அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9268 topics in this forum
-
நடந்து முடிந்த நாட்டின் 8ஆவது ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் பல செய்திகளை உலகுக்கு எடுத்துக்கூறியுள்ளது. 16.11.2019இல்இடம்பெற்ற 8ஆவது ஜனாதிபதித்தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ 52.25வீத வாக்குகளைப்பெற்று ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 41.99வீத வாக்குகளைப்பெற்ற புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியைத்தழுவியுள்ளார். இம்முறை 50வீத வாக்குகளை யாரும் பெறமாட்டார்கள். எனவே 2ஆம், 3ஆம் விருப்பு வாக்குகள் எண்ணவேண்டிவரும் என்றெல்லாம் கூறப்பட்டன. அதனைப்பொய்யாக்கி 52.25வீத வாக்குகளைப்பெற முடிந்ததற்கு பல்வேறு வகையான யுக்திகள் பயன்பட்டன எனலாம். …
-
- 0 replies
- 315 views
-
-
யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து புதிய அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்; அரசியல் தலைவர்கள் கூட வெளிநாடு செல்ல முடியாத நிலையேற்படும் - இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்காவிட்டால் அரசியல் தலைவர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலையேற்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அனுரமத்தேகொட தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கேள்வி ; ஒவ்வொரு வருடமும் இலங்கை ஜெனீவாவில் யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றது-ஐக்கிய நாடுகளின் ஹேக் தீர்ப்பாயத்தில் பணியாற்றியவர் என்ற அடிப்படையில் பிரச்சினைக்கு …
-
- 0 replies
- 315 views
- 1 follower
-
-
தமிழர்களின் பிரச்சினைக்கு உலகளாவிய ரீதியில் பேசலாம் என்ற நிலைக்கு தமிழர்கள் மாறியிருப்பது முன்னேற்றகரமானதொன்று – இராமு.மணிவண்ணன் 100 Views சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொதுநிர்வாகத் துறை தலைவர் பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் ஐ.நா. கூட்டத்தொடரில் தமிழரின் நிலைப்பாடு குறித்து ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் வடிவம் கேள்வி இன்று இலங்கை, இந்தியா, இந்தோபசுபிக் பிராந்தியம், மற்றும் உலகளவில் நிலவும் அரசியல், பொருளாதார தந்திரோபாய நகர்வுகளையும், ஐ.நா உட்பட பன்னாட்டு நிறுவனங்களின் நிலைப்பாடுகளையும் தமிழினம் எவ்வாறு தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்? பதில் இன…
-
- 0 replies
- 314 views
-
-
இலங்கை கச்சத்தீவும் ஸ்டாலின் கருத்தும்: "தவித்த முயலை அடிப்பது போல ஆதாயம் தேடுகிறதா இந்தியா?" யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,INDIA IN SRI LANKA/TWITTER 'இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை, இந்தியா தனது நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருவதாக எழும் குற்றச்சாட்டு, இலங்கையில் பல்வேறு தரப்பினராலும் மிகப் பெரிய அளவில் முன்வைக்கப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை? ஏன் இந்த திடீர் சந்தேகம்? 'தவித்த முயலை அடிப்பது போல' இலங்கை விவகாரத்தில் இந்தியா நடந்து கொள்வதாக பலரும் இங்கே குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, …
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
கோரிக்கைகளை முன்கொண்டு செல்வதில் தலைமைகளின் சிந்தனை மாறுமா? - க. அகரன் சிறுபான்மை இனத்தின் உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் பெரும்பான்மை இனத்தால் அல்லது அது சார்ந்த அரசாங்கத்தால் நிறைவேற்றப்படாத நிலையிலும் மறுக்கட்ட நிலையிலும் போராட்ட வடிவங்கள் உருப்பெறுகின்றன. இந்த வகையிலேயே இலங்கைத்தீவில் பன்நெடுங்காலமாகத் தமிழர் என்ற சிறுபான்மை இனத்தின் தேவைகளும் நிறைவு காண் தன்மைக்கு இட்டுச்செல்லப்படாமையால் பல்வேறு வடிவங்களிலான போராட்டங்கள் நடந்தேறியிருந்தன. தற்போதும் நடந்தேறி வருகின்றது. இவ்வாறான நிலையில் சிறுபான்மையினரான மக்கள் சமூகத்துக்கு, தான் சார்ந்த அரசியல் தலைமைகளின் தேவைப்பாடுகள் அதிகமாகக் காணப்படும். ஆயினும், அந…
-
- 0 replies
- 314 views
-
-
ஏன் இவ் வரைபை இந்தியாவிடம் கொடுக்க இப்போது அவசரம் காட்டுகிறார்கள் என்பது புரியவில்லை? – சுமந்திரன் இணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்புவதற்காக தமிழ் கட்சிகள் தயாரிக்கப்பட்டுள்ள வரைபை இந்தியாவிடம் கொடுக்க இப்போது ஏன் அவசரம் காட்டப்படுகிறது என்பது குறித்து தன்ககு எதுவும் தெரியாதென்றும், இவ்விடயம் தொடர்பில் தனக்கு பல கேள்விகள் இருப்பதாகவும் த.தே.கூட்டமைப்பின் பா.மன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலை எண்ணைக்குதம், இலங்கையின் மேற்கு முனையும இந்தியாவிற்கு கொடுப்பதாக செய்திகள் வருகின்ற இப்படியான நேரந்தில் இந்தியாவுக்கு 13 ஆம் திருத்தம் தொடர்பில் அவசரமாக ஒரு கடிதம் கொடுக்கப்பட …
-
- 0 replies
- 314 views
-
-
மக்கள் எழுச்சிக்குப் பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்
-
- 0 replies
- 314 views
-
-
-ஐ.வி.மகாசேனன்- “நாம் வரலாற்றை மாற்ற முடியும். ஆனால் புவியியலை மாற்ற முடியாது. நம் நண்பர்களை மாற்ற முடியும். ஆனால் நம் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது” -அடல் பிஹாரி வாஜ்பாய்- இலங்கை அரசியலிலும், ஈழத்தமிழரசியலிலும் இந்தியா தவிர்க்க முடியாததொரு காரணியாகும். தனிப்பட்ட விருப்பு – வெறுப்புக்கள் ஒவ்வொருவரிடமும் காணப்படினும், பிராந்திய அரசாக இந்தியாவின் தாக்கம் இலங்கை அரசியலிலும் ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்திலும் ஆழமான கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் பின்னணியிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இலங்கைக்கான விஜயம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. எனினும் இந்தியப் பிரதமரின் விஜயம் வரலாற்றை திசைதிருப்பியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக இலங்கை -இந்திய பண்பாட்டு உறவ…
-
- 1 reply
- 314 views
- 1 follower
-
-
இலங்கை முதல் முறையாக கடன் கட்ட முடியாத நிலைக்கு சென்றது பீட்டர் ஹாஸ்கின்ஸ் வணிகத் துறை செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மோசமான பொருளாதார சிக்கலில் மாட்டியிருக்கும் இலங்கை, வரலாற்றில் முதல் முறையாக தான் கட்டவேண்டிய கடனுக்கான வட்டித் தவணையை கட்டத் தவறியுள்ளது. 78 மில்லியன் டாலர் அளவுக்கு இலங்கை செலுத்தவேண்டிய கடன் வட்டித் தவணையை செலுத்துவதற்கான 1 மாத சலுகைக் காலமும் முடிந்த நிலையில், புதன்கிழமை தவணை தவறியுள்ளது இலங்கை. உலகின் இரண்டு பெரிய கடன் தர மதிப்பீட்டு நிறுவனங்களும் இலங்கை தவணை தவறியதாக அறிவித்தன. கடனாளர்களுக்கு முழு தவ…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
ஈழத்தமிழர்களுக்கு இன அழிப்புநிலை! காப்பாற்றும் பொறுப்பில் புலம்பதிந்த தமிழர் 134 Views இலங்கைத் தீவில் வாழும் ஈழத்தமிழர்களை தேவையேற்படின் சிறீலங்கா அரச அதிபர் கோத்தபாய இராஜபக்ச ஹிட்லரைப்போல் இன அழிப்புச் செய்வார் என்னும் தகவலைச் சிறீலங்காவின் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பகிரங்கமாகவே வெளியிட்டுள்ளார். சிறீலங்கா அதிபர் ஒரு சர்வாதிகாரியாகச் செயற்படுவார் என எதிர்பார்த்தே மக்கள் அரச அதிபர் கோத்தபாய இராஜபக்சவிற்கு வாக்களித்தார்கள் எனவும், ஆனால் இன்று அவரது அரசாங்கத்தின் செயற்பாட்டின்மைக்காக மக்கள் அவரைக் குற்றம் சாட்டுகின்றார்கள் எனவும், ஜனாதிபதி ஒரு ஹிட்லர் போல செயற்பட்டால், எவரும் குறைகூற மாட்டார்…
-
- 0 replies
- 314 views
-
-
வேலையற்ற பட்டதாரிகளும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன். வேலை தேடும் பட்டதாரிகள்,ஜனாதிபதியின் வருகையையொட்டி, யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகே ஓர் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தார்கள்.போலீசார் அவர்களை கச்சேரியை நோக்கி வர விடவில்லை.அவர்களை கண்டி வீதியில்,கச்சேரிக்கு அருகே அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலைய சூழலில் வைத்து மறித்து விட்டார்கள். அதேசமயம் ஜனாதிபதி அவர்களுடைய கண்ணில் படாமல் பழைய பூங்கா வீதி வழியாக வெளியேறிச் சென்று விட்டார்.பட்டதாரிகள் தங்களுடைய முறைப்பாட்டை ஜனாதிபதியிடம் கையளிக்க முடியவில்லை. தமிழ்ப்பகுதிகளில் மட்டும் 3000த்துக்கும் குறையாத பட்டதாரிகள் நிரந்தர வேலையின்றி இருக்கிறார்கள். நாடு முழுவதும் சுமார் 30,000 பட்டதாரிகள் அவ்வாறு உண்டு என்று ஒரு பட்…
-
- 0 replies
- 314 views
-
-
ஜெனீவா கூட்டத் தொடர் – வாய்ப்புக்களை தமிழ்த் தரப்புக்கள் எப்படிப் பயன்படுத்தப் போகின்றன? ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. அதனை கையாள்வதில் தமிழ்க் கட்சிகளிடையே ஒருமைப்பாடு ஏற்படுவதற்குப்பதிலாக முரண்பாடுகள் மேலோங்கிவருவதாகவே தெரிகின்றது. தமிழ்க் கட்சிகளிடையே கடந்த ஒரு வாரகாலமாக இடம்பெற்றுவரும் நகர்வுகள் இதனைத்தான் வெளிப்படுத்துகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகபோகத்தை உடைத்து, கஜேந்திரகுமார் அணி, விக்கினேஸ்வரன் அணி என்பன பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் ஜெனீவாவை ஒற்றுமையாக அணுக வேண்டும் என தமிழ் மக்கள்…
-
- 0 replies
- 314 views
-
-
ஊழல் என்பது இலங்கை அரசியலில் புற்றுநோயாக மாறியுள்ளது - கலாநிதி ஜயதேவ உயன்கொட By NANTHINI 15 DEC, 2022 | 10:51 AM (ஆர்.ராம்) இலங்கையின் அரசியலில் ஊழல் புற்றுநோயாக உருவெடுத்துள்ளதோடு, அது ஜனநாயக கட்டமைப்புக்களையும் வெகுவாக தாக்கியுள்ளது என்று கலாநிதி ஜயதேவ உயன்கொட தெரிவித்தார். இலங்கையில் ஊழலுக்கு எதிராக போராடி வரும் ட்ரான்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா அமைப்பின் இரு தசாப்த நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஊழலுக்கு எதிரான தேசிய மாநாடு நேற்று புதன்கிழமை (டிச. 14) கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் ம…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
மாவீரர் தினத்தை முன்னிறுத்திய தரப்படுத்தலும் கருத்தியலும் மேடைப் பேச்சுகளும் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இம்முறை மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கிப் பெருவாரியாக மக்கள் திரண்டார்கள். வடக்கு - கிழக்கிலுள்ள 30க்கும் அதிகமான மாவீரர் துயிலும் இல்லங்களில், அஞ்சலிச் சுடர் ஏற்றப்பட்டது. கடந்த காலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவம் உருத்தெரியாமல் இடித்து, அழித்த போதும், அந்தச் சிதைவுகளை ஒன்றாக்கி, மாவீரர்களின் அர்ப்பணிப்பை, ஆகுதியின் பெரும் வடிவமாக மக்கள் மாற்றிக் காட்டினார்கள். அலுவலகங்களுக்குள் மட்டும், மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்திய, அரசியல் கட்சியினரும் அமைப்புகளும் கூட, மக்களோடு மக்கள…
-
- 0 replies
- 314 views
-
-
வாக்காளருக்கு அபராதம் அவசியம் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியரி ஜீ.எல்.பீரிஸ் தவிசாளராக இருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இயங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, வேட்பாளராக நிறுத்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு, பின்னர் அந்த வாய்ப்பு வழங்கப்படாத ஒருவர், விம்மி அழும் காட்சியை, கடந்த வாரம் தொலைக்காட்சியில் காணக் கூடியதாக இருந்தது. அதேபோல், தமது கட்சி, தமக்குத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்காததை எதிர்த்து, ‘சத்தியாக்கிரகம்’ செய்ய முற்பட்ட ஒரு பெண்ணை வாக்கு மூலம் பெறுவதற்கென, பொலிஸார் அழைத்துச் செல்லும் காட்சியும் மற்றொரு செய்தியின் போது காணக்கூ…
-
- 0 replies
- 314 views
-
-
அரசியலமைப்பை மீறிய குற்றவாளிகளின் கூடாரமாக மாறிடுமோ நாடு……? – பி.மாணிக்கவாசகம் 76 Views அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகியவர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு நாடாளுமன்ற விவாதத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கின்றது. இந்த விவாதங்களில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்த ஆணைக்குழுவையும், அதன் பரிந்துரைகளையும் நார் நாராகக் கிழித்துத் தள்ளி இருக்கின்றார்கள். அந்த ஆணைக்குழுவின் நியமனம் குறித்த சட்டவலுவும் கூட கடுமயான சட்டரீதியான விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றது. ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழு நாட…
-
- 0 replies
- 313 views
-
-
அவசரகால நிலைமை பிரகடனத்தின் இலக்கு பொருளாதாரமா, வாழ்வாதாரமா? லக்ஸ்மன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகையில் பிரகடனப்படுத்து வதற்கானதாகவே அவசரகால நிலைமைப்பிரகடனத்தைக் கொள்ளலாம். ஆனால், நமது நாட்டில் அதலபாதாளத்தில் வீழ்ந்திருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிமிர்த்துவதற்காக இது பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை , கடந்த சில மாதங்களாகவே வெகுவாக அதிகரித்து வருகின்ற பின்னணியில், அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் விலை உயர்வால் நாட்டு மக்கள் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். சீனி, பால்மா, அரிசி, கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ச்சியாகவே தட்டுப்பாடு…
-
- 0 replies
- 313 views
-
-
அதிகரிக்கும் வன்முறைகள் – பி.மாணிக்கவாசகம் நாட்டில் வன்முறைகளும், காடைத்தனங்களும், அடாவடியான செயற்பாடுகளும் அதிகரித்திருப்பதாகப் பலரும் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, சாதாரண மக்களுடைய நாளாந்த பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதே, இதற்குக் காரணம். சாதாரண குடிமக்கள் மட்டுமல்லாமல், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற பொலிசாரின் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றதே என்ற ஒரு குரலும் எழுந்திருக்கின்றது. நல்லாட்சி புரிகின்ற அரசாங்கத்தின் கீழ் இத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்கின்றதா என்ற ஏக்கம் கலந்த கேள்வி வியப்போடு வினவப்படுகின்றது. சட்டம் ஒழுங்கு சீராக நடைமுறைப்படுத்தப்ப…
-
- 0 replies
- 313 views
-
-
தமிழ்த் தேசிய அரசியலை மக்கள் மயப்படுத்துவது – நிலாந்தன். கடந்த ஞாயிறுக் கிழமை, குமார் பொன்னம்பலத்தின் 25ஆவது நினைவு நாள் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் திருமறைக் கலா மன்ற,கலைத்தூது மண்டபத்தில் நடந்த அந்நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் நினைவுப் பேருரை ஆற்றினார். ரகுராம் தெளிவான துணிச்சலான நிலைப்பாடுகளை முன்வைத்துப் பேசினார். “எக்கிய ராஜ்ய” என்று அழைக்கப்படுகின்ற தீர்வு முன்மொழிவை ஏன் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை அவர் முன் வைத்தார்.தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக குறிப்பாக ஆயுதப் போராட்டத்தின் கோரிக்கைகள் தொடர்பாகத் தெளிவான முடிவுகளை எடுத்து அதில் பேசினார். ஒரு கட்சி மேடையில், நிகழ்த்தப்பட்ட நி…
-
- 0 replies
- 313 views
-
-
நாங்களும் விதைக்கப் பட்டவர்களே-பா.உதயன் They tried to bury us. They didn’t know we were seeds.” அவர்கள் எங்களை புதைக்க நினைத்தார்கள் ஆனால் நாங்கள் விதைகள் என்று அவர்களுக்குத் தெரியாது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமாரா திசநாயக்கா சொன்ன முதல் வாக்கியம் இது. எந்த இனமாக இருந்தாலும் அந்த இனத்தின் விடுதலைக்காக போராடும் விடுதலைப் போராளிகளை ஆட்சியாளர்களும் அடக்குமுறையாளரும் கொன்று புதைக்கலாம் என்று தான் நினைகிறார்கள் ஆனால் அவர்கள் புதைக்க நினைப்பதெல்லாம் விதை என்பதை மறந்து விடுகிறார்கள். ஒரு காலம் பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் இன்னொரு காலம் விடுதலைப் போராளிகளே. உங்களைப் போலவே ஒரு காலம் மாற்றம் வேண்டியும், சம நீதி வேண்டியும், எமக்க…
-
- 0 replies
- 313 views
-
-
மாவீரர் நாள் ஆட்சியாளர்களுக்கு சொல்லியிருக்கும் செய்தி என்ன? நடராஜ ஜனகன் இயற்கை அனர்த்தத்தால் நாடு வழமை நிலையை தொலைத்துவிட்ட நிலை காணப்படுகிறது. கிட்டத்தட்ட நாட்டின் 21 மாவட்டங்கள் வெள்ள அழிவுக்கு உள்ளாகியுள்ளது. வடக்கு, கிழக்கை பொறுத்தவரையில் அங்குள்ள அனைத்து மாவட்டங்களும் தற்போதைய சீரற்ற கால நிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. 2008 ல் அழிவை ஏற்படுத்திய லீசா புயலின் பின்னர் இத்தகைய அனர்த்தம் வடக்கு, கிழக்கில் இடம்பெற்றுள்ளது.மறுபுறத்தில் வடக்கு, கிழக்கு முழுவதும் மாவீரர்கள் நினைவு தினம் உணர்ச்சிபூர்வமாக மக்களால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்தத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கில் கொட்டும் மழையையும் வெள்ள அபாயத்தையும் பொருட்படுத்தாம…
-
- 0 replies
- 313 views
-
-
தமிழ், முஸ்லிம், மலையகச் சமூகங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் தோல்வி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரச ஆதரவைக் கொண்டிருக்கும் முஸ்லிம், மலையகக் கட்சிகளும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. அரசாங்கத்தின் போதாமைகளைச் சுட்டிக்காட்ட முடியாமலும் தாமதமான அல்லது பாராமுகமான நடவடிக்கைகளை எதிர்க்க முடியாமலும் தத்தளிக்கும் இரண்டும் கெட்டான் நெருக்கடி நிலைக்குள், இவை இன்று தள்ளப்பட்டிருக்கின்றன. அதாவது ‘உள்ளே இருக்கவும் முடியாது, வெளியேறிச் செல்லவும் முடியாது” என்ற பெரும் பொறிக்குள் சிக்கியிருக்கின்றன. இந்த நிலையானது, ஒரு வகையில் இந்தக் கட்சிகளுக்கும் தமிழ், முஸ்…
-
- 0 replies
- 313 views
-
-
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் எழுதிய “சட்டத்தின் ஆட்சி” என்ற நூல் சொல்லும் செய்தி! *** *** *** *மேற்கு - ஐரோப்பிய அரசியல் கோட்பாடுகளை விட, சீன அரசியல் கோட்பாடுகள் மேலெழும் சூழல்... *ஜனநாயகம் - யதார்த்த அரசியல் - என்ற ஏமாற்றை விடவும் சீன ஜனநாயகம் மேல் என்ற உணர்வு... ** *** ****** மேற்கு நாடுகள் எழுதி வைத்த ”ஜனநாயக கோட்பாடு”, ”சட்டத்தின் ஆட்சி” ”அரச இறைமைக் கோட்பாடு என்பற்கு மாறாக கம்யூனிஸ்ட் கொள்கையை பின்பற்றி வரும் சீனா, இன்று உலகத்துக்குப் பெரும் சவலாக மாறியுள்ளது. ”நான் சொல்வதை நீ செய்” என்ற அதிகாரத் தேரணையில் இயங்கும் அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளுக்கும், ”ஜனநாயகம்” - ”சட்ட ஆட்சி” என்றால் என்ன என்பதை, சீனா காண்பித்துள்ளது. இப்போது அதனை நூலாக வெளியிடுவதன் ஊடாக, எதி…
-
-
- 3 replies
- 312 views
- 1 follower
-
-
அரசாங்கம் எதிர்நோக்கும் நெருக்கடி முன்னைய ஆட்சியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து வன்செயல்களில் ஈடுபட்டிருந்த பௌத்தவாத கடும்போக்காளர்களின் மதவாதச் செயற்பாடுகளை இந்த அரசாங்கமும் ஊக்குவிக்கின்றதோ என்று சந்தேகப்படும் அளவில் பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. அந்த அமைப்பைப் பின்பற்றி வேறு சுமணரத்ன தேரர் போன்ற சில பௌத்த மதகுருமார்களும் மதவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதை அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருப்பது முஸ்லிம் மக்களை அதிருப்தியடையவும், ஆத்திரமடையவும் செய்திருக்கின்றது. இதனால் முஸ்லிம் மக்களும் இந்த அரசாங்கத்தைச் சந்தேகத்தோடு நோக்…
-
- 0 replies
- 312 views
-
-
நல்லாட்சி சவாரியில் டக்ளஸும் தொண்டமானும் புருஜோத்தமன் தங்கமயில் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை, எதிர்வரும் நாட்களில் மேலும் விரிவுபடுத்தப்படலாம் என்று பேச்சு நிலவுகின்றது. இதன்போது, முன்னாள் அமைச்சர்களான, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானும் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில், சிறுபான்மைக் கட்சிகள், பெரும்பாலும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்த போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்த சிறுபான்மைக் கட்சிகளில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் (ஈ.பி.டி.பி), இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும…
-
- 0 replies
- 312 views
-