அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9268 topics in this forum
-
15 AUG, 2025 | 03:40 PM டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சூதறியாத அவரின் அயலவர் ஒருவரின் வீட்டுக்குள் மறைந்திருந்து விடுதலை புலிகள் நடத்திய சினைப்பர் தாக்குதலில் 2005 ஆகஸ்ட் 12 ஆம் திகதி கொல்லப்பட்டார். தனது வீட்டில் உள்ள நீச்சல் தட்கத்தில் வழமையான 1000 மீட்டர்கள் நீச்சலை அவர் முடித்துக்கொண்டு வெளியேறியபோது கொலைஞர் தாக்குதலை நடத்தினார். விதிவசமான அந்த தினத்துக்கு பிறகு இரு தசாப்தங்கள் கடந்து விட்டன. ஆனால், அவர் பற்றிய நினைவுகள் இன்னமும் நீடிக்கின்றன. இலங்கையின் தலைசிறந்த வெளியுறவு அமைச்சர் என்று பலராலும் கருதப்பட்ட அந்த மனிதரின் 20 வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்த கட்டுரை எழுதப்படுகிறது. அவரது ஒரேயொரு மகள் அஜிதா தனது தந்த…
-
-
- 1 reply
- 308 views
- 1 follower
-
-
ஆணைக்குழுக்கள் - பரிந்துரைகள்: தீர்வுக்காக எங்கும் தமிழ் மக்கள் -லக்ஸ்மன் புத்தரை இன்னமும் தங்களது வீடுகளில் வைத்திருப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் ஏதோ ஒருவகையில் வயது கடந்தவர்கள். அவ்வாறு புத்தரை மதித்தவர்களுக்குப்பிறகு இப்போது புத்தரை ஓர் அவமானப் பொருளாகப்பார்க்கின்ற நிலைமையே தமிழர்களிடம் உருவாகியிருக்கிறது. அதற்குக் காரணம் சிங்களப் பெரும்பான்மையினரால் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவந்த செயற்பாடுகளேயாகும். யுத்தம், யுத்தகாலம், யுத்த இழப்புகள், யுத்தக் கொடுமைகள், இன்னல்கள் என்ற வரிசையுடன் கடந்த 40 வருடகாலம் அதற்கு இறுக்கமான காரணமாக அமைந்தன. சுதந்திரத்துக்குப்பின்னரான மொத்த வருடத்தை இதில் கணக்கில் கொள்ளாமலிருப்போம். இலங்கையில் ஒவ்வொன்றுக்கும் …
-
- 0 replies
- 308 views
-
-
”வடக்கு மாகாணத்தில் மட்டும் “தமிழ்த் தேசிய” அணிகளின் ஆசனங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. அதற்கு “உள்வீட்டு” சண்டையால் ஏற்பட்ட வாக்குச் சிதைவே முக்கிய காரணமே தவிர, “தமிழ்த் தேசிய” வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவு அல்ல. அநுரவுக்கு ஆதரவான வாக்குகள் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான வாக்குகளாக பார்க்கப்படுவது வெறும் மாயத்தோற்றமே" ஜெ.பி. கடந்த முறையை விட இம்முறை 36 ஆயிரம் வாக்குகள் குறைவாக அளிக்கப்பட்டுள்ளன. எல்லா மாவட்டங்களிலும் கடந்த முறையை விட இம்முறை சற்றுக் குறைந்தளவே வாக்குப்பதிவு நடந்ததது (2020: 76% -2024: 69%). இதனால் யாழ்.மாவட்டத்தில் ‘தமிழ்த் தேசிய’ கட்சிகளுக்கு தனியான தாக்கம் ஏற்பட்டதாக கருதமுடியாது. ஜனாதிபதித் தேர்தலை ஒட்டியும் வெற்றியின் பின்னரும் தே…
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
ஆவா குழுவும் இராணுவமும் வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரைக் குறைக்க வேண்டும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் தடையாக உள்ள இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. ஆயினும், இராணுவத்தைக் குறைப்பதற்கும், இராணுவத்தின் பிடியில் உள்ள பொதுமக்களின் காணிகளைக் கைவிடுவதற்கும் முன்னைய அரசாங்கம் விரும்பியிருக்கவில்லை. வடக்கில் இருந்து இராணுவம் குறைக்கப்படமாட்டாது. இராணுவத்தினர் தேசிய பாதுகாப்புக்காகவே வடக்கில் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே, அவர்கள் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படமாட்டாது என்று அந்த அரசாங்கம் பிடிவாதமானதொரு போக…
-
- 0 replies
- 308 views
-
-
தமிழரசு கட்சிக்குள் தேர்தலைத் தவிர்க்க வாய்ப்புகள் உண்டா? நிலாந்தன். தேர்தல் என்று வந்தால் கட்சி அரசியலில் ஜனநாயக பண்பு அதிகரிக்கும். கட்சிகள் தங்களுடைய கீழ்மட்ட, மேல்மட்டக் கட்டமைப்புகளைச் சீர் செய்து, மக்களை நோக்கிச் செல்லும். குருட்டு விசுவாசமும் சாதியும் சமயமும் அதில் செல்வாக்கு செலுத்தும் என்பது உண்மைதான்.என்றாலும் வாக்காளர்களில் தங்கியிருக்கும் ஒரு போக்கு எனப்படுவது, கட்சி அரசியலைப் பொறுத்தவரை ஜனநாயகமானது. அந்த வாக்காளர்கள் விமர்சன பூர்வமாகச் சிந்திக்கும் வாக்காளர்களா இல்லையா என்பதுதான் இங்குள்ள பிரதான கேள்வி. தமிழரசுக் கட்சிக்குள் தலைமைப் பீடத்துக்கான தேர்தல் எனப்படுவது அவ்வாறு கட்சியை ஒப்பீட்டளவில் ஜனநாயக மயப்படுத்துவதாகத் தெரிகிறது.மூன்று வேட்பாளர்களும் …
-
- 0 replies
- 308 views
-
-
எதிர் முனைப்பட்ட அணி திரட்டல்களும் புதிய கட்சிகளின் தோற்றத்துக்கான வாய்ப்புகளும் இலங்கையில் தெற்கிலும் வடக்கிலும் மக்களை அணி திரட்டும் இரு வெவ்வேறு அரசியல் செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இரு அணித்திரட்டல்களுமே முற்றிலும் முரண்பட்ட நோக்கங்களைத் கொண்டிருக்கின்ற அதேவேளை, ஒன்றை மற்றையது பரஸ்பரம் வசதிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது. அத்துடன் இந்த எதிர்முனைப்பட்ட இரு செயற்பாடுகளுமே இறுதியில் புதிய அரசியல் கட்சிகளை அல்லது புதிய அரசியல் அணிகளைத் தோற்றுவிக்கக்கூடிய வாய்ப்புக்களைக் கொண்டிருக்கின்றன என்றும் கூறலாம். தென்னிலங்கையில்…
-
- 0 replies
- 308 views
-
-
Published By: RAJEEBAN 23 MAY, 2025 | 02:39 PM tamilguardian 67 ஆண்டுகளிற்கு முன்னர் இந்த நாளில் இலங்கையில் சிங்கள காடையர்கள் தமிழர்களை தாக்கதொடங்கினார்கள், பாலியல்வன்முறைகளில் ஈடுபட்டார்கள், கொலை செய்தார்கள். தமிழ் மக்களிற்கு எதிரான தொடர்ச்சியான பயங்கரமான இனவன்முறைகளில் ஒன்றாக இந்த வன்முறை வரலாற்றில் பதிவாகயிருந்து. தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளில் அன்றைய நாட்களில் 300 முதல் 1500 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்படுகின்றது. பலர் காயமடைந்தனர், சூறையாடல்கள் தமிழர்களின் வீடுகளை வர்த்தக நிலையங்களை அழித்தல் போன்றனவும் இடம்பெற்றன. 1958ம் ஆண்டு மே மாதம் 27 திகதி இலங்கை அரசாங்கம் அவசரகாலநிலையை பிரகடனம் செய்தது. 1956ம் ஆண்டில் சுதந்திர இலங்கையில் முதலாவது இன அடிப்படையிலான …
-
-
- 2 replies
- 308 views
- 1 follower
-
-
தமிழர் விடுதலைக்கான துரோகக் கோட்பாட்டின் முடிவு லக்ஸ்மன் இலங்கை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலையான பின்னர் முகிழ்த்த தமிழ்த் தேசிய விடுதலைக்கான சிந்தனாவாதக் கோட்பாடுகளுக்கு இதுவரையில் சரியான வடிவம் கொடுக்கப்படாத நிலை உள்ளதா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. ஏனெனில், அதன் நோக்கத்தை அடைவதில் உள்ள இதுவரையான இழுபாடுகளே அதற்குக் காரணமாகும். அந்த வகையில் தான் சுதந்திர இலங்கையில் தமிழர்களின் அபிலாஷையைத் தமிழ்த் தேசியம் எய்தவில்லை என்ற முடிவு கிடைக்கும். தமிழர்கள் எதிர்பார்க்கின்ற விடுதலையை, உரிமையை வென்றெடுப்பதற்காக அகிம்சைப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கம் பெற்ற ஜனநாயக அரசியல் கட்சிகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தன. அதன் தோல்வி காரணமாகத்தான் ஆயுதப் போராட்…
-
- 0 replies
- 307 views
-
-
கிளீன் சிறீலங்கா:பொதுக் கழிப்பறைகள் - நிலாந்தன் கிளீன் சிறீலங்கா தொடர்பாக கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரையை வரவேற்று ஒரு நண்பர் கருத்து தெரிவித்திருந்தார். ஸ்ரீலங்காவை ஓரளவுக்காவது கிளீன் பண்ணக்கூடிய இடம் சுற்றுச்சூழல் விவகாரங்கள்தான் என்பதை ஏற்றுக் கொண்ட அவர் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார். நீண்ட தூரப் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களை சிரம பரிகாரத்துக்காக நிறுத்தும் இடங்களில் உள்ள சுகாதாரக் கேடுகளை அவர் சுட்டிக் காட்டினார். குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான போக்குவரத்து வழியில் பேருந்துகள் இடைநிறுத்தப்படுகின்ற உணவகங்களில் உள்ள கழிப்பறை வசதிகளைக் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை அவர் சுட்டிக் காட்டினார். நண்பர…
-
- 0 replies
- 307 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் : தமிழ் நிலைப்பாடு என்ன? - நிலாந்தன். - நாடு ஒரு தேர்தலை நோக்கி போய்க்கொண்டிருக்கும் பொழுது தமிழரசுக் கட்சியானது தொடர்ந்து முடிவெடுக்க முடியாத ஒரு நிலையில் காணப்படுகின்றது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி அது. அதன் செயற்பாடுகள் காரணமாக அது படிப்படியாக உடைந்து உடைந்து அதன் ஏகபோகத்தை இழந்து விட்டது என்பது உண்மைதான்.என்றாலும் அதுதான் இப்பொழுது உள்ளத்தில் பெரிய கட்சி. அக்கட்சி ஒரு தேர்தல் ஆண்டில் முடிவெடுக்க முடியாதபடி உடைந்து காணப்படுவது,தென் இலங்கைக்குச் சாதகமானது. நீதிமன்றம் கட்சியை முடக்கவில்லை. ஆனால் அண்மையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர் செயல்பட முடியாத ஒரு நிலை. அதனால் முன்னைய தலைவராகிய மாவை சேனாதிராஜாவே இப்பொழுத…
-
- 0 replies
- 307 views
-
-
நல்லாட்சியின் மீது நம்பிக்கை இழந்துவரும் சிறுபான்மை மக்கள் தம்புள்ளை, அளுத்கம, பேருவளை, தெஹிவளை இன்னும் பல முஸ்லிம் பிரதேசங்களில் 2016 வரை மேற்கொள்ளப்பட்ட இன, மத குரோத வெறியாட்டங்களை நிறுத்த முடியாமல் போனதற்காகவே,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பிரிந்து, அவருக்கெதிராக தேர்தலில் அவரை தோற்கடிக்க வேண்டிய அவசியம் எமக்கேற்பட்டது. அதன் அவசியத்தை முஸ்லிம்களிடம் உறுதிப்படுத்தி, ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கு முன்னுதாரணமாக நாம், எமது பட்டம் பதவிகளைத் துறந்து மஹிந்தவின் ஆட்சியில் இருந்து வெளியேறினோம். நமது தூரதிருஷ்டியான முடிவினதும், உழைப்பினதும் காரணமாக முஸ்லிம்களின் வாக்குகளாலேயே மஹிந…
-
- 0 replies
- 307 views
-
-
"முடிந்தால் குடுமியை பிடி முடியாவிட்டால் காலை பிடித்துக் கொள்" இது கடந்த 2500 ஆண்டுகளாக இலங்கை ராஜதந்திரத்தின் பாரம்பரியம். அதுவும் குறிப்பாக பௌத்த சிங்கள ராஜதந்திர அணுகுமுறை என்று சொல்வதே பொருந்தும். அத்தகைய ஒரு தொடர்ச்சி குன்றாத ராஜதந்திரப் பின்னணியைக் கொண்ட இலங்கை அரசு இயந்திரம் எப்போதும் எதிரிகளின் முன்னே தன்னை திடமாகவும், நம்பிக்கையாகவும் நின்று கொண்டுதான் அரசியல் காய்களை நகர்த்தும். இந்த அடிப்படையில்தான் இலங்கையின் புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் தனது ராஜதந்திர யூகத்தால் முரண்பட்ட சக்திகளான இந்தியாவையும், சீனாவையும், மேற்குலகத்தையும் ஒரே நேர்கோட்டில் வைத்து எப்படி கடந்த காலத்தில் வெற்றி கொண்டார்கள் எதிர்காலத்தில் எப்படி வெற்றி கொள்வர் என்பதனை சற்று வி…
-
- 0 replies
- 307 views
-
-
ஜெனிவாத் தீர்மானம் 2022 : தமிழ் அரசியலின் இயலாமை? Nillanthan மற்றோரு ஜெனீவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொறுப்புக்கூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும் என்று தமிழ்க்கட்சிகள் கேட்டது சரி என்பதை இப்புதிய தீர்மானம் நிரூபித்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஜெனீவாவுக்கு ஒரு கூட்டுக்கடிதத்தை அனுப்பின. அதில் பொறுப்புக்கூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்ற கோரிக்கையை இணைத்தது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான். இதுநடந்து 20மாதங்களாகிவிட்டன. பொறுப்புக்குகூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டு போகும் முயற்சியில் மூன்று கட்சிகளும் எதுவரை முன்னேறியுள்ளன? நடந்து முடிந்த ஜெனிவா…
-
- 1 reply
- 307 views
-
-
இலங்கை மற்றும் இந்திய ஆளும் உயரடுக்குகள் வறுமையில் வாடும் மீனவ சமூகங்களுக்கு இடையே தேசிய பகைமையை தூண்டுகின்றன Naveen Dewage wsws டிசம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில், இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி 68 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்ததுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தது. சமீபத்திய மாதங்களில் தீவிரப்படுத்தப்பட்ட கடற்படை ரோந்துகளின் ஒரு பகுதியாக இந்த கைதுகள் நடந்துள்ளன. கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்…
-
- 1 reply
- 307 views
-
-
குருந்தூர் மலை தொடக்கம் கஜேந்திரக்குமாரின் வீடுவரை! நிலாந்தன். September 3, 2023 இலங்கைதீவின் சமகால பௌத்த அரசியல் நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஜனநாயக உள்ளடக்கம் இல்லை. அது தனது அரசியல் அபிலாசைகளை ஜனநாயகத்தின் மொழியில் வெளிப்படுத்துவதும் இல்லை. அதுவும் பிரச்சினையின் ஒரு பகுதிதான் -பேராசிரியர் ஜெயதேவ உயாங்கொட கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டது போலவே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானோடு பிக்குகள் மோதத் தொடங்கி விட்டார்கள். திருகோணாமலை கச்சேரியில் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்குள் அத்துமீறிப் புகுந்த பிக்குகள் அடங்கிய குழுவை யாராலும் தடுக்க முடியவில்லை. அங்கே போலீஸ் இருந்தது. அரச உயர் அதிகாரிகள் இருந்தார்கள். அங்கிருந்த சிங்கள உயர…
-
- 0 replies
- 307 views
-
-
வடமாகாண சபை அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் ஊழல் கூற்றச்சாட்டுக்கள் ! அபிவிருதிப் பணிகள் மந்தகதியில் நடைபெறுகின்றதா ? "தமிழ் பேசும் மக்களின் குரல்"
-
- 0 replies
- 307 views
-
-
தெற்கின் ஆளுமையும் தமிழ் தலைமையின் கையறுநிலையும் நாட்டு மக்கள் எதிர்பார்த்ததைப் போன்றும் இந்த பத்தி ஏற்கனவே சுட்டிக் காட்டியதைப் போன்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினுடைய முழுமையான கட்டுப்பாட்டை தன்னகத்தே கொண்டு வந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுத் தளத்தை குறைக்கும் வகையிலும் ஜனாதிபதி தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார். தேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே இது நடைபெறும் என்று எதிர்பார்த்த போதிலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகி, வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இருவேறு ஆணைக்குழுக்களின் அறிக்கை ஜனாதிபதிடம் கையளிக்கப்பட்டு அந்த அறிக்கைகளின் பேரில் ஜனாதிபதி தனது கருத்துக்களையும், …
-
- 0 replies
- 307 views
-
-
ஆதாரங்களுடன் ஆரம்பமாகிய இஸ்ரேல் மீதான போர்க்குற்ற விசாரணை | அரசியல் களம் | ஆய்வாளர் அருஸ் |
-
- 1 reply
- 306 views
-
-
Published By: DIGITAL DESK 2 08 JUN, 2025 | 03:20 PM ஹரிகரன் 31 ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய இனஅழிப்பை எதிர்கொண்ட ருவாண்டா தொடர்பாக, ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. ருவாண்டாவுக்கான இலங்கையின் கௌரவ தூதுவராக இருக்கின்ற கல்லி அலெஸ் (Cally Alles) அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். ருவாண்டாவின் வரலாறு, இனப்படுகொலையில் எதிர்கொண்ட அழிவுகள், அதற்குப் பின்னர் அங்கு ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார, அரசியல், சமூக மாற்றங்கள் குறித்து மிகவிரிவாக அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. அந்த கட்டுரையை எழுதிய கல்லி அலெஸ், 1978 ஆம் ஆண்டிலிருந்து ருவாண்டாவில் வசித்து வருகின்ற- இலங்கையரான தேயிலைத் தோட்டத் தொழிலதிபர். 1994 ஆம் ஆண்டு ருவாண்டாவின் ஜனாதிபதியாக இருந்த ஜூவேனல் …
-
- 2 replies
- 306 views
- 1 follower
-
-
மக்களிடம் உள்ள துருப்பு சீட்டு யாருக்கு…? நரேன்- மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெற இருக்கின்ற முதலாவது தேர்தலான உள்ளூராட்சி சபைத் தேர்தல் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கின்றது. இழந்த செல்வாக்கை மீள நிலை நிறுத்துவதற்கும், இருக்கும் செல்வாக்கை தக்க வைப்பதற்கும், தமக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கும் என அரசியல் கட்சிகளும், அரசியல் கூட்டுக்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த விடயத்தில் தென்னிலங்கை, வடக்கு – கிழக்கு என்ற வேறுபாடின்றி இரு பகுதிகளில் ஒரே விதமான செயற்பாடுகள் நடைபெறுவதையே அண்மைய அரசியல் நகர்வுகளும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளும் வெளிப்படுத்திக் காட்டியிருக்கின்றன. முன…
-
- 0 replies
- 306 views
-
-
தமிழரசின் வீழ்ச்சியும் பெரமுனவின் எழுச்சியும் இதயச்சந்திரன் கடந்த உள்ளூராட்சிச் சபைத்தேர்தலில் 38 சபைகளில் அறுதி பெரும்பான்மை பெற்ற கூட்டமைப்பு, இன்று பூநகரி வெருகல் தவிர்ந்த 36 சபைகளில், பெரும்பான்மையை இழந்து பெரும் சரிவினை நோக்கியுள்ளது. தெற்கிலோ…மகிந்தாவைத் தலைவராகக் கொண்ட, ஜி.எல்.பீரிஸின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெரும் வெற்றியீட்டியுள்ளது. மறுவளமாகப் பார்த்தால் கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது பூச்சியத்திற்கு முன்னால் எண்களைப் போடுமளவுக்கு வளர்ச்சி கண்டுள்ள அதேவேளை, நல்லாட்சி கண்ட இரணிலும் மைத்திரியும் வரலாறுகாணாத தோல்வியைச் சந்தித்துள்ளனர். இந்த தேர்தல் முடிவுகள் அரசியல் மைய நீரோட…
-
- 0 replies
- 306 views
-
-
கோட்டாபய கூட்டமைப்பைப் பேச அழைக்கிறார்? நிலாந்தன். March 20, 2022 கடந்த புதன்கிழமை கோட்டாபய கூட்டமைப்பைச் சந்திக்க நேரம் ஒதுங்கியிருந்தார். எனினும் அன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. அது 25ஆம் இடம்பெறலாம் என்று தெரிகிறது. இச்சந்திப்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோ கலந்து கொள்ளப்போவதிவில்லை என்று அறிவித்திருந்தது. அதற்கு டெலோ ஒரு விளக்கக் கடிதத்தை ஏற்கனவே அனுப்பியிருந்தது. பதவியேற்றதிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கோத்தாபய கூட்டமைப்போடு பேசப்போவதாக இடைக்கிடை கூறி வருகிறார். ஆனால் இன்றுவரையிலும் பேச்சுவார்த்தைகள் நடக்கவில்லை. இம்முறை பேச்சுவார்…
-
- 0 replies
- 306 views
-
-
தேசிய மக்கள் சக்திக்கு முன்னால் இருக்கும் உண்மையான சவால் கலாநிதி ஏ.எம். நவரட்ண பண்டார கடந்த 40 ஆண்டுகளில், உலகம் தேசியவாதம் மற்றும் உலகமயமாக்கலுடன் தொடர்புடைய பெறுமான முறைமை களுக்கு இடையே ஒரு பிளவுபட்ட உறவை அனுபவித்துள்ளது, அதனை சமூக விஞ்ஞானிகள் நவீன சகாப்தத்தின் இரண்டு வரையறுக்கும் அம்சங்களாக அடையாளம் கண்டுள்ளனர், இது கடந்த காலத்தில் முழுமையாக்கும் செயல்முறைகளை உருவாக்குகிறது. இலங்கையின் அண்மைக்கால அரசியல் வரலாற்றில் இரண்டு குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் – 2022 ஆம் ஆண்டு அரகலய (மக்கள் எழுச்சி) மற்றும் அரச அதிகாரத்தை வைத்திருப்பவராக தேசிய மக்கள் சக்தியின் (என் பி பின் ) எழுச்சி – இந்த உலகளாவிய வளர்ச்சிக்கு இணையாக நிகழ்ந்தது. மேலே குறிப்பிடப்பட்ட மாறிவரும் உலகளாவி…
-
- 1 reply
- 305 views
-
-
அரோகராப் போராட்டம்? - நிலாந்தன் ஒரு நீதிபதிக்கு நீதி கேட்டுத் தமிழ் மக்கள் ஒன்று திரளும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரத்திலிருந்து தமிழ்ப் பகுதிகளெங்கும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மனிதச் சங்கிலிப் போராட்டத்தைக் குறிப்பிட வேண்டும். இது குத்துவிளக்குக் கூட்டணியால் ஒழுங்கு செய்யப்பட்டது. எனினும் ஏனைய கட்சிகளும் அதற்கு ஆதரவைக் காட்டின. அந்தப் போராட்டம் சரியான நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அது சொந்த மக்களின் கவனத்தையும், உலக சமூகத்தின் கவனத்தையும் ஈர்க்கத்தக்க விதத்தில் பிரம்மாண்டமானதாக முன்னெடுக்கப்பட்டதா? மருதனார் மடத்திலிருந்து தொடங்கி யாழ்ப்பாணம் வரையிலு…
-
- 0 replies
- 305 views
-
-
கூட்டுப் பொறுப்பும் முன்கூட்டிய தயாரிப்புமற்ற புதுடில்லிச் சந்திப்பு — சிறிதரன், விக்னேஸ்வரன் குழுவினர் கடந்த வாரம் டில்லிக்குச் சென்றிருந்தமை எந்த நிகழ்ச்சி நிரல்? அதாவது ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் சில புலம்பெயர் அமைப்புகளை அழைத்து கடந்த ஜனவரி மாதம் டில்லியில் மாநாடு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு யூன் மாதம் ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகள் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தன. 2021 இல் பழநெடுமாறன் “வட்டுக்கோட்டைத் தீர்மானம் 2” என்ற மாநாட்டை நடத்தி மோடிக் கடிதம் அனுப்பினார். ஆகவே இச் சந்திப்புகள், மாநாடுகளின் தொடர்ச்சியாகவா அல்லது பிரித்தாளும் உத்தியா? அ.நிக்ஸன்- ஜே.வி.பியின் அரசியல் கொள்கைகள் ஈழத்தமிழர்களின் அ…
-
- 0 replies
- 305 views
-