Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அலைபேசி ஒலிக்கும் போதெல்லாம் பயமாக இருக்கிறது. சிவகாமியைப் பற்றி எழுதியே ஆகவேண்டும் - என்று அடம்பிடிக்கிறார் நண்பர் அப்புசாமி. கதர் கோஷ்டியே மறந்துவிட்டது அந்த ஏழைத் தாயை! அவர்களைப் பொறுத்தவரை, அன்னை என்றால் சோனியா, சோனியா என்றால் அன்னை. இத்தாலிச் சாத்தனாருக்கோ சோனியா என்றால் மணிமேகலை, மணிமேகலை என்றால் சோனியா! அரசியல் பிழைப்பு நடத்தும் இவர்களில் எவரும், இந்த நவீன மணிமேகலையின் கையிலிருக்கும் அமுதசுரபியிலிருந்து ஒன்றரை லட்சம் ஈழச் சொந்தங்களின் ரத்தம் நிரம்பி வழிவதைக் கவனிப்பதே இல்லை. (ஏம்பா, உங்களுக்கெல்லாம் என்ன கண்ணவிஞ்சு போச்சா?) விருதுநகரிலிருந்த தாயார் சிவகாமிக்கு, வீட்டுச் செலவுக்காக மாதந்தோறும் எழுபது ரூபாயோ எண்பது ரூபாயோ அனுப்பிக்கொண்டிருந்தார் முதலமைச்சராக இருந்த…

  2. தமிழர் விடுதலைக் கூட்டமைப்புக்கு எனது முற்கூட்டிய வெற்றி வாழ்த்துக்கள். இது நமது விடுதலைப்பதையின் முதல்படிக்கான நகர்வாகும். இந்த தேர்தலில் எனது நண்பன் விடுதலை சூழலியலாளன் ஐங்கரநேசனும் என் தோழமைக்குரிய விடுதலை ஆர்வலர் ஆனந்தி எழிலனும் வெற்றிபெறுவது முக்கியமான நிகழ்வாக அமையும். தமிழர் விடுதலைக்கூட்டமைப்புக்கும் அதன் தலைவர் சம்பந்தனுக்கும் அதன் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும் வெற்றி வேட்பாளர்களான விடுதலை ஆர்வலர்கள் ஆனந்தி மற்றும் ஐங்கரநேசனுக்கும் என் போற்றுதலும் நல்வாழ்த்துக்களும்

  3. "இன்றைய தினம் உதயன் பத்திரிக்கை என்ற பெயரில் அதனுடைய வடிவமைப்புடன் கூட்டமைப்புக்கு எதிரான பொய்யான செய்திகளுடன் நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு பத்திரிகை வெளி வந்துள்ளது............ அதன் தகவல்களை நம்ப வேண்டாம்..................... இந்த தகவல்களை அனைவருக்கும் பகிருங்கள்" என பத்திரிகை உலக தோழியர் ஒருவர் கோரிக்கை வைத்திருக்கிறார். தயவுடன் இந்த தகவலை உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தொலைபேசிகள் மூலம் தங்கள் ஈழத்து உறவுகளுக்கு அறிவிக்க வேண்டும். ஆபத்துக்களுக்கு முகம் கொடுத்தும் விடுதலைக்காக குரல்கொடுக்கும் ஈழத்து ஊடகங்களுக்கும் ஊடகவியலாலர்களுக்கும் வானொலி அறிவிப்பாளர்களுக்கும் தலைபணிகிறேன். போற்றுதலும் வாழ்த்துக்களும். நல்வாழ்த்துக்கள் விடுதலைக்காக துணிந்துள்ள ஊடகவியலாலர்கள…

    • 0 replies
    • 503 views
  4. வடக்கு தேர்தல் வட மாகாண சபைத் தேர்தல் என்பது அதிகாரமற்ற ஒரு சபைக்கான தேர்தலாயிருந்தாலும் கூட இது சர்வதேச மட்டத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்திருப்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் வெற்றியொன்றைப் பெற வேண்டியது தமிழ் தேசியக் கூட்டமைப்பை மிகப் பெரும்பான்மையுடன் வெல்ல வைப்பது மிகவும் முக்கியமாகின்றது. இது தமிழர்கள் வட மாகாணத்தை ஆள்வதற்கான ஆணையாக இல்லாமல் அபிவீருத்தி என்ற வெற்றுக் கோசத்தை விட 1948 இல் இழந்து விட்ட அரசியல் உரிமையே தமக்கு முக்கீயம் என்பதை பறைசாற்றும் ஒரு தீர்ப்பாக அமைய வேண்டும். இந்த நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதுடன் நின்று விடாது அந்தக் கூட்டமைப்பிற்குள் தேசியத்தின் பாலும் தமீழ் மக்களின் பாலும் உண்மையான ஈடுபாடுடையவர்களைத் தெரிவ…

  5. வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் - யாழ்.மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகள் மற்றும் வன்னிப் பகுதிகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் - சிறீலங்கா அரசும் அதனோடு இணைந்துள்ள கைக்கூலிகளும் தமது கையாலாகாத் தனங்களை மேலும் முனைப்போடு அரங்கேற்றி வருகின்றதாக தாயகத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கொல்லங்கலட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு சென்ற பொதுமக்களை இராணுவம் தடிகள், பொல்லுகளால் கண்மூடித்தனமாக அடித்து விரட்டியுள்ள கொடுமை சிறிலங்கா இனவாதத்தின் கோரமுகத்தை மீண்டும் பறைசாற்றியுள்…

  6. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போரளிகளின் முன்னாள் போரளிகளின் திருமண நிகழ்வு இன்று புதன்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதன்போது இந்து, பௌத்த மற்றும் கத்தோலிக்க ஆகிய சமய சம்பிரதாயப்படி திருமணம் நிகழ்வுகள் இடம்பெற்றன. முன்னாள் தமீழீழ விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்;களான பேரின்பநாதன் வர்மன் மற்றும் நடராசா சுகிர்தா ஆகியோர் இந்து சம்பிரதாயப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர். இவர்கள் இருவரும் புனர்வாழ்வு பெற்று தற்போது சிவில் பாதுகாப்பு படையில் இணைந்துள்ளனர். இதேவேளை, தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் மிகவும் உயரம் குறைந்தவராகவும் ராதா படையில் இருந்தவருமான முருகையா சசிகுமார் மேரி பபிலாவை கத்தோலிக்க முறைப்படி திருமணம் செய்துகொண்டார். அத்துடன் சிங்கள இனத்தவரான சிவில் ப…

  7. தமிழ்நாட்டின் அரசு முத்திரையில் இடம் பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தை மாற்ற வேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்ட பொது நல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் இந்தியாவில் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாகாணமாக உருப்பெற்றன. அதுநாள்வரை சென்னை ராஜதானியில் இருந்த சிலபகுதிகள் புதிதாக உருவான ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்த கு காமராஜர் தலைமையிலான அரசு, அரசாங்க சின்னமாக வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரத்தைத் தேர்ந்தெடுத்தனர். இந்த சின்னமே இன்று வரை தமிழக அரசின் சின்னமாக தொடர்ந்…

  8. ஹிந்திய பயங்கவாதிகள் ஈழத்தில் செய்தது ஒன்றல்ல இரண்டல்ல பலகொடுமைகளை செய்தனர்.. தமிழ் அரசாங்க உயரதிகாரியின் மனைவியை நிர்வாணமாகப் புகைப்படம் எடுக்கும்படி கூறிய ஹிந்திய பயங்கவாதி.. எனக்கு அறிமுகமான ஒரு டெலோ முக்கியஸ்தர் தெரிவித்த கதை இது. அவரின் இயக்கப் பெயர் கிறிஸ்டி. இந்தியப் படையினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தத்தை ஆரம்பித்த காலகட்டத்தில் அந்த நபர் டெலோ அமைப்பின் வவுனியா மாவட்டப் பொறுப்பாளராக கடமையாற்றிக் கொண்டிருந்தார். புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையில் மிகவும் உக்கிரமான சண்டைகள் நடைபெற்று முடிந்து யாழ் குடாவினுள் இந்தியப் படையினர் நுழைந்த பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தது. பரவலாக நிலைகொண்டிருந்த இந்தியப் படையினருக்கு எதிராக விடுதலைப்…

  9. Seelan Ithayachandran இறைமையுள்ள தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான மீள் வாக்கெடுப்பா வடமாகாண சபைத்தேர்தல்? - இதயச்சந்திரன் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில், இரண்டு விடயங்கள் குறித்து ஊடகப்பரப்பில் அதிகமாகப் பேசப்படுவதைக் காண்கிறோம். ஒன்று, வேட்பாளர்கள் மீதான தாக்குதல்கள். இரண்டாவது, கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து தென்னிலங்கையில் எழும் விமர்சனங்கள். இதில் முதலாவது விடயத்தை நோக்கினால், பிரச்சாரக் கூட்டங்களுக்குத் தடை போடப்படுகிறது என்கிற பொதுவான குற்றச் சாட்டுக்களைவிட, வேட்பாளர் மீதான நேரடித்தாக்குதல்களும், வீட்டின் வாசலில் கழிவு எண்ணெய் அபிசேகம் செய்வதுமே முக்கிய அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. சூழலியலாளர் பொ.ஐங்கரநேசனின் காரியாலய வாசலிலும்…

  10. வணக்கம் சில வாரங்களிற்கு முன்னர் சந்திரசிறி அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஒரு பாடசாலை திறந்துவைக்கப்பட்டது. இப்பாடசாலை சுவிஸ் அரசாங்கத்தின் நிதியினால் நிறுவப்பட்டது. போர்குற்றவாளி என கருதப்படும் ஒருவரை எப்படி சிறப்பு விருந்தினராக அழைத்து இப்படியொரு நிகழ்வை செய்யலாம் என சுவிஸ் தொண்டுநிறுவனம் ஒன்று சுவிஸ் அரசாங்கத்திடம் முறையீடு செய்யவுள்ளது. சந்திரசிறி பற்றி தவகல்களை தமிழ் இணையத்தளங்கள் மூலமாக பெற்று நான் கொடுத்திருந்தேன். ஆனால் அவர்கள் ஆங்கில இணையத்தளத்தை மூலமாக கொண்ட தகவல்கள் இருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என கேட்டுள்ளார்கள். என்னுடைய ஆங்கில அறிவு ஒரு குறிப்பிட்ட எல்லையுடன் முடிந்துவிட்டது. எனவே தான் உங்களின் உதவியை கோருகின்றேன். சந்திரசிறி இறுதிக்…

  11. அவர சொன்னார்? முதலில் என்னால் நம்ப முடியவில்லை.சிவகாமி என்னுடைய தோழி. தலித் விடுதலை பெண்விடுதலைக்காக போராடுகிறவர். நெடுங்காலம் தோழர் திருமா அணியில் இருந்தவர். விடுதலைப் புலிகளை ஆக்கபூர்வமாக விமர்சித்து வருகிறவன் என்ற முறையில் சிவகாமியின் அபத்தமான கூற்று எனக்கு அதிற்ச்சியாய் இருக்கிறது. நிறைய பெண்போராளிகள் எனக்கு உறவினர்களாகவும் தோழியர்களும் இருக்கிறார்கள். அவர்களுள் பலர் எங்கள் காவல் தெய்வங்களாக எல்லை அம்மன்களாக வீரமரணத்தை தழுவிக்கொண்டார்கள். இயக்கத்துக்கு உள்ளுக்கும் சரி வெளியிலும்சரி அவர்கள் ஆண்கழுக்கு அஞ்சியவர்கள் இல்லை. பணிந்தவர்களும் இல்லை. அவர்களை சீண்ட முயன்ற முன்னணி போராளி ஒருவரை அந்த பெண்போரளி அடித்து விழுதியதும் பின்னர் அந்த முன்னணிப் போராளி அவரது உயர் அந்…

  12. இன்றைய செய்தி இது: ஞாயிற்றுக்கிழமை அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இன்று காலை 10 மணியளவில் கிளி நொச்சி 155 ம் கட்டைப் பகுதியில் பரீட்சார்த்த பயணத்தில் ஈடுபட்டிருந்த புகையிரத்தத்தினால் முதலாவது பொதுமகன் பலியெடுக்கப்பட்டுள்ளார். அன்றைய செய்தி: 2005 ல் ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், தனது சொந்த தேர்தல் தொகுதியான, ஹம்பாந்தோட்ட பகுதியில் முதலாவது தேர்தல் பரப்புரையினை ஆரம்பித்தார் மகிந்த ராஜபக்ச. திறந்த வெளி அரங்கம் ஒன்றில் நிகழ்ந்த இந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், மகிந்த வெக்கை காரணமாக புழுக்கத்தில் அவதிப் பட்டார். மேலே இருந்த மின் காத்தாடி வேலை செய்ய வில்லை. எங்கிருந்தோ மின் பொறியியலாளர் அழைக்கப் …

  13. ஈழத் தமிழரின் வாழ்விற்கும், அரசியல் சம உரிமைக்கு ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழமே என்று தமிழ்நாடு முடிவு செய்யவில்லை. அதனைத் தீர்மானத்தவர், ஈழத் தமிழினத்தின் அரசியல் சம உரிமைக்காக சாத்வீக வழியில் போராடிய ஈழத் தந்தை செல்வா அவர்கள்தான் என்பதை விக்னேஸ்வரன் தெரியாதோ? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அதனால் பாதிக்கப்படுவது இலங்கைத் தமிழர்களே என்றும் இலங்கை வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் சி.வி. விக்னேஸ்வரன்…

  14. வீரவணக்க நிகழ்வு இருபுறங்களும் மலைகளால் சூழப்பட்ட வலே மாநிலத்தில் 11.09.2013 மதியம் 12.00 மணிக்கு ஆரம்பமானதுஈகைப்பேரொளியின் திருவுடல் அவரின் உறவினர்களால் தாங்கி வரப்பட்டு மண்டபத்தில் பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் குடும்பத்தினரால் சமயக்கிரிகைகள் நடாத்தப்பட்டது. பிற்பகல் 2.30 மணியளவில் தேசியத்தின் புதல்வனின் வித்துடலை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் கையேற்று தமிழீழ தேசியக்கொடிகளின் மத்தியில் வித்துடல் வைக்கப்பட்டு இறுதி வணக்கநிகழ்வு நடைபெற்றது. ஈகைப்பேரொளியின் திருவுருவப்படத்திற்கு அவரது துணைவி மாலை அணிவிக்க வணக்கநிகழ்வு ஆரம்பமானது. ஈகைப்பேரொளியின் தாயார் பொதுச்சுடரினை ஏற்ற, ஈகைச்சுடரினை அவரின் சகோதரன் ஏற்றினார். …

  15. தஞ்சாவூரில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஈழத் தமிழர்களுக்கும், ஈழ இனப்படுகொலைக்கு எதிராகவும் உரத்துக் குரல் கொடுத்து வரும் முதல்வர் ஜெயலலிதாதான் இந்த முற்றத்தைத் திறந்து வைக்கப் பொருத்தமானவர் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருவதால் முதல்வரை வைத்தே இதைத் திறக்கலாம் என்ற கருத்து வலுப்பட்டு வருகிறதாம்.தஞ்சை அருகே உள்ள விளார் கிராமத்தில் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அர்ஜுனன் தபசு சிலை போல, இந்த முற்றத்திலும், ஒரே கல்லில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை சிற்பமாக வடித்துள்ளனர்.முள்ளிவ…

  16. சுமார் 1900 வருடங்கள் அகதிகளாக, அடிமைகளாக உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து வந்த யூத இன மக்களால் தங்களுக்கென்று ஒரு தேசத்தை எவ்வாறு அமைத்துக்கொள்ள முடிந்தது? தமது விடுதலையை இஸ்ரேலியர்கள் எவ்வாறு பெற்றுக்கொண்டார்கள்? தமது விடுதலைக்காக அவர்கள் அமைத்த வியூகங்கள் என்ன? அவர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் என்ன? – இவை பற்றித்தான் இந்தத் தொடரில் நாம் விரிவாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். இஸ்ரேல் தேசம் என்பது இஸ்ரேலியர்களை மிக மோசமாக விரோதிக்கின்ற அரபு நாடுகளை அயல்நாடுகளாகக் கொண்டுள்ளது. எகிப்து, யோர்தான், லெபனான், சிரியா என்று இஸ்ரேலை விழுங்கி ஏப்பமிட்டுவிடத் துடிக்கும் நாடுகளை தனது அயல் நாடுகளாகக் கொண்டு, எந்த நேரத்திலும் ஆபத்துக்களை எதிர்கொண்டபடி இருக்கின்ற ஒரு தேசம்தான் இஸ்ரேல்…

  17. செப்டம்பர் 11 என்றாலே ஊடகங்கள் நம் மீது திணித்து வைத்திருப்பது அமெரிக்க வர்த்தக கட்டட இடிப்பு நிகழ்ச்சிதான் அது குறித்தான ஒப்பாரி இன்னும் ஓயவில்லை ! அமெரிக்கா வணிக நோக்கிற்காக அது உலகெங்கும் நடத்தியிருக்கிற வன்முறை சிந்திய குருதி கொலைகள் ஆகியன அந்த செவிட்டு ஊடகங்களின் காதுகளை திறந்ததாக தெரியவில்லை. அதே செப்டம்பர் 11 1973 ல் சிலி நாட்டில் அமெரிக்கா 3000 பேரை கொன்று குவித்து அந்நாட்டின் அதிபரையும் கொன்று தன் ஆட்சியை அங்கு நிறுவ முயன்றது. ///////// சல்வதோர் அலாண்டே 1908 ஆம் ஆண்டு ஜூன் 26 ல் பிறந்தார். வசதியான குடும்பம் மருத்துவப்படிப்பு முடித்திருந்தார்.. சோசலிசக் கட்சியை ஆதரித்தார். சின்னசின்ன பதவிகளில் இருந்தார். நலத்துறை அமைச்சராக இருந்தார் மூன்று ம…

  18. புரட்சி என்பது பிறப்பில் கருவாவதில்லை. ஒரு மனிதனின் வாழ் காலத்தில் அவனை சுற்றி நிகழும் தான் சார்ந்த சமூகத்தின் மீது கட்டவிழ்க்கப் படும் ஒடுக்குமுறைகள் கண்டு வெகுண்டு எழுந்து வெடிப்பதே புரட்சி. தமிழீழ மண்ணில் தொடர்ந்து வரும் இன அழிப்பு அவலங்களைப் போக்க காலத்துக்குக் காலம் பலர் தமது இன்னுயிர்களை ஈகம் செய்து மாவீரர்களாகவும் நாட்டுப் பற்றாளர்களாகவும் விடுதலை விரும்பிகளாகவும் இன உணர்வாளர்களாகவும் ஈகையாளர்களாகவும் விடுதலை தீ வளர்க்க ஆகுதியாக்கி உள்ளனர். அந்த வரிசையில் செந்தில் குமரன் என்ற ஈகைப்போராளியும் எம் இனத்தின் இருள் களையத் தன்னை எரித்து விடுதலை நெருப்பிற்கு நெய் வார்த்துள்ளார். செப்டம்பர் 5ம் நாள் ஐ.நா முன்றலில் வீரத்தமிழ் மகன் ஈகைப்போராளி செந்தில்குமரன் அவர்கள் தமிழி…

  19. நெஞ்சு கனக்கிறது. இன விடுதலைக்காக உயிர்களை அர்ப்பணித்த தமிழினம், இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக நீதி கேட்டும் தங்கள் உயிர்களை அர்ப்பணிக்க வேண்டிய நிலைக்குள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றது. ஜெனீவாவில் மீண்டுமொருமுறை தமிழினம் தீக்குளித்திருக்கின்றது. 2009ம் ஆண்டு தமிழினப்படுகொலை மிக மோசமாக அதிகரித்துக்கொண்டிருந்த நிலையில் அதனைத் தடுத்து நிறுத்துமாறு கோரி ஐ.நா. மனித உரிமைகள் முன்றலில் முருகதாசன் என்ற இளைஞன் தீக்குளித்து அந்த இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தவதற்கு முயன்றான். இப்போது தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக நீதி கேட்டு இன்னொரு இளைஞன் தன்னை தீக்கிரையாக்கியிருக்கின்றான். இது ஒரு இளைஞனின் தீக்குளிப்பல்ல, ஒட்டுமொத்த தமிழினத்தின் வலி சுமந்த பக்கவிளைவு. ஐ.நா. மனித உ…

  20. ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 24ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகி உள்ள நிலையில் ஜெனிவா ஐ.நா.முன்றலில் ஈழத்தமிழர்கள் மீது சிறிலங்கா அரசு நடத்திய இனப்படுகொலையை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. லோகநாதன் மருதையாவினால் சேகரிக்கப்பட்ட புகைப்படங்களின் காட்சி எதிர்வரும் 15ஆம் திகதி வரையும் அதன் பின்னர் 23ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரையிலும் இடம்பெறும் என என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் புகைப்படங்களும் விமான குண்டு வீச்சினால் கொல்லப்பட்ட சடலங்களின் காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இனப்படுகொலையை விபரிக்கும் இப்புகைப்படங்களை ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்…

  21. ஈழத்தமிழர்களின் விடியலுக்காக தீயினில் தன்னையே ஆகுதியாக்கிய வீரத்தமிழ் மகன் இரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்களின் நினைவு சுமந்த வணக்க ஒன்றுகூடல் 09.09.2013 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 15:00 மணி nhதடக்கம் 17:30 மணி வரை ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் அமைந்துள்ள முருகதாசன் திடலில் நடைபெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் குறுகிய கால ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் சுவிசின் பல பாகங்களிலிருந்தும் கனத்த இதயங்களுடன் மக்கள் கலந்துகொண்டு வீரத்தமிழ்மகன் செந்தில்குமரன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி சுடரேற்றி வணக்கம் செலுத்தினர். ஈகைப்பேரொளி செந்தில்குமரனுக்குரிய ஈகைச்சுடரினையும், மலர்மாலையையும் அவரது தந்தை அணிவித்து வணக்க ஒன்றுகூடலை ஆரம்பித்து வைத்…

  22. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சிறீலங்காவுக்கான விஜயம் நிறை வடைந்திருக்கின்றது. போர் நிறைவடைந்த பின்னரும் நித்தம் கண்ணீருடன் அம்மையாரின் வருகையினையும், வார்த்தைகளையும் எதிர்பார்த்து காத்திருந்த தமிழர்களின் முகங்கள் மிதிக்கப்பட்டிருக்கின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான விஜயத்தின் நிறைவில் அம்மையார் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். குறித்த சந்திப்பும், அங்கே பேசப்பட்ட வார்த்தைகளும் எங்கள் கன்னங்களில் காய்ந்திருந்த கண்ணீர் தடங்களை அழிக்க தவறியிருக்கின்றன என்பதே யதார்த்தம். ‘வடக்கு, கிழக்கு மாகாணங்களில் என்னைச் சந்தித்த மக்கள் காவல்துறையினர் என அடையாளப்படுத்திக் கொண்ட சிலரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இது ஆரோக்கியமானதல்ல’ என அம்மையார் அந்த…

  23. மானுட இனத்தின் நம்பிக்கையாகத் திகழ்ந்த சோவியத் யூனியனின் ராதுகா பதிப்பக வெளியீடுகளில் 'அனிமல் புக்' குறிப்பிடத்தக்கது. மிருகங்களின் அழகான ஓவியங்கள் கவிதை வடிவில் அவற்றைப்பற்றிய குறிப்புகள் அடங்கிய அற்புதத் தொகுப்பு. ஓநாய்க்கு அதில் இரண்டுபக்கம் ஒதுக்கப்பட்டிருந்தது. தோட்டத்தை நெருங்குகிறது ஓநாய். கால் நடைகள் பதறுகின்றன. தோட்டத்தில் நுழைகிறது ஓநாய். முயல்கள் பதுங்குகின்றன.......... ................................................................... தோட்டக் காரன் துப்பாக்கியை எடுக்கிறான். இப்போது ஓநாய் நடுங்குகிறது. தோட்டக்காரன் குறிபார்க்கிறான். ஓநாய் பதுங்குகிறது.......................... என்று கவிதை மாதிரி எழுதப்பட்டிருந்தது அந்தப் புத்தகத்தில். (நினைவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.