அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9222 topics in this forum
-
மேலும் ஒரு போராட்டத்துக்கு பணிந்த அரசாங்கம்! நிலாந்தன். அரசாங்கம் மேலும் ஒரு போராட்டத்திற்கு பணிந்திருக்கிறது அல்லது தனது தவறான முடிவுகளை மிகவும் பிந்தியேனும் மாற்றியிருக்கிறது. கடந்த வாரத்திற்கு முதல் வாரம் அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்திற்கு அரசாங்கம் பணிந்தது. மிக நீண்டகாலமாக தீர்க்கப்படாத ஆசிரியர்கள் அதிபர்களின் சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தொழிற்சங்கங்களோடு ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்கிறது. அதைப் போலவே கடந்த புதன்கிழமை அரசாங்கம் செயற்கை உரம் தொடர்பான தனது முடிவை மாற்றியிருக்கிறது. இயற்கை உரத்தைத்தான் பாவிக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் சுற்றுச்சூழல் தொடர்பான இதுபோன்ற விவகாரங்களை எடுத்த எடுப்பில் …
-
- 0 replies
- 372 views
-
-
வெளியுறவுக் கொள்கை இல்லாத ஈழத்தமிழர்கள் ? நிலாந்தன். November 28, 2021 ஐந்து தமிழ்க்கட்சிகள் இணைந்து 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற ஒரு கூட்டுக் கோரிக்கையை இந்தியாவை நோக்கி முன்வைக்க முயற்சிக்கின்றன. இம்முயற்சியில் முஸ்லிம் கொங்ரஸையும் மனோ கணேசனின் கட்சியையும் ஒருங்கிணைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள மிகப் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியை ஒருங்கிணைக்க முடியவில்லை. இது ஒரு ஓட்டம். அதேசமயம் சுமந்திரன் தலைமையிலான ஒரு சட்டவாளர் குழு அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அவர்கள் சென்றதாக சம்பந்தரும் சுமந்திரனும் கூறுகிறார்கள். ஆனால் அக்குழுவில் பங்காளிக் கட்சிகளின் …
-
- 0 replies
- 384 views
-
-
http://aruvi.com/img/uploads/2015/aruvi-news-photos/1636724261_china.jpg சீனா ஏன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சந்திக்க முனைகிறது? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்! Posted: 2021-11-12 08:38:54 EST இலங்கைக்கும் சீனாவுக்குமான உறவு நெருக்கடிமிக்கதொரு காலப்பகுதியை எதிர்நோக்கியுள்ளமை தெரிகிறது. இலங்கையை மிக நீண்டகால நட்பு நடாடாகவும் புவிசார் அரசியலையும் பூகோள அரசியலையும் எதிர்கொள்வதற்கு சீனாவுடனான உறவை பலப்படுத்திய இலங்கை தற்போது இந்தியாவையும் மேற்கையும் நோக்கி நகர்வதாக விளங்குகின்றது. இச்சூழலில் இலங்கையை எதிர்கொள்ள சீனா அணுகுமுறை மாற்றங்களை செய்ய நகர்வு ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தென்னிலங்கையிலிருந்து வெளியாகவும் தகவல்கள் உறுதிப்படுத்துகிறது. இக்கட்டுரையும் இலங்கை-சீன உ…
-
- 0 replies
- 363 views
-
-
சர்வதேச உறவுகளில் செல்வாக்கு செலுத்தும் பயங்கரவாத, குற்றவியல் செயல்பாடுகள் பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கும் தொடர்ந்து தடைகளை முன்வைக்கின்றன. 2001 ஆம் ஆண்டு 9/11 தாக்குதல்கள், சர்வதேச பாதுகாப்பு மற்றும் உலகளாவிய, பிராந்திய மற்றும் உள்ளூர் அரசியல் ஒழுங்குகளை மறுவடிவமைக்க விரும்பும் அரசு சாரா செயல்பாட்டாளர்களின் திறன் மற்றும் அணுகல் பற்றிய சொற்பொழிவுகள் நாடுகடந்த மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை முன்னணியில் வைத்தது. பயங்கரவாத உத்திகள், உந்துதல்கள் மற்றும் நிதியளிப்பு வழிமுறைகள் காலப்போக்கில் மாறி, மோதல் சூழல்களில் வேறுபடுகின்றன. பனிப்போரின் விளைவாக மொஸ்கோ மற்றும் வோஷிங்டன் இரண்டும் மற்ற வல்லரசுகளை…
-
- 0 replies
- 256 views
-
-
அமெரிக்கப் பேச்சு- யாழ் திண்ணைச் சந்திப்பு- புவிசார் அரசியல் போட்டியைப் பயன்படுத்தத் தவறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அமெரிக்க- இந்திய அரசுகளை நோக்கிக் கேள்வி எழுப்பத் தயங்கியதன் பின்னணி இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் செயற்திட்டங்களில் அமெரிக்க- இந்திய அரசுகள் எவ்வாறு ஈடுபடுகின்றன. இந்த வல்லாதிக்க நாடுகளுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசு எவ்வாறான நிபந்தனைகளை விதிக்கின்றது என்பது பற்றியெல்லாம் எமது கூர்மை செய்தி இணையத்தளத்தில் பல செய்திக் கட்டுரைகளும் விளக்கக் கட்டுரைகளும் எழுதப்பட்டிருந்தன. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு ரணில் மைத்திரி அரசாங்கத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டு ராஜபக்ச அரசாங்கம் பத…
-
- 1 reply
- 412 views
-
-
மோசமடையும் நெருக்கடிகள்: தீர்வைத் தராத கோட்டா அரசு! – அகிலன் November 24, 2021 நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்து செல்லும் நிலையில், அரசாங்கத்தின் அணுகுமுறை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டுவருவதற்குப் பதிலாக, நிலைமைகளை மேலும் மோசமடையச் செய்வதாகவே அமைந்திருக்கின்றது. நாட்டின் தன்மைக்கு ஏற்றவாறு திட்டமிடப்படாத – அரசியல் நலன்களை மட்டுமே இலக்காகக் கொண்ட பொருளாதாரக் கொள்கை எந்தவளவுக்கு மோசமான விளைவுகளைக் கொண்டு வரும் என்பதற்கு இலங்கை இப்போது உதாரணமாகியிருக்கின்றது. பின்கதவால் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டு நிதி அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்ட பஸில் ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமும் இவ்வாறான ஒன்றாகத்தான…
-
- 0 replies
- 403 views
-
-
-
- 3 replies
- 586 views
-
-
https://vettivel.medium.com/tamil-diaspora-representation-303feb9dd664 பன்னிரண்டு வருடத்தின் பின் புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் நிலையும் தமிழரின் பிரதிநிதிகள் யார் எனும் கேள்விக்கு விடை காண்பதுவும் இந்த கட்டுரையின் நோக்கம். கட்டுரையில் வெளி தரவுகளை அறிய கட்டுரையில் உள்ள இணைப்புகளை அழுத்தவும். புலம் பெயர் தமிழ் அமைப்புகளில் எவை பிரதிநிதிகள் தகுதி இழந்தவை என்பதையும் எப்படியான பிரதிநிதித்துவம் எதிர்காலத்தில் தேவையானது என்பதையும் இக்கட்டுரை ஆராய்கிறது. September 22, 2021 அன்று ஐநாவில் 76ம் அமர்வில் சிறிலங்கா தாம் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை மறுப்பதாக அறிவித்திருந்தது. இது வரை பல ஆயிரம் சாட்சியங்கள் இருந்தும் ஒரு சிறிலங்க…
-
- 13 replies
- 1.4k views
-
-
சிதையும் கோட்டாபயவின் கனவு! திணறும் இலங்கை (Video) விளம்பரம் இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்(Gotabhaya Rajapaksha) தலைமையில் ஆட்சி மாற்றம் ஒன்று இடம்பெற்று கடந்த 18ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் மன்னராட்சி காலத்தில் தலைநகராக விளங்கிய அநுராதபுரத்தில் பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு வரலாற்று முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. ருவன்வெலி மகா சாய பௌத்தர்களின் சின்னமாக விளங்குவது மற்றும் சிங்கள மன்னர்களால் அநுராதபுர யுகம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட ஆட்சியாக வரலாற்றில் குறிக்கப்படுவது ஆகிய காரணங்களே தமது பதவிப் பிரமாண …
-
- 0 replies
- 371 views
-
-
போலியான அரசியலமைப்பை தோற்கடித்தல் -விக்டர் ஐவன் ஜனாதிபதிகோத்தாபய ரா ஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவொன்றின் ஊடாக புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சியானது அரசியலமைப்பு உருவாக்கத்தில் பொதுமக்களின் பங்களிப்பு தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகள் மற்றும் மரபுகளுக்கு முரணானது ம் மீறுவதுமாகும். அரசியலமைப்பு என்பது பிரஜைகளின் மக்களின் வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் சொத்துக்கான உரிமைகளை நிர்ணயிக்கும் மிக உயர்ந்த சட்டமாகவும், அரச ஆட்சியின் கட்டமைப்பு மற்றும் செயற் பாடுகளை நிறுவும் மிகவும் புனிதமான சட்ட ஆவணமாகவும் கருதப்படலாம். மத்தியகால கால உலகத்தை நவீன உலகிற்கு மாற்றி…
-
- 2 replies
- 442 views
-
-
வடக்கின் அபிவிருத்தி என். கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan அரச பாதீடு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் உரையாற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். “முப்பத்தைந்து வருடகாலப் போரால் அழிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களை, நாட்டின் ஏனைய பகுதி மக்களுடன் ஒரே தட்டில் வைத்து ஒப்பிடுவதும் எதுவித உத்தரவாதமோ விசேட கவனிப்போ இன்றி, நாட்டின் ஏனைய பகுதியினருடன் அவர்களை போட்டியிட நிர்ப்பந்திப்பதும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் தொடர்ச்சியாகவே கருதப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார். அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை. மிக நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட மக்க…
-
- 0 replies
- 733 views
-
-
மதகுருமார், செயலணிகள் ஊடாக வடிவமைக்கப்பட்டு வரும் ஒற்றைத் தன்மையான கதையாடல்கள் Photo, Selvaraja Rajasegar சர்ச்சைக்குரிய பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் சட்டங்களை திருத்துவதற்கான பணிப்பாணையுடன் கூடிய விதத்தில் அண்மையில் ஒரு செயலணி நியமனம் செய்யப்பட்ட விடயம் பல்வேறு தரப்புக்களிலிருந்தும் கரிசனைகளை தோற்றுவித்துள்ளது. எனினும், இலங்கையின் அண்மைய போக்குகளை கவனத்தில் எடுக்கும் பொழுது இது எந்த விதத்திலும் ஓர் ஆச்சரியமாக இருக்க முடியாது. செயலணிகளை நியமனம் செய்யும் வழமை கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியை பொறுத்தவரையில் இயல்பான ஒரு காரியமாக மாறி வருகின்றது. கடந்த இரு வருட காலத்திற்குள் அவ்விதம் 10 செயலணிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 2019 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்…
-
- 0 replies
- 418 views
-
-
வரவு செலவுத் திட்டம் 2022: கட்டியிருந்த கந்தையும் காணாமல் போதல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் கடந்த இரண்டு தசாப்தகால வரவு செலவுத் திட்ட அனுபவங்கள் உணர்த்துகின்ற செய்தியொன்று உண்டு. உள்ளே எதுவுமற்ற ஒன்றை, அழகாக நிறந்தீட்டிக் காட்சிப்படுத்துவதற்கு அப்பால், எதையும் செய்யும் திறனற்றவை, அந்த வரவு செலவுத் திட்டங்கள் என்பதே அச்செய்தி. ஆனால், ஒவ்வொரு முறையும் வரவு செலவுத் திட்டத்தின் மீது, ஒரு நம்பிக்கையிருக்கும்; சில எதிர்பார்ப்புகள் இருக்கும். சாதாரண மக்களுக்கான சில திட்டங்கள் ஆறுதல் அளிக்கும். இம்முறை, சில அதிவிஷேசங்களோடு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அவை, இலங்கையின் பொருளாதார அடிப்படையின் குறைகளின் பாற்பட்டவை. இலங்கையின் பொர…
-
- 1 reply
- 325 views
-
-
-
- 4 replies
- 962 views
-
-
ஆயர்களின் அறிக்கை – நிலாந்தன்! November 21, 2021 2019 இலிருந்து கத்தோலிக்க திருச்சபையின் நான்கு தமிழ் ஆயர்களும் இணைந்து வடக்கு கிழக்கு கத்தோலிக்க ஆயர் மன்றம் என்ற பெயரில் ஓர் அணியாக செயல்பட்டு வருகிறார்கள். வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் அபிலாசைகளை அதிகம் பிரதிபலிக்கும் விதத்தில் இவ்வாறு தமிழ்ப்பகுதி ஆயர்கள் ஓரணியாக நிற்பது வரவேற்கத்தக்கதே. தெற்கில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஓரினச் சாய்வுடையவராக பார்க்கப்படும் ஒரு சூழலில் நான்கு வடகிழக்கு ஆயர்களும் ஒன்றிணைந்து முடிவெடுப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் உடையது. கர்தினால் மல்கம் ரஞ்சித் ஈஸ்டர் குண்டுவெடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தும் கருத்துக்கள் சர்ச்சைக்குரியவை. ஆட்சியைக் கைப்பற்…
-
- 0 replies
- 657 views
-
-
வெற்றி பெற்ற இரண்டு போராட்டங்களும் எதிர்க்கட்சிகளும் தமிழர்களும் – அரசியல் ஆய்வாளர் நிலாந்தன். கடந்த இரு வாரங்களில் இப்பிராந்தியத்தில் தொடர்ச்சியாக போராடி வந்த இரண்டு தரப்புகள் குறிப்பிட்டு செல்லக்கூடிய வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன. முதலாவது இலங்கைத்தீவில் சம்பள உயர்வு கேட்டு ஆசிரியர்களும் அதிபர்களும் முன்னெடுத்த ஒரு போராட்டம்.இப்போராட்டம் மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான ஒரு குழுவின் சமரச முயற்சிகளால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. அடுத்தது இந்தியாவில் புதுடில்லியில் மோடி அரசாங்கத்தின் 3 வேளாண் மசோதாக்களை எதிர்த்து பல மாதங்களாகப் போராடி வந்த விவசாயிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அரசாங்கம் மேற்படி மூன்று மசோதாக்களை பின்னெடுத்திருக்கிறது. ஒரு பெரும் தொற்றுநோய…
-
- 0 replies
- 221 views
-
-
சாத்தியமாகுமா? திரு.ரவூப் ஹக்கீம்(முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்)
-
- 0 replies
- 335 views
-
-
சுமந்திரன் தலைமையில் அமெரிக்க விஜயம் பின்னணி என்ன? இதர கட்சிகள் மத்தியில் குழப்பம் ! November 17, 2021 —- வி. சிவலிங்கம் —- புதிய அரசியல் யாப்பு சாத்தியமா? 13வது திருத்தத்திற்கு ஆப்பா? அவ்வாறெனில் புதிய தீர்வு என்ன? இலங்கை அரசியலும், சமுகமும் மிக மோசமான நெருக்கடிக்குள் சிக்கியுள்ளன. கொரொனா நோய்த் தாக்கங்களின் பின்னர் உலக நிலமைகளும் பாரிய அளவில் மாறி வருகின்றன. இந் நிலையில் பழைய அடிப்படைகள், கோட்பாடுகள், பொறிமுறைகள் என்பவற்றின் கீழ் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது என்பது பல விதங்களில் உணரப்பட்டு வருகிறது. தற்போது இலங்கை ஆட்சியாளர்கள் சிங்கள பௌத்த பேராதிக்க சிந்தனைகளின் அடிப்படையில் நாட்டை எடுத்துச் செல்ல முயற்சிக்கின்ற போதிலும் நாட்டில் ஏற்பட்டுள…
-
- 0 replies
- 575 views
-
-
-
- 0 replies
- 441 views
-
-
மீண்டும் மீண்டும் சூடு காணும் பூனைகள் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவ்வப்போது பேசுகிற விடயங்கள் சிலவேளைகளில் அர்த்தமற்றதாகவும் முன்னுக்குப் பின் முரணானதாகவும் தோன்றலாம். அரசியல், சிவில் நிர்வாக அனுபவம் இன்மையின் விளைவுகளாக இவற்றைக் கொள்ளலாம். அதனால்தான், விடயங்கள் சாதகமாக நடக்கும் போது, அதற்கான பெருமையை சுவீகரித்துக்கொள்வதில் அவர் காட்டும் அவசர ஆர்வம், விடயங்கள் பிழைக்கும் போது அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் இருக்கவில்லை. மாறாக, விடயங்கள் பிழைக்கும் போது, அதற்கான பொறுப்பை மற்றவர்கள் மீதும், மக்கள் மீதும் சாட்டுகின்ற சிறுபிள்ளைத்தனமான அரசியல் அணுகுமுறை, அவரை அறியாமலேயே வௌிவந்திருந்தமையை அவரது பேச்சுகளிலு…
-
- 0 replies
- 481 views
-
-
-
- 0 replies
- 709 views
-
-
-ரவூப் ஹக்கீம்- மைனஸ் 13- –தமிழ்- முஸ்லிம் மக்களைப் பிரித்துக் கையாண்டதன் மூலம், கடந்த மூப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிங்கள ஆட்சியாளர்கள் நன்மைகளைப் பெற்றிருந்தனர். முஸ்லிம்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கிக் கொண்டே முஸ்லிம்கள் மீதும் தாக்குதல் நடத்திய துணிவை மறந்துவிட முடியாது. வடக்குக் கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் உடன்பாடு இல்லை. எனினும் அது பற்றிப் பேசலாம் என்பதற்கான காரணங்களைப் பேராசிரியர் அமீர் அலி முன்வைக்கிறார்— -அ.நிக்ஸன்- தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றுசேர வேண்டிய காலமிது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார். 13 ஆவது திருத்தச் சட்…
-
- 0 replies
- 402 views
-
-
வாலில்லாத காளை மாடும் இலையான்களும் - நிலாந்தன் கடந்த ஒக்டோபர் மாதம் 10ஆம் ஒரு சூம் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பரந்துபட்ட ஒரு மக்கள் இயக்கத்துக்கான குறிக்கோள்கள் குறித்து அதில் ஆராயப்பட்டன. பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம உட்பட முஸ்லிம் தமிழ் வளவாளர்கள் உரையாற்றினார்கள். தமிழ்ப் பகுதிகளில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களும் அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும் அதில் பங்குபற்றினார்கள். இது நடந்து கிட்டத்தட்ட மூன்று கிழமைகளின் பின் இம்மாதம் மூன்றாம் திகதி ஒரு சந்திப்பு யாழ்ப்பாணத்தில் யு எஸ் ஹோட்டலில் இடம் பெற்றது. பேராதனை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகளும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் நாடா…
-
- 0 replies
- 511 views
-
-
இலங்கையின் புதிய அரசியலமைப்பிலிருந்து தமிழர்கள் ஏன் விலகி இருக்க வேண்டும் ? 00000000 ”தற்போதைய அரசாங்கம் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண் பதற்கான ஆற்ற லை கொண்டிருக்கவில்லை , புதிய அரசியலமைப்பு ஏற்கனவே பெற்ற சில நன்மைகளை மாற்றியமைக்க முடியும். ” 00000000000 ”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பு தொடர்பில் நம்பிக்கையுடன் இருப்பதற்கும் அரசியலமைப்பு உருவாக்கத்தை துரிதப்படுத்துவதற்கும் நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. புத்திசாலித்தனமானது தமிழர் கட்சியானது செயல்முறையை மெதுவாக்க முயற்சிக்கும். மிகவும் சிறப்பானதும் சாத்தியமானதுமானவழி புதிய அரசியலமைப்பை தடுக்க தமிழ் அல்லது சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பாரிய கூட்டணியை தமிழ் த் தேசிய கூட்டமைப்பு…
-
- 0 replies
- 388 views
-
-
ஒரே கூட்டமைப்பு... இருவேறு ஓட்டங்கள்? நிலாந்தன். சுமந்திரன் உள்ளிட்ட சட்டவாளர் குழு ஒன்று அமெரிக்காவுக்கு செல்கிறது. நிச்சயமாக அது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தூதுக்குழு அல்ல. ஏனென்றால் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எல்லாத் தரப்பு மக்கள் பிரதிநிதிகளும் அதில் உள்ளடக்கப்படவில்லை. நிச்சயமாக அது கூட்டமைப்பின் குழுவும் அல்ல. ஏனென்றால் அதில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படவில்லை. நிச்சயமாக அது தமிழரசுக்கட்சியின் குழுவும் அல்ல. ஏனெனில் இது தொடர்பாக தமிழரசுக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களோடு உரையாடப்படவில்லை என்று தெரிகிறது. அப்படி என்றால் இந்தக் குழு யார் சார்பாக அமெரிக்காவுக்கு செல்கிறது? முதலில் இக்குழு அமெரிக்காவ…
-
- 0 replies
- 247 views
-