அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் சந்தர்ப்பம் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan நிக்கலோ மக்கியாவலி,“யுத்தத்திலே, ஒரு வாய்ப்பை எவ்வாறு அடையாளம் காண்பது மற்றும், அந்த வாய்ப்பை எவ்வாறு கைப்பற்றுவது என்பதை அறிவது, எல்லாவற்றையும் விடச் சிறந்தது” என்று சொன்னார். அரசியலும் ஒரு வகையான யுத்தம்தான். அதில், வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளவும், உருவாகும் வாய்ப்புகளை அடையாளம் காண்பதும், அந்த வாய்ப்புகளைத் தமக்கேற்றவாறு பயன்படுத்துவதும்தான் மிகச் சிறந்த அரசியல் தந்திரோபாயமாகும். 2009 யுத்த முடிவுக்குப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியலின் பேரம் பேசும் சக்தி என்பது, கணிசமாக வீழ்ச்சி கண்டிருந்தது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச அழுத்தங்களால்த்தான், …
-
- 0 replies
- 432 views
-
-
அடுத்த கட்டம்: ‘அரகலய’வுக்கு ஆப்படித்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கை, இன்று ஒரு முட்டுச்சந்தில் நிற்கிறது. புதிய ஜனாதிபதியின் வருகை எதையுமே மாற்றிவிடப் போவதுமில்லை; இலங்கையில் ஜனநாயகம் மலரப்போவதும் இல்லை. முன்னெவரையும் விட, மிக மோசமான சர்வாதிகாரியாகத் தன்னால் இயங்கவியலும் என்பதை, ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற 24 மணி நேரத்துக்குள் நிரூபித்துள்ளார். ரணில் மீதான, ‘மீட்பர்’, ‘ஜனநாயகத்தின் காவலர்’ போன்ற விம்பங்கள் உடைந்து, சுக்குநூறானது நல்லது. இருந்தாலும் இன்னமும் அதைத் தாங்கி நிற்போர் உண்டு. வரலாறு காணாத மக்கள் எழுச்சியொன்றை இலங்கை கண்டுள்ளது. இது அதிகாரபீடங்களை அசைத்துள்ளது. மக்கள் எழுச்சி குறித்த நம்பிக்கைகளை விதைத்துள்ளது. மக்களால் அதிகாரத்தில் …
-
- 0 replies
- 543 views
-
-
ராமாயணம் முதல் ரணில் வரை: எரியும் இலங்கை written by ப.தெய்வீகன்July 25, 2022 “பிரச்சினைக்கான தீர்வு என்ற பெயரில் அரசுகள் வழங்கும் தீர்வுகள், எப்போதும் குறிப்பிட்ட பிரச்சினைக்கு இணையான இன்னொரு பிரச்சினையாகவே இருக்கும்” – நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியல் மேதை மில்டன் ஃபிரைட்மென் கூறிய பிரபஞ்சப் பேருண்மை மிக்க வாக்கியம் இது. சிறிலங்காவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து அரசியல் பதற்றங்களையும் அவற்றுக்கு அரசு ‘சப்ளை’ செய்துகொண்டிருக்கும் தீர்வுகளையும் மில்டனின் இந்த ஒற்றை வாக்கியத்திற்குள் அடக்கிவிடலாம். வரலாற்று ரீதியாக வசதிமிக்க பேரினவாத மனநிலையில் ஊறிப்போன சிங்கள தேசம், எப்படித் தீர்ப்பது என்று வழி தெரியாத புதிரான பேரிடருக்குள் சரித்திரத்தில் ம…
-
- 0 replies
- 326 views
-
-
தந்திரம் பழகு “அரசியல் என்பது சதுரங்கத்தை விட மேலானது. அது துடுப்பாட்டத்தைப்போல ஒரு குழுச்செயற்பாடு.மரதன் ஓட்டத்தைப்போல அதற்கு ஒரு திராணி இருக்க வேண்டும்.நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும்….அது ரகர் விளையாட்டைப்போல கடினமானது,குத்துச்சண்டையைப்போல,ரத்த விளையாட்டு…..”இது ரணில் விக்கிரமசிங்க கூறியது.அவர் சதுரங்கம் விளையாடுவது போன்ற ஒரு காணொளியின் பின்னணியில் இவ்வாறு கூறுகிறார்.இந்த வசனங்களை அவருக்கு எழுதிக் கொடுத்தது தமிழ் ஊடக முதலாளியான ராஜமகேந்திரன் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இப்பொழுது ரணில் ஆட்சிக்கு வந்திருக்கிறார்.மஹிந்தவை,கோட்டாவை நீக்கியதுபோல ரணிலையும் அரகலி…
-
- 3 replies
- 503 views
- 1 follower
-
-
ரணிலா ? அரகலயவா ? -நிலாந்தன்.- ரணில் ஜனாதிபதியாக வந்தபின் நடந்த ஒரு பெரிய மாற்றம் என்று சொன்னால் அரகலயவை அடக்கத் தொடங்கியதுதான். எந்த அரகலயவின் விளைவாக அவர் ஆட்சிக்கு வந்தாரோ, அதே அரகலயவை அவர் இப்பொழுது அடக்கப் பார்க்கிறார். எந்த ஒரு முறைமை மாற்றத்தைக் கேட்டு அரகலய போராடியதோ, அந்த முறைமை மாற்றம் நடக்கவில்லை.மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் அதே பழைய முறைமையினூடாக நிறைவேற்று அதிகாரம் பெற்ற ஜனாதிபதியாக எழுச்சி பெற்றிருக்கிறார். காலிமுகத்திடல் சோர்ந்துபோய் விட்டதாக அவதானிக்கப்படுகிறது. அங்கு முன்னணியில் நின்ற அரசியல் பின்னணியை கொண்ட பலரும் தலைமறைவாகிவிட்டதாகவும் கருதப்படுகிறது. தொடர்ச்சியான கைதுகள் காரணமாக முன்னணி ஏற்பாட்டாளர்கள் பலர் பின் மறைவிற்கு செல்வதாக நம்ப…
-
- 0 replies
- 290 views
-
-
இலங்கை பொருளாதாரம் : அடுத்த 6 மாதங்களில் வரிசைகட்டி நிற்கும் பிரச்னைகள் 30 ஜூலை 2022, 10:03 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஸ்திரமற்ற அரசியல் சூழல், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை, வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளில் இலங்கை திடமான முடிவை எடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. எனவே, இலங்கைக்கு எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இதேவேளை, சீனாவின் நன்மைகளற்ற திட்டங்கள் மற்றும் கடன் கொடுக்கல் வாங்கல்களே, இலங்கை பாதாளத்திற்கு வீழ்வதற்கு காரணம் என அமெர…
-
- 1 reply
- 350 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 621 views
-
-
இலங்கையில் கொந்தளிப்புக்கு மத்தியில் ராணுவம் கட்டுப்பாட்டுடன் செயல்படக்காரணம் என்ன? பிரேரணா பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA இலங்கையில் சுமார் 15 நாட்கள் நீடித்த அரசியல் குழப்பத்திற்குப் பிறகு புதிய அதிபர் பதவியேற்றுள்ளார். ஆனால் சில நாட்களுக்கு நாட்டிற்குள் நடந்த குழப்பங்களின் படங்களை உலகமே பார்த்தது. 13 ஆண்டுகளுக்கு முன்னர் வட இலங்கையில் தமிழ் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற இலங்கை ராணுவம், நாட்டில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகள் மற்றும் அராஜகங்களுக்கு மத்தியில் அரசியலில் தலையிடவில்லை. இம்முற…
-
- 1 reply
- 413 views
- 1 follower
-
-
ஜனாதிபதி தேர்வில் தமிழ்த் தேசிய கட்சிகளின் வெளிப்பாடு புருஜோத்தமன் தங்கமயில் புதிய ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில், தமிழ்த் தேசிய கட்சிகள் மூன்றும், மூன்று விதமான தீர்மானங்களை எடுத்திருந்தன. டளஸ் அழகப்பெரும - சஜித் பிரேமதாஸ அணியை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரித்திருந்தது. ரணில் விக்கிரமசிங்கவை, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆதரித்திருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ, பாராளுமன்ற வாக்கெடுப்பை புறக்கணித்திருந்தது. தமிழ் மக்களைப் பொறுத்தளவில், ராஜபக்ஷர்களின் சுவடு இல்லாத ஆட்சிக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி ஆராய்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில், தமிழ்த் தேசிய கட்சிகள் தீர்மானங்களை மேற்கொள்…
-
- 3 replies
- 596 views
-
-
பொருளாதார நெருக்கடி! இலங்கையை அடுத்து மாலைத்தீவா? பொருளாதார நெருக்கடி! இலங்கையை அடுத்து மாலைத்தீவா? இன்று எமது நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதற்குத் தீா்வை தேட வேண்டிய அரசாங்கம், நாளுக்கு நாள் தனது பொறுப்பிலிருந்து நழுவி வருகிறது. அத்தியாவசிய தேவைகளை மக்கள் முற்றாக இழந்திருக்கின்றாா்கள். மக்களின் உாிமைப் போராட்டம் இப்போது வீதிகளுக்கு வந்திருக்கிறது. மக்களின் பிரச்சினைகளுக்கு துரித தீா்வை வழங்கும் எந்த உருப்படியான வேலைத் திட்டங்களையோ, முயற்சிகளையோ மேற்கொள்ள முடியாத நிலையில் அரசாங்கம் திண்டாடிக் கொண்டிருக்கிறது. இலங்கையின் இன்றைய இந்த வீழ்ச்சிக்கு கடந்த ஏழு தசாப்தங்களாக நாட்டை மாறி மாறி ஆண்ட ஊழல், மோசடி நிறைந்த ஆட்சியாளா்கள…
-
- 0 replies
- 470 views
-
-
-
- 0 replies
- 581 views
-
-
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும் கலாநிதி ஜெகான் பெரேரா பாராளுமன்றத்தில் பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டதை அடுத்து கடந்த நான்கு மாதங்களாக நீடித்த அரசியல் மற்றும் பொருளாதார குழப்பநிலை முடிவுக்கு வரும் என்று பொதுமக்கள் மத்தியில் தற்போதைக்கு ஒரு நம்பிக்கையுணர்வு ஏற்பட்டிருக்கிறது. வெற்றிபெற்ற பிறகு சபையில் உரையாற்றிய அவர் தன்னுடன் கைகோர்க்குமாறு எதிரணி தலைவர்களுக்கு சிலரின் பெயர்களையும் குறிப்பிட்டு அழைப்பு விடுத்தார். தற்போதைய சூறாவளிக்கு மத்தியில் அரசுக்கப்பலை நிலையுறுதிப்படுத்துவதற்கு தேவையான அறிவு வளமும் பல வருடகால ஆட்சிமுறை அனுபவமும் விக்கிரமசிங்கவுக்கு இருக்கிறது என்பத…
-
- 0 replies
- 365 views
-
-
பொற்காலமா அல்லது கறுப்பு ஜூலையா ? கறுப்பு ஜூலை இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய தருணம், இது தீவில் உள்ள அரசியல் கலாசாரமான தண்டனை விலக்கீட்டின் அடையாளம். வன்முறையைப் பயன்படுத்துவதன் மூலம், தமிழர் வாழ்வை அழித்த மற்றும் சிங்கள-பௌத்த பெரும்பான்மையினரின் வாழ்வாதாரத்தை உயர்த்திய சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளின் பல அத்தியாயங்கள் இதில் உள்ளன. ”பசியும் வெறும் வயிறும் பொறுத்துக்கொள்ள முடியாததாக மாறும்போது “அவர்கள்” , “எங்களையும்” ஏமாற்றியுள்ளனர் என்ற புரிதல் ஏற்படுகிறது” தமிழ் ஆனந்தவிநாயகன் இந்த மாதம் ஜூலை 9 அன்றுதான் இலங்கை தனது மக்கள் புரட்சியைத் தேர்ந்தெடுத்திருந்தத…
-
- 0 replies
- 699 views
-
-
ஜனாதிபதி தெரிவும் தமிழ்க் கட்சிகளும் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கையினுடைய எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக, அரசியலமைப்பின் 40ஆவது சரத்தின்படி, பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயான இரகசிய வாக்கெடுப்பின் மூலம், ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டு, பதவியேற்றிருக்கிறார். பல திருப்புமுனைகளோடு, மிக விறுவிறுப்பாக இந்த ஜனாதிபதி தெரிவு அரங்கேறியிருக்கிறது. இந்த ஜனாதிபதி தெரிவின் போதான தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடுகள், நடவடிக்கைகள் என்பவற்றை, மீள்பார்வை செய்வதே இந்தப் பத்தியின் நோக்கமாகும். இன்றுள்ள பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில், கூட்டணிக் கட்சிகள் உள்ளடங்கலாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு, பாராளுமன்றம் …
-
- 0 replies
- 471 views
-
-
ஜனாதிபதி தேர்தலும்... பக்குவமற்ற, தமிழ்க் கட்சிகளும் – நிலாந்தன். தமிழ் மக்கள் ஒரு தேசமாக இல்லை, என்பதைத்தான் நடந்து முடிந்த ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நிரூபித்திருக்கிறது. ஒரு தேசமாக சிந்தித்திருந்திருந்தால் முதலில் கட்சிகள் தங்களுக்கு இடையே ஓர் ஒருங்கிணைப்புக்கு போயிருந்திருக்க வேண்டும். ஒரு பொது முடிவை எடுத்து வேட்பாளர்களை அணுகி இருந்திருக்க வேண்டும். அரங்கில் காணப்பட்ட மூன்று வேட்பாளர்களுமே தமிழ் மக்களுக்கு அவர்கள் கேட்பதை தரப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் தமிழ்த் தரப்பு தனது கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்களை நோக்கி கூட்டாக முன் வைத்திருந்திருக்க வேண்டும். அதன் மூலம் மூன்று வேட்பாளர்களையும் அம்பலப்படுத்தி இருந்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. த…
-
- 18 replies
- 1.2k views
-
-
ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் தேசிய இன பிரச்சினையை தீர்க்க தமிழ் தலைவர்கள் முயற்சிக்கவேண்டும்- விக்கிரமபாகு கருணாரத்ன ரொஷான் நாகலிங்கம் தேசிய இன பிரச்சினையை தீர்க்கும் எண்ணம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியப் பிரச்சினை தொடர்பான தீர்வில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும். அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனவர்கள் தொடர்பான நம்பிக்கை, இராணுவ கையிருப்பில் உள்ள நிலங்களை மக்களுக்கு மீள கையளித்தல் போன்ற விடயங்களை தனது அதிகாரத்தை கொண்டு தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் விரோத செயற்பாடுகள் …
-
- 0 replies
- 285 views
-
-
இலங்கை மக்கள் நிராகரித்த ரணில் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்ற முரண்: அரசியலமைப்பில் தீர்வு உண்டா? யூ.எல்.மப்ரூக் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMD படக்குறிப்பு, ரணில் விக்கிரமசிங்க 'போலிப் பெரும்பான்மை' மூலம் ரணில் விக்ரமசிங்க - ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கூறியிருக்கிறார். 'மக்களின் விருப்பத்தினை ரணிலுக்குக் கிடைத்த நாடாளுமன்றப் பெரும்பான்மை பிரதிபதிக்கவில்லை' என்பது சுமந்திரனின் கருத்தாக உள்ளது. அரசியலமைப்பிலுள்ள 'ஒட…
-
- 5 replies
- 466 views
- 1 follower
-
-
ரணில்: கடைசி ஆளா? நாடாளுமன்றத்தில் தனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே ஒரு உறுப்பினர், அதுவும் தேர்தலில் தோற்றதால்,தேசியப் பட்டியல்மூலம் உள்ளே வந்தவர்,நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இது ஆசியாவின் அதிசயம் மட்டுமல்ல உலகத்தின் அதிசயமும்தான். தாமரை மொட்டுக்குத் தலைமை தாங்கும் யானைக்கும், யானைக்குத் தலைமை தாங்கும் தாமரை மொட்டுக்கும் இடையிலான போட்டியில் யானை ஜெயித்திருக்கிறது. எனவே அது எல்லா விதத்திலும் தாமரை மொட்டுக்குக் கிடைத்த வெற்றிதான். ரகசிய வாக்கெடுப்பு என்பது திருடர்களுக்கு வசதியானது.”அரகலய”போராட்டக்காரர்கள் கூறுவதுபோல, திருடர்களே வெற்றியைத் தீர்மானித்திருக்கிறார்கள். ரணிலை முன்னிறுத்தியதன்மூலம் ராஜபக்சக்…
-
- 0 replies
- 405 views
-
-
மின்சாரக்கட்டமைப்பை இணைப்பது இலங்கைக்கு இலாபகரமான தீர்வு by யே.பெனிற்லஸ் 2022/07/12 in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, சிறப்புக் கட்டுரைகள், முக்கிய செய்திகள் 86 1 A A 0 37 SHARES 1.2k VIEWS Share on FacebookShare on Twitter இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் ஒரு முக்கிய அம்சமாக நாளொன்றுக்கான முழுமையான மின்சாரத்தேவையை வழங்க முடியாத பலவீனமான நிலைமைகள் நீடித்துக்கொ…
-
- 0 replies
- 583 views
- 1 follower
-
-
புதிய ஜனாதிபதியால் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியுமா? கடந்த சில மாதங்களில் இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியானது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமாவை மையப்படுத்தி உச்சத்தை அடைந்தது, அவரது இராஜினாமாவின் பின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்றார். எனினும் பாராளுமன்றத்தை கூட்டி புதிய ஜனாதிபதியை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர். மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி சார்பில் டலஸ் அழகப்பெரும மற்றும் இடதுசாரி மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக…
-
- 0 replies
- 826 views
-
-
"தமிழர்கள் மீது நடந்த 1983 கருப்பு ஜூலை வன்முறை இந்த ஜூலையில் சிங்களர்கள் மீதும் நடக்கிறதா?" ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சிங்கள இனவாதக் குழுவினர், மேற்கொண்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜுலை வன்முறை நடந்தேறி 39 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. கறுப்பு ஜுலையில் முதலாவது கலவரம் ஆரம்பமானது, ஜுலை மாதம் 23ம் தேதி என்பதுடன், அதே தேதியை அண்மித்து மக்கள் மீது இலங்கை ராணுவம் நேற்று (22) தாக்குதல் நடத்தியதாக காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்…
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
அரசியல் தந்திரசாலி ரணிலின் வெற்றி! புருஜோத்தமன் தங்கமயில் நம்பிக்கைக் கதைகளின் புதிய அத்தியாயமாக இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடம்பிடித்திருக்கிறார். ஐந்து தசாப்த கால அரசியல் வாழ்வைக் கொண்டிருக்கின்ற ரணில், ஜனாதிபதிக் கனவை ஒவ்வொரு நாளும் கொண்டு சுமந்தார். இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் நேரடியாக போட்டியிட்டு தோல்வியடைந்த போதிலும், அவர் தனது கனவை அடைவதற்கான அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பரீட்சித்துப் பார்ப்பதற்கு தயாராக இருந்தார். அதுதான், அவரை காலம் இன்று ஜனாதிபதியாக்கியிருக்கிறது. நம்பிக்கைக் கதைகளில் புதிய நாயகனாகவும் மாற்றியிருக்கின்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு கட்சித் தலைவராக ரணில் மிக மோசமான தோல்விகளைச் ச…
-
- 0 replies
- 429 views
-
-
இலங்கை நெருக்கடி: ரணிலை விழிபிதுங்க வைக்கும் 6 தலை வலிகள் தாக்குப்பிடிப்பாரா? எம். மணிகண்டன் பிபிசி தமிழ், இலங்கையில் இருந்து... 58 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை ஜனாதிபதியாகி இருக்கும் ரணில் விக்கிரமசிங்க அவரது அரசியல் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறார். நாட்டில் இருக்கும் சூழலைப் பார்க்கும்போது அவரது பதவிக்காலம் நெருக்கடிகள் மிகுந்ததாகவே இருக்கப் போகிறது. அவருக்கு என்னென்ன நெருக்கடிகள் இருக்கப் போகின்றன? அரசியல் நிபுணர் நிக்சனுடன் பேசியவற்றில் இருந்து தொகுக்கப்பட்ட தகவல்களைப் பார்க்கலாம். ரணிலுக்கு அரசியல் ரீ…
-
- 0 replies
- 462 views
- 1 follower
-
-
இதுகாலவரை தன்னிடமிருந்து நழுவிய பதவியை இறுதியில் அடைந்துவிட்ட ரணில் சுமார் மூன்று தசாப்தங்களாக ஐக்கிய தேசிய கட்சிக்கு வசப்படாமல் இருந்துவந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி இன்றைய தினம் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கைகளுக்கு வந்துசேர்ந்திருக்கிறது. மக்கள் கிளர்ச்சிக்கு முகங்கொடுக்க முடியாமல் நாட்டைவிட்டு தப்பியோடிய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்துகொண்டு கடந்தவாரம் பதவியைத் துறந்ததையடுத்து காலியான ஜனாதிபதி பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவுசெய்வதற்கு இன்று சபையில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் விக்கிரமசிங்கவுக்கு 134 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான முன்ன…
-
- 0 replies
- 263 views
-
-
இலங்கை பதில் ஜனாதிபதி முழு நேர ஜனாதிபதி ஆன முந்தைய வரலாறு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க, இலங்கை புதிய ஜனாதிபதி இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவரின் பதவி, இடைநடுவில் வெற்றிடமாகும் பட்சத்தில், அதற்கு மற்றுமொரு ஜனாதிபதியை தேர்வு செய்யும் இரண்டாவது சந்தர்ப்பம் இன்று இடம்பெற்றது. இலங்கையில் இதற்கு முன்பு முதல் முறையாக நாடாளுமன்றத்தால் 'நிறைவேற்று அதிகார ஜனாதிபதி' தெரிவு 1993ஆம் ஆண்டு இடம்பெற்றது. அப்போதைய ஜனாதிபதியாக பதவி வகித்த ரணசிங்க பிரேமதாஸ, 1993ம் ஆண்டு மே மாதம் முதலாம் தேதி, கொழும்பில் இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த தருணத்…
-
- 0 replies
- 245 views
- 1 follower
-