Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னி கோசிப் 35

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகாவியமான வீரமறவர்களுக்கு வீரவணக்கங்கள்..

தமிழீழம் முழுவதும் வீரகாவியமான சு.ப தமிழ்செல்வன் உட்பட ஏனைய ஜந்து போராளிகளிற்கு தொடர்ந்து ஜந்து நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்,புலத்தில? வாழும் நாமும் செய்தி கேட்டவுடன் உணர்ச்சிவசபட்டோம் தொலைபேசியில் எமக்கு தெரிந்த நண்பர்களுடன் எமது ஆத்திரத்தை,மகிந்தாவை வெட்ட வேண்டும்,தலைவர் எனி பார்த்து கொண்டிருக்கக் கூடாது இன்றிரவே போய் குண்டு போட வேண்டும்,இதற்கு கட்டாயம் தலைவர் நல்ல பதில் கொடுக்கவேண்டும் அப்போது தான் எங்களின்ட ஆத்திரம் தீரும் என்று எமது ஆதங்களை கொட்டி தீர்தோம் யாழ்களத்திலும் அதே உணர்ச்சிகள் கொந்தளித்தன. வெள்ளி இரவு தான் கொந்தளித்தோம் கொதித்தோம் தூங்கி முழித்தவுடன் உணர்ச்சிகள் கொஞ்சம் அடங்கிட்டு சனிகிழமை தொடர்ந்து நண்பர்களுடன் உரையாடல் எப்படி நடந்திருக்கும் என்று புலன் விசாரனைகள்,சீனாகாரன் கொடுத்திருப்பான் இந்தியா கொடுத்திருக்கும் இல்ல உள்ளுகுள்ள இருந்து யாராவது மெசேஜ் கொடுத்திருப்பார்கள் என்று பல ஊகங்களும் விவாதங்களும், நடத்தினோம் இதிலும் சில நண்பர்கள் அவர்கள் வன்னியில் தொடர்பு கொண்டு கதைத்து போல் சில முடிவுகளை கூறினார்கள்.

சனி,ஞாயிற்று கிழமைகளிள் வழமையாக புலத்தி வாழும் எம்மவர்களுக்கு கலை நிகழ்ச்சி,இசை நிகழ்ச்சி அது தவிர்க்கமுடியாது.

நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற கலாச்சார உடைகளை அணிந்து போவது தான் எனது வழக்கம் கல்யாண வீடு என்றா பட்டுவேட்டி,பரதநாட்டிய இசை நிகழ்ச்சிகள் என்றால் படையப்பா ஸ்டைலில் குருத்தா போட்டு தமிழ் கலாச்சாரம் என்று நானே என்னுள் பெருமிதம் பட்டுகொள்வதும் உண்டு.இந்த ஞாயிற்கிழமை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் "இன்னிசை இரவு" மூன்று மாதத்திற்கு முதலே டிக்கட் வாங்கி போட்டேன் 2கிழமைக்கு முதலே குருத்தா சலவை செய்து அழகாக அறையில் தொங்கவிட்டிட்டேன்.வெள்ளி இரவு நிகழ்ச்சியிற்கு போக கூடாது என்று மனம் சொன்னது சனி இரவு மனம் மாற தொடங்கவிட்டது.ஆசை மனம் பேச தொடங்கியது $250 கொடுத்து டிக்கட் வாங்கி போட்டாய் வீணக்க போறாயா,இந்த நிகழ்ச்சிக்கு போகாட்டி இனி எப்ப எஸ்.பி.பி வந்து பாடுவாரோ தெரியாது போய் பார்,அவர் தொடக்க காலத்தில் பாடிய "ஆயிரம் நிலவே வா" என்ற பாடலை இப்பவும் குரல் மாறாம அப்படியே பாடுகிறார் போனால் கேட்கலாம் போ என்று ஆசை மனம் பேசி முடித்தது.

மனசாட்சி எதிர் கேள்வி கேட்டது "நீ ஈழ ஆதரவாளன் என்று புலம்புவாய்" அதற்காக உயிர் தியாகம் செய்த ஆறு மறவர்களிள் சு.ப தமிழ்செல்வன் அவர்களின் வித்துடல் இன்னும் விதைக்கபடவில்லை ஆனால் நீ இசை நிகழ்சிக்கு போக போறாயா என்றது.

உடனே ஆசை மனம் சமாதானபடுத்தி ஈழத்திற்காக தானே $50 - $100 என்று 3 வருடதிற்கு ஒரு முறை கொடுக்கிறனி தானே மற்றும் மாவீரர் நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு தடவையும் போறனி தானே தேசியத்திற்கு ஆதரவாக தானே நீ கதைக்கிறனி ஆகவே நீ ஈழ அபிமானி ஆதரவாளி ஏன் நீ ஒரு புலத்து போராளி என்று கூட சொல்லலாம் என்று ஆசை மனம் என்னை உசுபேற்றி எஸ்.பியின் நிகழ்ச்சிக்கு போ என்றது.ஆசை மனம் கோபபட்டு இப்படியும் சில கேள்விகளி எழுப்பியது நீ போகாட்டி என்ன நிகழ்ச்சி நடக்காதோ இல்லாடி பாலாவிற்கு தான் பாட்டு பாட வராதோ இல்லை ஈழபோராட்டம் தான் பின்னடையுமா என்ற கோப வினாக்களை எழுப்பியது . இறுதியில் ஆசை மனம் வென்றுவிட்டது.

தற்போது நிகழ்சிக்கு செல்ல தயார் நிக்ழ்ச்சியால் வந்த பின் என் ஆசை மனம் புலம்பதொடங்கும்......

புத்து மாமா,

இசை நிகழ்ச்சிக்கு போகக்கூடாது என்று நீங்கள் ஏன் நினைக்கின்றீர்கள்? நீங்கள் அவுஸ்திரேலியாவில் - சிட்டினியில் இசை நிகழ்ச்சிக்கு போவதற்கும் தாயகத்தில் நடைபெறும் பிரச்சனைக்கும் என்ன சம்மந்தம் உள்ளது?

தினமும் தாயகத்தில் போராளிகள் வீரமரணம் அடைகின்றார்கள். தினமும் தாயகத்தில் மக்கள் கொல்லப்படுகின்றார்கள். இது தாயகத்தின் வழமையான நிகழ்ச்சி நிரல். இதற்காக நீங்கள் ஏதாவது உதவிகள் செய்து அவர்களின் துயர்போக்க தோள்கொடுப்பது தாயகத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள பற்றை காட்டுகின்றது.

அதேவேளை, நீங்கள் எஸ்.பி. பியின் இசை நிகழ்ச்சிக்கு செல்வதால் தாயத்தின்பால் நீங்கள் கொண்டுள்ள பற்று குறையப்போகின்றது அல்லது நீங்கள் ஒரு துரோகி என்று அர்த்தம் இல்லை.

பல ஆயிரம் மைல்களிற்கு அப்பால் உள்ள தாயகத்தில் நடைபெறும் சம்பவங்கள் எங்கள் மனங்களை, வாழ்க்கையை பாதிப்பது உண்மை. அதற்காக நாங்கள் இங்கு எங்கள் வாழ்வை மாற்றியமைக்க முடியுமா?

இந்தா.. நான் இப்போது தட்டச்சு செய்துகொண்டு இருக்கின்றேன். வீதியில் ஏராளம் வாகனங்கள் பிசியாக போய்க்கொண்டு இருக்கின்றன. வீதியில் குப்பை துப்பரவு செய்யும் இயந்திரம் சத்தம் போட்டபடி தனது வேலையை செய்து கொண்டு இருக்கின்றது. தீயணைப்பு வண்டிகள், அம்புலன்ஸ்கள், போலிஸ் வாகனங்கள் அவ்வப்போது வீதியில் போய் வருகின்றன. சனங்கள் அப்படியும், இப்படியும் விறுவிறு என்று ஒவ்வொரு யோசனைகளுடன் தெருவில் நடந்து திரிகின்றார்கள். இவ்வளவற்றையும் எனது வீட்டு யன்னலினூடாக பார்க்கக்கூடியதாக உள்ளது.

நாங்கள் எங்களை வெளி உலகத்தில் இருந்து தனிமைப்படுத்துவதால் நட்டம் எங்களுக்குத்தான். மற்றவர்களுக்கு அல்ல.

தாயகத்திற்கு நாங்கள் ஏதாவது உருப்படியாக உதவிகள் செய்வது வரவேற்கத்தக்கது. ஆனால், அதைவிடுத்துவிட்டு அங்கே போகாதே, இங்கே போகாதே... அப்படி செய்யாதே.. இப்படிச் செய்யாதே... என்று சின்னப்பிள்ளைகளிற்கு உத்தரவு போடுவதுபோல் அறிவுரைகள் சொல்வது பயனற்றது.

என்னைப் பொறுத்தவரை நீங்கள் ஏற்கனவே டிக்கட் வாங்கி இருந்தால் இசை நிகழ்ச்சிக்குபோய் அதை கண்டு களிப்பதில் தவறு இல்லை. சும்மா வெளியாருக்காக, வெளியாரை திருப்திப்படுத்துவதற்கு நாங்கள் கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் வாழ்கின்றோம் என்று காட்டிக்கொள்வதில் அர்த்தம் இல்லை.

நான் சிறிது காலத்திற்கு முன் யாழில் சிவாஜி படத்தை புறக்கணிப்பு செய்ய நீங்கள் தயாரா என்று கேட்டு ஒரு கருத்தாடல் செய்தேன். நான் இன்னும் கூடத்தான் சிவாஜி படம் பார்க்கவில்லை. பாடல்கள் கேட்கவில்லை. ஆனால், மற்றவர்கள் அப்படி இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மேலும், நான் இவ்வாறு செய்ததால் எனக்கு ஏதாவது விருது, பாராட்டு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. அல்லது நான் ஒரு நல்ல மனுசன் என்று ஒரு பெயர் கிடைக்கப்போவதில்லை.

நான் சொல்ல வருவது என்னவென்றால் மற்றவர்களுக்காக நாங்கள் ஆசைகளை அடக்கி போலியாக வாழத்தேவையில்லை. நீங்கள் இன்று போகாவிட்டாலும் எதிர்காலத்தில் இசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து பார்க்கத்தான் போகின்றீர்கள். இன்று போகாதுவிடுவதால் நீங்கள் ஏதாவது தியாகம் செய்வதாக நான் நினைக்கவில்லை.

தாயகத்தில் நடைபெறும் பிரச்சனைகளை வெளிநாட்டு வாழ்வுடன் சேர்த்து குழப்பாதீர்கள்.

நாங்கள் வெளியில் படம் காட்டுவதை விட, எங்கள் உள்ளங்களில் அந்த நல்ல ஆத்துமாக்களிற்காக இரண்டு நிமிடங்கள் பிரார்த்தனை செய்வதே போதுமானது.

நாங்கள் மற்றவர்களை திருப்திப்படுத்துவதற்காக எங்கள் வாழ்க்கையை வாழமுடியாது.

நன்றி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீரகாவியமான வீரமறவர்களுக்கு வீரவணக்கங்கள்..

தமிழீழம் முழுவதும் வீரகாவியமான சு.ப தமிழ்செல்வன் உட்பட ஏனைய ஜந்து போராளிகளிற்கு தொடர்ந்து ஜந்து நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்,புலத்தில? வாழும் நாமும் செய்தி கேட்டவுடன் உணர்ச்சிவசபட்டோம் தொலைபேசியில் எமக்கு தெரிந்த நண்பர்களுடன் எமது ஆத்திரத்தை,மகிந்தாவை வெட்ட வேண்டும்,தலைவர் எனி பார்த்து கொண்டிருக்கக் கூடாது இன்றிரவே போய் குண்டு போட வேண்டும்,இதற்கு கட்டாயம் தலைவர் நல்ல பதில் கொடுக்கவேண்டும் அப்போது தான் எங்களின்ட ஆத்திரம் தீரும் என்று எமது ஆதங்களை கொட்டி தீர்தோம் யாழ்களத்திலும் அதே உணர்ச்சிகள் கொந்தளித்தன. வெள்ளி இரவு தான் கொந்தளித்தோம் கொதித்தோம் தூங்கி முழித்தவுடன் உணர்ச்சிகள் கொஞ்சம் அடங்கிட்டு சனிகிழமை தொடர்ந்து நண்பர்களுடன் உரையாடல் எப்படி நடந்திருக்கும் என்று புலன் விசாரனைகள்,சீனாகாரன் கொடுத்திருப்பான் இந்தியா கொடுத்திருக்கும் இல்ல உள்ளுகுள்ள இருந்து யாராவது மெசேஜ் கொடுத்திருப்பார்கள் என்று பல ஊகங்களும் விவாதங்களும், நடத்தினோம் இதிலும் சில நண்பர்கள் அவர்கள் வன்னியில் தொடர்பு கொண்டு கதைத்து போல் சில முடிவுகளை கூறினார்கள்.

சனி,ஞாயிற்று கிழமைகளிள் வழமையாக புலத்தி வாழும் எம்மவர்களுக்கு கலை நிகழ்ச்சி,இசை நிகழ்ச்சி அது தவிர்க்கமுடியாது.

நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற கலாச்சார உடைகளை அணிந்து போவது தான் எனது வழக்கம் கல்யாண வீடு என்றா பட்டுவேட்டி,பரதநாட்டிய இசை நிகழ்ச்சிகள் என்றால் படையப்பா ஸ்டைலில் குருத்தா போட்டு தமிழ் கலாச்சாரம் என்று நானே என்னுள் பெருமிதம் பட்டுகொள்வதும் உண்டு.இந்த ஞாயிற்கிழமை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் "இன்னிசை இரவு" மூன்று மாதத்திற்கு முதலே டிக்கட் வாங்கி போட்டேன் 2கிழமைக்கு முதலே குருத்தா சலவை செய்து அழகாக அறையில் தொங்கவிட்டிட்டேன்.வெள்ளி இரவு நிகழ்ச்சியிற்கு போக கூடாது என்று மனம் சொன்னது சனி இரவு மனம் மாற தொடங்கவிட்டது.ஆசை மனம் பேச தொடங்கியது $250 கொடுத்து டிக்கட் வாங்கி போட்டாய் வீணக்க போறாயா,இந்த நிகழ்ச்சிக்கு போகாட்டி இனி எப்ப எஸ்.பி.பி வந்து பாடுவாரோ தெரியாது போய் பார்,அவர் தொடக்க காலத்தில் பாடிய "ஆயிரம் நிலவே வா" என்ற பாடலை இப்பவும் குரல் மாறாம அப்படியே பாடுகிறார் போனால் கேட்கலாம் போ என்று ஆசை மனம் பேசி முடித்தது.

மனசாட்சி எதிர் கேள்வி கேட்டது "நீ ஈழ ஆதரவாளன் என்று புலம்புவாய்" அதற்காக உயிர் தியாகம் செய்த ஆறு மறவர்களிள் சு.ப தமிழ்செல்வன் அவர்களின் வித்துடல் இன்னும் விதைக்கபடவில்லை ஆனால் நீ இசை நிகழ்சிக்கு போக போறாயா என்றது.

உடனே ஆசை மனம் சமாதானபடுத்தி ஈழத்திற்காக தானே $50 - $100 என்று 3 வருடதிற்கு ஒரு முறை கொடுக்கிறனி தானே மற்றும் மாவீரர் நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு தடவையும் போறனி தானே தேசியத்திற்கு ஆதரவாக தானே நீ கதைக்கிறனி ஆகவே நீ ஈழ அபிமானி ஆதரவாளி ஏன் நீ ஒரு புலத்து போராளி என்று கூட சொல்லலாம் என்று ஆசை மனம் என்னை உசுபேற்றி எஸ்.பியின் நிகழ்ச்சிக்கு போ என்றது.ஆசை மனம் கோபபட்டு இப்படியும் சில கேள்விகளி எழுப்பியது நீ போகாட்டி என்ன நிகழ்ச்சி நடக்காதோ இல்லாடி பாலாவிற்கு தான் பாட்டு பாட வராதோ இல்லை ஈழபோராட்டம் தான் பின்னடையுமா என்ற கோப வினாக்களை எழுப்பியது . இறுதியில் ஆசை மனம் வென்றுவிட்டது.

தற்போது நிகழ்சிக்கு செல்ல தயார் நிக்ழ்ச்சியால் வந்த பின் என் ஆசை மனம் புலம்பதொடங்கும்......

நிகழ்ச்சிக்கு குறுத்தாபோட்டு அலங்கரித்து கொண்டு அரை மணித்தியாலதிற்கு முன்பே சென்று பாலாவையும் அவரின் தேன்மதுரகுரலையும் கேட்கதக்க இடத்தை கண்டுபிடித்து அமர்ந்தேன் இசை வெள்ளத்தில் மூழ்கியே விட்டேன் அவரது சரிரத்தை விட சாரீரம் நன்றாகவே இருந்தது என்னை மறந்தே விட்டேன் வீடு வந்து நாளைக்கு வேலைக்கு போக வேண்டும் ஆகவே மணிகூட்டில் அலார்ம் செட் பண்ணிவிட்டுபோட்டு தூங்கி விட்டேன்.

"அடே விசரா பைத்தியகாரா,$250 டொலர் பணம்,பாலாவின் முதல் பாட்டு அவரின் தேன்மதுர குரல் போன்ற துறக்க ஏலாத நீ எல்லாம் ஈழபோராட்டம் பற்றி கதைக்க வெளிகிட்டாய்,சரி சாதாரண நாட்களில் நடந்திருந்தாலும் அந்த மாவீரர்களின் ஆத்மா உன்னை மன்னித்திருக்கும் ஆனா நீயோ உன் சமுதாய விடிவிற்காக தனது இன்னுயிரை தியாக செய்த தியாகியின் உடல் அடக்கம் செய்ய முதலே எஸ்.பி பாலாவின் குரல் தேவைபடுகிறதோ" என்ற குரல் கேட்டு திடுகிட்டெழுந்தேன்.

புரிந்தது எனது ஆழ்மனதில் குற்ற உணர்வு தான் என்று உடனே தண்ணி குடித்துவிட்டு அடுத்த முறை எந்த நிகழ்ச்சி நடந்தாலும் போகிறது இல்லை என்ற முடிவுடன் குறட்டை விட்டு தூங்கிவிட்டேன் அடுத்த நாள் எழுந்து பத்திரிகை விளம்பர பகுதியை பார்த்தேன் பிரபல தென்னிந்திய பாடகியின் "கானமழை" என்று பிரசுரிக்கபட்டிருந்தது அதனை கண்டவுடன் கைகள் தொலைபேசியை நாடி சென்று மனதும் உற்சாகத்துடன் டிக்கட்டை பதிவு செய்ய தயாராகியது.மீண்டும் அநுராதபுர செய்தி போல் எப்போது வரும் என்று நண்பருக்கு தொலைபேசியை அடித்து வினாவினேன்.

Edited by putthan

சராசரி தமிழர்களின் உள்ளம் இதுதான் புத்தன் மனம் குரங்கு மனம் எப்பவும் தாவும்

புத்து மாமா நீங்களும் போனனீங்களோ சொல்லவே இல்லை யாரும் யாழ்கள மெம்பர்ஸ் வந்து இருந்தவையோ இல்லை சும்மா கேட்டனான் :D !!அவை எல்லாம் அப்படி வரமாட்டீனம் என்றாலும் கேட்டு பார்த்தனான்........யாரும் எங்கையும் போகலாம் புத்து மாமா அவைக்கு சுகந்திரம் இருக்கு அல்லோ ஆனாலும் பாருங்கோ சிலர் சொல்லுவீனம் "தலைவர் என்ன செய்யிறார்" என்று எல்லாம் அவைய பார்த்தா விசில் அடிக்கிற முதல் ஆட்கள் அவையா தான் இரூக்கீனம் :( பிறகு அவை என்ன சொல்லுவீனம் இந்திய சினிமா படங்களை பார்க்க கூடாது என்று எங்களுக்கு அறிவிரை கூறுவீனம் பார்த்தா இந்திய சினிமா ஸ்டார்ஸ் வந்தா போய் கும்பலோட கும்பலா கை தட்டுறவை அவை தான் :( !!இப்படியே மற்றவைக்கு சொல்லி சொல்லி தாங்க எல்லாம் செய்து கொண்டே இருப்பீனம்!! :)

மற்றவைய திருப்திபடுத்த நாங்கள் வாழ்கையை வாழ முடியாது என்று பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் அண்ணாவும் நினைத்திருந்தால் இன்றைக்கு உலக மட்டத்தில் ஈழதமிழர்கள் என்ற அடையாளத்தை பெற்று இருப்போமா!! :lol:

புத்து மாமா என்னவும் கதைக்க நல்லா இருக்கும் பாருங்கோ செய்யிறது சரியான கஷ்டம் பாருங்கோ!!இதற்காக நான் ஒன்றுக்கும் போறதில்லை என்று நினைக்க கூடாது நான் எல்லாவற்றிற்கும் போவேன் ஆனா மற்றவைய மாதிரி வரைவிலக்கணம் எல்லாம் கொடுக்கிறதில்லை பாருங்கோ :lol: !!ஒவ்வொருத்தரும் இதற்கு ஒவ்வொரு வரைவிலக்கணம் கொடுப்பீனம் தங்கள் மனதை தேற்ற சரியோ........நீங்க ஒன்றும் கவலைபட வேண்டாம் பிறகு எப்படி நிகழ்ச்சி இருந்தது நல்லா பாட்டு படித்தவரோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

" நாம் எமது வாழ்கையை மாற்றி அமைக்க தேவையில்லை ஆனாலும் இந்த வாழ்கையை எமக்கு தந்தவர்களை நினைவுபடுத்தினா நல்லா இருக்கும்" :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.