நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
புதிய வழியில் முன்னெடுக்கப்படும் நிழல் யுத்தம் வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டம், அரசியல் அரங்கில் பரவலான சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. உருக்கினால் தயாரிக்கப்பட்ட இந்த வீடுகள், வடக்கிலுள்ள காலநிலைக்கும் மக்களின் வாழ்க்கை முறைக்கும் ஏற்றதல்ல என்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாணசபையின் வாதமாக இருக்கிறது. அதேவேளை, இந்த திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றி முடிப்பது என்பதில், புனர்வாழ்வு, மீள்குயேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தீவிர ஆர்வத்தைக் காட்டி வருகிறார். இந்த விடயத்தில், இரண்டு தரப்புகளுக்கும் இடையே அறிக்கைப் போர்களும் கடிதப் போர்களும் நடக்கின்றன. ஊடகங்க…
-
- 0 replies
- 285 views
-
-
முத்தையா முரளிதரனும் மறைக்கப்படும் வரலாற்று உண்மைகளும் 10/18/2020 இனியொரு... இலங்கை பேரினவாத அரசிற்கு எதிரான அரசியல் திட்டம் தேவையானது தான். ஆனால் அது அழிவு அரசியலாக அமைந்துவிடக் கூடாது. முத்தையா முரளிதரன் என்ற தமிழராகத் தன்னை எப்போதும் அடையாளப்படுத்திக் கொள்ளாத இலங்கையில் இந்திய வர்த்தக சமூகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரரை முன்வைத்து முன்னெடுக்கப்படும் தமிழ்த் தேசிய அரசியல் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தாது. முரளிதரனைத் தமிழராக காட்ட முற்படுவது எவ்வளவு தவறானதோ அதைவிட ராஜபக்ச அரசிற்கு துணை போகும் தமிழ்த் தேசிய அரசியலும் தவறானது தான். மலையகத் தமிழர்கள் இலங்கையின் மத்திய பகுதியில் வசிக்கும் மலையகத் தமிழர்கள் 19ம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் ஆங்கில…
-
- 0 replies
- 429 views
-
-
இலங்கையின் சுதந்திர தினமும் தமிழ் மக்களின் பேரெழுச்சியும்.! - நா.யோகேந்திரநாதன் எதிர்வரும் பெப்ரவரி 4ம் நாள் பிரித்தானியாவிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1956ல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டதை அடுத்து 1957ம் ஆண்டு தொட்டு தமிழ் மக்கள் சுதந்திர தினத்தைப் பகிஷ்கரித்து வருகின்றனர். திருமலையில் 1957ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம்நாள் ஏற்றப்பட்டிருந்த இலங்கையின் தேசியக் கொடியை இறக்க முயன்ற திருமலை நடராசன் என்பவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் 1972ம் ஆண்டு புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்பு இலங்கையின் தேசிய தினம் தமிழ் மக்களால் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு துக்க தினமாகக் கொண்டாடப்பட…
-
- 0 replies
- 331 views
-
-
"Channel 4" வெளியிட்ட, புதிய காணொளி.
-
- 0 replies
- 500 views
-
-
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்களும் மட்டக்களப்பு மக்களும் September 19, 2024 மட்டக்களப்பு மாவட்ட தமிழர்கள் எப்போதுமே தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுக் கொண்டவர்கள். தமிழரின் விடுதலை போராட்டத்திற்காக பல்லாயிரம் உயிர்களைத் தியாகம் செய்தவர்கள். கோடிக்கணக்கான பெறுமதிவாய்ந்த உடைமைகளையும் சொத்துக்களையும் இழந்தவர்கள். போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் தமிழ் தேசிய உணர்வு இன்னும் அழிந்துபோகவில்லை கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்கள் மூலம் பறைசாற்றியிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த கருணா அம்மான், பிள்ளையான் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்த வியாழேந்திரன் போன்றோர் அரசுடன் இணைந்தாலும் அவர்களுக்கும் மக்களுக்குமான உறவு பற்றாக்குறையாகவே காணபப்ட…
-
- 0 replies
- 330 views
-
-
இலங்கையில் 41 வருடங்களுக்கு பின் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், இன்றையச் சூழலில் தமிழக மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையில் உள்ள உறவினைப் மேலும் பலப்படுத்துமா? 1942ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானிய படைகளால் முதல் முறையாக யாழ்ப்பாணம் பலாலி பிரதேசத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் பலாலி விமான நிலையம் இலங்கை படையினரிடம் கையளிக்கப்பட்டது. 1947ம் ஆண்டு முதல் முறையாக பலாலியில் இருந்து இந்தியாவிற்கு விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 418 views
-
-
கல்வி தந்தைகளின் அலப்பறைகள் இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையிலும் கல்வித் தந்தைகள் உருவெடுக்கத் தொடங்கியுள்ளார்கள். அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தி என்பதுபோல, கல்வித் தந்தைகளின் கடைசிப் புகலிடம் நாடாளுமன்ற அரசியல். இன்று இலங்கையின் கல்வித்துறை எதிர்நோக்குகின்ற சவால்கள் பல. தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதும் தனியார் கல்வியை ஊக்குவிப்பதும் அதற்கான தீர்வுகள் அல்ல. இலங்கையில் இலவசக் கல்வி, ஆசியாவின் நாடுகள் பலவற்றுக்கும் முன்னரே பல்கலைக்கழகம் வரை விரிவுபடுத்தப்பட்டு விட்டது. அத்துடன், தாய் மொழிக் கல்வியும் சேர, கிராமப்புறத்து நடுத்தர வர்க்கத்தினருக்கும், கீழ் நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு பகுதியினருக்கும், தொழிலாளர் வர்க்கத்தினரில் சி…
-
- 0 replies
- 596 views
-
-
ஒடுக்கபட்ட ஈழ தமிழினத்திற்கு ஆரிய ஏகாதிபத்தியம் அளிப்பதுதான் தீர்வா? 13-வது அரசியல் அமைப்பு சட்டம் குறித்து வாய்கிழிய பேசி திரியும் காங்கிரசு களவாணி கும்பல்கள்.அச்சட்டம் ஈழ தமிழர்களால் ஏற்கெனவே நிராகரிக்கபட்டது எனும் உண்மையை ஏனோ செலக்டிவ் அம்னிஷியா போல் மறந்து போகின்றனர்..அல்லது அத்திட்டதினை வலியுறுத்தும் அவர்கள் இந்தியா போன்று மதசார்பற்ற இலங்கை என அவர்களது ஆரிய கூட்டாளியான ராசபக்சேவிடம் வலியுறுத்த தயாரா?சென்னையில் காங்கிரசு பிரச்சார கூட்டதின் போது ராஜீவ்காந்தி’ஜீ ‘ ஏற்படுத்தி கொடுத்த ஒப்பந்தமே தமிழர்களுக்கு தீர்வு என ஊளையிட்ட சோனியா மைனா அந்த ஒப்பந்தித்தின் படி வடக்கு கிழக்கை இணைக்க இலங்கையை மிரட்டுவாரா? இளித்தவாயன்கள் மேல் ஏறி மிதிக்கு இந்தி தேசியம் …
-
- 0 replies
- 775 views
-
-
வள்ளுவரும் தமிழ்த்தேசிய அரசியல் விடுதலையும் -வள்ளுவர் சமணத்தை பின்பற்றியிருக்கலாம் என்பது உண்மை. சமணர்கள் பிற்காலத்தில் சைவர்களாக மாறினர் என்பதும் ஏற்புடையது. ஆனால் எந்த ஒரு சமயம் பற்றியும் வள்ளுவர் தனது குறளில் குறிப்பிட்டுக் கூறவில்லை. இந்த நிலையில் தமிழ் நாடு மற்றும் ஈழத்தமிழர் பிரதேசங்களில் வாழும் இக்கால சமய அறிஞர்கள் சிலர் தத்தமது விருப்பங்கள் தேவைகளுக்கு ஏற்ப வள்ளுவருக்குச் சமய அடையாளமிடுகின்றனர்– அ.நிகஸ்ன் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றிய நியாயப்படுத்தலை மறுதலிக்கக்கூடிய அரசிய…
-
- 0 replies
- 192 views
-
-
வடக்கில் அதிகரிக்கும் குடும்ப விரிசல்கள்! 'போதைக்கு என்ர கணவர் அடிமையானதால், தினமும் எனக்கு சித்திரவதைதான். என்ர உடம்பில காயமில்லாத இடம் ஒன்றுமே இல்ல. சித்திரவதை தாங்க முடியாமல் டிவோஸ் எடுத்தேன்' என்கிறார் கிளிநொச்சி கனகபுரத்தைச் சேர்ந்த 30 வயதுடைய புவனா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆசிரியராகக் கடமையாற்றும் அவர், கடந்த பதினைந்து வருடங்களாக பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தினம் தினம் சித்திரவதைகளை தாங்கிக் கொண்டிருக்கிறார். ஆனாலும், இனியும் வேதனைகளை…
-
- 0 replies
- 496 views
-
-
தீர்வு தாமதமாவது பதற்றத்தை அதிகரிக்கிறது அரசியல் தீர்வு தாமதமாவதன் விளைவாக இனங்கள் இடையிலான பதற்றம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. கொழும்பு இது தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி பதற்றத்தைத் தணிக்கக் காத்திரமான நடவடிக்கை எடுக்கவில்லையாயின் அது பாரதூரமான விளைவுகளை நோக்கி இந்த முரண்பாட்டை மீண்டும் நகர்த்தும் என்பது வரலாறு கற்றுத் தந்திருக்கும் பாலபாடம். வெளிமாட்டங்களில் இருந்து வந்து முல்லைத்தீவில் நாயாறு கொக்கிளாய் பகுதிகளில் கடற்றொழில் செய்த சிங்கள மொழி பேசுபவர்களுக்கும் அங்குள்ள உள்ளுர் மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பதற்றம் வெளியூரவர்…
-
- 0 replies
- 472 views
-
-
புதிய அரசியலமைப்பு முயற்சி தொடர்பில் சம்பந்தனின் ஆதங்கம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை உள்ளடக்கி புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு இந்தியா உதவி புரிவதுடன் அதற்கான அழுத்தங்களையும் வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அரசியல் யாப்பை உருவாக்கும் முயற்சி தோல்வியில் முடிவடையுமானால் வடக்கு, கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைவிட தீவிரமான போக்கைக் கொண்ட தமிழ் தலைமை உருவாவதற்கு வாய்ப்பு ஏற்படுமென்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். சபாநாயகர் கரு ஜ…
-
- 0 replies
- 428 views
-
-
சிறுவர்களின் உரிமையை மறுக்கும் நாடுகளை உலகம் மயிலிறகால் தடவுகிறது – கடந்துபோகாத சிறுவர் தினம்! October 1, 2018 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஈழ நிலத்தில் குழந்தைகள் கைது செய்யப்படுகிறார்கள். குழந்தைகள் பதாகைகளை ஏந்தியவாறு போராடுகிறார்கள். குழந்தைகள் தங்கள் வாழ் நிலத்திற்காக போராடுகிறார்கள். உரிமை மறுக்கப்பட்ட அடக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட இனத்தின் குழந்தைகள் எதையெல்லாம் சந்திக்கவேண்டுமோ அதை எங்கள் குழந்தைகள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால்தான் மாபெரும் இழப்பும் மாபெரும் அபாயங்களும் நின்று மி…
-
- 0 replies
- 303 views
-
-
தமிழர்களின் நீதிக்கு எதிரான சக்திகளின் நிகழ்சிநிரலை குழப்பியுள்ள ‘தமிழர்களுக்கு எதிரான சிறீலங்காவின் இன அழிப்பு’ தீர்மானம் Feb 15, 20150 - நிர்மானுசன் பாலசுந்தரம் சர்வதேச தரத்துக்கு இணையான உள்ளக பொறிமுறையை உருவாக்கப் போகிறோம் என்ற பரப்புரையில் ஈடுபட்டுவரும் சிறீலங்கா, இன்னொரு பக்கத்தில் சிறீலங்காவில் இருக்கும் வரை கோத்தபாய ராஜபக்சவுக்கு பாதுகாப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. இது சிறீலங்கா உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கும் உள்ளகப் பொறிமுறையும், அதற்கமைவாக செயற்படுத்தக்கூடிய பொறுப்புக்கூறும் கடப்பாடும் தமிழர்களுக்கு நீதியை வழங்காது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு. இதேவேளை, ஐ.நா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக சமூகம் சிறீலங்காவில் உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்க…
-
- 0 replies
- 585 views
-
-
பிரசாந்த் சாஹல் உண்மை கண்டறியும் குழு, பிபிசி படத்தின் காப்புரிமை AFP Image caption ரோஹிஞ்சா…
-
- 0 replies
- 564 views
-
-
‘தலைக்கறிக்கு’ போட்டிபோடும் தலைநகரில் தமிழர் அரசியல் -விரான்ஸ்கி ஆட்சிக்கு வந்திருக்கும் கோட்டாபயவைத் தமிழர் தரப்பு எவ்வாறு சமாளிக்கப்போகிறது? அதற்குத் தமிழர் தரப்பு வகுத்திருக்கும் புதிய அரசியல் வியூகங்கள் என்ன? பழைய சூத்திரங்கள் இனிச் செல்லுபடியாகுமா? தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகப் பார்க்கின்ற அரசியல் கருத்துகளை வெளிப்படையாகவே தெரிவித்துவரும் கோட்டாபயவை, தமிழர் தரப்பு இனி யாரை வைத்து மடக்கப்போகிறது? என்றெல்லாம் கேள்விகள், சந்தேகங்கள் வலுத்துக் கொண்டு வருகின்றபோது, தமிழர் தரப்போ, புதிய அரசியல் சிக்கல்களோடு குத்திமுறிந்துகொண்டிருப்பது, அண்மைக்கால அரசியல் நகர்வுகள் மூலம் வெளிச்சமாகி இருக்கிறது. அதாவது, கொழும்பு தேர்தல் மாவட…
-
- 0 replies
- 602 views
-
-
இடையில் மாற்றமடைந்ததா சீனாவின் உணவுக் கலாசாரம்? உணவு பழக்கவழக்கமென்பது நாட்டுக்கு நாடு மாறுபடக்கூடியவொன்றுதான் . என்றாலும் தென்கிழக்காசியாவின் உணவுக்கலாசாரம் என்பது மற்றைய நாடுகளில் உள்ள பலரையும் மிரளவைத்து விடுகின்றதென்றால் அது மிகையில்லை! அவ்வகையில் சீனர்கள் ஏன் நமக்கு அருவருப்பாக தெரியக்கூடிய பலவற்றையும்கூட உணவாக உண்ணுகின்றனர் என்பதே இன்றைய இக்கட்டுரையின் கரு . இன்றைய சூழலில், உலகில் உள்ள அனைவருக்குமே China என்றாலே கடுங்கோபம் வருமளவிற்கு அந் நாட்டிலிருந்து பரவிய covid19 கொரோனா வைரஸ் இந்த உலகத்தையே ஆட்டி படைத்து வருகின்றது! கொரோனா மட்டுமல்ல இதற்கு முன் பரவிய சார்ஸ் (2002) போன்ற வைரஸ்களும்கூட சீனாவின் whuhan மானிலத்திலுள்ள ” wildlife market ” என்கிற வனவிலங்…
-
- 0 replies
- 465 views
-
-
அம்பாறை தமிழ்மக்கள் மீது கடந்த கால தமிழ் பிரதிநிதிகள் அக்கறை செலுத்தவில்லை; கலையரசன் நேர்காணல் August 16, 2020 “நாட்டிலுள்ள இன ரீதியான அடக்குமுறையினால் கடந்த காலம் தொட்டு வடகிழக்கில் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை தமிழ் மக்கள் மீது கடந்தகால தமிழ்மக்கள் பிரதிநிதிகள் அக்கறை செலுத்தவில்லை என்பதை அம்பாறை தமிழ்மக்களின் வாக்குகள் கட்டியம் கூறி நிற்கின்றன. நிச்சயமாக கூட்டமைப்பு வடகிழக்கில் வீழ்ச்சியடைந்திருக்கின்றது, கடந்த தேர்தல்களில் கிடைக்கப்பெற்ற ஆசனங்களை விட 2020, தேர்தலில் பெற்ற ஆசனங்கள் கணிசமாக குறைந்திருக்கின்றது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அந்த அடிப்படையில் முற்று முழுதாக நாங்கள் மக்களிடமிருந்து தூக்கியெறியப்ப…
-
- 0 replies
- 360 views
-
-
No Fire Zone Documentary and the debate that followed http://www.istream.com/news/watch/314811/No-Fire-Zone--Killing-fields-of-Sri-Lanka
-
- 0 replies
- 619 views
-
-
ஈழ அகதிகளும், கொரோனாவும், தமிழக முகாம்களும் – முதல்வரின் கவனத்திற்கு! May 15, 2021 தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் கொரோனாவிற்கு கொட்டகைகளில் தங்க வைக்கப்படுகின்றனரா ?. ந.லோகதயாளன். தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் தங்கியுள்ள அகதிகள் முகாமில் இதுவரை 7 முகாம்களில கொரோனா தொற்று பரவியுள்ளபோதும் முகாம்களிலேயே கொட்டில்கள் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தல் வழங்கப்படுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் நூற்றுக் கணக்காண அகதிகள் முகாமில் ஈழ அகதிகள் 75 ஆயிரம் பேரளவில் தங்கியுள்ளனர். இவ்வாறு ஈழ அகதிகள் தங்கியுள்ள பல முகாம்களில் இருந்து தப்பித்து மீண்டும் தாயகம் திரும்புவது அதிகரிக்கும் நிலையில் தமுழ்நாட்டில் இதுவரை 7 முகாம்களில் உள்ள பலர் கொரோனா தொற்றி…
-
- 0 replies
- 746 views
-
-
இலங்கையில் தமிழர்கள் அதிகாரத்தை பெற ஒன்றிணைந்து செயல்பட வலியுறுத்திய இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMO SRILANKA படக்குறிப்பு, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கை மத்திய அரசாங்கத்திடமிருந்து தமிழர்களுக்கான அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்கு அனைத்து சிறுபான்மை சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லா வலியுறுத்தியுள்ளார். இலங்கை தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடனான …
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
தமிழக அரசியல்வாதிகளா ? இவர்கள் ஒரு தனிரகம் ! இவர்களைவிட இராட்சஷபட்ஷே திறம் என்று சொல்லலாம் போலிருக்கிறது. இவர்களை அவர்கள் ‘கோமாளிகள்’ என்றார்கள் ; இவர்களும் அதை உண்மையென்று நிரூபிக்கும்வகையிலேயே நடந்துகொள்கிறார்கள். அரசியல்வாதிகள் போலவா பேசுகிறார்கள்? பாலர்பள்ளிக்குழந்தைகள், “ டீச்சர்! இவன் என்னக்கிள்ளினான் டீச்சர்! - இல்ல டீச்சர்! அவந்தா மொதல்ல என்னக்கிள்ளினான் டீச்சர்! “ என்று ஆளுக்காள் குற்றஞ்சாட்டிக்கொள்வதைப்போல, கருணாநிதிதான் காரணம் என ஒரு சாரார் கைகாட்ட - ஜெயலலிதாதான் காரணம் என்று மற்றொருசாரார் முழங்க ..... இரண்டையுமே தவிர்த்து, மத்திய அரசே காரணம் என்றும் ஒரு புதுக்காரணம் முளைக்கிறது. இவைகளையெல்லாம்தாண்டி, ஆங்காங்கே கொசுறுக்காரணங்களும் பி…
-
- 0 replies
- 730 views
-
-
சமீபத்திய நாட்களாக இலங்கையில் ரயில் விபத்துக்கள் அதிகமாக நடந்து வருகின்றன. இலங்கை வரலாற்றில் மிகவும் கோரமான விபத்தாக கருதப்பட்ட குருணாநகல் பொல்ஹாவல விபத்தில் 65பேர் காயமடைந்தார்கள். இந்நிலையில் நேற்றிரவு பளை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் மாங்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் யானை ஒன்றுடன் மோதியதில் யானை உயிரிழ்ந்துள்ளது. இதனால் வடக்கிற்கான ரயில் சேவைகள் ஒன்றரை மணியத்தியாலம் தடைப்பட்டது. இதேவேளை களுத்துறை அளுத்கம ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதன்போது சாரதிக்கு காயங்கள் ஏற்பட்டதுடன் ரயில் பெட்டிகளும் தடம் புரண்டன. இதேவேளை நேற்றைய தினம் குருணாநகல் பொல்ஹாவல விபத்து தொடர்பான செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடந்தது. இந்த சந்திப்பை போக்குவரத்த…
-
- 0 replies
- 267 views
-
-
‘காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது இல்லை’ என்று பிரபல சிந்தனையாளரும், ஆற்றல் மிக்க எழுத்தாளருமான அருந்ததிராய் வெளியிட்ட கருத்தில், எந்தக் குற்றமும் இல்லை என்பதே நமது உறுதியான கருத்து. அருந்ததிராய் மீது தேச துரோகக் குற்றச்சாட்டை ‘தேச பக்தர்கள்’ வீசுகிறார்கள். வழக்குத் தொடருவதற்கு இந்திய ஆட்சி ஆலோசித்து வருவதாக செய்திகள் வருகின்றன. அருந்ததிராய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள், பார்ப்பன ஏடுகள் கூக்குரலிடுகின்றன. காஷ்மீர் மக்கள் மீது ராணுவ ஆட்சியைத் திணித்து, அம்மக்களின் சுயநிர்ணய உரிமையை துப்பாக்கி முனையில் பறித்து வைப்பதற்குப் பெயர்தான் தேச பக்தியா என்று கேட்க விரும்புகிறோம். தேச பக்தர்களுக்கு சில கேள்விகளை முன் …
-
- 0 replies
- 793 views
-
-
பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து நாட்டை மீட்டு விட்டதாக அரசாங்கம் அடிக்கடி மக்களுக்கு நினைவூட்டி வருகிறது. ஆனால், இப்போது யாழ்ப்பாணத்தில் நடந்தேறுகின்ற சம்பவங்களைப் பார்க்கின்ற போது அது உண்மை தானா என்று கேள்வியை எழுப்ப வைக்கிறது. பயங்கரவாதம் என்கிற போது அரசாங்கம் வெறுமனே புலிகளைத் தான் சுட்டிக் காட்டியது. ஆனால் சட்டத்துக்குப் புறம்பாக, பொதுமக்களை அச்சுறுத்திப் பணிய வைக்கின்ற அவர்களை பீதியில் உறைய வைக்கின்ற செயல்கள் அனைத்தும் பயங்கரவாதமாகவே கருதப்பட வேண்டும். அந்தவகையில் பார்க்கின்ற போது யாழ்ப்பாணம் இன்னமும் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து விடுபடவில்லை என்று தான் கூற வேண்டும். கடந்த டிசெம்பர் மாதத்தில் மட்டும் யாழ்ப்பாணத்தில் நான்கு படுகொலைகள் இடம்பெற்றன. …
-
- 0 replies
- 1.2k views
-