Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜிரோமன் கிமுரா - பிறந்த நாள் 19-04-1897 http://www.youtube.com/watch?v=ed_xWgbbEqM

    • 0 replies
    • 637 views
  2. நாவலடியில் உள்ள நினைவு மண்டபம் கிழக்கு மாவட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு என மாவட்டங்கள் இருந்த நிலையில், சிங்களக் குடியேற்றத்தினால் மேலும் ஒரு மாவட்டமாக அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டு, சிங்களப் பெயர் வைத்து, “திகாடுமல்லை’ என்ற நாடாளுமன்றத் தொகுதியாக உருப்பெற்றது. இந்த மட்டக்களப்பு மாவட்டம் தமிழீழப் பகுதியின் நெற்களஞ்சியமாகும். இம்மாவட்டத்தில் அமைதிப்படை 1988 ஜனவரி 2-இல் பெரியதொரு அளவில் தனது தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. இந்தத் தேடுதல் வேட்டையில் புலிகள் என்று கூறி 2500 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அழைத்துப் போகப்பட்டார்கள். இவர்களில் 800 பேர் காங்கேயன்துறை முகாமில் அடைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ளோர் விவரம் அறியக் கிடைக்கவில்லை. இவர்களில் விடுதலையானவர்கள் வெகு…

  3. ஈழத்தமிழரின் அரசியல் தீர்வுப் பிரச்சினைக்கு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்த்தம் தேவையில்லை என அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்திருக்கின்றார். இந்த விடயம் ஈழத்திலும் சரி புலத்திலும் சரி எந்தவிதமான அதிரிவலைகளையும் உருவாக்கி விட்டிருக்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. இதற்கு காரணம் சரியான புரிதல் இல்லையா? அல்லது ஜயா சம்மந்தர் மீதான அபரிமிதமான நம்பிக்கையா? என்று எமக்கு நிச்சயமாகப் புரியவில்லை. கூட்டமைப்பின் குழறுபடிகள் தமிழர்களுக்கு இன்று புரிந்திருக்கின்றது. எனவே மீண்டும் மீண்டும் அவர்கள் தொடர்பாகவே பேசிக்கொண்டு காலத்தை நீட்டிக்கவோ, அல்லது எம்மை அவர்களின் எதிராளிகளாக காட்டிக் கொள்ளவோ எமக்கு கட்டாயம் கிடையாது. இதில் இன்னொரு பக்கமும் உள்ளது. அதாவ…

    • 1 reply
    • 584 views
  4. ‘இந்தியா - சிறீலங்கா சதுரங்க ஆட்டத்தில் தமிழர்கள் மீண்டும் பகடைக் காய்களா?’ என கடந்த இதழில், இந்திய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணம் குறித்து எமது சந்தேகத்தை எழுப்பியிருந்தோம். காரணம், ஜெனீவாவில் அமெரிக்கப் பிரேரணையை ஆதரித்து இந்தியா வாக்களித்ததன் பின்னர், இந்தியாவின் வருகையாளர்களை வேண்டத்தகாதவர்களாகவே சிறீலங்கா நோக்கும் நிலை இருந்தது. அவ்வாறான கருத்துக்கள் தான் சிறீலங்கா உயர்மட்டத் தலைவர்களின் குரல்களிலும் ஒலித்தது. ஆனால், மாறாக இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் வருகையை சிறீலங்காவின் ஆட்சியாளர்கள் (தீவிர இனவாதிகளைத்தவிர) மகிழ்ச்சியுடன் வரவேற்க முனைந்தது மட்டுமல்ல, தற்போதைய காலகட்டத்தில் இந்தியக் குழுவினரின் இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக…

  5. 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம், 22ம் திகதிகளில் யாழ் போதனா வைத்தியசாலையில் இந்தியப் படையினர் ஆடியிருந்த கோரதாண்டவத்தில், வைத்தியர்கள், தாதிகள், வைத்தியமனைப் பணியாளர்கள் மற்றும் நோயாளர்கள் என்று நூற்றிற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள். யாழ் வைத்தியசாலையின் வரலாற்றிலும், ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றிலும் இலகுவில் மறக்கப்பட முடியாத இந்த நிகழ்வு பற்றிப் பல ஆவணப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டாலும், முறிந்தபனை, அக்கினிக் கரங்கள் என்ற உண்மைச் சம்பவங்களின் தொகுப்புக்கள், யாழ் வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவங்களின் பரிமானத்தை வெகு அழகாக எடுத்துரைக்கின்றன. குறிப்பாக நாவண்ணன் எழுதிய அக்கினிக் கரங்கள் என்ற ஆவணத்தொகுப்பு, யாழ் வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவங்களை மிகவும் உ…

  6. முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளாகி விட்டன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டு, புலிகள் இயக்கத்தின் இராணுவ வல்லாண்மை முற்றாகவே அழிக்கப்பட்டு விட்டதாக, 2009 மே மாதம் அரசாங்கம் பிரகடனம் செய்தது. ஆனால், இன்று வரை, புலிகளை வைத்து பூச்சாண்டி காட்டும் பழக்கத்தில் இருந்து மட்டும் அரசாங்கத்தினால் விடுபட முடியவில்லை. எதற்கெடுத்தாலும் புலிகள் என்று குற்றஞ்சாட்டும் கடந்த முப்பதாண்டு காலபழக்க தோஷத்தில் இருந்து புலிகளால் ஏற்பட்ட காய்ச்சலில் இருந்து – அரசாங்கம் இன்னும் மீளவில்லை. மனிதஉரிமைகள் பற்றிப் பேசினால், உடனடியாக அவர்களுக்குப் புலிகள் நிதி வழங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படும். அரசுக்கு எதிரான ஏதாவது…

  7. சர்வதேச நெருக்கடிகளிலிருந்து தன்னைப் பாதுகாப்பதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் துடித்துக்கொண்டிருக்கும் சிங்கள அரசாங்கம் வழமைபோன்று இம்முறையும் தனது புலிப் பூச்சாண்டி காட்டும் வேலையை முன்னெடுத்திருக்கிறது. இந்தியாவின் இரகசிய முகாம்களில் பயிற்சி பெற்ற 150 புலி உறுப்பினர்கள் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளனர் என்று கதையைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம் உலகின் பார்வையைத் தன் பக்கம் திருப்ப முயன்ற சிறீலங்கா அரசு இதிலும் தோல்வி கண்டிருக்கிறது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து சிறீலங்கா அரசு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு இராஜதந்திர நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றது. சிங்கள மக்கள் மத்தியிலும் மகிந்…

  8. இன்று டைட்டானிக் கப்பல் சம்பவத்தின் நூற்றாண்டு டைட்டானிக் கப்பல் கடலில் விபத்திற்குள்ளானதன் நூற்றாண்டு விழா ‌அணுசரிக்கப்பட்டது. கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி லண்டனில் செளதம்டான் துறைமுகத்திலிருந்து நியூயார்க் நோக்கி புறப்பட்ட டைட்டானிக் கப்பல் ஏப்ரல் 15-ம் தேதி நள்ளிரவில் அண்டிகார்கா கடலின் பனிப்பாறையில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 1200-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். அந்த கோர விபத்து நடந்ததன் நூற்றாண்டு விழா இன்று அணுசரிக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் கடந்த 11-ம் தேதி எம்.எஸ். பால்மோரல் என்ற கப்பல் டைட்டானிக் கப்பல் அதே லண்டன் செளதம்டான் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு டைட்டானிக் பயணித்த பாதையில் சென்றுள்ளது. நாளை அஞ்சலி செலுத்துகின்றனர். கடந்த…

  9. பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் - சென்னை புத்தக வெளியீட்டில் திரு நெடுமாறன் ஐயா உரை.......... http://youtu.be/zl-_ZsccrcY பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் - சென்னை புத்தக வெளியீட்டில் திரு வைகோ உரை........... http://youtu.be/cPzLRHWnqmk

  10. ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து மேதின ஊர்வலத்தை நடத்துவது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருக்கிறது. இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் என சொல்வதை விட சம்பந்தனும் சுமந்திரனும் கொழும்பில் இருந்து எடுத்த தீர்மானம் என சொல்வதே பொருத்தமானதாகும். ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடி இத்தீர்மானம் எடுக்கப்படவில்லை. மேல் மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கூட இது தொடர்பாக சிலர் ஆட்சேபனை தெரிவித்த போதிலும் அந்த ஆட்சேபனை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. மேதினத்தை ஐ…

  11. சிறிலங்காவிற்கு எதிராக ஜெனீவாவில் வாக்களித்துவிட்டு மறுநாளே சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவிற்கு கடிதம் ஒன்றை அவசரம் அவசரமாக எழுதினார் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். உள்நாட்டில் நிலவிய அரசியல் காரணங்களுக்காகத்தான் இவ்வாறான ஒரு முடிவை எடுக்கத் தூண்டியது என்கிற பாணியில் கடிதம் எழுதினார் சிங். இதிலிருந்து மறைமுகமாக இந்தியா சிறிலங்காவிற்கு உதவி வருகிறது என்பதை அறியலாம். மத்திய அமைச்சர் சிதம்பரமோ ஒரு படிமேல் சென்று இந்தியா இராஜதந்திர ரீதியில் வெற்றிகொண்டு விட்டதாக கொக்கரித்தார். சிறிலங்கா அரசின் திட்டங்களுக்கு ஏற்ற வகையிலையேதான் இந்தியா செயற்படுகிறது. இதன் ஒரு வடிவமே இந்திய நாடாளுமன்றக் குழுவின் சிறிலங்காவிற்கான பயணம். இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்…

    • 1 reply
    • 476 views
  12. 2002 ஏப்ரல் மாதத்தின் 10ம் நாள் சிங்கள தேசத்தின் ஊடகங்கள் அனைத்தும், இந்தியாவின் அச்சு, ஓலி, ஒளி, இலத்திரனியல் ஊடகங்கள் முழுதும், சர்வதேசத்தின் மிகமுக்கியமான ஊடகநிறுவனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் குழுமி இருந்தனர். தமிழர்களின் வரலாற்றில் ஒரு தமிழனின் செய்திக்காக அவர் சொல்லப்போகும் பதில்களுக்காக ஒரே நேரத்தில் இவ்வளவு பத்திரிகையாளர்களும், ஊடகங்களும் குழுமியது வரலாற்றில் முதலாவதானது. அதனைவிட சிங்களதேசத்தின் அதிபர்கள் நடாத்திய எந்தவொரு ஊடகவியலாளர் சந்திப்பிலும் அதுவரை இவ்வளவு பெருந்திரளாக வந்ததே இல்லையென்றே சிங்கள ஊடகங்கள்கூட வர்ணித்திருந்தன அந்தச் சந்திப்பை. இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு திகதி குறித்த பின்னர் இது நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் வடக்கையும் சிங…

  13. தமிழீழம் என்ற விடுதலை உணர்வு இன்னும் மடிந்து போகவில்லை. இன்னும் உயிரோடு தான் இருக்கிறது. சர்வதேச சமூகம் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் மேற்கு நாடுகள் அண்மையில் ஒரு முடக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளன. தமிழீழக் கோரிக்கையை முடிக்க அது போதுமானதல்ல. இலங்கையின் ஜனநாயகத் தோல்வியை ஈடு செய்வதற்காகச் சர்வதேச சமூகமும் இந்தியாவும் இலங்கையின் அரசியல் தலைமை மாற்றத்தையும்(Regime Change) தமிழீழத்திற்குப் பதிலாகப் புனர்வாழ்வையும் மேம்பாட்டுத் திட்டங்களையும் (Rehabilitation and Development)வழங்கினால் போதுமென்று உத்தேசிக்கின்றன. இதற்காக முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும் விடுதலைப் புலிகளைச் சமாதானப் பொறிக்குள் வீழ்த்த உதவியவருமான றணில் விக்கிரமசிங்க என்ற அமெரிக்கச் சார்பு அரசியல்வாதி தெரிவு செய…

  14. குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக அருள் எழிலன் - தீபச்செல்வன் உரையாடல் தமிழகத்தின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களுள் ஒருவர் டி. அருள் எழிலன். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஊடகங்களில் எழுதி வருகிறார். மனித உரிமை விவாகரங்களில் தனித்த அக்கறை கொண்ட இவர் ஆனந்த விகடன் வார இதழால் இதழியலில் துறைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர். குங்குமம் இதழின் ஆசிரியர் குழுவிலும் பணி செய்தவர். 2007 ஆம் ஆண்டில் இந்தியா டுடே இதழால் சிறந்த ஊடகவியலாளராக அடையாளம் காணப்பட்ட அருள் எழிலன் ஒரு குறும்பட இயக்குநரும் கூட. ஓவியர் ஆதிமூலம் தொடர்பான 'வெளிகளினூடே' என்ற ஆவணப்படம் உட்பட பல ஆவணப்படங்களை இயக்கியிருக்கும் இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் சதத் ஹசன் மண்டோவின் கதையை தமிழில் 'ராஜாங்கத்தின் முடிவு' எ…

  15. நட்புடன்.... நேற்று ரொரன்டோவில் நடைபெற்ற சட்ட வல்லுனரான லால் பெனான்டோவினது சந்திப்பு மேற்கு நாடுகளின் ஆதிக்கம் தொடர்பாகவே மையங் கொண்டிருந்தது....மேற்குல ஆதிக்க நாடுகளின் கையாள்தள்கடும் காய் நகர்த்தள்களும் எந்தளவு நமது போராட்டத்தை சிதைத்துள்ளன என்பதற்கு பல ஆதாரங்களை அவர் முன்வைத்தார்....அந்தவகையில் கில்லரியினதும் ஓபாமாவினதும் புதுவருட வாழ்த்துக்கள் முக்கியமாக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இது தொடர்பான சிங்களம் பேசுகின்ற மனிதர்கள் குறிப்பாக இடது சாரிகள் முன்வைக்கின்ற கருத்துக்களுடன் எனக்கு சிறிது விமர்சங';கள் இருந்தாலு:ம்.....பெனான்டோவின் பேச்சு பல வகைகளில ;முக்கியமானது....குறிப்பாக புலம் பெயர் தேசியவாதிகளும் நமது போராட்டத்திற்கு ஆதரவளிக்கின்ற தமிழக உணர்ச்சிகர …

    • 15 replies
    • 1.2k views
  16. மீண்டும் ஒரு சிறிலங்கா-இந்தியா கூட்டுத்தயாரிப்பில் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட உள்ளது. போரிற்கு பின்னரான தமிழர்களது வாழ்வைப் பற்றி ஆய்வு செய்யவென இந்தியாவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு வரும் 16ம் திகதி சிறிலங்கா புறப்பட்டுச் செல்ல உள்ளது. இந்தியா பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவியான பா.ஜ.க. தலைவர் சுசுமா சுவராச் தலைமையில் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நாடகத்தில் நடிகர்களாக பங்கேற்கின்றனர். தமிழர்களது நலனில் அதிதீவிர அக்கறையும் பாசமும் கொண்ட தி.மு.க. காங்கிரசு மார்சிட் கம்யுனிட்டு கட்சிகளைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நாடகக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கூண்டோடு கொன்று புதைக்கப்பட்டு மூன்று வருடங்கள் மு…

  17. http://www.youtube.com/watch?v=N_EkyTVgT8k&list=UUK3DaInlGNNJXT7BiuzGMgw&index=5&feature=plcp

  18. சிறிலங்கா தீவில் கொல்லப்பட்ட பொதுமக்கள் விவகாரம் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றுவதில், உலக நாடுகள் தமது குறுகிய தேசிய நலனைப் பயன்படுத்துவது வேதனைக்குரிய விடயம். இந்த மக்களின் இழப்புக்கள் தொடர்பில் உண்மையை உரைத்து, நீதியை நிலைநாட்ட வேண்டியது பிரதானம். இந்த விவகாரத்தில் அமைதியை கடைப்பிடிப்பது தமிழ் மக்களின் வாழ்வில் ஆபத்தை ஏற்படுத்தும். இவ்வாறு foreign policy journal ஊடகத்தில் டுபாயை தளமாக கொண்ட, மத்திய கிழக்கு மற்றும் முஸ்லிம் உலக விவகார ஆய்வாளர் Aijaz Zaka Syed எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுரையை ‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்தவர் ‘நித்தியபாரதி‘. புலியில் சவாரி செய்வது, அதன் முதலாளிக்கு மிகச் சிறப்பான சந்தர்ப்பங்க…

  19. இலங்கையின் முடிவுறாத போர் வட இந்தியாவில் வெளியாகும் " The Pioneer " என்ற நாளிதழில் பிரியதர்சி டற்றா [Priyadarshi Dutta ] என்ற இந்திய ஊடகவியலாளர் 'இலங்கையின் முடிவுறாத போர்' என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக்கட்டுரையை எழுதியுள்ளார். ஈழத்தமிழர்பிரச்சினைபற்றி நன்றாக அறிந்தவராக அவர் தமது கருத்துகளை அதில் முன்வைக்கிறார். தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து எதிர்த்து நெருக்கடி கொடுத்ததினால் இந்தியஅரசு அமெரிக்காவின் ஜெனிவாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. இங்ஙனம் இலங்கைக்கு எதிராக வாக்களித்ததின்மூலம் ஈழத்தமிழர்கள் அரசியல் அனாதைகள் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார். எனினும் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியஅரசு இலங்கைக்க…

  20. சுனாமி கரைத்து - போர் தின்று - மீண்ட நண்பன் எல்ரனை - கடல் கொன்றது! 31 மார்ச் 2012 குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தீபச்செல்வன் நண்பன் எல்ரனை கடல் கொன்று விட்டது என்கிற செய்தி பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியது. போருக்கு முகம் கொடுத்த வன்னியைச் சேர்ந்தவனாய், முன்னாள் போராளியாய், யாழ் பல்கலைக்கழக மணவனாய் என்று அவன் நடந்த தடத்தில் இணைந்திருந்த எல்லாரையும் இந்தச் செய்தி வருத்தக்கூடியது. எல்ரன் என்றாலே அவனின் பின்னாலுள்ள வறிய மீனவக் குடும்பம்தான் நினைவுக்கு வரும். குடும்பத்தைப் பற்றி வாழ்வைப் பற்றி எப்பொழுதும் ஏங்கிக் கொண்டிருந்தவனுக்கு என்ன ஆனது என்பது பெரும் அதிர்ச்சியைத் தந்தது. வடமராட்சிக் கிழக்கில் கட்டைக்காட்டில் உள்ள கடலில் மூழ்கி இறந்து போ…

    • 8 replies
    • 1.1k views
  21. ஆதி தமிழரின் சோழர் கால புலி பதித்த தற்போதைய தமிழீழ தேசிய கொடியை நாம் பின்பற்றுவோம். இதையே தமிழ் நாட்டு தமிழரும் தங்கள் தேசிய சின்னமாய் பயன்டுத்தலாம். விடுதலை புலிகளின் உத்தியோக கொடியில் எழுத்துகள் உள்ளன.தேசியக்கொடியில் அப்பிடி இல்லை. ஆகவே இதையே உலகத்தில் உள்ள அனைவரும் தமது பேதம் கடந்து ஏற்றுகொள்ள வேண்டும். உதாரணம் இந்திய தேசிய கொடிக்கும் இந்திய காங்கிரஸ் கொடிக்கும் அதில் உள்ள சக்கரம் மட்டுமே வித்தியாசம்.அதற்காக பாரதிய ஜனதா கடிசியோ இல்ல காகிரசை பிடிக்காத கட்சிகளோ இந்திய மூவர்ண கொடிய தமது கொடி இல்லை என்று கூறவில்லை. அதே போல் நானும் எமது பிளவுகளை கைவிட்டு ஒரே கொடியின் பின் அனைத்து தமிழரும் இணைவதே எம்மை உலகில் நிலை நிறுத்தும். எமது அணைத்து நிகழ்வுகளிலும் மரியாதை செய்வோம் என்ற…

  22. சென்னை: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்து, பின்னர் இந்தியாவின் தலையீட்டால் நீர்த்துப் போகச் செய்யப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது இந்தியாவின் ஆங்கில மீடியாக்களுக்குக் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. ஏதோ இலங்கையை, தமிழகத்தினர் அத்தனை பேரும் சேர்ந்து அழித்து விட்டது போலவும், தமிழகத்தின் நியாயமான போராட்டத்தால் இந்தியாவுக்கு பேராபத்து வந்து விட்டதைப் போலவும் இவர்கள் காட்டமாக தமிழக தலைவர்களையும், தமிழக கட்சிகளையும் விமர்சித்து எழுதி வருகின்றனர். எல்லாவற்றுக்கும் காரணம், தமிழக அரசியல் தலைவர்கள் குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி கொடுத்த அழுத்தம், நெருக்கடி மற்றும் மிரட்டல்தான் காரணம் என்றும் இவர்கள் புரியாமல் எழுதி வருகின்றனர். …

  23. "Fille d’un rebelle indépendantiste tamoul, la chanteuse a connu la guerre civile au Sri Lanka, son pays d’origine. Une blessure qui n’a jamais cicatrisé..." En adressant un doigt d’honneur à la caméra, début février, pendant la mi-temps du Super Bowl, M.I.A. avait choqué 114 millions de téléspectateurs américains. Une provocation qui a déclenché les foudres des bien-pensants mais qui n’a pas fait peur à Mia. Et pour cause, la rappeuse en a vu d’autres... Son enfance a été marquée par les horreurs de la guerre civile, la mort et le chaos. Elle n’a que 6 mois lorsque ses parents quittent la Grande-Bretagne pour le Sri Lanka, leur pays d’origine. Son père, Arul, s’e…

    • 3 replies
    • 961 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.