அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
இது எங்கள் தார்மீகப் பொறுப்பு! நிறான் அங்கிற்றல் படம் | JDS மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர ஆகியோர் முறையே ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் வெளிவிவகார அமைச்சராகவும் பதவியேற்றமையானது போர்க் குற்றங்கள் மற்றும் யுத்தத்தின்போது மனுக்குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றச்செயல்கள் போன்ற விடயங்களிலே நீதிக்காகப் போராடுவோர் தமது போராட்டத்தைத் தொடரும் முயற்சிகளிலே பெரும் மாற்றம் ஒன்றைக் கொணர்விக்க வேண்டிய தேவைக்கு உள்ளாக்கியுள்ளது. புதிய அரசும் அதன் ஆட்சி வடிவமும் – குறிப்பாக மனித உரிமைகள் விடயத்திலே சர்வதேச அரசியலையிட்டதான அதன் அணுகுமுறை – ராஜபக்ஷ ஆட்சியைவிட அடிப்படையிலேயே வேறுபட்டதாகவே இருக்கும். எனவே, ராஜபக்ஷவுக்கு எதிராகக் கையாண்ட சாணக்கியமும் தந்…
-
- 0 replies
- 622 views
-
-
இது எச்சரிப்பவர் காலம் எங்களதே எதிர்காலம். - வ.ஐ.ச.ஜெயபாலன் . வடக்கு தமிழ் மக்களுக்கு, மல்வத்து பீடாதிபதி கடும் எச்சரிக்கை என்கிற தலைப்பு செய்திகளை வாசிக்கிறபோது நினைவு 1987 அக்டோபர் மாததுக்கு திரும்பிச் செல்கிறது. 1987ல் பாலகுமாருடன் சேர்ந்து சமாதான திட்டம் ஒன்றை வடிமைத்த காலம் நினைவுக்கு வருகிறது. பிரேமதாச பெரும்போரை தூண்டிவிடுகிற எதிர் ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அன்று பாலகுமார் ஊடாக வலியுறுத்தப் பட்ட திட்டத்தை தோற்கடிப்பதில் இரண்டாம் நிலை தலைவர்கள் சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்தனர். யோ போன்றவர்கள் பலகுமாரனையே மேலிடத்தை அடைய விடாமல் தடை போட்டனர். ராஜ தந்திரத்தின் அரிச்சுவடி முதல் எதிரி வலுவானவனாக இருப்பின் எல்லா நிலைகளிலும் முதல் எதிரியை…
-
- 1 reply
- 708 views
-
-
இது தெட்ட தெளிவான யுத்தம். போரின் இரு புறத்திலும் அவரவர் தமக்கே உரிய ஆயுதங்களை தேர்வு செய்து கொள்கின்றனர் ‐ அருந்ததி ராய் டெஹல்காவின் ஷோமா சௌத்ரிக்கு வழங்கிய நேர்காணல் 05 November 09 11:24 am (BST) ஷோமா: நாடு முழுவதும் வன்முறை வளர்ந்த வண்ணம் இருப்பதைக் காணும் இச்சூழலில், அந்த அடையாளங்களிலிருந்து நீங்கள் என்ன உணருகிறீர்கள்? இதன் பின்னணியை எவ்வாறு நாம் இனங்காண வேண்டும்? அருந்ததிராய் : இந்த அடையாளங்களை (வன்முறையின்) காண்பதற்கு நீங்கள் ஒன்றும் தலைசிறந்த அறிவாளியாக இருக்க தேவையில்லை. தீவிர நுகர்வு கலாசாரத்தினாலும், முன்முனைப்புள்ள பேராசை வெறி கொண்டும் ஊட்டி வளர்க்கப்பட்டுள்ள மத்திய தர வர்க்கம் நம்மிடையே உள்ளது. மூலாதாரங்களை சுரண்டுவதற்காக அடிமை உழை…
-
- 0 replies
- 669 views
-
-
இது பாற்சோறு பொங்கி மகிழும் நேரமல்ல புருஜோத்தமன் தங்கமயில் / 2019 மே 05 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:09 Comments - 0 முள்ளிவாய்க்கால் இறுதி மோதல்கள் முடிவுக்கு வந்த நாள்களில், தென் இலங்கை, போர் வெற்றிவாதம் எனும் பெரும் போதையால் தள்ளாடியது. வீதிகளிலும் விகாரைகளிலும் பாற்சோறு பொங்கி பகிர்ந்துண்டு கொண்டாட்டத்தின் எல்லை தாறுமாறாக எகிறியது. ஆனால், அன்றைக்கு தமிழ் மக்களின் மனங்கள், பெருங்கவலையிலும் அலைக்கழிப்பினாலும் நிரம்பியிருந்தது. எந்தவொரு தரப்புக்கும், அப்படியான நிலையொன்று வரக்கூடாது என்பது, தமிழ் மக்களின் நினைப்பாக இருந்தது. அந்த நினைப்பில், இன்றைக்கும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடவில்லை. ஆனால், ‘கும்பல் மனநிலை’யோ, நிதானமாகச் செயற்படக் கோரும் தருணங்களையும…
-
- 0 replies
- 411 views
-
-
இது போர்க்களமல்ல; அரசியற் களமே! September 29, 2025 — கருணாகரன் — மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மாகாணசபைகளுக்கு மேலான (13+) அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் இதுவரையிலும் வலியுறுத்திக் கொண்டிருந்தன தமிழ்த்தேசியக் கட்சிகள். இதற்காக இலங்கை அரசை மட்டுமல்ல, இந்திய அரசையும் கோரிக் கொண்டிருந்தன. இந்தக் கோரிக்கையோடு கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரலாயத்துக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள துணைத்தூதரகத்துக்கும் பல தடவை சென்று முறையிட்டும் பேசியும் வந்திருக்கிறார்கள். 23.09.2025 அன்று கூட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பிக்கள் இதற்காக இந்தியத் தூதரைச் சந்தித்திருக்கின்றனர். ஆனால், மாகாண சபைகளுக்கான தேர்தல…
-
- 0 replies
- 112 views
-
-
இது முடிவல்ல… முடிவின் தொடக்கம்! -என். சரவணன் படம் | Groundviews தொடக்கம் 1: மியான்மார்: திகதி – 20 மார்ச் 2013 முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஒரு நகைக்கடையில் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் வாய்த்தகராறு நடக்கிறது. வாய்த்தகராறில் ஈடுபட்டவருக்கு ஆதரவாக பௌத்த மதத்தைச் சேர்த்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள். சில மணித்தியாலங்களில் அந்த கடை அடித்து சேதமாக்கி அழிக்கப்படுகிறது. இதன் விளைவாக ஒரு பௌத்த பிக்கு எரிக்கப்பட்டுவிடுகிறார். இதை சாட்டாக வைத்து முஸ்லிம்கள் மீது மோசமான இன அழித்தொழிப்பு நடந்தேறியது. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தேடித்தேடி கொல்லப்பட்டார்கள். அவர்களின் சொத்துக்கள் உடைமைகள் சூறையாடப்பட்டன. பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கா…
-
- 2 replies
- 1.2k views
-
-
அந்தப் புகைப்படங்களை பார்த்தபோது மனது நொருங்கிப்போவது உண்மைதான். அந்த சதுப்பு நிலத்தின் ஆழம் குறைந்த நீருக்குள்ளாக எமக்காக போராடிய வீரர்களின் உயிரற்ற உடல்களின் கால்களை பிடித்து சிங்களராணுவத்தினர் இழுத்து வரும் காட்சியை புகைப்படத்தில் காணும்போது இதயம் சுக்குநூறாக வெடிப்பது போலவே இருக்கிறது. கண்கள் திறந்தபடியும், குத்திட்டபடியும் நிலைத்த பார்வையுடன் எமது விடுதலைப் போராளிகளின் உடல்கள் அந்தப் புகைப்படத் தொகுப்பில் நிறைந்து கிடந்தன. அந்தக் காட்சிகள் எளிதில் மனதைவிட்டு போகப்போவதில்லை. இன்னும் மிக நீண்டகாலத்துக்கு எப்படி.. ஏன்.. யாரால்… இப்படி நிகழ்ந்தேறியது என்ற கேள்வி அந்தப் புகைப்படங்களை பார்ப்பவர்களின் மனதை போட்டு பிசைந்து பிசைந்து மன உறுதியை உடைத்தெறிந்து தூளாக்கிவிடு…
-
- 0 replies
- 1.1k views
-
-
இது விளையாட்டு அல்ல; விபரீதமானது காரை துர்க்கா / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 03:49 அன்றைய காலங்களில், அரசியல் என்பது முற்றிலும் பொதுச் சேவையாகக் காணப்பட்டது. மக்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரித்துடையோர், முழுமையா(ன)க மக்கள் பணியாக, அரசியலை ஆரோக்கியமாக முன்னெடுத்து வந்தார்கள். கல்வி அறிவு, சமூகம் பற்றிய பார்வை, எதிர்காலம் பற்றிய தூரநோக்கு, எனது மக்கள் என்ற பற்று எனப் பல்வேறு விடயங்களைத் தன்னகத்தே கொண்டவர்களாகவும் பல பரிமானங்களை உடையவர்களாகவும், மக்கள் தொண்டுகளை அரசியல்வாதிகள் ஆற்றி வந்தார்கள். தமது மக்களுக்கு விசுவாசமாகவும் நம்பிக்கையாகவும், வாழ்ந்தும் காட்டினார்கள். ஆனால் இன்று, அரசியல் என்பது, தொழில் அல்லது வணிகமென மாறிவிட்டது. அல்லது மாற்றி வி…
-
- 0 replies
- 658 views
-
-
இது வெறுமனே சட்டம் ஒழுங்குப் பிரச்சனையல்ல...! http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-06-04#page-11
-
- 0 replies
- 315 views
-
-
இது வெறும் போர்வையா? ஒரு பெரிய தேசம். பற்பல மொழிகள், மதங்கள், ஜாதிகள், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்கள், நகராட்சிகள், கிராமங்கள்; இதைப் போல இன்னும் பல பிரிவுகள். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, நான்காவது பெரிய ராணுவம், என்றெல்லாம் நாம் பெருமையாகச் சொல்லலாம். ஆனாலும் இந்தியா இப்போது எதிர்நோக்கியுள்ள சிலப் பிரச்சினைகளின் தொகுப்பு. காஷ்மீர் பிரச்சினை சீனாவுடன் எல்லைப் பிரச்சினை ஸ்ரீலங்காப் பிரச்சினை நேபாள மாவோயிஸ்டுகளின் தொல்லை இந்து - முஸ்லீம் - கிருஸ்த்தவ பிரச்சினை [மும்பை, குஜராத், கோயம்புத்தூர், பிரிவினை, இன்னும் சில) காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம் பிரச்சினை உள்நாட்டுத் தீவிரவாதிகள் (உல்ஃபா, நக்சலைட்டுகள், ...) மொழிப் பிரச…
-
- 1 reply
- 1.5k views
-
-
இதுகாலவரை தன்னிடமிருந்து நழுவிய பதவியை இறுதியில் அடைந்துவிட்ட ரணில் சுமார் மூன்று தசாப்தங்களாக ஐக்கிய தேசிய கட்சிக்கு வசப்படாமல் இருந்துவந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி இன்றைய தினம் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கைகளுக்கு வந்துசேர்ந்திருக்கிறது. மக்கள் கிளர்ச்சிக்கு முகங்கொடுக்க முடியாமல் நாட்டைவிட்டு தப்பியோடிய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்துகொண்டு கடந்தவாரம் பதவியைத் துறந்ததையடுத்து காலியான ஜனாதிபதி பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவுசெய்வதற்கு இன்று சபையில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் விக்கிரமசிங்கவுக்கு 134 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான முன்ன…
-
- 0 replies
- 266 views
-
-
இதுதான் நல்லிணக்கமா? சிறையிலடைக்கப்பட வேண்டிய மதத்தலைவர்களை அரசாங்கம் பாராளுமன்றத்திற்கும் ஜனாதிபதி மாளிகைக்கும் அழைத்து கௌரவப்படுத்துகிறதா என இப் பத்தியில் இரு வாரங்களுக்கு முன்னர் கேள்வியெழுப்பியிருந்தோம். ஆனால் தற்போது அரசின் செயற்பாடுகள் அதை விட ஒருபடி மேலே போய் அடாவடித்தனம் புரிகின்ற பிக்குகளை அமைச்சர்கள் அவர்களது காலடிக்கே சென்று சந்திக்கின்ற அளவுக்கும் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து அவர்களது ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்கின்ற நிலைக்கும் வந்திருக்கிறது. அடுத்த கட்டமாக இந்த பிக்குகளுக்கு தேசியப்பட்டியல் எம்.பி. பதவி கொடுத்து அமைச்சரவைக்கு அழைத்து அழகுபார்த்தாலும் ஆச்சரியப்ப…
-
- 0 replies
- 322 views
-
-
இதுவும் மறந்தே போகும் - கந்தையா இலட்சுமணன் தமிழர் வரலாறு, போராட்டங்களையும் கொலைகளையும் துப்பாக்கிச்சூடுகளையும் வன்முறைகளையும் அழிவுகளையும் சந்தித்து மரத்துப்போன மனோநிலையைக் கொண்டதாகவே வளர்ச்சி பெற்றிருக்கிறது. அத்தோடு, எதனையும் சாதாரணமாகக் கொள்ளும் வேண்டா வெறுப்பான வாழ்க்கைக்கும் பழகிப்போனது. அதனால், எல்லா விதமான மோசமான பிரச்சினைகளையும்கூட மிகச் சாதாரணமாக எண்ணிக்கொள்ளும் மனோநிலைக்கும் பழகிப்போனதாகவே இருக்கிறது. இருந்தாலும், ஆயுதம்சார் விடுதலைப் போராட்டத்தின் முடிவு, 2009 மே மாதத்துக்குப் பின்னர், அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தி, நிம்மதிப் பெருமூச்சை விட்டுக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திய போதும், கடந்த நான்கு தசாப்தகால இன விட…
-
- 0 replies
- 543 views
-
-
இத்தனை குழப்பங்களுக்கும் யார் பொறுப்பு? கே. சஞ்சயன் / 2018 நவம்பர் 02 வெள்ளிக்கிழமை, மு.ப. 10:26 Comments - 0 ஒக்டோபர் 26ஆம் திகதி மாலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரங்கேற்றிய எதிர்பாராததொரு நாடகத்தின் அதிர்ச்சியில் இருந்து, இன்னமும் பலர் வெளிவரவில்லை; வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள். “அவர் இப்படி ஏமாற்றுவார் என்று, நாங்கள் நினைக்கவில்லை. கழுத்தறுத்து விட்டுப் போய்விட்டார்” என்று புலம்புகின்ற நிலை, அரசியல் கட்சிகளிடத்தில் மாத்திரமன்றி, அவருக்கு வாக்களித்த மக்களில் பெரும்பாலானோருக்கும் இருக்கிறது. அதுபோல, சர்வதேச சமூகத்தின் கணிசமான பகுதிக்கும், அந்தக் கவலையும் அதிர்ச்சியும் இருக்கின்றன. மைத்திரிபால சிறிசேன இந்த முடிவைத் திடீரென அறிவிக்க…
-
- 0 replies
- 679 views
-
-
றோம், ( சின்ஹுவா ) இத்தாலிய பிரதமர் கியூசெப்பி கொன்ரேயின் அரசாங்கம் கடந்தவாரம் வீழ்ச்சிகண்டபோது அது பதவியில் 15 மாதங்களைப் பூர்த்திசெய்வதற்கு 11 நாட்கள் குறைவாக இருந்தன.அதன் அர்த்தம் இரண்டாவது உலகப்போருக்கு பின்னரான காலகட்டத்தில் இத்தாலியில் பதவியில் இருந்த ஒரு அரசாங்கத்தின் சராசரி காலநீட்சியை உண்மையில் அதிகரித்தது என்பதேயாகும். புதிய அரசாங்கம் நியமிக்கப்படும் போது இத்தாலி உலகப்போரின் முடிவுக்கு பின்னரான ( 74 வருடங்களுக்கும் சற்று கூடுதலான காலகட்டம் ) அதன் 69 வது அரசாங்கத்தைக் காணும். ஒரு அரசாங்கம் சராசரி 13 மாதங்களுக்கும் குறைவான காலமே பதவியில் இருந்திருக்கிறது. இது ஐரோப்பாவின் வேறு எந்தவொரு நாட்டிலும் இல்லாத ' சுழலும் கதவு ' போன்ற நிலைவரமாகும்.அதே 74 வருட கால…
-
- 1 reply
- 960 views
-
-
இந்தியாவின் மானம், காற்றில் பறக்கிறது என்று சொன்னால் அது உண்மை, முழு உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை. அன்று பீரங்கி, இன்று ஹெலிகாப்டர். அன்று பிரதமருக்குப் பின்னால் இத்தாலி; இன்று பிரதமருக்கு மேலே இத்தாலி. முக்கியப் பிரமுகர்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்குவது, மத்திய அரசின் வேலை. அது சரிதான். அதற்கான தொழில் நுட்பக் கூறுகளை நிர்ணயிப்பதும், விலை பேரம் பேசுவதும், விமானப்படைத் துறை சம்பந்தப்பட்டது; அதுவும் சரிதான். ஆனால், இவற்றில் அன்றும் இத்தாலி, இன்றும் இத்தாலி என்றால்... அந்த நாட்டுக்கு உதவுவது யார்? இந்த ஊழல் விவகாரங்கள் வெளிப்பட்டது, இந்திய நிறுவனங்கள் மூலம் அல்ல. அன்று, ஸ்வீடன், போபர்ஸ் பீரங்கி விவகார ஊழலை வெளிப்படுத்தியது; இத்தாலி இன்று, ஹெலிகாப்டர், விவகார ஊழலைக் கிளற…
-
- 1 reply
- 600 views
-
-
இத்தாலியில் இயங்கிவரும் அரசியல்- பண்பாட்டு அமைப்பான ACCuS-க்காக, அந்தோனியா கிராம்ஷியின் சிந்தனைகள் குறித்து சோபா சக்தி நிகழ்த்திய உரை.
-
- 0 replies
- 376 views
-
-
இந்தியாவுக்கு சவாலாக சீனா அள்ளியிறைக்கும் நிதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், 2 பில்லியன் யுவான்களை கொடையாக வழங்க முன்வந்திருக்கிறார். அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்புகின்ற எந்த திட்டத்துக்கு வேண்டுமானாலும் செலவிடலாம் இலங்கையில் தமது செல்வாக்கை அல்லது தலையீடுகளை உறுதிப்படுத்திக் கொள்வதில், சீனாவும் இந்தியாவும், கடுமையான போட்டியில் தான் குதித்திருக்கின்றன என்பதை இரண்டு நாடுகளினதும் அண்மைய நகர்வுகள் தெளிவாக உணர்த்தி வருகின்றன. ஒன்றுக்கு ஒன்று சளைக்காமலும், விட்டுக் கொடுக்காமலும், நகர்வுகளை முன்னெடுத்து வருவதைக் காண ம…
-
- 0 replies
- 396 views
-
-
இந்தியாவின் கனவைக் கலைக்கும் நேபாளம் வங்காள விரிகுடா விளிம்பு நாடுகளின் கூட்டமைப்பான பிம்ஸ்ரெக் இப்போது, சர்வதேச அரங்கில் பலம்பெற்று வரும், பிராந்திய நாடுகளின் மற்றொரு கூட்டமைப்பாக மாறத் தொடங்கியிருக்கிறது. இது ஒன்றும் புதிய அமைப்பு அல்ல. 1997ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டது. ஆனால், கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலமாக அது பெரியளவில் இயங்கவில்லை. 2016ஆம் ஆண்டு மீண்டும் உயிர்த்துக் கொண்டது. இதற்குக் காரணம், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தோன்றிய பிரச்சினை. அதுவரை தெற்காசியப் பிராந்தியத்தின் வலுவான பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பாக சார்க் அமைப்புத் தான் இருந்தது. …
-
- 0 replies
- 704 views
-
-
இந்திய –இலங்கை அரசுகளைத் தமிழர்கள் இனியும் நம்பலாமா? இலங்கையில் மீண்டும் போர் ஏற்படுவதற்கு இந்தியா அனுமதிக்கமாட்டாதெனவும், தாம் எப்போதும் தமிழர்களுக்கே ஆதரவாக இருக்கப் போவதாகவும் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திரமோடி, கூட்டமைப்பின் தலைவரிடம் உறுதியளித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய உறுதிமொழிகள் இலங்கைத் தமிழர்களுக்குப் புதிதானவையல்ல. இந்தியத் தலைவர்கள் வாக்குறுதிகளை வழங்குவதும் பின்னர் அவற்றை மறந்து விடுவதும் வழக்கமாகி விட்டது. தமிழர்களை அவர்கள் குறைவாக மதிப்பிடுவதையே இது எடுத்துக் காட்டுகி…
-
- 0 replies
- 567 views
-
-
இந்தியத் தேசியவாதமும் ராஜபக் ஷ விசுவாசமும் “2020 ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷ போட்டியிட்டால், அவரை வெற்றி பெறச்செய்வது தேசப்பற்றுள்ள இந்தியர்களின் கடமை. பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தவர் அவர்”என்று கடந்தவாரம் டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம், மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. பா.ஜ.க.வின் மூத்த தலைவராக குறிப்பிடப்பட்டாலும், தமிழகத்தில் சுப்ரமணியன் சுவாமி எப்படிப்பட்ட ஒருவராக மதிக்கப்படுகிறவர் என்பதை இங்கு சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அந்தளவுக்கு அவர் கடுமையான விமர்சனங்களுக்கும், கேலி, கிண்டல்க…
-
- 0 replies
- 545 views
-
-
இந்த அரசியல் நெருக்கடி ஏன்? மக்களாட்சிக்குரிய முறைப்படி மக்கள் பிரதிநிதிகளின் கைகளிலேயே குடியரசு எனும் ரீதியில் இலங்கையின் சுயநிர்ணயத்தையும் இறைமையையும் வழங்க வேண்டும். அதற்குத் துணையாகவே ஜனாதிபதியும் உயர் நீதியரசரும் இருக்க வேண்டும். மன்னருக்காக மன்னரால் மக்களை ஆளுவதே மன்னராட்சியாகும். மக்களால் மக்களை மக்களே ஆளுவது மக்களாட்சியாகும். மன்னராட்சியை முடியரசு என்றும் மக்களாட்சியை குடியரசு என்றும் கூறுவார்கள். நாட்டிலுள்ள எல்லா மக்களும் எப்படி ஆளுவது என நீங்கள் வினவலாம். அதனால்தான் மக்கள் வாக்களித்துத் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்கிறார்கள். நவீன அறிவுலகம் மன்னராட்…
-
- 0 replies
- 403 views
-
-
இந்த அரசியல் நெருக்கடிக்குள் தமிழ் மக்கள் எங்கிருக்கிறார்கள்? Gopikrishna Kanagalingam / 2018 நவம்பர் 01 வியாழக்கிழமை, மு.ப. 01:37Comments - 0 இலங்கையில் இப்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடி, இலங்கையின் தேசிய மட்டத்தில் மாத்திரமன்றி, உலகளாவிய அரங்கிலும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், சிறுபான்மையின மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள், இந்தப் பிரச்சினையில் எங்குள்ளனர் என்பது தான், இப்போதிருக்கின்ற கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், அதிகம் பாதிக்கப்படும் பிரிவினராக, தமிழ் மக்களே இருப்பார்கள் என்று கருதப்படும் நிலையில், தற்போதைய அரசியல் கலந்துரையாடலில், அவர்கள் எங்கே என்ற கேள்வி முக்கியம…
-
- 0 replies
- 368 views
-
-
-
- 0 replies
- 713 views
-
-
-
- 2 replies
- 448 views
-