Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள, அகர் மரம் வளர்ப்பு- ஒரு கிலோ எண்ணெய் விலை ஒரு லட்சம் ரூபாய்

Featured Replies

அகர் மரம் வளர்ப்பு.

"செலவில்லாமல் வருமானம் பெறலாம்!' 

உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள, அகர் மரம் வளர்ப்பு குறித்து கூறும் தர்மேந்திரா: என் சொந்த ஊர், கர்நாடகாவின் சிக்மகளூர். பரம்பரையாக, விவசாயம் தான் பார்த்து வருகிறோம். இதனால், எனக்கு சிறு வயதிலிருந்தே விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகம். அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று, விவசாயம் சார்ந்த புதிய உத்திகளையும், தொழில்நுட்பங்களையும், புது ரகச் செடிகளையும் இந்தியாவிற்குக் கொண்டு வந்து பயிரிடுவேன். அப்படி ஒருமுறை இந்தோனேசியாவிற்குச் சென்ற போது, அங்குள்ள விவசாயிகள் பெரும்பாலானோர், அகர் மரத்தைப் பயிரிட்டு, அதிக லாபம் அடைந்து வருவதை அறிந்தேன். அதை பயிரிட எனக்கும் ஆர்வம் ஏற்பட்டு, முதலில், குறைந்த செடிகளை மட்டும் வாங்கி வந்து, எங்கள் சொந்த எஸ்டேட்டில் பயிரிட்டேன். செலவில்லாமலேயே, நல்ல வருமானம் கிடைத்தது. சந்தன மரம் 20 ஆண்டுகளில் கொடுக்கும் வருமானத்தை, அகர் மரம், 10 ஆண்டிற்குள் கொடுத்து விடுகிறது. உலகிலேயே மிகவும் விலை உயர்ந்தது அகர் மரம். சந்தன மரத்தை விட, 10 மடங்கு சந்தை மதிப்பு கொண்டது. இன்றைய சந்தை விலை நிலவரப்படி, ஒரு கிலோ அகர் மரத்தின் விலை, தரத்தைப் பொறுத்து, 50 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரையும், ஒரு கிலோ அகர் எண்ணெயின் விலை, 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்ச ரூபாய் வரைக்கும், அதன் தரத்தைப் பொறுத்து விற்கப்படுகிறது. இந்த மரத்திலிருந்து, 500 வகையான வாசனை திரவியங்கள், அகர்பத்திகள், விலையுயர்ந்த சோப்புகள் மற்றும் பல வகையான பொருட்களும், மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன. அகர் மரம் பயிரிட்ட பின், அறுவடை வரையிலும், விவசாயிகளுக்கு எவ்விதச் செலவையும் கொடுப்பதில்லை. ஆண்டிற்கு, 125 - 750 செ.மீ., வரையிலான மழையளவும், கடல் மட்டத்திலிருந்து, 300 முதல், 1,500 மீட்டர்கள் உயரமுள்ளதுமான பிரதேசங்கள் தான், அகர் மர வளர்ப்பிற்கு ஏற்றவை. தொடர்பிற்கு: 94484 34561

 

ஒரு கிலோ எண்ணெய் விலை ஒரு லட்சம் ரூபாய்

 

உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள அகர் மரம் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளித்து வருகிறது கர்நாடகாவில் உள்ள ஓர் அமைப்பு

ரு கிலோ சமையல் எண்ணெய் 150 ரூபாய்க்கு மேல்...’ என்று அலுத்துக்கொள்பவரா நீங்கள்? ஒரு கிலோ அகர் எண்ணெய் ஒரு லட்சம் ரூபாய் என்பது உங்களுக்குத் தெரியுமா?
அது என்ன அகர் எண்ணெய்?
 
        உலகிலேயே மிக விலை உயர்ந்தது அகர் மரம். சந்தன மரத்தைவிட சுமார் 10 மடங்கு சந்தை மதிப்பு கொண்டது. இன்றைய சந்தை விலை நிலவரப்படி 1 கிலோ அகர் மரத்தின் விலை தரத்தைப் பொறுத்து 50 ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபா வரையும், 1 கிலோ அகர் எண்ணெயின் விலை 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாக்கும் அதன் தரத்தைப் பொறுத்து விற்கப்படுகிறது. இந்த மரத்திலிருந்து 500 வகையான வாசனைத் திரவியங்கள், அகர் பத்திகள், விலையுயர்ந்த சோப்புகள் மற்றும் பல்வேறு வகையான பொருட்களும், மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன.
 அகர் மரம் வளர்ப்பது குறித்து விவசாயிகளுக்கு கற்றுக் கொடுத்து, அகர் கன்றுகளைப் பயிரிட வைத்து, உரங்கள் மற்றும் தேவையான உதவிகளை பைசா செலவின்றி இலவசமாகச் செய்து வருகிறது, கர்நாடகாவைச் சேர்ந்த வனதுர்கி என்கிற அமைப்பு. தவிர, மரங்கள் வளர்ந்த பிறகு, அவற்றை நல்ல விலைக்கும் வாங்கி சந்தைப்படுத்துகிறார்கள்.

       இந்த அமைப்பின் நிறுவனர் 32 வயதான தர்மேந்திராவிடம் பேசினோம். "எனக்குச் சொந்த ஊர் கர்நாடகாவின் சிக்மகளூர். பரம்பரை, பரம்பரையாக விவசாயம்தான் பார்த்து வருகிறோம். இதனால், எனக்குச் சிறு வயதிலிருந்தே விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்ததால், அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வேளாண்மை சார்ந்த புதிய உத்திகளையும், தொழில் நுட்பங்களையும் கற்று புது ரகச் செடிகளை இந்தியாவிற்குக் கொண்டு வந்து பயிரிடுவேன். அப்படி, ஒருமுறை இந்தோனேஷியாவிற்குச் சென்றபோது, அங்குள்ள விவசாயிகள் பெரும்பாலானோர் அகர் மரத்தைப் பயிரிட்டு, அதிக லாபம் அடைந்து வருவதை அறிந்தேன். இதைப் பார்த்த எனக்கு, நம் நிலத்திலும் அகர் மரம் பயிரிட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு, முதலில் குறைந்த செடிகளை மட்டும் வாங்கி வந்து எங்கள் சொந்த எஸ்டேட்டில் பயிரிட்டோம். செலவில்லாமலேயே நல்ல வருமானம் கிடைத்தது. சந்தன மரங்களின் வேர்கள் ஒட்டுண்ணித் தன்மை கொண்டவை. இதனுடன், அகர் மரத்தை ஒப்பிட்டால் சந்தன மரம் 20 ஆண்டுகளில் கொடுக்கக் கூடிய வருமானத்தை, அகர் மரம் வளர்க்க ஆரம்பித்த 8 லிருந்து 10 ஆண்டுகளுக்குள் கொடுக்க ஆரம்பித்துவிடும்.

     நம் தென்னிந்தியாவில் அதிக விவசாயிகள் இருந்தாலும், அகர் மரம் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. அதனால், இது குறித்து நம் விவசாயிகளுக்கும் கற்றுக் கொடுத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் என்னுள் வந்ததால், வனதுர்கி அமைப்பை ஆரம்பித்து 30 பேர் கொண்ட எங்கள் அமைப்பினருடன் சேர்ந்து செயலில் இறங்கிவிட்டேன்.

    அன்றிலிருந்து, இன்றுவரை இந்தியா முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் அகர் மர வளர்ப்பைப் பற்றிக் கற்றுக்கொண்டும், குறைந்த விலையில் செடிகளை வாங்கிக்கொண்டும் சென்றுள்ளனர்.

    ஒரு அகர்மரக் கன்றை 50 ரூபாக்குக் கொடுக்கிறோம். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவிலேயே அதிக அகர் மரப் பண்ணைகள் வைத்திருப்பதும், தென்னிந்தியாவில் அகர் மர வளர்ப்பை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதும் எங்கள் வனதுர்கி அமைப்புதான். அகர் மரத்தின் பூர்வீகம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தொடங்குகிறது. ஆனால், இம்மரத்தைப் பற்றி மக்கள் அதிகளவில் அறிந்திருக்கவில்லை. அகர் மரங்களின் வரலாறு சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானது. இம்மரம் நம் நாட்டின் கலாச்சாரத்துடனும், இறை நம்பிக்கையுடனும் ஒன்று கலந்திருக்கின்றது.

          இம்மரத்தை விவசாயிகளுக்கு எங்கு விற்பது, எப்படி சந்தைப்படுத்துவது என்ற கவலை தேவையில்லை.ஏனென்றால், நாங்களே நல்ல விலைக்கு வாங்கிக் கொள்கிறோம். அகர் மர வளர்ப்பிற்கு முக்கியமானது பொருத்தமான தட்பவெட்ப நிலைதான். பலதரப்பட்ட மண் வகைகளில் வளர்ந்தாலும் இயற்கை மண் வளம் மிக்க காட்டுப் பிரதேசங்களில்தான் நன்றாக வளரும். ஆண்டிற்கு 125 -750 சேன்டி மீட்டர் வரையிலான மழையளவுள்ளும், கடல் மட்டத்திலிருந்து 300 முதல் 1,500 மீட்டர்கள் உயரமுள்ளதுமான பிரதேசங்கள்தான் அகர் மர வளர்பிற்கு ஏற்றவை" என்று, அகர் மரம் குறித்த பல்வேறு தகவல்களை ஆர்வமாக நம்முடன் பகிர்ந்துகொண்டார் தர்மேந்திரா.

          அகர் மரம் பயிரிட்டபின், அறுவடை வரையிலும் விவசாயிகளுக்கு எவ்விதச் செலவையும் கொடுப்பதில்லை. சிறப்பான கவனம் கொடுத்துப் பாதுகாக்க வேண்டும் என்ற அவசியமும், சிரமமும் ஏற்படுவதில்லை. இந்த மரங்களின் மெல்லிய இலைகள் உதிர்ந்து, அவைகளே மரங்களுக்கு இயற்கை உரமாகி விடுகின்றன. கர்நாடகாவில் மட்டும் 3,600 அகர் மரப் பண்ணைகள் உள்ளன. நம் தமிழக விவசாயிகள் அகர் மரத்தைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. அகர் மர வளர்ப்பைக் கற்றுக்கொடுக்கும் வனதுர்கி அமைப்பின் முக்கியமான சிறப்பு என்னவென்றால், விவசாயிகளையும் தன்னுடைய அமைப்பில் பங்குதாரர்களாக்கிக் கொண்டு, அவர்களின் விளைபொருட்களை வாங்கிக்கொள்ள முன்கூட்டியே ஒப்பந்த முறையும் போட்டுக்கொள்கிறது. இதற்காக 10 வருட அக்ரிமெண்ட் முறையும் உண்டு.

                இந்தச் சங்கம்,விவசாயிகளுக்கு மருத்துவ இன்சூரன்சும் செய்துகொடுத்துள்ளது. அகர் மர வளர்ப்பு பற்றி மட்டுமல்லாமல், புதிய ரக விவசாய முறைகளையும், ஜீரோ பட்ஜெட் முறைகளையும் இலவசமாகக் கற்றுக் கொடுத்து வருகின்றனர். விவசாயத்திற்குத் தேவையான உரங்களை ஆர்கானிக் முறையில் இந்த அமைப்பினரே தயாரித்து இலவசமாகக் கொடுக்கின்றனர். இம்மரங்கள் மியான்மர், கம்போடியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, தென்கொரியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், வாலோஸ் ஆகிய நாடுகளிலும் வளர்கின்றன.

 
            சந்தன மரம் வளர்ப்பதற்கு வழங்குவது போலவே, அகர் மர வளர்ப்பிற்கும் மத்திய அரசு 75 சதவிகிதம் மானியத்தை ஆயுஷ் துறையின் மூலம் வழங்குகிறது. மேலும் மானியம் வழங்கும் வழிமுறைகள் பற்றி மற்ற துறைகளிலும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மேலும் வனதுர்கி அமைப்பு மலைவாழ் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் மருத்துவச் செலவு மற்றும் படிப்புச் செலவுகளைப் பார்த்து வருகிறது. இவர்களுக்கு மேலும் பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது.
 
          "அகர் மரங்கள் தோற்றத்தில் சிறிய மரவகையைச் சேர்ந்தவை. விசேஷ கவனம் கொடுத்து வளர்க்க வேண்டிய அவசியமில்லை. காப்பி, தேயிலை, பாக்கு, தென்னை முதலிய தோட்டங்களில் ஊடுபயிராகவும் வளர்க்கலாம்.
அகர் மரங்களுக்கு தேசிய அளவிலும், உலக அளவிலும் எப்போதும் அதிகத் தேவை இருந்துகொண்டே இருக்கிறது. மரங்களைச் சுத்தப்படுத்த ஆலையும் வைத்துள்ளோம். இம்மரத்தை வளர்ப்பதன் மூலம் விவசாயக் குடும்பங்கள் ஒளிமயமான, நம்பிக்கையான எதிர்காலத்தைப் பெற முடியும்" என்று கண்களில் நம்பிக்கையுடன் பேசி முடித்தார் தர்மேந்திரா.
தொடர்புக்கு: 94484 34561 
நன்றி: புதிய தலைமுறை.
 
31077503.jpg
 
அகர் மரம்(Agar tree,Agarwood) என்பது புதிய வகை மரம் அல்ல,நமது நாட்டில் பல ஆண்டு காலமாக  சித்த ,ஆயுர்வேத மருந்துகள்  மற்றும் வாசனை பொருட்கள் தயாரிக்க   உபயோகிக்க பட்டு வந்த மரம் தான்.ஆனால்  தற்போது  இந்த மரம் அழிந்து வரும் மர வகைகளில் வரிசையில் உள்ளது..இந்த மரத்தில் இருந்து தான் உலகிலேயே மிக அதிக மதிப்புடைய அகர் ஆயில் எடுக்க படுகிறது,ஒரு கிலோ  ஆயில் இன் விலை அதிக பட்சம ஒரு லட்சம் வரைக்கும் விற்க படுகிறது.ஒரு கிலோ மர கட்டையின் விலை 30000 இல் இருந்து 60000 ஆயிரம் வரைக்கும் விற்க படுகிறது.

இதன் நன்மைகள் 

-------------------------------

1 . மிகவும் வேகமாக  வளரகுடியது.

2 . சந்தன மரம் போல அல்லாமல்  7  அவது  வருடத்தில்  இருந்தே அறுவடை செய்யலாம்.

3 . ஓரளவு வறட்சியை தாங்ககுடியது. ( ஆனால் மிக வறண்ட நிலங்களுக்கு அகர் உகந்தது  அல்ல,வறண்ட நிலங்களுக்கு சந்தன மர சாகுபடி  உகந்தது,சந்தன மர வளர்ப்பு கட்டுரையை பார்க்கவும்)

4 . உலக அளவில் அகர் மரங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.

7  வருடம்  நன்கு வளந்த ஒரு மரத்தில் முலம் 2 லட்சம் ருபாய் வரைக்கும் மிக எளிதாக பெறலாம்.3  மிட்டர் இடைவெளியில்  ஏக்கருக்கு  சுமார் 300  மர கன்றுகள்  நடலாம்.பொதுவாக அகர் இந்தியாவில் அஸ்ஸாமில்  அதிகமாக வளர்க்கபடுகிறது,தற்போது கர்நாடகாவில்  அதிக விவாசாயிகள் அகர்  வளர்ப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழ்நாட்டில்  சில தனியார் வேளாண்மை  பண்ணைகள் , அகர் நாற்றுகள் மற்றும் தேவையான உரங்களை வழங்கி ,அவர்களே நல்ல விலைக்கு  மரங்களை வெட்டி கொள்கிறார்கள்...

இது போன்ற தகவல்கள் நான் ஒரு விவசாய இதழிலும் சில விளம்பரங்களிலும் பார்த்தவை.உண்மையான தகவல் அறிய "அகர் வளர்ப்பில் உள்ள பிரச்சனைகள் " என்ற பதிப்பை படிக்கவும் .  

மேலும் விவரங்கள் பெற  தொடர்பு கொள்ளவும்: ஆனந்தபிரபு,ச  9886650235,anandhaprabhu@gmail.com

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=369242&Print=1

http://www.agriinfomedia.com/profiles/blogs/4679593:BlogPost:29078

http://newvivasayam.blogspot.ch/2011/05/blog-post_09.html

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த இணையத்தளங்களில்

பல வகைப்பட்ட விவசாய / கால்நடை வளர்ப்பு சம்மந்தமான  செய்திகள் (தமிழில்)உள்ளன.

http://gttaagri.relier.in/

http://mygreenindiaa.blogspot.ch/

http://www.agriinfomedia.com/

 

 

  • தொடங்கியவர்

இலங்கையில் அகர் மரம் வளர்ப்பு ஏற்கனவே என்னால் இணைக்கப்பட்ட இணைப்பு

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138309&hl=

  • கருத்துக்கள உறவுகள்

-----

    ஒரு அகர்மரக் கன்றை 50 ரூபாக்குக் கொடுக்கிறோம். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவிலேயே அதிக அகர் மரப் பண்ணைகள் வைத்திருப்பதும், தென்னிந்தியாவில் அகர் மர வளர்ப்பை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதும் எங்கள் வனதுர்கி அமைப்புதான்.

-----

 

------

 வாடிக்கையாளர் ஒருவர் 1400 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் கன்றானது 8 வருடங்களின் பின்னர் 50,000 ரூபா பெறுமதியை அடைகிறது.

 

இலங்கையில்... ஒரு அகர் மரக்கன்று 1400 ரூபா.

கர்நாடகாவில் ஒரு கன்றின் விலை 50 ரூபா.

இந்தியாவிலிருந்து, இக்கன்றுகளை தருவிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.