அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
‘வெள்ளை யானையை’ கண்டு தடுமாறும் அரசாங்கம் இலங்கையில் மத்தியிலும் மாநிலத்திலும் அரசியல் அதிகாரங்களும் பதவிகளும் இருந்தும் கூட, தமது அபிலாஷைகளையும் உரிமைகளையும் வென்றெடுப்பதில் எண்ணிலடங்கா களச் சிக்கல்களை, சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்நோக்கியிருக்கின்றன. தற்போது கொண்டுவரப்படவுள்ள உத்தேச 20ஆவது திருத்தத்தின் ஊடாகவும், மாகாண சபைகள் சட்டத் திருத்தத்தின் ஊடாகவும் ஜனநாயக உரிமை சார்ந்த, மேலும் பல சவால்களைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. நாட்டிலுள்ள மாகாண சபைகள் அனைத்துக்குமான தேர்தலை, ஒரே நாளில் நடாத்த வேண்டும் என்பதற்காக, ஆட்சிக்காலம் முடிவடைந்த பிற்பாடும், பல மாகாண சபைகளுக்குத் தேர்தல் நடத்தும் காலத்தைப் பிற்போடுவதற்கு, அரசாங்கம் எடுத…
-
- 1 reply
- 484 views
-
-
சீனா வைக்கும் பொறி இலங்கையில் சீனாவின் முதலீடுகளுக்கு எதிராக உள்ளூரில் நடத்தப்படும் போராட்டங்களையிட்டு சீனா கவலை கொள்ளவில்லை என்று, சீன தூதுவர் யி ஷியான்லியாங் முன்பொரு தடவை கூறியிருந்தார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா வின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு, குத்தகைக்கு வழங்கும், உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்பட்ட பின்னரே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார். மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட கூட்டு எதிரணியினரின் எதிர்ப்பையும் கூட சீனத் தூதுவர் பெரிய விடயமாக அப்போது எடுத்துக் கொண்டிருக்கவில்லை.…
-
- 3 replies
- 1.6k views
-
-
கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணி தேடும் புதிய தலைவர் யார்? எதிர்வரும் 2018, தேர்தல்களுக்கான ஆண்டாக இருக்கப் போகின்றது. முதலாம் காலாண்டுப் பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களோடு ஆரம்பிக்கும் தேர்தல் பரபரப்பு, மாகாண சபைத் தேர்தல்கள் வரையில் நீடிக்கும் வாய்ப்புண்டு. அந்தக் காலப்பகுதிக்குள், புதிய அரசமைப்பு மீதான, பொது வாக்கெடுப்புக்கான சாத்தியமும் காணப்படுகின்றது. தமது அரசியல் தலைமைத்துவத்தை, வாக்கு அரசியல் மூலமாகத் தேடிக்கொள்ள நினைக்கும் சமூகமொன்றில், தேர்தல்கள் செலுத்தும் தாக்கம் மிகப்பெரியது. அப்படியான கட்டத்தை தென்னிலங்கை 1950களின் ஆரம்பத்திலேயே அடைந்துவிட்டது. அவ்வாறான கட்டத்தை நோக்கியே, தமிழ்த் த…
-
- 0 replies
- 453 views
-
-
தமிழ்த் தரப்பின் மௌனமும் சுமந்திரனின் உரையும் கடந்த இரண்டு வருடங்களாக வடக்கு- கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெற்றுவந்த புதிய அரசமைப்பை முன்னிறுத்திய உரையாடல்கள், தற்போது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டன. சில அரசியல் பத்திகளுக்குள்ளும் ஒரு சில தொலைக்காட்சி விவாதங்களுக்குள்ளுமே ‘சேடம் இழுக்கும்’ நிலையில், புதிய அரசமைப்புத் தொடர்பில் தமிழ்த் தரப்பு பேசிக்கொண்டிருக்கின்றது. புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது. இந்த விவாதத்தைத் தமிழ்த் தரப்பு அவ்வளவு கரிசனையோடு நோக்குவதாகத் தெரியவில்லை. தமிழ் ஊ…
-
- 1 reply
- 804 views
-
-
தேர்தலுக்குப் பின் நடக்கப்போவது என்ன? உள்ளூராட்சித் தேர்தலுக்கு இன்னமும், ஆறு நாட்களே இருக்கின்ற நிலையில் அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் உச்சக்கட்டப் பிரசாரங்களில் இறங்கியுள்ளன. இந்தத் தேர்தலில் ஒருவரை ஒருவர் தாக்குவதற்கும், பழிபோடுவதற்கும் தான் பிரசாரங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வில், ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் குறித்த விவாதம் நடக்கவுள்ள நிலையில், தனிப்பட்ட முறையிலான குற்றச்சாட்டுகள், சேறு பூசல்களுக்கான வாய்ப்பு இன்னும் அதிகமாக இருக்கப் போகிறது. வரும் 8ஆம் திகதி பிரசாரங்கள் ஓய்ந்த…
-
- 0 replies
- 376 views
-
-
எங்கே போகிறது வடக்கு அரசியலும் அரச சேவையும் எங்கே போகிறது வடக்கு அரசியலும் அரச சேவையும் அரச அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தொடருந்துப் பாதையின் இரு தண்ட வாளங்கள் போன்றவர்கள். ஒன்றைவிட்டு ஒன்று விலகவோ, ஒன்றை ஒன்று நெருங்கவோ கூடாது. சமாந்தரமாகச் சென்றால்தான், மக்கள் பயன்பெற முடியும். அதனால் அரச அதிகாரிகள் தத்தமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றவெனச் சட்டங்கள் ஆக்கப்…
-
- 0 replies
- 437 views
-
-
இன அழிப்பை தடுக்க சர்வதேச விசாரணை தேவை: தீபச்செல்வன்:- 09 செப்டம்பர் 2014 இலங்கை அரசாங்கம் ஈழ மக்களுக்கு எதிரான யுத்தத்தில் மிகவும் கொடிய போர்க்குற்றங்களை இழைத்து மாபெரும் இனப்படுகொலை ஒன்றை செய்துள்ளது. இதற்கான மிகவும் நம்பகரமான ஆதாரங்கள் பல்வேறு ஊடகங்களால் வெளியிடப்பட்டு அவற்றின் நம்பகத் தன்மை துறைசார்ந்த வல்லுனர்களால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் இடம்பெற்றது ஒரு இனப்படுகொலை என்பதை உலகமெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் குறிப்பிட்டு போராட்டங்களை நடத்தியபோதும் மனித உரிமை மீறல்கள் என்றும் போர்க்குற்றங்கள் என்றுமே ஐ.நாவும் சில நாடுகளும் அடையாளப்படுத்தும் நிலையில் எப்படியான விசாரணையையும் அனுமதிக்க முடியாது என்ற நிலையை இலங்கை அரசாங்கம் பல்வேறு வகையிலும் வெளிப்படுத…
-
- 0 replies
- 450 views
-
-
வடக்கு கிழக்கு மாகாண தேர்தலும் சவால்களும் மாகாண சபைத் தேர்தலுக்கான வாடை வீசத்தொடங்கியுள்ளது. உள்ளூராட்சி தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த பெருமையில் மீண்டும் மாகாண சபைக்கான தேர்தல் சங்கை ஊதத்தொடங்கியுள்ளார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அவரது இந்த அறிவித்தலானது வடகிழக்கில் ஒரு பரபரப்பையும் தேசிய அரசியலில் சலனத்துக்கான எச்சரிக்கையையும் வழங்கியிருக்கின்றது. உள்ளூராட்சி தேர்தலில் எதிர்பாராத தோல்வியைக்கண்ட சுதந்திரக்கட்சியும் ஐ.தே.க.வும் மாகாண சபைகளுக்கான ேதர்தலை இப்ேபாதைக்கு நடத்தப்போவதில்லை. அதாவது "பொல்லைக்கொடுத்து அடிவாங்க" அவர்கள் தயாராகவில்லையென்ற வதந்திகளுக்கு மத்தியில் …
-
- 0 replies
- 370 views
-
-
இலங்கையும் 2,500 ஆண்டுகளைக் கடந்த இந்திய உறவும் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும் 1800களில் பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டு, முறையே 1947 மற்றும் 1948 ஆண்டுகளில் சுதந்திரம் பெற்றன. இந்தியா இலங்கையின் நெருங்கிய அண்டை நாடு. இரண்டு நாடுகளும் இரு தரப்பு அறிவுசார், கலாச்சார, மத மற்றும் மொழியியல் ரீதியலான தொடர்புகளை கொண்டிருக்கின்றன. வரலாற்று ரீதியாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் 2,500 வருட காலமாக பகிரப்பட்ட சமய மற்றும் கலாச்சார அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. இலங்கை தனது கடல் எல்லையைப் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்வதால், முக்கியமான பொருளாதார, இராஜதந்திர மற்றும் கடல்சாா் பாதுகாப்பு உறவுகள் மிகவும் நெருக்கம…
-
- 0 replies
- 771 views
-
-
மாகாண சபை தேர்தலை இலக்கு வைத்து நகரும் அரசியல்….! நரேன்- கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைந்து சில மாதங்கள் கடந்து விட்டது. வடக்கு மாகாண சபையின் காலம் முடிவதற்கு நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருட முற்பகுதியில மகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்ற நிலையே உள்ளது. இந்த தேர்தலுக்கான நகர்வுகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. இதனையே அண்மைய சம்பவங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. தென்னிலங்கையின் பிரதான இரு கட்சிகளும் தமது வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்கில் வடக்கு நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி வன்னியில் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஊடாகவும், யாழில் அமைச்சர…
-
- 0 replies
- 406 views
-
-
மண்குதிரைகளும் மாகாண சபைத்தேர்தலும்- சி.நவாதரன். இலங்கையில் மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் இவ்வருட இறுதிக்குள் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக பரவலாக பேசப்படுகின்றது. தென்னிலங்கையை பொறுத்தவரை இடியப்ப சிக்கலாக மாறியுள்ள அரசியல்தளத்தில்தான் இத்தேர்தல் நிகழவிருக்கிறது, எல்லா விதத்திலும் தோல்விகண்டு மிகவும் பலவீனமான நிலையில் உள்ள நல்லாட்சி அரசு 2020 வரைக்காவது தாக்குப்பிடிக்குமா என்பதை நாடிபிடித்துப்பார்க்கும் ஒரு சந்தர்ப்பமாகவே இம்மாகாண சபைத்தேர்தல்கள் அமையவிருக்கிறது. மறுபக்கம் தன் பலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் இன்னொரு சந்தர்ப்பமாகவே மஹிந்த அணியினர் இத்தேர்தலை எதிர்கொள்கின்றனர். மத்தியில் யார் ஆளும் கட்சி யார் எதிர்…
-
- 0 replies
- 812 views
-
-
இனப்பிரச்சினை தீர்வு குறித்த தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு Veeragathy Thanabalasingham on March 21, 2023 Photo, @anuradisanayake இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சகல இனங்களையும் சேர்ந்த மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றே நிரந்தரமான தீர்வாக அமையும் என்று பேசவும் கேட்கவும் நன்றாகத்தான் இருக்கும். எந்த இனத்தவருக்கும் பாதிப்பு இல்லாதவகையில் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் உயரிய நோக்குடன் கூறப்படுகின்ற யோசனையாகவும் தெரியும். அதை எதிர்த்து பெரிதாக வாதிடுவதும் கஷ்டமானதாக தோன்றும். ஆனால், அவ்வாறு நடைமுறையில் சாத்தியமானதாக உலகில் எங்குமே முன்னுதாரணம் ஒன்றை எவராலும் கூறமுடியாது. அந்தக் கருத்தை எமது…
-
- 0 replies
- 679 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் குறித்து முஸ்லிம் கொங்கிரஸ் இது வரையிலும் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கவில்லை. கூட்டமைப்பும் அப்படித்தான். முதலில் தேர்தல் திகதி அறிவிக்கப்படட்டும் என்று சொன்னார்கள். அதன் பின்னர் இரு தரப்பினரதும் தேர்தல் விஞ்ஞானங்கள் வரட்டும் என்றார்கள். இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் அதாவது, தேர்தலுக்கு ஏறக்குறைய மூன்று கிழமைகளே இருக்கும் ஒரு பின்னணியில் இரண்டு பெரிய சிறுபான்மைக் கட்சிகளினுடைய உத்தியோகபூர்வ நிலைப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. முஸ்லிம் கொங்கிரஸ் அரசாங்கத்தோடு இணக்க அரசியல் செய்கிறது. அவர்கள் புதிதாக ஒரு நிலைப்பாட்டை எடுப்பதாக இருந்தால் அது நிபந்தனையுடனான இணக்க அரசியல் அல்லது பொது எதிரணியுடனான கூட்டு என்பதாகவே இருக்க ம…
-
- 2 replies
- 1.4k views
-
-
கனடாவிற்கு செல்லுதல் ? - யதீந்திரா தமிழர் வாழ்வில் புலப்பெயர்வு மிகவும் கவர்சிகரமான ஒன்று. எவருக்கு புலம்பெயர விரும்பமில்லை என்று கேட்டால் – இல்லையென்று சொல்பவர்கள் அரிதானவர்களாகவே இருக்க முடியும். அந்தளவிற்கு அது ஒரு கவர்சிமிக்க வாழ்வாகிவிட்டது. தமிழர் அரசியலில் தீர்க்கதரிசிகள் எவரும் இருந்ததாக தெரியவில்லை. செல்வநாயகம் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென்று ஒரு முறை கூறியிருந்தார். அதனையும் ஒரு தீக்கதரிசன பார்வையென்று கூறிவிட முடியாது – ஏனெனில், கடந்த 74 வருடகால அரசியல் நகர்வில், தமிழ் மக்களை கடவுளும் காப்பாற்றவில்லை. இருந்ததையும் இழந்து, இருப்பதையும் பாதுகாக்க முடியாதவொரு கையறு நிலையில்தான் தமிழினம் திண்டாடிக்…
-
- 0 replies
- 382 views
-
-
19 ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு நன்மையானதா? நிலாந்தன் இலங்கைத் தீவின் அரசியல் அமைப்பு 19 ஆவது தடவையாகத் திருத்தப்பட்டுள்ளது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் செய்யப்பட்ட இரண்டாவது திருத்தம் இது. ஆட்சிமாற்றத்தை உருவாக்கிய, அதைப் பின்னிருந்து பலப்படுத்துகின்ற மேற்கு நாடுகளும் இந்தியாவும் இத்திருத்தத்தை வரவேற்றிருக்கின்றன. கூட்டமைப்பும் இத்திருத்தத்தை வரவேற்றிருக்கின்றது. ஜனநாயக அடிப்படைகளை பலப்படுத்த இத்திருத்தம் உதவும் என்று அதை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள். அரசாங்கம் தனது வாக்குறுதிகளில் ஒன்றை ஓரளவுக்கேனும் நிறைவேற்றியிருப்பதாகப் பெருமைப்பட்டுக்கொள்கின்றது. மெய்யாகவே 19 ஆவது திருத்தம் இலங்கைத் தீவின் ஜனநாயக வெளியை பலப்படுத்தியிருக்கிறதா? குறிப்பாக இனப்பிரச்சினைக்…
-
- 1 reply
- 339 views
-
-
நன்றி - யூரூப்
-
- 0 replies
- 311 views
-
-
தமிழர் தாயகத்தில் இந்தியா வெற்றி| அரசியல் களம்|அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம்
-
- 0 replies
- 602 views
-
-
பரி யோவான் பொழுதுகள்: பரி யோவானில் ஈபிகாரன்கள் 1989 ஆண்டு நவம்பர் மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, Yarl Hallல் ஒகஸ்ரின் மாஸ்டரின் Tution வகுப்பு முடிந்து, பிரதான வீதி வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். நல்லூர் பக்கம் போகும் நண்பர்கள் கோயில் வீதியடியில் விடைபெற, பரி யோவான் கல்லூரி தாண்டிப் போக வேண்டிய நாங்கள் நால்வரும் சைக்கிளை வீடு நோக்கி உழக்கி கொண்டிருந்தோம். பிரபுவும் திருமாறனும் முன்னால் போக இளங்கோவோடு நானும் அவர்களிற்கு பின்னால் வந்து கொண்டிருந்தோம். யாழ்ப்பாணத்தை இந்திய இராணுவம் ஆக்கிரமித்திருந்த கொடிய காலமது. இந்திய இராணுவத்தோடு இணைந்து செயற்பட்ட ஈபிக்காரன்கள், பிள்ளை பிடிக…
-
- 1 reply
- 1k views
-
-
உலகத்தையே உறைய வைத்த குண்டுத் தாக்குதல்களுடன் கழிந்து போயிருக்கிறது இந்த வருட ஈஸ்டர் திருநாள். தேவாலயங்களும் சொகுசு விடுதிகளும் இரத்தமும் சதையுமாக, கோரமாகக் கிடந்த காட்சிகள், ஊடகங்களில் நிரம்பியுள்ள நாள்களாகவே, இப்போது கழிந்து கொண்டிருக்கின்றன. 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், இப்படியொரு கோரத்தை யாரும் இலங்கையில் காணவில்லை. ஏன், போர் நடந்த காலங்களில் கூட, பொதுமக்களையும் வெளிநாட்டவர்களையும் இலக்கு வைத்து இப்படியொரு தாக்குதல் நடத்தப்படவில்லை என்று மஹிந்த ராஜபக்ஷவே நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். யாராலும் ஜீரணிக்க முடியாதளவுக்கு, இந்தக் குண்டுத் தாக்குதல்கள் கோரம் நிறைந்தவையாக இருந்தன. இதன் பின்னணி, மிகவும் ஆபத்தானது. தேசிய தௌஹீத் ஜம…
-
- 0 replies
- 1k views
-
-
தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் முஸ்லிம் தலைமைகள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை முழுமையாக துடைத்தெறிந்து விட முடியாது -ரவூப் ஹக்கீம்
-
- 3 replies
- 475 views
-
-
ஊமைவெயில் காலத்தில் - முள்ளிவாய்க்கால் நினைவு பட மூலம், Selvaraja Rajasegar நேற்றுப்போலிருக்கிறது. இரத்தமும், கண்ணீர் நிரம்பிய மனிதர்களுமாக வரலாறு நம் முன் பதிந்த நாட்கள். நேற்றுப்போல் இருக்கிறது 2009. அதற்குள் 2019 ஆகிவிட்டது. தசாப்தமொன்றை கடந்து நிற்கிறோம். இந்த ஊமைவெயில் காலத்தைக் கடந்து நின்று திரும்பிப் பார்க்கையில் தூரமாகவும், அண்மையாகவும் என்ன தெரிகின்றது என்பதையே இக்கட்டுரை அலசுகின்றது. 18 மே 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்படுகையில், தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டமானது தமிழ் தேசிய கூட்டமைப்பிடமும், புலம்பெயர் தமிழர்களிடமும், தமிழகத் தமிழர்களிடமும்தான் கையளிக்கப்பட்டது. இது இயற்கையான போக்கில் நிகழ்ந்ததுதான். ஆனால் அனை…
-
- 1 reply
- 834 views
-
-
தமிழ்மரபுரிமைச் சொத்துக்களுக்கு எதிரான யுத்தமும், கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையாரும் – நிலாந்தன்… June 29, 2019 கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் மண்டபத்தில் ஒரு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தை திருகோணமலையைச் சேர்ந்த தென் கயிலை ஆதீனமும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சைவ மகா சபையும் யாழ்ப்பாணத்தில் உள்ள சமூக விஞ்ஞான ஆய்வு மையம் என்ற அமைப்பும் ஒழுங்குபடுத்தியிருந்தன. திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் முன்பு காணப்பட்ட ஒரு பிள்ளையார் கோவில் இருந்த இடத்தை தொல்லியற் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. அந்நிலத்துண்டில் முன்பு இருந்தது பிள்ளையார் கோவில் அல்ல அது ஒரு தாதுகோபமே என்று தொல்லியல் திணைக்களம் கூறுகிறது. மேற்…
-
- 0 replies
- 693 views
-
-
ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் மக்களின் தெரிவும் Editorial / 2019 ஓகஸ்ட் 01 வியாழக்கிழமை, மு.ப. 03:36 Comments - 0 இலங்கை, இரண்டு தேர்தல்களை எதிர்நோக்கி நிற்கிறது. அதில், இவ்வாண்டின் இறுதிப்பகுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் முதன்மையானது. இந்தத் தேர்தலில், தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி, அரசியல் நிபுணர்கள் ஒவ்வொருவராகச் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். இலங்கையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது முதல், தமிழ் மக்களின் தெரிவுகள் அறம் சார்ந்ததாகவோ, மக்கள் நலன் சார்ந்ததாகவோ இருந்ததில்லை. இம்முறையும், அறம் சார்ந்தும் வேலைத்திட்டம் சார்ந்தும் வாக்களிக்கும் வாய்ப்புக் குறைவாகவே உள்ளது. …
-
- 0 replies
- 768 views
-
-
விருந்தகங்களில் வேட்பாளர்கள் தேங்காய் கியூவில் வாக்காளர்கள்? – நிலாந்தன். மருத்துவர் அர்ஜுனா மான் கட்சியின் பெண் வேட்பாளரோடு நாகரீகமின்றி நடந்து கொண்டது ஒரு விருந்தகத்தில் ஆகும். அது தொடர்பாக ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட பெண் வேட்பாளராகிய மிதிலைச்செல்வி அந்த விருந்தகத்துக்கு தானும் உணவருந்தச் செல்வதுண்டு என்று கூறுகிறார். தனக்குத் தெரிந்தவர்களையும் அங்கு விருந்துண்ண அழைத்துச் செல்வதுண்டு என்றும் கூறுகிறார். சம்பவம் நடந்த போது அந்த விருந்தகத்தில் நிறையப் பேர் தெரிந்த ஆட்கள் இருந்ததாகவும், அவர்களில் அனேகர் ஏதாவது ஒரு கட்சியோடு தொடர்புடைய ஆட்கள்தான் என்றும் கூறுகிறார். அதாவது அவர் ஊடகச் சந்திப்பில் தெரிவித்த தகவல்களின்படி அர்ச்சுனாவும் உட…
-
- 0 replies
- 246 views
-
-
2016 - தீர்வா அல்லது சவாலா? - யதீந்திரா 2016 - சம்பந்தனின் நம்பிக்கைக்குரிய ஆண்டு. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது சம்பந்தன் ஒரு விடயத்தை தொடர்ச்சியாக அழுத்திக் கூறிவந்தார். அதாவது, 2016 இல் ஒரு நல்ல அரசியல் தீர்வு கிடைக்கும், ஆனால் அது என்ன மாதிரியான அரசியல் தீர்வு என்பது தொடர்பில் சம்பந்தன் இதுவரை எதுவும் சொல்லவில்லை. ஆட்சிமாற்றத்தின் பின்னர் இப்பத்தியாளரிடம் பேசும்போது சம்பந்தன் ஒரு விடயத்தை கூறியிருந்தார். அதாவது, நான் சில்லறைத் தீர்வு எதனையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றார். ஆனால் தமிழ் மக்களின் சார்பில் வைக்கவேண்டிய வரைபை வைத்தால் அல்லவா அரசாங்கம் முன்வைக்கும் தீர்வாலோசனை பெறுமதியானதா அல்லது சில்லறையானதா என்பதை புரிந்துகொள்ள முடியும். இப்படி க…
-
- 0 replies
- 732 views
-