அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9268 topics in this forum
-
பத்திரிகையாளராக மாறிய போராளி ' தராக்கி ' சிவராம் : கொடூரமான கடத்தலும் கொலையும் - மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் ஜனாதிபதி அநுரா குமாரவின் அரசாங்கம் டி.பி.எஸ் ஜெயராஜ் கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்களினால் தடுக்கப்பட்ட அல்லது சீர்குலைக்கப்பட்டு நீதிகிடைக்காமல் போன பாரிய ஊழல் மோசடிகள், படுகொலைகள் தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தனது தேர்தல் பிரசாரங்களின்போது அடிக்கடி வலியுறுத்திக் கூறினார். அண்மைய நிகழ்வுகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகள் குறித்து ஜனாதிபதி திசாநாயக்கவும் அவரது அரசாங்கமும் கரிசனையாக இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டுகின்றன. இது தொடர்பில் அவர்கள் அடுத…
-
- 0 replies
- 296 views
- 1 follower
-
-
திட்டமிட்டு சிங்களப் பேரினவாதம் எம்மினத்தின் மீது திணிப்புகளை மேற்கொள்கிறது – தவராசா கலையரன் எம்.பி. -சி.எல்.சிசில்- திருகோணமலை மாவட்டத்தைக் குறிவைத்து சிங்களப் பேரினவாதம் தமது பணிகளை மிக வேகமாக ஆரம்பித்துள்ளது. தொல்லியல், வனபரிபாலனம் எனத் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் திட்டமிட்டு கூறு போடுகின்ற நிலைமையே நடந்து கொண்டிருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். திருகோணமலையில் இடம்பெற்ற இந்திய உயர்ஸ்தானிகருடனான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை – இந்தியா என…
-
- 0 replies
- 296 views
-
-
மஹிந்தவை அரியணையேற்ற முனைகிறதா சீனா? சீனத் தூதுவர் யி ஷியாங் லியாங் அண்மையில் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக, குறிப்பாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரை விழித்து வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. சீனத் தூதுவரின் கருத்து, அண்மையில் கோத்தாபய ராஜபக்ஷ சீனாவுக்கு மேற்கொண்ட பயணம், மகிந்த ராஜபக்ஷ இந்த மாதம் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணம் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது, ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாகவே தோன்றுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் சீனா இறங்கியிருக்கிறதா என்ற…
-
- 0 replies
- 296 views
-
-
அமெரிக்க – மேற்குலக ‘பயங்கரவாதத்திற்கெதிரான போரின்’ தோல்வி: ஆப்கானிஸ்தான் Photo: Jim Huylebroek for The New York Times ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமைக்கு யார் காரணம் என்ற அரசியல் பழி சுமத்தல்கள் தாரளமாக இணையத்தில் வெளிவரத்தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பைடன் தனது உரையில் அரசியல் பழி சுமத்தல் விளையாட்டை மிக சாமர்த்தியமாக நகர்த்தியுள்ளார். அதற்கு இணையாக அவரது எதிர்த்தரப்பினரும் அவரை தாரளமாக பழி சுமத்தியுள்ளனர். 2010இல் விக்கிலீக்ஸ் வெளியிட்ட இராணுவ ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு 2010 அமெரிக்க மேற்குலக அரசின் அரசியல் – இராணுவ நகர்வு, ஆப்கானிஸ்தான் சார்ந்து மட்டுமல்ல, ஈராக்கிலும் தோல்வியைத் தழுவியுள்ளது என அம்பலப்படுத்திய போது, தோல்வியை ஏற்பதற்குப் பதிலாக ஆவணங…
-
- 0 replies
- 296 views
-
-
12 AUG, 2024 | 11:09 AM டி.பி.எஸ். ஜெயராஜ் ரணில் விக்கிரமசிங்க முதலில் பிரதமராகவும் பிறகு ஜனாதிபதியாகவும் அதிகாரத்துக்கு வந்த நேரம் தொடக்கம் எதிரிகளும் விமர்சகர்களும் அவரைப்பற்றி பல தவறான கதைகளை கட்டிவிடுவதில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு அஞ்சுகிறார் என்பதும் அவர் வழமைக்கு மாறான நடவடிக்கைகள் மூலமாக தேர்தலைப் ஒத்திவைப்பார் என்பதும் அந்த்கதைகளில் ஒன்று. இந்த போலிக்கதை தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தல் திகதியை வர்த்தமானியில் வெளியிட்டபோது அம்பலமானது. விக்கிரமசிங்கவே ஒரு சுயேச்சை வேட்பாளராக முதலில் தனது கட்டுப்பணத்தையும் செலுத்தினார். இந்த உண்மை முகங்கொடுக்க இயலாத அவரது எதிரிகள் தற்போ…
-
-
- 1 reply
- 295 views
- 1 follower
-
-
புதிய அரசியலமைப்பும் அரசியல் தீர்வும் புதிய அரசியலமைப்பின் பூர்வாங்க வரைவு எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு–செலவுத்திட்டம் மீதான விவாதம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்கத்தலைவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த வருடத்துக்கான அரசாங்கத்தின் வரவு–செலவுத் திட்டம் நவம்பர் 10 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என்றும் தொடர்ந்து ஒருமாத காலத்துக்கு அதன் மீதான விவாதம் நடைபெறும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறானால், அரசியலமைப்பு வரைவு இன்னமும் 6 வார காலத்திற்குள் பாராளுமன்றத்தில் சம…
-
- 0 replies
- 295 views
-
-
ஓமந்தையும் தாண்டிக்குளமும் வவுனியா மாவட்டத்துக்கான பொருளாதார மையத்தை ஓமந்தையிலா? தாண்டிக்குளத்திலா? அமைப்பது என்பது தொடர்பிலான சர்ச்சை கடந்த சில வாரங்களாக மேலெழுந்திருந்தது. சர்ச்சைகள் இன்றி உள்ளக பேச்சுக்களினூடாக இறுதி முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டிய விடயமொன்றினை வடக்கு மாகாணத்தை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் சர்ச்சையாக மாற்றிவிட்டிருக்கின்றார்கள். அது, மக்களிடையே குறிப்பிட்டளவான குழப்பங்களையும் குரோதங்களையும் ஏற்படுத்தக் காரணமாகி விட்டது. „தேர்தல் அரசியல்... என்பது மக்களிடம் குழப்பங்களை ஏற்படுத்தி அதிலிருந்து வெற்றிக் கனிகளைப் பறிப்பது தொடர்பில் பாரிய கரிசனை கொள்ளும் என்பது இயல்பானது. ஆனால், …
-
- 0 replies
- 295 views
-
-
ரணிலா ? அரகலயவா ? -நிலாந்தன்.- ரணில் ஜனாதிபதியாக வந்தபின் நடந்த ஒரு பெரிய மாற்றம் என்று சொன்னால் அரகலயவை அடக்கத் தொடங்கியதுதான். எந்த அரகலயவின் விளைவாக அவர் ஆட்சிக்கு வந்தாரோ, அதே அரகலயவை அவர் இப்பொழுது அடக்கப் பார்க்கிறார். எந்த ஒரு முறைமை மாற்றத்தைக் கேட்டு அரகலய போராடியதோ, அந்த முறைமை மாற்றம் நடக்கவில்லை.மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் அதே பழைய முறைமையினூடாக நிறைவேற்று அதிகாரம் பெற்ற ஜனாதிபதியாக எழுச்சி பெற்றிருக்கிறார். காலிமுகத்திடல் சோர்ந்துபோய் விட்டதாக அவதானிக்கப்படுகிறது. அங்கு முன்னணியில் நின்ற அரசியல் பின்னணியை கொண்ட பலரும் தலைமறைவாகிவிட்டதாகவும் கருதப்படுகிறது. தொடர்ச்சியான கைதுகள் காரணமாக முன்னணி ஏற்பாட்டாளர்கள் பலர் பின் மறைவிற்கு செல்வதாக நம்ப…
-
- 0 replies
- 295 views
-
-
அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுராவின் மனச்சாட்சியும் May 21, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) ஆரம்பிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமையுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைந்தன. காலஞ்சென்ற என். சண்முகதாசன் தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சீனச்சார்பு) வாலிபர் இயக்கத்தின் ஒரு முக்கிய தலைவராக விளங்கிய ரோஹண விஜேவீர முரண்பாடுகள் காரணமாக கட்சியில் இருந்து விலகி 1965 மே 14 ஆம் திகதி ஜே.வி.பி. யை தாபித்தார். அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரு தடவைகள் ஆயுதக்கிளர்ச்சிகளை முன்னெடுத்து இரத்தக் களரிகளை கடந்து வந்த ஜே.வி.பி. ஜனநாயக அரசியலில் பிரவேசித்த பிறகு அதன் ஐந்தாவது தலைவரான அநுரா குமார திசாநாயக்கவின் தலைமையில் தேசிய மக்கள் சக்தி என்ற …
-
- 2 replies
- 295 views
-
-
தமிழ் தரப்பின் கூட்டுக்கள் தேர்தலுக்காகவா? கொள்கைக்காகவா? பல்வேறு துயரங்களையும், துன்பங்களையும் கடந்து வந்ததுடன் அதற்காக இழந்தவையும் அதிகம். இலங்கைத் தீவு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே ஜனநாயக ரீதியாக தமது உரிமைக்காக தமிழ் தேசிய இனம் குரல் கொடுத்து வந்த நிலையில் அந்த தலைமைகள் மத்தியில் ஏற்பட்ட பிளவுகளும், கூட்டுக்களும், கூட்டுக்களின் நிலையற்ற தன்மையும் தென்னிலங்கையின் அரசியல் தலைமைகளுக்கு வாய்ப்பாக அமைந்திருந்தன. மிதவாத தலைமைகளின் கோரிக்கைகளை தென்னிலங்கை சிங்கள பௌத்த மேலாதிக்கவாத தலைமைகள் ஏற்றுக் கொள்ளாததன் விளைவாக தமிழ் தேசிய இனத்தின் இளைஞர், யுவதிகள் விரும்பியோ, விரும்பாமலோ ஆயுதம் ஏந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஜனநாயக ரீதி…
-
- 0 replies
- 295 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரல் லக்ஸ்மன் யுத்தம் மிகக் கடுமையாக அடக்கப்பட்டதனால் மௌனமாகி 12 வருடங்கள் நிறைவு பெற்றுவிட்டது. ஆனால் இன்னமும் நம்முடைய தமிழ் மக்கள் ஐக்கிய நாடுகள் தமக்குரிய நீதியை வழங்குவார்கள் என்ற ஏக்கமான எதிர்பார்ப்புடனேயே இருந்து வருகின்றனர். ஓவ்வொரு வருடத்தினது பெப்ரவரி மாதத்திலும், செப்ரம்பர் மாதத்திலும் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தே இருப்பதும் ஆவல் உச்சம் பெற்றிருப்பதும் வழக்கம். அதே போன்றே மாற்றங்களும் ஏமாற்றங்கள் நிகழ்ந்துவிடுவதும் வழக்கமாகிவிட்டது. 2020இல் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகக் கொண்ட புதிய அரசாங்கம் உருவாகி கடந்த பெப்பரவரி மாதம் வரையில் இலங்கையில் வெளிநாட்டமைச்சராக தினேஸ் குணவர்தன இருந்தார். செப்டெம்பர் மாதத்தில் பேராசி…
-
- 0 replies
- 295 views
-
-
யேமனில் தொடரும் மனிதாபிமான அவலம் - ஜனகன் முத்துக்குமார் உலகிலேயே மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடியில், யேமன் இப்போது சிக்கியுள்ளது. 2.9 மில்லியனுக்கும் மேலான பொதுமக்கள், வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ள இந்நிலையில், 21 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் -- அதாவது சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேலானவர்களுக்கு -- அவசர மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது என, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கச் செயற்குழு அறிவித்துள்ளது. கடந்தாண்டு மே மாதம், வாந்திபேதி பரவியதிலிருந்து, 911,000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர் எனப் பதிவாகியுள்ள நிலையில், அதில் குறைந்தது 2,195 பேர் வரை இறந்திருந்தமை பதியப்பட்டுள்ளது. இவ்வெண்ணிக்கை, உண்மையான நிலைவரத்தைப்…
-
- 0 replies
- 295 views
-
-
ராஜபக்ஷர்களின் மீள்வருகைக்கான கட்டியம் புருஜோத்தமன் தங்கமயில் ராஜபக்ஷர்களை நாட்டின் காவலர்களாக முன்னிறுத்தும் பேரணிகளை, பொதுஜன பெரமுன மீண்டும் நடத்தத் தொடங்கிவிட்டது. அடுத்த ஆண்டு ஆரம்பத்தில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது. அந்தத் தேர்தலோடு ஆரம்பிக்கும் தேர்தல் திருவிழா, மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் என்று, எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு களைகட்டப் போகின்றது. அதைக் கருத்தில் கொண்டு ராஜபக்ஷர்கள், தங்களை மீண்டும் நிலைநிறுத்தும் வேலைகளை ஆரம்பித்து இருக்கிறார்கள். ராஜபக்ஷர்களை வீட்டுக்குச் செல்லுமாறு முழு நாடும் கொந்தளித்து அடங்கி, சில மாதங்களே ஆகின்றன. கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டுத் தப்பியோடி, ஜ…
-
- 0 replies
- 294 views
-
-
உள்ளூராட்சி சபைகள் யாருக்கு? நிலாந்தன். நீண்ட இடைவெளிக்கு பின் தலதா மாளிகையின் புனித தந்த தாதுவை தரிசிப்பதற்கு சிங்கள மக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதன் விளைவாக கண்டிமா நகரை நோக்கி லட்சக்கணக்கான யாத்திரிகர்கள் குவிந்தார்கள். சன நெரிசலில் சிக்கி ஓர் இருதய நோயாளி இறக்க நேரிட்டது. பொருளாதார நெருக்கடியின் போது எரிபொருளுக்காக நின்ற மிக நீண்ட வரிசைகளுக்குப் பின் புனித தந்த தாதுவை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் வந்தார்கள். எதிர்பாராத இந்த ஜனத்தொகையினால் கண்டி மாநகரம் குப்பை மேடாகியது. நகரத்துக்குள் புதிதாக நுழையும் ஜாத்திரிகர்களை வரவேண்டாம் என்று கூறித் தடுத்து நிறுத்த வேண்டி ஏற்பட்டது. கண்டி மாநகரின் புவியியல் கொள்ளளவை மீறி யாத்திரிகர்கள் குவிந்தார்கள். அவர்கள…
-
- 0 replies
- 294 views
-
-
நஜீப் பின் கபூர் நெப்போலியன் ஒரு முறை தனது அதிகாரிகளிடத்தில் பேசும் போது “அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி தேசங்களாக இருந்தாலும் சரி பத்து வருடங்களுக்கு ஒரு முறையாவது நாம் கடந்து வந்த பாதை தொடர்பாக மதிப்பீடு செய்து அதற்கான சீர்திருத்தங்களை செய்து கொள்ள வேண்டும்” என்று சுட்டிக்காட்டி இருந்தார். இந்தக் கட்டுரையைத் தயாரிக்கின்ற போது அதனை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக அமையும் என்று நாம் கருதுகின்றோம். ஐரோப்பா வரலாற்றில் நெப்போலியன் மறக்கமுடியாத ஒரு நாமம். நெப்போலியன் பொனபார்ட் 1769 – 1821 களில் வாழ்ந்து தனது 52 வது வயதில் இறந்தும் போனார். இந்த நெப்போலியன் கதை நமக்கு சில நூறு வருடங்களுக்கு முந்தியது ஒன்று. அந்தக் காலகட்டத்தில் – அப்போதைய உலக செயல்பாடுகளில் இன்றைய அளவ…
-
-
- 2 replies
- 294 views
- 1 follower
-
-
இன அழிப்பின் குறியீடே தையிட்டி விகாரை- அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ. யோதிலிங்கம்யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை இன அழிப்பின் குறியீடு என அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால் இன்றையதினம்(15) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தையிட்டி விகாரை தொடர்பாக தமிழ் மக்களின் ஒன்றிணைந்த போராட்டம் கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை பௌர்ணமி தினத்தன்று நடந்து முடிந்திருக்கின்றது. ஆயிரக்கணக்கில் மக்கள் போராட்டத்தில் பங்குபற்றியுள்ளனர். போராட்டக்காரர்களுக்கும், பொலிசாருக்குமிடையே வாக்குவாதங்களும் இடம்பெற்றிருக்கின்றன. சிங்கள மக்களை விகாரை வளவுக்குள் அனுமதித்த பொலிஸார் …
-
- 0 replies
- 294 views
-
-
மாயாஜாலம் ஒரு மாயாஜாலம் போலவே, உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் புதிய முறைமை, இன்னும் பலருக்குத் தெரிந்து கொண்டிருக்கிறது. ஒரு சபையில், அதிக வட்டாரங்களை வென்ற கட்சிக்கும் அதே சபையில் ஒரு வட்டாரத்தை மட்டும் வெற்றிகொண்ட கட்சிக்கும், இறுதியில் ஒரே தொகை உறுப்பினர்கள் கிடைத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட முக்கால்வாசி வட்டாரங்களில் வெற்றிபெற்ற கட்சிக்கு, அந்த சபையில் ஆட்சியமைக்க முடியாத நிலைவரம் ஏற்பட்டுள்ளது. அதிக வட்டாரங்களை வெற்றிகொண்ட கட்சிக்காரர்கள், அந்த வெற்றியைக் கொண்டாட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். நடைபெற்று முடிந்த தேர்தலானது, தேசிய ரீதியாக அரசியலைப் புரட்டிப் போட்டிருக்கிறது. அரசாங்…
-
- 0 replies
- 294 views
-
-
சம்பந்தன்: தலைமைத்துவக் காலமும் பிறகும்.. தமிழரின் (தமிழ்த்தேசிய) அரசியல் July 12, 2025 — கருணாகரன் — தமிழ்த்தேசியவாத அரசியலில் தலைமைப் பொறுப்பிலிருந்த இராஜவரோதயம் சம்பந்தன் மறைந்து ஓராண்டாகி விட்டது. இந்த ஓராண்டிலும் தமிழ்த்தேசியவாத அரசியலிலும் சரி, தமிழ்மக்களுடைய அரசியலிலும் சரி எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சரியாக வரையறுத்துச் சொன்னால், சம்பந்தனுக்குப் பிறகு தமிழ்த்தலைமை என்று அடையாளம் காணக்கூடிய எவரையுமே காணவில்லை. மட்டுமல்ல, அடுத்து வரப்போகின்ற பத்துப்பதினைந்து ஆண்டுகளில் கூட தமிழ்த்தேசியவாத அரசியலில் மாற்றங்களோ முன்னேற்றமோ ஏற்படும் என்ற நம்பிக்கையும் இல்லை. அவ்வாறான நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய அரசியல் முன்னெடுப்புகளோ, புத்தாக்க முயற்சிகளோ, கருத்தியல் மற்றும் செயற்…
-
- 0 replies
- 294 views
-
-
மகிந்த மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவாரா, அரசியல் பொறியில் அகப்படுவாரா? :வியாசன் 07/13/2015 இனியொரு இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மைத்திரிபால சிரிசேனவின் நல்லாட்சி தலைகீழாக மாறிப் போனது. யாருக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியைக் கையகப்படுத்தினாரோ அவரையே பிரதம மந்திரியாக்க மைத்திரி முன் நிற்கிறார். மகிந்த ராஜபக்ச அரசில் அமைச்சராகப் பதவிவகித்து ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக இறுதி நேரத்தில் புற்றுக்குள்ளிருந்து கிளம்பிய மைத்திரிபால சிரிசேன இப்போது 180 பாகையில் திரும்பி மகிந்த ராஜபக்சவையும் அவரது சகாக்களையு ம் பாதுகாத்து ஆட்சியதிகாரத்தில் அமர்த்துவதற்கு பச்சைகொடி காட்டியுள்ளார். இலங்கையை ஒட்டச் சுரண்டிய மகிந்த ராஜபக்சவுக்கும் அ…
-
- 0 replies
- 294 views
-
-
கையாலாகாத தமிழ்க் கட்சிகள்? – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எந்த இடத்தில் தவறிழைக்கின்றது? நிலாந்தன். விசாக பௌர்ணமியன்று தையிட்டி விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் குறைவானவர்களே பங்குபற்றியிருக்கிறார்கள். அவர்களிலும் நான்கு பேர் காணி உரிமையாளர்கள். ஏனையவர்கள் அரசியல்வாதிகளும் கட்சித் தொண்டர்களும். அதே நாளில் இரவு யாழ்ப்பாணம் அரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாக விகாரையில் இடம்பெற்ற வெசாக் அலங்காரங்களைப் பார்ப்பதற்கு தொகையாக வந்த தமிழ் மக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதே இரவு குடாநாட்டின் மற்றொரு தொங்கலில் வல்வெட்டித் துறையில் நடந்த இந்திர விழாவில் பங்குபற்ற ஆயிரக்கணக்கானவர்கள்…
-
- 0 replies
- 293 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரணில் விக்ரமசிங்க கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை 6 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 1980ஆம் ஆண்டு காலப்பகுதியின் இறுதி ஓரிரு வருடங்களில், அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை முகாம் தொடர்பில் தற்போது பாரிய சர்ச்சை தோன்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் இலங்கை ஜனாதிபதியும், 6 தடவை பிரதமராகவும் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, அல் ஜசீரா தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் படலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதை அடுத்தே, படலந்த சித்திரவதை முகாம் பேசுபொர…
-
- 0 replies
- 293 views
- 1 follower
-
-
நாட்டின் இன்றைய நிலைக்கான உண்மையான காரணங்களை சகல மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்- சுரேஷ் க.பிரேமச்சந்திரன்! ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக நாடுமுழுவதிலும் கிளர்ந்தெழுந்திருக்கும் இளைஞர் யுவதிகளின் எழுச்சிமிகு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதுடன், நாட்டின் சகல சகோதர இன மக்களும் கரிசனை காட்ட வேண்டிய விடயங்களையும் தெளிவுபடுத்தியிருக்கிறார். எமது அன்பிற்கினிய தமிழ், சிங்கள, இஸ்லாமிய சகோதர சகோதரர்களே, தோழர்களே, …
-
- 0 replies
- 293 views
-
-
இலங்கை நெருக்கடி: கோட்டாபய, ரணில் இல்லாவிட்டால் அடுத்தடுத்த வாய்ப்புகள் என்ன? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து அதைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாளிகையில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. கோட்டாபயவின் அலுவலகம் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் அவரால் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. ரணில் பிரதமர் பதவியில் இருந்து விலக தயா…
-
- 0 replies
- 293 views
- 1 follower
-
-
‘பொதுச்சபை’ நகர்வை ‘சிவில் சமூக அமையம்’ தரும் படிப்பினைகளின் கண்கொண்டு நோக்குதல் [TamilNet, Friday, 30 August 2024, 09:08 GMT] இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களாயிருந்த எம். கே. நாராயணன் (2005-2010), சீவ்சங்கர் மேனன் (2010-2014) இருவரின் கட்டளையேற்றுத் தடம்புரண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவரான காலஞ்சென்ற இரா. சம்பந்தனின் மூலோபாய அச்சுத் தவறிய அரசியலின் விளைவாக 2010 ஆம் ஆண்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோன்றியது. மறுபுறம், தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூக முன்னெடுப்புகளாக ‘தமிழ் சிவில் சமூக அமையம்’, ‘தமிழ் மக்கள் பேரவை’ என்பவை 2013-2014 காலகட்டத்தில் தோன்றின. நாளடைவில், கட்சி அரசியல் உள்ளிட்ட பல காரணிகளால் அந்தச் சமூக முன்னெடுப்புகள் தேக்க…
-
- 1 reply
- 293 views
-
-
தமிழர் அபிலாஷைகளையும் தீர்க்குமா ஜனநாயகத்துக்கான போராட்டம்? Editorial / 2018 நவம்பர் 06 செவ்வாய்க்கிழமை, மு.ப. 03:25 - க. அகரன் ஜனநாயகத்துக்கான போராட்டம், இலங்கையில் இன்று வலுப்பெற்றிருக்கும் நிலையில், இலங்கை தேசம், சர்வாதிகாரச் சிந்தனைகொண்டவர்களால் ஆளப்படுகிறதா என்கின்ற கேள்வி, பரவலாகவே அனைவரிடமும் எழுந்துள்ளது. இறைமை என்கின்ற ஒற்றைச்சொல்லுக்குள், போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாகக் கூறிவந்த இலங்கை, இன்று சர்வதேசத்தின் கண்டனங்களுக்குள்ளாகும் போது, இறைமையிலும் மேலானது சர்வதேசத்தின் பார்வை என்பதை எண்ணத்தலைப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் இழுபறி நிலை, அரசமைப்பு முறைமையை மாத்திரமல்ல, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையையும் மீள் பரிசீலன…
-
- 0 replies
- 293 views
-