Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அரசியல்வாதிகள் மீட்பர்கள் இல்லை எம்.எஸ்.எம் ஐயூப் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்திவைக்க, அரசாங்கம் இதுவரை எடுத்த சகல முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. அம்முயற்சிகளை நாம், கடந்த வாரக் கட்டுரையில் பட்டியலிட்டோம். ஆனால், அதன் பின்னரும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும், தேர்தல்களின் போது செலவிடும் பணத்தின் தொகையை கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று, வியாழக்கிழமை (19) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்மூலம் இம்முறை, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஒத்திப்போடப்படலாம் …

    • 0 replies
    • 855 views
  2. மீண்டும் பெரும்பான்மையினவாத அணிதிரட்டல் முயற்சிகள் Veeragathy Thanabalasingham on January 25, 2023 Photo, AP Photo/Eranga Jayawardena, OUTLOOK INDIA இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர் றொமிலா தாப்பர் எழுதிய ‘இந்து – முஸ்லிம் உறவுகள் குறித்து வரலாறு உண்மையில் எமக்கு சொல்வது என்ன?’ என்ற தலைப்பிலான அருமையான கட்டுரையொன்றை ‘த வயர்’ வலைத்தளத்தில் வாசிக்கக் கிடைத்தது. நல்ல கட்டுரைகள் என்றால் அவற்றை நான் அனேகமாக ‘வட்ஸ்அப்’ மூலம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது வழக்கம். இந்தக் கட்டுரையையும் அவ்வாறே பலருக்கு அனுப்பினேன். அவர்களில் மூத்த ஆங்கிலப் பத்திரிகையாளர் லக்ஸ்மன் குணசேகரவும் ஒருவர். அதை வாசித்த உடனடியாகவே எனக்கு அவர்…

  3. 13 படும்பாடு January 25, 2023 ♦️வீரகத்தி தனபாலசிங்கம் இலங்கை அரசாங்கத் தலைவர்கள் வழமையாக கூறுகின்ற ஆனால், தவறாமல் மீறி வந்திருக்கின்ற ஒரு உறுதிமொழியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் யாழ்ப்பாணத்தில் கடந்தவாரம் தைப்பொங்கல் விழாவில் வழங்கியிருந்தார். “அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை ஒரிரு வருடங்களில் கட்டங்கட்டமாக அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தும். வடக்கில் மாத்திரமல்ல, தெற்கிலும் முதலமைச்சர்கள் அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரினார்கள்” என்று அவர் கூறினார். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு கடந்த மாதம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் மகாநாட்டைக் கூட்டிய விக்கிரமசிங்க அதன் முதற்சுற்றையடுத…

  4. பாராளுமன்றத்தில் இல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றுக்கு புனர்வாழ்வு மையங்களை நடத்தும் அதிகாரத்தை வழங்கும் புனர்வாழ்வுப் பணியக சட்டமூலம், புதன்கிழமை (18) இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் பிற அரசியல் எதிரிகளை, இராணுவத்தால் இயக்கப்படும் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கும் அதிகாரத்தை, இந்தச் சட்டம் அரசாங்கத்துக்கு வழங்கும் என, இந்தச் சட்டமூலத்தின் விமர்சகர்கள் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷவால் அமைச்சரவையில் அங்கிகரிக்கப்பட்டு, பாராள…

  5. 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை – அலி சப்ரி! பொங்கல் விழாவுக்கு யாழ்ப்பாணத்துக்கு வந்த ரணில் விக்ரமசிங்க நல்லூர் துர்கா மணிமண்டபத்தில் ஆற்றிய உரையில் 13வது திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாக தெரிவித்திருந்தார்.அவர் அவ்வாறு கூறிய சில நாட்களின் பின் கொழும்புக்கு வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதனை இந்தியாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக வலியுறுத்தி கூறினார்.கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இந்தியாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக அதுதான் காணப்படுகிறது. இந்திய இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்பட்டது 13ஆவது திருத்தம். இந்திய இலங்கை உடன்படிக்கையில் கையெழுத்திட்டது இந்தியாவ…

  6. சின்னத்தில் என்ன இருக்கிறது? - நிலாந்தன் தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு புதிய கூட்டமைப்பை அமைக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இதனால் விக்னேஸ்வரன்-மணிவண்ணன் அணியானது மான் சின்னத்தின் கீழும் ஏனைய கட்சிகள் குத்துவிளக்கு சின்னத்தின் கீழும் போட்டியிடுவதாக முடிவாகியுள்ளது. தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு பெரிய கூட்டை உருவாக்கப் போகின்றன என்று எதிர்பார்க்கப்பட்ட கட்சிகள் ஒரு பொதுச் சின்னத்தை கண்டுபிடிக்க முடியாமல் தங்களுக்கு இடையே இரண்டாக உடைந்து விட்டன. இந்த உடைவை தொகுத்துப் பார்த்தால் வெளிப்படையாக ஒரு விடயம் தெரிகிறது. ஆயுதப்போராட்ட மரபில் வந்த கட்சிகள் ஓரணியிலும் ஆயுதப்போராட்ட மரபில் வராத கட்சிகள் இன்னொரு அணியாகவும் நிற்பதைக் காணலாம். இது ஆ…

  7. பேச்சுவார்த்தைக்கான நிபுணத்துவ அறிவு கட்சிகளுக்குத் தேவையா ? நிலாந்தன். கடந்த 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் பதினோராம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாணம் ராஜா க்ரீம் ஹவுஸ் மண்டபத்தில் ஒரு சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது. மன்னாரைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கமானது மேற்படி சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழ்த்தேசிய மக்கள்முன்னணி அழைக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான உறவு சுமூகமானது அல்ல. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இது போன்ற ஒருங்கிணைப்ப…

  8. பதின்மூன்றை ஈழத்தமிழர்களுக்காகக் காண்பித்துக் கொண்டு டில்லி கொழும்பைக் கையாளுகின்றதா, கொழும்பு டில்லியை ஏமாற்றுகின்றதா? இலங்கையின் விருப்பங்களுக்கு உடன்பட்ட ஜெய்சங்கரின் கொழும்புப் பயணம் பதிப்பு: 2023 ஜன. 21 10:39 புலம்: யாழ்ப்பாணம், ஈழம் புதுப்பிப்பு: ஜன. 21 21:54 தமிழ்த்தேசியக் கட்சிகளிடையே தொடர்ச்சியாகக் காணப்படும் முரண்பாடுகள், பிரிந்து நின்று அமெரிக்க இந்திய அரசுகளின் தந்திரோபாயங்களுக்கு உட்படுதல், மற்றும் கொழும்பில் சிங்கள ஆட்சியாளர்களுடனான தனிப்பட்ட உறவுகள் போன்ற நேர்மையற்ற அரசியல் செயற்…

  9. விக்கி: நம்பிக்கைகளை சிதைக்கும் அவசர நாயகன் புருஜோத்தமன் தங்கமயில் “கைகளின் இரத்தக் கறை உள்ளவர்களுடன் என்னை என்னால் இணைத்துப் பார்க்க முடியாது; தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றில் இணைய வேண்டுமாக இருந்தால் தமிழரசுக் கட்சியில் இணைவேன்...” என்று சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்ற சில மாதங்களில் தெரிவித்த விடயம் பெரும் சர்ச்சையானது. இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார். அப்போது, கூட்டமைப்பின் பேச்சாளராக ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரான சுரேஷ் பிரேமசந்திரன் இருந்தார். அவர், விக்னேஸ…

    • 2 replies
    • 1.1k views
  10. தேசிய பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை வலுப்படுத்த வேண்டியது அவசியம் Photo, AP/ Eranga Jayawardena via Yahoo News இதுகாலவரை தங்களது அதிகாரம், மதிப்பு மற்றும் சட்ட விலக்கு ஆகியவை காரணமாக தீண்டப்படமுடியாதவர்களாகக் கருதப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகள் மூவரை நேரடியாக பாதித்த கடந்த வாரத்தைய எதிர்பார்க்கப்படாத நிகழ்வுகள், தீர்க்கப்படாமல் இருக்கும் போர்க்கால மனித உரிமைகள் பிரச்சினைகளைக் கையாளுவதற்கு உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையொன்றை அமைக்கும் அரசாங்கத்தின் யோசனைக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுக்கும். முதலாவது, முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்‌ஷவும் கோட்டபாய ராஜபக்‌ஷவும் பதவியில் இருந்த காலப்பகுதிகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்காக அவர்களுக்கு எதிராக தடைகள் விதிக்கப்…

  11. கூட்டமைப்பு ‘டமால்’ என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan உருவாகிய நாளிலிருந்தே முரண்பாடுகளுக்கும் பிரிவுகளுக்கும் குறையில்லாததாகத்தான் ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ இருந்து வந்திருக்கிறது. பொதுவாக நிலவும் நம்பிக்கைகள் பல உண்மையாக இருப்பதில்லை. சிலவேளைகளில் அவை வசதியான பிரசாரத்தின் விளைவாக, உண்மைக்குப் புறம்பாக சமூகத்தில் விதைக்கப்படுபவையாகக் கூட இருக்கலாம். அதில் ஒன்றுதான் கூட்டமைப்பை, விடுதலைப் புலிகள் உருவாக்கினார்கள் என்பதாகும். கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் உருவாக்கவில்லை. அப்படிச் சொல்வது அதன் உருவாக்கத்துக்காகப் பாடுபட்டவர்களுக்கு செய்கிற அநீதி. கூட்டமைப்பு என்பது அதன் உருவாக்கத்துக்குப் பின்னர், தமக்கான அரசியல் சந்தர்ப்பம் கருதி விடுதலைப…

  12. தனித்துப் போட்டி: பங்காளிகளை நோக்கி தமிழரசு வீசிய சாட்டை புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய இறுதி நாள்களை எண்ணத் தொடங்கிவிட்டது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தீர்மானத்தை இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்ததன் மூலம், கூட்டமைப்புக்கான முடிவுரை எழுதப்பட்டிருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்துக்குப் பின்னர், கூட்டமைப்பு தன்னையொரு தேர்தல் கூட்டாக மெல்ல மெல்லச் சுருக்கிக் கொண்ட போதே, அதன் அழிவுகாலம் ஆரம்பித்துவிட்டதை தமிழ் மக்கள் உணர்ந்து விட்டார்கள். ஏனெனில், தேர்தல் வெற்றிகளை மாத்திரம் முன்னிறுத்தி செயற்படும் கூட்டுகள், நீண்ட காலம் நீடிப்பதற்கான வாய்ப்புகள் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. விடுதலைப் …

  13. மீன் கரைஞ்சாலும் சட்டிக்குள் இல்லை? - நிலாந்தன் தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியம் என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகக் கூட்டிக்கட்டுவது. தேசிய அரசியல் என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகக் கூட்டிக்கட்டும் அரசியற் செய்முறைதான். இந்த அடிப்படையில் சிந்தித்தால் கடந்த சில நாட்களாக நடந்து வருபவை நிச்சயமாக தேசத்தைத் திரட்டும் அரசியல் அல்ல. தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடுவது என்று முடிவெடுத்ததன் உள்நோக்கம் பங்காளிக் கட்சிகளை வெளியே தள்ளுவதுதான். வீட்டுச் சின்னத்தைக் கைவிட்டால் பங்காளிக் கட்சிகள் வெல்ல முடியாது என்று தமிழரசு கட்சி நம்புகின்றது. கடந்த பொதுத் தேர்தல் அந்த நம்பிக்கையைத் தோற்கடித்து விட்டது. எனினும் தமிழரசு கட்சி அப்படி நம்புகிறது. எனவ…

  14. கனடா விதித்திருக்கும் தடை -நிலாந்தன். தாயகத்தில் கூட்டமைப்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலையொட்டிக் குலைந்து போய் நிற்கும் ஒரு காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் கனடாவில் வாழும் தமிழர்கள் ஒரு திருப்பகரமான வெற்றியை பெற்றிருக்கிறார்கள். இலங்கைத் தீவின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக கனடா தடை விதித்திருக்கிறது. ஏற்கனவே அமெரிக்கா நாட்டின் தளபதிக்கு எதிராக தடை விதித்திருக்கிறது. அமெரிக்காவின் தடையோடு ஒப்பிடுகையில் கனடாவின் தடை பலமானது. அமெரிக்கா பயணத்தடை மட்டும்தான் விதித்திருக்கிறது. ஆனால் கனடா பயணத் தடையோடு சேர்த்து தடை விதிக்கப்பட்டவர்கள் கனடாவில் சொத்துக்களை வைத்திருப்பதை, முதலீடுகள் செய்வதை அல்லது கனடாவில் உள்ள முதலீட்டாளர்கள் மேற்படி முன்னாள் ஜனாதி…

  15. உக்ரேனிய போரின் உள்முகம் : அமெரிக்கா நடாத்தும் நிழல் யுத்தம் ! ஜனாதிபதி ஜோ பைடன் மகனின் ஊழல் மூடி மறைப்பு ! – ஐங்கரன் விக்கினேஸ்வரா —————————————————— (அமெரிக்கா தனது வரலாற்று எதிரியான ரஷ்யாவை எதிர்க்கவே உக்ரேனுக்கு ஆயுத உதவிகள் என்று இலகுவாக எல்லேராலும் கூறி விட முடியும். ஆனாலும் அதற்கு மேலாக மற்றொரு முக்கிய காரணியும் உண்டு. அதுவே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மகனின் உக்ரேனிய நிறுவனங்களூடான வணிக உடன்பாடும், ஊழல் மூடி மறைப்பும் ஆகும்.இந்த உக்ரேனிய வணிக உடன்பாடும் ஊழலும் பற்றியே இந்த ஆக்கம் அலசுகின்றது.) …

  16. "ததேகூ பிளவும் உள்ளூராட்சி சபை தேர்தலும்" | நிக்ஸன் மற்றும் சிறீநேசன்

    • 6 replies
    • 810 views
  17. 23 நாள்களில் வரவிருக்கும் ஜனாதிபதியின் தீர்வு எம்.எஸ்.எம் ஐயூப் எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர், அதாவது இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக கடந்த மாதமும் அதற்கு முந்திய மாதமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்த போதிலும், அது நிறைவேறும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. கடந்த நவம்பர் மாதம் வரவு - செலவுத் திட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த வாக்குறுதியை முதன்முதலில் வழங்கினார். வரவு - செலவுத் திட்ட விவாதம் முடிவடைந்ததன் பின்னர், தாம் பாராளுமன்றத்தில உள்ள சகல அரசியல் கட்சிகளையும் அழைத்து, இது தொடர்பாகக் கலந்துரையாட…

  18. தமிழ் தேசியவாதம் மீண்டுமொரு யுத்தத்திற்கு தயாரா? - யதீந்திரா அரசியல் என்பது இயங்குநிலையாகும். அந்த இயங்குநிலை வெற்றியையும் தரலாம். தோல்வியையும் தரலாம். தோல்விகள் ஏற்படுகின்ற போது, அது அனுபவமாகின்றது. இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து, பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் எதுவுமே வெற்றியில் முடியவில்லை. செல்வநாயகம் தலைமையிலான தமிழரசு கட்சியின் காலம் தோல்வி. அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலம் தோல்வி, ஜந்து இயக்கங்களின் காலம் தோல்வி. விடுதலைப் புலிகளின் காலம் தோல்வி. இது சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காலம். இதுவரையில் சம்பந்தனால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் த…

  19. இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொழும்பு கிளர்ச்சியின் விளைவால் ஆட்சி மாற்றத்துக்கு பதிலாக ஆள் மாற்றம் நிகழ்ந்து ரணில் ஜனாதிபதியானார், இந்திய தரப்பு உடனடியாக வாழ்த்துச் செய்தி அனுப்பாது தாமதமாகவே வாழ்த்து அனுப்பி இருந்தது இந்நிலையில் அழகப்பெரும ஜனாதிபதி நாற்காலியில் அமர்வதையே இந்திய உளவுத்துறை விரும்பியதாக ரணில் இந்திய தூதரகத்திடம் குற்றம் சாட்டி முறைப்பாடு செய்திருந்தார் . அதனை இந்திய தூதரகமும் வெளிவிவகார அமைச்சும் முற்றாக மறுத்தும் இருந்தது. கரடு முரடான உறவு இலங்கையில் யார் பதவிக்கு வந்தாலும் அவர்களது முதலாவது வெளிநாட்டு பயணம் புதுடெல்லியாகவே இருக்கும். ஆனால் ரணில் பதவிக்கு வந்தபின் அவ்வாறு நிகழவில்லை. இந்தப் பின்னணியில் ரணிலுக்கும் இந்தியாவ…

  20. இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளும் தமிழர் தரப்பும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan நேற்று முன்தினம் (09) திங்கட்கிழமை முதல், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் முழு வீச்சில் ஆரம்பமாகி இருக்கின்றன. இது ஒரு பொன்னான வாய்ப்பு. இப்படிச் சொல்வதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தானாக முன்வந்து, 2022 நவம்பரில் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, “இலங்கை தனது 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கும் 2023 பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்பதாக, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும்” என்று கூறியதுடன், தமிழர் தரப்பை அதற்கான பேச்சுவார்த்தைக்கும் அழைத்திருந்தார். இதைத் …

  21. மாவை மீதான விக்கியின் திடீர்ப் பாசம்! சுயநலவாதிகளின் நாடகம் புருஜோத்தமன் தங்கமயில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து, பரந்துபட்ட கூட்டணியை அமைக்க வேண்டும் என்று, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருக்கின்றார். மாவையை “தலைமைத்துவ ஆளுமையற்றவர்” என்று தொடர்ச்சியாகக் கூறி வந்த விக்னேஸ்வரன், திடீரென்று மாவையின் தலைமையில் கூட்டணி அமைப்போம் என்ற அறிவித்தலை விடுக்கிறார் என்றால், அதன் பின்னணியை ஆராய வேண்டி ஏற்படுகிறது. வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பால், விக்னேஸ்வரன் நேரடி அரசியலுக்கு அழைத்துவரப்பட்டு 10 ஆண்டுகளாகப் போகிறது. விக்னேஸ்வரன், …

  22. பிச்சை எடுக்கப் பேச்சுவார்த்தை ? - நிலாந்தன் 2023 ஆம் ஆண்டிலாவது உலக நாடுகளிடம் கையேந்தாத நிலைக்கு இலங்கை வளர்ச்சியடைய வேண்டும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் அவர்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.ஆனால் நாடு இந்த ஆண்டு மட்டுமல்ல இனி வரும் ஆண்டுகளிலும் பிச்சை எடுக்காமல் தப்பிப்பிழைக்க முடியாது என்பதே மெய்நிலை ஆகும். பன்னாட்டு நாணய நிதியம் தரும் சிறிய உதவி கடனைத் தீர்க்கப் போதாது. அது 2.8பில்லியன்கள் மட்டும்தான்.ஆனால் நாட்டின் மொத்த கடன் தொகை 50பில்லியன்களைவிட அதிகம். எனவே கடன்வாங்கி கடனை அடைக்க முடியாது. பன்னாட்டு நாணய நிதியத்திடம் இலங்கை அரசாங்கங்கள் கடன் வாங்குவது இதுதான் முதல் தடவையுமல்ல. இதற்கு முன் பதினாறு தடவைகள் கடன்…

  23. அடுத்த சுதந்திரதின விழாவிற்குள் என்ன கிடைக்கும் ? நிலாந்தன். கலண்டருக்குத் தட்டுப்பாடான மற்றொரு ஆண்டு பிறந்திருக்கிறது. பிறக்கும்போதே அது பேச்சுவார்த்தையோடுதான் பிறந்திருக்கிறது.ஆனால் முடியும்போது அது சமாதானத்தில் முடியுமா என்பது சந்தேகம்தான். நாட்டின் 75வது சுதந்திர தின விழாவிற்குள் சமாதானத்தை நோக்கித் திருப்பகரமான ஒரு முடிவை எடுக்கப் போவதாக அரசுத்தலைவர் அறிவித்திருக்கிறார்.தமிழ்த் தரப்பைத் திருப்திப்படுத்தாமல் அவ்வாறு திருப்பகரமான முடிவு எதையும் எடுக்க முடியாது. பொதுவாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலங்களில் தமிழரசுக் கட்சி ஆட்சியின் காதலியாகி விடும்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியின் போது தமிழரசுக்கட்சி போராளி ஆகிவிடும் என்று எனது நண்பர் ஒருவர் கூறு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.