அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
சமந் சுப்ரமணியம் [samanth Subramanian] 'இந்த பிளவுபட்ட தீவு' [This Divided Island] என்கின்ற தலைப்பில் நூலொன்றை வெளியிட்டுள்ளார். இந்நூலானது சிறிலங்காவின் மிகமோசமான கடந்த காலத்தையும் நிச்சயமற்ற நிகழ்காலத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இந்நூலின் ஆசிரியருடன் Hindustan Times ஊடசகத்திற்காக Sudha G Tilak மேற்கொண்ட நேர்காணலின் விபரம் வருமாறு: கேள்வி: இந்த நூலைத் தாங்கள் எழுதுவதற்கு உந்துதல் வழங்கிய காரணி எது? பதில்: போர் என்பதன் தாக்கம் என்பதை உணர்ந்ததன் ஒரு பகுதியாகவே இந்த நூலை நான் எழுதியுள்ளேன். நான் சிறிலங்காவை சேர்ந்தவன் அல்லன். ஆனால் நான் சென்னையில் வளர்ந்தவன் என்ற வகையிலும் நான் ஒரு தமிழன் என்ற வகையிலும் சிறிலங்காவில் எத்தகைய போர் இடம்பெற்றது என்பதை எழுதியுள்ளே…
-
- 0 replies
- 880 views
-
-
சிறிய நாட்டின் பெரிய பிரச்சினைக்கு வயது நூறு கடந்த 08, 09, 10ஆம் திகதி என மூன்று நாட்கள் நடைபெற்ற ‘வடக்கின் பெரும் போர்’ என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும் யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத்தைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் மனதில் தோன்றியது. ஒரே சனத்திரள்; ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனக் கலகலப்பாக மைதானமும் சுற்றுப்புறமும் காட்சி அளித்தன. ஒரு மர நிழலில் அமர்ந்தவாறு, ஆட்டத்தை ஆர்வத்துடன் ரசித்தேன். அருகில் ஒரு முதியவர், கையில் புதினப் பத்திரிகையை வைத்திருந்து, அதைப் படிப்பதும் ஆட்டத்தைப் பார்ப்பதுமாகக் காணப்பட்டார். “ஐயா, துடுப்பெடுத்தாடும் பையன் …
-
- 0 replies
- 605 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் எதிர்காலம்!! 2015 ஆம் ஆண்டு தமிழ் மக் களின் ஆதரவுடன் தெற்கில் மலர்ந்த அரசு, இனப் பிரச்சினைக்குத் தீர்வாக புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்க முனைந்தது. இந்த முயற்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பங்காளராக இணைந்து கொண்டது. அரசியல் கட்சிகள் தமது அரசியல் பேரங்களையும் அரசமைப்பு உருவாக்க முயற்சிகளையும் ஒன்றாகக் கலக்க முற்பட்டன. புதிய அரசமைப்பில் இனப்பிரச்சினைத்தீர்வுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய அம்சங்களை முதன்மைப்படுத்துதல் கைவிடப்பட்டது. புதிய அரசமைப்பில் தமி…
-
- 0 replies
- 378 views
-
-
சி.ஐ.ஏ: சித்திரவதையின் உலகமயமாக்கல் அனைத்தும் உலகமயமாகியுள்ள சூழலில், சித்திரவதை விலக்கல்ல. சித்திரவதை பல வகைகளில் நடக்கின்றன. ‘உண்மையை அறியும் வழி’ என்ற போர்வை, சித்திரவதைகளைக் கண்மூடித்தனமான அனுமதிக்கிறது. ‘பயங்கரவாதி’ என்ற சித்திரிப்பு மட்டுமே, ஒருவர் சித்திரவதைக்குள்ளாகப் போதிய காரணியாகிறது. பொதுப்புத்தி மனநிலை, அதை விமர்சனமின்றி ஏற்கிறது. தம்மை நாகரிக ஜனநாயக சமூகங்கள் என்போர், சித்திரவதையை அனுமதிக்கிறார்கள். சித்திரவதை ஜனநாயகத்தின் பெயரால் நியாயப்படுத்தப்படுகிறது. நாம், மனிதரை மனிதராக மதிக்கும் ஒரு சமூகமா என்ற கேள்வியை, நாமெல்லோரும் கண்ணாடி முன் நின்று கேட்க வேண்டும். …
-
- 0 replies
- 779 views
-
-
சிறுத்தைகளும் விலங்குரிமைப் பாசாங்குகளும் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில், சிறுத்தையொன்று அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், எதிர்பாராத விதமாக, தேசிய செய்தியாக மாறி, விலங்குரிமைக்கான கோரிக்கைகளும் விசாரணைக்கான கோரிக்கைகளும் எழுந்திருக்கின்றன. இத்தனை கருணை மிகுந்த தேசமாக இலங்கை இருக்கிறதா என்ற சந்தேகத்தையும் பலருக்கு எழுப்பியிருக்கிறது. உயிர்களைத் தேவையின்றிக் கொல்லக் கூடாது என்பது, எம்மில் அநேகர் ஏற்றுக்கொள்ளும் ஒரு விடயம் தான். அச்சிறுத்தை கொல்லப்படும் காட்சிகளைப் பார்க்கும் போது, மனது வலிப்பதைத் தவிர்க்க முடியவில்லை. அதிலும், சிறுத்தை கொல்லப்பட்ட பின்னர், அதனுடன் “செல்பி” எடுத்துக் கொண்டு, அதை ஒரு க…
-
- 0 replies
- 411 views
-
-
பேச்சு அல்ல- செயலே தேவை- நீதியரசர் பேசுகிறார்!! தொகுதி-1 -த.செல்வராசா 2010 ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் வடமாகாணத்துக்கான மின்சாரம், வீதிகள், பாலங்கள், பாடசாலைகள், தபால் நிலையங்கள், விவ சாயத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், நில அளவைத் திணைக்களம், பிரதேச செயலகங்கள், நீர்த்தாங்கிகள் எனக் குறித்தொதுக்கப்பட்ட சகல உட்கட்டமைப்பு வேலைகளும் இயன்றளவில் முடிவுறுத்தப்பட்டிருந்தன. அதற்கு அப்போதைய வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ…
-
- 0 replies
- 495 views
-
-
இரண்டும் கெட்டான் நிலை பி.மாணிக்கவாசகம் மாற்றங்களினூடாகவே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். நிலைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி அதனூடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே சிறந்த வழிமுறையாகும். எனவே, மாற்றங்களின்றி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. மாற்றங்களின்றி நல்லிணக்கம் ஏற்பட முடியாது. நல்லுறவும் இன ஐக்கியமும் நிலையான சமாதானமும்கூட சாத்தியமில்லை. இந்த வகையில்தானோ என்னவோ அரசியலமைப்பை மாற்றியமைப்பதினூடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற அணுகுமுறையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. …
-
- 0 replies
- 850 views
-
-
கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் நிலைப்பாடு இலங்கை மைய அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் எல்லோருக்கும் தெரிந்ததே. இரு இனங்களுக்கிடையேயும் பல்வேறு முரண்பாடுகளும் கசப்பணர்வுகளும் இருந்தாலும், தம்மை அடக்குகின்ற ஒரு பொது எதிரிக்கு எதிராக ஒரு தீர்க்கமான அரசியல் நிலைப்பாட்டினை தமிழ், முஸ்லிம் மக்கள் எடுத்து , நடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு வேலைத்திட்டமாக இல்லாது விட்டாலும் தனித் தனியே செயற்பட்டனர். இதில் முதலாவதாக தம்மை ஒடுக்குகின்ற பிரதான பொது எதிரி சிங்கள இன மேலாதிக்க ஆளும் குழுமம் என்பது மிக வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மையாக இருந்தது.அந்த சிங்கள இன மேலாதிக்க ஆளும் குழுமத்தினை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கு இரு இன மக்களின் அபிலாசைக…
-
- 0 replies
- 962 views
-
-
இருண்ட கண்டம் என அழைக்கப்படும் ஆபிரிக்காவில், 1980 களில் ஒரு நாடு மட்டும் அசுர வேகத்தில் ஒளிவீசத்தொடங்கியது. அந்த நாட்டின் பெயர் புர்கினா ஃபசோ (Burkina Faso). ஒளிவீச காரணம் கேப்டன் தோமஸ் சங்காரா (Thomas Isidore Noël Sankara). இன்று அவன் உயிருடன் இருந்திருந்தால், ஆபிரிக்காவில் முதல் அபிவிருத்தி அடைந்த நாடாக தோற்றம் பெற்றிருக்கும் புர்கினோ ஃபசோ. இளம் புரட்சிகர தலைவனாக, ஏகாபத்திய எதிர்ப்பாளனாக ஆபிரிக்க மக்களிடையே அடையாளம் காணப்பட்ட தோமஸ் சங்காராவுக்கு மூன்றாம் உலகம் சூட்டிய பெயர் ‘ஆபிரிக்காவின் சே குவாரா’. 1983ம் ஆண்டு இராணுவ புரட்சி நடவடிக்கை ஒன்றின் மூலம் Burkino Faso நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தோமஸ் சங்காரா கைப்பற்றினான். ஆட்சிக்கு வந்ததும் அவன் கொண்டுவந்த ம…
-
- 0 replies
- 1k views
-
-
நல்லிணக்கத்தை சாத்தியமாக்குவதற்கான உணர்வுநிலை March 13, 2023 Photo, @PMDNewsGov மேற்கு நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் இலங்கைக்கு வந்து கடந்த சில தினங்களாக பிரதானமாக மதத் தலைவர்களுடனும் அடுத்து அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களுடனும் தங்களது நண்பர்கள், உறவினர்களுடனும் தொடர்ச்சியான பல சந்திப்புக்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சந்திப்புக்களில் முக்கியமானது பௌத்த மதத் தலைவர்களுடனும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் அவர்கள் நடத்திய சந்திப்புக்களாகும். அவற்றுக்கு உயர்ந்தளவு சாதகமான வரவேற்பு கிடைத்தது. புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னர் இலங்கைக்கு வந்திருந்தால் அவர்கள் விடுதலை…
-
- 0 replies
- 311 views
-
-
ஆண்டுகளோ பத்து; வார்த்தைகளோ பொய்த்து காரை துர்க்கா / 2019 பெப்ரவரி 12 செவ்வாய்க்கிழமை, மு.ப. 12:24 Comments - 0 “முப்பது ஆண்டுகாலப் போர் முடிந்து, பத்து ஆண்டுகள் கழிந்தும் தீர்வு வராதது வருத்தம்; இலங்கை மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளன; அபிவிருத்தி அடைவதில் தோல்வி கண்டுள்ளோம்; செந்தணலின் மீதுள்ள சாம்பல் மீது நல்லிணக்கம் நிற்கின்றது; ஊழலை ஒழிக்க முடியாது உள்ளது; போதைப் பொருள் வணிகத்தை அழிக்க முடியாது உள்ளது” இவ்வாறாக, இலங்கையின் 71ஆவது சுதந்திரதின பிரதான நிகழ்வு காலிமுகத்திடலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வரிசையாகத் தெரிவித்த உண்மையும் ஏமாற்றமும் கலந்த உரை இதுவாகும். முப்பது ஆண்டு கால யுத்தம் முடி…
-
- 0 replies
- 548 views
-
-
இலண்டன் (ப)ரகசிய சந்திப்பு! (புருஜோத்தமன் தங்கமயில்) தோல்வி மனநிலையிலிருந்து விடுபட்டு இராஜதந்திரக் களங்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டிய கட்டத்தில் ஈழத்தமிழர்கள் இருக்கின்றார்கள். ஆயுதப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றிருந்தாலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராஜதந்திர களமாடுதலில் ஈழத்தமிழர்கள் வெற்றி பெற்றவர்களாக இருந்தது இல்லை. அது(வும்)தான், ஆயுதப் போராட்டத்தை(யும்) அடியோடு அழித்தது. ஜனாதிபதித் தேர்தலின் பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களின் போக்கில் தற்போது விரிந்துள்ள புதிய இராஜதந்திரக் களம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். மஹிந்த ராஜபக்ஷவின் அகற்றத்தோடு அது, விரைவாக எம்மை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கின்றது. இல்லாவிட்டாலும், சில காலத்துக்குப் பின்னர் …
-
- 0 replies
- 487 views
-
-
பயங்கரவாதமும் பாதுகாப்பும் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தினால் தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடியையும் அச்சுறுத்தலையும் முறியடிப்பதற்காக அல்லும் பகலுமாக ஆயுதப்படையினரும் பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினரும் சோதனை நடவடிக்கைகளையும், தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்கள். இந்தத் தேடுதல்கள் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் மூலம் நாடளாவிய ரீதியில் நிலவிய அச்சநிலைமை தணிந்து வருகின்றது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்பது இலங்கைக்குப் புதியதல்ல. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் மக்கள் மேற்கொண்ட சாத்வீக வழியிலான அரசியல் போராட்டங்களை நசுக்…
-
- 0 replies
- 624 views
-
-
மீண்டுமொரு கறுப்பு ஜூலைக்கு வழிவகுக்க திட்டமா? மற்றுமொரு கறுப்பு ஜூலை நாட்டில் உருவாகியுள்ளதா என்று பீதி கொள்ளும் அளவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (13.05.2019) குருநாகல், கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் வாழும் முஸ்லிம் குடிமக்களுக்கெதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூர வன்முறைச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. அப்பாவி பொதுமக்கள் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன, தீ வைக்கப்பட்டுள்ளன, வர்த்தக நிலையங்கள் நாசமாக்கப்பட்டுள்ளன, கொடுமையாளிகளின் தாக்குதல்களுக்கு அஞ்சி வீடு வாசல்களை விட்டோடி வயல்வெளிகளில் அப்பாவி கிராம மக்கள் அடைக்கலம் கோரியுள்ளனர். படைத்த…
-
- 0 replies
- 518 views
-
-
அவசரகாலச் சட்டமும் கரடிப் பொம்மையும் – நிலாந்தன்… June 2, 2019 கழுத்துறை சிறீ தேவானந்தா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளைச் சோதிப்பதற்கு ஒரு புதிய உத்தி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படுகிறது. அவ் ஒளிப்படங்களில் கரடியாக வேடமணிந்து ஒரு நபர் குழந்தைகளின் புத்தகப் பைகளை சோதிக்கிறார் இவ்வாறு சோதிப்பதன் மூலம் பாடசாலை வாசலில் தமது புத்தகப் பைகள் சோதிக்கப்படுவதை குறித்து பிள்ளைகளுக்கு எதிர்மறையான ஒரு மனப்பதிவு வரக்கூடாது என்று சிந்திப்பதாக கூறப்படுகிறது. பாடசாலை வாசல்களில் துப்பாக்கிகளோடு படைத்தரப்பு நிற்பதும் பொலிசார் நிற்பதும் அவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் பிள்ளைகளின் புத்தகப் பைகளை சோதி…
-
- 0 replies
- 958 views
-
-
தமிழ் டயாஸ்பொறாவை சிறிலங்கன் டயாஸ்பொறாவாக்கி அரசுடன் இணைக்கும் முயற்சி வெற்றியடையுமா? கலாநிதி சர்வேந்திரா புலம்பெயர் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசை தமது சொந்த அரசாகக் கருதுகிறார்களா? இக் கேள்வி தாயக மக்களுக்கும் பொருந்தும். ஆனால் தாயகத்தில் வாழும் மக்கள் சிறிலங்கா அரச கட்டமைப்புக்குள்தான் வாழ்ந்து வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு வேறு தெரிவு இல்லை. ஆனால் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தாம் தாம் வாழும் நாடுகளின் அரச கட்டமைப்புக்குள் வாழ்கிறார்கள். இவர்களுக்கு தமது தாய்நாட்டின் அரசுடன் கொண்டிருக்கக்கூடிய தொடர்புகள் குறித்து தெரிவுகள் உண்டு. இதனால்தான் இக் கேள்வி இங்கு புலம்பெயர் மக்கள் குறித்து முன்வைக்கப்படுகிறது. டயாஸ்பொறா தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட Gabriel Sheffer என…
-
- 0 replies
- 178 views
-
-
புறக்கணிக்கப்படும் பாதிக்கப்பட்டோர் காணாமல்போன எமது அன்புக்குரிய வர்கள் எங்கே அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? அவர்கள் எப்போது திரும்பி வருவார்கள்? எங்களுக்கு ஏன் இந்த வேதனை எமது காணிகள் எப்போது விடுவிக்கப்படும்? எங்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்? சர்வதேசத்தின் பங்கேற்புடன்தான் எங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் -_ இப்படி பாதிக்கப்பட்ட மக்கள் புலம்பிக்கொண்டிருப்பதைக் கேட்கிறோம்; காண்கின்றோம். அடிக்கடி இடம்பெறும் ஊர்வலங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் பங்கேற்கும் பாதிக்கப்பட்ட மக்கள் எழுப்பும் வினாக்களாக இவை உள்ளன. கடந்த 10 வருடங்களாகவே பாதிக்கப்பட்ட இந்த மக்கள் இவ்வாறு தமது மனக்குமுறல்களை வெளியிட்டு வருகின்ற போதி…
-
- 0 replies
- 664 views
-
-
இலங்கைக்கு வெளியில் பொறிமுறை அவசியம் ! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான இலங்கையின் பிரச்சினைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிந்து அதற்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கான தொடர் போராட்டம் உள்நாட்டில் ஆயிரமாவது தினத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்ற நிலையிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நெருக்குதல்கள், அச்சுறுத்தல்கள், வாழ்க்கை நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த வீதியோரப் போராட்டத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய குடும்ப உறவினர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். தன்னெழுச்சியாக ஆரம்பமாகி தீவிரமடைந்…
-
- 0 replies
- 758 views
-
-
முகம்மது தம்பி மரைக்கார் சிறுபான்மையினர் தலையை உயர்த்தி, மலைப்புடன் பார்க்கின்ற வெற்றியொன்றை, ஜனாதிபதித் தேர்தலில் பெற்றிருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ. கணித ரீதியாக, இந்த வெற்றியை, ஓரளவு முன்னதாகவே சிலர் கணித்துக் கூறியிருந்தனர். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், பொதுஜன பெரமுன பெற்றுக் கொண்ட 50 இலட்சம் வாக்குகளும் அதேதேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடைத்த சுமார் 15 இலட்சம் வாக்குகளும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்குக் கிடைக்கும் போது, அவர், வெற்றி வேட்பாளராகி விடுவார் என்பதே அந்தக் கணக்காகும். ஆனாலும், மிக வெளிப்படையான இந்த உண்மையைச் சிறுபான்மையினர் தட்டிக்கழித்தனர். அதன் விளைவாக, தனிமைப்பட்டு நிற்கும் வகையிலான தேர்தல் முடிவு…
-
- 0 replies
- 499 views
-
-
இருண்ட யுகம் திரும்புகிறதா? கே. சஞ்சயன் / 2019 டிசெம்பர் 22 ஆட்சி மாற்றங்களுக்குப் பின்னர், அரசியல் பழிவாங்கல்கள் நிகழ்வது, இலங்கை போன்ற அரைகுறை ஜனநாயக நாடுகளில் வழக்கமான ஒன்றுதான். புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கப் போவதாக, வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்திருக்கும் தற்போதைய அரசாங்கமும் கூட, அரசியல் பழிவாங்கல், இராணுவ மயமாக்கல் கலாசாரத்தில் இருந்து விடுபடவில்லை. இதனையே, அதன் ஒரு மாதகால ஆட்சி உறுதிப்படுத்தி இருக்கிறது. 2010இல் மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் இடம்பெற்ற மிகப்பெரிய அரசியல் பழிவாங்கல் சம்பவமாக, ஜனாதிபதி தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகா, சிறையில் அடைக்கப்பட்டதைக் குறிப்பிடலாம். அப்போது, அவருக்கு…
-
- 0 replies
- 911 views
-
-
[size=4]முதற் தடவையாக பராஒலிம்பிக் போட்டிகளில் பதக்க மொன்றை அண்மையில் இலங்கை வென்றெடுத்துள்ளது. விரைவிலோ அல்லது சற்றுத் தாமதமாகவோ அதற்கான கௌரவத்தையும் கூட ராஜபக்ஷாக்களே தட்டிக் கொள்ளக் கூடும்.[/size] [size=4]பயிற்சிக்குக் கூட எந்தவொரு அரச உதவியும் கிட்டாத நிலையில் தனது சுயமுயற்சியால் மாத்திரமே வெற்றிவாகை சூடிக் கொண்ட அந்த விளையாட்டு வீரருக்கு, விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவு உட்பட அனைத்துத் தேவைகளையும் தனது சொந்தப் பணத்திலேயே மேற்கொள்ள நேர்ந்தது. [/size] [size=4]அரசின் பிரசாரங்களுக்காக கோடிக் கணக்கில் செலவழிக்கும் நாடொன்றிலேயே இந்த அவல நிலை அந்த விளையாட்டு வீரருக்கு ஏற்பட்டது. அந்தப் பிரசாரங்களுக்கு அமைய, நாட்டின் சுபீட்சத்துக்கும் மக்களின் சௌபாக்கியத்துக்கும் தம…
-
- 0 replies
- 655 views
-
-
உலகளாவிய தொற்று தருணத்தில் வழங்கப்பட்டுள்ள நீதி? பட மூலம், Groundviews 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் மிருசுவில் கிராமத்தில் ஐந்து வயது, பதின் மூன்று வயது மற்றும் பதினைந்து வயது சிறார்கள் உள்ளிட்ட உள்நாட்டில் இடம்பெயர்ந்த எட்டுத் தமிழ்க்குடிமக்களைப் படுகொலை செய்த இராணுவக் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்க, 2015ஆம் ஆண்டு நீதிமன்றத்தினால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார். 2019 ஏப்ரல் மாதம் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாமினால் தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட இக்கொலையாளிக்கு, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ 2020 மார்ச் 26ஆம் திகதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார் என்ற செய்தி வெளியிடப்பட்டது. பொதுமன்னிப்பு தொடர்பாகப் பல மாதங்…
-
- 0 replies
- 498 views
-
-
ராஜீவ் 87இல் சிங்களவரால் கொல்லப்பட்டிருந்தால்... - என்.சரவணன் (இந்தியாவுக்கு இன்றும் சவாலிடும் ராஜீவைத் தாக்கிய விஜேமுனி) “ராஜீவ் காந்தியை அன்றே கொலை செய்யும் இலக்கில் தான் தாக்கினேன். தப்பிவிட்டார்” இப்படி சமீபத்தில் நேர்காணல் கொடுத்திருப்பவர் ரோஹன விஜித முனி. யார் இந்த விஜிதமுனி. 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்துகொள்வதற்காக ராஜீவ் காந்தி இலங்கை வந்திருந்த போது இராணுவ அணிவகுப்பில் வைத்து தாக்கிய கடற்படையினன் தான் இந்த விஜிதமுனி. இன்று வரை இலங்கையில் பெரிய ஹீரோவாக சிங்கள மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்படும் பிரமுகர். அதுமட்டுமன்றி இன்றுவரை ராஜீவ் காந்தியைத் தாக்கியதை பெருமையாக ஊடகங்களிடமும், கூட்டங்களிலும் பகிரங்கமாக பேச…
-
- 0 replies
- 828 views
-
-
ஆவா குழுவும் இராணுவமும் வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரைக் குறைக்க வேண்டும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் தடையாக உள்ள இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. ஆயினும், இராணுவத்தைக் குறைப்பதற்கும், இராணுவத்தின் பிடியில் உள்ள பொதுமக்களின் காணிகளைக் கைவிடுவதற்கும் முன்னைய அரசாங்கம் விரும்பியிருக்கவில்லை. வடக்கில் இருந்து இராணுவம் குறைக்கப்படமாட்டாது. இராணுவத்தினர் தேசிய பாதுகாப்புக்காகவே வடக்கில் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே, அவர்கள் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படமாட்டாது என்று அந்த அரசாங்கம் பிடிவாதமானதொரு போக…
-
- 0 replies
- 304 views
-
-
-
- 0 replies
- 984 views
-