்கள தேசத்தின் நலன் சார்ந்து சிந்திக்கின்ற ஒருவரிடம் அத்தகைய ஆதங்கம் இருப்பது ஆச்சரியத்துக்குரியதுமல்ல. சிரால் ஒரு புத்தி…
-
- 0 replies
- 733 views
-