அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
இடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமா?தமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது? Written by:Nillanthan கிளிநொச்சி மாவட்டத்திற்கான முதலாவது பொதுவெளிப் பரப்புரைக் கூட்டம் வட்டக்கச்சியில் நடைபெற்ற பொழுது அதில் உரையாற்றிய அந்த மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு விடயத்தை அழுத்திச் சொல்லியிருக்கிறார். இத் தேர்தல் இடைக்கால அறிக்கை மீதான வாக்கெடுப்பு அல்ல என்பதே அது. உள்ளூர் அதிகாரங்களைப் பிரயோகித்து ஊர்களை அபிவிருத்தி செய்வதற்கு உள்ளூர் தலைவர்களைத் தெரிந்தெடுக்கும் தேர்தலே இதுவென்று அவர் சுட்டிப்பாகப் பேசியிருக்கிறார். தமது கட்சியைச் சேர்ந்த யாருமே இதுவரையிலும் இத்தேர்தலை இடைக்கால அறிக்கை மீதான வாக்கெடுப…
-
- 0 replies
- 248 views
-
-
இடைக்கால அறிக்கையில் என்ன இருக்கிறது? புதிய அரசமைப்பு ஒன்றை வகுப்பதற்காக அரசாங்கம், கடந்த வருடம், முழு நாடாளுமன்றத்தையும் அரசமைப்புச் சபையாக மாற்றியது. அதன் கீழ், பல்வேறு துறைகள் விடயத்தில் அரசமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களைச் சிபாரிசு செய்வதற்காக, ஆறு உப குழுக்களும் அவற்றுக்கு மேல், வழி நடத்தல் குழுவொன்றும் நியமிக்கப்பட்டன. அந்த ஆறு உப குழுக்களிலும் வழிநடத்தல் குழுவிலும் ஒன்றிணைந்த எதிரணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் அங்கம் வகித்தனர்; வகிக்கின்றனர். அந்தக் குழுக்களின் அறிக்கைகள், கடந்த நவம்பர் மாதம், வழிநடத்தல் குழுவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன. அவற்றை ஆராய்ந்த, …
-
- 0 replies
- 482 views
-
-
இடைக்கால அறிக்கையும் சுயநிர்ணய உரிமையும் மகிழ்ச்சியைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்வதற்கான உரிமையை மட்டும்தான் அமெரிக்க யாப்பு அமெரிக்கர்களுக்கு உத்தரவாதப் படுத்துகிறது –பெஞ்சமின் பிராங்ளின் கற்றலோனியா வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது. இடைக்கால அறிக்கையில் பொதுக்கருத்தாகக் காணப்படும் பகுதி ஒப்பீட்டளவில் சிறியது. பொதுக்கருத்தோடு உடன்படாது தனித்தனியாக கட்சிகள் இணைத்திருக்கும் அறிக்கைகளே பெரும்பகுதியாகும். எனவே அதிகபட்சம் ஒரு பொதுக்கருத்தை எட்ட முடியாத கட்சிகள் நாட்டின் இதயமான பிரச்சினை ஒன்றைக் குறித்து மூன்றே நாட்களுக்குள் விவாதித்து முடிவை எடுக்கப்போவதாகக் கூறப்படுகிறத…
-
- 0 replies
- 668 views
-
-
இடைக்கால அறிக்கையும் தமிழ் மக்களின் தேர்வும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘சட்டம் தெளிவோம்’ என்கிற மாதாந்த நிகழ்வில், ‘சந்திரசோம எதிர் மாவை சேனாதிராஜா மற்றும் கே.துரைராஜசிங்கம்’ வழக்கில், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கியத்துவம் பற்றி, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் அருளானந்தம் சர்வேஸ்வரன் உரையாற்றினார். உரையின் இறுதிக் கட்டத்தில், கடந்த வாரம் வெளியான புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பிலும் ஆர்வத்தோடு சில கருத்துகளை முன்வைத்தார். குறிப்பாக, அந்த அறிக்கையின் உள்ளடக்கங்களை ஒரு படிநிலையாகக் கொண்டு, தமிழ் மக்கள் முன்னோக்கிச் செல்ல வேண…
-
- 1 reply
- 458 views
-
-
இடைக்கால அறிக்கையும் யதார்த்த நிலைமையும் – பி.மாணிக்கவாசகம்:- பதட்டமும் பரபரப்பும் மிக்க ஒரு சூழலில் ஆரம்பித்துள்ள புதிய அரசியலமைப்புக்கான விவாதம் எந்த வகையில் சென்று முடிவடையும் என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. அரசியலமைப்பு என்பது நாட்டின் வருங்கால ஆட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் செல்நெறியின் முதுகெலும்பாகும். எனவே, மிகுந்த பொறுப்போடும், நிதானமாகவும் நேர்மையாகவும் நாட்டு மக்கள் அனைவருக்கும் விசுவாசமான முறையிலும் அது உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய பொறுப்புணர்ச்சியுடன், அனைத்துத் தரப்பினராலும் இதற்கான முயற்சி முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான விவாதம் நடத்தப்படக…
-
- 0 replies
- 544 views
-
-
இடைக்கால வரவு செலவுத் திட்டம்: சர்வதேச நாணய நிதியமே வருக! தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டமானது, இந்த அரசாங்கம் நாட்டை எத்திசையில் நகர்த்த முனைகிறது, யாருக்கானதாக அரசாங்கம் இருக்கிறது போன்ற வினாக்களுக்கான பதில்களைத் தந்துள்ளது. அந்தவகையில், இந்த வரவு செலவுத் திட்டம் முக்கியமானது. தனது உரையின் தொடக்கத்தில், நான்கு விடயங்களை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இவை நான்கும் மிகத் தெளிவாக, இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவே சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு செயன்முறையாகவே, இந்த வரவு செலவுத் திட்டம் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தின. ஒருபுறம், வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் …
-
- 0 replies
- 336 views
-
-
இடைக்கால, ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பும்... "சிஸ்ரம் சேஞ்சும்" – நிலாந்தன். இடைக்கால ஜனாதிபதியைத் தெரிவதற்காக, இருபதாம் தேதி, நாடாளுமன்றத்தில் நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில், ஐந்துக்கு மேற்பட்ட முனைப் போட்டிக்கு இடம் உண்டு என்று தெரிகிறது. ரணில் சஜித் இருவரையும் தவிர, டலஸ் அழகப் பெரும,சரத் பொன்சேகா,அனுரகுமர,அனுரா பிரியதர்சன யாப்பா போன்றவர்களும் போட்டியிடுவதில் நாட்டத்தோடு காணப்படுகிறார்கள். சம்பிக்க ரணவக்கவிற்கும் அந்த ஆசை இருப்பதாக கருதப்படுகிறது ரணிலை பொதுஜன பெரமுன ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். ராஜபக்சக்களை அவர் பாதுகாக்கிறார்.எனவே ரணிலை ராஜபக்சக்கள் பாதுகாப்பார்கள். அந்த அடிப்படையில் பொதுஜன பெரமுனவின் வாக்குகள் ரணிலுக்கு கிடைக்கும். ஆனால் இங்கே உள்ள பிரச்ச…
-
- 0 replies
- 274 views
-
-
இடைத் தேர்தல் நடக்குமா? இரட்டை இலை தப்புமா? மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டு காலச் சட்டமன்ற ஆயுளுக்குள் மூன்றாவது சட்டமன்ற உறுப்பினரைத் தேர்வு செய்யும் தொகுதியாக இந்தச் சட்டமன்றத் தொகுதி மாறியிருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் “Anti- Sentiment” ஆக உருவாகியிருக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சாதகமான தொகுதி என்றாலும், இப்போது அ.தி.மு.கவுக்குள் உருவாகியுள்ள மூன்று அணிகள் அக்கட்சியை வலுவிழக்கச் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. இத்தொகுதியில் தி.மு.க நான்கு முறை வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால்…
-
- 0 replies
- 499 views
-
-
இடைவெளி ஒரு வண்டியை நான்கு குதிரைகள் வெவ்வேறு திசைகளில் இழுத்துச் செல்லும்போது வண்டியில் இருப்பவர்கள் எதிர்நோக்கும் அவஸ்தைக்கு ஒத்ததானதொரு அரசியல் சூழ்நிலைக்கு வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர். கிழக்கின் புல்மோட்டை முதல் பொத்துவில் வரையான பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் எந்தத் தலைமையை முஸ்லிம்களின் அரசியல் தலைமையாக ஏற்றுக்கொள்வது என்றதொரு குழப்ப நிலையை எதிர்நோக்குவதை தற்காலத்தில் உணர முடிகிறது. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை உருவாக்கப்பட வேண்டும் என்பதில் நியாயம் இருந்தாலும், எந்தக் கடையில் பொருட்கொள்வனவு செய்வது என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் நுகர்வோர்தான். அந் நுகர…
-
- 0 replies
- 1.1k views
-
-
இடைவெளி – பி.மாணிக்கவாசகம்.. October 30, 2019 தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வாக்குகளே முக்கியமானவை. அந்த வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே தேர்தல் கால வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பது ஒரு புறமிருக்க, நாட்டு மக்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதில் வேட்பாளர்கள் தீவிரமாக இருப்பார்கள். அந்த வகையிலேயே இந்த ஜனாதிபதி தேர்தலிலும் வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றார்கள். ஆனால் அந்த வாக்குறுதிகளுக்கும் மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களுக்கும் இடையில் ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. இந்த விடயத்தில், குறிப்பாக சிறுபான்மை இன மக்களைப் பொறுத்தமட்டில் அவர்களின் எ…
-
- 0 replies
- 439 views
-
-
இணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…? நரேன்- சர்வதேச நாடுகளின் ஆதரவுடனும் இந்த நாட்டின் சிறுபான்மை தேசிய இனமான தமிழ் மக்களினதும், முஸ்லிம் சமூகத்தினதும் ஆதரவுடன் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நான்காவது ஆண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடனேயே தென்னிலங்கை அரசாங்கத்துடன் இணக்க அரசியல் என்னும் பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரணாகதி அரசியல் செய்து வருகின்றது. ஆனாலும் அரசாங்கத்துடன் தமக்குள்ள தொடர்பை பயன்படுத்தி தமிழ் மக்களது அவசிய பிரச்சனைகள் கூட தீர்க்கப்படாத நிலையே தொடர்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது தமது பூர்வீக நிலங்கள் விடுவிக்கப்படும் என்றும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் …
-
- 0 replies
- 409 views
-
-
-
- 0 replies
- 479 views
-
-
இணக்க அரசியல் தோல்வியடைந்துள்ளது சமூக ஆய்வாளர் நிலாந்தனுடன் ஒரு நேர்காணல் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான தென்னிலங்கை அரசியல் சூழலையும் தமிழர் அரசியல் சூழலையும் எப்படிப் பார்க்கின்றீர்கள்? தென்னிலங்கை அரசியல் சூழல் ஸ்திரமற்றதாக மாறியிருக்கின்றது. அதேநேரம் அது அதிகம் வெளிச்சக்திகளுக்குத் திறந்து விடப்பட்டதாகவும் மாறியிருக்கின்றது. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்படும் 2009 மே மாதத்திற்கு முன் வரையிலும் இலங்கையில் தமிழ் அரசியல் ஒரு வகையில் மூடப்பட்டதாக இருந்தது. அதாவது வெளிச்சக்திகள் எளிதில் கையாள முடியாததொன்றாகவும், வெளிச்சக்திகளால் கையாளப்பட முடியாததொன்றாகவும் வெளிச்சக்திகளின் தலையீடுகளுக்கு வரையறுக்கப்பட்ட ஒரு பரப்பாகவும் காணப்பட்டது. 2009 மே மாதத்திற்குப் பின…
-
- 2 replies
- 364 views
-
-
Posted by: on Jul 13, 2011 அண்மையில் அமெரிக்க காங்கிரஸின் ஆய்வுச் சேவை வெளியிட்ட எட்டு பக்க அறிக்கை, இலங்கை குறித்தான அமெரிக்காவின் பார்வை எவ்வாறு அமைய வேண்டுமென்பதை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கைக்கு உதவி வழங்குவதன் ஊடாக, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது மேலாண்மையை நிலைநாட்ட சீனா முயல்வதாக அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அதில் கூறப்பட்ட விடயங்கள் ஒன்றும் புதிதானவையல்ல. ஏற்கனவே பல ஆய்வாளர்களால முன்வைக்கப்பட்ட கருத்துகளின் ஒட்டுமொத்த வடிவம், எட்டுப் பக்க அறிக்கையாக வெளி வந்துள்ளது. ஒருவகையில் இலங்கை விவகாரம் குறித்து, அண்மையில் சர்வதேச நெருக்கடிக் குழு (International Crisis Group) வெளியிட்ட அறிக்கையும் ,இதுவும், இந்தியாவிற்கே பலமான செய்தியொன்றினை கூற முனை…
-
- 0 replies
- 728 views
-
-
இணக்கப்பாட்டின் அவசியம் Published on 2019-11-24 15:36:50 இலங்கை இன ரீதியாக இரு முனைகளில் கூர்மையடைந்திருக்கின்றது. இந்தக் கூர்மையின் வெளிப்பாடாகவே நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் அமைந்துள்ளது. அதில் வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ சிங்கள மக்களின் ஏகபோக தலைவராகத் தலைநிமிர்த்தியுள்ளார். மஹிந்த ராஜபக் ஷவுக்கு அடுத்ததாக ராஜபக் ஷ குடும்பம் இந்தத் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதி பதவியைத் தன்னுடைமையாக்கிக் கொண்டிருக்கின்றது. தேசிய அளவில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக அல்லாமல் மிக மிகப் பெருமளவில் சிங்கள பௌத்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவராக, தேசிய மட்டத்தில…
-
- 0 replies
- 627 views
-
-
இணக்கப்பாட்டின் அவசியம் - - பி.மாணிக்கவாசகம் இந்து சமுத்திரத்தின் முத்தாகத் திகழ்கின்ற இலங்கைத் தீவில் இனக்குழுமங்களும், சமயம் சார்ந்த சமூகத்தினரும், மொழிவாரியான மக்களும் தீவுகளாகவே வாழ்கின்றனர். அவர்களுக்கிடையில் காலங்காலமாக நிலவி வந்த நல்லுறவும் நல்லிணக்கமும், ஐக்கியமும் படிப் படியாகத் தேய்ந்துள்ளமையே இதற்குக் காரணம். இனப்பிரச்சினை காரணமாக எழுந்த ஆயுதப் போராட்டத்தின்போது இனவாத அரசியல் கொள்கைகள் அளவுக்கு மீறிய வகையில் கடைப்பிடிக்கப்பட்டு, தமிழ் மக்கள் அனைவரையுமே பயங்கரவாதி களாக நோக்கும் ஒரு நிலைமை உருவாகியிருந்தது. இதனால் சிங்கள, தமிழ்மக்களுக்கிடையில் சமூக ரீதியாக இருந்து வந்த பிணைப…
-
- 0 replies
- 508 views
-
-
இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை; ஆனால்…? கஜேந்திரகுமார் நேர்காணல் – காணொளி “மற்றைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஒரு கூட்டாக இணைந்து செயற்படுவதற்கு முன்னர் தமிழ் மக்களுடைய உரிமைகள், அபிலாஷைகள் தொடர்பில் நாங்கள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தேயாகவேண்டும். அவ்வாறு வராமல் வெறுமனே ஒற்றுமை என்ற வெற்றுக் கோஷத்துக்காக நாம் பயணிக்க முடியாது” எனக் கூறுகின்றார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தினக்குரல் இணையத்துக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலிலேயே இதனை அவர் தெரிவித்தார். 0 திலீபன் நினைவேந்தலின் போது தமிழ்க் தேசியக் கட்சிகள் சிலவற்…
-
- 0 replies
- 564 views
-
-
இணைந்து வந்தார்கள்- பிரிந்து சென்றார்கள்!! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய ‘நீதியரசர் பேசுகின்றார்’ என்ற நூல் கடந்த 24ஆம் திகதி யாழ்ப்பாணம்–வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் அந்த மேடையில் அமர்ந்திருந்தார். விக்னேஸ்வரன் ஆதரவு அணியும், கூட்டமைப்பி னரும் சங்கமித்த நிகழ்வாக அது அமைந்தது. 5ஆண்டுகள் அஞ்சாதவாசம் கிட்டத்தட்ட 5ஆண்டுகளுக்கு முன்பாக, 2013ஆம் ஆண்டு …
-
- 1 reply
- 697 views
-
-
இணைப்போமா? இணைவோமா? 238 Views ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவராக மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல் சாகிட் அவர்கள் 191 உறுப்புரிமை வாக்குகளில் 143 வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். இவருடன் போட்டியிட்ட ஆப்கானிஸ்தானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சலாமை ரசோலுக்கு 48 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. இத்தேர்தல் உலக நாடுகளின் தலைமை, ஆசியா சார்ந்ததாக அதுவும் சீனப் பின்னணியில் கட்டமைக்கப்படுகிறது என்பதை மீளவும் தெளிவாக்கியுள்ளது. இந்துமாகடலின் 1195 தீவுக் கூட்டங்களில், மாலைதீவும் இலங்கையைப் போன்று சீனாவுடன் அதனுடைய கடல்வழிப் பட்டுப்பாதைத் திட்டத்தில் முக்கியமான ஒரு தீவாக, வரலாற்…
-
- 0 replies
- 774 views
-
-
தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கிக் கொண்டிருக்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இணையப் பாதுகாப்பு விதிகளும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபும் இன ஒடுக்கலுக்கு மேலும் வழி வகுக்கும் தம் மீதான விமர்சனங்களைத் தடுக்கும் நோக்கில் அமைதிகாக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகள் இணையங்கள் ஊடாக ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதாகக் கூறிக் கொண்டு அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள இணையவழிப் பாதுகாப்பு எனப்படும் "நிகழ் நிலைக்காப்புச் சட்ட வரைபு" (Online Safety Bill ) அரசியல் - பொருளாதார நோக்கில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கருத்துக்கள் வலுப் பெற்றுள்…
-
- 0 replies
- 303 views
-
-
இணைவு – எழுச்சி – சர்ச்சை – முன்னெடுக்க வேண்டிய முயற்சிகள் – பி.மாணிக்கவாசகம் 9 Views தமிழ் மக்களின் போராட்டம் என்பது சாதாரண அரசியல் விளையாட்டல்ல. அது நீதிக்கும் நியாயத்துக்குமானது. அரசியல் உரிமைகள் சார்ந்தது. அடிப்படை உரிமைகளுக்கானது. அது அவர்களுடைய வாழ்வுக்கும் இருப்புக்குமானது. தமிழ் மக்கள் சாதாரண மக்களல்ல. அவர்கள் வந்தேறு குடிகளுமல்ல. வாழ்வியல் வழியில், கலை, கலாசார, மத, பண்பாடு, அரசியல் ரீதியான வரலாற்று பாரம்பரியத்துடனான தாயகப் பிரதேசத்தைக் கொண்டவர்கள். ஆனால் பெருந்தேசியப் போக்கில் தனி இனத்துவ அரசியல் மமதையில் சிங்கள பௌத்த தேசியக் கொள்கையின் அடிப்படையில் அவர்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றார்கள். அவர்களுடைய நில…
-
- 0 replies
- 322 views
-
-
இதயசுத்தி இல்லாமல் இனப்பிரச்சினைக்கு இணக்கப்பாடு இல்லை - காரை துர்க்கா ஓர் ஊரில் திரு திருமதி இலங்கை என்ற பெற்றோர்களுக்கு மூன்று அழகான ஆண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்குச் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என பெற்றோர்கள் பெயரிட்டனர். மூன்று சகோதரர்களும் தங்களுக்குள் அன்பாக, ஒற்றுமையாக இருந்தனர். ஆனால், பெற்றோர்கள் மூத்த பிள்ளையாகிய சிங்களவர் மீது அன்பையும் அரவணைப்பையும் செலுத்திக் கொண்டு ஏனைய பிள்ளைகளாகிய தமிழர் முஸ்லிம் மீது கோபத்தையும் வெறுப்பையும் காட்டினர். அதுவே, நாளடைவில் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளுக்கிடையில் - சகோதரங்களுக்கிடையில் சண்டைகளையும் சந்தேகங்களையும் குரோத மனப்பான்மைகளையும் வளர்த்தன. இதுவே, இ…
-
- 0 replies
- 402 views
-
-
இதயத்தால் சிந்தித்த சில எண்ணங்கள் (இடிந்தகரைக் கடிதம்-2) இடிந்தகரை மார்ச் 28, 2013 அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களே: வணக்கம். கூடங்குளம் போராட்டம் தொடங்கி கிட்டத்தட்ட 600 நாட்கள் ஆகிவிட்டன. நானும், நண்பர்கள் ராயன், மை.பா., முகிலன், மில்டன், கெபிஸ்டன் உள்ளிட்டோர் இடிந்தகரைக்குள் முடக்கப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது. கடந்த ஆண்டு மார்ச் 18-ஆம் நாள், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடந்த அன்று, வைராவிக்கிணறு கிராமம் நோக்கி ஒரு பேரணி நடத்திக் கொண்டிருந்தோம். சரியாக மாலை 4:45 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் கைப்பேசியில் தொடர்பு கொண்டு, “ஆட்சித்தலைவர் டாக்டர் செல்வராஜ் உங்களையும், அருட்தந்தை செயக்குமார்…
-
- 0 replies
- 703 views
-
-
இதற்கு மேலுமா நம்புவது ? By DIGITAL DESK 5 24 OCT, 2022 | 12:20 PM சத்ரியன் அரசதரப்பு சட்டத்தரணியாகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், எம்.எம்.சுஹைர் அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் எழுதியிருந்த விருந்தினர் பத்தி ஒன்றில் குறிப்பிட்டிருந்த விடயங்கள், ஆங்கில ஊடகங்களில் அதிகம் கவனத்தைப் பெற்றிருந்தது. அவரது அந்த பத்தியில், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக, புதிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கு வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்களின் உதவிகள் பெறப்படவுள்ளதாகவும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன், பாராளுமன்றத்தில் அறிவித்திருப்பதை மையப்படுத்தி, பல கேள்விகளை எழுப்பிய…
-
- 0 replies
- 512 views
- 1 follower
-
-
தமிழில் ரஜீபன் இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வேட்பாளர் நந்தசேன கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். தேசிய பாதுகாப்பு ,ஜனநாயகம் பொருளாதாரம், நல்லிணக்கம் ஆகியவற்றை தோற்கடித்துள்ளது. இலங்கையின் கிளர்ச்சியை தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றிய ஏதேச்சதிகார அரசாங்கம்( கோத்தபாய இதில் முக்கிய பங்காற்றினார்)ஐக்கியதேசிய கட்சி அரசாங்கத்தின் உற்சாகமற்ற செயற்பாடுகளை கருத்தில் கொள்ளும்போது ஐந்துவருடத்திற்கு பின்னர் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளமை ஆச்சரியம் அளிக்கும் விடயமல்ல.இம்முறை கோத்தாவை தோற்கடிப்பதற்கான பாரிய கூட்டணியிருக்கவில்லை. இலங்கையில் ஜனாதிபதிதேர்தலில் வெற்றிபெறுவதற்கு முக்கியமான தமிழ் முஸ்…
-
- 0 replies
- 687 views
-