அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
அமெரிக்கா எங்கெல்லாம் கால்பதிக்கிறதோ அங்கெல்லாம் தாக்குதல் நடத்தத் தன்னாலும் முடியும் என்ற செய்தியை இந்தக் குண்டுத்தாக்குதலை ஏவிய தரப்பு சொல்லியிருப்பது புலனாகிறது. இந்தியா-பாகிஸ்தான் முரண்பாட்டையும் சீன-பாகிஸ்தான் உறவையும் இந்தத் தாக்குதலின் பின்னணியாக ஏன் நோக்கக்கூடாது என்ற கேள்வியை ஈழத் தமிழ் அரசியல் அவதானிகள் எழுப்புகின்றனர். மத ரீதியான போரில் பயங்கரவாதத் தாக்குதல்களைப் புரிவதற்கு இலகுவாக மனிதக் குண்டுகளை இஸ்லாமியவாதம் தயாரித்துக்கொடுக்கிறது. ஆனால், அந்தக் குண்டுகள் எங்கே, எப்போது, எதற்காக ஏவப்படுகின்றன என்பதை இராணுவ மற்றும் புவியியல் அரசியல் ரீதியாகப் பகுப்பாய்வு செய்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறன்று இஸ்லாமியவாதம்…
-
- 0 replies
- 659 views
-
-
உரக்கப் பேசும் ‘உலகநாயகன்’; அரசியல் கனவு நனவாகுமா? ‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் திடீர் அரசியல் பிரவேசம், தமிழகத்தில் பல அரசியல் தலைவர்களைத் திக்குமுக்காட வைத்திருக்கிறது. “அ.தி.மு.க ஆட்சியில் ஊழல்” என்று அவர் வீசிய ‘பிரம்மாஸ்திரம்’ அ.தி.மு.க அமைச்சர்களைக் ‘கலகலக்க’ வைத்து விட்டது. அமைச்சர்கள் ஒன்றன் பின் ஒன்றாகக் கமல்ஹாசன் மீது, வார்த்தைப் போர் நடத்தினார்கள். சட்ட அமைச்சர், “கமல்ஹாசன் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று ஆவேசப் பேட்டியளித்தார். இன்னோர் அமைச்சர் ஓ.எஸ். மணியன், “கமல் தன் மனைவிக்கு நல்ல கணவனாகவும் பிள்ளைக்கு நல்ல தந்தையாகவும் முதலில் இரு…
-
- 0 replies
- 513 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். அவர்கள் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்தியதை எப்படி குற்றமாக எடுத்துக்கொள்ள முடியும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கேள்வி எழுப்பியுள்ளது. வன்செயல் எதிலும் ஈடுபடாது அமைதியாக இடம்பெற்ற நினைவுகூரல் நிச்சயமாக பயங்கரவாதமாகாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர் நால்வரையும் உடனடியாக விடுதலைசெய்யுமாறு இலங்கை அரசை அது கோரியுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் விவகாரம் சர்வதேச ரீதியில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுவரும் நிலையில், சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. மேலும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருப்பின் உடனடியாக நீதிம…
-
- 0 replies
- 720 views
-
-
உரிமைக்கும் நீதிக்குமாய் எழுச்சி கொள்ளும் தமிழர் தாயகம் - கவிஞர் தீபசெல்வன் இந்தப் பந்தியை எழுதத் துவங்கும் பொழுது, ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்ற நாள். கிளிநொச்சி நகரத்தில் பெரும் குரலுடன் நிரை நிரையாக சனங்கள் செல்லுகின்றனர். கறுப்புக் கொடி ஏந்தியபடி, எமது உறவுகள் எங்கே, கோத்தபாய அரசே பதில் சொல்லு என்ற பெருங்கேள்வி துளைத்துக் கொண்டிருக்கிறது. இலங்கை அரச காவல்துறையினரால் மக்களின் எழுச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. மறுபுறத்தில் கிழக்கில் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களுமாக களத்தில நின்று குரல்களை எழுப்புகின்றனர். கிளிநொச்சியில் போராடும் மக்களின் குரல் உக்கிரமாய் இருக்கையில், கிழக்கில் மக்கள் சிங்கள அரசின் கல் எறிகளையும் முட்பொறிகளையும் மிதித்தெறிந…
-
- 0 replies
- 345 views
-
-
உரிமைப் போராட்டப் பாதையில் தமிழ் கட்சிகளின் ஐக்கியம்.! - நா.யோகேந்திரநாதன் தியாகி திலீபனின் நினைவஞ்சலி நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டமை உட்படத் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடந்த 28ஆம் நாளன்று தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து நடாத்திய உண்ணாவிரதப் போராட்டம், ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளின் அழைப்பை ஏற்று 28ஆம் திகதி வடக்குக் கிழக்கெங்கும் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான ஹர்த்தால் என்பன மக்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அந்நடவடிக்கைகளையடுத்து தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று சகல தமிழ்க் கட்சிகளும் ஒன்றுகூடி அடுத்த கட்ட நகர்வு பற்றி ஆலோசனை நடத்தியதுடன் தொடர்ந்த…
-
- 0 replies
- 382 views
-
-
உரிமையா, அபிவிருத்தியா? தமிழர் நலன்காப்பது எந்தவழி அரசியல்? அடுத்துவரும் ஓகஸ்ட் மாதத்தில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள், நாட்டுமக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். மூவினங்கள் வாழும் இந்த நாட்டில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளும் சிந்தனைகளும் அபிலாஷைகளும், ஓரினத்தைப்போல் மற்றைய இனத்துக்குக் கிடையாது. ஒவ்வொரு இனத்தினுடைய, தேர்தல் குறித்த அணுகுமுறைகள், வேறுவேறானவை. சிங்கள மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதன் நோக்கத்துக்கும், முஸ்லிம் மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் நோக்கத்துக்கும் தமிழ் மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் அபிலாஷைகளுக்கும்…
-
- 0 replies
- 351 views
-
-
ஆக்கம்: இதயச்சந்திரன் தமிழகத்தில் மாணவர் போராட்டங்கள் விரிவடைந்து செல்லும் நிலையில், பொதுத் துறையில் உள்ள பல அமைப்புக்களும் ஆங்காங்கே போராட்டத்தில் குதித்துள்ளன. இப்போராட்டங்கள், ஈழ மக்களின் தேசிய இன விடுதலை போராட்டத்தின் சரியான கருத்தியலை ,அம்மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளது என்பதனை மறுக்க முடியாது. வாக்கு வங்கி அரசியலிற்கு அப்பால் நடாத்தப்படும் இந்த எழுச்சி, சிறிதளவு தணிந்து , மறுபடியும் எழக்கூடிய சாத்தியமும் உண்டு. ஆனாலும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், இங்கு பரந்துபட்ட அளவில் முன் வைக்கப்படும் அடிப்படைக் கோரிக்கைகளை புறம்தள்ளி, அதற்குக் குறைவானதொரு தீர்வினை எவரும் கூற முடியாததொரு நிலையை இந்தத் போராட்டங்கள் ஏற்படுத்தியுள்ளன. அதாவது, மாணவர் ப…
-
- 0 replies
- 650 views
-
-
உருமாற்றம்! இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள மேற்படி பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் பலர் தமது அதிருப்திகளையும் எதிர்ப்புகளையும் தெரிவித்திருப்பது இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும். அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் சர்வதேச அமைப்புகள் பல தமது அதிருப்திகளை முன்வைத்துள்ளன. நடைமுறையிலுள்ள பயங்கரவாத சட்டத்துக்கு மாற்றீடாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமொன்றை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் வரவிருக்கும் புதிய சட்டமானது சாதாரண மனிதனொருவனின் அடிப்படைச் சுதந்திரத்தைக் கூட பறித்தெடுத்துவிடக் கூடிய மிக மோச…
-
- 0 replies
- 655 views
-
-
உருவாகிவரும் புதிய உலக ஒழுங்கும் மூலோபாயப் போக்குகளும்: இந்தோ பசுபிக் பிராந்திய பூகோள அரசியலில் தமிழ் மக்களின் நலன்கள் 119 Views இன்று தமிழ் மக்கள் உருவாகி வரும் புதியதோர் பல்துருவ உலக ஒழுங்கில் (multipolar world order) அரசற்ற தேச மக்களாக (nation without state) தமது வகிபாகத்தை கொண்டுள்ளார்கள். காலனித்துவ காலம் தொடக்கம் இன்று வரை தமது இழந்துவிட்ட இறைமையை வேண்டி நிற்கும் மக்களாகவும், இனஅழிப்புக்கான நீதியைக் கோரி நிற்கும் மக்களாகவும் தமது அரசியற் செயற்பாடுகளை தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் முன்னெடுத்து வருகின்றார்கள். ஆயுதப்போராட்டம் முடிவுற்ற 2009ஆம் ஆண்டு தொடக்கம் …
-
- 0 replies
- 485 views
-
-
இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கலும், கற்பனாவாத அரசியலும் – உண்மை நிலை என்ன? “புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் போது ஒவ்வொரு கட்சிகளுக்குமான அரசியல் அபிலாஷைகளைக் கைவிட்டு, நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய வகையில் நீண்டகால அடிப்படையில் மக்களை முன்னிறுத்தி அதனைத் தயாரிப்பது அவசியமாகும்.” இப்படி வலியுறுத்தியிருக்கின்றார் “பவ்ரல்” அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண யஹட்டியாராச்சி. இலங்கை அரசியலரங்கில் எது நடைபெறப்போவதில்லையோ அது நடைபெற வேண்டும் என அவர் வலியுறுத்தியிருக்கின்றார். ஆனால், அவர் சொல்லியிருப்பதுதான் நாட்டுக்கு அவசியமானது. இல்லையெனில் மாறிமாறி ஆட்சிக்க…
-
- 0 replies
- 525 views
-
-
உறங்குநிலை இனவாதம் மொஹமட் பாதுஷா உறங்குநிலையில் இருக்கின்ற இனவாதம், வெளிப்புறத் தாக்கங்களினால் அவ்வப்போது துணுக்குற்று எழுந்து, தான் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாகக் காண்பித்து விட்டு, மீண்டும் சிறுதூக்கம் கொள்கிறது. இனவாதம், தானாக விழித்தெழுந்து வம்புக்கு இழுக்கின்ற சந்தர்ப்பங்கள் போக, அதனை சீண்டச் செய்யும் சில புறத்தூண்டல்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறதோ எனச் சிந்திக்க வேண்டியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது ஆட்சிக்காலம் மிகவும் மோசமான அனுபவங்களைத் தந்தது. சிறுபான்மை மக்கள் இனவாதத்தின் அகோர முகங்களைக் கண்டு நடுங்கினர். பொது பலசேனா, ராவண பலய போன்ற கடும்போக்கு அமைப்புக்களில் அங்கம் வகித்த சில பௌத்…
-
- 0 replies
- 385 views
-
-
உறவுகளை தேடி 10 வருடங்களாக போராடும் மக்கள் தமது அன்புக்குரியவர்களை தொலைத்துவிட்டு அவர்களை மீட்டுத்தருமாறு கோரி போராடிக்கொண்டிருக்கும் காணாமல்போனவர்களின் உறவுகள் தற்போது பாரிய விரக்திநிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர். தமது காணாமல்போன உறவுகளை மீண்டும் காணவே முடியாதா, அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியாதா, அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா போன்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமல் இந்த மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். யுத்தகாலத்திலும் அதன் முடிவிலும் இவ்வாறு பலர் காணாமல் போனதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் இவ்வாறு …
-
- 0 replies
- 578 views
-
-
உறவுகளைத் தேடும் நிறைவுறாத பயணம் உறவுகளைத் தேடும் நிறைவு(வே)றாத பயணம் எண்ணற்ற கதைகளை நெஞ்சில் சுமந்துகொண்டு, வீதிகளில் தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடித்தமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், 100 நாட்களை எட்டிவிட்டன. நம்முடைய தொலைந்து போன உறவுகள், பல ஆண்டுகள் கழித்து நம் கண்முன் வந்தால் எப்படியிருக்கும்? ஆனந்தத்தில், இன்ப அதிர்ச்சியில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுக்கும் இல்லையா? அப்படிப்பட்ட ஓர் இன்ப அதிர்ச்சியை அனுபவிப்போமா இல்லையா? என்பது கூடத் தெரியாமலேயே, இந்தப் போராட்டம் தொடர்கிறது. தனியான ஈழதேசம் வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளால், கடந்த 30 வருடகாலங்களாக முன்னெடுக்கப்பட்ட உள்நாட்ட…
-
- 0 replies
- 529 views
-
-
உறவை முறிக்குமா பிணைமுறி? பிணைமுறி ஊழல் விவகாரமும் அது தொடர்பாக கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையும் அதன் மீதான ஜனாதிபதியின் கருத்துக்களும் இந்த வார அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளன. ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான ஜனாதிபதியின் கருத்துக்களைப் போலவே பிரதமரின் கருத்துக்களும் கூட கவனத்தைப்பெற்றுள்ளன. தேசிய அரசாங்கத்தின் இரண்டு பிரதான கட்சிகளின் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் குற்றவாளிகளை இனங்கண்டு தண்டனை வழங்க வேண்டும் என விடுத்திருக்கும் அறிக்கை முன்மாதிரியானதுதான். எனினும் அத்தகைய குற்றவாளிகளான சந்தேக நபர்க…
-
- 0 replies
- 1.8k views
-
-
இதில் உலக தமிழர் பேரவையை இயக்குவது யார்? இந்தியாவுக்கு அவசர அவசரமாக அழைத்தவர்கள் யார்? போனவர்களுக்கு என்ன நடந்தது? இப்படி பல கடந்த நிகழ்வுகள் அலசப்படுகிறது. இதில் முக்கியமாக உலக தமிழர் பேரவையின் நிகழ்ச்சி நிரலின் பின்னால் சுமந்திரன் இருப்பதாக சொல்லப்படுகிறது.
-
- 1 reply
- 394 views
- 1 follower
-
-
உறுதிமொழிகளை நிறைவேற்றுவது அனுரகுமார அரசுக்கு குதிரைக் கொம்பாகவே இருக்கும் முருகானந்தம் தவம் பொருளாதார நெருக்கடிகள், எதிர்க்கட்சிகளின் குடைச்சல்களினால் அனுரகுமார அரசு ‘ஆயுசு நூறு நித்தம் கண்டம்’ என்ற வகையில் ஆட்சியை நகர்த்துகின்ற நிலையில், இயற்கையும் தன் பங்கிற்கு ‘டிட்வா’ புயலாக இலங்கையர்களை மட்டுமன்றி ஆட்சியாளர்களையும் புரட்டிப்போட்டு மரண அடி கொடுத்துள்ளது. ‘டிட்வா’ புயலும் அதன் விளைவான பெரு மழையும் இலங்கையில் ஆடிய கோரத் தாண்டவத்தினால் ஏற்பட்டுள்ள பேரழிவுகளிலிருந்து நாடும் மக்கள் மட்டுமன்றி ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான அரசும் தற்போதைக்கு மீண்டெழக்கூடிய வாய்ப்புக்கள் இல்லையென்றே கூறவேண்டியுள்ளது. இலங்கையில் பதிவான வானிலை வரலாற்றில், மிக மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்த…
-
- 0 replies
- 105 views
-
-
உறுதியான அரசியல் தலைமையின் அவசியம் நாட்டில் தேர்தல் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றதே தவிர,அதற்கு அப்பால் உள்ள ஜனநாயக அரசியலில் கவனம் செலுத்தப்படுவதாகத் தெரியவில்லை.மக்கள் நலன் சார்ந்து நாட்டம் கொள்ளப்பட வேண்டிய சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்தி அரசியலிலும் உரிய வகையில் கவனம் செலுத்தப்படுவதாகத் தெரியவில்லை. தேர்தல் அரசியல் அவசியம். இல்லையென்று சொல்வதற்கில்லை. ஆனால், தேர்தலுக்கு அப்பால் உள்ள அரசியலே நாட்டுக்கும் மக்களுக்கும் அவசியமான அரசியல். அது ஜனநாயக அரசியல். மக்களுக்கான அந்த ஜனநாயக அரசியல் இல்லையென்றால், அது போலித்தனமானது.வெறுமனே அரசியல் அந்தஸ்தையும், ஆட்சி அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்கான அரசியலாகும். அது ஆட்சிக்குப் …
-
- 0 replies
- 387 views
-
-
உறுதியான தலைமைத்துவத்தின் அவசியமும் வெற்றிடமும் தமிழ் அரசியல் வெளியில் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து வழிநடத்திச் செல்லத்தக்க, ஆளுமையுள்ள தலைமைக்கு ஒரு வெறுமை நிலை நிலவுகின்றது என்பது மீண்டும் வெளிப்பட்டிருக்கின்றது. யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் ஏற்பட்ட இந்த இடைவெளி பெரிதாகிச் செல்கின்றதே தவிர குறுகுவதாகத் தெரியவில்லை. அந்த வெறுமையை நீக்குவதற்கு நம்பிக்கை அளிக்கத்தக்க முன்னெடுப்புக்களை யார் மேற்கொள்ளப் போகின்றார்கள் என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலைமைகளை மகாவலி திட்டத்திற்கு எதிரான முல்லைத்தீவின் மக்கள் எழுச்சி பளிச்சிடச் செய்திருக்கின்றது. முல்லைத்தீவு எழ…
-
- 0 replies
- 477 views
-
-
உலகம் உறைந்த நாள்கள்!! இற்றைக்கு 73 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பான் இந்த நாள்களில் அதிர்ச்சியில் உறைந்தது. இரண்டாவது உலகப்போர் தீவிரம் பெற்றிருந்த இந்த நாள்களில் ஜப்பான் மீது லிட்டில் போய், பட் போய் என்று இரண்டு அணுகுண்டுகளை வீசியது அமெரிக்கா. ‘‘சூரியன் பூமியில் உதித்த நாள்கள்’ என்று வர்ணிக்கப்படும் அந்தக் காலங்களையும் இன்று அணுவாயுதங்கள் எந்தளவுக்கு நிலைபெற்றுள்ளன என்பதையும் ஆராய்ய முனைகிறது இந்தப் பத்தி. ஜப்பானும் அமெரிக்காவும் டிசெம்பர் 1941ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவை…
-
- 0 replies
- 620 views
-
-
உலக அரங்கில் பெரியார்; ஆக்ஸ்ஃபோர்டு கருத்தரங்கமும், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த பெரியாரின் திருவுருவப் படமும் 8 Sep 2025, 7:12 AM ராஜன் குறை தொன்மையான தமிழ் பண்பாடு உலக சிந்தனைக்கு அளித்த எத்தனையோ கொடைகளில் இரண்டினை முதன்மைப்படுத்திச் சொல்ல வேண்டும் என்றால் அது ஐயன் திருவள்ளுவரின் திருக்குறளும், பெரியாரின் சிந்தனைகளும் எனலாம். திருவள்ளுவர் தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வந்திருக்கிறார். லண்டனில் முதல்வர் ஸ்டாலின், திருக்குறளை 1886-ஆம் ஆண்டே மொழியாக்கம் செய்த ஜி.யு.போப் அவர்களின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார். அதனால் திருக்குறள் உலகில் பரவலாக அறியப்பட்டது. பெரியாரைப் பொறுத்தவரை அவர் தன் சிந்தனைகளைத் தொகுத்து நூலாக எழுதவில்லை. ஒரு சில பிரசுரங்கள் அவ…
-
-
- 3 replies
- 425 views
- 1 follower
-
-
உலக அரசியலும் உள்ளூர் அரசியலும் என்.கே. அஷோக்பரன் உலகின் மிகப் பலம்பொருந்திய பல நாடுகள், ஏனைய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவது, எல்லாக் காலங்களிலும் இருந்து வந்துள்ளது. பெரும் வணிகமும் அதனால் குவிந்த செல்வமும், அந்தச் செல்வத்தால் அந்தச் செல்வத்தைக் காப்பாற்றவும் மேம்படுத்தவும், விரிவடைந்த ஆயுத மற்றும் படைபலம், இந்த நாடுகளின் வல்லமைக்கு அடிப்படையாக இருந்திருக்கின்றன. முழு உலகையும் தனது சாம்ராஜ்யமாக்குவது, அலெக்ஸாண்டர், ஹிட்லர் போன்ற பலரினது கனவு. ஆனால், அந்தக் கனவை எவராலும் அடைந்து கொள்ள முடியவில்லை. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. உலக நாடுகளைக் கைப்பற்ற முடியாவிட்டாலும், உலக நாடுகள் மீதான ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதில், வல்லரசுகள் இப்போதும்…
-
- 1 reply
- 761 views
-
-
உலக அரசியல் அரங்கு: ஒரு கணக்கெடுப்பு அரசியல் அரங்கின் சுவையே அதன் நிச்சயமின்மையே. அச்சுவையின் அபத்தம் யாதெனில், பல சமயங்களில் அச்சுவாரசியம் அவலச் சுவையுடையது. உலக அரசியல் அரங்கு, நிச்சயமின்மைகளாலும் அவலங்களாலும் நிறைகின்ற காலப்பகுதியில், எதிர்காலத்தை வெறித்துப் பார்த்தபடி எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. ஒருபுறம், இதுவரை கட்டமைக்கப்பட்ட சமூக அரசியல் விழுமியங்கள், புதிய வாசிப்புகளையும் விளக்கங்களையும் பெறுகின்றன. மறுபுறம், உலகம் எதேச்சாதிகாரத்தின் நவீன வடிவங்களை நோக்கி நகர்கிறது. இவை புதிய கேள்விகளையும் விளக்கங்களையும் வேண்டி நிற்கின்றன. உலகமயமாக்கலின் முடிவு கடந்த அ…
-
- 0 replies
- 750 views
-
-
உலக அரசியல் ஒழுங்கை கையாளும் கொழும்பின் உத்தி – மக்கள் இயக்கதின் அவசியம் May 2, 2025 11:09 am ‘தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்’ என்பதற்கு அமைய ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கான அரசியற் தீர்வு காணும் சுயநிர்ணய உரிமைப் பயணத்தில் முதற்பாதி நடந்து முடிந்து விட்டது. சூது காவலுக்கு ஐரோப்பிய காலனித்துவம், குறிப்பாகப் பிரித்தானிய காலனித்துவம், அதன் தொடர்ச்சியாக நவகாலனித்துவமாக அமெரிக்காவுக்குக் கைமாறிய இரு துருவ, ஒரு துருவ உலக வல்லாதிக்க அரசியல் மட்டும் மூல காரணமல்ல. இந்தியத் துணைக் கண்டத்தில் மேலெழுந்துள்ள பிராந்திய மேலாதிக்கமும் முக்கியமான ஒரு காரணி. ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இன அழிப்புப் போர் மூலம் அழிக்கப்படுவதற்…
-
- 0 replies
- 188 views
-
-
உலக உணவு நெருக்கடி: அடுப்பிலிருந்து நெருப்புக்குள் இலங்கை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை, இலங்கையர்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். ஆனால், இது வெறும் தொடக்கம் மட்டுமே என்பது போலவே, நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றபோது, ‘உடனடியாக வெளிநாடுகள் கடன் கொடுக்கும்; பிரச்சினைகள் தீரும்’ என்று சொல்லப்பட்டது. “எல்லா இலங்கையர்களுக்கும், மூன்றுவேளை உணவை உத்தரவாதப்படுத்துவதே எனது பணி” என்று பதவியேற்றவுடன் ரணில் விக்கிரமசிங்க சொன்னார். நடந்தது யாதெனில், அவர் பதவியேற்ற போது மூன்று வேளை உண்டவர்கள், இப்போது இரண்டு வேளையும், இரண்டுவேளை உண்டவர்கள் ஒரு வேளையும் உண்கிறார்கள். புதிய பிரதமரின் சாதனையாக …
-
- 0 replies
- 400 views
-
-
உலக ஊடக சுதந்திர தினமும் ஈழத்தீவும் ஆசிரியர் தலையங்கம் இன்று (3) உலக ஊடக சுதந்திர தினம் உலகெங்கிலும் அனுட்டிக்கப்படுகின்றது.”மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று ஊடக சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆபிரிக்க ஊடகங்களினால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே “ஊடக சுதந்திர சாசனம்” (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது. இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) …
-
- 0 replies
- 611 views
-