அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
பல்லின தேசியம் இல்லாமையே தீர்வுக்குத்தடை எந்த காரியத்தைச் செய்வதாயினும் எப்படிச் செய்வது? அதற்கு அவசியமானவை என்னென்ன? இடையில் குழம்பினால் எப்படி சரி செய்வது? முழுமையாக நிறைவேற்ற என்ன உபாயங்களைக் கையாள்வது? என்பன பற்றியெல்லாம் முடிவு செய்தே காரியமாற்ற வேண்டும். இதைத்தான் ‘எண்ணித்துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவதென்பது இழுக்கு’ என வள்ளுவர் குறிப்பிடுகிறார். 1949 ஆம் ஆண்டு டி.எஸ்.சேனாநாயக்க கிழக்கில் கல்லோயாத் திட்டத்தை ஆரம்பித்து சிங்கள மக்களைக் குடியேற்றியபோது பின் விளைவைச்சிந்திக்கவில்லை. 1956 ஆம் ஆண்டு எஸ்.டப்ளியு ஆர்.டி. பண்டாரநாயக்க ‘சிங்களம் மட்டும்’ எனும் மொழிச்சட்டத்தைக…
-
- 0 replies
- 339 views
-
-
முஸ்லிம்களின் அரசியல் வடக்கு, கிழக்குக்கு வெளியில் - மொஹமட் பாதுஷா இலங்கையில் முஸ்லிம்கள் இரண்டாவது சிறுபான்மை இனத்தவராக காணப்படுவதோடு தேசிய ரீதியான சனத்தொகையின் அடிப்படையில் மூன்றாவது பெரிய இனக் குழுமமாக இருக்கின்றனர். நாட்டின் எல்லாப் பாகங்களிலும் முஸ்லிம்கள் வாழ்கின்ற போதிலும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலேயே முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்கின்றனர். கிழக்கின் அம்பாறை மாவட்டத்திலேயே முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட அதிகளவான தேர்தல் தொகுதிகளும் காணப்படுகின்றன. ஆகவே, முஸ்லிம் அரசியலைப் பொறுத்தவரையில் கிழக்கு மாகாணம் மிகவும் இன்றியமையாத பிராந்தியமாகும். தமிழர்களுக்கு வடமாகாணம் எப்படியோ சிங்கள…
-
- 0 replies
- 339 views
-
-
எழுக தமிழ் - வடக்கில் மட்டுமல்ல. நாடளாவிய ரீதியில், எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதைக் காண முடிகின்றது. எழுக தமிழ் - வடக்கில் மட்டுமல்ல. நாடளாவிய ரீதியில், எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதைக் காண முடிகின்றது. வடக்கில் தமிழ் மக்கள் தமது நீண்ட நாளைய தேவைகள், கோரிக்கைகளுக்காக எழுக தமிழ் மூலம் எழுச்சி பெற்றிருந்தார்கள். ஆனால் எழுக தமிழ் என்ற மகுடத்தைக் கண்டு இனவாத விஷத்தைக் கக்குவதற்காக நாட்டின் தென்பகுதி இனவாத, மதவாத சக்திகளும் அரசியல்வாதிகளும் எழுச்சி கொண்டிருக்கின்றார்கள். வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் உண்மையான அரசியல் நிலைமை என்ன, அங்கு உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை, நிதானமாகச் சிந்திப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. அதும…
-
- 0 replies
- 339 views
-
-
எங்கே நல்லிணக்கம்? முன்னைய ஆட்சியிலும் பார்க்க நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் அக்கறை மிகுந்த செயற்பாடுகள் இடம்பெற்று வருவதை அடியோடு மறுப்பதற்கில்லை. முன்னைய ஆட்சியிலும் பார்க்க இந்த ஆட்சியில் இது முன்னேறியுள்ளது என்பதிலும் சந்தேகமில்லை. ஆயினும், சாண் ஏற முழம் சறுக்குவது போன்று அல்லது தொட்டிலையும் ஆட்டி, குழந்தையைக் கிள்ளி விடுவது போன்ற செயற்பாடுகளுக்கு மத்தியிலேயே நல்லிணக்கத்திற்கான இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. யாழ்பாணத்தில் நல்லிணக்கம் இருக்கின்றதா, எங்கே நல்லிணக்கம் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயல…
-
- 0 replies
- 339 views
-
-
இந்தியாவை நோக்கிச்செல்லும் தமிழ்க் கட்சிகள் – நிலாந்தன்! அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மீனவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடல் தொழில் அமைச்சரின் இணைப்பாளராகிய ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை அகற்றி, சீனத் தூதரகத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டிருந்தார். ஓர் அமைச்சருடைய இணைப்பாளர், அதிலும் குறிப்பாக ஆளுங்கட்சியின் வேட்பாளராக பிரதேச சபைகளில் போட்டியிட்டவர், அவ்வாறு பகிரங்கமாக பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுகிறார். அதுதொடர்பாக அவர் சார்ந்த கடல் தொழில் அமைச்சரோ அல்லது அரசாங்கமோ இதுவரை உத்தியோகபூர்வமாக மறுப்பு எதையும் தெரிவித்திருக்கவில்லை.. அரசாங்க அமைச்சரின் இணைப்பாளர் அவ்வாறு கூறிய அடுத்தடுத்த நாள், ஈழ மக்கள…
-
-
- 2 replies
- 339 views
- 1 follower
-
-
புதிய கூட்டுக்கள் பழைய பகைமைகள் ? - நிலாந்தன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நோக்கித் தமிழ்க்கட்சிகள் புதிய ஒருங்கிணைப்புகளுக்குப் போகத் தொடங்கியுள்ளன. அதை வரவேற்க வேண்டும். கடந்த 15ஆண்டுகளில் முன்னெந்தத் தேர்தலையும்விட தென்னிலங்கைமையக் கட்சிகளுக்கும் சுயேச்சைகளுக்கும் எதிராக அணி திரள வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும் ஒரு தேர்தல் இது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது பெருமளவுக்கு உள்ளூர் நிலைமைகளை; உள்ளூர் சாதி,சமய,வட்டார உணர்வுகளைப் பிரதிபலிப்பவை.உள்ளூர்த் தலைமைகளைக் கட்டி எழுப்புவதற்கான ஒரு களம். ஆனால் அவை உள்ளூர்த் தலைமைகள் மட்டுமல்ல. ஒரு தேசியவாத அரசியலுக்கான அடிக்கட்டுமாணம் என்ற விளக்கத்தோடு மக்கள்மட்டக் கட்டமைப்புகளை அங்கிருந்துதான் பலப்படுத்த வேண்டும். அதாவ…
-
- 0 replies
- 339 views
-
-
அறிக்கை: அரசியல் யாப்புச் சீர்த்திருத்தம் | காலச்சுவடு | தேசிய ஐக்கியம், சமாதான சகவாழ்வு, மதச் சகிப்புத்தன்மை, சமூக ஒருமைப்பாடு என்பன தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆதரவுக் குழுவான கண்டி மன்ற (Kandy Forum) உறுப்பினர்களான நாங்கள் அரசியல் அமைப்புத் திருத்தத்துக்கான அரசாங்கத்தின் முன்னெடுப்பை வரவேற்கின்றோம். போருக்குப் பிந்திய நல்லிணக்கம், இன நல்லுறவு, அதிகாரப் பகிர்வு ஆகியவற்றுக்கும், இலங்கையை ஒன்றிணைந்த ஒரு பன்மைத்துவ சமூகமாகக் கட்டி எழுப்புவதற்கும், அதன்மூலம் எதிர்காலத்தில் இலங்கையில் மோதல்களும் யுத்தமும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும் புதிய அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி இதன்மூலம் நிறைவேற்றப்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம். யாப்புச் சீர்திருத்தத்தின் குறிக…
-
- 0 replies
- 339 views
-
-
நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் சொல்லும் செய்தி புருஜோத்தமன் தங்கமயில் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறியுள்ள விடயம், நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் பலத்த விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. தன்னுடைய நீதித்துறை செயற்பாடுகள் மீதான அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகுவதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுக்கு நீதிபதி சரவணராஜா அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். குறித்த கடிதம், அவர் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேறிய பின்னர் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஏனெனில் அந்தத் கடிதத்தின் படங்கள், அலைபேசியில் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவைதான், ஆரம்பத்தில் இணைய, சமூக ஊடகங்கள…
-
- 0 replies
- 339 views
-
-
19 ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு நன்மையானதா? நிலாந்தன் இலங்கைத் தீவின் அரசியல் அமைப்பு 19 ஆவது தடவையாகத் திருத்தப்பட்டுள்ளது. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் செய்யப்பட்ட இரண்டாவது திருத்தம் இது. ஆட்சிமாற்றத்தை உருவாக்கிய, அதைப் பின்னிருந்து பலப்படுத்துகின்ற மேற்கு நாடுகளும் இந்தியாவும் இத்திருத்தத்தை வரவேற்றிருக்கின்றன. கூட்டமைப்பும் இத்திருத்தத்தை வரவேற்றிருக்கின்றது. ஜனநாயக அடிப்படைகளை பலப்படுத்த இத்திருத்தம் உதவும் என்று அதை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள். அரசாங்கம் தனது வாக்குறுதிகளில் ஒன்றை ஓரளவுக்கேனும் நிறைவேற்றியிருப்பதாகப் பெருமைப்பட்டுக்கொள்கின்றது. மெய்யாகவே 19 ஆவது திருத்தம் இலங்கைத் தீவின் ஜனநாயக வெளியை பலப்படுத்தியிருக்கிறதா? குறிப்பாக இனப்பிரச்சினைக்…
-
- 1 reply
- 339 views
-
-
முன்னைய தேர்தல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அரசியல் கோலங்களுடன் 2024 ஜனாதிபதி தேர்தல் August 19, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் இந்த தடவையே மிகவும் அதிக எண்ணிக்கையில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதுகாலவரையில் ஜனாதிபதி தேர்தல் பிரதான இரு அரசியல் கட்சிகளின் அல்லது அவற்றின் தலைமையிலான கூட்டணிகளின் வேட்பாளர்களுக்கு இடையிலான நேரடிப் போட்டியாகவே இருந்து வந்தது. ஆனால் இந்த தடவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான மும்முனைப் போட்டியாகவே தேர்தல் அமையப்போகிறது. இறுத…
-
- 0 replies
- 339 views
-
-
கிழக்கு கடலில் தொடரும் கடற்கொள்ளை நூருல் ஹுதா உமர் சோதனை மேல் சோதனையை அனுபவிக்கும் மீன்பிடித்துறை ‘கடலுக்குள் போனால் பிணம்; வெளியே வந்தால் பணம்’ எனும் பழமொழியின் அர்த்தத்தை நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம் என்பதுதான் இந்தக் கட்டுரையின் வாசல் கேள்வியாகும். மீன்பிடி என்பது இலங்கையின் கிழக்குப் பகுதியில் எப்போதும் முதன்மையான தொழிலாகவே இருந்து வருகிறது. மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீன்பிடி வள்ளங்கள், இயந்திரங்கள், வலைகள் அடங்கலாக மொத்தம் 50 - 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் தான் கடலில் மிதந்து கொண்டிருப்பது. கடலலையுடன் போராடி, தோணியில் சவலடித்து, காற்றின் திசையறிந்து துடுப்பைச் சுழற்றி, பெரிய இயந்திர படகில் தினமும் மாலையில் கடலு…
-
- 0 replies
- 339 views
-
-
இலங்கையில் சர்தேசத்தின் தலையீடுகள் சாத்தியமா? கடந்த காலத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்களில் ஆராயப்பட்ட வேளைகளில் அரசியல் உணர்வுகள் கிளறிவிடப்படுவதைக் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூட்டத் தொடரின்போது அத்தகையதொரு சூழ்நிலை இல்லை. மாற்றம் ஏற்பட்டு விட்டது. முன்னைய அரசாங்கத்தைப் போலன்றி தற்போதைய அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் நல்லுறவைக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். அதனால் ஜெனீவாவில் இருந்து உண்மையான அச்சுறுத்தல் ஒன்று வருவதாக இவர்கள் நோக்கவில்லை. இத்தகையதொரு சூழ…
-
- 0 replies
- 338 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக இலங்கையில் மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய கட்சியொன்று தமிழர் பகுதிகளில் அதிகாரத்தைக் கைப்பற்றிய முதலாவது சந்தர்ப்பமாக இந்த நாடாளுமன்றத் தேர்தல் அமைந்துள்ளது. இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் தமிழ் அரசியல் கட்சிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள தருணமாக இது கருதப்படுகிறது. குறிப்பாக மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் தவிர்த்து, ஏனைய தமிழர் தேர்தல் மாவட்டங்கள் அனைத்திலும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. இதற்கு தமிழ் அரசியல்வாதிகள் மீதான தமிழ் மக்களின் விரக்தியும் அதிருப்தியும்…
-
- 0 replies
- 338 views
- 1 follower
-
-
ஜனாதிபதியின் கொள்கை உரை: சிறுபான்மையின அரசியல் தீவிரவாதமா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஜனவரி 08 சிறிய அரசியல் கட்சிகளினதும் சிறுபான்மை அரசியல் கட்சிகளினதும் இருப்புக்குப் பெரும் சவாலாகக் கூடிய வகையில், முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயதாஸ ராஜபக்ஷ சட்டம் ஒன்றைக் கொண்டு வர முயல்கிறார். தேர்தல்களின் போது, அரசியல் கட்சிகள், தாம் போட்டியிடும் மாவட்டங்களில், குறைந்த பட்சம் 12.5 சதவீத வாக்குகளைப் பெறாவிட்டால், அக்கட்சிகளை, அம்மாவட்டப் போட்டியில் இருந்து நீக்கும் வகையில், தாம் சட்ட மூலமொன்றைச் சமர்ப்பித்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார். தற்போது ஒரு கட்சி, ஒரு மாவட்டத்தில் ஐந்து சதவீதம் பெற்றால் போதுமானது. நாட்டில், 70 அரசியல் …
-
- 0 replies
- 338 views
-
-
ஆட்சி மாற்றங்களும் தமிழர் பிரச்சினைக்கான தீர்வும்? - யதீந்திரா ஆட்சி மாற்றமொன்று தேவை – அதன் மூலம்தான் பிரச்சினைகளை தீர்க்க முடியுமென்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். சம்பந்தன் எந்தப் பிரச்சினைகளை பற்றிப் பேசுகின்றார்? ஒரு வேளை அவர், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் பேசினால், ஆட்சி மாற்றம் தேவையென்னும் வாதம், சரியானதுதான் – ஏனெனில், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயின், ஒரு ஸ்திரமான அரசாங்கம் இருக்க வேண்டியது கட்டாயமானது. தற்போதுள்ள அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. ஒரு புறம் ராஜபக்சக்கள் வீழ்சியுற்றாலும் கூட, மறுபுறமாக, அவர்கள் பொதுஜன…
-
- 0 replies
- 338 views
-
-
வலிசுமந்த மாதத்தில் அம்பலமான தோழர்கள் -விதுரன் May 19, 2025 ஈழத் தமிழர்களின் இனவிடுதலை வரலாற்றில் மே மாதம் கண்ணீரால், தோய்ந்த, வலிகளும், காயங்களும் தாரளமாகவே நிறைந்ததொன்றாகும். 2009 மே இல் முள்ளிவாய்க்காலில் கட்டமைக் கப்பட்ட இனவழிப்பொன்று நிகழ்ந்தேறியது. ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற போர்வையில் மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் தாராளமாகவே மீறப்பட்டு முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலம் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு கடந்த 16வருடங்களாக பேரவலத்துக்கான நீதி கோரிய போராட்டமும் இனவிடுதலைக்கான பயணத்தில் பின்னிப்பிணை ந்து தொடர்கதையாக நீண்டு கொண்டிருக்கின்றது. தமிழின விடுதலைப்போராட்டம் ஆரம்பித்தகாலம் முதல், தாயகக் கோட்பாட்டிற்கும், அதிகாரப் பகிர்வுக்கும் ஆட்சியிலிருந்த சிங்கள, பௌத்த ம…
-
- 0 replies
- 338 views
-
-
தெற்கின் அரசியற்களமும் வடக்கின் அரசியல் முகமும் September 15, 2024 — கருணாகரன் — சிங்களத் தரப்பிலிருந்து இந்தத் தடவை இனவாதத்தை முன்னிறுத்தி ஜனாதிபதித் தேர்தற்பரப்புரைகள் முன்னெடுக்கப்படவில்லை. அதற்காக தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களெல்லாம் இனவாதத்தைத் துறந்து விட்டார்கள், கடந்து விட்டார்கள் என்றில்லை. அதற்கான சூழல் இல்லை என்பதே முக்கியமான காரணமாகும். அரசியல் வரலாறு என்பதே அப்படித்தான். எப்போதும் ஒரே மாதிரி இருப்பதுமில்லை. எல்லாம் கனிந்துதான் நிகழ்வது என்றுமில்லை. சூழ்நிலைகளே பல சந்தர்ப்பங்களிலும் மாற்றங்களை நிகழ்த்துவன. அப்படியானதொரு நிர்ப்பந்தச் சூழல் சிங்களத்தரப்புக்கு இப்பொழுது உருவாகியுள்ளது. ஏனென்றால் வழமையை விட இந்தத் தேர…
-
- 0 replies
- 338 views
-
-
அரசியலமைப்புப் பேரவையில் இடம்பெறும் நகர்வுகள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பனவாக அமையவில்லை சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேஷியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முஹம்மத் ஓர் அர்த்தமுள்ள கருத்தைத் தெரிவித்திருந்தார். - “யாருடைய கரங்களில் கப்பல் படை இருந்ததோ அவர்கள் தான் 19ஆம் நூற்றாண்டில் சக்திவாய்ந்தவர்களாகத் திகழ்ந்தார்கள். யாருடைய கைகளில் பலமான விமானப் படை இருந்ததோ அவர்கள் தான் 20ஆம் நூற்றாண்டின் பலசாலிகளாகத் திகழ்ந்தார்கள். யாரிடம் ஊடக பலம் இருக்கின்றதோ அவர்கள் தான் 21ஆவது நூற்றாண்டின் சக்தியாகத் திகழ்வார்கள்” என்றார். அதாவது இன்றைய பலமானது பேனாவைச் சென்றடைந்துள்ளது என்பதைய…
-
- 0 replies
- 338 views
-
-
வடக்கை நோக்கி குவியும் கவனம் By DIGITAL DESK 5 09 OCT, 2022 | 01:56 PM கபில் விரும்பியோ விரும்பாமலோ, சர்வதேச சக்திகளின் பூகோள அரசியல் ஆட்டக்களமாக இலங்கை மாற்றப்பட்டு விட்டது. சர்வதேச சக்திகள் மோதுகின்ற களமாக இலங்கையைப் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று கூறிவந்த எல்லா ஆட்சியாளர்களும், ஏதோ ஒரு வகையில், அவ்வாறான வாய்ப்புகளுக்கு இடமளித்தே வந்திருக்கிறார்கள். அபிவிருத்தியின் பெயராலோ, கொடைகளின் பெயராலோ, முதலீடுகள் என்ற பெயரிலோ திறக்கப்பட்ட இந்த ஆடுகளம், இப்போது புதிய புதிய பெயர்களில் புதிய புதிய களங்களை நோக்கி விரிவடையத் தொடங்கியிருக்கிறது. இப்போது, சர்வதேச சக்திகளின் ஆடுகளம் மெல்ல மெல்ல வடக்கு, கிழக்க…
-
- 1 reply
- 338 views
- 1 follower
-
-
சிறிலங்காவை எதற்காக அரவணைக்க வேண்டும்? – ஒரு அமெரிக்கப் பார்வை Feb 06, 2015 | 7:47 by நித்தியபாரதி in கட்டுரைகள் அமெரிக்க-சிறிலங்கா உறவுகளை மீளவும் நிறுவுவதற்கான திட்டங்கள் எதனையும் அமெரிக்கா முன்னெடுக்காது விட்டால், 21 மில்லியன் மக்களைக் கொண்ட கேந்திர முக்கியத்துவம் மிக்க இலங்கைத் தீவுடன் நெருக்கமான உறவைப் பேணுவதற்கான வாய்ப்பை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டியேற்படும். இவ்வாறு The Wall Street Journal இதழில், மூத்த ஆய்வாளர் லிசா கேட்டிஸ் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க இராஜாங்க மற்றும் பாதுகாப்புத் திணைக்கள முன்னாள் உயர் அதிகாரிகளான ரிச்சர்ட் ஆர்மிரேஜ் மற்றும் காரா பியூ ஆகியோருடன் இணைந்து லிசா கேட்டிஸ் எழுதியுள்ள இந்தக் கட்டு…
-
- 0 replies
- 338 views
-
-
பறிக்கப்படுமா ரணிலின் பதவி? பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், சமர்ப்பித்திருக்கிறது ம ஹிந்த ராஜபக்ஷ ஆதரவு, ஒன்றிணைந்த எதிரணி. இந்தமாத முற்பகுதியில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதும், கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இப்போது அதை அவர்கள், சபாநாயகரிடம் கையளித்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, வெற்றி பெறுமா, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்படுவாரா என்ற கேள்விகள், அரசியல் வட்டாரங்களில் மாத்…
-
- 0 replies
- 338 views
-
-
ரவிராஜூக்கான நீதியையும் கொன்று புதைத்தல் – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் சமவுரிமையுடன் வாழ வேண்டுமென்ற உணர்வுடன் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக கொழும்பில் நடுப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் காலப்பகுதியில் கட்டாக்கலி நாய்களுக்கு வழங்கிய பாதுகாப்பு உத்தரவாதத்தைக் கூட தமிழ் மக்களுக்காக பணியாற்றிய, குரல் கொடுத்த பொதுமக்கள் பிரதிநிதி ஒருவருக்கு வழங்கப்படவில்லை என்பது எவ்வளவு அநீதியானதாகும்? அவ்வாறு இல்லையென்றால் அரசாங்கத்தின் எதேச்சாதிகார போக்கினை அச்சமின்றி விமர்சனம் செய்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க நடு வீதியில் வைத்து வாழ்வதற்கான உரிமை இதேவ…
-
- 0 replies
- 338 views
-
-
அர்ச்சுனாவின் அரசியலும் அதைவிரும்பும் இரசிகர்களும். ( யாழ் தினக்குரல்- 2/2,ஞாயிறு) தமிழ்த் திரைப்படமொன்றில் தன்னை ஊரில் ரவுடியாகப் ‘பில்ட்டப்’ பண்ணும் நோக்கில் நகைச்சுவை நடிகர் வடிவேலு “நானும் ரவுடிதான். என்னையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு போங்கள்” என்று கெஞ்சுவதை சிலர் பார்த்திருப்பீர்கள். அந்தக்காட்சிதான் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அரச்சுனா இராமநாதனை சாவகச்சேரியில் வைத்து அனுராதபுர காவல்துறையினர் கைது செய்தபோது அவர் நடந்தகொண்டவிதம் நினைவுபடுத்தியது. காவல்துறையினர் அவரைக் கைவிலங்கின்றி அழைத்துச்செல்ல முற்பட்டபோது அர்ச்சுனா தனக்கு விலங்கிட்டுக் கூட்டிச் செல்லுங்கள் என்று தானே வலிந்து கேட்டு விலங்கு கையில் மாட்டப்பட்டதைப் பார்த்தோம். அர்…
-
- 0 replies
- 338 views
-
-
பொறுப்புக் கூறலில் தவறியுள்ள அரசாங்கம் இலங்கையின் பொறுப்புக் கூறுதல் தொடர்பாக உரிய நீதிப் பொறிமுறைக ைள உருவாக்கிச் செயற்படாவிட்டால், சர்வதேச நீதிமன்றம் ஒன்றை அமைப்பது குறித்து ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் சிந்திக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை பிரதி ஆணையாளர் கேட் கில்மோர் அம்மையார் கோரியிருக்கின்றார். இது, அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மனித உரிமைப் பேரவையின் பிரேரணையை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அடைந்துள்ள கடும் அதிருப்தியின் வெளிப்பாடாகும். இலங்கை தொடர்பாக ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அடுத்த அறிக்கை வர…
-
- 0 replies
- 338 views
-
-
மின்வெட்டும் இல்லை தேர்தலும் இல்லை? - நிலாந்தன் கடந்த 16ஆம் திகதியிலிருந்து மின்வெட்டு நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால் மின்கட்டணம் 66 விகிதத்தால் அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் அரசாங்கம் மக்களுக்கு உணர்த்த விரும்புவது எதனை? மின்வெட்டை நிறுத்துவது என்றால் நீங்கள் மின் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள வேண்டும். இதை அதன் பிரயோக அர்த்தத்தில் கூறின், மின் கட்டணத்தை குறைப்பது என்றால் மின்சாரத்தை குறைவாக நுகருங்கள் என்பதுதான். இப்படி ஒர் உத்தியைத்தான் எரிபொருள் விநியோகத்திலும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. கியூஆர் கோட் முறைமை என்பது எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தியது. எரிபொருள் பதுக்கப்படுவதையும் தேவைக்கும் அதிகமாக நுகரப்படுவதையும் அது ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தியது. அத…
-
- 0 replies
- 338 views
-