Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழர் அரசியல் களத்தில் இளைஞர்கள் களமிறங்க வேண்டுமென்றால் சில முதியவர்கள் தாமாக முன்வந்து ஓய்வுபெற வேண்டுமென்று பிரித்தானியாவில் (United Kingdom) இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (D. Dibhakaran) சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த விடயத்தை லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் 15 ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் எந்தவொரு காத்திரமான அரசியலையும் முன்னெடுக்கவில்லை. தமிழர் அரசியல் களம் அழிவின் விளிம்பில் தமிழ் தேசிய கட்டுமானம் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் தரப்பில் சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள…

  2. இளைஞர்களைப் புறக்கணிக்கும் தமிழ்க் கட்சிகள் -புருஜோத்தமன் தங்கமயில் தாயக அரசியலில் ஆர்வம் காட்டிவரும் புலம்பெயர் தேசங்களிலுள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள், புலமையாளர்கள் சிலருக்கு இடையிலான இணையவழி உரையாடலொன்று அண்மையில் நடைபெற்றது. அதன்போது, ‘தமிழ்த் தேசிய கட்சிகள், இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவரத் தயங்குவது ஏன்? குறைந்த பட்சம், அரசியல் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளைக்கூட இளைஞர்களை இணைத்துக் கொண்டு கட்சிகள் நடத்துவதற்குப் பின்நிற்பது ஏன்?’ என்ற தொனியிலான கேள்விகள் முன்வைக்கப்பட்டு, உரையாடப்பட்டன. குறித்த உரையாடலில், தாயகத்திலிருந்து பங்குகொண்ட ஒருவராக, இதற்கான பதில்களை நான் வழங்க வேண்டியிருந்தது. உண்மையிலேயே, தமிழ்த் தேசிய கட்சிகள் இளைஞர்களை அரசியலுக்க…

  3. இளைய தலைமுறை தமிழ் அரசியல்வாதிகளின் பாராளுமன்ற அரசியல் புதிய பாராளுமன்றத்தில் நான்கு தமிழ் உறுப்பினர்கள் விவாதங்களில் கலந்துகொண்டு எல்லோரதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் தங்கள் கருத்துக்களை சிறப்பாக முன்வைக்கிறாரர்கள்.வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாாக இருந்தாலும், கட்சிவேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் பெரும் அனுதாபத்தை பெறுகிறார்கள். அவர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட உறுப்பினர் மதியாபரணம் ஏபிரஹாம் சுமந்திரன் ஏற்கெனவே 10 வருடங்கள் சபையில் அங்கம் வகித்தவர்.மற்றைய மூவரில் தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 10 வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.எஞ்சிய இருவரான உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.…

  4. இளையோர்களே எழுமின்! இனஒதுக்கலை ஒழிமின்!- சூ.யோ. பற்றிமாகரன் 5 Views ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வாண்டுக்கான மையக் கருத்து, ஈழத்தமிழர் இனஒதுக்கலின் நூற்றாண்டின் அழைப்பாகவுமாகிறது நடுகல்லிலும் கூட இனஒதுக்கல் செய்வது சிறீலங்கா என்பதற்கான சான்று ஐக்கிய நாடுகள் சபை இவ்வாண்டின் உலக இனஒதுக்கல் ஒழிப்புத் தின (21.03.21) மையப்பொருளாக “இன ஓதுக்கலை ஒழித்திட இளையவர்கள் எழுமின்” என்பதை அமைத்து இன ஒதுக்கலுக்கு எதிராக இளையவர்களை விழித்தெழுந்து போராடுமாறு அழைப்பும் விடுத்துள்ளது. கோவிட் -19இற்கு பின்னரான இன்றைய காலத்தில் சிறீலங்கா உட்பட உலகநாடுகள் பலவற்றிலும் கோவிட் பரவல் கூட இனஒதுக்கலை வேகப்படுத்தப் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலுக்கு ஏற்றவகையில…

  5. இழந்தவைகள் இழந்தவைகளாகட்டும் இருப்பவைகளையாவது பாதுகாப்போம் காரை துர்க்கா / 2020 ஜூலை 14 , பி.ப. 12:37 தற்போது மக்கள், கொரோனா வைரஸுடன் வாழப் பழகி விட்டார்கள். இது கூட, உலக நியதியே ஆகும். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தாக்கலாம் என, ஆபத்துக்குள் வாழ்ந்தாலும் வழமையான நிலையில், வாழ்வதாகவே கணிசமான மக்கள் உணர்கின்றார்கள். ஆபத்துக்குள் வாழ்தல் என்பது, வடக்கு, கிழக்கு வாழ் மக்களைப் பொறுத்த வரையில், புதிய விடயம் அல்ல. யுத்த காலத்தில் ஆள் அடையாள அட்டையை, சட்டைப் பையில் கொண்டு திரிந்தார்கள்; இன்று முகக்கவசத்தை முகத்தில் அணிந்து…

  6. இழந்து விட்ட அரசியல் ஓர்மம் தேர்தலொன்று விரைவில் வரப்போகிறது போல் தெரிகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் ஊர்களுக்குள் அடிக்கடி வந்து போகின்றமை அதற்கான கட்டியமாகும். குறிப்பாக, முஸ்லிம் கட்சித் தலைவர்கள், ‘மடித்து’க் கட்டிக் கொண்டு, களத்தில் இறங்கி விட்டார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்துக்கும், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, திருகோணமலை மாவட்டத்துக்கும் கடந்த வாரம் சென்று, தத்தமது கட்சிகளைப் புனரமைக்கும் நடவடிக்கைகளிலும், அங்குள்ள முக்கியஸ்தர்களைத் தங்களின் கட்சிகளுக்குள் ஈர்த்துக் கொள்ளும் செயற்பாடுகளிலும் இறங்கியிருந்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், கட…

  7. இழப்பிலிருந்து மீள்தல் என்.கே.அஷோக்பரன் கொவிட்-19 பெருந்தொற்றினாலான இறப்புக்கள் தினசரி 200 என்பதைத்தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. தற்போதைய சூழலில் தினசரி 4000-ற்கும் அதிகமானவர்கள் தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டு வருகிறார்கள். இது நடத்தப்படும் பரிசோதனைகளின் அளவிலான தரவு மட்டுமே. தொற்று இலங்கையில் பரவத்தொடங்கியது முதல் இதுவரை ஏறத்தாழ நான்கு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் நோய்த்தொற்றாளர்களாக அடையாங்காணப்பட்டுள்ளதுடன், இந்த பெருந்தொற்று இலங்கையில் மட்டும் இதுவரை எட்டாயிரத்திற்கும் அதிகமான மனித உயிர்களை பலியெடுத்துள்ளது. “நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு” என்ற வள்ளுவன் வாக்கினை அன்றாட வாழ்வில் தினம் தினம் கண்ணூடாகக் காணும் நிலையை…

  8. இழவு அரசியல்: மரணங்கள் புனிதமாக்கா... இலங்கை அரசியலில் இழவு அரசியலுக்கு ஒரு வரலாறு உண்டு. அது சில தருணங்களில் அதிகாரத்துக்கான அவாவாக வெளிப்பட்டுத் தொலைக்கும். அந்த அபத்தத்தை கடந்த வாரம் கண்டோம். ஒரு மரணத்தை முதலீட்டாக்கி, அரசியல் இலாபம் பார்க்கும் செயல், 'இலங்கை அரசியல்' அதன் அடியாளத்தில் தேக்கி வைத்திருப்பது, பேராசையையே என்பதைத் தெட்டத் தெளிவாகக் காட்டியது. "மலை சரிந்துவிட்டது" என்போர், கடந்த 20 ஆண்டுகளில் மலையக மக்களின் வாழ்வில், எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டது என்பதை முதலில் சொல்லட்டும். அதன் பின்னர், சரிந்தது மலையா, வேறெதுவுமா என்பதைப் பற்றிப் பார்க்கலாம். மரணம் ஒருவரைப் புனிதனாக்கமாட்டா. உணர்வுபூர்வமான கதைகளும் அனுபவப் பகிர்வுகளும் பத்திரிகை…

  9. இழுத்தடிக்கப்படும் நீதி என்.கண்ணன் குரு­நா­க­லையில் அமைக்­கப்­பட்ட இரா­ணு­வத்­தி­னரின் நினைவுத் தூபியை திறந்து வைத்து உரை­யாற்­றிய போது, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மீண்டும் தனது நிலைப்­பாட்டை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். அதா­வது, போருடன் தொடர்­பு­டைய சம்­ப­வங்கள் தொடர்­பாக உள்­நாட்டில் நடத்­தப்­படும் விசா­ரணைப் பொறி­மு­றை­களில், வெளி­நாட்டு நீதி­ப­திகள் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்கள் என்­பதே அவ­ரது அந்த நிலைப்­பாடு. இதனை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளிப்­ப­டுத்­து­வது இதுதான் முதல் தட­வை­யல்ல. ஏற்­க­னவே அவர் பல­முறை இதனை கூறி­யி­ருக்­கிறார். வெளி­நாட்டு நீதி­ப­திகள் மாத்­தி­ர­மன்றி, …

  10. இழுத்தடிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல் மாகாண சபை­க­ளுக்­கான தேர்தலை நடத்­து­வது தொடர்பில் பிர­தான கட்­சி­க­ளுக்கும் சிறு­பான்மை கட்­சி­க­ளுக்­கு­மிடையே ஏற்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் முரண்­பா­டான கருத்­துக்கள் மாகாண சபை­க­ளுக்­கான தேர்தலை கால­வ­ரை­ய­றை­யின்றி நீட்டிச் செல்லும் போக்­கையே காட்டி நிற்­கி­றது. பிர­தான கட்­சி­கள் ­தேர்தல் எவ்­வாறு நடத்­தப்­ப­ட­வேண்டும் என்­பதில் அக்­கறை காட்­டு­வ­தை­விட தேர்தலை எப்­படி ஒத்­தி­வைக்­கலாம் என்­ப­தி­லேயே கரி­சனை காட்­டு­கின்­றன. இதேநேரம் தேர்தலை உரிய காலத்தில் நடத்­து­வ­தற்­கு­ரிய ஏற்­பா­டு­களை அர­சாங்கம் மேற்­கொள்­ளாமல் ஏதா­வது கார­ணங்­களை காட்டி ஒத்­தி­வைக்­கப்­பார்க்­கி­றது அர­சாங்­க­மென கூட்­டு­…

  11. இழுத்தடித்தல் மொஹமட் பாதுஷா / 2019 பெப்ரவரி 17 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 02:13 Comments - 0 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, உரியகாலம் வருவதற்குக் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னரே, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார். ஜோசியக்காரரின் கதையைக் கேட்டே அவர், அவ்வாறு செய்து, தோற்றுப் போனார் என்றாலும், அவரது அரசாங்கம் தேர்தல்களுக்காகப் பின்வாங்கியதாக விமர்சிக்கப்படுவது மிகக் குறைவாகும். ஆனால், தற்போதைய ஐ.தே.மு அரசாங்கம், குறிப்பாக மாகாண சபைகளுக்கான தேர்தலை இழுத்தடித்து வருகின்றது என்ற விமர்சனங்கள், பரவலாக எழுந்திருக்கின்றன. 13ஆவது அரசமைப்புச் சீர்திருத்தத்தின் பிரகாரம், 1988ஆம் ஆண்டு அறிமுகமான மாகாண சபைகள் முறைமையானது, மத்திய அரசாங்கத்திடம் குவிந்து…

  12. இழுத்தடிப்பு ஜெனிவாவில் 34ஆவது கூட்டத் தொடர் பற்­றிய நம்­பிக்­கைகள், அவ­நம்­பிக்­கைகள், அதி­ருப்­திகள் கடந்த ஜன­வரி மாதம் முதலே ஏற்­படத் தொடங்­கிய நிலையில் இலங்கை பற்­றிய வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு முடிவு காணும் நாளாக கடந்த 23 ஆம் திகதி மனித உரிமைப் பேர­வையில் இலங்கை விவ­காரம் தொடர்­பான தீர்­மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை சர்வ உல­கமும் அறிந்த ஒரு செய்­தி­யாகும். 2012 ஆம் ஆண்டு அமெ­ரிக்­கா­வினால் கொண்டுவரப்பட்டு பிரித்தானியாவின் துணை­நி­லை­யுடன் இலங்­கைக்­கெ­தி­ரான தீர்­மா­ன­மொன்று நிறை­வேற்­றப்­பட்­ட­மையும் 2015 ஆம் ஆண்டு தீர்­மா­னத்தில் குறித்­துக்­காட்­டப்­பட்ட 30/01, தீர்­மா­னங்கள் முழு­வ­தையும் நிறை­வேற்றி வைப்­போ­மென இலங்கை, இணை­ அ­னு­ச…

  13. இழுத்தடிப்பும் காத்திருப்பும் http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-28#page-22

  14. இழுபறிகளை முடிவுக்கு கொண்டுவருமா தீர்ப்பு? மொஹமட் பாதுஷா / 2018 டிசெம்பர் 13 வியாழக்கிழமை, மு.ப. 05:17 Comments - 0 என்ன வைத்தியம் பார்த்தும், நாட்டைப் பீடித்துள்ள அதிகாரப் பைத்தியம் தீர்ந்தபாடில்லை. பிரதான கட்சிகள் ‘பிளான் ஏ,’ ‘பீ’, ‘சி’ என, ஒவ்வொரு திட்டமாக அடுத்தடுத்து நகர்த்திக் கொண்டிருப்பதால் சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதையே காண முடிகின்றது. ‘இதோ, இன்று முடிந்து விடும்’, ‘இதோ, நாளை வருகின்ற நீதிமன்றத் தீர்ப்புடன், எல்லாம் சரியாகி விடும்’, ‘இந்த வெள்ளிக்கிழமை ஒரு முடிவு கிடைத்துவிடும்’ என்று நினைத்துக் கொண்டே, ஒன்றரை மாதங்கள் சென்றுவிட்டன. இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக நவம்பர் எட்டாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட …

  15. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழர்களின் அரசியல் செல்நெறியைத் தீர்மானிக்கும் பொறுப்பு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மீது 2009 ஆம் ஆண்டு மே மாதம் சுமத்தப்பட்டது. போரின் தோல்வி, மக்களின் அவலம், ராஜபக்சக்களின் அச்சுறுத்தல் என்று எல்லாப்பக்கமும் நெருக்குவாரமாக இருந்தமையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் ஒழுங்குக்குள் இருந்தது. ஆனால் அவையெல்லாம் சிறிது காலம் தான். எப்போது அரச தலைவர் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை அந்தக் கட்சி எடுத்ததோ அன்றிலிருந்து சரிவு ஆரம்பித்தது. உடைவுகள் தொடங்கின. அதன் பின்னரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளக முரண்பாடுகள் அடிக்கடி நிகழத் தொடங்கின. கஜேந்திரகுமார் வெளியேற்றம் அந்த முரண்பாட…

  16. இவர்களை எப்படி மன்னிக்க முடியும்? - புகழேந்தி தங்கராஜ். ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை அறிந்ததும், உடுக்கை இழந்தவன் கைபோல நீண்டிருக்கவேண்டும் பாரதத்தின் கை. ஆனால், கொல்லப்பட்ட எம் உறவுகளைக் காப்பாற்ற நீளாமல், கொலைகாரர்களுக்கு ஆயுதம் கொடுக்க இந்த தேசத்தின் கை நீண்டது. 'வெல்க தமிழ்' என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொள்கிறவர்கள் மட்டுமே தமிழனின் முதுகில் குத்துவதில்லையாம்.....! அப்படியெல்லாம் எழுதி ஒட்டிக்கொள்ளாதவர்களும் இதைத்தான் செய்கிறார்களாம்...! 'அவர்களையெல்லாம் கண்டித்திருக்கிறீர்களா' - என்கிற புதிய கேள்வியோடு புறப்பட்டிருக்கிறார்கள் என் பழைய நண்பர்கள். 'தமிழக அரசியலில்' இந்த ஊடக அதர்மத்தைப் பற்றி, பாரபட்சம் இல்லாமல், அவ்வப்போது எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.…

  17. இவர்களை மன்னிக்காதீர் == பா.செயப்பிரகாசம் “ஏலி, ஏலி, லாமா சபக்தானி! இறைவனே, இறைவனே என்னை ஏன் கைவிட்டீர்?'' உயரத்தில் சிலுவையில் அறையப் பட்ட இயேசு கத்தினார். ராஜவிசுவாசம், உருவ வழிபாடுகளில் அடைக்கலமாகி யிருந்தவர்கள் அவரை “இவன் ஏன் கத்துகிறான்'' என்று ஏறிட்டுப் பார்த்தனர். “இந்த அறிவிலி யாரிடம் முறையிடு கிறானோ, அந்த இறைவன் இதியாஸ் இவனைக் காப்பாற்றட்டும்'' என்றனர். “இறைவனே இறைவனே, என்னை ஏன் கைவிட்டீர்''. மறுபடியும் உரத்த குரலில் கத்தி ஏசு உயிரை விட்டார் (மத்தேயு 27 : வசனம் 46,47). நண்பகல் 12 மணிக்கு சிலுவை யிலறையப்பட்ட இயேசு, பிற்பகல் 3 மணிக்கு சிலுவையில் ஏற்றப்பட்ட போது, உதிர்த்த வாசக…

    • 0 replies
    • 1.4k views
  18. இஸ்‌ரேலின் அண்மைக்காலக் கொடூரத்தனங்கள் இஸ்‌ரேல் எனும் நாடு மீது, உலகளவில் பரவலான விமர்சனங்கள் இருப்பதை நாமனைவரும் அறிவோம். உலகில், யூதர்களுக்கென இருக்கின்ற ஒரு நாடாக இருந்தாலும் கூட, பலஸ்தீனர்களுக்கும் இஸ்‌ரேலியர்களுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகள், பலம்பொருந்திய நாடான இஸ்‌ரேல் மீதான கடுமையான விமர்சனங்களாகவே வந்து சேர்கின்றன. இஸ்‌ரேல் மீதான இந்த விமர்சனங்களை, இஸ்‌ரேல் மீதான வெறுப்பு என வாதிடுவோரும் உள்ளனர். அதன் உண்மை, பொய் என்பதைத் தாண்டி, இஸ்‌ரேலுக்கான அனுதாபங்களும் கூட காணப்பட்டே வந்துள்ளன. ஆனால், அந்நாட்டில் கடந்த வாரமும் இந்த வாரமும் இடம்பெற்ற இருவேறான சம்பவங்கள், அந்நா…

    • 1 reply
    • 612 views
  19. இஸ்‌ரேலின் அழிச்சாட்டியம் இஸ்‌ரேலின் அழிச்சாட்டியம்: உலக ஒழுங்கு மாற்றங்களை கவனமாக பயன்படுத்த வேண்டிய முஸ்லிம் உலகு மொஹமட் பாதுஷா இன்னும் ஒரு உலக மகா யுத்தம் வந்து விடுமோ அல்லது அதற்குச் சமமான மனிதப் பேரவலம் இடம்பெற்று விடுமோ என்ற அச்சமும் கவலையும் உலக மக்களை ஆட்கொண்டுள்ளது. அகன்ற பலஸ்தீனத்தில் ஒவ்வொரு நொடியும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற உயிரிழப்புக்களும் இன அழிப்பும் அந்தக் கவலையை ஏற்படுத்துவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. பலஸ்தீன மண்ணை இஸ்‌ரேல் 75 வருடமாக ஆக்கிரமித்துள்ளது. அதுமட்டுமன்றி அதன் எல்லைகளை அகலமாக்கி இன்னுமின்னும் பலஸ்தீன நிலத்தைச் சூறையாடி வருகின்றது என்பது உலகுக்கே தெரியும். இருப்பினும், இஸ்‌ரேலின் மீது இம்முறை ஹமாஸ் நடத்திய ஏவுகணைத் த…

    • 23 replies
    • 1.6k views
  20. இஸ்ரேலின் மொசாட் செய்த தொடர் படுகொலைகள்!! பீதியில் ஐரோப்பிய, அரபு தேசங்கள் Operation "Wrath of God" - ஐரோப்பாவிலும், மத்தியகிழக் நாடுகளிலும் இஸ்ரேலின் மொசாட் மேற்கொண்ட இரகசிய படுகொலை வேட்டையின் பெயர். மொசாட் மேற்கொண்ட அந்தப் படுகொலைகள் பலஸ்தீனர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன. இஸ்ரேல் மீதோ இஸ்ரேலியர்கள் மீதோ கைவைக்கத் தயங்குகின்ற ஒரு பயப் பீதியை மேற்குலக நாடுகளுக்கும் உருவாக்கி இருந்தது. இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் பற்றிய ஒரு மிகப் பெரிய பிரமிப்பையும், அச்சத்தையும் அரபு தேசங்களின் புலனாய்வுப் பிரிவினருக்கு ஏற்படுத்தியிருந்தது. இன்றைக்கும் இஸ்ரேல் என்கின்ற சிறிய தேசம், இஸ்ரேலை எந்த நேரமும் விழுங்கிவிடக் காத்…

    • 0 replies
    • 729 views
  21. இஸ்ரேலிய – பாலஸ்தீன சமாதான நடவடிக்கையின் இதயத்தில் ஒரு குத்து அமெரிக்க ஜனாதிபதியொருவர் இ்ஸ்ரேலிய – பாலஸ்தீன நெருக்கடியுடன் தொடர்புடைய விவகாரமொன்றில் இஸ்ரேலுக்கு ஆதரவான தீர்மானத்தை எடுப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல. பாலஸ்தீனப் பிராந்தியங்கள் மற்றும் கிழக்கு ஜெரூசலேத்தின் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை நெடுகவும் அமெரிக்கா பெரும்பாலும் ஆதரித்தே வந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இஸ்ரேலை பாதுகாத்துவந்திருக்கும் அமெரிக்கா நெருக்கடியான நேரங்களில் எல்லாம் அதன் உதவிக்கு வந்திருக்கிறது; நவீன ஆயுதங்களை வழங்கியிருக்கிறது. இஸ்ரேல் அணுவாயுதங்களைக் குவித்துக்கொண்டிருந்தபோது கூட அமெரிக்கா பாராமுகமாக இருந்திருக்கிறது. இவற்றுக்கெல…

  22. அறுகம்குடாவின் பொன்நிற மணல்கள் பொதுவாக ஆபத்தற்றவை விடுமுறையில் இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகள் நீச்சலிற்காகவும் கடல் சாகச விளையாட்டுகளிற்காகவும் கடற்கரையோரத்தில் ஓய்வாக நேரத்தை செலவிடுவதற்காகவும் அங்கு செல்வார்கள். ஆனால் கடந்தவாரம் அறுகம்குடாவின் மெதுவான தாளத்திற்கு ஒரு அதிர்ச்சியேற்பட்டது. இலங்கைக்கான அமெரிக்க தூதரகமும், அதன் பின்னர் இலங்கை பொலிஸாரும், இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவையும் அந்த பகுதியில் பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக எசசரிக்கைகளை வெளியிட்டனர். இந்த தாக்குதலின் இலக்காக இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளே காணப்பட்டனர் என அதிகாரிகள் கருதினர். இதன் காரணமாக அவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு வேண்டுகோளை வ…

  23. இஸ்ரேலிய அடிப்படைவாதிகள் பாலஸ்தீனர்களுடன் நிரந்தரமான அமைதி ஒப்பந்தம் ஒன்றை எழுதி அதில் முறைப்படி கையொப்பமிடுவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளனர். மேற்கண்ட கருத்தை இப்போதைய இஸ்ரேலிய பிரதமரான பென்ஜமின் நெட்டன்யாகுவின் அரசுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கும் முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் அவிக்டோர் லிபர்மான் தெரிவித்துள்ளார். நிரந்தரமான சமாதான ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதைவிட தற்காலிகமான சமாதான ஒப்பந்தம் ஒன்றை எழுதி அதில் கையெழுத்திட்டால் இஸ்ரேலிய யூத அடிப்படைவாதிகளை சமாதானம் செய்ய முடியும் என்று கருத்து வெளியிட்டுள்ளார். ஊல்ரா நாஷனல் கட்சியைச் சேர்ந்த இவர் கடந்த தை 22ம் திகதி தமது கட்சிக்கு அதிக ஆதரவு கிடைக்காததைத் தொடர்ந்து சிறிய மாற்றமடைந்துள்ளமை தெரிகிறது. வர…

    • 0 replies
    • 643 views
  24. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரெடாசியன் பதவி, பிபிசி உலக செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தங்கள் நாடுகளை நிறுவியதற்காக நினைவில் கொள்ளப்படும் உலகத் தலைவர்கள் பட்டியலில் டேவிட் பென்-குரியனும் ஒருவர். மே 14, 1948 அன்று, அல்லது யூத நாள்காட்டியின் படி 5708 ஆம் ஆண்டின் இயார் மாதத்தின் 5 ஆம் தேதியில், டெல் அவிவ் அருங்காட்சியகத்தில் இஸ்ரேலின் சுதந்திரப் பிரகடனத்தை வாசித்தவர் அவர்தான். அன்று பாலத்தீனத்தின் பிரிட்டிஷ் ஆட்சி சட்டப்பூர்வமாக காலாவதியானது; பிரிட்டிஷ் படைகள் இன்னும் வெளியேறவில்லை. பிரகடனத்தை தாமதப்படுத்துமாறு அமெரிக்கா அவருக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால் பென்-…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.