நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
ஐரோப்பிய ஒன்றியம்: கேள்விக்குறியான எதிர்காலம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ எதிர்காலம் எதிர்வுகூறவியலாதது. நிகழ்காலம் நிச்சயமற்றது. இறந்தகாலம் மீளாது. இம் மூன்று காலங்கட்குமிடையான உறவும் முரணுமே நிகழ்வுகள் யாவையும் தீர்மானிக்கின்றன. நடந்தவை நடப்பவற்றுக்குத் தளமிடுகின்றன. நடப்பது நடக்கவுள்ளதன் திசைவழியின் வரைபடத்தை நடந்ததின் உதவியுடன் வரைகிறது. கடந்த இரு வாரங்களாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வெளிப்படையாகத் தம்முள் கொள்கையளவில் முரண்பட்டிருப்பதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்புப் பற்றி ஐயம் வெளியிட்டிருப்பதும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளார்ந்த நெருக்கடிகளை இன்னொரு முறை பொதுவெளிக்குக் கொணர்ந்துள்ளன. கடந்த வாரம் பிர…
-
- 0 replies
- 568 views
-
-
ஒக்டோபர் 19, பிரான்ஸ்... லூவர் அருங்காட்சியகத்தில் என்ன நடந்தது! 2025 அக்டோபர் 19 ஆம் திகதி உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத நாள். உலகம் முழுவதும் ஒரே விடயம் பேசுபொருளாக மாறியது. பிரான்சின் தலைநகர் பேரிசில் அன்று மக்கள் தொகையும் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருந்தது. இதற்கு காரணம் பேரிஸ் பிரான்சின் தலைநகரமாக இருப்பது மட்டுமல்ல அது வியாபார நகரமாகவும் சுற்றுலா தளங்கள் நிறைந்த இடமாகவும் காணப்படுவதாலாகும். அன்று மக்கள் கூட்டம் இன்னும் அதிகம், சாலையில் வாகனங்கள் ஒரு மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தன. தூரத்தில் ஒரு பெரிய கனரக வாகனம் மாத்திரம் பாதையை விட்டு விலகி அங்கிருந்த ஒரு பெரிய கட்டிடத்தின் சுவருடன் இணைந்த வகையில் நிறுத்தப்படுகிறது. அடுத்த சில நிமிடங்களில் அந்த கட்டிடத்…
-
- 0 replies
- 86 views
-
-
சிறுபான்மை இனத்தில் பெரும்பான்மையினர் துணைவர்களை இழந்தவர்களா! இன்று உலக துணைவர்களை இழந்தவர்களின் தினம். உலகில் கணவனை இழந்த கைம்பெண்களின் பிரச்சினைகளை குறித்து கவனத்தை ஏற்படுத்தும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையினால் இந்த நாள் உலக துணைவர்கள் தினமாக 2010இல் பிரகடனம் செய்யப்பட்டது. உலகில் போர், பஞ்சம், வன்முறை, அசாதாரண நிலமைகள் காரணமாக கோடிக்கணக்கான பெண்கள் துணையிழந்தவர்களாக்கப்பட்டு உள்ளதாக உலக புள்ளி விபரங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கோடிக்கணக்கான உலக துணையிழந்தவா்களில் சுமார் 90ஆயிரம் ஈழ துணையிழந்தவர்களும் உள்ளடங்குகின்றனர். உலகில் சுமார் 260 மில்லியன் பெண்கள் துணைவர்களை இழந்தவர்களாக வாழ்கின்றனர். அவர்களில் 115 மில்லியன் துணையிழந்தவர்கள், வறுமையின் ப…
-
- 0 replies
- 1k views
-
-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலும் தமிழ்த் தலைமைகளும்! - நா.யோகேந்திரநாதன்.! உலக அரசியல், பொருளாதார, இராணுவ மேலாதிக்கத்தைக் கையகப்படுத்த அமெரிக்காவும், சீனாவுக்குமிடையேயான போட்டி வலுப்பெற்று ஒரு பனிப்போராக விரிவடைந்த நிலையில் அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் நிறைவு பெற்று அதன் முடிவுகள் வெளிவந்து விட்டன. சர்வதேச அளவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறியமை, உலக சுகாதார நிறுவனத்துடன் முரண்பட்டு அதற்கான உதவிகளை நிறுத்தியமை, உலக வெப்பமயமாதல் ஒப்பந்தத்தை நிராகரித்து ஒப்பமிட மறுத்தமை, ஈரான் வடகொரிய நாடுகளுடன் அமெரிக்காவுக்கு நிலவிய முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தியமை போன்ற முரட்டுத்தனமான நடவடிக்கைகள் மூலம் டொனால்ட் ட்ரம்ப் ஒரு வன்போக்கைக் கையாண்டு வ…
-
- 0 replies
- 412 views
-
-
சிறிலங்காவின் எதிர்ப்புச் தடைச் சட்டத்தின் (Counter Terrorism Act) சில கோட்பாடு மற்றும் வரையறை தொடர்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து, சில அமைப்புக்கள் தமது அதிருப்திகளை முன்வைத்துள்ளன. திட்டமிட்ட படுகொலைகள் மற்றும் பலவந்தப் படுகொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் சிறப்பு அறிக்கையிடலாளர் கிறிஸ்ரோப் கெய்ன்சும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். சிறிலங்காவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக அண்மையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பாக மனித உரிமைகளுக்கான நிறுவகம் மற்றும் அனைத்துலக மற்றும் ஆபிரிக்காவில் நிலவ…
-
- 0 replies
- 282 views
-
-
ஜெனீவா மாநாட்டுக்கு தயாராகும் இலங்கை - பேசுபொருளாகும் அம்பிகா சற்குணநாதனின் கருத்து ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 10 பிப்ரவரி 2022 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 49வது அமர்வு, எதிர்வரும் பிப்ரவரி மாதம் 28ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் முதலாம் தேதி வரை ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறவுள்ளது. இலங்கை அரசாங்கம் இந்த அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக தற்போது தயாராகி வருவதை காண முடிகிறது. இதேவேளை, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை தொடர்பான ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் இந்த முறை அமர்வில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
வைக்கம் நூற்றாண்டு: பெருகும் பெரியார் பெருமை! Apr 03, 2023 07:02AM IST ஷேர் செய்ய : ராஜன் குறை வைக்கம் என்பது கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். தாலுக்கா தலைநகர். இந்த ஊரில் உள்ள மகாதேவர் ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் ஈழவர்கள், தாழ்த்தப்பட்டோர் நடமாட தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடையை எதிர்த்து ஒரு சத்தியாகிரக போராட்டம் நூறாண்டுகளுக்கு முன் 1924ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் கேரளத் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அறுநூற்று மூன்று நாட்கள் நடந்த இந்தப் போராட்டம், வெற்றிகரமாக தடை நீக்கப்பட்டவுடன் நிறைவடைந்தது. வைக்கம் போராட்ட நூற்றாண்டு தொடக்க விழாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினை அழைத…
-
- 0 replies
- 149 views
-
-
சிறுபான்மை இனத்தவர்களை அடக்கி ஒடுக்கி அழித்துவிட்டு முழு நாட்டையும் பௌத்த பூமியாக்குவதற்கு சில சிங்கள பேரினவாதிகள் பல ஆண்டுகளாக எண்ணம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தவர் தான் இலங்கை நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ அவர்கள் இவர் எமது நாட்டை பொறுப்பேற்று ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதாக அறிவித்தார். எனினும் சிறுபான்மையினரை அழிக்க வேண்டும் என நினைத்தவர்களுக்கு சாடிக்கேற்ற மூடி வாய்த்தது போல் அமைத்தார் மகிந்த ராஜபக்ஷ முதலில் கண்ணில் பட்டது தமிழ்மக்கள். இரண்டாவது முஸ்லீம்கள். தமிழ் மக்களை பொறுத்தவரையில் கல்வி, கலை, கலாச்சாரம் என்று எல்லாவற்றிலும் எமது நாட்டில் அன்று தொட்டு இன்று வரை முன்னின்று கொண்டிருக்கின்றார்கள் இதை மேல…
-
- 0 replies
- 678 views
-
-
இலங்கை பூகோள அரசியல் சக்திகளின் விளையாட்டு மைதானமா ? - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தியிலும் இந்தியாவுக்கு அண்மையில் அமைந்திருப்பதனால் அதிகம் மூலோபாய முக்கியத்துவத்தை கொண்டுள்ளதைக் காணமுடிகிறது. அத்தகைய மூலோபாயமே அதன் அரசியல் பொருளாதார இருப்புக்கும் செழுமைக்கும் காரணமாக விளங்குகிறது. அத்தகைய மூலோபாய அமைவு இலங்கைக்கான வாய்பே அன்றி பாதிப்பாக விளங்கிக் கொள்ள முடியாது. இலங்கையின் புதிய அரசாங்கத்தின் மூலோபாய நகர்வில் வெளிப்படையில்லாத போக்கினால் அதிக குழப்பமிக்க கொள்கைகளை நோக்கி செயல்படுகிறது. அது மட்டுமன்றி முன்பின் முரண்பாடான கொள்கைகளையும் வகுக்க முயலுகிறது. இக்கட்டுரையும் அத்தகைய சூழலை வாசகனுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் அமையவுள்ளது. …
-
- 0 replies
- 359 views
-
-
தமிழ்த் தேசியம் கலவைக் கொள்கையல்ல தனித்துவமான கருத்தியல் பெ.மணியரசன் பேச்சு! தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பாவேந்தன் – திருவாட்டி சாந்தி ஆகியோரின் மகன் செல்வன் பாரிக்கும் ஈரோடு மாவட்டம் குன்றத்தூர் பொறியாளர் கி. நடராசன் – திருவாட்டி சாரதா ஆகியோரின் மகள் செல்வி சிந்துவர்சாவுக்கும் சொல்லாய்வறிஞர் ப. அருளியார் அவர்கள் தலைமையில் கோபிச்செட்டிப்பாளையத்தில் 21.4.2013 அன்று திருமணம் நடைபெற்றது. அத்திருமணத்தில் வாழ்த்துரை வழங்கிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களது பேச்சின் சுருக்கமான எழுத்து வடிவம் 'இங்கு வாழ்த்துரை வழங்கிய வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்கள் ஒரு சிறந்த கருத்துச் சொன்னார். தமிழ்த…
-
- 0 replies
- 570 views
-
-
கல்முனை: நீளும் கயிறிழுப்பு முகம்மது தம்பி மரைக்கார் / 2019 மார்ச் 13 புதன்கிழமை, மு.ப. 09:51 Comments - 0 பிச்சைக்காரனுக்கு புண்ணும் அரசியல்வாதிகளுக்கு ஆகக்குறைந்தது ஒரு சர்ச்சையும், தத்தமது தொழில்களை வெற்றிகரமாகச் செய்துகொள்வதற்கு அநேகமான தருணங்களில் தேவையாக இருக்கின்றன. சர்ச்சைகள் இல்லாதபோது, அரசியல்வாதிகளே அவற்றை ஏதோவொரு வழியில் தொடக்கிவைத்தும் விடுகின்றனர். அரசியலரங்கைச் சூடேற்றி, அதனூடாக வாக்குகளை அறுவடை செய்வதற்கு, இந்தச் சர்ச்சைகள் உதவுமென, பெரும்பாலான அரசியல்வாதிகள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். பொதுத் தேர்தலொன்று விரைவில் வரலாமென்கிற கதைகள் வந்துவிட்டால், அம்பாறை மாவட்டத்தில், சர்ச்சைக்குரிய சில விடயங்கள் குறித்த பேச்சுகள் எழுந்துவிடும். த…
-
- 0 replies
- 755 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக அருள் எழிலன் - தீபச்செல்வன் உரையாடல் தமிழகத்தின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களுள் ஒருவர் டி. அருள் எழிலன். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஊடகங்களில் எழுதி வருகிறார். மனித உரிமை விவாகரங்களில் தனித்த அக்கறை கொண்ட இவர் ஆனந்த விகடன் வார இதழால் இதழியலில் துறைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர். குங்குமம் இதழின் ஆசிரியர் குழுவிலும் பணி செய்தவர். 2007 ஆம் ஆண்டில் இந்தியா டுடே இதழால் சிறந்த ஊடகவியலாளராக அடையாளம் காணப்பட்ட அருள் எழிலன் ஒரு குறும்பட இயக்குநரும் கூட. ஓவியர் ஆதிமூலம் தொடர்பான 'வெளிகளினூடே' என்ற ஆவணப்படம் உட்பட பல ஆவணப்படங்களை இயக்கியிருக்கும் இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் சதத் ஹசன் மண்டோவின் கதையை தமிழில் 'ராஜாங்கத்தின் முடிவு' எ…
-
- 0 replies
- 690 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமான தலைமையல்ல என்பது நிரூபணமாயிற்று. கூட்டமைப்பின் அரசியல் என்பது சுயநலம் சார்ந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இதை நாம் கூறுவதற்காக கூட்டமைப்பில் இருக்கக்கூடிய அத்தனை பேரும் தமிழ்ப்பற்று இல்லாதவர்கள் என்று யாரும் நினைத்து விடக்கூடாது. கூட்டமைப்புக்குள்ளும் நேர்மையான தமிழ்ப் பற்றாளர்கள் இருக்கின்றனர். ஆனால் கூட்டமைப்பின் தலைமையை எதிர்க்கின்ற சக்தி அவர்களிடம் இல்லாத காரணத்தால் அவர்கள் பேசாமல் மெளனித்துள்ளனர். எனினும் கூட்டமைப்பின் தலைமை தமிழினத்துக்குப் பாதகமான தீர்மானங்களை நடைமுறைப்படுத்திச் செல்லுகையில் அதனை எதிர்த்துக் கதைக்காமல் இருப்பதென்பது தர்மமன்று. ஆக, கூட்டமைப்பின் தலைமையை எதிர்க்க முடியவி…
-
- 0 replies
- 445 views
-
-
01.07.2016 இன்று கனடா தேசம் தனது 149 வது (கனடா பிறந்த தினத்தை) "Canada Day" கொண்டாடுகின்றது. கனடா தினம் என்பது கனடாவின் தேசிய தினமாகும். அதாவது, வட அமெரிக்காவின் மூன்று குடியேற்றத்திட்டங்களை ஆண்டுவந்த பிரித்தானியா; அவை மூன்றையும் ஒன்றாக இணைத்து “கனடா” என்னும் ஒரு நாடாக (பிரித்தானிய வட அமெரிக்க சட்டம் 1867ன் கீழ்) பிரகடனப்படுத்திய நாளே கனடா தினமாக கொண்டாடப்பெற்று வருகின்றது. கனடா தனது முதலாவது பிறந்த தினத்தை 01.07.1868 ல் கொண்டாடியது. ஆரம்பத்தில் இத் தினத்தை “டொமினியன் தினம்” என அழைத்தனர். அதன் பின்னர், 1982 ம் ஆண்டு ஒக்ரோபர் 27 திகதி இத் தினத்தை "கனடா தினம்" (Canada Day) என சட்ட பூர்வமாக மாற்றப் பெற்றது. இத் தினத்தை கனடாவின் "பிறந்த தினம்" எனவும் அழைப்பதுண்டு. …
-
- 0 replies
- 728 views
-
-
தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனத் தன்னைத்தானே இலங்கை அரசு கேட்டுக் கொள்வதும், தமிழர்களிடம் அதனைக் கேட்டுப் பார்ப்பதும் இலங்கை அரசின் பொறுப்பு என கிழக்குத் தீமோரின் முன்னாள் ஜனாதிபதியும், அமைதிக்கான நோபால் பெற்றவருமான முனைவர் ஹொசே ரமோஸ்-ஹோர்தா, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தக்கு வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேரையில் தெரிவித்துள்ளார். கிழக்கு திமோர் தலைநகரம் டிலீயிலிருந்து இணையவழியே அவர் வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையில் தெரிவித்திருப்பதாவது, கத்தலோனியா மக்கள் நூற்றாண்டுக் கணக்கில் சேர்ந்து வாழ்ந்த பின் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்? என்ற கேள்வியை மாட்ரிட் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, ஸ்காட்டுகள் பிரித்தானியாவிடம் இருந…
-
- 0 replies
- 555 views
-
-
மர்யம் அஸ்வர் பிபிசி மானிட்டரிங் குழு புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இலங்கையில் ஆளும் ராஜபக்ஷ சகோதரர்களின் தேர்தல் வாக்குறுதியை உண்மையாக்கும் வகையில், புதிதாக அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு, அந்நாட்டின் அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்கான முதலாவது வரைவுக்கு கடந்த 2ஆம் தேதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதையடுத்து அரசு அறிவிக்கையில் வெளியிட்பபட்ட அந்த வரைவு திருத்தம், அடுத்த இரு வாரங்களில் நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்ப…
-
- 0 replies
- 550 views
-
-
கசிந்துள்ள ஐ.நா வின் அறிக்கை- புதிய நம்பிக்கையும் தமிழ் ஊடகங்களின் திரிபுபடுத்தப்பட செய்திகளும் 01/25/2021 இனியொரு... Michele Bachelet, ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் வெளியிடப்படவுள்ள இலங்கை அரசிற்கு எதிரான அறிக்கை என்பது இப்போது சண்டே ரைம்ஸ் இதழுக்கு கசிவடைந்துள்ளதாக வெளியிட்ட தகவல் இலங்கை அரசு வரலாறு காணாத போர்க்குற்றமிழைத்து 11 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையில் சில குறிக்கத்தக்க மாற்றங்களை காணமுடிகிறது. ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 46 ஆவது அமர்விற்கு முன்னதாகவே வெளியாகியுள்ள இந்த அறிக்கை ஊடகம் ஒன்றிற்குக் கசிந்துள்ளதான தகவல் உண்மையானதாக இருக்க வேண்டும் என்பது ராஜபக்ச இனக்கொலை சர்வாதிகார அரசிற்கு எதிரான அனைத்து சனநாயக முற்ப…
-
- 0 replies
- 484 views
-
-
நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளோர் மன நெருக்கீடு நீக்கப்படுவது எப்போது..? [26 ஏப்ரல் 2009, ஞாயிற்றுக்கிழமை 5:10 மு.ப இலங்கை] வன்னியில் போர்ப் பகுதிக்குள் சிக்குண்டிருந்து தமது உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே யொரு நோக்கத்துடன் அங்கிருந்து வெளியேறிய இடம்பெயர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களில் கடந்த 20 ஆம் திகதிக்குப் பின்னர் சுமார் 12,000 பேர்வரையில் குடாநாட்டுக்கு வந்துள்ளனர். எங்கே போகலாம் என்ற ஒரு நிலையில், தங்களைச் செõந்த இடமான குடநாட்டுக்குக் கூட்டிச் செல்லுமாறு அவர்கள் படையினரிடம் கேட்டதாகவும், அதனை ஏற்று மனிதாபிமான முறையில் அணுகி தமது வாகனங்களி லும் கப்பலிலும் ஏற்றிவந்து இங்கு சேர்த்துள்ளனர். படையினரின் இந்த உதவியை வன்னியிலிரு…
-
- 0 replies
- 666 views
-
-
கேள்விக்குறியான எமது இனம்: புலம்பெயர் தேசத்திலிருந்து பிறைநிலவு சீனா, ரஷ்யாவின் ஆயுத பலத்துடனும் இந்தியாவின் இராணுவ தொழில் நுட்ப உதவிகளுடனும் தமிழீழத்தில் உள்ள தமிழினத்தை இனச்சுத்திகரிப்பு செய்த இலங்கை அரசாங்கம் இன்று தாம் யுத்தத்தில் வெற்றி பெற்றதாகவும் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டதாகவும் இலங்கையின் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறது. இந்த அறிவிப்பால் தென்னிலங்கையில் பட்டாசு சந்தோசத்துக்காகவும் வட இலங்கையில் பட்டாசு தமிழினழிப்புக்கும் சிங்கள வெறியர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழர்களாகிய எமது வாழ்க்கை, உரிமை, உறவுகள், சொத்துக்கள் எல்லாமே இன்று கேள்விக்குறியாகியுள்ளது. ஏனெனில், எமது தேசியத்தலைவருக்கு என்ன நடந்தது என்பது இன்னும் நமக்கு தெளிவாகத்தெரியாது. “எமது…
-
- 0 replies
- 782 views
-
-
பிரஜைகளுக்காக உழைத்த ஒரு சட்டம் : ' இலங்கையில் தகவல் அறியும் உரிமையின் 5 வருடங்கள் ” By VISHNU 30 SEP, 2022 | 12:26 PM செப்டெம்பர் 28 ஆம் திகதியன்று நினைவுகூறப்படும் உலகளாவிய தகவல் அணுகலுக்கான சர்வதேச தினத்தை (IDUAI) முன்னிட்டு, இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) 'பிரஜைகளுக்காக உழைக்கும் ஒரு சட்டம்: இலங்கையில் தகவல் அறியும் உரிமையின் ஐந்தாண்டுகள்' என்ற தலைப்பில் இணையவழி கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது. இந்த கலந்துரையாடலில், இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் கிஷாலி பின்டோ ஜயவர்த்தன, ஜூலியஸ் & க்ரீசியின் சிரேஷ்ட சட்டத்தரணி பிரசாந்தி மகிந்தாரத்ன மற்றும் தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் தொடர்பாடல் சட…
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
போரால் இழக்கப்பட்ட அங்கங்கள் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:- 03 டிசம்பர் 2014 இன்று சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம்:- டிசம்பர் 3 ஆம் திகதி உலகலாவிய மட்டத்தில் மாற்றுதிறனாளிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்ற வேளையில் போரினால் தமது அவயங்களை இழந்த ஈழ மாற்றுத் திறனாளிகளின் இன்றைய நிலை குறித்து பேசுதல் அவசியமானது. யுத்தம் ஈழத் தமிழர்களை சகல விதத்திலும் பாதித்துள்ளது. இந்தப்போரில் பல்லாயிரக் கணக்காணவர்கள் தங்கள் அவயங்களை இழந்துள்ளனர். முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு முந்தைய கால யுத்தங்களினாலும் தமது அவயங்களை இழந்தவர்கள் பலர். முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பல்லாயிரம் பேர் தங்கள் அவயங்களை இழந்துள்ளனர். ஈழத்தின் பல பாகங்களிலும் இன்று கண்கள் அற்றவர்களை, கால்கள்…
-
- 0 replies
- 361 views
-
-
Published By: VISHNU 13 JUL, 2023 | 11:11 AM குமார் சுகுணா நாம் நமது கவன குறைவினால் செய்யும் சிறிய விடயங்கள் கூட மிக பெரிய இழப்புகளை நமக்கு ஏற்படுத்தி விடுகின்றது. குறிப்பாக நாம் அறியாமலே செய்யும் சில விடயஙகள் பெரும் விபத்துகளை உருவாக்கி விடுகின்றன. விபத்து என்பது திட்டமிடாத எதிர்பார்க்கப்படாத ஒரு நிகழ்ச்சி. அவ்விபத்தின் விளைவால் காயம் ஏற்படலாம், அல்லது ஏற்படாமலும் போகலாம். ஆனால் சில நேரங்களில் எமது விலைமதிக்க முடியாத உயிரை கூட நாம் இழந்து விடுகின்றோம். இந்த விபத்துகள் எந்த வகையிலும் உருவாகலாம். இவற்றில் முக்கியமானதும் வருடா வருடம் உலகளவில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொள்வதற்கும் காரணமாக அமைவது வாகன விபத்துக…
-
- 0 replies
- 252 views
- 1 follower
-
-
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தேவையில்லை…. October 11, 2018 1 Min Read நடைமுறையில் நிலவும் பயங்கரவாத தடை சட்டத்தை இல்லாதொழிப்பதே இன்றைய தேவை…. தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தீர்வின்றி தொடர்வது தொடர்பில் நாங்கள் ஆழ்ந்த கரிசனை கொள்கின்றோம். இப்பிரச்சினைக்கான தீர்வு அரசியல் ரீதியாக எடுக்கப்படவேண்டியது. ஆனால் நல்லிணக்கத்தை பேசும் அரசாங்கம் இவர்களை அரசியல் கைதிகளாக அல்லாமல் குற்றவாளிகளாகவோ சாதாரண சந்தேக நபர்களாகவோ பார்க்கின்றது. இவ்விடயத்தை சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவுகளுக்கு அரசாங்கம் விடுத்து தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. இதே வேளை 09.10.2018 அன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி புதிதாக ஒரு சட்டத்திற்…
-
- 0 replies
- 238 views
-
-
மறக்கவும் மன்னிக்கவும் பொருத்தமான புறச்சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பலதரப்பட்டவர்களும் இன்று கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர். அதாவது அண்மையில் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் தமது உரைகளில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் ‘மறப்போம் மன்னிப்போம்’ என்று கூறியிருந்தார்கள். ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற வார்த்தை மனித குலத்தின் ஐக்கியத்திற்கும், சமாதானத்திற்கும் அடித்தளமாக அமைகின்ற மிகப்பெரிய வார்த்தையாகும். மனிதன் தனக்கும், தன்னைச் சுற்றியும் நடைபெற்ற பல சம்பவங்களை மறக்கவும், அதனோடு தொடர்புபட்டவர்களை மன்…
-
- 0 replies
- 307 views
-
-
யாழ் தொடக்கம் வாகரை வரையான போராட்டம் – மட்டு நகரான் May 3, 2024 தமிழர்களின் இருப்பினை பாதுகாப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கிழக்கில் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கவேண்டுமானால் போராட்டமே அதற்கான வழி என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுவரும் நிலையில் அங்கு தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. தமிழ் தேசிய அரசியலில் தமிழர்கள் கொண்டுள்ள பற்று அவர்களை போராட்ட நிலைக்கு கொண்டுசென்று தமது இருப்பினை பாதுகாப்பதற்கு உந்துத…
-
- 0 replies
- 217 views
-