Jump to content

அறப்போர் -தமிழகத்தில் 28.07. அன்று வெளியீடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எம் பிள்ளைகளின் அறப்போர் !
----------------------------------------------------

பாலசந்திரன்.. வீதியெங்கும் எம்பிள்ளைகளையெல்லாம் பெரும் கதறலுடன் ஓடி வர வைத்தவன். அவனின் அந்த ஒற்றைப்பார்வையே மனசாட்சியுள்ள அத்தனைப்பேரையும் அசைத்துப்பார்த்தது.

அதன் விளைவே இந்தியா கண்டிராத ஒரு பெரும் மாணவர் எழுச்சியை கடந்த பிப்ரவரி மாதத்தை வரலாறு தன்னுள் பதிவு செய்து கொண்டது. 

உண்மையிலே அந்த நாட்கள் மிகுந்த மன உளைச்சலாக இருந்தது. முத்துக்குமார் மரணத்தினால் களத்திற்கு வந்து கோட்டைவிட்ட எங்களுக்கு பாலசந்திரனால் களத்திற்கு வந்த மாணவர் போராட்டம் கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்தது. 

லயோலா கல்லூரி மாணவர்கள் ஆரம்பித்து வைத்த உணர்ச்சியூட்டும் ஒரு சிறு நெருப்பு தமிழகம் எங்கும் பற்றி எரிந்தது. அந்த போராட்டம் வெற்றி தோல்வி என்ற விவாதத்தையெல்லாம் விட எங்களுக்கு அந்த போராட்டம் ஒரு நம்பிக்கையை அளித்தது. 

இன்று வீதிக்கு வந்த இந்த பிள்ளைகள் எல்லாம் ஈழத்தில் இறுதி யுத்த பேரழிவு நடந்த சமயத்தில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். அதன்பிற்கு தமிழகம் முழுக்க பல்வேறு இயக்கத்தினர் இறுதி யுத்த கொடூரத்தை பிரச்சாரமாக செய்ததன் பலனே இன்று வீதிக்கு போராட வந்திருக்கிறார்கள் அந்த மாணவர்கள்.

இந்தி திணிப்புக்கு எதிராக எமக்கு முந்தைய தலைமுறை நடத்திய போராட்டங்களை அதனை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த களவாணிகளே அடுத்த தலைமுறைக்கு அதை சொல்லாமல் இருட்டடிப்பு பண்ணிய நிலையில், இப்போது நடந்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த போராட்டத்தை ஆவணப்படுத்துவது மிக முக்கியமான பணி.

அந்த பணியை எனக்கு பிடித்த நேர்மையான பத்திரிகையாளரும் இப்போது இயக்குனராக மாறியிருப்பவருமான வெற்றிவேல் சந்திரசேகர் சிறப்பாக செய்திருக்கிறார். 

`அறப்போர்’ என்றப்பெயரில் ஆவணப்படுத்தியிருக்கும் மாணவர் போராட்ட திரைப்படம் ஜூலை 28 ஞாயிறு மாலை 5:30க்கு அண்ணா சாலையில் ஸ்பென்ஸர் எதிரில் இருக்கும் புக் பாய்ண்ட் அரங்கத்தில் வெளியிடப்படுகிறது. நண்பர்கள் அனைவரும் தவறாது குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். 

வாருங்கள் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்.. நம் பிள்ளைகள் நடத்திய அறப்போரின் வரலாற்றை !

இயக்குனருடன் பேச : 9994155339

-கார்ட்டூனிஸ்ட்.பாலா
27-7-13


fb

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் மீண்டும் அடிப்பார்கள்-காசியானந்தன்!

 

இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் போராட்ட வரலாற்று ஆவணப்படமான அறப்போர் ஆவணப்படம் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றம் பொது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மாணவர்களை தமிழ்நாட்டு மாணவர்கள் என்று சொல்லுவதை விட தமிழ்நாட்டு மக்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் என்று நான் சொல்லுகின்றேன்.உண்மையிலேயே தமிழ்நாட்டு மக்களின் சிந்தனையில் ஒரு பெரிய மாறுதலை கொண்டுவந்தவர்களாக மாணவர்கள் போராட்டத்தை நடத்தி அவர்கள் யார் என்பதை வரலாற்றில் பதிவு செய்திருக்கின்றார்கள்.ன் ஆற்றல் மறைந்து கிடந்தது மாணவர்கள் போராளிகள் என்பதை நிறுவினார்கள் நிலைநாட்டினார்கள் அதனை நாங்கள் பார்த்தோம் மாணவர்கள் அப்படித்தான் வரலாற்றில் பெரிதும் இருந்திருக் கின்றார்கள். சிங்களவர் தமிழீழ மக்களை ஒடுக்கியபொழுது இந்த மண்ணில் இராயறாஜேந்திரன் போன்றவர்கள் சுந்தரபண்டியன் போன்றவர்கள் இங்கிருந்து படைஎடுத்துக்கொண்டு வந்து சிங்களவர்களை எதிர்த்து தமிழருக்கு துணையாக இருந்தார்கள் அது அந்தக்காலம்.இன்று அப்படி இந்த மண்ணில் இருந்து ஓடிவந்து காப்பதற்கு யாரும் இல்லை.இன்று ஏதும் இல்லாத தமிழனுக்கு யாரும் இல்லை இப்படிப்பட்ட மன்னர்களின் உணர்வுகளை மாணவர்களிடம் தான் அந்த எழுச்சியினை பார்க்கமுடிந்தது.என்றும் தெரிவித்த காசியானந்தன் அவர்கள்.

இன்று ஈழமண்ணில் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் ஒன்றும் இல்லாத ஒன்றாக 13ஆவது சட்டதிருத்தம் காணப்படுகின்றது  முழுக்க முழுக்க சிங்களவர்களால் சிக்கிய அடிமகளாக தமிழர்களை ஆக்குகின்ற முயற்சிதான் 13ஆவது சட்டதிருத்தம் இன்றைக்க அதுதான் தமிழர்களுக்கு எல்லாமான தீர்வு என்று சொல்லப்படுகின்றது அது பச்சைப்பொய் அதில் எதுவுமேகிடையாது.

 

1833 ஆம் ஆண்டு கோல்புறுக்கால் சொல்லப்பட்டதுதான் தமிழர்களின் தாயகம் வடக்கு கிழக்கின் எல்லைகள் என்று.அவன் தமிழ்தேசத்தையும் சிங்கள தேசத்தையும் இணைப்பதற்காக வந்தவன் அதுதான் தமிழர்களின் தாயகம் என்று சொன்னான்.

தாயகத்தின் இன்று சொல்லணாத் துன்பங்களை மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்ற காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டில் மாணவர்கள் எழுச்சியினை காட்டினார்கள் இங்கு மாணவர்கள் எழுச்சியினை மேற்கொள்ள அமெரிக்காவின் அதிகாரிகள் கூட இந்த போராட்டத்தை பற்றி பேசியிருக்கின்றார்கள்.தமிழ்நாட்டில் மாணவர்களுடைய போராட்டம் தான் சிங்களவர்களுடைய எதிரிநாடு என்று தமிழ்நாட்டில் தீர்மானம் போடவைத்தது.

இந்த மாணவர்களின் போராட்டத்தை சிறப்பான ஒருஆவணமாக வெற்றிவேல் உருவாக்கி எடுத்திருக்கின்றார்.

ஒருபாலச்சந்திரனின் படம் உலகினை உலுக்கியது இப்படியான ஆவணங்கள் உலகினை உலுக்கும்,உலகினை உருவாக்கும்,உலகை தமிழீழவிடுதலை உரிமைபோர் நோக்கி நகர்த்தும் என்று உறுதியாக நம்புகின்றேன்.

தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் மீண்டும் அடிப்பார்கள் அப்படி அடிக்கின்ற போழுது தமிழ்நாட்டில் மாணவர்கள் நெருப்பாக எழுந்து தமிழீழத்தில் நடக்கினற் மிகப்பெரிய எழுச்சியான விடுதலைப்போருக்க தோழ் தாருங்கள் என்று நான் மாணவர்களை வேண்டிநிக்கின்றேன்.என்றும் காசியானந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அறப்போர் ஆவணப்படம் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது

இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் போராட்ட வரலாற்று ஆவணப்படமான அறப்போர் ஆவணப்படம் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் சென்னை அண்ணாசாலை புக்பாயின்ட்அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் வரவேற்புரையினை சி.கபிலன் நிகழ்த்த அரங்க நிகழ்வுகளை கவிபாஸ்கர் தொகுத்து வளங்கினார்.அறப்போர் ஆவணப்படத்தினை கவிஞர் காசியானந்தன் அவர்கள் வெளியிட மே 17இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி பெற்றுக்கொண்டார்.

 

தொடர்ந்து கருத்துரைகளை உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் அவர்கள்,தமிழ்தேசபொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் வெங்கட்ராமன்,ம.செந்தமிழன்,வெற்றிவேல்சந்திரசேகர், ஆகியோர் நிகழ்த்த சிறப்புரையினை இயக்குனர் அமீர் நிகழ்தினார்தொடர்ந்து அறப்போர் ஆவணப்படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு நினைவு பரிசில்களை இயக்குனர்அமீர் வழங்கி மதிப்பளித்துள்ளார்.

 

http://www.youtube.com/watch?v=StvUE93W3RI

 

 

arappoor%2004.jpg

arappoor%2006.jpg

arappoor%2005.jpg

arappoor%2003.jpg

arappoor%2002.jpg

arappoor%2001.jpg

arappoor%2009.jpg

arappoor%2008.jpg

arappoor%2007.jpg

 

 

http://irruppu.com/?p=32884

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Documentary on Tamil Nadu student uprising released in Chennai

[TamilNet, Sunday, 28 July 2013, 21:42 GMT]

A documentary based on the Tamil Nadu student uprising that challenged establishments’ abetment of the genocide of the Eezham Tamil nation, was released to the public in Chennai on Sunday. Titled “A'rappoar” (Righteous Struggle), the documentary focuses on the student upsurge against the pro-LLRC US Resolution in March 2013. The documentary, screened at Book Point Hall in Anna Salai on Sunday to packed audiences, also saw speakers talking about the continued international injustice to the Eezham Tamil nation and the future of the students’ struggle in Tamil Nadu. 

Kollywood Director Ameer, Eezham Tamil poet Kasi Anandan, Thirumurugan Gandhi from the May 17 Movement, K. Venkatraman from the Tamizh Desiya Pothuvudamai Katchi, and director M. Senthamizhan spoke at the event. 

The documentary, written and directed by V. Vettrivel Chandrashekar is produced by C. Kabilan from Senkodi Media Works. 

Mr. Vettrivel was the author of the short book “Thuruppuch Cheeddu” about K. Muthukkumar, the youth activist who had triggered mass student protests in Tamil Nadu in early 2009 by his self-immolation for the cause of the Eezham Tamils.

He was also assistant director to the movie “Paalai” directed by M. Senthamizhan. 

The director of “A'rappoar” also directed the documentary “Ippadikku Thoazhar Sengkodi”, based on grassroots activist Senkodi from Tamil Nadu who had immolated herself for the cause of the three Tamils on death row in the ‘Rajiv Gandhi assassination case’.

 

http://tamilnet.com/art.html?catid=13&artid=36506

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தீலிபன் அருந்ததி  தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்   வாழ்க ❤️ வளத்துடன்
    • திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.
    • இந்த அமைப்பு இன்னும் தற்பொழுது உள்ள (கரண்ட் ரென்ட்) நிலைமைகளை அறிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன் '''' எங்கன்ட ஆட்களும் எலன் மாஸ்க் உடன் தொடர்பில் இருக்கினம் ...யூ ரியூப்பில் தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் நாலு மைக் இருந்தால் போதும் அத்துடன் சந்தையில் நாலு சனத்திட்ட பேட்டி கண்டு அதை போட்டா காணும் என்ற நிலையில் இருக்கிறோம்...  அந்த காலத்திலயே வேலியில் நின்று விடுப்பு கேட்டு வாக்கு போடுற சன‌ம் .....இப்ப குசினிக்குள்ள விடுப்பு வருகிறது சும்மாவா இருப்பினம் .... இனி வரும் காலங்களில் வாக்குசாவடிக்கு போகாமல் அடிச்ச ஆட்டிறைச்சி கறி சமைச்சு கொண்டு வீட்டிலிருந்து வொட்டு போடும் நிலை வந்தாலும் வரும் 
    • தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்க, முதலில்,  தமிழனின் குடிப்பரம்பல்  வடக்கு கிழக்கில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது உந்தப் புலி வால்களுக்குப் புரிவதில்லை.  ☹️
    • தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்திவைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்துபோய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்.   என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள்.இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது. இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது. இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம்.நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம். ஆகவே எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள். இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார். ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. உங்களுக்கு தெரியும்.தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார். அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார்.பெயரை மறந்துவிட்டேன்.அவர் ஒரு பெரிய வியாபாரி.அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி . பணத்தில் உயர்வான குடும்பம். இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது.இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன் . இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சனை என்று வெளிநாட்டிற்கு சென்றார். அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள். இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது.மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைகுழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது . அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது.ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து விடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள்.   பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம். இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காககிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள். அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது. யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும். அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித்தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அளியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.   https://akkinikkunchu.com/?p=298338   முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் என்று தெரியாத அளவுக்கு பிள்ளையான் இருக்கின்றார்!
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.