நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
வீரத்தமிழ்த் திராவிடன் இராவணனை சிங்கள பிக்குகள் கொண்டாட புறப்படுவது ஏனோ ? இலங்கையை மையமாகக் கொண்டு ராவணன் ஆட்சி செய்வான் என கொழும்பு ஊடகமொன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இராவணன் யார் சிங்களவனா ? கற்பனை கதையாகவும் உண்மை எனவும் விவாதிக்கப்பட்டு வரும் இராமாயணக் கதையில் மிகுந்த சிவ பக்தனாக சித்தரிக்கப்படும் இராவணன் பற்றிய விழிப்புணர்வு இலங்கையில் ஏற்படத் தொடங்கியுள்ளது. சிவ பெருமானை நோக்கி கடுந் தவம் செய்து பல்வேறு வரங்களைப் பெற்றுக் கொண்ட இராவணன் பற்றி சிங்கள பௌத்த அமைப்புக்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இராவணன் மயக்க நிலையில் இருப்பதாகவும், அவனது இராஜ்ஜியம் புதையுண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்…
-
- 0 replies
- 527 views
-
-
இவர்களது இனப் பற்று தமிழர்களுக்கு வருமா? இலங்கையில் வட மாகாணத்தில் அகதிகளாக இருக்கின்ற சிங்களக் குடும்பங்களுக்கு உதவும் நோக்கோடு இலண்டனில் நட்புத்துவ ஒன்றுகூடலொன்று இடம்பெற்றது. பிரித்தானியாவின் இலங்கை வட்டம், கிழக்கு இலண்டனின் சிங்கள நலனோம்புச் சங்கம் மற்றும் இதமான உள்ளங்களின் அமைப்பு எனும் மூன்று அமைப்புக்களும் ஒன்றிணைந்து சேர்த்த பணம், தற்போது வட மாகாணத்தில் அகதிகளாக இருக்கின்ற சிங்களக் குடும்பங்களுக்கு வீடு மற்றும் ஏனைய தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக அமைப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். சிறுமி மராயா அல்மேதாவின் இரம்மியமான நடனத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. இலங்கையின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாப்பதற்காக தம்முயிரைப் பணயம்வைத்துப் போராட…
-
- 5 replies
- 638 views
-
-
“எமது பிரச்சினைக்கு மாகாணசபை என்பது தீர்வாகவோ அல்லது ஆரம்பப் புள்ளியாகவோ இருக்க முடியாது. “எமது பிரச்சினைக்கு மாகாணசபை என்பது தீர்வாகவோ அல்லது ஆரம்பப் புள்ளியாகவோ இருக்க முடியாதென்பதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெளிவாகவுள்ளதாக அதன் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். ஆனால் கூட்டமைப்பு குறிப்பாக அதன் தலைவர் இரா.சம்பந்தன் 26 வருடங்களுக்கு முன்னதாக நிராகரித்த அதே மாகாணசபையினை இப்போது தூக்கிக் கொண்டாடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். யாழ். ஊடக அமையத்தினில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் மிக முக்கியமாக எம்மைப் பொறுத்தவரையில் தமிழ்தேசத்திற்கு தெரிந்திருக்க வேண்டிய சம்பவம் ஒன்றுள்ளது. இச்சம்பவம் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க…
-
- 0 replies
- 340 views
-
-
முதல் பாகம் படிப்பதற்கு இங்கே சொடுக்கவும் கி.மு.1000 ஆண்டை ஒட்டி மைய ஐரோப்பாவிலும், வட இத்தாலியிலும் வழங்கி வந்த மொழி எத்ருஸ்கன் ஆகும். அப்போது அங்குஇலத்தீன் மொழியும் கிடையாது. கிரேக்க மொழியும் கிடையாது. கிரேக்கர்களும் இலத்தீனியர்களும் குடியேறியவர்களே! எங்கிருந்துகுடியேறினர் என்பது இன்னும் அறுதியிடப்படாத ஆராய்ச்சியாகவே உள்ளது. கிரீட் தீவு என்பவர் பலர். எத்ருஸ்கன் மொழியோஇந்த இரண்டைக் காட்டிலும் பழமையானதாக ஆனால் இந்த இரண்டு மொழிகளுக்கும் தொடர்பற்றதாக இருந்தது. எனினும்திருவிட மொழியோடு எத்ருஸ்கன் மொழிக்குத் தொடர்பு இருக்கிறது. ஐரோப்பாவில் திருவிடமொழி எங்ஙனம் முளைத்தது? (1) திருவிடர்கள் குமரிக்கண்ட மக்கள். குமரிக்கண்டம் சிதையும்போது திருவிட மக்கள் உலகெங்கும் குடியேற…
-
- 1 reply
- 1.3k views
-
-
மனதை விட்டகலாத மாமேதை! மாமனிதர் பேராசிரியர் துரைராசா அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும் யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, யாழ்ப்பாணச் சராசரி மனிதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தவர் பேராசிரியர் துரைராஜா. இளமையில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் கல்விகற்று பின் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கணிதம் கற்று பல்கலைக்கழகத்திற்கு முதல் மாணவனாகத் தெரிவாகி பொறியி யல் விஞ்ஞானப் பட்டம் பெற்று பின் பிரித்தானியாவில் கலாநிதிப்பட்டம் பெற்றவர். பேராதனைப் பல்கலைக் கழ கத்தில் விரிவுரையாளராக, பேராசிரிய ராக, பீடாதிபதியாக சேவையாற்றி யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றிய எமது பேராசிரி யரை இத்தினத்தில் நினைவு கூர்வது சாலப் பொருந்தும். …
-
- 2 replies
- 739 views
-
-
-
இன்று பிரித்தானியாவில் Cardiff எனும் இடத்தில் நியூசிலாந்து அணிக்கும் சிறிலங்கா அணிக்கும் இடையில் துடுப்பாட்டம் நடைபெற்றது. இப் போட்டியில் பங்குபற்றிய சிறிலங்கா அணியினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்ட சில இளையோர்களே கலங்கு கொண்டு தங்கள் எதிர்ப்பினைத் தெரிவிதனர். கடந்த முறை நடைபெற்ற இது மாதிரி போராட்டங்களில் பல தமிழர்கள் கலந்துகொண்டு எதிர்ப்பினைத் தெரிவித்த பொழுது அங்கு வந்த சிறிலங்கா அணிக்கு ஆதரவானவர்கள் பயத்துடன் எதுவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மைதானத்திற்கு சென்றனர்.ஆனால் இம்முறை குறைந்த அளவு எண்ணிக்கை இளையோர்களே கலந்து கொண்டமையால் அங்கு வந்த சிறிலங்கா அணி ஆதரவாளர்கள் எதிர்ப்புப் போராட்டம் செய்த எம் இளையோர்களின் முகத்திற்கு முன்…
-
- 0 replies
- 449 views
-
-
http://vannimedia.com/site/news_detail/15737
-
- 6 replies
- 586 views
-
-
இந்தியப் பிரதமரை "வணக்கம்' தெரிவிக்க வைத்த ஜப்பான் தமிழறிஞர் நொபுரூ கராஷிமா. ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரூ கராஷிமாவுக்கு, டோக்கியோ நகரத்தில் இந்தியப் பிரதமர் "பத்மஸ்ரீ' விருது வழங்கினார். தமிழை நேசிக்கும் அந்த ஜப்பானியர், தள்ளாத வயதில் சக்கர நாற்காலியில் மேடைக்கு அழைத்து வரப்பட்டபோது, இருகரம் கூப்பி "வணக்கம்' என்று சொன்னதும், பிரதமர் சிரித்துக்கொண்டே அவருக்குத் தமிழில் "வணக்கம்' தெரிவித்ததும் நெகிழ்ச்சியான நிமிடங்கள். இந்தியப் பிரதமரை அந்நிய மண்ணில் "வணக்கம்' தெரிவிக்க வைத்தமைக்கே, அந்த மாமனிதருக்கு நாம் ஆயிரம் வணக்கங்கள் தெரிவிக்கலாம். கைதட்டலுக்கு இடையே தனக்கு வழங்கப்பட்ட "பத்மஸ்ரீ' விருதைப் பெற்றுக்கொண்ட நொபுரூ கராஷிமா, "நன்றி' என்று நல்ல தமிழில் கூறியபோது மீண்டும…
-
- 1 reply
- 886 views
-
-
இலங்கையில் கட்டுக் கதைக்கும் வரலாற்றுக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு அருவமானது; ஆபத்தானது. இலங்கை அரசியலில் இந்த மர்மக்கதையுலகு தீர்க்கமான பங்குவகித்து வருகிறது. ஓர் இந்திய ஆரிய இளவரசி ஒரு சிங்கத்துடன் கூடிவாழ்கையில் உதித்த இனத்தைச் சேர்ந்தவர்களே சிங்களவர்கள் என்று சிங்கள மாணவர்களுக்கு புகட்டப்பட்டு வருகிறது. கதை படிக்கும் வேளையில் அல்ல, வரலாறு படிக்கும் வேளையிலேயே இந்தக் கதையை அவர்கள் படிக்கிறார்கள். இந்தச் சிங்கக் கதை ஒரு மகாவம்சக் கதை. பெரும்பாலான சிங்கள - பௌத்த மக்கள் அதை ஒரு வரலாற்று நூலாகவும், புனிதப் பாடமாகவும் போற்றி வருகிறார்கள். அந்தச் சிங்க -இளவரசி தம்பதிகளின் பேரனையே சிங்கள இனத்தின் மூலகர்த்தாவாக மகாவம்சம் ஏற்றிப்போற்றுகிறது. “அவன் (விஜயன்) தீய நடத்தை கொண்டவன்” …
-
- 0 replies
- 559 views
-
-
சீனமயமாகும் இலங்கையின் பொருளாதாரம் - இதயச்சந்திரன் மாற்றுச் சிந்தனைகளையும் அதற்கான செயற்பாட்டு வழிமுறைகளையும் இலங்கை அரசு ஏராளமாக வைத்துள்ளது. விடுதலைப்புலிகள் உடனான யுத்தம் முடியும் வரை, 'பயங்கரவாதத்திற்கெதிரான போர்' என்கிற அமெரிக்கப்பொது மொழி ஊடாக எல்லா நாடுகளையும் முரண்பாடுகளின்றி தன் பின்னால் அணிதிரள வைத்தது. யுத்தம் முடிந்தவுடன் பிரச்சினைகள் ஆரம்பமாகின. அமெரிக்கத் தீர்மானம், 'சீபா' ஒப்பந்தச் சிக்கல் என்று பல கோணங்களில் இன்று பிரச்சினைகளை இலங்கை எதிர்கொள்கிறது. இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் முதலீடே இப்பிரச்சினைகளுக்கான முக்கிய காரணியென நம்பப்படுகிறது. இது கலப்படமற்ற, புனைவுகளற்ற யதார்த்தம். தம் மீது அழுத்தங்களைக் கொடுக்கவரும் யானைகளின் மணி ஓச…
-
- 0 replies
- 1.2k views
-
-
பொன்.சிவகுமாரன் பதியப்படாத உண்மை! அந்தநாளுக்கு முந்தையபொழுதில் அதைப்போன்றஒரு காட்சியை தமிழீழம் பார்த்துஅறிந்து இருக்கவில்லை.மிகவும் உணர்ச்சிநிறைந்த ஒரு இறுதிநிகழ்வு அதற்குமுன்னர் நடந்ததில்லை. தமிழீழவிடுதலைக்கான போராட்டம் மெதுமெதுவாக ஆயுதப்போராட்டத்தைநோக்கி நகர்ந்துகொண்டிருந்த அந்த ஆரம்பபொழுதில் சிவகுமாரன் என்ற ஆயுதபோராட்டவீரனுக்கு தமிழ்மக்கள் கொடுத்த திரளான இறுதிவழிஅனுப்புநிகழ்வானது அப்போது தமிழீழவிடுதலைக்கான ஆயுதபோராட் டுத்தில் நின்றுகொண்டிருந்தவர்களுக்கும் அதற்குப்பின்னர் போராட்டகளத்துக்கு வுந்தவர்களுக்கும் மிகப்பெரிய உந்துதலைக்கொடுத்தது. பொன்.சிவகுமாரன் தான்வாழும்போதும் தமிழீழவிடுதலையை முன்னகர்த்த ஓயாது பாடுபட்டதுபோலவே தன் மரணத்தின்போதும் விடுதலைப்போராட்…
-
- 11 replies
- 869 views
-
-
ஈழமக்களை நம்பவைத்து புலித்தலைவர் ஏமாற்றினாரா!! நிரூபன் பதிவுக்கு பதில் ஈழமக்களை நம்பவைத்து ஏமாற்றிய புலித்தலைவர் என்கிற ஓர் பதிவு அண்மையில் தமிழ்மணத்தில் கண்ணில் பட்டது. இலங்கைப்பதிவர் நிருபனால் எழுதப்பட்டது. சரி, இப்படி ஈழம் தொடர்பாக எத்தனையோ எழுத்துகளை, மாற்றுக்கருத்துக்களைத் தான் அடிக்கடி படிக்கிறோமே என்று விட்டுத்தள்ளிவிட்டுப் போகலாம் என்று தான் நினைத்தேன். ஏனோ மனம் ஒப்புக்கொள்ளவில்லை. ஈழம் பற்றி பதிவுலகம் முதல் அல்ஜசீரா, அமெரிக்க சி.என்.என்., பி.பி.சி. வரை தொடங்கி உலகின் முன்னணிப் பத்திரிகைகள், ஆய்வுக்கட்டுரைகள் படிப்பதென்பது தமிழனின் தலையெழுத்து என்று ஆகிவிட்டது. படிப்பதோடு நிற்பதில்லை. எந்தவொரு ஊடகமானாலும் ஈழம் என்று வந்தால் ஜனநாயக கருத்து …
-
- 0 replies
- 780 views
-
-
நான் நேற்று “Jesus on the cross talk tamil ” என்ற you tube காணொளியை காண நேரிட்டது. அந்த காணொளி நந்தலாலாவில் முன்பு வெளிவந்த “: இருண்ட வாழ்க்கையினுள்ளே” என்ற பதிவில் குறிப்பிட்ட செய்திகளை உள்ளடக்கியிருந்தாலும், கூடுதலாக இயேசு தமிழ் மொழி பேசினார் என்ற ஆச்சரியத்துள்ளாக்கும் செய்தியையும் பதிவு செய்துள்ளது. இயேசு மூன்று மொழிகளை பேசியிருந்தார் என்றும், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கிரேக்க மொழியிலும், பொது மக்களிடம் அராமிக் மொழியிலும், கடவுளிடம் தமிழ் மொழியில் பேசினார் போன்ற கருத்துகளை காணொளி பதிவு செய்துள்ளது. இயேசு கடைசியாக பேசிய ” Eloi, Eloi, Lama Sabacthani” என்ற வாக்கியம் தமிழ் என்றும், அதன் பொருளையும, உருமாற்றையும் குறிப்பிட்டுள்ளார்கள். காணொளியின் கருத்து உண்மை, …
-
- 8 replies
- 15.9k views
-
-
பாலஸ்தீனியர்கள் அன்றுவிட்ட தவறை தமிழ் மக்கள் இன்று விடக்கூடாது - பி.ஏ.காதர் பலஸ்தீனியர்களின் அனுபவம்: ஐ.நா. யூன் 1946 முதல் மே 1948 வரையிலான காலப்பகுதியில் பலஸ்தீனத்தில் வாழ்ந்து அதன் பின்னர் வெளியேற்றப்பட்டவர்களை பலஸ்தீன அகதிகள் என அழைக்கிறது. 1947ல் பலஸ்தீன பிரிவினையை ஐ.நா. அங்கீகரித்த பின்னர் தொடங்கிய பலஸ்தீனப் படுகொலைகளை அடுத்து குறிப்பாக 1948 இஸ்ரேல் - அராபு யுத்தத்தை தொடர்ந்து 85 வீதமான பலஸ்தீனயர்கள் தமது நாட்டை விட்டு வெளியேறினர். ஐ.நா.வின் உத்தியோகபூர்வமான புள்ளிவிபரப்படி பலஸ்தீனயர்களின் மொத்த சனத் தொகையில் 30 சத வீதமான மக்கள் - அதாவது 4,966,700 பேர் - தற்போது ஜோர்தானிலும் (1,979,580 பேர்) லெபனானிலும் (436,154 பேர்) சிரியாவிலும் (486,946) காசாவிலும்…
-
- 0 replies
- 602 views
-
-
http://www.youtube.com/watch?v=DrAa73BWK6Q&feature=youtu.be (facebook)
-
- 1 reply
- 830 views
-
-
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=v_gWGYpbB74#! https://www.youtube.com/watch?v=3HVoa9HEHIw https://www.youtube.com/watch?feature=player_embedded&v=v_gWGYpbB74#!
-
- 0 replies
- 432 views
-
-
இந்தியப்படை மீது போர்க்குற்ற விசாரணை வருமா..? இந்திய அமைதிப் படை இலங்கையில் தமிழர்கள் மீது நடாத்தியதும் சர்வதேச போர்க்குற்றச் செயல்தான் என்ற கோணத்தில் விசாரணைகள் உலக மன்றில் இன்னமும் ஆரம்பமாகவில்லை. இப்போது இந்தியப் படைக்கு தரக்குறைவான உணவு வழங்கியதால் இருவர் தண்டிக்கப்பட்டுள்ளார்கள், இதுபோல இந்தியப் படை செய்த தரக்குறைவான செயல்களுக்கு யார் தண்டனை வழங்குவது என்ற கேள்வி பதிலின்றிக் கிடக்கிறது. இந்த வழக்கு மேலும் விரிவுபடுத்தப்பட்டு இந்தியப் படைகள் செய்த குற்றச் செயல்களும் விசாரிக்கப்படும் நிலை வருமா என்பது ஆதங்கமாக உள்ளது. தரக்குறைவான உணவுக்கு மட்டும் தண்டனை வழங்கினால் போதுமா..? இது குறித்த செய்தி : எண்பதுகளின் பிற்பகுதியில் இலங்கையில் நிலைகொண்டிருந்…
-
- 0 replies
- 434 views
-
-
இந்த ஊரில் இதுதானே முதல் தடவை.. விசயமாக்காதேங்கோ… விட்டுவிடுங்கோ... ஒரு ஊரில் ஒரு சம்பவம். பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு நித்தமும் செல்லும் பாதை வழியே ஒரு சிறுமி நடந்து செல்கிறாள். எதிரே வக்கிர எண்ணங்களைக் கொண்ட மனித மிருகம் ஒன்று அவளை வழி மறித்து காட்டுக்குள் அழைத்துச் செல்கிறது. தனது காமப் பசி அடங்கும் வரை அப்பிஞ்சினை கதறக்கதற வன்புணர்வு செய்த பின் குற்றுயிருடன் இரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டுவிட்டு செல்கின்றது. காமப்பசிக்கு இரையாகி சிதைத்த நிலையில் பற்றைக்குள் வீசப்பட்டிருந்த பாலகியின் முனகல் சத்தம் கேட்ட ஊரவர்கள் அவளை மீட்டெடுத்து வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு உயிருக்காக போராடிக் கொண்டிருந்த அப்பிஞ்சு காப்பாற்றப்பட்டது. இக்கொடூர செயலைச் செய்தவனைக் கைது …
-
- 14 replies
- 945 views
-
-
-
- 0 replies
- 577 views
-
-
ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு 'எதிராக' அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஒட்டி ஈழப்பிரச்சினை தமிழக அரசியல் அரங்கின் முன்களத்திற்கு மீண்டும் வந்திருக்கிறது. தேர்தல் அரசியலில் உள்ள கட்சிகள், இல்லாத அமைப்புகள், மாணவர்கள் என்று பல்வெறு தரப்பினரும் பேசியோ, போராடியோ வருகின்றனர். அங்ஙனம் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இலங்கை அரசை ஏதாவது செய்ய முடியுமா என்று முனைகின்றனர். இது தொடர்பாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் அளித்த நேர்காணலை இங்கே வெளியிடுகின்றோம்.
-
- 0 replies
- 848 views
-
-
-
இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 4 பேர் ''கைட் போட்'' யை பயண்படுத்தி கடல் மார்க்கமாக முதல் முதலாக இன்று செவ்வாய்க்கிழமை மதியம் தலைமன்னார் கடற்பரப்பை வந்தடைந்துள்ளனர். சுவிஸ்லாந்தைச் சேர்ந்த குறித்த நான்கு பேரும் இந்தியாவிங்குச் சென்ற நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் இந்தியா தனுஸ்கோடி கடற்கரையில் இருந்து ''கைட் போட்'' யை பயண்படுத்தி தலைமன்னாரை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்தனர். இவர்களுடைய கடல் மார்க்கமான பயணத்திற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியை வழங்கி இருந்தது. மதியம் 12.30 மணியளவில் தலைமன்னார் கடற்கரையை வந்தடைந்தனர்.இவர்கள் தலைமன்னாருக்கு வருவதற்காண சகல ஏற்பாடுகளையும் எழிமன்ஸ் அமைப்பின் முகாமையாளர் ஜெரோம் பெணாண்டஸ் மேற்கொண்டிருந்…
-
- 0 replies
- 520 views
-
-
இலங்கைத்தீவின் வழமையான அரசியல் கூச்சல்கள், குழப்பங்களை சற்றுப் புறந்தள்ளிவிட்டு அந்தத்தீவை சற்று உற்றுநோக்கினால் ஆகக் குறைந்தது இரண்டு விடயங்களை நீங்கள் சமகாலத்தில் அவதானிக்கலாம். http://tamilworldtoday.com/?p=12277
-
- 0 replies
- 461 views
-
-
Voice UK எனும் ஒரு போட்டி, BBC 1 TV யில் சனி இரவுகளில் நடக்கின்றது. திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டும் இந்திய, குறிப்பாக திரை உலக பின்னணிப் பாடகர்கள் தகுந்த பயிற்சியுடன் மேற்குலகில் புகுந்தால் வெல்ல முடியும் என்பது நீண்ட காலமாக எனக்குள்ள வித்தியாசமான எண்ணம். A R Rahman ஆஸ்கார் வென்றபோது இது இன்னும் தீவிரமானது. Voice UK போட்டியில்அபி சம்பநதர் (Abi Sampa) (Abi Gnanasampanthan) எனும் UK வாழ், பல் மருத்துவரான தமிழ் பெண், அற்புதமாக, தென் இந்திய ராகங்களை முறையாகக் கற்று, அந்த ராகங்களுடன் (அற்புதமாக ஆலாபனை செய்து) மேற்குலக பாடல்களையும் சிறப்பாக பாடி எதிராளிகளை திணறடிகின்றார். இன்றும் வென்ற அவர் மேலும் முன்னேறுவார் என எதிர் பார்கின்றேன். அவரது முக நூல் பக்கம்…
-
- 4 replies
- 1.2k views
-