அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
ஓ டயரை கொன்றால் போராளி ராசீவைக் கொன்றால் குற்றவாளியா? ????????????? 1919 ஜாலியன் வாலா பாக் பஞ்சாபி சீக்கியர் படுகொலைக்கு பழிவாங்க லண்டன் சென்று 22ஆண்டுகள் கழித்து ஜெனரல் ஓ டயரைச் சுட்டுக்கொன்ற உதம் சிங் (பஞ்சாபி சீக்கியர்) இந்திய அரசுக்கு போராளி என்றால் அமைதிப்படை அனுப்பி ஆறாயிரம் தமிழ்மக்களைக் கொன்று 800 தமிழ்ப் பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்திய ராசீவைக் கொன்ற தனு எங்களுக்கு போராளியே. நன்றி: சனவரி 14 'நம்வேர்கள்' http://namvaergall.blogspot.co.uk/
-
- 0 replies
- 1k views
-
-
சமகால இலங்கை அரசியலில் காத்திரமான அரசியல் அழுத்தக் குழுவென்றால் அது பேரினவாத சக்திகள் தான் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுவரும் ஒன்று. பேரம்பேசும் ஆற்றல் கூட தம் வசமே உள்ளது என்று மார்தட்டி பறைசாற்றும் அளவுக்கு அது உண்மை. தீர்மானகரமான அரசியல் சூழல்களில் அவர்கள் தமது பாத்திரத்தை வெற்றிகரமாக ஆற்றியிருக்கிறார்கள். அரசை இனவாத திசையில் வழிநடத்தவும், வழிதவறிப்போனால் எச்சரிக்கவும் அவர்களால் முடிந்தது. குறிப்பாக இதுவரை ஜாதிக ஹெல உறுமய அரசின் பங்காளிக்கட்சியாக தாமும் அதிகாரத்தில் இருந்தபடி தமது பேரினவாத இலக்கில் பாரிய வெற்றிகளை பெற்றார்கள். யுத்தம் முடிவுற்றதன் பின்னர் அவர்கள் இரண்டாம் கட்ட போரை ஆரம்பித்துவிட்டதாக அறிவித்தார்கள். தமிழர்களின் நியாயபூர்வமான அரசியல் கோரிக…
-
- 2 replies
- 643 views
-
-
கடந்தகால வரலாறு, நிகழ்கால நிகழ்வுகள் போன்றவற்றை கூர்ந்து ஆய்ந்து விளங்கி எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடுவது ஏற்றது, பொருத்தமானது. பயனுள்ளது என்பது புத்தியுள்ளோர் புரிந்து வைத்துள்ள உண்மை. யதார்த்தமும் கூட. இது தனிப்பட்ட மனிதனின் வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்வதற்கு மட்டுமல்ல நாட்டை, சமூகத்தை வழிநடத்தத் தலைப்பட்டுள்ள அரசியல் அரங்காடிகளுக்கும் பொருந்தும். வரலாறு என்பது வெறும் பழங்கதையல்ல. நிகழ்வுகளின் தாக்கம் எவ்வாறமையும், அதனால் விளையும் நன்மை, தீமைகள் எவ்வாறு நாட்டை, சமூகத்தை, இனத்தை, மதத்தை, மொழியை, தனிப்பட்ட வாழ்வை பாதித்தன என்பது பற்றி புரிந்து கொள்ள, எதிர்காலத்தை திட்டமிட, உகந்ததாயமைந்துள்ளது. ஏற்கனவே நிகழ்ந்த நிகழ்வுகளை அதாவது வரலாற்றை மறந்தோ, புறந்தள்ளியோ செய…
-
- 0 replies
- 484 views
-
-
சிறிலங்கா: எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவால் அறநெறி சார்ந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியுமா? Dec 07, 2014 | 9:03 by நித்தியபாரதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் ராஜபக்ச அரசாங்கங்களின் கீழ் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக சிறிசேன அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். இவர் இந்த அரசாங்கங்களால் தொழிலாளர்களின் சமூக உரிமைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல்களுக்கும் குற்றங்களுக்கும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வக்கிரமான இனவாதப் போருக்கு ஆதரவாகச் செயற்பட்டுள்ளார். இவ்வாறு World Socialist Web Site இணையத்தில் K. Ratnayake எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. ஏறத்தாழ 36 வரையான…
-
- 0 replies
- 577 views
-
-
ஜனாதிபதித் தேர்தல்! - காலங்கள் மாறும், காட்சிகள் மாறும்! முத்துக்குமார் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. ஊடகங்கள் பரபரப்பாக செய்திகளை வழங்கத் தொடங்கிவிட்டன. மாரிப் பருவநிலைபோல இரு தரப்பினதும் செல்வாக்குத் தளங்களும் நாள் தோறும் ஏறி இறங்குகின்றது. மைத்திரிபால சிறிசேனா களமிறக்கப்பட்டதும் மகிந்தர் ஆடிப்போய்விட்டார். எதிரி தனது கோட்டைக்குள் இருந்து வந்திருக்கிறார் என்பதுதான் அவர் ஆடிப்போனமைக்குக் காரணம். எனினும் சிறிய சேதாரங்களுடன் வியூகங்களை வகுத்து நிலைமைகளை ஒருவாறு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான பகீரதப் பிரயத்தனத்தில் இறங்கியுள்ளார் போல தெரிகின்றது. பலர் எதிர்த்தரப்பிற்கு மாறுவர் என எதிர்பார்க்கப்பட்ட போதும் இவரது கட்டுப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டிருந்தார். இன்னும் ஒரு மாதத்தினுள் இலங்கைத்தீவு, ஜனாதிபதி தேர்தலை சந்திக்கப்போகின்ற சூழல் மற்றும் சீனாவின் இராணுவப் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்த இந்தியாவின் கரிசனையும் கவலைகளும் அதிகரித்துள்ள சூழலிலேயே அவரது பயணம் இடம்பெற்றுள்ளது. இதனால், அரசியல் ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் அஜித் டோவலின் இலங்கைப் பயணம் முக்கியத்துவமிக்கதாக பார்க்கப்பட்டது. அவரது இந்தப் பயணத்தின் பிரதான நோக்கமானது காலியில் கடந்த முதலாம், இரண்டாம் திகதிகளில் நடைபெற்ற காலி கலந்துரையாடல் என்ற கடற்படையால் ஆண்டு தோறும் நடத்தப்படும் கடல் பாதுகாப்பு …
-
- 0 replies
- 634 views
-
-
கலைஞர்கள், சிவில் சமூக பிரமுகர்கள் இவர்களடங்கிய பிரஜைகள் சக்தி என்னும் குழு 'பொறியிலிருந்து விடுபடுவோம்' என்கின்ற தொனிப்பொருளில், பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவானதொரு அரசியல் கூட்டத்தினை கடந்த வாரம் ஹயிட் பூங்காவில் நடத்தியிருந்தது. பூங்காவிற்கு உள்ளும் அதன் வெளியே நடைபாதையிலும் ஒரே கூட்டம். 'இது சேர்த்த கூட்டமில்ல. தானா சேர்ந்த கூட்டம்' என ரஜனி பாணியில் கூற வேண்டும்போலிருந்தது. பொறுமையுடன் பல மணி நேரம் நின்றுகொண்டே சகல உரைகளையும் யாவரும் உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். அவ்வப்போது கரகோஷம் இடவும் மறக்கவில்லை. அரசியல் மாற்றத்திற்கு தென்பகுதி தயாராகி வருவது போலத் தோன்றியது. இக்கூட்டத்தில் ரணில் மைத்திரி எனப் பல அரசியல் தலைவர்கள் பேசினாலும், குறிப்பாக காமி…
-
- 0 replies
- 755 views
-
-
சிறீலங்காவில் ஐனாதிபதித்தேர்தல் சூடுபிடிக்கவும் ஆட்கொள்வனவுகள் இரகசிய ஒப்பந்தங்கள் அரவணைப்புக்கள் நடந்தாலும் தமிழர் விடயத்தில் மிகவும் கவனமாகவும் அதே நேரம் ஒரே கொள்கையிலும் சிங்களக்கட்சிகள் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. தேடுவாறற்று தமிழினம் இன்று தனித்துவிடப்பட்டுள்ளது மட்டுமன்றி பனையால் விழுந்தவனை மிதிப்பது போல யார் அதிகம் உதைப்பது என்பதும் நடக்கிறது இது புதிதல்ல என்பதாலும் வாங்கி மரத்துவிட்ட வரலாற்றுப்பாடங்களிலிருந்தும் தமிழினம் தள்ளியே நிற்கிறது. இந்தநிலையில் மகிந்தவை ஆதரிக்கணும் அவர் மீண்டும் வந்து தமிழரை மிதிக்கணும் என்றும் அவர் மிதிப்பது பழகிப்போனதால் அதிகம் வலிக்காது என்றும் அத்துடன் அவர்மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டவரும் நிலையில் அவரி…
-
- 33 replies
- 3.2k views
-
-
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுமக்களின் பணத்திலிருந்து கோடிகோடியாக வருடாவருடம், சர்வதேச பிரச்சார அமைப்புகளுக்கு வழங்கி தன்னை பற்றி சர்வதேச அளவில் உருவாகியுள்ள களங்கத்தை துடைக்கும. முயற்சியில் ஈடுபடுகின்றார், அதன் மூலமாக தான் யுத்த குற்றங்களுக்கா விசாரணை செய்யப்படுகிறேன் என்பதை மக்கள் மறக்கச்செய்கின்றார். எனினும் ஊழல், சட்டவிரோதம் மற்றும் ஈவிரக்கமற்ற தன்மை ஆகியவற்றின் துர்நாற்றம் அவரிலிருந்து அகலுவதில்லை,அது அவரின் ஆன்மாவில் ஆழமாக பதிந்துள்ளது,அவரது ஒவ்வொரு அசைவிலும் புலப்படுகின்றது. தனது பதவிக்காலம் ப+ர்த்தியாவதற்க்கு இன்னமும் இரண்டுவருடங்கள் இருக்கையில் தேர்தலை நடாத்தும்அவரது முடிவும் அவ்வாறனதே, வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்ற தனது ஆதரவை காப்பாற்றும் இறுதிமுயற்ச…
-
- 0 replies
- 583 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையும், அதன் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் விரக்தியும் தற்போதைய அரசாங்கத்தின் ஆணிவேரையே ஆட்டம்காண வைத்திருக்கிறது. மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களின் வெளியேற்றம், அரசாங்கத்துக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பதை விட, மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் தலைமைத்துவத்துக்கும் பெரும் சவாலாக மாறியிருக்கிறது என்பதே உண்மை.மைத்திரிபால சிறிசேனவும் அவருடன் இணைந்து கொண்டுள்ளவர்களும், ஐ.தே.க.வுடன் இணைந்து கொண்டிருந்தால், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விடயமன்று. மைத்திரிபால சிறிசேன எதிரணியின் பொதுவேட்பாளராக நிறுத்தப்ப…
-
- 0 replies
- 666 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்புக்களினாலும் சுவாரஸ்யங்களினாலும் நிறைந்து கொண்டிருக்கிறது. தங்களைத் தக்க வைக்கப்பதற்கான போராட்டத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அரசாங்கமும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறபோது, அந்தப் போராட்டத்தை உடைத்து வெற்றி பெறும் எண்ணத்தில் கணிசமானளவு முன்னோக்கி வந்துள்ளதாக பொது எதிரணி கருதுகிறது. பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய தேர்தல் பிரசாரக் கூட்டத்தை சொந்த மாவட்டமான பொலனறுவையில், புறாக்களைப் பறக்கவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்திருந்தார். ஊடகங்களால் அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படும் நபராக மைத்திரிபால சிறிசேன மாறி, இரண்டு வாரங்களுக்குள்ளேயே அவர் மீதான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வந்திருப்ப…
-
- 0 replies
- 563 views
-
-
“அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்னும் இந்த அரசியல் தொடரில் தமிழர் போராட்ட வரலாற்றை விரிவாக விளக்குவது நோக்கமல்ல. அது ஒரு கடினமானதும் காலஅவகாசம் தேவையானதுமான சுமையான முயற்சி. மாறாக இத் தொடரில் முக்கியமான அரசியல்வாதிகளது கொலைகள் பற்றியே சொல்லப்படும். அவற்றை ஒட்டி அந்தக் கொலைகள் நடந்த காலச் சூழலில் அரசியல் வெப்ப தட்ப நிலைகள் பற்றியும் சுருக்கமாக சொல்லப்படும்.இடைக்கிடையே சில சுவையான சம்பவங்கள், சூடான திருப்பங்கள், மற்றும் சில சுத்துமாத்துக்கள் பற்றியும் தொட்டுக் காட்டப்படும். தொடர் முடியும் போது உங்கள் அபிப்பிராயங்களை அறிய மிக மிக ஆவல் பிரியமுடன் அற்புதன் (19.11.1994 தினமுரசில் அற்புதன் எழுதிய தொடர் நன்றியுடன் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது -தொடரின் ஆரம்பம் 1970கள…
-
- 89 replies
- 45.1k views
-
-
‘உள்நாட்டுப் போர் முடிவடைந்ததானது மகிழ்ச்சி ஆனால் சுதந்திரம் இன்னமும் எட்டப்படவில்லை’ Dec 04, 2014 | 14:14 by நித்தியபாரதி யார் ஆட்சிக்கு வந்தாலும் தமது பிரச்சினைகளில் மாற்றம் ஏற்படாது என வடக்கில் வாழும் தமிழ் மக்கள் கருதுகின்றனர். உள்நாட்டுப் போர் முடிவடைந்ததானது தமக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற போதிலும், தமக்கான சுதந்திரம் இன்னமும் எட்டப்படவில்லை என வடக்கில் வாழும் தமிழ் மக்கள் ஆதங்கப்படுகின்றனர். இவ்வாறு ‘சண்டே லீடர்’ ஆங்கில ஊடகத்தில் Camelia Nathaniel எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான ஆயத்தங்கள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேற…
-
- 2 replies
- 605 views
-
-
ஜனாதிபதி தேர்தல்: கூட்டமைப்பு எடுக்கக்கூடிய புத்திசாதுரியமான முடிவு எதுவாக இருக்கமுடியும்? - யதீந்திரா ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு உத்தியோகபூர்வமான முடிவையும் இதுவரை அறிவித்திருக்கவில்லை. ஆனால் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அடக்குமுறைக்கும் சர்வாதிகாரப் போக்கிற்கும் எதிராக எழுந்துள்ள எழுச்சிமிக்க சக்திகளோடு இணைந்து செயற்படுவதற்கு தாம் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கின்றார். இவ்வாறான அபிப்பிராயங்களை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவிப்பதானது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். ஆனால் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன், தேர்தல் தொடர்பில் அவசரப்பட்டு எந்தவொரு முடிவ…
-
- 2 replies
- 633 views
-
-
-கே.சஞ்சயன் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் முக்கியத்துவம் மிக்கதாக இருந்தாலும், அதனை பயன்படுத்திக்கொள்ளும் எண்ணம் இரண்டு பிரதான தரப்பினிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் மக்களிடமிருந்து தம்மை அந்நியப்படும் கொள்கைகளை, ஆளும் கட்சியும் எதிரணியும் கடைப்பிடிக்க முனைவதாலேயே இந்தச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்று, தமிழ் மக்களின் வாக்குகளை கவரும் எண்ணம் இரண்டு பிரதான தரப்புக்களிடமும் இருந்தது. ஆனால், இப்போது பிரசார வியூகம், சிங்களத் தேசியவாத வாக்குகளை மையப்படுத்தியதாக மாறத் தொடங்கியுள்ளது. தமிழர்களின் வாக்குகள், வெற்றிக்கு முக்கியத்துவமானவையாக இருந்தாலும், அதனை பெற…
-
- 0 replies
- 804 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின் தமிழ் மக்களுக்கு அரசாங்கம் எதைத் தரக்கூடும் என்பதற்கு கடந்த பத்தாண்டு கால அனுபவமே போதும். அதே சமயம் பொது எதிரணியிடமிருந்து என்ன கிடைக்கும்? அங்கேயும் எதிர்க்கட்சிகள் மத்தியில் துலங்கிக் கொண்டு தெரியும் ஆளுமைகளைப் பற்றி தமிழ் மக்களுக்கு ஏற்கனவே படிப்பினைகள் உண்டு. எனினும் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் எதிர்க்கட்சிகளால் விடுக்கப்படும் அறிக்கைகள் ஊடக சந்திப்புக்களில் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அவர்கள் முன்வைக்கும் கோஷங்கள் என்பவற்றை தொகுத்துப் பார்க்கும் போது இலங்கைத் தீவின் கடந்த பத்தாண்டுகால நடைமுறையில் ஏதோ பெரிய தலைகீழ் திருப்பத்தை கொண்டு வரப்போவதான ஒரு தோற்றம் காட்டப்படுகிறது. இத்தோற்றத்தின் மீது கேள்விக…
-
- 0 replies
- 418 views
-
-
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் முன் பேரினவாதம் தொடர்பாக: சபா நாவலன் இலங்கையில் இரண்டு சிங்கள பௌத்த பேரினவாதக் கட்சிகள் மீண்டும் எதிரெதிராக ஆட்சியைக் கையகப்படுத்த மோதிக்கொள்கின்றன. தமிழ்ப் பேசும் மக்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறையே பிரதான முரண்பாடாகியுள்ள இலங்கையில் அதுகுறித்துப் பேசுவதற்குக் கூட எந்தக் கட்சிகளும் தயாராகவில்லை. இந்த நிலையில் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் மக்கள் யுத்தப் பாதையில் பயணிக்க வேண்டும். தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு புதிய போராட்டத்தை நோக்கி மக்களை அணிதிரட்டும் மூலோபாயத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த அரசியல் தலைமைகள் முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வேளையில் இலங்கையின் பேரினவாதப் பின்புலம் தொடர்பான கட்டுரையைப் பதிவிடுகி…
-
- 0 replies
- 627 views
-
-
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறுமென்று வலுவாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி இப்போது முதன்மை பெறத் தொடங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கிலும் கிழக்கிலும் கொண்டுள்ள வாக்கு வங்கி, இத்தேர்தலில் மிகவும் முக்கியமானதொரு விடயமாகக் கருதப்படுகிறது. சுமார் நான்கு இலட்சம் தமிழர்களின் வாக்குகளை வைத்துக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலில் பேரம் பேச முனைவதாக, அண்மையில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான அமைச்சர் விமல் வீரவன்சவின் காழ்ப்புணர்வை காட்டுவதாக மட்டும் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட…
-
- 0 replies
- 497 views
-
-
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்கள் தொகைக் கட்டமைப்பும் பொருளாதாரமும் தொடர்பான ஆதிக்கம் புவிசார் அரசியல் எனப்படும். முதலாவது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்களின் அரசியல் ஆதிக்கம் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வகிக்கின்றது. இரண்டாவது அக்குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள பொருளாதார வளங்கள் மீதான ஆதிக்கத்தை யார் செலுத்துவது என்பது புவிசார் அரசியலில் முக்கியத்துவம் பெறுகின்றது. மூன்றாவது ஒரு குறித்த நிலப்பரப்பில் உள்ள மக்கள், பொருளாதாரம், மற்றும் அரசு அல்லது அரசுகள் தொடர்பாக அந்த நிலப்பரப்புடன் தொடர்புடைய அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கை அந்த நிலப்பரப்பின் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வகிக்கின்றது. இதையே சுருக்கமாகச் சொல்வதானால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில…
-
- 0 replies
- 1k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால், சீன ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுவோம் என்று கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார். சீன நிறுவனங்களுடன் தற்போதைய அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட சட்டவிரோத உடன்பாடுகள் அனைத்தும், செல்லுபடியற்றதாக்கப்படும் என்றும், இந்தியாவைப் புறந்தள்ள அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டதை சாதாரணமானதொன்றாக எடுத்துக் கொள்ள முடியாது. அதுவும், ஜனாதிபதித் தேர்தலுக்கான முன்னாயத்தங்கள் நடந்து கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவுக்கும் சீனாவுக்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தால் மேற்கொள்ளப்படும் விசாரணையில், சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நேற்று வியாழக்கிழமையுடன் (30ஆம் திகதி) முடிவுக்கு வந்துள்ளது. சன்ட்ரா பெய்டாஸ் தலைமையிலான ஐ.நா. விசாரணைக்குழு, மார்டி அதிசாரி தலைமையிலான ஆலோசனைக்குழுவுடன் இணைந்து, இந்த சாட்சியங்களை ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொண்டு, அடுத்த சுமார் 3 மாதங்களுக்குள் அறிக்கை தயாரிக்கப்போகிறது. இந்த அறிக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும். இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் ஜனவரி மாதம் நிகழவுள்ள மாற்ற…
-
- 0 replies
- 1.1k views
-
-
மைத்திரி; ராஜபக்ஷக்களின் முடிவு(?) மைத்திரிபால சிறிசேனவின் புதிய அவதாரம் ராஜபக்ஷ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி பற்றிய பேச்சுக்களை ஆரம்பித்து வைத்திருக்கிறது. பெரும் ஆதரவோடும் ஆரவாரங்களோடும் ஆரம்பித்து கோலொச்சிய சாம்ராஜ்யங்களின் சோகமான முடிவுகளை உலகம் கண்டிருக்கிறது. இலங்கைக்கும் அப்படியான வரலாற்றுப் பக்கங்கள் உண்டு. அது, ஒவ்வொரு ஆரம்பத்திற்கும் ஒரு முடிவு உண்டு என்ற உலக நியதியின் அடிப்படைகளில் தோற்றம் பெறும் எண்ணம். ராஜபக்ஷ சாம்ராஜ்யத்திற்கும் அந்த நியதி பொருந்தும் என்று பலரும் நம்புகிறார்கள். உலக நியதி, எதிர்பார்ப்புக்களைத் தாண்டி இலங்கையின் பெரும்பான்மை அரசியல் சூழல் நம்பிக்கைக்கும், நம்பிக்கையீனத்துக்கும் மத்தியில் உழன்றுகொண்டிருக்கிறது. ஏனெனில், ராஜபக்ஷக்களின் மீது ந…
-
- 0 replies
- 794 views
-
-
ஆட்சி மாற்றத்தில் இந்திய, அமெரிக்க தரப்புக்கள் ஆர்வம் காட்டுகின்றனவா? - யதீந்திரா ஆட்சி மாற்றம் தொடர்பில் எதிரணிகள் மத்தியில் பலவாறான வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பின்னணியில் இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், இலங்கை தொடர்பில் கரிசனை கொண்டிருக்கும் இந்திய மற்றும் அமெரிக்க தரப்புக்களும் ஆட்சி மாற்றத்தில் ஆர்வம் காட்டுகின்றனவா என்னும் கேள்வியெழுகிறது. அரசாங்க தரப்பினர் எதிரணிகளின் கூட்டணிக்கு பின்னால் சில சர்வதேச சக்திகள் தொழிற்படுவதாக பகிரங்கமாகவே குற்றம்சாட்டி வருகின்ற நிலையில், ஆளும் தரப்பின் தேர்தல் பிரச்சாரங்களின் போது மேற்கு மீதான எதிர்ப்பு அதிகம் வெளிப்படுவதற்கான புறச்சூழலே தெரிகிறது. எனவே இத்தகையதொரு பின்புலத்தில், மேற்குலக சக்திக…
-
- 0 replies
- 581 views
-
-
பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர் “கண்ணா நீயும் நானுமா?” என்ற பாடல் அடிக்கொரு தடவை ஞாபகத்திற்கு வருகின்றது. நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் என்ற பாடலும் இடைக்கிடை மேற்கிளம்புகின்றது.ஜனாதிபதி தேர்தல் களம் இவ்வளவு சூடாக இருக்கும் என்று ஆளும் கட்சியினர் மட்டுமன்றி எதிரணி கூட்டுக் கட்சிகளும் கூட நினைத்திருக்க மாட்டார்கள். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது மிகச் சுலபமான காரியம் என்றும் அதற்கான ராஜதந்திரங்கள் எல்லாம் தம்மிடம் கைநிறைய என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நினைத்துக் கொண்டிருந்தது. மறுபுறத்தில் கிட்டத்தட்ட ஒரு தசாப்தகாலம் ஆட்சி செய்துவிட்ட ஒரு ஜனாதிபதியை தோற்கடிப்பதற்கு எதி…
-
- 0 replies
- 585 views
-
-
வடக்குக் கிழக்கு மீண்டும் இணைய இந்தியா, சிறிலங்கா மீது அழுத்தம் கொடுப்பதற்கான காலம் கடந்துவிட்டது – கேணல் ஹரிகரன் நித்தியபாரதி தமிழர்களுக்கு எதிராக 1983ல் இனக்கலவரம் மேற்கொள்ளப்பட்ட பின்னர், எழுச்சியுற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது தோல்வியுற்ற பின்னர், தனித் தமிழீழத்தை அமைப்பதற்கான வரலாற்று ரீதியான காலப்பகுதி முடிவடைந்து விட்டது என்றே நான் கருதுகிறேன். இவ்வாறு International Law Journal of London ஆய்விதழின் முதன்மை ஆசிரியர் Dr Parasaran Rangarajan அவர்களுக்கு வழங்கிய மின்னஞ்சல் வழியான நேர்காணலில் கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. கேள்வி: சிறிலங்காவிலிருந்து தமிழீழத்தைப் பிரித்தெடுப்பதற்கான முயற்ச…
-
- 2 replies
- 890 views
-