அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
மைத்திரி – 2015 – 2018 யதீந்திரா மைத்திரி ஏன் இவ்வாறு நடந்துகொள்கின்றார்? மைத்திரியின் அண்மைக்கால நடவடிக்கைகளை முன்னிறுத்தி சிந்திக்கும் ஒருவரிடம், இவ்வாறானதொரு கேள்வி எழுவது இயல்பே! அதிலும் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் இவ்வாறான கேள்வி சற்று ஆவேசமாகவே எழுகிறது. சில தினங்களுக்கு முன்னர் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கிழக்கு தமிழர்கள் மத்தியில் ஆங்காங்கே அதிருப்தி வெளிப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த காலங்களில் ஹிஸ்புல்லா தெரிவித்திருந்த சில அபிப்பிராயங்களை பலரும் முகநூலில் பதிவிட்டிருந்தனர். கூட்டமைப்பின் மீதுள்ள கோபத்தின் காரணமாகவே மைத்தரி இவ்வாறானதொரு நியமனத்தை செய்திருக்கிறார் என்பது கூட்டமைப்பைச் சேர்ந்த சிலரது அபிப்பிராயமா…
-
- 0 replies
- 858 views
-
-
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் கருத்தில் கொள்வதாக இல்லை. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி ஆட்சியை கைப்பற்றுவது பேன்ற விடயங்களில் மாத்திரமே கவனம் செலுத்துப்படுகின்றது. அபிவிருத்தி என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார். ஆனால், பெருந்தெருக்கள், அதிவேகச் சாலைகள், துறைமுக நகரம் என்ற பெரிய வேலைத் திட்டங்களை நோக்கியதாகவே அபிவிருத்தி காணப்படுகின்றது. சாதாரண மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. கட்சிகளின் சந்திப்புகள் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தினமும் சந்தித்து உரையாடுகின்றன. தங்கள் பலத்தை எப்படி …
-
- 6 replies
- 1k views
-
-
அப்போதைய ஐ.தே.க தலைவர் டி.எஸ்.சேனநாயக்காவுடன் உடன்படிக்கை செய்து கொண்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, 1947 ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். டி.எஸ் சேனநாயக்க வயதில் மூத்தவர். முதலாவது பிரதமராகும் அவரைத் தொடர்ந்து தான் பிரதமர் பதவிக்கு வரலாம் என பண்டாரநாயக்க கருதினார். டி.எஸ்.சேனநாயக்கவின் பின்னர் பண்டாரநாயக்க பிரதமராகியிருந்தால், சேனநாயக்கவைத் தொடர்ந்து ஐ.தே.க வின் தலைமைப் பதவியை பண்டாரநாயக்க பெற்றிருப்பார். இது நடந்திருந்தால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உருவாகியிருக்காது. எனினும், நாட்டின் முதலாவது பிரதமராகப் பதவி வகித்த டி.எஸ் தனது மகனான டட்லி சேனநாயக்கவை அடுத்த பிரதமராக்க வேண்டும் எனக் கனவு கண்டிருந்தார். இந்த விடயத்தில் பண்டாரநாயக்கவின் பிரதமர…
-
- 0 replies
- 486 views
-
-
மைத்திரி அரசில் மொழிக் கொள்கை? லயனல் குருகே படம் | SILAN MUSLIM மத நல்லிணக்கத்தையும், தேசிய ஐக்கியத்தையும் பிரதானமாகக் கொண்டு கடந்த ஜனாதிபதித் தேர்தல் நிறைவுபெற்றது. வரலாற்றில் என்றும் இல்லாதவாறு தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு எதிராகத் தமது வாக்குகளைப் பயன்படுத்தினர். தமிழ், முஸ்லிம் மக்கள் தமது வாக்குகளை மைத்திரிபால சிறிசேனவுக்கே அள்ளிக் கொடுத்தனர். 30 வருடகால யுத்தம் முடிவடைந்த பின்னர் வடபுலத்தில் குறிப்பிட்ட பௌதீக அபிவிருத்தி ஏற்பட்டிருந்தாலும் மக்களின் இதயங்கள் வெல்லப்படவில்லை என மைத்திரிபால சிறிசேன தேர்தல் மேடைகளில் முழங்கினார். தமிழ், முஸ்லிம் மக்கள் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதையிட்…
-
- 0 replies
- 319 views
-
-
மைத்திரி காட்டும் பூதம் “விரோதங்கள் வன்முறைகளின் மூலம் என்னைப் பலவீனப்படுத்தினால், தீய சக்திகள் தான் பலம் பெறும்” - கடந்த 13ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடந்த தமிழ்மொழித் தின விழாவில் உரையாற்றிய போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய விடயமே இது. இந்த விழாவில் பங்கேற்க யாழ்ப்பாணம் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் கடந்து சென்ற போது, வாகனத்தை விட்டுக் கீழே இறங்கி, அவர்களுடன் பேச்சு நடத்தியிருந்தார் ஜனாதிபதி. அதற்குப் பின்னர், தமிழ்மொ…
-
- 0 replies
- 595 views
-
-
மைத்திரி முன்னெடுத்த இன்னொரு ஒப்பரேசன் சுப்த்ரா “பௌதிக ரீதியாக பயங்கரவாதிகளைத் தோற்கடித்த போதிலும், அவர்களின் கொள்கையைத் தோற்கடிக்க முடியாது போயுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக, சர்வதேச ஒத்துழைப்புடன் அந்தக் கொள்கையைத் தோற்கடிப்பதற்கே முயன்று வந்தேன்“ கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, கொள்கை விளக்க உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியிருந்தார். இதற்கு முன்னரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலரும், போரில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போதிலும், அவர்களின் சித்தாந்தத்தை தோற்கடிக…
-
- 0 replies
- 492 views
-
-
மைத்திரி வெற்றிபெற்றால்…? அ.நிக்ஸன் தற்போது அரசியல் கட்சிகளின் தனித்துவம் தொடர்பான கேள்விகள் எழுகின்றன. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் கட்சிகளின் தனித்துவம் பற்றிய சந்தேகங்கள் அரசியல் விமர்சகர்களிடையே அதிகரித்துள்ளன. அரசில் இருந்து விலகி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உட்பட பலர் பொது எதிரணியில் இணைந்து கொண்ட பின்னர் மேலும் பலர் அரசில் இருந்து விலகிச் செல்லும் வாய்புள்ளதாகக் கூறப்படுகின்றது. அடையாளம் என்ன? பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அன்னம் சின்னத்தில் போட்டியிடவுள்ளார். அதற்கு பொது எதிரணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு கொடுத்துள்ளன. பொது எதிரணியில் இணைந்துள்ள கட்சிகளுக்கு இடையே அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்…
-
- 2 replies
- 1.7k views
-
-
மைத்திரி- ரணில் அரசாங்கமும் தமிழ் அரசியல் கைதிகளும் ருத்திரன்- ஒரு சதாப்த காலமாக உரிமைக்காக போராடி வரும் தமிழ் தேசிய இனத்தின் ஆயுதவழிப் போராட்டமானது மௌனிக்கப்பட்டு 8 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் தமிழ் மக்கள் முன்னுள்ள பிரச்சனைகனள் இன்னும் தீர்க்கப்படவில்லை. முன்னைய மஹிந்தா ஆட்சிகாலமாக இருந்தாலும் சரி, தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மை வாக்குளால் உருவான மைத்திரி – ரணில் கூட்டரசாங்கமாக இருந்தாலும் சரி அதனை தீர்ப்பதற்கு காட்டும் கரிசனை என்பது உளப்பூர்வமானதாக இல்லை. இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணுதல் என்பது ஒருபுறமிருக்க, அவசியமானதும், அவசரமானதுமான பல பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய நிலையில்…
-
- 0 replies
- 372 views
-
-
மைத்திரி; ராஜபக்ஷக்களின் முடிவு(?) மைத்திரிபால சிறிசேனவின் புதிய அவதாரம் ராஜபக்ஷ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி பற்றிய பேச்சுக்களை ஆரம்பித்து வைத்திருக்கிறது. பெரும் ஆதரவோடும் ஆரவாரங்களோடும் ஆரம்பித்து கோலொச்சிய சாம்ராஜ்யங்களின் சோகமான முடிவுகளை உலகம் கண்டிருக்கிறது. இலங்கைக்கும் அப்படியான வரலாற்றுப் பக்கங்கள் உண்டு. அது, ஒவ்வொரு ஆரம்பத்திற்கும் ஒரு முடிவு உண்டு என்ற உலக நியதியின் அடிப்படைகளில் தோற்றம் பெறும் எண்ணம். ராஜபக்ஷ சாம்ராஜ்யத்திற்கும் அந்த நியதி பொருந்தும் என்று பலரும் நம்புகிறார்கள். உலக நியதி, எதிர்பார்ப்புக்களைத் தாண்டி இலங்கையின் பெரும்பான்மை அரசியல் சூழல் நம்பிக்கைக்கும், நம்பிக்கையீனத்துக்கும் மத்தியில் உழன்றுகொண்டிருக்கிறது. ஏனெனில், ராஜபக்ஷக்களின் மீது ந…
-
- 0 replies
- 793 views
-
-
மைத்திரிக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு கோரமுடியும்? by Maatram தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இதுவரை வாய்திறக்காத, பொதுவேட்பாளராகியும் இன்னும் திறவாத, தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட தமிழர் தொடர்பாக எதுவும் குறிப்பிடாத, தமிழர்களை வேண்டப்படாதவர்களாக – விரோதிகளாக எண்ணும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என எவ்வாறு கோர முடியும் என கேள்வி எழுப்புகிறார் சட்டத்தரணி வி. புவிதரன். இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்குவதை விடுத்து தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளையாவது தன்னால் வழங்க முடியும் என மைத்திரியால் உறுதியளிக்க முடியுமா என மேலும் அவர் கேள்வி எழுப்புகிறார். ‘மாற்றம்’ தளத்துக்கு வழங்கிய நேர்க்காணலின் போதே மேற்கண்டவாறு கூறினார். அ…
-
- 1 reply
- 722 views
-
-
மைத்திரிக்கு ஸ்ரீ ல.சு.கட்சியை வெற்றி பெறச்செய்ய முடியுமா? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை காட்சிப் பொருளாகப் பாவித்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (பொதுசன முன்னணி) என்ற பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பித்ததை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த சனிக்கிழமை அவர் அதற்காக இரண்டு கட்சி அபிவிருத்திக் கூட்டங்களில் கலந்து கொண்டார். இரண்டும் கட்சிக்கு மேலும் அங்கத்தினர்களைச் சேர்த்துக் கொள்வதை நோக்கமாகவே நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை காலையில் அவர் காலியில் நடைபெற்ற கட்ச…
-
- 0 replies
- 216 views
-
-
-
- 0 replies
- 684 views
-
-
s ஏழாவது ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் ஆணையைப் பெற்று வெற்றியீட்டியதன் மூலம் மைத்திரிபால சிறிசேன இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பள்ளேவத்தே கமரால லாகே மைத்திரிபால யாபா சிறிசேன எனும் முழுப் பெயரைக் கொண்ட இவர் 1951ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 3ஆம் திகதி பௌத்த சமயத்தைப் பின்பற்றும் மத்திய தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். தற்போது இவருக்கு வயது 63. ஜயந்தி புஷபகுமாரி என்பவருடன் திருமண வாழ்க்கையில் இணைந்து கொண்ட இவருக்கு இரு மகள்மாரும் ஒரு மகனும் உள்ளனர். கல்வி: 1955 இல் பொலன்னறுவ லக் ஷ உயன பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் பொலன்னறுவை தப்போவௌ மகா வித்தியால…
-
- 0 replies
- 1.9k views
-
-
மைத்திரிபாலவை கூட்டமைப்பு பகிரங்கமாக ஆதரிப்பதால் ஏற்படப்போகும் விளைவுகள்? யதீந்திரா இந்தக் கட்டுரை எழுதப்படும்வரையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவெதுவும் வெளியாகியிருக்கவில்லை. ஆனால் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் ஆங்காங்கே தெரிவித்திருக்கும் சில அபிப்பிராயங்களின் அடிப்படையில் சில ஊகங்கள் உலவுகின்றன. ஓர் ஊகம் கூட்டமைப்பு இறுதிநேரத்தில் எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்கு பகிரங்கமாக ஆதரவளிக்கக்கூடும் என்றவாறான கருத்து சிலர் மத்தியில் காணப்படுகிறது. இவ்வாறு கூறுவோர், கூட்டமைப்பில் சம்பந்தனுக்கு நெருக்கமான தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் ஆங்காங்கே தெரிவித்திருக்கும் கருத்துக்கள…
-
- 0 replies
- 823 views
-
-
மைத்திரியால் காப்பாற்றப்பட்ட தரப்புகள் புருஜோத்தமன் தங்கமயில் / 2018 நவம்பர் 21 புதன்கிழமை, மு.ப. 01:44 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம், நாட்டை நாளுக்கு நாள், அதள பாதாளத்தை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றது. அரசியல் ஸ்திரத்தன்மை மாத்திரமல்ல, பொருளாதாரம், நிர்வாகம் போன்ற துறைகளிலும் முடக்கம் ஏற்பட்டிருக்கின்றது. வருட இறுதியில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் குழப்பத்தால், அடுத்த வருடத்துக்கான பாதீட்டுத் திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கும் வரை, நாடாளுமன்றத்தில் எந்தவொரு சிறிய விடயத்தையும் மைத்திரியால் நிறைவேற்ற முடியாது. அதைப் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கமாட்…
-
- 0 replies
- 2.1k views
-
-
மைத்திரியிடம் எதை எதிர்பார்க்கலாம்? மூன்றாண்டுகளுக்கு முன்னர், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாமும் பத்தோடு பதினொன்றாகிய அரசியல்வாதி மட்டுமே என்பதை, நாளாந்தம் நிரூபித்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தாம் பதவிக்கு வரும்போது, இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல வாக்குறுதிகளை வழங்கிய அவர், இப்போது அவற்றை நிறைவேற்ற முடியாமலும் நிறைவேற்ற மனமின்றியும் இருப்பதை அவதானிக்க முடிகிறது. கடந்த வாரமும் அவர், தாம் 2015 ஆம் ஆண்டு தெரிவித்த முக்கியமானதொரு கருத்தை மறுத்து, கருத்து வெளியிட்டு இருந்தார். தாம், ஒரு முறை மட்டுமே ஜனாதிபதியாகப் பதவி வ…
-
- 0 replies
- 378 views
-
-
மைத்திரியின் 100-நாள் ஆட்சியில் வடக்கு – ஒரு ஆய்வு எமது விசேட செய்தியாளர் ஜெரா 100 நாள் திட்டம் குறித்த விமர்சனங்கள் கொழும்பை மையப்படுத்திக் காரசாரமாகப் பேசப்படுகின்றன. விமர்சிக்கப்படுகின்றன. வடக்கில வாழும் தமிழர்களின் பெரும்பாலானவர்களுக்கு இந்தத் திட்டம் பற்றி அடிமுடி எதுவும் தெரியாது. காரணம் இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் சாதாரணர்களை இலக்குவைத்தவை மிகச் சாதாரணம். அத்துடன் 100 நாள் திட்டத்தின் அனேக சாரங்கள் ஆட்சியியலுடனும், அதன் இருப்பைத் தக்கவைத்தலுடன் தொடர்புபட்டது. எனவேதான் தமிழ் புத்திஜீவிகளிடமிருந்து இந்த 100 நாள் திட்டம் பற்றியும் 100நாட்களின் ஆட்சி பற்றியும் கொழும்புமிரர் வினவ திட்டமிட்டது. இந்த ஆட்சி மாற்றம் இலங்கை மக்களால் கொண்டுவரப்பட்ட போதிலும், மேற…
-
- 0 replies
- 2k views
-
-
மைத்திரியின் அரசும் மாவீரர் தினமும் – செல்வரட்னம் சிறிதரன் சுமார் எட்டு வருடங்களின் பின்னர், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டிருக்கின்றது. இது பலருக்கும் ஆறுதல் அளித்திருக்கின்ற ஒரு முக்கியமான சம்பவமாகப் பதிவாகியிருக்கின்றது. விடுதலைப்புலிகளினால் பிரகடனப்படுத்தப்பட்டு, மிகவும் முக்கியமான ஒரு தினமாகப் பின்பற்றப்பட்டு வந்த மாவீரர் தினத்தை, அனுட்டிக்கக் கூடாது. கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளை நினைவுகூரக் கூடாது என்று முன்னைய அரசாங்கம் விடாப்பிடியாக இருந்து வந்தது. இதனால் மாவீரர் தினம் அனுட்டிக்கப்படக்கூடாது என்ற கடு…
-
- 0 replies
- 442 views
-
-
மைத்திரியின் அளாப்பி அரசியலும் தமிழ்த் தரப்பும் Nillanthan18/11/2018 அப்பா பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போதுஒரு முறை வகுப்பத்தலைவராக நியமிக்கப்பட்டார்.உதவி வகுப்புத்தலைவராகநியமிக்கப்பட்ட மாணவர் சற்று வெட்க குணமும் பெண் சுபாவமும் கொண்டவராகஇருந்தார். அத்தோடு அவர் அவரது சில குறிப்பிட்ட நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு ஆங்கிலத்தில் கதைப்பவராகவும் இருந்தார்.இந்த நடவடிக்கைகள்அப்பாவை கோபத்திற்கு ஆளாக்கியது.உடனே வகுப்பாசிரியரிடம் சென்று உதவிமாணவத்தலைவரை பதவி நீக்கம் செய்யுமாறு அடம்பிடித்திருக்கிறார்.இதனால்இரண்டு நாட்கள் பாடசாலைக்கும் செல்லவில்லையாம்.அப்பாவின் முகம்சாதாரண நிலையிலும் கோபக்காரரைப்போலவே இருந்ததால்வகுப்புத்தலைவருக்கு அவரே பொருத்தம் என கருதிய…
-
- 0 replies
- 833 views
-
-
மைத்திரியின் இரண்டு உடன்படிக்கைகளும் தமிழ் மக்களும் முத்துக்குமார் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இரண்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருக்கின்றார். ஒன்று, 33 அரசியற் கட்சிகளும், பொது அமைப்புக்களும் இணைந்து கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை. இரண்டாவது ஹெல உறுமயவுக்கும் மைத்திரிபால சிறீசேனாவிற்கும் இடையேயான உடன்படிக்கை. இங்கு கவனிக்கப்படவேண்டிய முக்கியவிடயம், ஹெலஉறுமய பொது வேலைத்திட்டத்திற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. அதேவேளை அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யவில்லை. பொது வேலைத்திட்டத்தில் உடன்பாடு இருந்தபோதும், தனது தனித்த அரசியல் இலக்குகளை அடைந்துகொள்ளும் வகையில் தனிப்பட்ட உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளது, அந்த இரண்டு உட…
-
- 1 reply
- 820 views
-
-
மைத்திரியின் குத்துக்கரணமும் கூட்டமைப்பின் முடிவும் புருஜோத்தமன் தங்கமயில் / 2018 நவம்பர் 07 புதன்கிழமை, மு.ப. 03:18 கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், அப்போதைய பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை நோக்கி, மஹிந்த ராஜபக்ஷ அணியினர், “இடுப்பில் தைரியமற்றவர்” (ஆண்மையற்றவர்) எனும் அரசியல் நாகரிகமற்ற, இழிவார்த்தைகளை மேடை தோறும் பேசி வந்தனர். சுமார் நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், அதே மாதிரியான நாகரிகமற்ற இழிவார்த்தைகளைப் பேசிக் கொண்டு, மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு மேடையில் ஏறியிருக்கிறார், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. நாட்டு மக்களின் ஆணைபெற்ற தலைவராக, மைத்திரிபால சிறிசேனவுக்குப் பாரிய பொறுப்புண்டு. வார்த்தைகளில் கண்ணியத்தைப் பேண வேண்டிய கடப்பா…
-
- 0 replies
- 688 views
-
-
மைத்திரியின் திரிசங்கு நிலை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான குழுவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவுக்கும் இடையில், ஒற்றுமையை ஏற்படுத்தப் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், அவை வெற்றிபெறும் சாத்தியக்கூறுகள் மிகவும் அரிதாகவே இருக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்ததையடுத்து, அவரது தலைமையை ஏற்றிருந்த பலர், அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர்களாகினர். அதன்பின் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளிலும், இதேபோல் இரு சாராரையும் இணைக்க வேண்டும் என்று சிலர் கூறி வந்தனர். உண்மையிலேயே, அப்போது மஹிந்தவின் ஆதர…
-
- 0 replies
- 380 views
-
-
-
- 0 replies
- 467 views
- 1 follower
-
-
மைத்திரியின் பேயாட்டம் - தடுமாறும் மக்கள் புருஜோத்தமன் தங்கமயில் / 2018 டிசெம்பர் 05 புதன்கிழமை, பி.ப. 12:30 Comments - 0 ராஜபக்ஷக்களின் சர்வாதிகாரத்துக்கு எதிராக, நாட்டு மக்களால் ஜனநாயகத்தைக் காப்பதற்காக முன்னிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேன, இன்றைக்கு ஜனநாயக விரோதியாக, மக்களின் இறைமையைக் கேலிக்குள்ளாக்கிவிட்டு, சர்வாதிகாரத்தின் வேர்களைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார். இலங்கை அரசியல் மோசமான தலைவர்களைப் பதிவு செய்து வைத்திருக்கின்றது. நாட்டில் இன ரீதியான மோதல்களைக் கட்டமைத்துக் கொண்டு, வாக்கு அரசியலில் வெற்றிபெற்று, நாட்டைப் படுகுழிக்குள் தள்ளிய தலைவர்கள் ஏராளம். ஆனால், நாட்டின் முதற்குடிமகனாக சர்வ அதிகாரங்களோடு இருக்கும் ஒருவர், மைத்திரி அளவு…
-
- 0 replies
- 1.1k views
-
-
மைத்திரியின் யாழ். வருகையும் எதிர்வினையும் புறக்கணிப்புகள், சத்தியாக்கிரகங்கள், ஊர்வலங்கள் என்பவற்றை மேற்கொள்வதற்கு என்று சந்தர்ப்பங்கள் உள்ளன. எடுத்ததற்கெல்லாம் அவற்றை செய்யப்போனால், அவற்றுக்குரிய மதிப்பும் பெறுமானமும் குறைந்துவிடும். இந்தப் போராட்டங்கள் அனைத்தும் என்னுடைய ஆட்சியில்தான் நடைபெறுகின்றன. முந்தைய ஆட்சியில் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்றிருந்தால், வெள்ளை வானில் வந்து பிடித்துக் கொண்டு சென்றிருப்பார்கள்”. கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ‘ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்’ நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். வடக்கு மாகாண ஆளுநர் …
-
- 0 replies
- 609 views
-