அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9267 topics in this forum
-
சந்தர்ப்பவாத அரசியல் -பி.மாணிக்கவாசகம் March 9, 2019 நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளின் ஊடாக மனித உரிமை மீறல்களுக்கும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு முற்றாக நிராகரிக்கும் போக்கில் செல்லத்தலைப்பட்டிருப்பதையே காண முடிகின்றது. ஆட்சி மாற்றத்தின் போது பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி அதனை ஏற்றுக்கொண்ட போதிலும், காலம் கடத்தி அந்தத் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வந்துள்ளது. அரசாங்கத்தின் இந்த முயற்சியிலேயே கடந்த நான்கு வருடங்களும் கழிந்து போயிருக்கின்றன. …
-
- 0 replies
- 619 views
-
-
ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா? - நிலாந்தன் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ கூட்டமைப்பு ஜெனீவாவில் கால அவகாசத்தை ஏற்றுக் கொள்ளும் என்றே தெரிகிறது. அதற்கு அவர்கள் வழமை போல் ஓர் அப்புக்காத்து விளக்கம் தருகிறார்கள். அதாவது அது கால அவகாசம் அல்ல. இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிப்பதற்கான ஒரு கால நீட்சியே என்று. அப்படியென்றால் கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கப்பட்ட கால அவகாசமானது ஐ.நா அரசாங்கத்தை கண்காணிப்பதற்கான அல்லது பின்தொடர்வதற்கான ஒரு கால அட்டவணையைக் கொண்டிருக்கவில்லையா? அல்லது கடந்த நான்கு ஆண்டுகால ஏமாற்றங்களின் விளைவாக இம் முறைதான் அவ்வாறு கண்காணிப்பது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறதா? ஆனால் கடந்த முறை கால அவகாசம் வழங்கப்பட்ட போது அரசாங்கத்தைக…
-
- 0 replies
- 889 views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமக்குரிய பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொள்வார்களா? இழந்தவற்றை மீட்டுக்கொள்வார்களா அல்லது இருந்தவற்றையும் இழந்துவிடுவார்களா என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியிலே உருவாகியுள்ளது. பெரும்பான்மையினத்தவர்கள் ஆட்சியைக் கைப்பற்ற வரிந்துகட்டிக்கொண்டு தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில், தமிழ் மக்கள் தமது இருப்பை உறுதிப்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேண்டிய நிலையில் பொதுத்தேர்தலை எதிர்நோக்கியுள்ளனர். ஆனால் வழமைபோன்று தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை தன்னினத்திற்கு சகுனப் பிழையாக வேண்டும். தனக்குக் கிட்டாத மக்கள் பிரதிநிதித்துவம் என்ற பாராளுமன்ற உறுப்பினர் பதவி இன்னுமொரு தமிழனுக்குக் கிட்டக்கூடாது என்ற சிந்தனையுடனும் தேர்தல் களமாடப் பல தம…
-
- 0 replies
- 164 views
-
-
பொது வேட்பாளர் தமிழ்த் தேசியத் தீவிரவாதியா? நிலாந்தன். அனுர,ரணில், சஜித் ஆகியோரின் தேர்தல் அறிக்கைகள் வெளிவந்துவிட்டன. எதிர்பார்க்கப்பட்டது போல அவை அமைந்திருக்கின்றன. 13க்கு அப்பால் அவர்களிடம் தீர்வு கிடையாது. மேலும் இனப் பிரச்சனைக்கான தீர்வை நோக்கி உருவாக்கப்படும் புதிய யாப்பு அடுத்த நாடாளுமன்றத்தில் தான் தீர்மானிக்கப்படும். இப்பொழுது கேள்வி என்னவென்றால், பிரதான தென்னிலங்கை வேட்பாளர்கள் எதைத் தர கூடும் என்பது தெளிவாகக் கூறப்பட்டு விட்டது. தபால் மூல வாக்கெடுப்புக்கு சில நாட்களே உண்டு. தமிழரசுக் கட்சி அதன் உத்தியோகபூர்வ முடிவை இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரை அறிவிக்கவில்லை. ஆனால் அதன் திருகோண மலைக் கிளை பொது வேட்பாளருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அ…
-
- 0 replies
- 565 views
-
-
தேர்தலை தனக்கும் அநுராவுக்கும் இடையிலான போட்டியாக காண்பிக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் September 10, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் இரு வாரங்களே இருக்கின்றன. 38 பேர் போட்டியிடுகின்ற போதிலும், அவர்களில் பலரை பொதுவெளியில் காணவில்லை. பிரதான வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் பிரசாரங்களை நாடுபூராவும் மும்முரமாக முன்னெடுத்திருக்கிறார்கள். பிரதான வேட்பாளர்களாக விளங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவும் தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுத்து அபிவிருத்திப்…
-
- 0 replies
- 279 views
-
-
மாற்றத்துக்கான தேர்தல்: நேர்நிலையும் எதிர்நிலையும் November 4, 2024 — கருணாகரன் — ஜனநாயக அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வாய்ப்பையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி, தங்களுடைய ஆட்சிப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதை மக்கள் எப்போதும் சரியாகத்தான் செய்கிறார்களா? பல சந்தர்ப்பங்களிலும் இல்லை. அல்லது குறைவு என்றே சொல்ல வேண்டும். சரியான முறையில் (பொருத்தமான) நற்கொள்கை, சிறந்த செயலாற்றல், நற்பண்பு, பொறுப்புக்கூறும் கடப்பாடு போன்றவற்றைக் கொண்ட தரப்பைத் தெரிவு செய்திருந்தால் – தவறான தரப்பை நிராகரித்திருந்தால் நாடும் சமூகமும் (மக்களும்) பல முன்னேற்றங்களை எட்டியிருக்கும். இப்போதுள்ள பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி போன்றவற்றில் சிக…
-
- 0 replies
- 244 views
-
-
எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 செப்டெம்பர் 04 புதன்கிழமை, பி.ப. 08:16 கடந்த நான்காண்டு காலங்களில், இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாததையிட்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறைகூறியிருக்கிறார். இனப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கக்கூடிய வகையில் அரசமைப்பை மாற்றியமைக்காது, நான்காண்டுகளை வீணடித்தாகவும் அரசாங்கத்தை அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த வாரம், யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயத்தின் போதே, அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது, முற்றிலும் தவறான குற்றச்சாட்டல்ல; அதேவேளை, முற்றிலும் நியாயமான குற்றச்சாட்டுமல்ல. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண…
-
- 0 replies
- 794 views
-
-
பட்ஜெட் விவாதமும் பாதாள உலக கொலைகளும் March 5, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி பட்ஜெட்டின் இரண்டாவது வாசிப்பு கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தற்போது அதன் குழுநிலை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரையான விவாதங்களில் பெரும்பாலான எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட்டின் பொருளாதாரத்தை விடுத்து பட்ஜெட்டின் அரசியலையே பேசினார்கள். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் பொருளாதாரத்தை கையாளும் ஜனாதிபதி திசாநாயக்க ஜனதா விமுக்தி பெரமுனவ…
-
- 0 replies
- 266 views
-
-
சிதையும் தமிழர் அரசியல் கட்சிகள்: நிலை தடுமாறும் தமிழ்த் தேசியம் -க. அகரன் ‘சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த’ கதையாகி இருக்கும் தமிழர் அரசியல் களம், தொடர்ந்தும் நிதானமின்றிப் பயணிக்கின்றதா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் மக்கள், தமது அரசியல் தலைமைகளிடம் ஒற்றுமையின் தேவையை உணரச் செய்கின்ற போது, அரசியல் தளத்தில் இருக்கின்றவர்கள், தமக்குள் இருக்கும் காழ்ப்புணர்ச்சிகளைக் கக்கியவாறு, தமக்கான தனித்தனித் தளங்களை ஆரம்பிக்கும் படலங்கள் தொடங்கியுள்ளன. தனிக்கட்சி அரசியலும் அதன் பின்னரான கூட்டும் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளிடம் நாகரிகமாக ஒட்டிக்கொண்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கின்ற போது, த…
-
- 0 replies
- 381 views
-
-
பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை முருகானந்தன் தவம் இலங்கையின் எம்.பிக்களின் சொத்து பற்றிய அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 30ஆம் திகதி முடிவடைந்த போதிலும், 175 எம்.பிக்களில் 80 பேர் இன்னும் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவில்லை, அதன்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்காத எம்.பி.க்கள் மீது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது . இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்டத்தின்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறும் எம்.பிக்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அதிகாரமும் ஆணையத்திற்கு உள்ளது. ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒவ்வொரு ஆண…
-
- 8 replies
- 575 views
-
-
[size=4]2009-ஆம் ஆண்டில் இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. அதையடுத்து, போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் அடைக்கலம் தேடினர்.[/size] [size=4]போர் முடிந்த தற்போதைய சூழலில் அவர்களுக்குள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஊடுருவினார்களா என்பதைக் கண்டறிய முகாம்களில் தஞ்சமடைந்தவர்களிடம் விசாரணை, சோதனை என்ற பெயரில் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.[/size] [size=4]போரின்போது வசிப்பிடங்களை விட்டு வந்த மக்களை மீண்டும் அவர்களின் சொந்தப் பகுதிகளுக்கே மீள்குடியேற்றம் செய்வது இலங்கைத் தமிழர் மறுவாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.[/size] [size=4]அந்த மக்களுக்கு வீடுகள் கட்டித் தருவது, வாழ்வாதாரத் திட்டங்களை உருவாக்குவது …
-
- 0 replies
- 825 views
-
-
வெறுந்தேசியம் விலையாகுமா? – அரிச்சந்திரன் ஈழத்தமிழர்கள் வாழ்வில் கொடிய அவலங்களை சுமந்த கனத்த நாட்களின் எண்ணங்களை அனைவரும் மீளநினைவு கொள்ளும் நாள் மே 18. இவ்வாண்டு தாயகத்திலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் நினைவு நாட்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளன. தாயகத்தில் வழமையை விட நெருக்குவாரங்கள் குறைந்தபோதும் கனதியான நிகழ்வுகளாக அந்நாள் நினைவுகூரப்படவில்லை. இம்முறை பொறுப்போடு நினைவுகூரப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் முள்ளிவாய்க்காலில் கூட வடமாகாணசபை என்று தனித்தும் தமிழத்தேசிய மக்கள் முன்னனி என்று பிரித்தும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. வழமையாக பெருமளவில் மக்கள் திரண்டுகொள்ளும் தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளும் இம்முறை அந்த கனதியை இழந்துவி…
-
- 0 replies
- 617 views
-
-
மாவட்ட அபிவிருத்தி தலைவர் பதவி வட கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படும் என பகல் கனவு கண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆப்பு வைத்தார்கள் மைத்திரியும் ரணிலும்... தற்போது யாழ், கிளிநொச்சி,வன்னி மாவட்டத்தை பொறுத்தமட்டில் முதலமைச்சர் தமிழர் விஐயகலா தமிழர் அங்கயன் தமிழன் பறவாய் இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தமட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் மூன்று அதில் இரண்டு பேர் பிரதி அமைச்சர்கள் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் முஸ்லிம் ஊருக்கு ஒரு எம்.பி, ஓட்டமாவடிக்கு அமிரலி, ஏறாவூருக்கு மௌலானா, காத்தான்குடிக்கு ஹிஸ்புல்லா, இவர்களுடன் மாவட்ட இணைத்தலைவராக முதலமைச்சர் ஹாபிர் நஸீர் நான்கு பேர் இஸ்லாமியர்கள் 75 வீதம…
-
- 0 replies
- 681 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் விவகாரம் குறித்த சர்ச்சை மீண்டும் சூடுபிடித்துள்ளது. கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது தொடங்கிய சில மனக்கசப்புகள், தேர்தல் முடிவு வெளியானதும் பொருமி வெடித்தது. நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை, சூடுகிளப்பிய நிலையில், ஈபிஆர்எல்எவ், ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இணைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஒரு கடிதம் எழுதினர். அதை ஒரு இரகசியமாக கடிதமாக பேணாமல், ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதன் மூலம், கூட்டமைப்புக்குள் சிக்கல்கள் உள்ளன என்று வெளிக்காட்ட அவர்கள் முற்பட்டனர். அதற்கிடையில், இந்தியப் பயண…
-
- 1 reply
- 579 views
-
-
கஜேந்திரகுமாரா? சுமந்திரனா?: தமிழ்த் தேசியமும் குழாயடிச் சண்டைகளும் இன்றைய பரந்துபட்ட சமூக வாழ்க்கை முறையை அடைந்து கொள்வதற்கு முன்னதாக, சிறு குழுக்களாக மனிதன் வாழ்ந்துவந்தான். இந்தக் குழுக்களிடையே மிக நெருக்கமான ஒற்றுமையிருந்தது. தம் குழு ஒற்றுமையையும் விசுவாசத்தையும் ஏனைய அனைத்தையும் விட உயர்வானதாகவும், மதிப்பானதாகவும் அந்தக் குழு உறுப்பினர்கள் கருதினார்கள். இதன் மறுபக்கம், தமது குழு அங்கத்தவர்கள் அல்லாதவர்களுடன் அத்தகைய ஒற்றுமையும் மதிப்பும் இருக்கவில்லை. மேலும், தம் குழு அங்கத்தவர்கள் அல்லாத சிலருடன், எதிர்ப்பும் வைரியமும், போட்டியும் வெறுப்பும், துவேசமும் கூட ஏற்பட்டது. இத்தகைய 'குழுக்களாக' இயங்கும் மனப்பான்மையைச் சிலர் tribalism என்று விளிக்கிறார்கள…
-
- 0 replies
- 490 views
-
-
-
- 0 replies
- 619 views
-
-
இடையே எந்த அசம்பாவித முடிவுகளும் எடுக்கப்படாதவிடத்து, இந்திய நாட்டின் ஆட்சி பீடத்திற்கான தேர்தலுக்கு இன்னமும் 16 மாதங்களே இருக்கின்றன. பெரும்பாலும் அடுத்த ஆட்சி காங்கிரஸ் அல்லாத கட்சிகளாலேயே அமைக்கப்படும் என்றே கருத்துக்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களும், அதிருப்திகளும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வெகுவாக அதிகரித்துள்ளன. இந்த நிலையில், காங்கிரசின் பிரதித் தலைவராகவும், அடுத்த பிரதமர் வேட்பாளராகளும் ராகுல் காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். சோனியா காந்தியைத் தலைவராகக் கொண்ட காங்கிரஸ் கட்சி தற்போது, அவரது குடும்பச் சொத்தாகவே மாற்றம் பெற்றுள்ளது. இதனால், எதிர்வரும் தேர்தல் சோனியா குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தையும் சேர்த்தே நிர்ணயம் செய்யப்…
-
- 0 replies
- 752 views
-
-
இலங்கை நாட்டிலே இழைக்கப்பட்ட அட்டூழிங்கள் குற்றச்செயல்களையிட்டு நடந்து முடிந்துவிட்ட சம்பவங்களின் விளைவாக அர்த்தமுள்ள வழக்குகளை நடாத்துவதற்கு வழிவகுக்கும் விதத்திலே, இலங்கைச் சட்டத்துக்குள் சர்வதேசக் குற்றச்செயல்களும் உள்ளடக்கப்படவேண்டும் என நானும் எலியானோர் வெர்மன்ட் என்பவரும் (Eleanor Vermunt) அண்மையிலே பதிப்பிக்கப்பெற்ற கட்டுரையொன்றிலே வாதித்திருந்தோம். ஆயுதப்போர் முடிவுக்கு வந்ததுதொட்டு, சர்வதேச மனிதநேயச் சட்டங்களின் மீறல்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் மீறல்கள் ஆகியவைகள் தொடர்பாகப் பல்வேறு உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகப்பற்றற்ற குற்றச்சாட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பல ஐ.நா. அறிக்கைகளின்படி இந்தக் குற்றச்சாட்டுகள் – அவை நிரூபிக்கப்படும் பட்சத்திலே…
-
- 0 replies
- 348 views
-
-
தமிழக மாணவர் எழுச்சியும் ஐ.நா தூக்குத் தண்டனை நாடகமும் : சபா நாவலன் வன்னிப் படுகொலை விட்டுச் சென்றிருக்கும் வருடாந்த வைபவங்களுள் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஊடாக ராஜபக்சவைத் தூக்கில் போடுவோம் என்ற பெயரில் நடத்தப்படும் சந்தர்ப்பவாதிகளின் ஒன்றுகூடல் பிரதானமானதாகும். அவலங்களின் அழுகுரல்கள் நான்கு வருடங்களின் பின்னர் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்க மக்கள் ராஜபக்சவை யாராவது தண்டித்து விடுவார்கள் என நாட்களை நம்பிக்கையோடு ஓட்டுகிறார்கள். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் கூடுவதற்கு சற்று முன்னதும் பின்னதுமாக புலம் பெயர் நாடுகள் தூக்குததண்டனை நாடகம் ஆரம்பித்துவிடும். நாடகத்தில் நடிப்பதற்காக புலம்பெயர் தமிழ் அரசியல் தலைவர்கள், இலங்கை அரசு, அமரிக்க அரசு, இந்தியா, தமிழ் நாட்டின் அ…
-
- 2 replies
- 851 views
-
-
தமிழர்களும் புதிய அரசியல் அமைப்பும்.! கொரோனா பிரச்சனைக்கும் மத்தியிலும் இலங்கையின் அரசியல் அரங்கிலே புதிய அரசியலமைப்பிற்கான சட்டமூலத்தைத்தயாரிப்பதற்கு நீதி அமைச்சு பொதுமக்களிடமிருந்து கருத்துக்களையும் யோசனைகளையும் கோரியுள்ளது. சுருக்கமான கருத்துகளையும் யோசனைகளையும் நிபுணர்குழு வரவேற்பதாகவும், மக்கள் தமது கருத்துகள் மற்றும் யோசனைகளைப் பதிவுத்தபால் மற்றும் expertscommpublic@yahoo.com என்னும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றினூடாக அனுப்பி வைக்க முடியுமென்றும், இது சம்பந்தமாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுதந்திர இலங்கையின் அரசியலமைப்பு சம்பந்தமான வரலாறுகளைச் சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போம். ஆங்கிலேய ஆட்சியினால் அறிமுகம் செ…
-
- 0 replies
- 610 views
-
-
-
- 0 replies
- 493 views
-
-
போட்டி அரசியலால் புதையும் சமூகம் – துரைசாமி நடராஜா 22 Views பெருந்தோட்டத் தொழிற்றுறையின் சமகால போக்குகள் திருப்தி தராத நிலையில், தோட்டங்களின் இருப்பு மற்றும் இம்மக்களின் அடையாளம் குறித்து அச்சமான சூழ்நிலை இப்போது மேலெழுந்திருக்கின்றது. இத்துறையைக் கொண்டு நடாத்துவதில் நிறுவனத்தினர் வெளிப்படுத்தும் பிடிவாத மற்றும் பொருத்தமற்ற கையாளுகைகள் தொழிலாளர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றன. இதேவேளை மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகளின், இம்மக்கள் குறித்த பாராமுகமும், இம்மக்களின் எழுச்சி குறித்த சிந்தனைகளை மழுங்கடித்திருக்கின்றன. இந்நிலையில், அரசியல் தொழிற்சங்க மாயைகளில் இருந்து விடுபட்டு கல்விமையச் சமூகமாக மலையக சமூகம் உருவெடுக்கும் பட்சத்திலேய…
-
- 0 replies
- 424 views
-
-
மருந்து தேடவேண்டிய இரட்டைத் தலையிடிகள் மொஹமட் பாதுஷா எத்தனை அனுபவங்களைப் பெற்றுக் கொண்ட போதிலும், ஆட்சியாளர்களும் நாட்டு மக்களும் வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே, தொடர்ச்சியாக இடம்பெறும் நிகழ்வுகள் வெளிக்காட்டி நிற்கின்றன. குறிப்பாக, சிறுபான்மையினச் சமூகங்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்பதில், பெரும்பான்மையின அரசியல் தலைமைகள், அக்கறையாக இருப்பதாகத் தெரியவில்லை. பேரினவாதிகளைத் திருப்திப்படுத்திக் கொண்டு, காலத்தைக் கடத்தவே அவர்கள் பெரிதும் விரும்புகின்றனர். உரிமைக் கோரிக்கை, ஜனநாயகம், சமத்துவம், இனப்பாகுபாடின்மை, இனநல்லிணக்கம், பாரபட்சமற்ற நீதி நிலைநாட்டல் பற்றிய கேள்வ…
-
- 0 replies
- 407 views
-
-
-
- 0 replies
- 716 views
- 1 follower
-
-
கொழும்பு கோல் பேஸ் திடல் மஹிந்தவின் ஆதரவாளர்களால் நிரம்பிவழிந்தது. இதன் மூலம் மஹிந்த தனது மக்கள் செல்வாக்கை மீளவும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றார். இதேபோன்று ஜக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் கூட மே தினத்திற்கென பெருந்தொகையான மக்களை அணிதிரட்டியிருந்தன. ஆனால், இதில் உள்ள அடிப்படையான வேறுபாடு – மஹிந்த ஒரு தோல்வியடைந்த ஜனாதிபதி ஆவார். ஒரு தோல்வியடைந்த ஜனாதிபதியின் பின்னால் ஏன் இவ்வளவு மக்கள் கூட்டம்? ஆட்சி மாற்றத்தால் மஹிந்தவை அதிகாரத்திலிருந்து அகற்ற முடிந்தாலும் கூட, தெற்கின் அரசியல் அரங்கிலிருந்து அகற்ற முடியவில்லை என்பதுதான் இதன் பின்னாலுள்ள செய்தி. ஆரம்பத்தில் புதுச்செருப்பு கடிக்கும் என்பது போல், மஹிந்த மற்றும் அவரது சகாக்கள் மீது புதிய அரசாங…
-
- 0 replies
- 446 views
-