அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
ஆப்கானிஸ்தான்: ‘பயங்கரவாதத்திற்கெதிரான’ அமெரிக்கப் போரின் முதற் பலிக்களமும் இறுதிச் சாட்சியமும்! ரூபன் சிவராஜா அமெரிக்காவின் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற அறைகூவலின் முதலாவது ஆக்கிரமிப்புக் களமாக்கப்பட்ட தேசம் ஆப்கானிஸ்தான். செப்ரெம்பர் 11 தாக்குதல்களை நடாத்திய (அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள், மற்றும் பென்ரகன் மீதான தாக்குதல்கள்) பின்லாடன் தலைமையிலான அல்ஹைடா பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கியது என்பதே ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பிற்கு அமெரிக்கா கூறிய முதற்காரணம். அல்ஹைடா பயங்கரவாதிகள் தங்குவதற்கும் பயிற்சி எடுப்பதற்;குமான தளமாக ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்துவதற்கு தலிபான் ஆட்சிபீடம் அனுமதியை வழங்கியிருக்கின்றது என்ற அடிப்படையில் ஆப்கானி…
-
- 0 replies
- 378 views
-
-
கூட்டமைப்புடன் அரசாங்கம் இருதரப்பு பேச்சு நடத்துமா? புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் பாரிய சவால்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த விடயத்தில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகின்றது. அதாவது புதிய அரசியலமைப்பு வருமா? அதில் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளடக்கப்படுமா? தேர்தல் முறைகள் மாற்றப்படுமா? நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமா போன்ற கேள்விகள் அனைவர் மத்தியிலும் எழுகின்றன. காரணம் இந்த விடயங்களை முன்னெடுப்பதாக கூறியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. ஆனால் தற்போதைய நிலைமையை பார்க்கும்போது…
-
- 0 replies
- 378 views
-
-
உண்மை கண்டறியும் ஆணைக்குழு ; தென்னாபிரிக்க அனுபவம் 18 OCT, 2022 | 01:21 PM ஆணைக்குழு என்றதும் காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் பீற்றர் கெனமன் சுவாரஸ்யமாக கூறிய ஒரு கருத்து எமக்கு நினைவுக்கு வரும்." ஆணைக்குழு நியமனம் என்பது மலசல கூடத்துக்கு போவதை ஒத்ததாக இருக்கும்.அமர்வுகள் இடம்பெறும்.அத்துடன் காரியம் முடிந்துவிடும்." ஆணைக்குழுக்கள் நியமனங்களைப் பொறுத்தவரை, இலங்கையில் பிரத்தியேகமான ஒரு வரலாறே இருக்கிறது.குறிப்பாக, இனநெருக்கடியுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களை, தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விசாரணை செய்வதற்கு இதுவரையில் நியமிக்கப்பட்டிருக்கக் கூடிய எந்தவொரு ஆணைக்குழுவும் பயனுறுதியுடைய விளைபயன்களை தரவில்லை.உண்மைகள் …
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
பதவிவிலகுகிறார் கோட்டா? என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஜனாதிபதிப் பதவியிலிருந்து கோட்டாபய, எதிர்வரும் 13ம் திகதி, புதன் கிழமை, எசல பௌர்ணமி தினத்தன்று, விலகுவதாக சபாநாயகருக்கு தெரிவித்திருப்பதாக செய்தியறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 2022 ஜூலை 9ம் திகதி நடந்த பெரும் ஆர்ப்பாட்டத்தையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை ஆகியவற்றினுள் நுழைந்து அவற்றைக் கைப்பற்றிய நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு தீவைத்து எரித்தழித்த பின்புலத்தில், இந்த அறிவிப்புச் செய்தி வந்திருக்கிறது. இப்படி ஒரு செய்தி வந்துவிட்ட பின்னர் “பதவிவிலகுறார் கோட்டா” என்பதற்கு பிறகு கேள்விக்குறிக்கான தேவை என்ன என்று கே…
-
- 0 replies
- 378 views
-
-
ஆர்ஜென்டீனா: அம்மம்மாக்களின் உறுதி மரணம் என்பது கொடுமையானது. காணாமல் போவதென்பது மிகவும் கொடுமையானது. அது நிச்சயமின்மைகளையும் எதிர்பார்ப்பையும் ஒருங்கே கிளறிவிடும் அபத்தத்தை எளிமையாகச் செய்துவிடும். காணாமல் போதல்கள் உலகெங்கும் தொடர்ந்து நடக்கின்றன. அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் துயரமும் அவலமும் சொல்லி மாளாது. அண்மையில் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்ற இரண்டு நிகழ்வுகள், இக்கட்டுரையை எழுதத் தூண்டின. முதலாவது, ஆர்ஜென்டீனாவில் பதவிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம், குற்றவாளிகளுக்கு விடுப்பு அளித்தமைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, இளவயது மற்றும் வயதுமுதிர்ந்த பெண்கள் வீதிகளில…
-
- 0 replies
- 378 views
-
-
சிதையும் தமிழர் அரசியல் கட்சிகள்: நிலை தடுமாறும் தமிழ்த் தேசியம் -க. அகரன் ‘சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த’ கதையாகி இருக்கும் தமிழர் அரசியல் களம், தொடர்ந்தும் நிதானமின்றிப் பயணிக்கின்றதா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் மக்கள், தமது அரசியல் தலைமைகளிடம் ஒற்றுமையின் தேவையை உணரச் செய்கின்ற போது, அரசியல் தளத்தில் இருக்கின்றவர்கள், தமக்குள் இருக்கும் காழ்ப்புணர்ச்சிகளைக் கக்கியவாறு, தமக்கான தனித்தனித் தளங்களை ஆரம்பிக்கும் படலங்கள் தொடங்கியுள்ளன. தனிக்கட்சி அரசியலும் அதன் பின்னரான கூட்டும் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளிடம் நாகரிகமாக ஒட்டிக்கொண்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கின்ற போது, த…
-
- 0 replies
- 378 views
-
-
"இலங்கை மனித உரிமை மீறல்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் மேஜிக் செய்து மாற்ற முடியாது" - அம்பிகா சற்குணநாதன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க (இன்றைய (மே 17) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார் என்பதற்காக நாட்டில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை மாயாஜால வித்தைகளை செய்து மாற்றிவிட முடியாது என, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. …
-
- 2 replies
- 377 views
- 1 follower
-
-
சமூக ஊடகங்கள் மீதான தடை முஸ்லிம்கள் மீதான தாக்குதலை மூடி மறைக்க உதவியதா? எந்தவிதமான உதவியும் அற்ற நிலையில் இருந்த அப்பாவி முஸ்லிம்கள் மீது நன்றாக திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட இனவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் முஸ்லிம்களது வீடுகளை உடைத்தார்கள். பள்ளிவாசல்களுக்கும், வர்த்தக நிலையங்களுக்கும் தீ வைத்தார்கள். முஸ்லிம்களின் சொத்துக்களை எரித்தார்கள். புனித குர்ஆன் பிரதிகளை தீயிட்டுக் கொளுத்தினார்கள். முடிந்தவரையில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை சூறையாடி காலி செய்த பின்பே அவற்றுக்கு தீ வைத்தார்கள். ஜனாதிபதியும், பிரதமரும் இவற்றைத் தடுத்து நிறுத்தி முஸ்லிம்களைக் …
-
- 0 replies
- 377 views
-
-
'சுமந்திர கலகம்' நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமது ஏகபோக பலத்தை தமிழ் மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்ட தமிழ்க் கூட்டமைப்பு எனப்படும் நான்கு கட்சிகளின் கூட்டணியில் தனியொரு கட்சியின் ஆதிக்கம் எனப்படுவது எதிர்காலத்தில் செல்வாக்கு செலுத்தப்போகின்றதா என்பதை பரிசோதிக்கும் நிகழ்வொன்று அண்மையில் நடைபெற்று அதற்கு விடையும் காணப்பட்டுவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் தமிழரசு கட்சியின் ஆதிக்கமும் முக்கியமாக சம்பந்தன் - சுமந்திரன் கூட்டுச் செல்வாக்கும் அபரிமிதமாக காணப்படுவதாக ஒரு பாரம்பரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருவது வழக்கம். கூட்டமைப்பில் உள்ளவர்கள் அதனை அவ்வப்போது மூடிமறைத்தாலும் நடந்து முடிந்த பொதுத் தேர்தலின்போது சம்பந்தன் மேற்கொண்ட பிரசாரங்களின்போதும்…
-
- 2 replies
- 377 views
-
-
இராணுவத்தை காப்பாற்றுவதில் அக்கறை காட்டும் அரசாங்கம் குற்றச்சாட்டுகள் மற்றும் போர் தொடர்பான ஐ.நாவின் பரிந்துரைகள் விடயங்களில், சர்வதேச சமூகத்தின் ஆதரவில்லாமல், இலங்கைப் படைகள் தமது பெயரைக் காப்பாற்றிக் கொள்வது மிகவும் கடினமானது.” இந்தக் கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான் கடந்த வாரம் கூறியிருந்தார். சபுகஸ்கந்தையில் உள்ள பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார். இப்போதெல்லாம், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்புத் துறைசார்ந்த உயர்நிலைப் பிரமுகர்கள் படை அதிகாரிகளைய…
-
- 0 replies
- 377 views
-
-
முல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும்- நிலாந்தன்…. மாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை எவ்வளவு தூரத்திற்கு அசைக்குமோ தெரியவில்லை. ஆனால் 2009 மேக்குப் பின்னரான புதிய தமிழ் எதிர்ப்பு வடிவம் குறித்துச் சிந்திக்கும் எல்லாத் தரப்புக்கும் அதில் கற்றுக்கொள்வதற்கு முக்கிய பாடங்கள் உண்டு. சனச்செறிவுள்ள யாழ்ப்பாணத்தில் அப்படியோர் ஆர்ப்பாட்டத்தைச் செய்வது வேறு. முல்லைத்தீவில் அதைச் செய்வது வேறு. மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அதில் கலந்துகெண்டார்கள். இந்த வகை ஆர்ப்பாட்டங்களில் முதலாவதும் பெரியதுமான ஓர் ஆர்ப்பாட்டம் 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் யாழ்ப்பாணத்தில்…
-
- 0 replies
- 377 views
-
-
ரணிலின் வடக்கு விஜயம்! பிராந்தியத்தில் உணர்த்தப்படும் செய்திகள்? கடந்த சனிக்கிழமை ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கும், கிளிநொச்சிக்கும் விஜயம் செய்தார். இங்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் அவர் தொடக்கி வைத்தார். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அவர் இந்தியாவின் நிதி உதவியுடனான அவசர அம்புலன்ஸ் சேவையைத் தொடக்கி வைத்தார். இந்நிகழ்வை இந்தியப் பிரதமர் மோடி இந்தியாவிலிருந்தபடி இலத்திரனியல் திரை மூலம் தொடக்கி வைத்தார். நிகழ்வில் இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. மோடி சிங்களத்திலும், தமிழிலும் வணக்கம் சொன்னார். இரு தலைவர்களும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாசப்பிணைப்பைப் பற்றிப் போற்றிப் பேசினார்கள். அதே நாளில் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாண…
-
- 0 replies
- 377 views
-
-
தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவு என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan அண்மையில் ‘தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு’ இடம்பெற்றதாகவும் அதைத் தொடர்ந்து, ‘தமிழ் பேசும் கட்சிகளின் ஆவண நகல்’ தயாரிக்கப்பட்டு வருவதாகவும், செய்திக் குறிப்புகள் பதிவுசெய்திருந்த அதேவேளை, இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டவர்கள், அழைக்கப்படாதவர்கள், கலந்து கொண்டவர்கள், கலந்து கொள்ளாதவர்கள் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் பற்றியும் இழுபறிகள் பற்றியும், நிறையப் பதிவுகள் காணக்கிடைக்கின்றன. இந்நாட்டில் வாழும் இலங்கை தமிழர், இந்திய வம்சாவளித் தமிழர், முஸ்லிம்கள் எனத் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் கூட்டங்களை ஒன்றிணைக்கும் வார்த்தையாக, ‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற வார்த்தை பொதுவாகப் பயன…
-
- 0 replies
- 377 views
-
-
மேற்காசிய புவிசார் அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாக லெபனான் லெபனான் பிரதமர் சாட் ஹரிரியின் திடீர்ப் பதவிவிலகல் இன்னொரு தடவை நாட்டை அரசியல் உறுதிப்பாடற்ற நிலைக்குள் தள்ளிவிட்டிருப்பது மாத்திரமல்ல, சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பிராந்திய பதற்ற நிலையை மீளவும் மூளவைத்திருக்கிறது. லெபனான் பல வருடங்களாக பிராந்திய நாடுகளின் மறைமுக யுத்தங்களுக்கான (Proxy wars) களமாக இருந்துவந்திருக்கிறது. சவூதி அரேபியாவுடன் நெருக்கமான வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளைக் கொண்ட சுன்னி முஸ்லிமான ஹரிரி ஈரானின் ஆதரவைக் கொண்ட ஹிஸ்புல்லா இயக்கத்துடன் கூட்டரசாங்கமொன்றை 11 மாதங்களுக்கு முன்னர் ஏ…
-
- 0 replies
- 377 views
-
-
இலங்கையின் நெருக்கடிகளுக்கு ஒரு மார்க்சிய மாற்று October 29, 2024 பிரசாத் இலங்கையின் நெருக்கடிகளுக்கு ஒரு மார்க்சிய மாற்று www.socialistworld.net வெளியாகிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு வரலாற்றில் முதல் முறையாக ‘இடதுசாரி’ பின்னணியை கொண்ட கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகி இருக்கிறார். அனுர குமார திஸ்ஸநாயக்காவை ஒரு இடதுசாரி தலைவராக சர்வதேச ஊடகங்கள் சித்தரித்த போதிலும் அதில் உண்மையில்லை. அவர் பதவிக்கு வந்த ஆரம்ப வாரங்களில் இருந்து அவரது நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்ட எதார்த்தத்தையே வெளிப்படுத்துகின்றது. ஒரு காலத்தில் பேச்சளவில் இடதுசாரிய ஆதரவாக இருந்த ஜனதா விமுக்தி பெரமுனாவின் (JVP) ஜெனரஞ்சக முன்னணியான தேசிய மக்கள் சக்தி (NPP) இலங்கையின் ஜ…
-
- 0 replies
- 377 views
-
-
தொற்றுத்தடுப்புத் திட்டங்களின் சமூக பொருளாதார விளைவுகள் கொரோனா தொற்றுப் பரம்பல் முழு உலகத்திற்கும் பேரதிர்ச்சியாக வந்திருக்கிறது. தொற்றுப்பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்கான பரந்துபட்ட திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. நோர்வேயில் அத்திட்டங்கள் இதுவரை வெற்றிகரமான விளைவுகளைத் தந்துள்ளன. ஆயினும் பெரும்பகுதி சமூகம் இயக்கம் முடக்கப்பட்டமையினால் மிக மோசமான சமூக விளைவுகளை இத்திட்டங்கள் ஏற்படுத்தியிருக்கின்றன. தொற்றுப்பரம்பல் கட்டுப்படுத்தல் திட்டங்களின் சமூக பொருளாதார விளைவுகளை ஆராய்வதற்கென மார்ச் 25, நோர்வேயின் சுகாதாரத் திணைக்களம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. கட்டுரையாளரை (பேராசிரியர் Steinar Holden) அதன் தலைவராகக் கொண்டு, நோர்வேயின் மத்திய கருத்தாய்வு நிறுவனம், மத்திய வ…
-
- 0 replies
- 377 views
-
-
வேற்றுமையால் தீமையே விளையும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எழுதிய ‘நீதியரசர் பேசுகிறார்’ எனும் நூலின் வெளியீட்டு விழா இம்மாதம் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்ந்தது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பின்வருமாறு கூறியிருக்கிறார். நான் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப்பின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தபோது அவர் மஹிந்த ராஜபக் ஷவுடன் பேசுமாறு கூறினார். அதன்படி நாம் மஹிந்தவைக் கண்டதும் மஹிந்த என்னைப்பார்த்து எனது தோல்விக்கு நீரே காரணம் என்றார். உடனே நான் அதற்கு…
-
- 0 replies
- 377 views
-
-
‘இந்த அரசாங்கம் எல்லா இலங்கை மக்களுக்குமான அரசாங்கம் அல்ல’ -க.வி.விக்னேஸ்வரன் 51 Views ‘இந்த அரசாங்கம் எல்லா இலங்கை மக்களுக்குமான அரசாங்கம் அல்ல’ என நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமாகிய க.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமாகிய க.வி.விக்னேஸ்வரன் மேலும் உரையாற்றுகையில், “இந்த அரசாங்கம் எல்லா இலங்கை மக்களுக்குமான அரசாங்கம் அல்ல என்பதை சொல்லிலும் செயலிலும் நிரூபித்து வருகின்றது. தங்களுக்கு வாக்களித்த பௌத்த சிங்கள மக்களின் விருப்பங்களுக்கு அமைவாகவே செயற்படமுடியும் என்று ஜனாதிபதி மற்றும் அரசாங்க உறுப்பினர்கள் வெளிப்படையாகவே கூறிவருகின்றனர். …
-
- 0 replies
- 377 views
-
-
சட்டத்தைக் கையிலெடுக்கும் சமுதாயங்கள் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்தியாவும் இலங்கையும், ஒரே பிராந்தியத்தில் இருப்பதனால் என்னவோ, சில நேரங்களில், இரு நாடுகளில் நடக்கும் விடயங்களையும் ஒப்பிட்டுப் பேசுவதற்கு இயலுமாக இருக்கிறது. அவ்வாறு தான், இந்தியாவிலும் இலங்கையிலும் அண்மையில் இடம்பெற்ற இரு சம்பவங்கள், சில கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆள்வார் மாவட்டத்தின் ஆள்வார் என்ற நகரப் பகுதியில், இம்மாதம் முதலாம் திகதி, முஸ்லிமொருவர் கொல்லப்பட்டார். இந்தப் பந்தியில், அவரது இனக் குழுமம் குறிப்பிடப்படுவதற்குக் காரணம், அவரது மரணத்துக்கு, அவரது இனம் காரணமாக அமைந்தது என்பதனாலேயே ஆகும். பெஹ்ல…
-
- 0 replies
- 377 views
-
-
தமிழரசுக் கட்சியின் முடிவா? எம்.ஏ.சுமந்திரனின் முடிவா? – அகிலன் September 9, 2024 ஜனாதிபதி தேர்தலில் ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதற்கு தமிழரசுக் கட்சி எடுத்துள்ள முடிவு கட்சியின் முடிவா அல்லது சுமந்திரனின் தனிப்பட்ட முடிவா என்ற கேள்வி எழுப்பப் படுகின்றது. இந்த முடிவு அரசியலில் கடுமையான வாதப் பிரதி வாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. வவுனியாவில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழுவின் விசேட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் பின்னணியில் இருந்து செயற்பட்டவா் சுமந்திரன் என்பதில் சந்தேகம் இல்லை. என்ன அடிப்படையில், எதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு இன்று வரையில் தமிழரசு கட்சியின் சார்பில் யாருமே த…
-
- 1 reply
- 377 views
-
-
வல்லரசுகள் தமது நலன்களை பேணும் போக்கில் கவனம் கொண்டுள்ளன. அரசியல்வாதிகள் தமது பதவிகளை பேணுவதில் கவனம் கொண்டுள்ளனர். மக்களும் தமது நலன்களின் அடிப்படையிலேயே வாழ விரும்புவர். இந்நிலையில் கடந்த காலங்களில் வாழ்ந்த தியாகம் மற்றும் தன்னலமற்ற போராட்டம் என்பன இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் வெறும் பேச்சுப்பொருளாக மாறும் அபாயமே உள்ளது . கடந்த இரு கட்டுரைகளில் பாகிஸ்தானும் மியான்மரும் சீன தலையீட்டையும் மேலைத்தேய அழுத்தத்தையும் கையாழும் தன்மைகள் குறித்து ஆராயப்பட்டது. இந்த வரிசையிலே சிறிலங்கா குறித்த ஆய்வு இங்கே தரப்படுகிறது — புதினப்பலகைக்காகலோகன் பரமசாமி* அமெரிக்க தலைமையிலான தாராள பொருளாதார கொள்கை போக்கை கொண்ட மேற்கு நாடுகளும் யப்பானும் இணைந்து,யப்பானில் இடம் பெற்ற ஏழு …
-
- 0 replies
- 377 views
-
-
24 MAR, 2024 | 05:07 PM நாட்டின் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் நட்பு நாடுகளிடமிருந்தும் அரசாங்கம் நிதியுதவிகளைப் பெற்றிருந்தமை அனைவரும் அறிந்ததொரு விடயம். உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்தும் பொறிமுறைகள் தற்போதைய சூழலில் சாத்தியப்படாத ஒன்றாக உள்ளதால், அதன் காரணமாக, வரிகளை அதிகமாக அறவிட்டும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தும், மின் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொண்டும் நெருக்கடிகளைத் தவிர்க்க அரசாங்கம் முயற்சி செய்கின்றது. அந்நிய செலாவணியை அதிகரிக்க அண்மைக்காலமாக சில நாடுகளுக்கு விசா முறைகளில் தளர்வுகளை ஏற்படுத்தி அந்நாட்டு உல்லாசப்பயணிகளை நாட்டுக்கு வரவழைக்கும் திட்டத்தையும் அரசாங்கம் மேற்கொண்டது.…
-
- 0 replies
- 377 views
- 1 follower
-
-
NPP யின் தடுமாற்றங்கள்: குழப்பங்களும் வரலாற்றுப் பொறுப்பும் May 24, 2025 — கருணாகரன் — மிகச் சிறப்பான மக்கள் அங்கீகாரத்தையும் அரசியல் ஆணையையும் பெற்றிருக்கும் NPP, தீர்மானங்களை எடுப்பதில் குழப்பத்துக்கு – தடுமாற்றத்துக்கு- உள்ளாகியிருப்பது ஏன்? இன்றைய இலங்கையில் அனைத்துச் சமூகத்திலும் ஜனவசியம் மிக்க ஒரே தலைவராக இருக்கிறார் அநுரகுமார திசநாயக்க. ஆனாலும் அந்த மக்களுடைய நம்பிக்கைகளை நிறைவேற்ற முடியாதிருப்பது எதற்காக? NPP க்குப் பின்னிருக்கும் அல்லது அநுரகுமார திசநாயக்குவுக்குப் பின்னுள்ள சக்திகள் எவை? யாருடைய நிகழ்ச்சி நிரலில் NPP இயங்குகிறது? அல்லது அநுரகுமார திசநாயக்க இயங்குகிறார்? ஜே.வி.பி தவிர்ந்த வெளிச்சக்திகளின் பின்னணியோ பிடியோ இல்லாமல் தனித்துச் சுயாதீனமாக NPP …
-
-
- 4 replies
- 377 views
- 1 follower
-
-
அரசியல் போட்டிகளுக்கு மத்தியில் கிழக்குத் தமிழர் ஒன்றியம் எடுபடுமா? -அதிரதன் பெரியமீன்களைப் பிடிப்பவர்கள் மத்தியில், சின்ன மீன்களையே பிடிக்க முடியாதவர்கள், தாம் பிடித்த சிறியசிறிய மீன்களை, பெரியமீன்கள் என்று சொல்லி, அரசியல் களத்தில் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். அரசியல் அநாதைகளாக தமிழர்கள் மாறிவிடக்கூடாது என்பதுதான், இனப்பிரச்சினைக்கான தோற்றுவாயாக இருந்திருக்கிறது. அந்த அடிப்படையில், இப்போதுள்ள அரசியல் போட்டிகளுக்கு மத்தியில், கிழக்கில் இருக்கின்ற அரசியல் கட்சிகளின் பிரிந்து நிற்கின்ற தன்மையானது, அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கின்ற நிலைப்பாட்டுக்கு எதிராக இருக்கிறது, என்ற சிந்தனை வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் தான்,…
-
- 0 replies
- 377 views
-
-
வன்முறைக்குப் பின்னால் உள்ள அரசியல் அம்பாறையில் வேண்டுமேன்றே சீண்டிவிடப்பட்ட இனவாதம், கண்டியில் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறது. உயிர்ப்பலியுடன் பெருமளவில் பொருளாதார அழிவுகள் மாத்திரமன்றி, இனங்களுக்கிடையில் பதற்றம், உறுதியற்ற நிலை என்று பல விளைவுகளுக்கு, இந்தச் சம்பவங்கள் காரணமாகி இருக்கின்றன. உண்மையில், நாட்டில் என்ன நடக்கிறது? முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த, சிங்கள இனவாதம், ஏன் மீண்டும் கிளர்ந்தெழுகிறது? இந்தக் கேள்விகள் பலரிடத்தில் உள்ளன. இதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்ற கேள்விக்கு, ஒவ்வொரு தரப்பில் இருந்தும் ஒவ்வொரு பதில்கள் வருகின்றன. ஆனால், ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. இவை ஒன்றும், எதேச்சையான நி…
-
- 1 reply
- 376 views
-