அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்? — வீரகத்தி தனபாலசிங்கம் — March 17, 2025 புலம்பெயர் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் வாழும் மூத்த பத்திரிகையாளரும் சிறந்த அரசியல் ஆய்வாளர்களில் ஒருவருமான டி.பி.எஸ். ஜெயராஜ் அண்மைக் காலத்தில் எழுதிய கட்டுரைகள் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு நூலாக வெளிவந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க கடந்த வருடம் செப்டெம்பரில் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அரசியல் எழுச்சி குறித்து ஆறு கட்டுரைகளையும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி குறித்து மூன்று கட்டுரைகளையும் ஜெயராஜ் எழுதியிருந்தார். அவற…
-
- 1 reply
- 366 views
-
-
பொங்கலுக்கு முதல் நாள் நடந்த ஒரு பொங்கல்! நிலாந்தன். கடந்த தை பொங்கல் தினத்திற்கு முதல் நாள் யாழ்ப்பாணம் முத்தவெளியில் ஒரு வித்தியாசமான பொங்கல் ஒழுங்கு செய்யப்பட்டது. முத்த வெளியில் அமைந்திருக்கும் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளுக்கான நினைவுத் தூபிகளுக்கு அருகில் ஒரு சிறைக் கூண்டு செயற்கையாக உருவாக்கப்பட்டு அதற்குள் வைத்து ஒரு பொங்கல் நடத்தப்பட்டது. அந்த நிகழ்வுக்கு தலைப்பு “விடுதலைப் பொங்கல்” என்பதாகும். அந்நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு தொகுதியினர் சிறைக்கைதிகளின் உடைகளோடு காணப்பட்டார்கள். அதை ஒழுங்கு படுத்தியது அரசியல் கைதிகளின் விடுதலைக்கான “குரலற்றவர்களின் குரல்” என்ற அமைப்பாகும். இந்த அமைப்பு அதற்கு முதல்நாள் யாழ் ஊடக அமையத்தில் ஒரு ஊடக சந்திப்பை …
-
- 1 reply
- 366 views
-
-
முஸ்லிம் சமூகம் திருந்தாத வரை அரசியல்வாதிகளை திருத்த முடியாது மொஹமட் பாதுஷா ஒரு பிள்ளைக்கு, சிறு வயதிலிருந்தே பூனையைக் காட்டி, “இதுதான் யானை” என்று சொல்லிப் பழக்கி வந்தால், அந்தப் பிள்ளை பெரிய ஆளாக வளர்ந்தாலும், உண்மையான யானையை, யானை என்று ஏற்றுக் கொள்ளத் தயங்கும். பூனையே அதனது எண்ணங்களில், யானையாக இருக்கும். இது எல்லாவற்றுக்கும் பொருந்தும். குறிப்பாக, ஒரு சமூகம் எவ்விதமான அரசியல் கோட்பாடுகளால், கலாசாரத்தால் கட்டமைக்கப்படுகின்றதோ, எவ்விதம் அரசியல் மயப்படுத்தப்படுகின்றதோ, அதையே ‘சரியான அரசியல் வழிமுறை’ என்று நம்பிக் கொண்டிருக்கும். அவ்வாறு நம்பிக் கொண்டிருக்கும் காலம் வரைக்கும், சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளவும் மாட்டாது; அரசியல்வாதிகள் திரு…
-
- 0 replies
- 366 views
-
-
கந்தையா அருந்தவபாலன் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்களைக் கொண்டிருக்கும் நாடொன்றில் அந்தந்த இனங்களின் தனித்துவத்தை ஏற்று அவர்களின் அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகளை வழங்கும் சமத்துவமான ஆட்சிமுறைமை நிலவும் நாடுகளில் வாழும் மக்களிடையே தமது இன உணர்வை விட தமது நாடு என்ற தேசிய உணர்வு மேலோங்கி நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்கு மாறாக பெரும்பான்மைத் தேசிய இனம் ஏனைய தேசிய இனங்களின் அரசியல் உரிமைகள் பலவற்றை மறுத்து அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக கருதும் ஆட்சி முறைமையைக் கொண்டிருப்பதுடன், அத்தேசிய இனங்களை ஒடுக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் ஒருநாட்டில் உள்ள சிறுபான்மை தேசிய இனங்களுக்குத் தேசிய உணர்வை விடத் தமது இன உணர்வே மேலோங்கி இருக்கும். இத்தகைய ஒரு நிலையே இலங்கை…
-
- 0 replies
- 366 views
- 1 follower
-
-
பெரிய பிரச்சினையாக இன்னமும் உள்ள மாணவர் இடைவிலகல் பெருந்தோட்டப் பகுதிகளில், பாடசாலைகளில் இடைவிலகும் மாணவர்களின் தொகை, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இது, கல்வியின் முக்கியத்துவத்தை உணராத ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பு என்றும் கூறலாம். நான்கு புறங்களும் தேயிலை மலைகளால் சூழப்பட்ட பச்சையத்துக்குள், 50 சதவீதம் கற்றுத்தேர்ந்த சமூகம் இருப்பதைப் போன்றே, முழுமையான கல்வி அறிவைப் பெறாத சமூகமும் உள்ளது. கல்வி வளர்ச்சியில் மத்திய மாகாணம் பின்தங்கியுள்ளதாக, கல்வி அமைச்சு அடிக்கடி கூறிவருகின்றது. இதனால், மலையகத்தில் கல்வித்துறையை வளர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. …
-
- 0 replies
- 366 views
-
-
தமிழகத் தலைவர்களுக்கு சி.வி அன்று கூறியதை சி.விக்கு திகா இன்று கூறுகிறார் புதிய அரசியலமைப்புக்கான வட மாகாண சபையின் ஆலோசனையாக, கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அம்மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலம் முன்வைக்கப்பட்ட திட்டத்தில், மலையகத் தமிழ் மக்களுக்காக நிறுவப்பட வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்ட பிராந்திய சபையை, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பி. திகாம்பரம் நிராகரித்துள்ளார். அதிகாரப் பரவலாக்கலுக்காக, மலையகத்துக்குத் தனி அலகு தேவையில்லை என அவர் கூறியிருக்கிறார். ஏனைய மலையகத் தமிழ்க் கட்சிகளும் தொழிற்சங்கங்களும், மலையக அலகு தொடர்பான ஆலோசனையை நிராகரிப்பதாகக் கூறாவிட்டாலும், அவர்களும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது, சகலரும்…
-
- 0 replies
- 366 views
-
-
- ஐ.வி.மகாசேனன்- உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் போட்டி கொதிநிலையை நோக்கி நகர்ந்துள்ளது. அரசியல் செய்தியிடல்களில் குட்டித் தேர்தல் என்றவாறு அழைக்கப்படுகின்றது. எனினும் தேர்தல்கள் யாவுமே மக்கள் எண்ணங்களை நாடிபிடித்து பார்க்கும் செயற்பாடாக அமைவதனால், அதன் பெறுமதிகள் உயர்வானதாகவே அமைகின்றது. அதனடிப்படையிலேயே ஆளும் தரப்பாகிய தேசிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் என அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் யாவரும் தீவு முழுமையாக சூறாவளி பிரசார செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றார்கள். தமிழர் தாயகப்பகுதியிலும் தேசிய மக்கள் சக்தி தமது வெற்றியை பாதுகாத்துக் கொள்ள அதீத அக்கறை செலுத்தி வருகின்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திர…
-
- 0 replies
- 365 views
- 1 follower
-
-
களத்தில் குதித்துள்ள பொருளாதார அடியாட்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையர்களின் கதையாடல்கள், இப்போது வேறு தளத்தை நோக்கி நகர்ந்துள்ளன. இன்னும் சரியாகச் சொல்வதானால் நகர்த்தப்பட்டுள்ளன. நேற்றுவரை போராட்டத்துக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஆதரவாக இருந்தவர்கள், கருத்துரைத்தவர்கள் பலர் இன்று அரசாங்கத்துடன் ஐக்கியமாகி, பதவிகளைப் பெற்றுள்ளார்கள். அவர்கள், போராட்டத்துக்கும் போராட்டக்காரர்களுக்கும் எதிராக, இன்று கருத்துரைக்கிறார்கள்; அவ்வாறான கருத்துருவாக்கம் ஒன்றைச் செய்கிறார்கள். இன்னொரு தரப்பினர், பொருளாதார மீட்சியின் அவசரம் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள், போராட்டக்காரர்களை அமைதிகாக்கும்படி கோருகிறார்கள். மற்றுமொரு தரப்பினர், போராட்டம், வன்முறையைக் க…
-
- 0 replies
- 365 views
-
-
பா.ஜ.கவின் பதற்றம் மிகுந்த பயணம் பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரை, பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் அமித்ஷா, பாட்னாவுக்குச் சென்று சந்தித்துப் பேசியுள்ளார். இந்திய அரசியல் வானில் உதிக்கப் போகும் புதிய கூட்டணிகள் எது என்பது, இன்னும் தெளிவாகாத நிலையில், இருக்கின்ற கூட்டணிக் கட்சிகளை இழந்து விடக்கூடாது என்ற, தாமதமான முயற்சியின் ஒரு பகுதியாக, இப்போது அமித்ஷா- நிதிஷ் குமார் சந்திப்பு நடைபெற்றுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை, நாட்டில் உள்ள பல கட்சிகள் எதிர்த்த போது ஆதரித்தவர் பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார். அதுவே பிறகு பா.ஜ.கவின் நட்புக்கு ஆதாரமாக அமைந்தது. …
-
- 0 replies
- 365 views
-
-
தமிழரசுக்கட்சிக்கான நீதிமன்ற தடை உத்தரவுகளால் 75, வருட பழைமைவாய்ந்த அரசியல் கட்சியான தந்தைசெல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் 17 ஆவது தேசிய மகாநாடு 19ஆம் திகதி , திங்கள் கிழமை நடைபெற இருந்த வேளையில் கடந்த 15 ஆம் திகதி, அன்று ஒரே நாளில் திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் தாக்கல் செய்த வழக்குகளால் பல இழுபறிகள் போட்டிகள் பொறாமைகள் மத்தியில் இடம்பெற இருந்தமாநாடு இப்போது நடத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. ஏற்கனவே 16, தேசிய மகாநாடுகள் எல்லாமே சிலு சிலுப்புகள் அணிகள் இன்றி இடம்பெற்றன. இதுவரை எட்டுத்தலைவர்களால் 74, வருடங்கள் கட்டிக்காத்த சமஷ்டிக்கொள்கையை வெளிப்படையாக கொண்ட தமிழ்தேசிய மரபு சார்ந்த கட்சி இம்முறைதான் 17 …
-
- 1 reply
- 365 views
-
-
18 SEP, 2023 | 05:27 PM சுகுமாரன் விஜயகுமார் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை பற்றி இப்போது பலரும் கதைத்து வருகின்றனர். கிராமங்களில் வாழும் மக்களுக்கு வசிப்பதற்காக 20 பேர்ச்சஸ் அல்லது அதற்கு அதிகமான அரசக் காணிகள் சட்ட ரீதியாக உரித்துடன் வழங்கப்படுகின்றன. எனினும் மலையக மக்களுக்கு வசிப்பதற்காக 1995ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை ஒரு குடும்பத்துக்கு 7 பேர்ச்சஸ் அளவு காணியே வழங்கப்பட்டுள்ளது. அவையும் சட்ட உரித்து அற்றவைகளாகும். 1972 ஆம் ஆண்டு 01ஆம் இலக்க காணி சீர்திருத்த ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 3(3) இன் பிரகாரம் பெருந்தோட்டங்களில் லயன் வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களுக்க…
-
- 0 replies
- 365 views
- 1 follower
-
-
http://aruvi.com/img/uploads/2015/aruvi-news-photos/1636724261_china.jpg சீனா ஏன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சந்திக்க முனைகிறது? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்! Posted: 2021-11-12 08:38:54 EST இலங்கைக்கும் சீனாவுக்குமான உறவு நெருக்கடிமிக்கதொரு காலப்பகுதியை எதிர்நோக்கியுள்ளமை தெரிகிறது. இலங்கையை மிக நீண்டகால நட்பு நடாடாகவும் புவிசார் அரசியலையும் பூகோள அரசியலையும் எதிர்கொள்வதற்கு சீனாவுடனான உறவை பலப்படுத்திய இலங்கை தற்போது இந்தியாவையும் மேற்கையும் நோக்கி நகர்வதாக விளங்குகின்றது. இச்சூழலில் இலங்கையை எதிர்கொள்ள சீனா அணுகுமுறை மாற்றங்களை செய்ய நகர்வு ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தென்னிலங்கையிலிருந்து வெளியாகவும் தகவல்கள் உறுதிப்படுத்துகிறது. இக்கட்டுரையும் இலங்கை-சீன உ…
-
- 0 replies
- 365 views
-
-
அரசியல் சுனாமி நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளினால் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிகளுக்கு முடிவு காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், நிலைமைகள் சீரடைந்திருக்கின்றனவா என்பது தெளிவற்றதாகவே காணப்படுகின்றது. நல்லாட்சி அரசாங்கமே தொடர்ந்து பதவியில் இருக்கும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமெனவும் ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமைக்கப்படும் என்ற அறிவித்தல்களும் வெளிவந்திருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து பதவியில் இருப்பதற்கு ஜனாதிப…
-
- 0 replies
- 365 views
-
-
Published By: RAJEEBAN 18 JUN, 2025 | 12:23 PM By Jeevan Ravindran இலங்கையின் வடபகுதியின் தலைநகரமான யாழ்ப்பாணத்தில் மிகவும் மும்முரமான வீதியிலிருந்து 100 மீற்றர் தொலைவில் இரண்டு பொலிஸார் சுடலையின் இரண்டு துருப்பிடித்துப்போன நிறத்தில் உள்ள கேட்களின் பின்னால் நின்று அவதானித்தவண்ணமுள்ளனர். இலங்கையில் மிகச்சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கு பாதுகாப்பளிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த புதைகுழியிலிருந்து இதுவரை 3 குழந்தைகள் உட்பட 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பாரிய மனித புதைகுழிகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இலங்கை தமிழர்களின் காயங்களை மீள கிளறியுள்ளது.இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர்களிற்கு தனிநாடு கோரிய பிரிவினைவாத தமிழீழ விடுதலை…
-
- 1 reply
- 365 views
- 1 follower
-
-
ஐ.நா.வின் 37 ஆவது கூட்டத் தொடர் யாருக்கு சாதகம் ஐ.நா. வின் 37 ஆம் கூட்டத் தொடரில் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை என்ன? ஐ.நா. வின் இணை அனுசரணையோடு இலங்கை செயற்படுவதை நாம் வரவேற்றபோதும் பொறுப்புக்கூறலைத் தாமதப்படுத்துவது கவலையைத் தருகிறது. இதனால் 2019 ஆம் ஆண்டுக்குள் பிரேரணையை இலங்கை முழுதாக அமுல்படுத்தும் என்பது சந்தேகமாகும். ஏனெனில் காணாமலாக்கப்பட்டோருக்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு 20 மாதங்களுக்குப் பின்புதான் அதற்கான அலுவலகம் திறக்கப்பட்டது. இதைப்பற்றி நாம் அதிருப்தி அடைகிறோம். காணிகளைக் கையளிப்பதிலும் தாமதமாகிறது. காணி தொடர்ந்தும் அபகரிக்கப்படுமாயின் நம்பிக்கையை வளர்ப்பது ச…
-
- 0 replies
- 365 views
-
-
பெண்களின் வாழ்க்கை விடுகதையாகவே தொடருமா? பெண்கள் மீதான வன்முறை, ஒடுக்குமுறைக்கு எதிராக கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக மேற்கொண்ட போராட்டங்களின் விளைவால், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் ஓரளவுக்குக் குறைந்ததாகத் தென்பட்டாலும், அது தொடர்கதையாகவே இருக்கின்றது. பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளினதும் அதனால் பெண்கள் முகங்கொடுக்கக்கூடிய சவால்களினதும் வடிவங்களில் மாற்றம் பெற்றதே ஒழிய, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலையாக மாற்றம் பெற்றுள்ளது. உலகளாவிய ரீதியில் மூன்றில் ஒரு பெண், மன ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் கணவர் மற்றும் மற்றைய சிலரால் ஒடுக்குமறைக்கு ஆளாக்கப்படுவதோடு, இ…
-
- 0 replies
- 365 views
-
-
ஆக்கிரமிப்பும் அரசியலும் சமயமும்-பா.உதயன் அன்பையும் அறத்தையும் அழகிய காதலையும் தர்மத்தையும் தார்மீகத்தையும் சமாதானத்தையும் சமத்துவத்தையும் போதிக்கும் மதங்கள் மதம் கொண்ட மனிதர்களினால் வன்முறையும் வெறுப்பும் வேறுபாடும் மனிதப் படுகொலையும் அரசியலும் ஆக்கிரமிப்புமாக எல்லாமே தலை கீழாக கிடக்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாரளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனுக்கு மட்டும் தான் கட்டக் கூடாது வட கிழக்கில் புத்த விகாரையா. காணவில்லையே மக்களை இவர் பின்னால். ஐந்து பேரைக் கூட அவர் பின்னால் காணோமே இருந்த போதும் இத்தனை அடக்கு முறைக்கு பின்னும் பிழை சரிகளுக்கு பின்னால் இவன் மட்டும் தனியப் போராடுகிறானே இதுற்கும் ஒரு துணிவு வேண்டும். எந்தப் போராட்டமாக இ…
-
- 0 replies
- 365 views
-
-
தமிழர்களுக்கு தொடரும் அநீதி வெலிவேரிய- ரதுபஸ்வெலவில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுத்தமான குடிநீருக்காகப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது, கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல்களை நடத்த இராணுவத்தினருக்கு உத்தரவிட்ட குற்றச்சாட்டில் பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்த்தன கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். போராட்டம் நடத்தப்பட்ட பகுதிக்கு இராணுவத்தினரைக் கொண்டு சென்ற இவரே, அங்கு கட்டளைகளைப் பிறப்பித்திருந்தார். அந்தச் சம்பவத்தில் 14 வயது மாணவன் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டதுடன் 33 பேர் காயமடைந்தனர். மஹிந்த ர…
-
- 0 replies
- 365 views
-
-
புதிய அரசியல் யாப்பு அனைவரையும் திருப்தி படுத்தாதது...பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்
-
- 0 replies
- 365 views
-
-
ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு புருஜோத்தமன் தங்கமயில் இலங்கை இனியும் வங்குரோத்து அடைந்த நாடல்ல என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கிறார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஏழு பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொள்ளவதற்கான அனுமதி, திங்கட்கிழமை (20) கிடைத்திருக்கின்ற நிலையில், ரணில் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளை ரணில், ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டது முதல் மும்முரமாக முன்னெடுத்திருந்தார். குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிபொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சாரக் கட்டண அதிகரிப்பு என்று நாட்டின் பொருளாதார சுமையை மக்கள் மீது …
-
- 0 replies
- 365 views
-
-
ஐ.அமெரிக்கா-துருக்கி முறுகல் நிலைமை - ஜனகன் முத்துக்குமார் ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு குழு தோற்கடிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் மீள்வளர்ச்சியைத் தவிர்க்கும் காரணமாக, ஈராக்கில் உள்ள குர்திஷ் பிராந்தியத்தின் தலைநகரான எர்பிலில் இருந்து, மத்திய தரைக்கடல் வரை, பாதுகாப்பு வளையமொன்றை உருவாக்கப்போவதாக, ஐக்கிய அமெரிக்கா அறிவித்திருந்தது. குறித்த விடயம் தொடர்பில், ஐ.அமெரிக்காவின் தலைமையில் 30,000 இராணுவத்தினர், எல்லைகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள் எனவும், இக்கருமத்தில் சிரியாவை சேர்ந்த குர்திஷ் போராளிகளும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும், ஐ.அமெரிக்கா தெரிவித்திருந்தது. …
-
- 0 replies
- 365 views
-
-
அகதிகளாகும் இலங்கையர்! காத்திருக்கும் ஆபத்து
-
- 0 replies
- 365 views
-
-
மக்களுக்கு புரியாத ‘மாபியா’ அரசியல் -விரான்ஸ்கி நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தமிழ் பிரதேசங்களில் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. பரவுகின்ற கொரோனா வைரஸிலும் பார்க்க, படுவேகமாகத் தங்களின் அரசியல் கருத்துகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்துவிடவேண்டுமென்று, கட்சிப் பிரமுகர்கள் மின்னல் வேகத்தில் செயற்பட்ட வண்ணம் உள்ளனர். முக்கியமாக, இம்முறை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான சக்தியாக, தமிழ்க் கூட்டமைப்பின் மாற்றுச் சக்தியாகத் தங்களை முன்நிறுத்தியுள்ள விக்னேஸ்வரன் தலைமையிலான அணியினர், எப்படியாவது மக்களின் மனங்களில் புதிய விதைகளைத் தூவி, கூட்டமைப்பினருக்கான விசுவாச மரங்களை அடியோடு தோண்டியெறிந்துவிட வேண்டும் என்று படாதபாடுபடுகிறார்கள். முக்க…
-
- 0 replies
- 365 views
-
-
லீ குவானும் மதசார்பின்மையும் அபிவிருத்தியும் நாட்டின் முக்கியமான அரசியல் விடயங்களில், மதங்களினதும் மதத் தலைவர்களினதும் தலையீடு என்பது, இலங்கையைப் பொறுத்தவரை வழக்கமானதாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால், இவற்றுக்கு மத்தியிலும், அண்மையில் இந்தத் தலையீடுகள் அதிகரித்திருக்கின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கைக்கு, புதிய அரசமைப்புத் தேவையில்லை என, அஸ்கிரிய பீட மகாநாயக்கர் தெரிவிக்க, அதன் பின்னர் மறுநாள் ஒன்றுகூடிய அனைத்து மகாநாயக்கர்களும் ஏனைய முக்கிய பௌத்த மதத் தலைவர்களும், புதிய அரசமைப்போ அல்லது அரசமைப்புத் திருத்தமோ இலங்கைக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இந்த முடிவு, சிறுபான்மை இனத்தவர்களைப்…
-
- 0 replies
- 365 views
-
-
ஆர்மேனிய இன அழிப்பின் 101ஆவது ஆண்டு நினைவுதினம் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி ஆர்மேனியா தொடக்கம் உலகின் பல்வேறு பாகங்களிலும் உணர்வுபூர்வமாகவும் எழுச்சிபூர்வமாகவும் நினைவுகூரப்பட்டது. ஆர்மேனியாவுக்கு வெளியே இடம்பெற்ற நினைவுகூரல் நிகழ்வுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஆர்மேனியர்களுடன் ஆர்மேனியர்கள் அல்லாதவர்களும் தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் முகமாக கலந்துகொண்டனர். முதலாவது உலகப் போர் ஆரம்பிக்கும் போது இரண்டு மில்லியனாக இருந்த ஆர்மேனிய கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சுமார் எட்டுவருடங்களில் அரை மில்லியனாகியது. அதாவது, ஒட்டொமன் பேரரசால் (இன்றைய துருக்கி) ஒன்றரை மில்லியன் ஆர்மேனிய கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஒட்டொமன் பேரரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 250 ஆர்மேனிய அறி…
-
- 0 replies
- 365 views
-