Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. நிகழ்நிலை காப்புச் சட்டம்? – நிலாந்தன். “சமூக ஊடகங்களை தணிக்கை செய்யக்கூடாது. விமர்சனம் செய்யும் உரிமை அனைவருக்கும் உள்ளது. என்னை பற்றி எதனையும் கூறட்டும். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டபோது மஹிந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஆனால் அவருடைய கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.சந்திரசேன,கட்சியின் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது சமூக ஊடகங்களுக்கு ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். சமூக ஊடகங்களையும் கைபேசிச் செயலிகள் வழியாகப் பகிரப்படும் விடயங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை…

  2. தமிழ் இன விடுதலைப் போராட்டம்” என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் குறித்த தமிழ் இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாத ஒன்று ஒட்டு மொத்த மக்களும் விடுதலையென்ற ஒரே இலட்சியத்துக்காகத் தமது பங்களிப்பைச் செய்ய முன்வர வேண்டும். அவ்வாறு முன்வரும் போது தான், விடுதலைக்கான மக்கள் புரட்சியும், அதன் மூலமான இன விடுதலையும் சாத்தியமாகும். தமிழர் நாம் ஆண்ட பூமி தமிழுக்கும், தமிழ் மக்களுக்குமான தனித்துவ வரலாற்றைக் கொண்டு வாழ்ந்த இனம். தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட “தனிநாடு தமிழீழம்” வேண்டும் எனப் பிரகடனப்படுத்தி சர்வதேச சமூகத்தைத் தமிழர் தேசத்தின் பால் திரும்பிப் பார்க்க வைத்த இன விடுதலைப் போராட்டம்.…

  3. ஒரு புலப்பெயர்ச்சி அலை? நிலாந்தன். கனடாவில் வசிக்கும் ஒரு நண்பர் சொன்னார்..கனடாவுக்கு விசிட் விசாவில் வருபவர்களுக்கு படிவங்களை நிரப்பி கொடுப்பதற்கு என்று கிட்டத்தட்ட 30 மையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன என்று.அம்மையங்களில் ஒரு படிவத்தை நிரப்புவதற்கு ஆயிரம் கனேடியன் டாலர்கள் அறவிடப்படுகின்றன என்றும் அவர் சொன்னார்.கிட்டத்தட்ட இலங்கை ரூபாயில் இரண்டரை லட்சம். கனடாவில் இருக்கும் தமிழர்கள் தாயகத்தில் உள்ள தமது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களை அவ்வாறு அழைக்கலாம் என்று ஒரு கதை பலமாக உலாவுகிறது. அதனால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமல்ல, நண்பர்கள் தெரிந்தவர்கள் போன்றவர்களும் கனடாவில் இருப்பவர்களை அனுகி தமக்கு விசா பெற்றுத் தருமாறு கேட்கின்றார்கள். இது சம்பந்தமாக அண்…

  4. முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா ? - நிலாந்தன் திருகோணமலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகன ஊர்தி தாக்கப்பட்டிருக்கிறது. திலீபனின் படத்தை ஏந்திய அந்த ஊர்தி கடந்த ஆண்டும் அந்த வழியால் சென்றிருக்கிறது. இது இரண்டாவது தடவை. அது தாக்கப்பட்ட இடம் கல்லோயா குடியேற்றத் திட்டத்தின் கீழ் அபகரிக்கப்பட்ட தமிழ் நிலம். கடந்த ஆண்டு அந்த ஊர்தி குறிவைக்கப்படவில்லை. இந்தமுறை தான் அது குறிவைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஊர்தியை குறிவைத்து அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்பது ஏற்கனவே மட்டக்களப்பில் உணர்த்தப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு தாக்குதலை முன்னணி எதிர்பார்க்கவில்லை என்பது காணொளிகளைப் பார்க்கும் பொழுது தெரிகிறது. தம்மைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான ஆளணிகளோடு அவர்கள் வ…

  5. ராஜனி திராணகம: நெருக்கடிக்கு மத்தியில் அறிவும் செயற்பாடும் Mahendran Thiruvarangan on September 22, 2023 “என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால், அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படும் ஒரு துப்பாக்கியாக இருக்காது. மாறாக எனது வரலாற்றைப் பகிர்ந்துகொள்ளும், இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்.” 1989-09-15ஆம் திகதி ராஜனி தனது நண்பர் ஒருவருக்கு இறுதியாக எழுதிய கடிதத்திலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் உடற்கூற்றியற் துறையின் தலைவராகவும், மனித உரிமைச் செயற்பாட்டாளராகவும் 1980களில் யாழ்ப்பா…

  6. சனல் 4, ஜ.எஸ்.ஜ.எஸ் தாக்குதலை மடைமாற்றுகின்றதா? - யதீந்திரா சணல் 4 தொலைகாட்சியின் கானொளி இலங்கை அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்தக் கானொளியின் இலக்கு என்ன, என்பதற்கான பதில் அந்தக் காணொளியிலேயே இருக்கின்றது. பிள்ளையானின் பேச்சாளராக இருந்தவரான ஆசாத் மௌலானா என்பவரால் கூறப்படும் விடயங்கள்தான், குறித்த காணொளியின் பிரதான விடயமாகும். அவரது கூற்றின்படி, இந்தக் தாக்குதலானது, ராஜபக்ச குடும்பத்தை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு சதி நடவடிக்கையாகும். இதில் பிள்ளையானும் தொடர்புபட்டிருக்கின்றார். பிள்ளையானுடன் இருந்த ஒருவர் என்னும் வகையில் பிள்ளையானுடன் தொடர்புடுத்தியே, மௌலானா விடயங்களை கூறுகின்றார். அப்படிக் கூ…

  7. “நல்ல” அரசியல்வாதிகளை மக்கள் ஏன் தேர்ந்தெடுப்பதில்லை? என்.கே அஷோக்பரன் “என்னது அரசியல்வாதிகளுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுப்பதும், தேர்ந்தெடுத்த பின் அவர்கள் சரியில்லை என்று புலம்புவதும் ஒரே ஆட்களா?” என்பது போலத்தான் உலகளவில் ஜனநாயக நாடுகளில் வாழும் கணிசமானளவு மக்களின் நிலை இருக்கிறது. மக்களே தான் தேர்ந்தெடுக்கிறார்கள், தாம் தேர்ந்தெடுத்தவர்கள் பற்றி மக்களே தான் அசூயையும், அதிருப்தியும் கொள்கிறார்கள். மீண்டும் கொஞ்ச நாளில் தாம் வெறுத்த அதே நபர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். நல்லவர்கள், வல்லவர்கள் எல்லாரும் அரசியலுக்கு வருவதில்லை. பலரும் வர விரும்புவதில்லை. அதற்குப் பல காரணங்களுண்டு. அது தனத்து ஆராயப்பட வேண்டிய விடயம். ஆனால், அரசியலில் உள்ளவர்களுள், நல்லவர்…

  8. தமிழர் கட்சிகளின் நிறம் September 19, 2023 —- கருணாகரன் — ஈழத் தமிழர்களின் அரசியல் இன்று பிரதானமாக மூன்று வகைப்பட்டதாக உள்ளது. ஒன்று, “தமிழ்த் தேசிய அரசியல்” என்ற பிரகடனத்தின் கீழ் அரச எதிர்ப்பு மற்றும் தமிழின விடுதலையை மையப்படுத்திப் பேசுவதாகும். இதற்குத்தான் தமிழ்ப் பெருந்திரளினர் ஆதரவளிக்கின்றனர். இதனால் இந்தத் தரப்பே பாராளுமன்றத்திலும் மாகாண சபை, உள்ளுராட்சி மன்றங்கள் போன்றவற்றிலும் முன்னிலையில் உள்ளது. 1980 – 2009 வரையில் இது ஆயுதப் போராட்ட அரசியலாக – செயற்பாட்டு அரசியலாக இருந்தது. 2009 க்குப் பின்னர், செயற்பாட்டுப் பாரம்பரியம் இல்லாதொழிந்து, பேச்சு அரசியலாக – அறிக்கை அரசியலாகச் சுருங்கி விட்டது. அதனால்தான் இதை “தமிழின விடுதலையை மையப…

  9. எமது முன்னாள் ஜனாதிபதிகளின் அரசியல் September 18, 2023 —- வீரகத்தி தனபாலசிங்கம் — றொடீசியா என்று முன்னர் அழைக்கப்பட்ட ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில் சிறுபான்மை வெள்ளையரின் ஆட்சிக்கு எதிரான கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் றொபேர்ட் முகாபே. வெள்ளையர் ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்ட பிறகு அவர் 1980 தொடக்கம் 1987 வரை அந்த நாட்டின் பிரதமராகவும் 1987 தொடக்கம் 2017 வரை ஜனாதிபதியாகவும் பதவிவகித்தார். மொத்தமாக 37 வருடங்கள் அவர் ஆட்சியதிகாரத்தில் இருந்தார். அதிகாரத்தில் இருந்து இறங்கவிரும்பாமல் நீண்டகாலமாக பதவியில் இருந்த முகாபேயிடம் ஒரு தடவை செய்தியாளர் ஒருவர், “நீங்கள் எப்போது சிம்பாப்வே மக்களுக்கு பிரியாவிடை கொட…

  10. 18 SEP, 2023 | 05:27 PM சுகு­மாரன் விஜ­ய­குமார் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை பற்றி இப்போது பலரும் கதைத்து வருகின்றனர். கிரா­மங்­களில் வாழும் மக்­க­ளுக்கு வசிப்­ப­தற்­காக 20 பேர்ச்சஸ் அல்­லது அதற்கு அதி­க­மான அரசக் காணிகள் சட்ட ரீதி­யாக உரித்­துடன் வழங்­கப்­ப­டு­கின்­றன. எனினும் மலை­யக மக்­க­ளுக்கு வசிப்­ப­தற்­காக 1995ஆம் ஆண்டு தொடங்கி இது­வரை ஒரு குடும்­பத்­துக்கு 7 பேர்ச்சஸ் அளவு காணியே வழங்­கப்­பட்­டுள்­ளது. அவையும் சட்ட உரித்து அற்­ற­வை­க­ளாகும். 1972 ஆம் ஆண்டு 01ஆம் இலக்க காணி சீர்­தி­ருத்த ஆணைக்­குழு சட்­டத்தின் பிரிவு 3(3) இன் பிர­காரம் பெருந்­தோட்­டங்­களில் லயன் வீடு­களில் குடி­யி­ருக்கும் குடும்­பங்­க­ளுக்க…

  11. 2019 குண்டு வெடிப்புக்களை கோட்டா திட்டமிட்டு இருக்கலாமா? எம்.எஸ்.எம். ஐயூப் பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தனின் முள்ளாள் அந்தரங்கச் செயலாளரான அன்ஸீர் அசாத் மௌலானாவுடன் நடத்திய நேர்காணலொன்றை மையமாக வைத்து பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்து கடந்த வாரம் வெளியிட்ட விவரணத் திரைப்படம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2018 ஆண்டு ஜனவரி மாதம் தாம் பிள்ளையானின் ஆலோசனையின் படி அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலேக்கும் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில பல இடங்களில் தற்கொலை குண்டுகளை வெடிக்கச் செய்து 269 பேரை படுகொலை செய்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ச…

  12. சனல் நாலு வீடியோ ஏற்படுத்திய அதிர்வுகள்? நிலாந்தன். “போர் தொடர்பில் நான் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன்.போர் என்பது கூட்டு முயற்சியாகும்.. போரை ஜெனரல் ஒருவரால் செய்ய முடியாது. கூட்டு முயற்சியின் அவசியத்தை கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை நான் எனது கட்டுரைகளில் சுட்டிக் காட்டி இருந்தேன். ராணுவத்தால் மட்டும் போர் செய்ய முடியாது. கடற்படை இருக்க வேண்டும். வான்படை இருக்க வேண்டும். நமக்கு சிவில் பாதுகாப்பு படை இருந்தது. போலீசாரின் ஒத்துழைப்புக் கிடைத்தது. சிறந்த அரசியல் தலைமைத்துவம் இருக்க வேண்டும். பிக்குகள் எம்மை தைரியப்படுத்தினர். வைத்தியர்கள் தாதிமார் சிகிச்சை அளித்தனர். மக்கள் வரி செலுத்தினர். தமது பிள்ளைகளை நாட்டுக்காக வழங்கினர். அமெரிக்கா நமக்கு தொழில் நுட்ப உதவிகளை …

  13. சீமானை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா? இன்று தமிழ்நாட்டில் ஈழத்தமிழரின் அவலங்களை, அவர்கள் மீது நடத்தப்பட்ட இனக்கொலையினை அப்பட்டமாக பொதுவெளியில் மிகவும் வெளிப்படையாகப் பேசிவருபவர் சீமான் மட்டும் தான் என்பதில் எவருக்கும் ஐய்யமிருக்க வாய்ப்பில்லை. இன்றுவரை தமிழ்நாட்டில் இருந்த அரசியல்வாதிகளில் மிகவும் வெளிப்படையாக இலங்கையினையும், இந்தியக் காங்கிரஸையும் நேரடியாகவே ஈழத்தமிழர் படுகொலையின் சூத்திரதாரிகள் என்று சீமான் குற்றஞ்சாட்டுவதுபோல வேறு எவருமே செய்ததில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டில் உள்ள தமிழ் இன உணர்வுள்ளவர்களிடையே எமது போராட்டம் பற்றியும், தலைமை பற்றியும், எம்மீது நடத்தப்பட்ட படுகொலைகள் பற்றியும் சீமான் பல விடயங்களை எடுத்துச் சென்றிருக்கிறார். எமது போராட்…

  14. நைஜரின் ஒளிரும் யுரேனியம் sudumanal 1 நைஜர் (Niger) என்ற நாடு நைஜீரியா, சாட், அல்ஜீரியா, மாலி, புர்கீனோ பாஸோ, லிபியா, பெனின் நாடுகளுடன் எல்லையைக் கொண்டது. 27 மில்லியன் சனத்தொகை உள்ள நாடு நைஜர். யுரேனியம், தங்கம், பிளாற்னம் போன்ற இயற்கை வளங்களைக் கொண்ட நாடு அது. ஆனால் அதை அவர்கள் அனுபவித்ததில்லை. வறுமையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். யுரேனியத்தில் இயங்கும் பிரான்ஸின் அணுஉலைகள் பிரான்சுக்கான மின்சாரத்தை மட்டுமல்ல, ஜேர்மனி உட்பட சில ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி மின்சாரத்தையும் உருவாக்குகின்றன. பிரான்சுக்கான தேவையின் மூன்றிலொரு பகுதி மின்சாரத்தை நைஜர் யுரேனியம் வழங்குகிறது. பிரான்ஸ் முழுவதும் மின்சாரம் ஒளிபாய்ச்சிக் கொண்டிருக்க, ந…

    • 6 replies
    • 1.1k views
  15. சனாதனமும், பாரதமும்: ஆரிய மாயையின் வரலாற்று வடிவங்கள்! Sep 11, 2023 07:00AM IST ராஜன் குறை அண்ணா தன் நூலுக்கு ஆரிய மாயை என்று பெயர் சூட்டக் காரணம் ஆரியம் பிறரை மயக்கி தன்னை ஏற்கச் செய்யும் தன்மை கொண்ட து என்பதைக் குறிக்கத்தான். ஆரியம் என்று ஒன்றுமில்லை; அப்படி இருப்பது போல மாயத்தோற்றம் மட்டும்தான் இருக்கிறது என்ற பொருளில் அவர் அந்த பெயரைச் சூட்டவில்லை. ஆரியம் என்று ஒன்று இருக்கிறது. அது பிறருக்கு நன்மை தருவது போல தோற்றமளித்து அவர்களையும் தன் கருத்தியலை ஏற்கச் செய்கிறது என்பதைக் குறிக்கவே அவர் ஆரிய மாயை என்று பெயர் வைத்தார். நாம் அந்த மாயைக்கு ஆட்படாமல், ஆரியத்தின் உண்மையான தன்மையை அறிய வேண்டும். நானும், நண்பர்கள் ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன், வ…

    • 2 replies
    • 769 views
  16. கனடாவிற்கு செல்லுதல் ? - யதீந்திரா தமிழர் வாழ்வில் புலப்பெயர்வு மிகவும் கவர்சிகரமான ஒன்று. எவருக்கு புலம்பெயர விரும்பமில்லை என்று கேட்டால் – இல்லையென்று சொல்பவர்கள் அரிதானவர்களாகவே இருக்க முடியும். அந்தளவிற்கு அது ஒரு கவர்சிமிக்க வாழ்வாகிவிட்டது. தமிழர் அரசியலில் தீர்க்கதரிசிகள் எவரும் இருந்ததாக தெரியவில்லை. செல்வநாயகம் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென்று ஒரு முறை கூறியிருந்தார். அதனையும் ஒரு தீக்கதரிசன பார்வையென்று கூறிவிட முடியாது – ஏனெனில், கடந்த 74 வருடகால அரசியல் நகர்வில், தமிழ் மக்களை கடவுளும் காப்பாற்றவில்லை. இருந்ததையும் இழந்து, இருப்பதையும் பாதுகாக்க முடியாதவொரு கையறு நிலையில்தான் தமிழினம் திண்டாடிக்…

  17. தெற்கில் இருந்து கிளம்பும் சர்வதேச விசாரணைக் கோரிக்கைகள் September 12, 2023 — வீரகத்தி தனபாலசிங்கம் — பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசை இலங்கை விவகாரங்கள் தொடர்பில் விவரணக் காணொளிகளை வெளியிடும் சந்தர்ப்பங்களில் எல்லாம் கிளம்பும் சர்ச்சைகள் சர்வதேச கவனத்தை ஈர்த்துவிடுகின்றன. உள்நாட்டுப் போரின் இறுதி வாரங்கள் பற்றி ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ ( Sri Lanka’s Killing fields ) என்ற தலைப்பில் 12 வருடங்களுக்கு முன்னர் சனல் 4 வெளியிட்ட புலனாய்வு விவரணக் காணொளியை நாம் எல்லோரும் பார்த்தோம். 2011 ஜூன் 14 ஒளிபரப்பான ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ பிரிட்டனின் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் விரிவிளக்கமான விவரணக் காணொளிகளில் ஒன்று என்…

  18. இலங்கை அரசியல் இனவாதத்தில் இருந்து மீளாதா? September 11, 2023 — கருணாகரன் — “இலங்கை அரசியல் இனவாதத்திலிருந்தும் இன அடையாளத்திலிருந்தும் மீளாதா? இனப்பிரச்சினைக்கு முடிவு வராதா? தீர்வு கிடைக்காதா? இனவெறிக் கூச்சல்கள் அடங்காதா…” என்று புலம்பெயர் நாடொன்றிலிருந்து வந்த ஒரு இளைஞர் சில நாட்களுக்கு முன்பு கேட்டார். அவருடைய கண்களில் பெரிய ஏக்கம் நிறைந்திருந்தது. அவர் காண விரும்புவது வேறொரு இலங்கையை. வேறொரு அரசியற் களத்தையும் அரசியல் பண்பாட்டையும். இன சமத்துவமும் பல்லினத்தன்மைக்குரிய இடமும் ஐக்கியமும் அமைதியும் தேசத்தின் மீதான அக்கறையும் கொண்ட சூழலை அவர் விரும்புகிறார் என்பதை அவருடன் தொடர்ந்த உரையாடலின்போது உணர்ந்தேன். “உலகம் எப்படி மாறிக் கொண்டுள்…

  19. பேராயர் மல்கம் ரஞ்சித்தின் மனட்சாட்சி ஆயர் இராஜப்பு ஜோசப் சொன்னது என்ன? சிங்கள ஆட்சியாளர்கள், சிங்கள இராணுவ உயர் அதிகாரிகள் சிலரினால் கையாளப்பட்ட தமிழ் – முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் 2009 முள்ளிவாய்க்கல் போரின்போது தமிழர் தாயகப் பிரதேசங்களில் தேசியத்தை மலினப்படுத்தும் அசிங்கமான அரசியலில் (Ugly Treacherous Politics) ஈடுபடுத்தப்பட்டிருந்தன என்பதை சனல் 4 வெளியிடவில்லை. இந்த அசிங்க அரசியலின் தொடர்சிதான் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல். அங்கிருந்துதான் சனல் 4 ஆவணப்படத்தைத் தயாரித்திருக்க வேண்டும். அ.நிக்ஸன்- 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்திரதாரி யா…

  20. COLUMNSசிவதாசன் ‘சனல் 4’ விவகாரம்: ராஜபக்சக்களின் அதிர்ஷ்டம் சிவதாசன் “‘சனல் 4’ ராஜபக்சக்களுக்கு எதிராக வன்மத்துடன் செயற்படுகிறது” என்கின்றனர் ராஜபக்ச குடும்பத்தினர். “‘சனல் 4’ புலம் பெயர் தமிழர்களுக்கு ஆதரவாக இயங்குகிறது என்கிறார் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச. “உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்க சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கு இலங்கை தயார்” என்கிறார் ஜனாதிபதி விக்கிரமசிங்க. போதாததற்கு நாட்டை விட்டுத் தப்பியோடி மீள வந்த வாயில்லாப் பிராணி கோதாபயவையே வாய் திறக்க வைத்துவிட்டது ‘சனல் 4’. சூத்திரதாரி மஹிந்த அதிர்ஷ்டம் தன்னை நோக்கி ஓடிவருவதைப் பார்த்து எகத்தாளமாகச் சிரித்துக்கொண்டிருக…

  21. ஒரு கர்தினாலுக்குக் கிடைத்த வெற்றி? நிலாந்தன். சனல் நாலு வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் அரச சேவை அதிகாரிகளை உள்ளடக்கியதாக இக்குழு அமையும்.இக்குழுவை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரட்ணாயக்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித் பண்டார தென்னகோன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், சனல் நாலு வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் ஆராய பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். ஆனால்,இலங்கையில் க…

  22. சனல் நாலு யாருக்கு நன்மை செய்கின்றது? நிலாந்தன். September 10, 2023 சனல் நாலு மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறது. முன்னைய வீடியோவைப் போலவே, இதுவும் ஜெனீவா கூட்டத்தொடரை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் கூறப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால், இலங்கைத் தீவின் அரச கட்டமைப்பும் அதன் உபகரணங்களும் எந்தளவுக்கு நம்பகத்தன்மையற்றவை என்பதனை அது வெளிப்படுத்தியிருக்கிறது. அசாத் மௌலானா அந்த வீடியோவின் இறுதிப் பகுதியில் கூறுகிறார்… ” அதிகாரத்துக்காக தமது சொந்த மக்களையே கொன்றிருக்கிறார்கள்” என்று. அசாத் மௌலானா பிள்ளையானின் உதவியாளராக இருந்தவர். அவருடைய தகப்பன் ஈ.பி.ஆர்.எல்எப். இயக்கத்தில் இருந்தவர். சொந்தப் பெயர் மிகிலார். இயக்கப் பெயர் கமலன். தமிழகத்தில் …

  23. ஜே.வி.பி விதைத்த விஷக் கருத்துக்கள் இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி ச…

  24. ஏன் மீண்டும் 13வது திருத்தச்சட்டம் பேசுபொருளானது? - யதீந்திரா 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசுவது தொடர்பில் பலவாறான அபிப்பிராயங்கள் கூறப்படுகின்றது. இன்றைய அரசியல் நிலைமைகளை புரிந்துகொண்டவர்கள் இதனை சரியென்று கூறுகின்றனர். தொடர்ந்தும் இப்படியே சென்றால் நிலைமைகள் மோசமடைந்துவிடும் – எனவே ஏதாவதொரு புள்ளியில் நாம் சந்திக்க வேண்டும். ஆனால், நிலைமைகளை புரிந்துகொள்ள மறுப்பவர்களோ அல்லது, புரிந்து கொள்ள விரும்பாதவர்களோ வேறு விதமாக பேசுகின்றனர். இவர்கள் இந்தியாவின் நிகழ்சிநிரலை முன்னெடுக்க விரும்புகின்றனர் – இது ஒரு சாராரின் கருத்து. இவர்கள் தமிழ் மக்களின் சமஸ்டிக் கோரிக்கையை திட்டமிட்டு பலவீனப்படுத்துகின…

  25. 08 SEP, 2023 | 04:47 PM (ஆர்.சேதுராமன்) ஜி20 அமைப்பின் உச்சிமாநாடு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நாளை சனிக்கிழமை (9) ஆரம்பமாகவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (10) வரை நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இலங்கை உட்பட பல நாடுகளின் கடன் விவகாரங்களும் ஜி20 உச்சிமாநாட்டில் ஆராயப்படவுள்ளன. புது டெல்லியின் இந்தியா கேட் நினைவுச்சின்னத்துக்கு அருகிலுள்ள பிரகதி மைதானத்தில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 'பாரத் மண்டபம்' எனும் கண்காட்சி அரங்கில் ஜி20 உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.. 20களின் குழு எனும் (குரூப் ஒவ் 20) என்பதன் சுருக்கமே ஜி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.