Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. உக்ரைன் போரும் உலகில் அதன் தாக்கமும் தமிழில்: ஜெயந்திரன் February 26, 2023 உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள முழு அளவிலான ஆக்கிரமிப்பு நடவடிக்கை மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்களின் சாவுக்கும் மில்லியன் கணக்கிலான மக்களின் இடப்பெயர்வுக்கும் எண்ண முடியாத அளவுக்கு வீடுகள், பொது மக்களின் கட்டடங்கள், உட்கட்டுமானங்கள் போன்றவற்றின் அழிவுக்கும் இந்த நடவடிக்கை காரணமாக அமைந்திருக்கிறது. உலகில் அறநெறி ரீதியாகவும், மூலோபாய ரீதியாகவும் என்ன நிலையில் ரஷ்யா தற்போது இருக்கின்றது என்பதையும் இது கோடிட்டுக் காட்டியிருக்கிறது. ஏனென்றால் இந்தப் போருக்கு போதிய தயார் நிலையில் ரஷ்ய இராணுவம் இருக்கவில்லை என்பதையும் அதே நேரம் ர…

  2. தீர்வு முதல் தேர்தல் தொட்டு பிரபாகரன் வரை: காலத்தை வீணடித்தல் மொஹமட் பாதுஷா இலங்கையில் பொருளாதார பஞ்சம், அரசியல் பஞ்சம், ஜனநாயக பஞ்சம், மனித உரிமைகள் பஞ்சம், இனநல்லிணக்கப் பஞ்சம், நீதி நிலைநாட்டல் பஞ்சம் போன்ற பஞ்ச நிலைமைகள் நிலவிய போதிலும் கூட, நாட்டு மக்களை ஏதேனும் ஒரு விடயத்தின்பால் ‘பராக்குக்காட்டி’, காலத்தை வீணடிக்கின்ற போக்குகளுக்கு, ஒருபோதும் பஞ்சம் இருந்ததில்லை. பொய்க் கற்பிதங்களும் கதை விடுதல்களும் மக்களை முட்டாளாக்கும் பாங்கிலான நகர்வுகளும், நமது அரசியல், ஆளுகை ஒழுங்கை ஆட்கொண்டுள்ளன. இவற்றைவிடுத்து, நாட்டை முன்னேற்றுவதற்கானதும், மக்களது பிரச்சினைகளை குறைப்பதற்கானதும், இதயசுத்தியுடனான உருப்படியான வேலைத்திட்டங்கள் இல்லை. மாறிமாறி அதிகாரத்துக…

  3. மாறாத களமுனையும் மாற்றத்தை விரும்பும் பைடனின் பயணமும்!

  4. தேசியமென்னும் வெற்றுக் கூடு – அன்றும் இன்றும் ? - யதீந்திரா அரசியலில் ஒரு கூற்றுண்டு. அதாவது, பேருந்தை தவறவிடுதல். வாய்ப்புக்கள் கிடைக்கின்ற போது, அதனை கெட்டியாக பற்றிக்கொள்ள வேண்டுமென்பதுதான் இந்தக் கூற்றின் பொருளாகும். தமிழில் இதனை காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளுதல் எனலாம். ஒரு மேற்குலக நாடொன்றின், தூதுவருடனான கலந்துரையாடலொன்றின் போது, இதனை நான் குறிப்பிட்டேன், அவர் திரும்பக் கூறினார், நீங்கள் பேருந்தை தவறவிட்டது மட்டுமல்ல, பேருந்திலிருந்து பாய்ந்துமிருக்கின்றீர்கள். திபெத் ஆண்மீகத் தலைவர் தலைலாமா கூறுவார். அதிஸ்ட தேவதை எப்போதாவதுதான் கதவை தட்டுவார். அவர் கதவை தட்டும்போது தாமதிக்காமல் கைகை பிடித்து, உள்ளுக்குள் இழுத…

  5. பிரபாகரனை உயிர்ப்பித்தல் எனும் பித்தலாட்டம் புருஜோத்தமன் தங்கமயில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருப்பதாக, உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்திருக்கிறார். நீண்ட காலமாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் நெடுமாறன், பொது நிகழ்வுகளில் பெரிதாக பங்கேற்பதில்லை. கடந்த திங்கட்கிழமை (13) தஞ்சாவூரில் அமைந்திருக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர், பிரபாகரன் உயிரோடு இருப்பதாக வெளிப்படுத்தினார். இதன்போது, அவருக்கு அருகில் காசி ஆனந்தனும் அமர்ந்திருந்தார். தலைவர் பிரபாகரனின் மனைவி என்று, முகத்தை மூடி முக்காடு அணிந்த பெண்ணொருவரை அறிமுகப்படுத்தி, அண்மையில் சுவிஸில் …

  6. உள்ளூராட்சி சபைத் தேர்தல்: வரும்? ஆனால் வராது? நிலாந்தன். உள்ளூராட்சித் தேர்தல் நடக்குமா நடக்காதா என்பது ஏறக்குறைய வடிவேலுவின் ஜோக்கை போல் ஆகிவிட்டது. “வரும் ஆனா வராது”? இதில் பொதுவாக ஒரு அபிப்பிராயம் உண்டு.அரசாங்கம் தேர்தலை நடாத்த விரும்பவில்லை என்று. அது உண்மை. ஏனென்றால் இப்போது இருக்கும் அரசாங்கம் ஒற்றை யானையால் தலைமை தாங்கப்படும் தாமரை மொட்டுக்கள் உடையது. ஒரு தேர்தல் நடந்து அதில் தாமரை மொட்டு மக்கள் ஆணையை இழந்து விட்டது என்று தெரிய வந்தால், அது அரசியல் ஸ்திரத்தன்மையை பாதிக்கும். ரணில் விக்கிரமசிங்க இப்பொழுது முன்னெடுத்துவரும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான நகர்வுகளையும் பாதிக்கும். எனவே பொதுப்படையாக பார்த்தால், ஒரு தேர்தலை நடாத்த இந்த அரசாங்கம் விரும்பாது எ…

  7. Courtesy: ச.வி.கிருபாகரன், பிரான்ஸ் இலங்கைதீவின் சுதந்திரத்தை தொடர்ந்து நடைபெற்ற அரசியல், பொருளாதார, சமூக, கலை மற்றும் கலாசார சம்பவங்கள், நிகழ்வுகளை நாம் மிகவும் அவதானமாக ஆராய்வோமானால், அவை பேயாட்டம், சூதாட்டம், போராட்டம், களியாட்டம் என்ற அடிப்படையிலேயே கடந்த எழுபத்து ஐந்து வருடங்களாக நகர்ந்துள்ளதை அவதானிக்க முடியும். இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் எந்த தமிழன் எங்கு வாழ்ந்தாலும், அவர்களுடைய வாழ்க்கை, பங்களிப்பு சரித்திரம் மிக சுருங்கிய சில தசாப்தங்களே. ஆனால் இவ் பூமியில் தமிழ் மொழி கலை, கலாச்சாரம் என்பது பல ஆயிரம் ஆண்டுகள் அல்ல, “கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு மூத்த தமிழ்”. இதில் இலங்கைதீவில் தமிழர் தாயாக பூமியான வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்க…

  8. சுதந்திர தினத்தையொட்டி தமிழர்கள் நடாத்திய போராட்டங்கள் – நிலாந்தன். February 19, 2023 “சிவாஜிலிங்கம் தனது ஆதங்க ஆவேசத்தை வெளிப்படுத்துகிறார். இது அவரது உரிமை. அவரது ஆவேச கோரிக்கைகள் தமிழ் மக்களின் ஆவேச கோரிக்கைகள்தான். எனக்கு அதில் மாற்று கருத்து தெரியலை. ஆனால் இவர் இப்படி தன்னந்தனி மனிதராக இதை செய்யும்போது, அவர் முன்வைக்கும் கோஷங்களும் பலவீனமடைகின்றனவே? தவிர்க்க முடியாமல் ஒரு கோமாளி தோற்றப்பாடும் ஏற்படுகிறதே? இவற்றை இன்னமும் கட்சி, இயக்கரீதியாக பலமாக திட்டமிட்டு அமைப்புரீதியாக செய்ய முடியாதா?” இவ்வாறு கேட்டிருப்பவர் மனோகணேசன். சுதந்திர தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வில் பங்குபற்றுவதற்காக வருகை தந்த ஜனாத…

  9. 13 படும்பாடு January 25, 2023 ♦️வீரகத்தி தனபாலசிங்கம் இலங்கை அரசாங்கத் தலைவர்கள் வழமையாக கூறுகின்ற ஆனால், தவறாமல் மீறி வந்திருக்கின்ற ஒரு உறுதிமொழியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் யாழ்ப்பாணத்தில் கடந்தவாரம் தைப்பொங்கல் விழாவில் வழங்கியிருந்தார். “அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை ஒரிரு வருடங்களில் கட்டங்கட்டமாக அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தும். வடக்கில் மாத்திரமல்ல, தெற்கிலும் முதலமைச்சர்கள் அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரினார்கள்” என்று அவர் கூறினார். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு கடந்த மாதம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் மகாநாட்டைக் கூட்டிய விக்கிரமசிங்க அதன் முதற்சுற்றையடுத…

  10. 1987 நிலைமைகள் மேல் எழுகின்றனவா ? இலங்கை அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.இலங்கை தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடாக இது வலியுறுத்தப்பட்டு வருகின்றது.ஐக்கிய நாடுகள் சபையின் கூட்ட தொடரிலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் அண்மைய கூட்டத்தொடரிலும் இந்தியா இதனையே வலியுறுத்தி இருந்தது. கடந்த 18 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இதனையே வலியுறுத்தி விட்டு சென்றிருந்தார். அவரைத் தொடர்ந்து இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய வெளிவிவகார ராஜாங்க அமைச்சரும் இதனையே குறிப்…

  11. அன்பின் ஐயா நெடுமாறனுக்கு ! அண்மையில் நீங்கள் தெரிவித்த விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிய கருத்து அனைவரையும் உங்கள் மேல் உற்றுப் பார்க்க வைத்திருக்கிறது. பிரபாகரன் உயிரோட இருக்கிறார் என்று வந்த அறிவிப்பு இத்தனை பூகம்பத்தை ஏற்படுத்தி விடுதலைப் புலிகளின் தலைவரை ஓர் கவர்ச்சியான மக்களை ஈர்க்கும் தாக்கத்தை சமூக இணையத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. ( Charismatic figure ) முகம் கொண்டு பார்க்க வைத்திருக்கிறது. ஈழத் தமிழர் விடிவுக்காய் எந்த வித அரசியல் ஆதாயமும் பதவியும் பணமும் இன்றி இயன்றவரை நீங்கள் ஆற்றிய அர்பணிப்புக்களை நாகரிகமாக நன்றியுணர்வுடன் நினைவு கொள்ளும் அதே வேளை ஐயா உங்கள் இறுதிக் காலத்திலும் உண்மையோடு உழைப்பீர்கள் என்கிற நம்பிகை நமக்கு சில ஐயங்களை உண்டு பண்ணியுள்ளது. …

  12. 13உம் இனவாதமும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் மீதான விவாதத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அல்லது 13+ இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்று அறுதியிட்டு ஜே.வி.பியின் மிக நீண்டகால நிலைப்பாட்டை மீள வலியுறுத்திக் கருத்துரைத்திருந்தார். 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சட்டமோ அல்லது அதில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களோ மக்கள் வாக்கெடுப்பின் மூலம் அங்கிகரிக்கப்படவில்லை என்ற அநுர குமார, வடக்கு மற்றும் தெற்கில் உள்ள மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்பின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என பாராளுமன்றத்தி…

  13. மீண்டும் தோல்வியடைந்த இ.உளவுத்துறை

  14. சூழ்நிலைக் கைதிகளாக தமிழ்த் தேசியத் தலைவர்கள் February 14, 2023 — கருணாகரன் — தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் உடைந்து பல துண்டுகளாகச் சிதறிக் கிடப்பதையிட்டு போராளி ஒருவர் கவலையோடு சில விடயங்களைப் பேசினார். கூடவே சில கேள்விகளையும் எழுப்பினார். அவர் எழுப்பிய கேள்விகள் இதுதான். 1. தற்போது மேலும் பல துண்டுகளாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்துள்ளது. அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வெளியேறி உள்ளது. உள்ளுராட்சித் தேர்தலில் பல அணிகள் போட்டியிடுகின்றன. இது தமிழரின் அரசியலை பலவீனப்படுத்தும் நடவடிக்கையல்லவா? 2. இப்படிப் பிரிந்தும் உடைந்தும் பல அணிகளாக நிற்பது தவறானது. இந்த நிலையானது ஒடுக்குகின்ற சிங்கள மேலாதிக…

  15. Courtesy: ஜெரா தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் தவிர்த்து இலங்கை - இந்திய அரசியல் ஒரு சாண்கூட நகராது என்பதற்கு அண்மைய பரபரப்புக்கள் உதாரணமாகும். நேற்றைய தினம் தமிழக அரசியல் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட குழுவினர் திடீரென ஏற்பாடு செய்த ஊடகச் சந்திப்பில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் நலமாக இருக்கிறார் எனச் சொன்ன கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. புலிகள், பிரபாகரன் யார்? தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் தலைவர் பிரபாகரன் அவர்களும் தம் போராட்ட வாழ்க்கையின் ஊடாக விட்டுச் சென்ற செய்தி கனதியானது. அவர்கள் செய்த தியாகங்கள் அளப்பரியது. கொள்கை முப்பத…

  16. யாழ் கலாச்சார மையம் யாருடைய பொறுப்பில்? நிலாந்தன். கொழும்பில் ஆயிரக்கணக்கான பிக்குகள் திரண்டு 13வது திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். அத்திருத்தத்தின் பிரதியை நெருப்பில் கொளுத்தியிருக்கிறார்கள். 13 ஆவது திருத்தம் தொடர்பான ரணில் விக்கிரமசிங்காவின் நிலைப்பாட்டை வெளிப்படையாக முன்வைக்குமாறு கூறி அவருக்கு இரண்டு கிழமைகள் அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க 13ஐ முழுமையாக அமல்படுத்த போவதில்லை. கடந்த புதன் கிழமை நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய கொள்கை விளக்க உரையில் அது தெரிகிறது. குறிப்பாக போலீஸ் அதிகாரம் தொடர்பில் அவர் தெளிவற்ற வார்த்தைகளில் கதைக்கிறார். இப்பொழுதுள்ள போலீஸ் நிர்வாக கட்டமைப்பின்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு டிஐஜி…

  17. பிச்சையெடுக்கச் சுதந்திரம்? - நிலாந்தன் “நான் பேசப்போவது எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி அல்ல. இன்று நாம் இழந்திருக்கும் சுதந்திரத்தை மீளப்பெறுவது பற்றியே நான் பேசப்போகிறேன்” இப்படிப் பேசியிருப்பவர் நாட்டின் ஜனாதிபதி. நடந்து முடிந்த சுதந்திர தின விழாவில் அவர் ஆற்றிய உரை அது. நாங்கள் சுதந்திரத்தை இழந்து விட்டோம் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். இதை எப்பொழுது கூறுகிறார்? ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகளின் பின் கூறுகிறார். ஆயின்,2009 ஆம் ஆண்டு ராஜபக்ச சகோதரர்கள் வென்று கொடுத்த சுதந்திரம் எங்கே? அல்லது அது சுதந்திரமே இல்லையா? ராஜபக்சக்கள் யாருக்காக நாட்டை மீட்டுக் கொடுத்தார்களோ, அந்த மக்களே இப்பொழுது நாட்டை விட்டு வெளியேறிக் கொண்…

  18. ரணில் எனும் பசுத்தோல் போர்த்திய ‘நரி’ புருஜோத்தமன் தங்கமயில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து அறிவித்திருந்தார். ரணில், ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டதும் அவசர அவசரமாக சர்வகட்சிக் கூட்டங்களைக் நடத்தி, நாட்டில் புரையோடிப்போயுள்ள இனமுரண்பாடுகளுக்குத் தீர்வு காணப்போவதாக கூறினார். அதற்காக, தமிழ்த் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தைகளையும் அவர் ஆரம்பித்தார். சுதந்திர இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை, இனவாதமும் மதவாதமும் அடக்குமுறைகளுக்கான ஏதுகைகளுமே தீர்மானித்து வந்திருக்கின்றன. இலங்கைக…

  19. பாதாளத்தை நோக்கிய 75 ஆண்டுகள் எம்.எஸ்.எம் ஐயூப் கடந்த நான்காம் திகதி நடைபெற்ற இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், முன்னைய வருடங்களின் சுதந்திர தின நிகழ்வுகளைப் போல் ஜொலிக்கவில்லை. வீடுகளிலும் வாகனங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் முன்னர் போல் தேசிய கொடி பறப்பதை காணக்கூடியதாக இருக்கவில்லை. இதற்கு முன்னர் பல வருடங்களிலும், எதிர்க்கட்சிகள் அரச அனுசரணையுடன் நடைபெறும் சுதந்திர தின விழாக்களை பகிஷ்கரித்துள்ளன. கடந்த வருடம், ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமன்றி, ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை. இம்முறை சுதந்திர தினத்துக்கு எதிராக, நாட்டின் தென்பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. ஏனைய விடயங்களைப் போலவே, ச…

  20. இலங்கை இன பிரச்னைக்கு முட்டுக்கட்டை போடுகிறதா பௌத்த தேசியவாதம்? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMD - SRI LANKA படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க இலங்கை இனப் பிரச்னைக்கு தீர்வாக இந்தியாவின் உதவியுடன் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமல்படுத்த ரணில் விக்ரமசிங்க திட்டமிட்ட நிலையில், பெரும்பான்மை சிங்களவர்கள் அந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 75வது சுதந்திர த…

  21. குருவை மிஞ்சிய சீடனாக ரணில் விக்ரமசிங்க இலங்கை ராஜதந்திர வட்டாரத்தில் தனது ஆடுகளத்தை தற்போது ஆரம்பித்து விட்டார். கடந்த மாதம் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்து திரும்பியதும் 13ஆம் திருத்தச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் அதற்கான ஏற்பாடுகளுக்கு ரணில் உத்தரவிட்டுவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. தீர்வு திட்டத்தை வழங்க ரணில் தயார் இல்லை இந்த நிலையில் சிங்கள தரப்பிலிருந்தும், தமிழ் தரப்பில் இருந்தும் பல்வேறு தரப்பட்ட வாதப் பிரதிவாதங்கள் ஒரு பெரும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. உண்மையில் ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வு திட்டத்தை வழங்குவதற்கு தயார் இல்லை. ஆனால் தமிழ் …

  22. சில சிந்தனைகள்: ‘சுதந்திரம்’ கிடைத்து 75 ஆண்டுகள்! என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கையானது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுதலையடைந்து, பிரித்தானிய முடியின் கீழ் டொமினியனாக ஆன, 1948 பெப்ரவரி நான்காம் திகதியை இலங்கை, சுதந்திர தினமாகக் கொண்டாடி வருகிறது. அந்தச் ‘சுதந்திரம்’ கிடைத்து, கடந்த சனிக்கிழமையோடு 75 ஆண்டுகளாகியது. 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதா, வேண்டாமா என்ற வாதப்பிரதிவாதங்கள் இந்தமுறை மிகப் பலமாக ஒலித்தன. சுதந்திர தினத்துக்கு முதல் நாளிரவு, கொழும்பின் மருதானையில் சத்தியாக்கிரக ஆர்ப்பாட்டம் இடதுசாரிகளால் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தை பொலிஸார் தண்ணீர் பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும் கலைத்த…

  23. இலங்கை மக்களின் இதயத்தைத் தொடாத சுதந்திர தினக் கொண்டாட்டம்! February 6, 2018 Photo, Ishara S. Kodikara/ AFP, THE EDITION இலங்கை காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டு பெற்ற சுதந்திரத்தின் 75ஆவது வருட நிறைவை அரசாங்கம் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டாடியது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் ஒரு உரையை நிகழ்த்தவில்லை. தயாரிக்கப்பட்ட உரை சிறப்பானதாக இருந்தது. ஆனால், அது பின்னரே விநியோகிக்கப்பட்டது. இராணுவ அணிவகுப்பு நடைபெற்ற கொழும்பு காலிமுகத்திடலில் பொது மக்களின் பங்கேற்பு தவிர்க்கப்பட்டமை சுதந்திர தின நிகழ்வில் அவதானிக்கக்கூடியதாக இருந்த இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். வழமையான சூழ்நிலைகளில், சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது …

  24. தென்னிலங்கையில் மீண்டும் பெரும்பான்மையினவாத அணிதிரட்டல் முயற்சிகள்! Veeragathy Thanabalasingham on February 8, 2023 Photo, Colombo Telegraph தேசிய இனப்பிரச்சினைக்கு துரிதமாக அரசியல் தீர்வொன்றைக் கண்டுவிடும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டும் நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாடு இதுவரையில் இரு தடவைகள் கூட்டப்பட்டது. முதற்சுற்று கடந்த டிசம்பர் 13ஆம் திகதியும் இரண்டாவது சுற்று ஜனவரி 26ஆம் திகதியும் இடம்பெற்றன. இந்த மகாநாட்டில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கலந்துகொள்வதில்லை. அதன் தலைவர்கள் மகாநாட்டில் கலந்துகொள்ளாதமை பெரும்பாலும் காரணம் காட்ட இயலாததாகும். அவர்கள் கலந்தகொண்டிருக்கமுடியும்; கலந்துகொண்டிருக்கவு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.