Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஜந்து கட்சிகளின் உடன்பாடு எதை நோக்கி பயணிக்கின்றது? - யதீந்திரா அண்மையில் தமிழ்த் தேசியவாத கட்சிகளான ஜந்து கட்சிகளுக்கிடையில் ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டிருந்தது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒற்றுமை முயற்சியில் ஆரம்பத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்திருந்த போதிலும் கூட, இறுதி நேரத்தில் இந்த முயற்சியிலிருந்து காங்கிரஸ் வெளியேறியிருந்தது. ஆனால் கஜேந்திரகுமாரோ, தாங்கள் வெளியேறவில்லை மாறாக வெளியேற்றப்பட்டோம் என்று கூறிவருகின்றார். இடைக்கால அறிக்கை நிராகரிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை தமிழரசு கட்சி மற்றும் புளொட் ஏற்றுக்கொள்ள மறுத்தநிலையில்தான், கஜேந்திரகுமார் இந்த முயற்சியிலிருந்து விலகிக்கொண்டார். ஆனால் தற்போது ஜந்து கட்சிகளும் கையெழுத…

    • 1 reply
    • 476 views
  2. கொலம்பியா: ஆயுதங்களை கைவிடுவதன் ஆபத்துகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 டிசெம்பர் 19 , மு.ப. 10:51 சமாதானத்துக்குக் கொடுக்கப்படும் விலை பெரியது. ஆனால், அவ்விலை யாருடைய சமாதானம், எதற்கான சமாதானம் என்பவற்றில் தங்கியுள்ளது. சில சமயங்களில், எதற்காகச் சமாதானம் எட்டப்பட்டதோ, அதன் தேவையும் நோக்கமும் கேள்விக்கு உள்ளாவதுண்டு. விடுதலைப் போராட்ட இயக்கங்கள், அவர்களது போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், இந்தப் புதிரை எதிர்நோக்குகின்றன. சமாதானத்துக்கான விருப்பு, விடுதலையின் அடிப்படைகளையே கேள்விக்கு உட்படுத்திய நிகழ்வுகள், வரலாறெங்கும் உண்டு. போராட்ட இயக்கங்கள், சமாதானத்தின் பெயரால், தொடர்ச்சியாகச் சிதைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் உள்ளன. இந்த அனுபவங்கள், ஆயுதங…

  3. ரணிலை புரிந்துகொள்வது அவசியம் - தெய்வீகன் நல்லாட்சி அரசு ஆட்சி பீடமேறி மகிந்தவின் கறைகளால் பீடிக்கப்பட்டிருக்கும் நாட்டை சீர்திருத்துவதில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக பல முயற்சிகளை மேற்கொண்டுவருவதை தொடர்ந்து காணக்கூடியதாக இருக்கிறது. இந்த முயற்சிகள் பெரும்பான்மை சமூகத்தையும் அவர்கள் சார்ந்த பிரதேசங்களையும் எவ்வளவு தூரம் முன்னேற்றியிருக்கிறது என்பதற்கு பல சான்றுகளை கூறலாம். ஆனால், எதிர்வரும் மே மாதத்துடன் போர் முடிந்த ஏழாவது ஆண்டை எட்டப்போகும் தமிழ்மக்களுக்கு தாம் கொடுக்கப்போவதாக அறிவித்த தீர்வு மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றில் எவ்வளவு தூரம் சிங்கள தேசம் உண்மையாக நடந்திருக்கிறது என்ற மிகப்பெரிய கேள்வி தொடர்ந்து தொங்கியவண்ணமே உள்ளது. இது விடயத…

  4. வாழவிடுங்கள் எங்களை விழுங்கப்படும் பெரு நிலங்களில் ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு கிராமங்கள். அந்த மக்களின் பூர்வீக மண் ஆட்சியுரிமையற்று மாற்றான் கையில் வளம் பெருக்க காத்திருக்கிறது. காப்பாற்ற யாரும் அற்று அழுகிறது அந்த தேசம். நீண்ட நாள் அமைதிக்குப் பின்னர் ஒரு புயல் பலமாக அடிக்கத் தொடங்கியுள்ளது. தொடங்கிய இடம் தெரிந்தாலும் முடியும் இடம் எது என்று தெரியாத இந்தப் புயல் ஒரு பகுதி மக்களின் வாழ் நிலையை சீரழித்து விட்டது. அவர்கள் நின்மதியாக உறங்கவில்லை. மன நிறைவோடு உணவருந்தவில்லை. தினம் தினம் திசைகளைப் பார்த்தபடி காற்றின் வேகத்தைக் கவனித்த படி இருக்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பு காற்று எந்தப் பக்கம்…

  5. கழண்ட கத்திகள் ? - நிலாந்தன் சில ஆண்டுகளுக்கு முன் இந்திய வெளியுறவுச் செயலர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். யாழ்ப்பாணத்தில் தெரிந்தெடுக்கப்பட்ட 10 பேரை அவர் சந்தித்தார். சந்திப்பு முடிந்து வெளியே வரும்போது சிவாஜிலிங்கம் அங்கிருந்த ஓர் அரசியல் விமர்சகரிடம் கேட்டார்… ”இந்த வாரக் கட்டுரை இதைப் பற்றித் தானா?” என்று. அப்பொழுது அரசியல் விமர்சகர் சொன்னார், ”இல்லை இந்தச் சந்திப்பில் நான் ரிப்போர்ட்டராகக் கலந்து கொள்ளவில்லை.இது மூடிய அறைக்குள் நடந்த ஒரு சந்திப்பு. தமிழ்த் தரப்பு இவ்வாறு மூடிய அறைகளுக்குள் நடக்கும் சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்களை அப்பாவித்தனமாக அல்லது உள்நோக்கத்தோடு வெளியே விடுகிறது என்று ஓர் அபிப்பிராயம் ராஜதந்திர வட்டாரங்கள் மத்தியில் உண்டு” என்று. …

  6. ஈழத் தமிழர்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தை அழிக்க மேற்குலகை நம்பிய இரு பிரதான சிங்களக் கட்சிகளும் இன்று பிளவுபட்டுக் கிடக்கும் அவலம் முஸ்லிம்களையும் வெளியேற்ற வேண்டும் என்ற கோசத்தோடும், தற்போதைய அரசியல் நகர்வுகள் 1 2 நிருபர் திருத்தியது ஆசிரியர் திருத்தியது உறுதிப்படுத்தப்படக்கூடியது ஆசிரியபீட அங்கீகாரம் மொழி திருத்திய பதிப்பு …

    • 0 replies
    • 807 views
  7. 'யாழ் மேலாதிக்கம் என்றுரைப்பது எதனை?' தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் கவிஞரும் எழுத்தாளருமாகிய நிலாந்தன் அவர்கள் கடந்த (23/08/2020) ஞாயிறு அன்று தினக்குரலில் எழுதிய கட்டுரையொன்றில் எம்மை நோக்கி 'யாழ் மேலாதிக்கம் என்றுரைப்பது எதனை?' என்கின்ற கேள்வியை எழுப்பியுள்ளார். அதனை கருத்தில் கொண்டு 'யாழ் மேலாதிக்கம்' தொடர்பாக மேலும் சில புரிதல்களை பலரது வாசிப்புக்குமாக கீழ் வரும் கட்டுரையூடாக முன்வைக்க விரும்புகின்றேன். எம்.ஆர்.ஸ்டாலின் ஞானம் யாழ் -மேலாதிக்கம் என்பது முதலில் ஒரு கருத்தியல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது எப்படி சிங்கள மக்களை குறிக்காமல் அந்த சிங்கள …

  8. சர்வஜன வாக்கெடுப்புக்கான உயர்நீதிமன்றின் வியாக்கியானம் மொஹமட் பாதுஷா மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றிபெற்ற அரசாங்கத்துக்கு, அரசமைப்பில் ஒரு திருத்தத்தை கொண்டுவந்து, வெற்றிகரமாக நிறைவேற்றுவது, ஒரு பெரிய காரியமாக இருக்கப் போவதில்லை என்றே, ஆரம்பத்தில் பரவலாகக் கருதப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலின் மற்றுமொரு பேரிடர் ஏற்பட்டுள்ளமையால், இந்தச் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை, இலாவகமாக வெற்றிபெற வைக்கலாம் என்ற அனுமானங்களும் வெளியாகியிருந்தன. உத்தேச திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைப் பரிசீலித்த நீதியரசர் குழாம் எடுத்திருக்கும் தீர்மானம்…

  9.  40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றும் வாக்குறுதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைத் தொடர்வதென்றும், அதன்படி அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தற்போதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்றும் அக்கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி யும் அந்தக் கூட்டத்தில் இருந்ததாகவே கூறப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு, மக்களை அவமானப்படுத்துவது எவ்வளவு சுலபமான விடயம் என்பதை, இந்தச் சம்பவத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். மைத்திரிபால சிறிசேன, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, அவர் நாட்டுக்கு வழங்கிய பிரதான வாக்குறு…

  10. சிங்கள தேசமாகும் தமிழர் தாயகம்’ – நாம் சிந்திக்க வேண்டிய நேரம் இது… – மட்டு.நகரான் 2 Views வடகிழக்கு தமிழர்களின் பகுதிகள் அபகரிக்கப்பட்டுவரும் நிலையில், தமிழர்களின் தாயகத்தினை பாதுகாக்க நாங்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்தோம் என்பதை அனைவரும் ஒருதரம் சிந்திக்கவேண்டிய காலத்தில் நிற்கின்றோம். நாங்கள் வடகிழக்கில் காணிகள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கின்றோம், போராடுகின்றோம். ஆனால் இருக்கும் காணிகளை பாதுகாப்பதற்கு அல்லது அதனை தக்க வைப்பத்தற்கு எவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது என்றால், எதுவும் இல்லையென்பதே உண்மையாகும். வடகிழக்கில் உள்ள தமிழர்களின் காணிகளை பெரும்பான்மையினர் அபகரிக்கும்போது அ…

  11. ஊசலாட்டத்தின் பிடிக்குள்... ரொபட் அன்­டனி தனித்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு ஐக்­கிய தேசிய கட்­சிக்கு இருக்­கின்ற சக்தி சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு இருக்­கின்­றதா? என்றால் அது கேள்­விக்­கு­றிதான். தற்­போ­தைய நிலை­மையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் மைத்­திரி தரப்பும் மஹிந்த தரப்பும் இணைந்­தால்தான் 95 ஆச­னங்கள் கிடைக்கும். அப்­ப­டி­யி­ருந்தும் 96 ஆச­னங்­களை வைத்­துக்­கொண்டு ஆட்­சி­ய­மைக்க முடி­யாது. கூட்டு எதி­ரணி இணைந்­து­கொள்ளும் பட்­சத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சுதந்­திரக் கட்­சிக்கு ஒரு­போதும் ஆத­ரவு வழங்­காது. ஆனால் 106 ஆச­னங்­க­ளைக்­கொண்­டுள்ள ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு தனித்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான சாத்­தியம் அதி­க­ம…

  12. முதலமைச்சர் வேட்பாளர் யார்? – அகிலன் April 21, 2021 மாகாண சபைகளுக்கான தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பில் இதுவரையில் அறிவிக்கப்படாத போதிலும், வடக்கு கிழக்கு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து தமிழ் அரசியல் கட்சிகள் இடையே பெரும் வாக்குவாதங்களும், முரண்பாடுகளும், சர்ச்சைகளும் உருவாகியிருக்கின்றன. தேசியக் கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்திருக்கும் நிலையில், நடைபெறக்கூடிய மாகாணசபைத் தேர்தல் ஒன்றில் எந்த ஒரு தமிழ் கட்சியும் வடக்கிலோ கிழக்கிலோ அறுதிப் பெரும்பான்மை பெற முடியாது என்ற நிலைமை காணப்படுகின்ற போதிலும், தமிழ் கட்சிகளிடையே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து பெரும் வாக்குவாதங்களும், முரண்பாடுகளும், சர்ச்சைகளும் உருவாகியிருக்கின்றன. …

  13. ஒற்றையாட்சி அடிப்படையிலான ஒரு தீர்வை ஏற்படுத்தும் சதி முயற்சியை அடியோடு நிராகரிக்கிறோம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  14. துரும்புச்சீட்டு மொத்­தத்தில் நிலை­மா­று­கால நீதிக்­கான செயற்­பா டு­களைத் துரி­த­மாக முன்­னெ­டுக்­கு­மாறும் உரிமை மீறல் விட­யங்­களில் பொறுப்பு கூறும்­ப­டியும் வலி­யு­றுத் து­கின்ற ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அலு வ­ல­கமும், மனித உரிமைப் பேர­வையும் இலங்­கையில் தமிழ் மக்கள் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்­களே, அவர்­க ளுக்கு நீதி மறுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றதே என்ற முழு­மை யான ஆதங்­கத்­தில்தான் இலங்கை அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன என்ற முடிவுக்கு வருவது ஏற்புடையதல்ல. இலங்­கையின் அனைத்­து­லக முத­லீட்­டா­ளர்­களில் பிர­தான இடத்தைப் பிடித்­துள்ள சீனா­வு­ட­னான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்­கத்தின் உறவு குறித்து சர்­வ­தேச நாடு…

  15. தமிழ்- முஸ்லிம் விரிசலுக்கு அரைவேக்காடு அரசியல்வாதிகளே காரணம் ஏ.எச்.ஏ. ஹுஸைன் husseinmedia000@gmail.com “நிச்சயமாக ஒரு தமிழ்ப் பெண்தான் எனது பாட்டியாக இருந்திருப்பார். என்னுடைய தாய், தந்தையின் நாலாவது அல்லது ஐந்தாவது தலைமுறை, தமிழ்க் குலத்துப் பெண்கள்தான்; இதுதான் யதார்த்தம். இதை ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்வதுதான். மறுப்பவர்கள் விட்டுவிட வேண்டியதுதான்” என்று சமகாலப் போக்குகளையிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் மூதறிஞரும் நாடறிந்த எழுத்தாளரும் சமாதான ஆர்வலருமான ஓட்டமாவடி எஸ்.எல்.எம். ஹனீபா. …

    • 1 reply
    • 360 views
  16. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் பௌத்த பீடங்களின் பிடியும் தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை, அண்மைய நாட்களில் இரண்டு விடயங்கள் மிகுந்த கவனத்தைப் பெற்றிருக்கின்றன. அதில், முதலாவது, ‘சந்திரசோம எதிர் மாவை சேனாதிராஜா மற்றும் கே.துரைராஜசிங்கம்’ வழக்கில் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. இரண்டாவது, அந்தத் தீர்ப்பின் அடிப்படைகளை முன்வைத்து, பௌத்த பீடங்களுடன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த வாரம் நடத்திய சந்திப்புகள். ‘தமிழரசுக் கட்சி, தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைக்கின்றது. ஆகவே, அரசமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், தமிழரசுக் கட்சிக்கு எதிராக நடவ…

  17. யார் அடுத்த முதலமைச்சர்? அக்கரையூரான் யாழ்ப்பாண வீதிகளெல்லாம் ‘மாவை’ யாருக்கே நன்கு தெரியும்! அவர் அங்கேயே பிறந்து வளர்ந்தவர். இன்றும் அம்மண்ணிலேயே வாழ்கின்றவரென்பதால் அவரையே முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவராகக் கருதமுடியுமே தவிர முன்னாள் நீதியரசரான சி.வி. விக்னேஸ்வரன் ஒப்பீட்டளவில் அப்பதவிக்கும், பொறுப்பிற்கும் எந்தவகையிலும் அதற்குத் தகுதியானவரென்றோ மாவையாருக்கு நிகரானவரென்றோ கருதிவிடமுடியாதென அன்று …. வடபுலத்தேர்தல் களத்தில் முதலமைச்சர் ‘வேட்பாளராக யாரைக் களமிறக்குவதென்ற சர்ச்சைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் மேலெழுந்து நின்ற வேளையில் மிகவும் அநாகரீகமான முறையில் தனது கருத்தை வாதத்தை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தியிருந்த தமிழரசுக…

  18. கலைந்த கனவுகள் சிதைந்த திட்டங்கள் நஜீப்– மனித வாழ்வில் எதிர்பார்த்த விடயங்கள் கைகூடாமல் போன நிகழ்வுகள் பல சந்தர்ப்பங்களில் நடந்திருக்கலாம். அதேபோன்று நெடுநாள் கனவுகளும் கலைந்து போன நேரங்களும் நிறையவே நம் வாழ்வில் அனுபவித்திருக்கலாம்.அது போன்றுதான் சமூக ரீதியிலும் பல எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன.அப்படியான ஒரு எதிர்பார்ப்பாகத்தான் ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டமும் பார்க்கப்பட்டது.அதன் வெற்றி கூட பல இடங்களில் கொண்டாடப்பட்டும் இருந்தன.நாமும் ஏதோ எமது தீவு உலகிற்கு புதியதோர் நாகரிகத்தை கற்றுக் கொ…

    • 0 replies
    • 632 views
  19. நம்பிக்கை பற்றிய கேள்விகள் நம்பிக்கை என்பது அரசியலில் மட்டுமல்ல, வாழ்வின் எல்லா விடயங்களுக்கும் மிக முக்கியமான கூறாகும். அரசியலில் அசட்டுத் துணிச்சலுடன் மேற்கொள்ளப்படும் நகர்வுகளுக்கு, அளவுகடந்த நம்பிக்கையே காரணமாக அமைகின்றது. அதேபோல், அரசியலைப் பொறுத்தமட்டில் எந்த ஆட்சியாளர் அல்லது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல்வாதி மீதான நம்பிக்கையும் ஒரே சீராக எக்காலத்திலும் தொடர்ச்சியாக இருப்பதில்லை என்பதே மக்களின் அனுபவமாகும். ஆனால் முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள், - ஆட்சியாளர் ஒருவர் மீதான நம்பிக்கையை, வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் தீர்மானிப்பதில்லை. அதற்குப் பின்னால், அவர்களுடனான இவர…

  20. அரசியல் தீர்வை வென்றெடுக்க ஒன்றுபட்ட அழுத்தம் தேவை -க. அகரன் உள்ளூர் மோதல்களால் பாதிப்புற்ற நாடொன்றின் மேம்பாட்டுக்கு, நல்லிணக்க முயற்சிகளும் அதனோடிணைந்த அபிவிருத்தியும் இன்றியமையாததாகும். இவ்வகையில், இலங்கைத் தேசத்தில் ஏற்பட்ட உள்ளக மோதல்கள், வெறுமனே பௌதீகவள அழிவுகள் என்பதற்கப்பால், உயிர் உள அழிவுகளையும் அதிகமாகவே ஏற்படுத்தியுள்ளன என்பதைக் கடந்து காலச் சம்பவங்கள் புடம்போட்டுக்காட்டுகின்றன. இந்நிலையில், பௌதீகவள அபிவிருத்திகள் என்பது, அரசியல் சார்ந்ததாகவும் நிதி சார்ந்த விடயங்களாகவே அணுகப்பட வேண்டியுள்ளது. ஆனால், உயிர் ரீதியானதும் உள ரீதியானதுமான அழிவுகளை அல்…

  21. நல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும் நுஜிதன் இராசேந்திரம்- இலங்கையில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தால் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளமையால் பல ஆண்டுகளாக அந்த காணிகளை நம்பி தமது வாழ்வாதரத்தை மேற்கொண்டு வந்த விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைத்து அவர்கள் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர். இத்தகைய செயற்பாடு நல்லிணக்க முயற்சிகளை வெகுவாகப் பாதித்துள்…

  22. 14 ஜூன் 2011 அன்புடன் நீதி அமைச்சர் ஹக்கீம் அவர்களே நீங்கள் நலமா? நிட்சயமாக நலமாகவே இருப்பீர்கள். காரணம் இப்போ அரசாங்கத்தின் பக்கத்தில் சகல சௌபாக்கியங்களுடனும் இருக்கிறீர்கள் அல்லவா? முன்னர் எதிர் கட்சி வரிசையில் நாட்டின் அடக்கு முறைக்கு எதிரான எதிர்க் கட்சிகளின் கூட்டமைப்பில் மனித உரிமைகளுக்காகவும், ஊடக சுதந்திரத்திற்காகவும் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்த போது பல அசௌகரியங்களை எதிர் நோக்கினீர்கள். காலம் எப்போதும் மனிதர்களை சௌகரியமாகவும் வைத்திருப்பதில்லை. அசௌகரியமாகவும் வைத்திருப்பதில்லை. அந்த சூத்திரத்தின்படி இப்போ உங்களுக்கு சௌகரியமான காலம். மகிந்த ராஜபக்ஸ அன் கொம்பனியின் சர்வாதிகார எதேட்சாதிகார அல்லது அடாவடித்தனமான ஆட்சியின் கீழ் நீண…

  23. 08 SEP, 2023 | 04:47 PM (ஆர்.சேதுராமன்) ஜி20 அமைப்பின் உச்சிமாநாடு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நாளை சனிக்கிழமை (9) ஆரம்பமாகவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (10) வரை நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இலங்கை உட்பட பல நாடுகளின் கடன் விவகாரங்களும் ஜி20 உச்சிமாநாட்டில் ஆராயப்படவுள்ளன. புது டெல்லியின் இந்தியா கேட் நினைவுச்சின்னத்துக்கு அருகிலுள்ள பிரகதி மைதானத்தில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 'பாரத் மண்டபம்' எனும் கண்காட்சி அரங்கில் ஜி20 உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.. 20களின் குழு எனும் (குரூப் ஒவ் 20) என்பதன் சுருக்கமே ஜி…

  24. கூட்டமைப்புக்கு கைகொடுக்குமா ஐ.தே.க? கே. சஞ்சயன் / 2018 டிசெம்பர் 14 வெள்ளிக்கிழமை, மு.ப. 04:38 Comments - 0 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதென நிரூபிக்கும் வகையில், நிறைவேற்றப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்த விவகாரமும், அதுசார்ந்து நடத்தப்பட்ட பேச்சுகளும் இணக்கப்பாடுகளும், இப்போது பரவலாக விவாதிக்கப்படும் விடயமாக மாறியிருக்கிறது. இதை அரசியலாக்குவதில், கூட்டமைப்பின் போட்டியாளர்களும், ஐ.தே.கவின் அரசியல் எதிரிகளும், முனைப்புக் காட்டி வருவதால், இந்த விவகாரம், இன்னும் ச…

  25. ஜனநாயக அரசியலில் வெற்றிக்கனியைப் பறிப்பாரா சுமந்திரன்? காரை துர்க்கா / 2019 ஜனவரி 08 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:51 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு முன்னர், ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு, விடுதலைப் புலிகள் தடையாக இருந்தனர் என, கடந்த டிசெம்பர் (2018) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமான சுமந்திரன், யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்து உள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தின் போது, ஜனநாயக ரீதியில் அரசியலை முன்னெடுத்தவர்களினதும் புலிகளினதும் தேவைப்பாடுகள் ஒரு நேர்கோட்டில் சந்தித்தன. அதனால்தான், ஜனநாயக ரீதியில் அரசியல் செய்ய, புலிகள் அனுமதித்தனர்” என, அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.