அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
ஈழத்தமிழரின் இன்றைய சவால்: நாம் மனந்திறந்து பேசுவது எப்போது? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இன்று, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்ன? என்ற கேள்விக்கான ஒருமித்த பதிலை, ஈழத்தமிழ்ச் சமூகத்தால் சொல்லிவிட முடியாது. அதேபோலவே, ஈழத்தமிழர் என்ற வரையறைக்குள், யாரெல்லாம் அடங்குகின்றார்கள் என்பதற்கும் ஒருமித்த பதில் இல்லை. யாழ்ப்பாணத் தமிழர்கள், இலங்கையில் வாழும் எல்லாத் தமிழர்களையும் ஈழத்தமிழர்களாகக் கருத விரும்புகிறார்கள். ஆனால், ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்கள், தங்களை ஈழத்தமிழர்களாக அடையாளம் காட்ட விரும்புகிறார்களா என்ற கேள்வி இயல்பானது. அகஒடுக்குமுறைகள் நிரம்பிக் கிடக்கின்ற சமூகமொன்றில், புறஒடுக்குமுறையின் காரணமாக, அகஒடுக்குமுறைகளை மிகக் கொடூரமான முறையில்,…
-
- 0 replies
- 441 views
-
-
தமிழ்நாட்டில் “தமிழ் அகதிகள்” ஓகஸ்ட் 3, 2021 ~ Vigetharan A.S அ. சி. விஜிதரன் தமிழ்நாட்டில் “தமிழ் அகதிகள்” என்பது வித்தியாசமான தலைப்புப் போல தெரியலாம். ஆனால் முப்பது ஆண்டுகாலமாக இதுவே எதார்த்தமாக உள்ளது. இலங்கையில் இன மோதல் காரணமாகத் தமிழ்நாட்டில் சுமார் 110 முகாம்களில் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் அகதிகள், கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். மொழியாலும், பண்பாட்டாலும் பல ஒற்றுமைகள் இருக்கும் தமிழ் நிலத்தில் தமிழர்கள் அகதிகளாக இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து வாழ்ந்து வருவது வேதனைக்குரியது. தமிழ் அகதிகள் நிலையை மாற்ற பல்வேறு மட்டங்களில் உரையாடல்கள் உருவாக்க வேண்டியுள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு தமிழ் அகதிகள் தொடர்பில் இந்திய …
-
- 0 replies
- 647 views
-
-
மாற்றுத் தலைமைக்கான வாய்ப்புகளைத் தோற்கடிப்பது யார்? கோடைக் காலத்தில் எப்போதாவது ஒருநாள் சில மணித்துளிகள் பெய்யும் சிறுமழையை நம்பி, விவசாயம் செய்ய முடியுமா? அதுவும், வரட்சியின் உச்சத்தில் நிலம் வெடித்து வெம்மையை கக்கிக் கொண்டிருக்கின்ற தருணத்தில், சிறுமழையை நம்பி விவசாயத்துக்கான பெரும் ஏற்பாடுகளைச் செய்யும் தொழிலாளியை மற்றவர்கள் எப்படிப் பார்ப்பார்கள்? அந்த மழையின் ஈரம், நிலத்தில் அரையடி இறக்கும் முன்னரே, நிலத்தின் வெம்மையினால் கானலாக மாறி, காணாமற்போய்விடும். இப்படியான நிலையை எந்தவொரு மனிதனும் உணர்ந்து வைத்திருப்பான். அதுவும், வடக்கு- கிழக்கில் அந்த மண்ணோடும் அதன் வாசத்தோடும் வாழும் மக்களிடம், சிறுமழையை மாரி மழைபோல கருத வேண்டும் என்று கோருவதும…
-
- 1 reply
- 370 views
-
-
இரட்டை சவால்களை வெற்றி கொள்வாரா? ட்ரம்ப் இன்று உலகின் ஏகவல்லரசாக ஆதிக்கம் செய்வதென்பது எவ்வளவு கடினமானது என்பதை உலகில் அரசியல், பொருளாதார, இராணுவ, விஞ்ஞான, தொழில்நுட்பத் துறைகளில் முதன்மையாகப் பவனிவரும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான ட்ரம்ப் புரிந்து கொள்வதற்கான தருணம் வந்துவிட்டது. ஜனநாயக விழுமியங்களுக்கும், சமஷ்டி அமைப்பு முறைக்கும் வலுவேறாக்கத்திற்கும் உலகிலேயே பெருமை மிக்க அமெரிக்கா, வெளிநாட்டுக் கொள்கை விடயங்களில் மிகவும் விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் உள்ளாகி வருவது யாவரும் அறிந்த விடயமாகும். இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் நாசிச ஜே…
-
- 0 replies
- 565 views
-
-
வடக்கு, கிழக்கு இணைப்புக்கு செய்ய வேண்டியது என்ன ? எஸ். பாலசுப்பிரமணியம் 1948.02.04 ஆம் திகதி இலங்கை சுதந்திரமடைந்த போது வடக்கும், கிழக்கும் நிலத் தொடர்பில் ஒன்றாகவே இருந்தன. இந்தியா, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தன்னுடன் இணைத்துக்கொண்டு விடும் என்ற அச்ச உணர்வு சிங்கள ஆட்சியாளர்களிடமும் பௌத்த மத நிறுவனங்களிடமும் இன்றும் உண்டு. சிங்கள, பௌத்த மக்கள் வாழும் பகுதி மக்களின் எதிர்ப்பினால் சாத்தியப்படாது போனாலும் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு இந்தியாவுடன் இணைந்து ஒரு மாகாணமாகக்கூடும் என்ற அச்சம் சிங்களத் தலைவர்களிடம் அன்றும் இருந்தது இன்றும் உள்ளது. இத்தகைய அச்சத்தை அன்றைய பிரதமர் டி.எஸ். சேனநாயக்க சுதந்திரம…
-
- 0 replies
- 542 views
-
-
தமிழர் அரசியல் புலத்தில் விடை தெரியாத கேள்விகள் - க. அகரன் ‘சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த’ கதையாகியுள்ளது வடக்கு, கிழக்கு அரசியல் நிலைமைகள் என்றால் மறுப்பதற்கில்லை. தமிழர்களது போராட்ட வரலாறுகளும் அதனூடான உரிமைக்கான குரலும் ஓங்கி ஒலித்த காலத்தில் இருந்த திடமான அரசியல் களம், தற்போது தடம்புரளும் வங்குரோத்தில் செல்கின்றமை ஆரோக்கிமானதாக இல்லை. விடுதலைப் புலிகளினால் உருவாக்கம் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று ஆரம்பகால தார்ப்பரியங்களை மறந்து செயற்படுவதாகப் பல்வேறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அந்தப் பந்தையக் குதிரையில் பயணிப்போர் தமிழர் நிலைப்பாட்டை உணர்ந்துள்ளனர…
-
- 0 replies
- 507 views
-
-
''அரசு என்பது துப்பாக்கிகளினால் நிலைநிறுத்தப்படவில்லை, வார்த்தைகளினால் ஆன பிரதிகளினால்.'' உலகில் காலகாலமாக அதிகாரமும் அடக்குமுறையும் நிகழ்ந்துகொண்டே வருகிறது. இதில் கவனிக்க வேண்டியது அடக்குமுறையை நிகழ்த்தும் சமூகம் எண்ணிக்கையளவில் மிகக்குறைவானதாக இருப்பதும் அடக்குமுறைக்கு உட்படும் சமூகம் பெரியதாக இருப்பதும். எப்படி இது சாத்தியமாயிற்று. அதன் விடைதான் முதல்வரிகளில். நமக்குள் மூன்றுவிதமான சமூக அமைப்புகளை நாம் காணலாம். முதலாவது அடக்குமுறைக்கு உட்படும் அடிமை சமூகம், இரண்டாவது அடக்கும் அதிகார சமூகம், மூன்றாவது தரகு சமூகம். வரலாறு என்பது ஒரு சமூகத்தை பற்றிய செய்தியாக, ஆவணமாக, செல்வமாக உணரப்படுகிறது. இதன் மீதான நம்பிக்கைகளே அடுத்தடுத்த தலைமுறைகளை வழிநடத்திச் செல்கிறது. …
-
- 0 replies
- 1.3k views
-
-
மோசமானவர்கள் எனக் கருதப்படுபவர்களுக்கு மக்கள் வாக்களிப்பது ஏன்? என். கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan கடந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் இரண்டாவது அதிகப்படியாக 316,544 விருப்பு வாக்குகள் பெற்று பாராளுமன்ற உறுப்பினராகியவர் பிரசன்ன ரணதுங்க. ‘நல்லாட்சி அரசாங்கம்’ அமைந்த 2015 பொதுத் தேர்தலில் கூட, கம்பஹா மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளாக 384,448 வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தவர் பிரசன்ன ரணதுங்க. அன்று கம்பஹா மாவட்டத்தில் ஆளும் கட்சியாக அமைந்த ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் முதலிடம் பிடித்த ரஞ்சன் ராமநாயக்க பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகள் 216,463 தான்! இந்தப் பிரசன்ன ரணதுங்க, மேல்மாகாண முதலமைச்சராக இருந்தபோது, வணிகர் ஒருவரை மிரட்டிப…
-
- 1 reply
- 324 views
-
-
ரணிலின் பதவி பறிபோகுமா? உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் தாக்கம், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஐ.தே.கவுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள், அதன் தலைமைத்துவத்துக்கான சவாலாகவும் மாறியிருக்கிறது. ஐ.தே.கவில் எப்போதுமே தலைமைத்துவச் சிக்கல்கள் இருந்து வந்தமை வரலாறு. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தலைவர்களாக மேலெழும் போது, இந்தச் சிக்கல்கள் ஏற்பட்டு வந்துள்ளன. ஐ.தே.கவின் தலைவராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கவுக்கும், எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்கவுக்கும் இடையிலான தலைமைத்துவச் சிக்கலே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உருவாக்கக் காரணமானது. அதற்குப் பின்னர், டட்லி சேனநாயக்க…
-
- 0 replies
- 409 views
-
-
தமிழகத்துக்கு தண்ணி காட்டும் கர்நாடகாவும் பா.ஜா.காவும் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக மாநில அரசு இரட்டைவேடம் போடும் அதேவேளை, மத்திய அரசாங்கம் தமிழக மக்களை வஞ்சிப்பதாக தமிழகத்தின் எதிர்க்கட்சிகளும் பொது அமைப்புகளும் குற்றஞ்சாட்டி வருகின்றன. காவிரி நதியில் தமிழகத்துக்கு திறந்து விடவேண்டிய நீரை திறந்துவிடாமல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் உதாசீனம்செய்து அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையாவின் அரசாங்கம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதனூடாக காவிரி நீரை தமிழகம், கேரளம், புதுச்சேரி மற்றும் கர்நாடகம் ஆகிய நான்கு மாநில…
-
- 0 replies
- 409 views
-
-
-
புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்..? புதுமாத்தளனும், முள்ளிவாய்க்காலும் தவிர்க்கப்பட்டிருக்குமா..? சிங்களவரின் படுகொலைகளுக்கு நினைவு தினங்கள் தீர்வு தருமா..? புலிகள் என்றொரு இயக்கம் தோன்றாமலும், போராட்டம் என்ற வடிவம் உருவாகாமலும் இருந்திருந்தால் ஈழத்தில் தமிழர்கள் நின்மதியாக வாழ்ந்திருக்க முடியுமா..? புதுமாத்தளன் சோகங்களின் இரண்டாவது ஆண்டு நிகழ்வில் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். 1956, 1958, 1978, 1983 என்று சிங்களவர்கள் நடத்திய கலவரங்கள் புலிகள் போராடாமல் இருந்தபோது வந்தவைதான். இதில் கலவரம் என்ற சொல் முக்கியமானது. நிதானமாக இருக்க முடியாத ஓர் இனம் அடிக்கடி கலவரத்தில் ஈடுபடும்.. எனவேதான் புலிகள்…
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
ஜனாதிபதியின் ஐ.நா.உரை நல்லிணக்க சவால்களை நன்கு புலப்படுத்தும் ஆட்சிமுறைப் பிரச்சினைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைக்காலத்தில் செய்திருக்கும் தலையீடுகள் அவரின் தலைமையிலான அரசாங்கத்திற்குள் நிலவுகின்ற கடுமையான அபிப்பிராய வேறுபாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவருகின்றன. அவற்றில் முக்கியமானது போர்க்காலத்தில் இடமபெற்றதாகக் கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்லான பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்திற்கு அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளில் இருந்து விடுபடுவதற்கு அவர் மேற்கொள்கின்ற முயற்சியாகும்.முன்னைய அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்தின் சில பிரிவுகளுக்கும் தீவிரமடைந்திருந்த பதற்றநிலையை புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அரசாங்…
-
- 0 replies
- 514 views
-
-
மைத்திரியின் அளாப்பி அரசியலும் தமிழ்த் தரப்பும் Nillanthan18/11/2018 அப்பா பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போதுஒரு முறை வகுப்பத்தலைவராக நியமிக்கப்பட்டார்.உதவி வகுப்புத்தலைவராகநியமிக்கப்பட்ட மாணவர் சற்று வெட்க குணமும் பெண் சுபாவமும் கொண்டவராகஇருந்தார். அத்தோடு அவர் அவரது சில குறிப்பிட்ட நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு ஆங்கிலத்தில் கதைப்பவராகவும் இருந்தார்.இந்த நடவடிக்கைகள்அப்பாவை கோபத்திற்கு ஆளாக்கியது.உடனே வகுப்பாசிரியரிடம் சென்று உதவிமாணவத்தலைவரை பதவி நீக்கம் செய்யுமாறு அடம்பிடித்திருக்கிறார்.இதனால்இரண்டு நாட்கள் பாடசாலைக்கும் செல்லவில்லையாம்.அப்பாவின் முகம்சாதாரண நிலையிலும் கோபக்காரரைப்போலவே இருந்ததால்வகுப்புத்தலைவருக்கு அவரே பொருத்தம் என கருதிய…
-
- 0 replies
- 833 views
-
-
அரசியல் நெருக்கடியால் இலங்கை செலுத்தப் போகும் விலை! இலங்கையில் தற்போது தீவிரம் பெற்றிருக்கும் அரசியல் அதிகார நெருக்கடி நிலைமையின் பாரதூரத்தை ‘ 30 வருடகால யுத்த காலத்தில் செய்ய முடியாமற்போனதை 3 கிழமைகளில் செய்துவிட்டனர்’ எனப் பகுதித்தறிவுடன் சிந்திக்கும் பலருடனான கலந்துரையாடல்களின் மூலமாக உணர்ந்துகொள்ளமுடிகின்றது. தற்போது இலங்கையின் அரசியல் நெருக்கடி ஒரு மாதத்தை கடந்து முடிவின்றி சென்றுகொண்டிருக்கின்றது. ஒக்டோபர் 26ம் திகதி ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கி அமைச்சரவையைக் கலைத்து மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்தமை தொடக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கைகளும் அதனைத் தொடர்ந்து இலங்கையின் பாராளுமன்றத்தில் நடந்தே…
-
- 0 replies
- 644 views
-
-
நடைமுறையில் உயிர்ப்பிக்கப்படாத எந்தவொரு கொள்கையும் சாத்தானுக்கு சேவகம் செய்வதாகவே முடியும். மூத்த அரசியல் ஆய்வாளர் திரு. மு. திருநாவுக்கரசு அவர்கள்
-
- 0 replies
- 271 views
-
-
உயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஏப்ரல் 24 புதன்கிழமை, மு.ப. 02:28 Comments - 0 சித்திரைப் புத்தாண்டுக் காலத்தையொட்டி, ஆரம்பித்த தொடர் விடுமுறைக் காலம், உயிர்த்த ஞாயிறுக் கொண்டாட்டங்களோடு முடிவுக்கு வரவிருந்தது. ஆனால், உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளை மக்கள் முடிப்பதற்கு முன்னரேயே, நாடு, பேரிழப்பைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டிருக்கிறது. தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என்று உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள், கொண்டாட்டங்களுக்காக மக்கள் அதிகளவில் கூடும் இடங்களை இலக்கு வைத்து, தீவிரவாதிகள் நடத்தியிருக்கின்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், நாட்டு மக்களைப் பெரும் சோகத்துக்குள்ளும், சந்தேகப் பீதிக்குள்ளும் தள்ளியிருக்க…
-
- 0 replies
- 907 views
-
-
இலங்கையில் மாற்றம்... புலம்பெயர்ந்தவர்களால் நடக்கும்!: கவிஞர் சேரனின் பேட்டி ஒருவருக்கு இரண்டு தாய் இருப்பதற்கான சாத்தியங்களைப் போன்றதுதான் இரண்டு தேசங்கள் இருப்பதும். தொடர்ச்சி யான இலங்கை இனப் படுகொலைகள் இரண்டு தேச சாத்தியம் பெற்ற லட்சோப லட்சம் புலம்பெயர்ந்தோரை உருவாக்கியது. வேரைவிட்டு வெகு தூரம் விலகி விழுந்த விதைகளில் ஒருவராக, இன்று கவிதை விருட்சமாக இருப்பவர் கவிஞர் சேரன். தன் 'காடாற்று’, மற்றும் 'எ செகண்ட் சன் ரைஸ்’ நூல்கள் வெளியீட்டு விழாவுக்காகக் கடந்த வாரம் சென்னை வந்திருந்தார். கனடாவில் விண்சர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் - மானுடவியல் துறை பேராசிரியராக இருப்பவரிடம், இன்றைய புலம்பெயர்ந்தோர் நிலை குறித்துப் பேசினேன்! ''என் 'காடாற்று’ தொகுதியில் இருக்கும் பெர…
-
- 11 replies
- 1.3k views
-
-
ஈழத்தில் கவிதைச் செயற்பாடுகளால் அறியப்பட்டவர் கருணாகரன். ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வருகிறார். ‘ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்’, ‘ஒரு பயணியின் நாட்குறிப்புகள்’, ‘பலியாடு’, ‘எதுவுமல்ல எதுவும்’ என நான்கு கவிதை நூல்கள் இதுவரையில் வெளிவந்திருக்கின்றன. பத்திரிகைகளிலும் இணையங்களிலும் தொடர்ச்சியாக அரசியல்ப்பத்திகள் எழுதி வருகிறார். ‘வெளிச்சம்’ என்ற கலை, இலக்கிய ஏட்டின் ஆசிரியராகவும், காட்சி ஊடகத்திலும் பணியாற்றியுள்ளார். ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் ஒரு போராளியாகச் செயற்பட்ட அவர் எழுச்சியும் வீழ்ச்சியும் கொண்ட அந்த வரலாற்றின் கணிசமான காலத்தில் அதனுடன் பயணித்திருக்கிறார். அரசியல், இலக்கியம் மற்றும் சமூகச் செயற்பாடுகளில் தொடர்ச்சியான அவதானிப்பையும் பங்கேற்பையும் கொண்டிருக்கும…
-
- 6 replies
- 1k views
-
-
ஜனநாயகம் குறித்து அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு கடந்த 25 வருடங்களாக திருப்தி இல்லை என்ற ஒரு முடிவை உலகின் தொல்முதுப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான கேம்பிறிட்ச் பல்கலைக்கழகம் தான் நடத்திய புதிய ஆய்வுகளில் வெளிப்படுத்தியுள்ளது. சுமார் 40 லட்சம் மக்களிடம் எடுக்கப்பட்ட 3500 கணிப்பீட்டு செயற்திட்டங்களில் இருந்து இந்தமுடிவுபெறப்பட்டதாக இந்த ஆய்வை நடத்திய கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்தின் எதிர்கால ஜனநாயகத்துக்கான மையம் கூறுகிறது. அதாவது முன்னெப்பொதும் இல்லாத வகையில் ஜனநாயகத்தில் திருப்தியடையாத மக்களின் வகிபாகம் முன்னர் இருந்த 48 வீதத்தில் இருந்து 10 புள்ளிகள் மேலும் எகிறி தற்போது 58 வீதத்தில் இருப்பதாக ஐரோப்பாவின் நிதிவசதி கொண்ட கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்த…
-
- 0 replies
- 414 views
-
-
[size=2] [size=4]செப்டெம்பர் 11, 1973 அன்று சல்வடார் அலண்டேயின் ஆட்சி அமெரிக்க அரசாங்கத்தின் துணையுடன் தூக்கியெறியப்பட்டது. அலண்டே ‘மர்மமான முறையில்’ கொல்லப்பட்டார்.[/size][/size][size=2] [size=4]2001ம் ஆண்டு, செப்டெம்பர் 11 அன்று நியூ யார்க், வாஷிங்டன் டிசி ஆகிய நகரங்களின்மீது நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 3000 பேர் கொல்லப்பட்டனர். [/size][/size] [size=2] [size=4]இரண்டுமே ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகள். ஒன்று அமெரிக்காவின் துணையுடன் நிகழ்த்தப்பட்டது. இரண்டாவது, அமெரிக்காவின்மீதே.[/size][/size] [size=2] [size=4]பரமக்குடியில் சென்ற ஆண்டு செப்டெம்பர் 11 அன்று காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை மற்ற இரு செப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா கல்வியானது மனிதனது அடிப்படைத் தேவைகளில் ஒன்றானதை தொடர்ந்து சமூகத்தில் அனைவரும் பேசப்படுகின்ற ஓர் விடயமாகக் காணப்படுகின்றது.ஆனாலும் தற்கால கல்விமுறைமையிலும் கல்வி நடவடிக்கைகளிலும் பாரிய பிரச்சனைகள ; காணப்படுகின்ற போதிலும் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதென்பது கேள்விக்குறியான ஓர் விடயமாகவே காணப்பட்டு வருகின்றது. எமது நாட்டைப் பொறுத்தவரையில் கல்வி தொடர்பான அபிவிருத்தி நடவக்கைகளும் புதியன புகுத்துதலும் மேற் கொள்ளப்பட்டாலும ; சர்வதேசத்தோடு ஒப்பிடுகின்ற போது போட்டியிட முடியாத ஓர் கல்வி முறையாகவே காணப்படுகின்றது. தற்காலத்தில் இலங்கையைப் பொறுத்தவரை முறைசார்ந்த மற்று…
-
- 0 replies
- 2.9k views
-
-
தமிழகத் தலைவர்களுக்கு சி.வி அன்று கூறியதை சி.விக்கு திகா இன்று கூறுகிறார் புதிய அரசியலமைப்புக்கான வட மாகாண சபையின் ஆலோசனையாக, கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அம்மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலம் முன்வைக்கப்பட்ட திட்டத்தில், மலையகத் தமிழ் மக்களுக்காக நிறுவப்பட வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்ட பிராந்திய சபையை, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பி. திகாம்பரம் நிராகரித்துள்ளார். அதிகாரப் பரவலாக்கலுக்காக, மலையகத்துக்குத் தனி அலகு தேவையில்லை என அவர் கூறியிருக்கிறார். ஏனைய மலையகத் தமிழ்க் கட்சிகளும் தொழிற்சங்கங்களும், மலையக அலகு தொடர்பான ஆலோசனையை நிராகரிப்பதாகக் கூறாவிட்டாலும், அவர்களும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது, சகலரும்…
-
- 0 replies
- 364 views
-
-
இனப்படுகொலைக்கான நீதியில்தான் ஈழத் தமிழரின் இருப்பு! (UNHRC இன் 32 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மனித உரிமைப் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் முக்கிய இடத்தை வகிக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத்தில் இலங்கை தொடர்பில் பேரவையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது பிரேரணையின் முக்கிய விடயமாக கருதப்பட்டது. இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டு முக்கால் வருடத்தின் பின்னர் மனித உரிமைப் பேரவை இன…
-
- 0 replies
- 414 views
-
-
பெரும் தொற்று’ ஜனநாயகத்தையும் விழுங்கி விடுகிறதா? விக்டர் ஐவன் சுதந்திரத்திற்குப் பின்னர் ஜனநாயக பாதையைத் தேர்ந்தெடுத்து பின்பற்றிய இரண்டு தெற்காசிய நாடுகளாக இலங்கையும் இந்தியாவும் கருதப்படமுடியும். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய இந்திய தேசிய காங்கிரசிடம் ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவான ஜனநாயக பார்வை இருந்தது. காங்கிரஸின் தலைமையை காந்தி ஏற்றுக்கொண்ட பின்னர் காங்கிரசின் ஜனநாயகக் கண்ணோட்டம் மேலும் மேம்பட்டது என்று கூறலாம். ஜனநாயக விழுமியங்களுக்காக வலுவாக நின்று அவற்றை சமூகமயமாக்குவதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் எந்தவொரு அமைப்பும் இல்லாதபோது, 1936 ஆம் ஆண்டு வரை அதன் சொந்த மனித உரிமைகள் சாசனம் இருந்துவருகின்றத…
-
- 0 replies
- 638 views
-