அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் விரைவில் சிங்கள மயமாகுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமானால் இலங்கை இந்திய உடன்படிக்கையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடம் எனக் கூறப்பட்டிருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தனியான ஒரு மாகாண சபை ஏற்படுத்தப்பட வேண்டும். சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் , பிரச்சினைகளையும் பெரும்பான்மையினர் தொடர்ந்து திட்டமிட்டுப் புறக்கணித்து வருவதே இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் நாட்டுப் பிரிவினைப் போராட்டத்திற்கும் முக்கிய காரணங்களாகும். இலங்கையின் இனப் பிரச்சினைக்கும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்செயல்களுக்கும் தீர்வு காணும் அவசியத்தையும் இலங்கையில் வாழும் சகல இன மக்களின் பாதுகாப்பு , நல்வாழ்வு ஆக…
-
- 10 replies
- 1.3k views
-
-
மதவாதமும் அரசாங்கமும் தமிழர்களின் தாயகப் பிரதேசத்தையும், தாயகப் பிரதேசத்திற்கான உரிமைக் குரலையும் இல்லாமற் செய்வதற்காகவும், அந்த அரசியல் கோரிக்கையை முறியடிப்பதற்காகவுமே வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களுடைய பூர்வீகப் பிரதேசங்களில் வலிந்து சிங்களக் குடியேற்றங்களை அரசுகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்திருக்கின்றன. இலங்கை அரசியலில் டிசம்பர் 8, 9, 10 ஆகிய மூன்று தினங்களும் இந்த வருடத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுத்து இணைந்து வாழ்தல், மற்றவர்களுடைய உரிமைகளை மதித்தல், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, நீதியான செயற்பாடுகளை ஊக்…
-
- 0 replies
- 462 views
-
-
கோவிட் – 19இன் பின்னரான கூட்டு உருவாக்க அரசியலில் உலகமும் ஈழத்தமிழரும் – சனநாயகத்தின் அரசியலில் முதுநிலை அறிஞர் சூ.யோ. பற்றிமாகரன் 68 Views 2020ஆம் ஆண்டு உலக அரசியலிலும் ஈழ அரசியலிலும் ‘புளொக்ஸ்’ என்று ஆங்கிலத்திலும் ‘கூட்டு’ எனத் தமிழிலும் சுட்டப்படும் அரசியல் முறைமையை மீண்டும் அரசியல் வழக்கு முறையாக்கியுள்ளது. சீனாவின் சில்க் பாதைத் திட்டத்தின் வெற்றி, அதனைத் தரைவழி, கடல்வழி உலகச் சந்தையை ஆட்டிப்படைக்கும் பொருளாதாரப் பலத்தைச் சீனாவுக்கு அளித்து வருகிறது. இதனை கோவிட் – 19 வீரியின் தொற்றுப் பரவல் கூடப் பெரிதாகப் பாதிக்கவில்லை. இதன் காரணமாக உலக வல்லாண்மை நிலையில் சீனாவின் மேலாண்மை பூதாகரமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதனை நேருக்க…
-
- 0 replies
- 329 views
-
-
மெல்லச் சாகும் சிவில் நிர்வாகம் – பி.மாணிக்கவாசகம் 44 Views ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக நடத்தப்படுகின்ற ஆட்சி முறைமை. இது நியாயமான விட்டுக்கொடுப்புகளையும் நீதியான சகிப்புத் தன்மையையும் கொண்டிருத்தல் வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. சிறுபான்மை இன மக்களின் உரிமைகள், வாழ்வியல் இருப்புகள் என்பன பன்மைத்தன்மையின் அடிப்படையில் பெரும்பான்மையினரால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும். இது ஜனநாயகத்தின் கோட்பாடு. ஆசிய பிராந்தியத்தில் நீண்ட மரபைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்ற இலங்கையின் ஜனநாயகம் நேர் முரணான நிலையிலேயே காணப்படுகின்றது. ஆங்கிலேயரிடம் இருந்து நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதலாக ஜனநாயகத்தி…
-
- 0 replies
- 352 views
-
-
சுதந்திரக் கட்சியின் இரட்டைவேடம் - கே.சஞ்சயன் ஜனாதிபதியாகப் பதவியேற்று, இப்போதுதான் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார் மைத்திரிபால சிறிசேன. அதற்குள்ளாகவே, 2020 ஆம் ஆண்டு நடக்கும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என்றொரு தீர்மானத்தை, அந்தக் கட்சியின் மத்திய குழு நிறைவேற்றியிருப்பதாக அமைச்சர் சரத் அமுனுகம கூறியிருக்கிறார். எனினும், அத்தகையதொரு தீர்மானத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எடுக்கவில்லை என்றும், அமைச்சர்கள் சிலரே அதனை வலியுறுத்தி இருக்கின்றனர் என்றும் சுதந்திரக் கட்சியின் போசகர்களில் ஒ…
-
- 0 replies
- 427 views
-
-
கூட்டமைப்பின் குழப்பம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வேண்டுமா இல்லையா என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் விவாதமாகத் தொடங்கி இப்போது விவகாரமாக விஸ்வரூபமெடுத்திருக்கின்றது. யுத்த மோதல்களின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வாறு பொறுப்புக்கூற வேண்டும் என்பதை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இந்தத் தீர்மானம் மிகத் தெளிவாக வரையறுத்து விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கின்றது. இந்தப் பிரேரணையை உள்ளது உள்ளவாறாக ஏற்று, அதன்…
-
- 0 replies
- 527 views
-
-
அரசியல் தலைவர்களின் தவறுகளுக்கும், சுயநல நோக்கங்களுக்கும்விலையாக மக்களின் உயிரகளே பலி கொடுக்கப்படுகின்றன. இதற்க்கு இலங்கைத்தீவும் விதிவிலக்கல்ல! பிரிவினைவாத முரண்பாட்டு அரசியல் புதைகுழிக்குள் இலங்கைத்தீவின் மக்களைத் தள்ளிவிட்டு, பிரித்தானியக் காலனித்துவவாதிகள்ஆட்சிப்பொறுப்பை சிங்களப்பெரும்பான்மையிடம ;ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள். ஆட்சிப்பொறுப்பை மட்டுமல்ல இலங்கைத்தீவை முழுமையாக அபகரித்துக்கொள்ளும் காலனித்துவப் பேராசையையும் சேர்த்து பிரித்தானியர்களிடமிருந்து சிங்கள ஆட்சியாளர்கள் பெற்றுக்கொண்டார்கள். பிரித்தானிய எஜமானர்களிடம் கற்றுத்தேர்ந்த 'காலனித்துவக்கலையினை" ஏனைய பிற இனமக்களிடம் பிரயோகிக்கத் தொடங்கியது சிங்களத் தலைமை! இலங்கைத்தீவு முற்று முழுதான சிங்ஙள பௌத்த நாடாக மா…
-
- 0 replies
- 580 views
-
-
விக்னேஸ்வரனை ஏன் பலப்படுத்த வேண்டும்? நிலாந்தன் கடந்த வாரம் நடந்து முடிந்த கம்பன் விழாவில் வடக்கிலுள்ள கணிசமான அரசியல்வாதிகளையும் துறைசார் படிப்பாளிகளையும் காணமுடிந்தது. மாகாணசபைக்குள் கீரியும் பாம்புமாகக் காணப்படும் அரசியல்வாதிகள் பலரும் கம்பன் விழாவில் முன்வரிசையில் காணப்பட்டார்கள் . அவர்கள் மட்டுமல்ல விக்னேஸ்வரனின் தலையைச் சுற்றி ஒளிவட்டத்தை வரையும் ஒரு பத்திரிகாதிபரும் விக்னேஸ்வரன் எங்கே பிழைவிடுவார் என்று கண்டுபிடிக்க காத்திருக்கும் மற்றொரு பத்திரிகாதிபரும் கூட கம்பன் விழாவில் காணப்பட்டார்கள். விழாவின் இறுதிநாள் உரைநிகழ்த்திய கம்பன் கழக நிறுவுனர் ஜெயராஜ் பின்வரும் தொனிப்பட உரையாற்றியிருந்தார் ‘இங்கே மாகாணசபை உறுப்பினர்களைக் கண்டபோது இ…
-
- 0 replies
- 517 views
-
-
நம்பிக்கைத் துரோக வரலாற்றின் நூற்றாண்டு நினைவு – 1921 2021 - என்.சரவணன் இவ்வாண்டு தமிழ் மக்கள் சிங்கள தலைமைகளால் முதற் தடவையாக ஏமாற்றப்பட்டு நூறு ஆண்டுகளை எட்டியிருக்கிறது. 1921 ஆம் ஆண்டு சேர் பொன் அருணாச்சலம் இலங்கை தேசிய காங்கிரஸ் செய்த துரோகத்தினால் அதிலிருந்து வெளியேறினார். இனப்பாரபட்சத்தையும், நம்பவைத்து கழுத்தறுக்கும் போக்கையும், நம்பிக்கைத் துரோகத்தையும் முதற்தடவை அடையாளப்படுத்திய நிகழ்வு இது தான். பெரும்பாலும் தமிழ் மக்களின் போராட்டத்துக்கான அவசியங்கள் உருவான காலமாக 1956 க்குப் பிந்திய காலத்தைப் பார்க்கும் போக்கே நம்மில் நீடித்து வந்திருக்கிறது. சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு இரண்டு நூற்றாண்டுக்கும் கூடிய வயதென நிரூபிக்க முடியும். அதேவேளை இலங்கைக்கான …
-
- 1 reply
- 525 views
-
-
மோடிக்கான கடிதம், 13ம் திருத்தம், இலங்கை-இந்திய ஊடகங்களின் நிலைப்பாடுகள். - யோ.திருக்குமரன் - - யோ.திருக்குமரன் - 1 தினக்குரலின் பொங்கல் வெள்ளி இதழ் (14.01.2022) தனது தலைப்பு செய்தியாக, (கொட்டை எழுத்துக்களில்) பின்வரும் செய்தியை தீட்டியிருந்தது: “மோடிக்கான கடிதம் முற்றாக மாற்றம்” கடிதம் இறுதியாக்கப்பட்டு, தினங்கள் கழிந்த நிலையில், மேற்படி ‘கொட்டை எழுத்தை’, ‘தலைப்பு செய்தியாக’ வாசிக்கும் வாசகனில், மேற்படி செய்தி பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்துவதாகவே இருக்கும். ஆனால், இதனைவிட அடுத்த அடியே, செய்தியாளரின் மரண அடி கொடுக்கும் அவாவினை பேசுவதாய் இருந்தது: “இதனை செய்தது தமிழரசு கட்சியே – சுமந்திரன்” …
-
- 0 replies
- 373 views
-
-
எழுதப்பட்ட தீர்ப்பும் வாசிக்கபடாத அரசியல் செய்தியும் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-03#page-11
-
- 0 replies
- 278 views
-
-
-
- 0 replies
- 609 views
-
-
ஈழத் தமிழர் பிரச்சனைக்கு ஆட்சி மாற்றத்தின் மூலம் தீர்வு காணலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவந்ததுடன் கூடவே இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளும் ஆட்சி மாற்றத்தின் மூலம் இனப்பிரச்சனைக்கும் மற்றும் இலங்கையின் சீனசார்பு வெளியுறவு கொள்கை பிரச்சனைக்கும் தீர்வு காணலாம் என்று நம்பின. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டரை ஆண்டுகால நடைமுறையின் பின்னான அனுபவம் அதற்கு எதிர்மாறான பதிலையே தந்துள்ளது. இலங்கையின் உள்நாட்டு அரசியல் கட்டமைப்பை புரிந்து கொள்ளாமல், சிங்கள-பௌத்த அரசியலின் பொறிமுறையைப் புரிந்து கொள்ளாமல் மேலேழுந்தவாரியாக ஆட்சி மாற்றத்தின் மூலம் எல்லாவற்றையும் கையாண்டுவிடலாம் என்று எண்ணியமை முற்றிலும் தவறாக முடிந்துள்ளது. இலங்கையில் மாறி மாறி ஆ…
-
- 0 replies
- 272 views
-
-
கூட்டு அரசினை வீட்டுக்கு அனுப்பல் கூட்டு எதிரணியின் தலையாய எண்ணம் ‘‘எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சகல பிரிப்புக்களையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன். எனது வாழ்நாள் பூராவும் நான் அதற்கு எதிராகப் போராடினேன். தற்போது மட்டுமன்றி எனது உயிர் பிரியும் வரை அதற்காகப் போராடுவேன்’’ என நெல்சன் மண்டேலா பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார். நூறு ஆண்டுகள் காலமாக ஐரோப்பாவின் குடியேற்ற நாடாகஇருந்த தென்னாபிரிக்க நாட்டில் நிலவிய அடிமைத்தன நிறபேதத்துக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய நெ…
-
- 0 replies
- 406 views
-
-
விஜயகாந்தின் அரசியல் திரைப்படங்களில் சாதிகளைச் சாதிச்சங்கங்களை எதிர்க்கும் கதாநாயகனாகத் தன்னைக் காட்டிவந்த விஜயகாந். இப்போது சாதி என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட வரமென்று முத்தாக உதிர்க்கின்றார். தனது சுயநல அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம் என நினைக்கும் இவர் மற்ற அரசியல்வாதிகளைக் கிண்டலடிப்பதுதான் நகைச்சுவை. தான் அரசியலுக்கு வந்தால் இலஞ்சத்தை ஒளிப்பேன் என்பவர் நாளை அரசியலுக்கு வந்தபின் அதற்கும் ஏதாவது சொல்லுவார். இப்படியான சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு மக்கள்தான் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
-
- 18 replies
- 4.8k views
-
-
யாழ் குடாநாட்டின் ஊடகவியலாளர்களதும், வடஇலங்கைப் பத்திரிகையாளர் சங்கம், MRTC, மற்றும் பிற சக்திகளதும், இரகசியக் கூட்டுச் சதிகள் அம்பலம்! ..... ....... வட இலங்கை பத்திரிகையாளர் சங்கமும், MRTC யினர் சிலரும், ஏனைய தமிழ் ஊடகவியலாளர்களும், தமிழ்த் தேச மக்களை ஏமாற்றிச் செயற்படும் வல்லமையைத் தாம் உடையவர்களாக யாருக்கு, ஏன்; வெளிக்காட்டுகின்றனர் என்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கிய விடயமாகும். ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், கிளிநொச்சியின் பெயரில் தமிழ் மக்களை ஏமாற்றும,; மிரட்டும் அதே வேளையில், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இரகசியமாகச் செயற்படும் ஒரு சாரார், தமது திறமையையும், வல்லமையையும் பிற சக்திகளுக்கு வெளிக்காட்டி, உறுதிப்படுத்தவேண்டிய பரிதாப நிலைக…
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசாங்கம் நியமித்திருந்த காணாமற் போனவர்கள் பற்றி விசாரிப்பதற்கான ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க சர்வதேச மட்டத்தினை மனித உரிமைகள் மற்றும் யுத்தகுற்றங்கள் பற்றிய சட்ட நிபுணர்கள் மூவரை வரவழைக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பது சற்றும் எதிர்பாராத ஒன்றாகும். இத்தீர்மானம் அமைச்சரவையில் உள்ள சிரேஷ்ட அங்கத்தினர்கள் சிலருக்குமே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்தே மனித உரிமைகள் மீறல்களும் யுத்தக் குற்றங்களும் இடம்பெற்றமை குறித்த குற்றச்சாட்டை பெருமளவுக்கு உறுதியான முறையில் அரசாங்கம் மறுத்து வந்திருக்கின்றது. அரசாங்கத்தால் இதுவரை நடத்தப்பட்ட அனைத்து விசாரணைகளிலுமே அவ்வாறான குற்றங்கள் எதும் இடம்பெறவில்லை, என்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடே தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்…
-
- 0 replies
- 680 views
-
-
இலங்கையில் ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் செல்வாக்குப் பெறுகிறதா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,MAHINDA RAJAPAKSA'S MEDIA இலங்கையில் இடம்பெற்ற 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக, சிங்கள மக்கள் மத்தியில் அசைக்க முடியாத ஆட்சியாளர்கள் என எண்ணிய ராஜபக்ஷ குடும்பத்தை, நாட்டு மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தின் ஊடாக அதிகாரத்தில் இருந்து அகற்றினர். ஆனால் தற்போது கட்சிப் பொதுக் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் வாயிலாக அவர்கள் மக்களைச் சந்தித்து வருகின்றனர். இது ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அறிகுறியா? இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, ராஜபக்ஷ க…
-
- 1 reply
- 224 views
- 1 follower
-
-
ஈழத்தமிழரை வதைக்கும் கொடிய அரசின் உச்சக் கட்ட வதை இப்பொழுது நடக்கிறது. சர்வதேச சமூகமோ மெதுவான குரலில் வருந்துகிறோம் என்கிறது. கீழே செய்தியைப் படியுங்கள். THE PEOPLE OF JAFFNA PENINSULA IN THE OPEN PRISON AND THE EFFECT OF ITS HUMAN MISERY Situation report in Jaffna The military machinery and the Sinhalese collectivism of the Buddhist State has abridged the dignity of the people of Jaffna to the subhuman condition. Imposing economic embargo and closing the A9 highway it has blocked the supply of food, medicine, fuel and other essential commodities for the normal life of the people. Even the pregnant mothers, newborn babies, bedridden sick are being depriv…
-
- 0 replies
- 1k views
-
-
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை தீர்மானம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் முக்கிய நிகழ்வொன்றாக வரலாற்றில் இடம்பெற்றது வட்டுக்கோட்டை தீர்மானம். 42 வருடங்களாக புரையோடிப் போன இனப்பிரச்சினையை தீவிரத்தை இன்றும் எடுத்தியம்புகிறது இத் தீர்மானம். தனிநாடு கோரிய போராட்டம், ஆயுதப் போராட்டம் என்று ஈழத் தமிழர்கள் கடந்து வந்த பாதைகளை தீர்மானித்த வட்டுக்கோட்டை தீர்மானம் இன்றும் தமிழ் அரசியல் தலைவர்களையும் சிங்களத் தலைவர்களையும் நோக்கி ஒரு கேள்வியாக நிற்கிறது. இதுபோல் ஒரு நாளில் குளோபல் தமிழ்ச் செய்திகள் வெளியிட்ட கட்டுரை இங்கே மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது. …
-
- 0 replies
- 889 views
-
-
நாளை கழிச்சி முதலமைச்சர் ஆகப்போகிறேன் என்று சொல்லிக்கிட்டு திரியறான் ஒருத்தன்; என்நேரமும் தண்ணிய போட்டுக்கிட்டு. அட மூதேவி நீ தண்ணியப்போடு. ஆனா முதலமைச்சர் ஆகப்போறேன்னு சொல்லாத. முதலமைச்சர் சீட்டு என்ன மியூசிக்கல் சேரா? அந்த சீட்டு என்ன சாதாரண சீட்டா? தண்ணியப்போட்டா என்ன வேணும்னாலும் பேசிட வேண்டியதா? ஒருத்தன் கேட்டான் என்னய.....அவர எதிர்த்து நிக்கப்போறீங்கன்னு சொன்னீங்களே எதிர்த்து நிற்கப்போறீங்களான்னு. ஒரு மேடையில ஏறுனாலே ஸ்டடியா நிக்க முடியல.. ( ஆடிக்காட்டுகிறார்) இந்த ஆள எதிர்த்து நின்னா எனக்குத்தாங்க கேவலம். அதனால நான் ரிஜக்ட் பண்ணிட்டு மொத்த டீமையும் காலி செய்வதுதான் என் வேலை. அய்யா மன்னிசிக்குங்க என்று கலைஞரை பார்த்து ச…
-
- 2 replies
- 1.7k views
-
-
சுன்னத் முதல் இறைச்சி வரை - ஐரோப்பிய இஸ்லாமியர்களும் யூதர்களும் இணையும் புள்ளி எது? ஐரோப்பாவின் இஸ்லாமியர்களும், யூதர்களும் இதற்கு முன் ஒன்று சேராமல் இருந்திருக்கலாம். ஆனால் சமீப காலமாக தங்களுடைய மத நம்பிக்கை சுதந்திரத்தைப் பாதிக்கும் சட்டங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். பெல்ஜியம் நாட்டில் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ள சட்டம் சமீபத்திய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகளைக் கொல்வதைப் பாதிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. கோஷெர் மற்றும் ஹலால் மாமிசத்துக்கு உரிய நம்பிக்கைகள இது பாதிக்கிறது. விலங்குகள் உரிமை இயக்கத்தினர் நீண்டகாலமாகவே இந்தச் சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். ஆனால் சுதந்திரத்துக்கான செயல் …
-
- 0 replies
- 762 views
-
-
வித்தியாவின் மரணத்தின் பின்னரான சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரல் நிர்மானுசன் பாலசுந்தரம் பல ஆயிரக்கணக்கான பாலியல் வல்லுறவின் கொடூரங்களையும், அது சுமந்து நிற்கும் பெரும் வலிகளையும் தமிழர் தேசம் கடந்து வந்திருக்கிறது. இவற்றில் பலவற்றிற்கு சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாத உரிமை மறுப்பு இடம்பெற்றது. நூற்றுக்கணக்கானவை வெறும் துயர் பகிர்வோடு நிறைவுற்றன. கிரிசாந்தி, கோணேஸ்வரி மற்றும் ரஜனி போன்றவர்கள், குறிப்பாக கிரிசாந்தி மீதான சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படைகளின் கூட்டு பாலியல் பலாத்காரம் சர்வதேச அளவில் பேசப்பட்டும் கூட, மக்கள் போராட்டத்திற்கான ஓர் உடனடியானதும் நேரடியானதுமான தோற்றுவாயாக மாற்றம் பெற்றிருக்கவில்லை. ஆயினும், புங்குடுதீவில் சிவலோகநாதன் வித்தியா என்னும் …
-
- 0 replies
- 609 views
-
-
மதம் பிடித்த பிராந்தியங்கள் புதினப்பணிமனைMay 14, 2019 by in ஆய்வு கட்டுரைகள் மத்திய கிழக்கைப் போலவே, தெற்காசிய நாடுகள் அனைத்தும் இன்று மதம் பிடித்தோரின் அரசியலில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றன. பல்தேசிய சமூகங்களை கொண்ட இந்த பிராந்தியத்தில் பெரும்பான்மையினர் என தம்மை அடையாளப்படுத்தி கொண்டுள்ளவர்கள், மத கொள்கைகளை முன்னிறுத்தி ஆட்சியை கைப்பற்றி தமது நம்பிக்கைகளையும் புனை கதைகளையும் ஆட்சியில் உட்புகுத்துவது மட்டு மல்லாது, சமூக பொருளாதார வாழ்வில் பெரும் தக்கங்களை விளைவித்து வருகின்றனர். தமது ஆட்சி அதிகாரப்போக்கினை மேலும் பல ஆண்டுகளுக்கு நிலை நிறுத்தி கொள்ளும் போக்கில், தமது கொள்கைகளை சமூகங்களின் மத்தியில் பல்வேறு அடிப்படைவாத அமைப்புகளை கொண்டிருக்கின…
-
- 7 replies
- 4.3k views
-
-
வை திஸ் போர்க்குற்றம்.. சுவாமி – ரணில் குழப்பம் சிறீலங்காவுக்கு வந்த இந்திய சுப்பிரமணிய சுவாமி கூறிய கருத்து சிங்கள இனவாத அரசுக்கு ஆதரவானது என்று பல தமிழ் ஊடகங்கள் எழுதியுள்ளன. ஆனால் சுவாமி, சோ போன்றவர்களை கருத்துக் கூறவிட்டால் நான் சொல்லமாட்டேன், நான் சொல்லமாட்டேன் என்று எல்லா உண்மைகளையும் அவிழ்த்து விட்டுவிடுவார்கள். போர்க் குற்றம் தொடர்பாக சுவாமி தெரிவித்த கருத்தை சரியாக ஊடுருவி நோக்கினால் மகிந்த ராஜபக்ஷவும், சகோதரர்களும் தலை தலையாக அடிக்க வேண்டும். போர்க் குற்றம் நடைபெற்றமைக்கு ஆதாரம் இல்லை என்று சுவாமி சொல்லியிருக்கிறார். ஆதாரம் இல்லாத காரணத்தால் மட்டுமே மகிந்த குற்றத்தில் இருந்து தப்பிவிடுகிறார்கள் என்ற கருத்து மிக ஆபத்தானது. - சுவாமி போர்…
-
- 1 reply
- 942 views
-