அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
தேர்தல் மணியோசை மீண்டும் ஒரு தேர்தலுக்கான மணியோசை கேட்கத் தொடங்கியுள்ளது. இந்த மணியோசையில், அரசியல் கட்சிகள் எல்லாம் துடித்துப் பதைத்து எழுந்திருக்கின்றன. எழுந்த கட்சிகள் சும்மா இருக்க முடியுமா? அதுவும் தேர்தல் என்ற பிறகு? ஆகவே, எல்லாம் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன. இரவு பகலாக, ஓய்வு ஒழிச்சலின்றி, தேர்தலுக்கான ஆயத்த வேலைகளில் இறங்கியுள்ளன. கூட்டணி அமைப்பது, இட ஒதுக்கீடுகளைப் பற்றிப் பேசுவது, வேட்பாளர்களைத் தெரிவு செய்வது, தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் திரட்டுவது, அவர்களை உஷார்ப்படுத்துவது, தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பது, மக்களைக் கவரக்கூடிய (ஏமாற்றக்கூடிய) தந்திரங்களை எப்படிச் செய்வது என்று திட்டமிடுவது, அதற்கான வார்த்தைகளைத் …
-
- 0 replies
- 763 views
-
-
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை ‘பிள்ளையார் பிடிக்கக் குரங்காகிய நிலை’, ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பானதைப்போல’ என்று சொல்வார்களே, அப்படியானதொரு நிலைக்கு வந்திருக்கிறது தமிழ் மக்களுடைய அரசியல். அதிலும் உள்ளூராட்சித் தேர்தல் நடக்கப்போகிறது என அறிவிக்கப்பட்டதோடு, அது ‘நாறி’யே போய்விட்டது எனலாம். நிலைமைகளை அவதானிப்போர் இதை எளிதாகவே புரிந்து கொள்வர். அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியென்றால், இது சூனிய நிலைதானே. நிச்சயமாக! எந்த நம்பிக்கை வெளிச்சமுமில்லாமல் இருளாகவே நீளும் நிலை என்பது சூனியமே. இந்த நிலைக்குத் தனியே அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மட்டும் கா…
-
- 0 replies
- 810 views
-
-
மஹிந்த இருந்த இடத்திலேயே; ஐ.தே.க தான் சரிந்தது கடந்த சனிக்கிழமை, நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி பெற்ற வெற்றி, மாபெரும் வெற்றியாகக் கருதலாமா? தேர்தல் நடைபெற்ற 340 உள்ளூராட்சி சபைகளில், பொதுஜன பெரமுன 239 சபைகளில் பெரும்பாலான ஆசனங்களைக் கைப்பற்றி இருக்கிறது. ஆனால், அவற்றிலும் பெரும்பாலானவை, கடந்த முறை அவற்றின் பதவிக் காலம் முடியும் வரை மஹிந்தவின் தலைமையிலேயே இயங்கி வந்தன. அந்த வகையில், மஹிந்த, ஏறத்தாழ தம்மிடம் இருந்ததையே கைப்பற்றிக் கொண்டு இருக்கிறார். எனவே, இது மா பெரும் வெற்றியாகக் கருதலாமா என்ற கேள்வி எழுகிறது. …
-
- 0 replies
- 364 views
-
-
சர்வதேச மயமான இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு போர்க்குற்றம் விசாரிக்கப்பட்டுத் தண்டனை பெற, போர் வீரர்கள் சம்மதிப்பார்களா? அரசு அவர்களைப் பயன்படுத்தி விட்டு விசாரணைக்கும் தண்டனைக்கும் கையளிக்க விரும்புமா? போர் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து கைப்பற்றிய இடங்களை மீண்டும் தாரைவார்க்க அவர்கள் இடமளிப்பார்களா? தம்மோடு கலந்துகொள்ளாமல் தீர்வு காண இசைவார்களா எனும் நிலைப்பாடுகளே தற்போது பல்லின தேசிய இணக்கப்பாட்டுத் தீர்வுக்கு முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன. அப்படியானால் போர்க்குற்றத்திலிருந்து போர் வீரர்கள் விலக்கு அளிக்கப்பட்டு அதற்குப் பகரமாக கைப்பற்றிய இடங்களை மீளவும் வழங்கத் தமிழ் …
-
- 0 replies
- 568 views
-
-
விக்னேஸ்வரனின் முதல் சவால் வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், போட்டியிடத் தமக்கு அழைப்பு வராது என்றும், எனவே புதிய கட்சி ஒன்றை உருவாக்கி அல்லது கூட்டணி ஒன்றை உருவாக்கிப் போட்டியிடும் வாய்ப்புகள் இருப்பதாகவும், அறிக்கை ஒன்றை வெளியிட்டு விட்டு, இந்தியாவுக்குச் சென்றிருந்தார் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன். இந்த அறிவிப்புக்காக, பல மாதங்களாக காத்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தமக்குள் சண்டையை ஆரம்பித்து விட்டன. முதலமைச்சரின் அறிக்கை வெளியானதும், கருத்து வெளியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், “முதலமைச்சர்…
-
- 0 replies
- 612 views
-
-
‘பழைய குருடி கதவைத் திறவடி’ நீண்டகாலமாக நாம் பயணித்த ஒரு வழி, இனிமேல் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்து, அைத விட்டுவிட்டு வந்து, மாற்று வழியைத் தேர்ந்தெடுத்த பின்னர், மாற்று வழியை விடப் பழைய வழியே பரவாயில்லை என அங்கலாய்த்து, மீண்டும் பழைய வழியை நோக்கித் திரும்புதலை, ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்று சொல்லலாம். இவ்வாறான மீளத் திரும்புகைகள், அரசியலிலும் எப்போதாவது நடக்கின்றன. அந்த அடிப்படையிலேயே, அரசாங்கம் மீண்டும் பழைய தேர்தல் முறைமையின் கீழ், மாகாணசபைத் தேர்தலை நடாத்த முனைகின்றது. புதிய தேர்தல் முறைமையின் கீழ், மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு ஏதுவாக, எல்லை மீள்நிர்ணய அறிக்கையை,…
-
- 0 replies
- 916 views
-
-
-
- 0 replies
- 790 views
-
-
எதிரணியுடன் எந்தவித ஒப்பந்தத்தையும் செய்து கொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சம்பந்தன் பதிலளித்தார். சம்பந்தன் எம்.பியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவரது பதில்களும் வருமாறு:- கேள்வி: இரு தரப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தையும் நீங்கள் தீவரமாக ஆய்ந்ததாக கூறினீர்கள். மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13 பற்றி குறிப்பிடப்படவில்லை. இது குறித்து உங்களது கருத்து என்ன? பதில்: அதன் உள்ளடக்கம் குறித்து நாம் பார்த்தோம். தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது விடயத்தை எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. கடந்த 10 வருடமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ந…
-
- 0 replies
- 540 views
-
-
கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் ++++++++++++++++++++++++++++++++++++++ “தேர்தலை நடத்துவதன் ஊடாக இலங்கை மக்களின் இறையாண்மை அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அதிகரித்த ஈடுபாட்டின் அவசியத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்”-இது இன்றைய பத்திரிகை செய்தி. இலங்கை மக்களின் (சிங்கள மக்களின்) இறையாண்மையை பாதுகாக்க ஐ.நா.தலையீடு வேண்டுமென சஜித் கேட்கலாம். அதனால், இந்த நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படாது.ஜே.வி.பிக்கெதிரான இராணுவ நடவடிக்கையில் சிங்கள மக்கள் கொல்லப்படுவதற்கெதிராக மனித உரிமையை நிலை நாட்டக்கோரி மகிந்த ஐ.நா.செல்லலாம். அதனால் இலங்கையின் இறைமை,கீர்த்தி? பாதிக்கப்படாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நேர்மையான நீதி விசாரணை வேண்…
-
- 0 replies
- 373 views
- 1 follower
-
-
அரசியற் கைதிகளை முன்வைத்து விவாதிக்கப்பட வேண்டியவை – நிலாந்தன் October 21, 2018 அரசியற் கைதிகளை விடுவிப்பதற்காக கடந்த வெள்ளிக்கு முதல் வெள்ளிக்கிழமை கைதடியில் மாகாணசபைக் கேட்போர் கூடத்தில் நடந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனும் பங்குபற்றினார். அதில் அவர் ஒரு விடயத்தைச் சொன்னார். கைதிகள் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய சில நாட்களில் அங்கு தான் போனதாகவும் அவர்களைக் கண்டு கதைத்தபின் அடுத்தடுத்த நாளே பிரதமரை சந்தித்ததாகவும், கதைத்ததாகவும் சொன்னார். பிரதமர் எல்லாவற்றையும் கேட்டபின் பொறுங்கள் சட்டமா அதிபர், நீதி அமைச்சர் போன்றோரோடு பேசிய பின் முடிவைச் சொல்கிறேன் என்று சொன்னாராம். சித்தார்த்தன் விடாமல் தொடர்ந்து வற்புறுத்தியிருக்கிறார். கைதிகள…
-
- 0 replies
- 365 views
-
-
சீனாவுடனான போர்ப்பயிற்சியை இலங்கை மறைக்க முனைவது ஏன்? கடந்த மாத இறுதியில் சீன - இலங்கைப் படையினருக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்ட போர்ப்பயிற்சிக்கு, சீனா வைத்திருக்கும் பெயர் பட்டுப்பாதை ஒது்துழைப்பு 2015 என்பதாகும். சீனா தனது கனவுத் திட்டமான பட்டுப்பாதை திட்டத்தை செயற்படுத்துவதற்கு பெருமளவு வளங்களை ஒதுக்கி பல்வேறு நாடுகளையும் தன்பக்கம் திருப்பி வருகிறது. அது முற்றிலும் வணிக நோக்கம் கொண்ட திட்டம் என்றே சீனாவினால் கூறப்பட்டு வந்தாலும், அதன் பின்னால் மிகப்பெரிய இராணுவ ஆதிக்க நோக்கம் ஒழிந்து கிட்டப்பதாக பொதுவான விமர்சனங்கள் உள்ளன. இலங்கையும் இந்த கடல்சார் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்து கொள்ள முன்னைய ஆட்சிக்காலத்தில் ஒப்புதல் வழங்கியிருந்தது. ஆனால் புதிய ஆட்சி அமைந்த பின…
-
- 0 replies
- 324 views
-
-
ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும்-சிதைக்கும் முகமாக கனிய மணல் அகழும் நோக்கத்தோடு கரையோரத்தில் ஈடுபடும் திணைக்களங்கள் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருவது அப்பிரதேச மக்களை கவலைகொள்ள வைத்திருக்கிறது. அண்மையில் முல்லைத்தீவு அளம்பில் குருசடி பகுதியில் பல வாகனங்களில் வந்திறங்கிய கனிய மணல் கூட்டுத்தாபன, கடலோர பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், சுற்றுச்சூழல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் நீர்வளங்கல் முகாமைத்துவத்தினர், புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் கரைத்துறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், அப்பகுதி கிராம அலுவலர் ஆகியோர் குறித்த பிரதேசத்தில் கனிய மணல் அகழும் பணிகளை முன்னெடுப்பதற்கு வந்த வேளையில் அங்கு குழ…
-
- 0 replies
- 585 views
- 1 follower
-
-
எதிர்க்கட்சிகளின் ஒன்றிணையும் முயற்சி அரசாங்கத்துக்கு சவாலாக அமையுமா? Veeragathy Thanabalasingham on November 4, 2025 Photo, GETTY IMAGES மிகப் பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட தனியொரு அரசியல் கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மற்றைய கட்சிகள் குறிப்பாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தல்களில் போட்டியிட்ட காலம் ஒன்று இருந்தது. எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க தொடக்கம் அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்க, மகள் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் சுதந்திர கட்சி இருந்த வரை ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான இந்தக் கூட்டணி அரசியல் தொடர்ந்தது. கடந்த நூற்றாண்டில் சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணிகள் வெற்றி …
-
- 0 replies
- 145 views
-
-
அரசின் வாக்குறுதியை நம்பத் தயாரில்லை : விரக்தியின் விளிம்பில் சர்வதேசம்! -கார்வண்ணன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு பிரதான அனுசரணை வழங்கிய நாடுகள், அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறைகளின் மீது நம்பிக்கையில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டன. கடந்தவாரம் தொடங்கிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத்தொடரில், நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்த தமது அறிக்கையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையாரும் அதே கருத்தை தான் வெளியிட்டிருந்தார். இலங்கை தொடர்பாக, புதிய கவனத்தை செலுத்த வேண்டும் என்று அவர் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் கோரியிருந்தார். அதற்குப் பின்னரே, இணை அனுசரணை நாடுகளின் சார்பில் உரையாற்றிய…
-
- 0 replies
- 433 views
-
-
ஈஸ்டர் சந்தேக நபர் விடுதலையும் 2/3 பெரும்பான்மைக்கான முடிச்சுகளும்! -நஜீப் பின் கபூர் Bharati October 12, 2020 ஈஸ்டர் சந்தேக நபர் விடுதலையும் 2/3 பெரும்பான்மைக்கான முடிச்சுகளும்! -நஜீப் பின் கபூர்2020-10-12T08:05:12+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore 0 மைத்திரி, ரணில் அதிகாரிகள் ஆளுக்காள் அதிரடி குற்றச்சாட்டு 0 ரிஷாட் தம்பி விடுதலைக்கும் 20 க்கும் முடிச்சு போடப்படுகிறது 0 பேராயருக்கும் சந்தேகம்! கடும் போக்காளர்கள் அரசு மீது சீற்றம் 0 ஹக்கீம், ரிஷார்ட் வந்தால் உதைத்து விரட்டியடித்து விடுவோம்; – ஒரு எச்சரிக்கை 0 அரசு ஆடைகள் அணிந்து கொண்டா மக்கள் முன் நிற்கின்றது? – பிக்கு கேள்வி நஜீப் ப…
-
- 0 replies
- 519 views
-
-
வடக்கிலும் தெற்கிலும் அதிகாரப் போட்டிகளே தீர்வுக்கு முட்டுக்கட்டை அரசாங்கத்தின் பிரதான பங்காளிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பனிப்போர், வெளியில் தெரியும் அளவுக்கு உக்கிரமடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. அது, எந்த அளவுக்கு என்றால் கட்சித் தலைவர்களிடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெறும் அளவுக்கு நிலைமைகள் மோசமாகியுள்ளன. இரு கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்குத் தீர்வு காணும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிற…
-
- 0 replies
- 390 views
-
-
புலிகளையும் – அரசாங்கத்தையும்ஒரே தராசில் சமப்படுத்த முனைகிறாரா அம்பிகா.? தமிழ் மக்களையும் – இலங்கை அரசையும் பொறுத்துவரை அடுத்து வரும் நாட்கள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. ஜெனிவாவில் நடந்துவரும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் – தமக்கு இழைக்கப்பட்ட குற்றங்கள் – இன்னல்களுக்கு நீதி கிடைத்து விடாதா? என்ற எதிர்பார்ப்புடன் தமிழ் மக்களும் – தமிழர்களுக்கு இழைத்த குற்றங்களில் இருந்து தப்புவதற்கு தாம் நகர்த்திய இராஜதந்திர காய்கள் வெற்றியை தந்து விடதா? என்ற அங்கலாய்ப்புடன் இலங்கை அரசும் உள்ளன. இந்த வேளையில் தனது நிறைவேறாத அரசியல் கனவின் காழ்ப்புணர்வை 15 சுட்டுரை (twitter) பதிவுகள் மூலம் தீர்த்துள்ளார் திருமதி அம்பிகா சற்குணநாதன். திருமதி அம்பிகா சற்குணநாதனுக்கு அதி…
-
- 0 replies
- 569 views
-
-
அம்பிகையின் போராட்டம் இனி நம் கையில் - கவிஞர் தீபச்செல்வன் இந்த உலகில் மனிதாபிமானம் குறித்து எந்த பிரக்ஞையும் இல்லாத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது பெருத்த அச்சத்தையே தருகின்றது. உண்மையில் 2009ஆம் ஆண்டில் இந்த உலகின் கண்களுக்கு முன்பாக ஈழத் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட போது, அந்த இனப்படுகொலையை நிகழ்த்திய ஸ்ரீலங்கா அரசின் இனஒடுக்குமுறை வன்மத்தை மாத்திரம் நாம் எதிர்கொள்ளவில்லை. மாறாக, இந்த உலகில் மனிதாபிமானம் செத்துவிட்டது என்பதையும் நாம் உணரத் தலைப்பட்டுள்ளோம். கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது அதனை தடுத்து நிறுத்தாத இவ் உலகம் எப்படியானது? அதன் தொடர்ச்சியைத்தான் நாம் இன்னமும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஈழத் தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட…
-
- 0 replies
- 434 views
-
-
இறைமைக்கு ஆபத்து பூகோள அரசியலில் அண்மைக்காலத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நிகழ்ந்த வண்ணமுமிருக்கின்றன. எதிர்காலத்தில் நிகழவும் இருக்கின்றன. இவ்வாறிருக்கையில் இந்துமா சமுத்திரம் முதல் வல்லரசுகளின் கடற்பரப்புக்களில் அடுத்தடுத்து யுத்தப்பயிற்சிகளும் ஒத்திகைகளும் இடம்பெற்றவண்ணமிருக்கின்றன. இத்தகையதொரு சூழமைவில் உலக அமைதியை நிலைபெறச்செய்வதனையே பிரதான இலக்காக கொண்டு செயற்படும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ். ஐரோப்பிய கண்டத்தினுள் தீவிரமடைந்து வரும் முறுகல்கள் குறித்து தனது கரிசனையை குறிப்பிட்டு வெளியிட்ட அறிக்கையில், …
-
- 0 replies
- 469 views
-
-
-
- 0 replies
- 632 views
-
-
புதிய யாப்புக்கு என்ன தடைகள்? புதிய யாப்புக்கான முன்மொழிவுகளில் காணும் தவறான அபிப்பிராயங்களைப் போக்க சர்வகட்சி மாநாடு உள்ளிட்ட மூன்று படிமுறைகளை அமுல்படுத்தப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார். இவற்றுக்கு காலவரையறை எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இவற்றால் தீர்வு கிடைக்குமா? இவற்றாலும் தீர்வு அமையாவிட்டால் என்ன செய்வது? இருக்கும் பிரச்சினையை மேலும் தூண்டிவிடுமா? விரைவில் உள்ளூராட்சித் தேர்தல் நிகழவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் புதிய யாப்பு விவகாரமும் நாடெங்கும் முழங்கும். இதில் அமையும் பெறுபேறுகள் அரசின் இருப்பை நாடி பிடித்துப் பார்க…
-
- 0 replies
- 315 views
-
-
அரசியலில் சாணக்கியம் எனும் வியூகம் தேவை வர்த்தகமோ, குடும்ப விவகாரமோ, யுத்தகளமோ, விளையாட்டோ, கைத்தொழிலோ, விவசாயமோ எதுவாயினும் அதில் சாதனை புரிய வேண்டுமாயின் மதிநுட்பம் தேவை. இதையே “வீரம் விலை போகாது விவேகம் துணைக்கு வராவிட்டால்” என்பார்கள். இவை போன்றே அரசியலிலும் சாணக்கியம் எனும் வியூகம் அவசியமாகும். 1957 ஆம் ஆண்டு பண்டா – செல்வா ஒப்பந்தம் நிறைவேறாவிட்டாலும் கூட ஒப்பந்தத்தின் அளவுக்கு தந்தை செல்வா கொண்டுவந்திருந்தார். இது அரசியல் வியூகமாகும்.1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவின் பேரின யாப்பு இருந்தும் கூட அந்த யாப்பின் கீழ் நிகழ்ந்த பொதுத்தேர்தலில் 1977 ஆம் ஆண்டு சுயநிர்ணய தனி இறைமைக் கோரிக்கைக்கு வடக்கு,…
-
- 0 replies
- 862 views
-
-
இடைக்கால, ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பும்... "சிஸ்ரம் சேஞ்சும்" – நிலாந்தன். இடைக்கால ஜனாதிபதியைத் தெரிவதற்காக, இருபதாம் தேதி, நாடாளுமன்றத்தில் நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில், ஐந்துக்கு மேற்பட்ட முனைப் போட்டிக்கு இடம் உண்டு என்று தெரிகிறது. ரணில் சஜித் இருவரையும் தவிர, டலஸ் அழகப் பெரும,சரத் பொன்சேகா,அனுரகுமர,அனுரா பிரியதர்சன யாப்பா போன்றவர்களும் போட்டியிடுவதில் நாட்டத்தோடு காணப்படுகிறார்கள். சம்பிக்க ரணவக்கவிற்கும் அந்த ஆசை இருப்பதாக கருதப்படுகிறது ரணிலை பொதுஜன பெரமுன ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். ராஜபக்சக்களை அவர் பாதுகாக்கிறார்.எனவே ரணிலை ராஜபக்சக்கள் பாதுகாப்பார்கள். அந்த அடிப்படையில் பொதுஜன பெரமுனவின் வாக்குகள் ரணிலுக்கு கிடைக்கும். ஆனால் இங்கே உள்ள பிரச்ச…
-
- 0 replies
- 273 views
-
-
மார்க்சியம் என்றால் என்ன? _ தோழர் தியாகு
-
- 0 replies
- 2.6k views
-
-
சமகால சவால் இலங்கையர் என்ற அடையாளத்தின் கீழ் வாழும் அனைவரையும் ஒன்றிணைப்பதன் மூலம் நிலையான அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அம்முயற்சிகள் சவாலுக்குட்படுத்தப்படுவதை காண முடிகிறது. மாறாத மாற்றத்துடன் கட்சி அரசியலும், இன, மத சித்தாந்தங்களும் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு அவை முக்கியத்துவம் பெறுவதனால் நல்லிணக்கம் என்பது எட்டாக்கனியாகவுள்ளது. பெரும்பான்மை என்ற மேலாதிக்க சிந்தனை இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை உருவாக்குவதோடு, அடக்கு முறைக்கும் வழிவகுப்பது மாத்திரமின்றி, பழிதீர்க்கும் படலத்தையும் அரங்கேற்றி வர…
-
- 0 replies
- 670 views
-