Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது நியூசிலாந்துப்பயணம்

Featured Replies

எனது நியூசிலாந்துப்பயணம்

2005ல் நான் நியூசிலாந்து நாட்டுக்கு இலவச விமானக் கட்டணத்தில் பிரயாணம் செய்தேன். பலர் பல நாடுகளுக்கு பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது. உறவினர்களின் திருமணத்திற்கோ, யாராவது வேண்டியவர்கள் இறக்கும் போதோ, வேலை விசயமாகவோ, சுற்றுலாவுக்கோ , தாயகத்துக்கோ அல்லது வேறு விசயமாகவோ பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்படி பயணம் செய்யும் போது குறிப்பிட்ட சில விமானங்களில் பயணம் செய்தால் எமக்கு புள்ளிகள்(Points) கிடைக்கும். அப்புள்ளிகளை குறிப்பிட்ட புள்ளிகளை அடைந்ததும் எமக்கு இலவச விமானச்சீட்டுக் கிடைக்கும். நான் சிங்கப்பூர் (Singapore Airlines) விமானத்தில் தான் அதிகம் பிரயாணம் செய்வதினால் எனக்கு அப்பிரயாண புள்ளிகள் கிடைக்க Kris Flyerல் இணைந்தேன். சிங்கப்பூர் எயர்லான்ஸில் பிரயாணம் செய்வதினாலும் அல்லது அதன் சக விமானங்களில்( Star Alliance Partners - Air Canada, Air Newzealand, ANA, Asiana Airlines, United Airlines,Thai Airlines, Lufthansa,SAS, BMI, Austrian Airlines, South African Airlines, Swiss, US Airways, Tap Portugal, SpanAir, other airlines - Delta, Virgin Atlantic, Mexicana, Silk Airlines) பிரயாணம் செய்வதினாலும், பிரயாணிக்கும் மைல்களில் அளவுக்கு சரினிகராக புள்ளிகள் கிடைக்கும். (Business, First Classல் பயணிக்கும் போது கூடபுள்ளிகள்)

குறிப்பிட்ட தங்குமிடங்களில் இருப்பதினாலும் (உ+ம் Accor ,Hilton ,Taj Hotels )புள்ளிகள் பெறலாம்

Avis,Hertz போன்ற மகிழுந்துகளை வாடகைக்கு பெறுவதினாலும் புள்ளிகள் பெறலாம்

சிங்கப்பூரில் Shell பெற்றோல் நிலையத்தில் பெற்றோல் அடிக்கும் போதும், சிங்கப்பூர் எயர்லைன்ஸில் பிரயாணம் செய்யும் போது பொருட்களை வாங்கும் போதும் புள்ளிகள் பெறலாம்

இன்னும் பலவழிகளில் புள்ளிகள் பெறலாம். மேலதிக விபரங்களுக்கு http://www.singaporeair.com/saa/en_UK/cont...miles/index.jsp

Edited by Aravinthan

  • Replies 253
  • Views 31k
  • Created
  • Last Reply

தகவல்களுக்கு நன்றி உங்கள் நியுசிலாந்து அனுபவங்களை படத்துடன் வன அற்று பற்றி எழுதியது போல எழுதுவீர்கள் என நினைகின்ரேன்

அரவிந்தன் நியுசீலாந்து பயணம் பற்றி அறிய ஆவலாக உள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து பயண அனுபவங்களை உங்களுடன் சேர்ந்து நாமும் அறிய ஆவல்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சிட்னியில் இருந்து அமெரிக்காவின் வட கிழக்கு மாகாணத்துக்கு சென்று திரும்ப கிட்டத்தட்ட 20000 புள்ளிகள் கிடைக்கிறது. இலங்கைக்கு சென்று திரும்ப கிட்டத்தட்ட 11000 புள்ளிகள் கிடைக்கும். அதாவது பயணிக்கும் மைல்களின் அளவுக்கு சமமாக புள்ளிகள் கிடைக்கும். 25000 புள்ளிகள் கிடைக்கும் போது நியூசிலாந்துக்கு சென்று வர இலவச வீமானச் சீட்டினைப் பெறலாம். ஆனால் சேர்க்கும் இப்புள்ளிகள் 3 வருடத்தில் முடிவடைந்து விடும். முடியமுன்பு இப்புள்ளிகளுக்கு ஏற்ப வீமானச் சீட்டுக்கள் வாங்க வேண்டும். 2005ல் எனக்கு கிட்டத்தட்ட 40000 புள்ளிகள் இருந்தது. இலவச வீமானச் சீட்டு தானே, ஏன் வீணாக்க வேண்டும் என்று, எங்கு செல்லலாம் என்று யோசிக்கும் போது நியூசிலாந்து நாடு யாபகத்துக்கு வந்தது.

நான் சிங்கப்பூர் எயர்லைன்சில் பிரயாணம் செய்வதினால் 'KrisFlyer ' பெறுவது போல, நீங்களும் வேறு சில விமானங்களின் மூலம் புள்ளிகள் பெறலாம். (Frequent Flyer points - Qantas,British Airways,American Airlines,Cathay Pacific,Japan Airlines...... ( http://www.qantas.com.au/fflyer/dyn/partners/airline) ,

Virgin Blue மூலம் பெறப்படும் புள்ளிகள் ஆயூள் வரைக்கும் பாவிக்கலாம்.

  • தொடங்கியவர்

நியூசிலாந்தில் 10 நாட்கள் பிரயாணம் செய்வது என்று முடிவெடுத்தேன் . கிட்டத்தட்ட 4 கிழமைகளில் நியூசிலாந்தை முழுவதுமாகப் பார்க்க முடியும். நியூசிலாந்து வட நியூசிலாந்து, தென் நியூசிலாந்து என இரு பெரிய தீவுகளைக் கொண்ட நிலப்பரப்பு. 2 கிழமைகளில் வட நியூசிலாந்தையும், 2 கிழமைகளில் தென் நியூசிலாந்தையும் பார்க்கலாம். இலவச வீமானச்சீட்டுக்காக உபயோகிக்கும் புள்ளிகளினைக் கொண்டு transit வீமானச் சீட்டுக்களை பெற முடியாது. சிட்னியில் இருந்து 'Kris Flyer ' ல் உள்ள விமானங்களில் வேறு இடங்களில் நிற்காமல் நியூசிலாந்துக்கு செல்லும் ஒரே ஒரு விமானம் ' Air Newzealand' . இவ்விமானம் சிட்னியில் இருந்து வட நியூசிலாந்தின் ஒக்லாண்ட், வெலிங்டன் போன்ற நகரங்களுக்கும், தென் நியூசிலாந்தின் கிரைஸ் சேர்ச், குவிங்ஸ் டவுனுக்கு பறக்கிறது. ஈழத்தமிழர்கள் உட்பட பெரும்பாலன மக்கள், வட நியூசிலாந்திலே வாழ்கிறார்கள். தென் நியூசிலாந்தில் சனத்தொகை குறைவு. ஈழத்தமிழர்களும் மிக ,மிக குறைவு. ஆனால் நியூசிலாந்துக்கு சுற்றுலா செல்பவர்களில் 10ல் 9 வீதத்தினர் தென் நியூசிலாந்துக்கே விரும்பிப் பயணிப்பார்கள். தென் நியூசிலாந்து, வட நியூசிலாந்தை விட இயற்கை அழகு கூடியது. இதனால் நான் தென் நியூசிலாந்துக்கே பிரயாணம் செய்ய விரும்பினேன். அதிலும் தென் நியூசிலாந்தின் மேற்கு, கிழக்கு, தெற்குப் பகுதிகள் மிகவும் அழகான இயற்கைக் காட்சிகள் கொண்டவை என்பதினால் கிரைஸ் சேர்ச்சுக்கே பயணிக்க விரும்பி விமானச் சீட்டினை பெற முனைந்தேன். கொஞ்சம் பிந்தி வீமானச்சீட்டினைப் பதிந்ததினால், நான் விரும்பிய நேரந்தில் பிரயாணிக்க முடியவில்லை. அதனால் 7 முழுனாளும், 2 அரை நாட்களுக்கு நியூசிலாந்தில் தங்கவே எனக்கு வீமானச் சீட்டு கிடைத்தது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 3 மணித்தியாலம் மகிழுந்தில் பிரயாணம் செய்து தென் நியூசிலாந்தின் மேற்கு, கிழக்கு, தெற்கு பகுதிகளுக்கு செல்வது என்று முடி வெடுத்தேன்.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

அவுஸ்திரெலியா தேசியக் கொடிக்கும் நியூசிலாந்தின் தேசியக் கொடிக்கும் இடையில் உள்ள வித்தியாசம் கொடிகளில் உள்ள நட்சத்திரங்களே.

அவுஸ்திரெலியா தேசியக் கொடி

australianflagfc1.jpg

நியூசிலாந்து தேசியக் கொடி

newzealandflagsk7.jpg

  • தொடங்கியவர்

நியூசிலாந்தின் வரைபடம். வடக்கு தெற்கு என இரு பெரிய நிலப்பரப்பினைக் கொண்டது நியூசிலாந்து.

newzealandmap2po6.jpg

எனக்கும், நியூசிலாந்தில், யாரும் இல்லா கடற்கரையில், அம்மணமாய் கஞ்சா அடித்த ஞபாகம் வருகுது. தொடருங்கோ.

  • தொடங்கியவர்

நியூசிலாந்தில் வாகனத்தில் பிரயாணிப்பது மிகவும் இலகு. நான் சென்ற தெற்கு நியூசிலாந்தின் பிரதான வீதியை நீங்கள் சிவப்பு நிறத்தில் கீழே இணைத்துள்ள படத்தில் பார்க்கலாம்.

southislandmapct4.jpg

  • தொடங்கியவர்

வட நியூசிலாந்தை விட தென் நியூசிலாந்தில் மகிழுந்து வாடகைக்கு குறைந்த விலையில் எடுக்கலாம். தங்குமிட விடுதிகளும் இங்கே மலிவு. பொதுவாக நியூசிலாந்தில் ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் வரையிலான காலத்தில் இன்னும் மலிவாக விடுதிகளைப் பெற முடியும்.

mapcx1.gif

முதல் நாள் பயணம் - இல் Christchurch இருந்து மேற்காக Arthur's Pass வழியாக Greymouth அடைந்து வடக்கு நோக்கி Punakaiki சென்று மறுபடியும் Greymouth வழியாக Hokitika அடைந்தேன்.

2ம் நாள் இல் Hokitika இருந்து Franz Josepf ஊடாக சென்று அருகில் உள்ள Fox Glazier அடைந்தேன்

3ம் நாள் Fox Glazier இல் இருந்து Haast வழியாக Wanaka அடைந்து மேலும் தெற்கு நோக்கி சென்று Queenstown அடைந்தேன்

4 ம் நாள் Queenstownல் இருந்து தெற்கு நோக்கி Te Anauக்கு பிரயாணம் செய்தேன்

5ம் நாள் Te Anauஇல் இருந்து வட மேற்கே உள்ள Milford Sound அடைந்து மறு படியும் Te Anauக்கு வந்து மீண்டும் Queenstown சென்றேன்.

6ம் நாள் Queenstownல் இருந்து Cromwell,Omarama வழியாக Twizel அடைந்தேன்

7ம் நாள் Twizelஇல் இருந்து Mount Cook சென்று Lake Takapo வழியாக Christchurch அடைந்தேன்.

மேலே உள்ள இரு படங்களில் இருந்து நான் சென்ற இடங்கள் எங்கே உள்ளது என்பதை அறியலாம்.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

ஒரு நிறுவனத்தின் மகிழுந்தினை வாடகைக்கு உபயோகித்தபின்பு, அதே நிறுவனத்தின் வேறு கிளையில் மகிழுந்தினைத் திருப்பிக் கொடுக்கிற வசதி நியூசிலாந்தில் இருக்கிறது. நான் கிரைஸ் சேர்ச் விமான நிலையத்தில் மகிழுந்தினை 7 நாட்களுக்கு வாடகைக்கு பெற்றேன். 6 நாட்கள் மகிழுந்தினை வாடகைக்கு பெறுவதினால் 7 வது நாள் எனக்கு இலவசமாக உபயோகிக்க கூடிய வசதி இருந்தது.

அவுஸ்திரெலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வீதிகளைப்பற்றிய வரைபடங்கள் புத்தகங்களாகவே உள்ளது. ஆனால் தெற்கு நியூசிலாந்தின் பிரதான வீதிகளின் வரைபடம் ஒரே ஒரு பக்கமுடைய காகிதத்தில் பெறக்கூடியதாக இருக்கிறது. முக்கிய நகரங்களுக்கு செல்லும் போது அங்கே உள்ள சுற்றுலா நிறுவனங்களில் அன் நகரங்களில் உள்ள வீதிகளின் வரைபடங்களை கேட்டுப் பெறலாம். பெரும்பாலான நகரங்களில் 4,5 வீதிகள் தான் இருக்கிறது. ஆனால் கிரைஸ் சேர்ச்சில் அதிக வீதிகளைக் காணலாம்.

நியூசிலாந்தில் பெரும்பாலான எல்லா விடுதிகளிலும் உணவுகளுக்கு தனியாகக்கட்டணம் செலுத்த வேண்டும். மிகக்குறைவான விடுதிகளில் வாடகைப்பணத்தில் காலை உணவுகள் தரப்படுகின்றன. கிரைஸ் சேர்சில் உள்ள சில விடுதிகள், விமான நிலையத்தில் இருந்து விடுதிகளுக்கு பிரயாணிக்க இலவசச் சேவைகளினை வழங்குகின்றது.

கிரைஸ் சேர்ச் விடுதியினை அடைந்ததும் மறுனாள் பிரயாணம் பற்றி, எங்கே செல்வது எவற்றைப்பார்ப்பது என்பது பற்றி விமான நிலைய சுற்றுலா மையத்தில் கிடைத்த தகவல்கள், புத்தகங்களில் மூழ்கிவிட்டேன். அடுத்தடுத்த நாட்கள் எங்கே தங்குவது என்பதை நியூசிலாந்துக்கு பயணிக்கும் முன் இணையத்தளங்களின் ஊடாக விடுதிகளுக்கு பணத்தினைச் செலுத்தினேன். முதல் நாள் கிரைஸ் சேர்ச்சில் இருந்து 3 மணித்தியாலப்பிரயாணத்தின் பின்பு Greymouthல் தங்குவதாக முடிவெடுத்திருந்தாலும், Greymouthல் நான் எதிர்ப்பார்த்த விடுதி கிடைக்காத காரணத்தினால் மேலும் அரை மணித்தியாலங்கள் பிரயாணம் சென்று Hokitika என்ற இடத்தில் உள்ள விடுதியினை (நியூசிலாந்துக்கு பயணிக்கும் முன்) இணையத்தளத்தினூடாக பதிவு செய்தேன். அன்று நேரம் கிடைத்தால் Greymouthஇலிருந்து வடக்கு நோக்கி அரை மணித்தியாலம் பயணம் சென்று Punakaiki என்ற இடத்தையும் பார்க்க முடிவு செய்து இருந்தேன்.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

முதல் நாள் மொத்த பிரயாண நேரம்

Christchurchல் இருந்து Arthur's Pass 1 1/2 மணித்தியாலங்கள்

u648803ja4.gif

Arthur's Pass ல்இருந்து Greymouth 1 1/2 மணித்தியாலம்.

e481003er4.gif

Greymouthல் இருந்து Punakaiki 1/2 மணித்தியாலம் ( போய் வர ஒரு மணித்தியாலம்)

z110303kg5.gif

Greymouthல் இருந்து Hokitika 1/2 மணித்தியாலம்.

s236493pf2.gif

முதல் நாள் மொத்த பிரயாண நேரம் - 4 1/2 மணித்தியாலங்கள்.

  • தொடங்கியவர்

Christchurchல் இருந்து Arthur's Pass வழியாக Greymouthற்கு புகையிரதப் பயணத்தினை பல சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்வார்கள்.

nzrd026wz4.jpg

இயற்கை அழகான மலைகளினை இப்பயணத்தின் போது பார்க்க முடியும். ஆனால் நான் மகிழுந்தில் பிரயாணம் சென்று இயற்கை அழகினைப் பார்க்க விரும்பினேன். நான் தங்கி இருந்த விடுதி விமான நிலையத்துக்கு அருகாமையில் இருக்கிறது. அதாவது விடுதிக்கு கிழக்குப் பகுதியில் தான் Christchurch நகரின் 95 வீதமான நிலப்பரப்பு அமைந்துள்ளது. கிரைஸ் சேர்ச்சில் தான் தென் நியூசிலாந்தில் அதிக மக்கள் வசிக்கிறார்கள். இங்குதான் அதிக நிறுவனங்கள், உணவகங்கள் எல்லாம் இருக்கிறது. அதிகாலை 8 மணிக்கு மகிழூர்ந்தில் விட்டு பிரயாணம் செய்யத் தொடங்கினேன். காலைக் கோப்பியினை மட்டும் அருந்தி விட்டு, போகும் வழியில் உணவகம் எதாவதில் சாப்பிடலாம் என்று நினைத்து நோக்கி பிரயாணித்தேன்.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

அத்துடன் Christchurchல் இருந்து Arthur's Pass செல்லும் வீதிகளில் உணவகங்கள் ஒன்றையும் காணமுடியாது. ஒன்றிரண்டு cafe மட்டும் இருக்கும். அன்று ஞாயிற்றுக்கிழமை. அதனால் அந்த cafeகளும் மூடப்பட்டு இருக்கும். இது தெரியாமல் நான் நோக்கி பிரயாணம் செய்து கொண்டிருக்கிறேன். போகும் வழியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். தூரத்தில் தெரியும் மலைகளில் பனிப்பாறைகள் சூழ்ந்து காணப்படுகிறது.

p9250001cn1.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

p9250002rw3.jpg

p9250003ai5.jpg

p9250004rd1.jpg

p9250005cb2.jpg

p9250006dg8.jpg

p9250007wv4.jpg

p9250008el8.jpg

p9250010wj9.jpg

ஒரு நிறுவனத்தின் மகிழூர்ந்தினை வாடகைக்கு உபயோகித்தபின்பு, அதே நிறுவனத்தின் வேறு கிளையில் மகிழூர்ந்தினைத் திருப்பிக் கொடுக்கிற வசதி நியூசிலாந்தில் இருக்கிறது. நான் கிரைஸ் சேர்ச் விமான

பயணம் நல்லா இருக்கு ஆனால் மகிழூர்த்தி என்றா என்ன உங்க பயணத்தை தொடருங்கோ

:P

  • தொடங்கியவர்

வீதிகளில் வாகனங்களைக் காண்பது குறைவாக இருந்தது. மழையும் வரப்போவது போல இருந்தது. இவ்வீதியில் செல்லும் போது மலைகளினூடாக உள்ள வீதிகளில் பிரயாணம் செய்யவேண்டும். கால நிலை சரியில்லை என்றால் இவ்வீதிகளில் செல்வது ஆபத்தானது என்பதினால் அன்னேரங்களில் இவ்வீதியில் பிரயாணிப்பது தடைசெய்யப்படும். மலையினூடாக கிட்டத்தட்ட 1 - 2 மணித்தியாலங்கள் பிரயாணம் செய்ய வேண்டும். இச்சமயத்தில் எரிபொருள் நிலையங்கள் ஒன்றையும் காண முடியாது. கிரைஸ் சேர்ச்சில் வெளிக்கிடும் போது மகிழூர்ந்திற்கு தேவையான எரிபொருளாப் பெற்று விட்டதினால் ஒரளவு பயப்படத்தேவை இருக்கவில்லை. பசிக்கத்தொடங்கியதினால் மலைத் தொடருக்கு முன்பு இருந்த கடைசி எரிபொருள் நிலையமொன்றில் பிஸ்கட் சிப்ஸ் வாங்கி உண்டபின்பு தொடர்ந்து பயணித்தேன்.

p9250011uc5.jpg

p9250012zl9.jpg

p9250013pd1.jpg

p9250014kx7.jpg

p9250015oo0.jpg

p9250016rv4.jpg

  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்த ஈழவன், தூயா, கருப்பி, பொன்னி, யமுனா ஆகியோருக்கு நன்றிகள். மகிழுந்து என்றால் CAR.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

மலைகளினூடாகப் பயணிக்கும் போது அழகான இயற்கைக்காட்சிகள் பார்க்கக்கூடியதாக இருக்கும். எனது புகைப்படக் கருவியினால் எடுத்து இங்கே இணைக்கப்படும் புகைப்படங்களை வைத்துக் கொண்டு அவ் இயற்கைக்காட்சியின் அழகை வர்ணிக்க முடியாது. நேரில் இதைவிட அழகாக இருக்கும்.

p9250017ab1.jpg

p9250018ff8.jpg

p9250019wn2.jpg

p9250020tu7.jpg

p9250021za7.jpg

p9250022bf5.jpg

p9250023ug9.jpg

p9250024xn4.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

இங்கு சில மலைகள், சில ஆறுகளின் நிறங்கள் வித்தியாசமாக காணக்கூடியதாக இருக்கிறது. புகைப்படக்கருவியினால் எடுக்கப்பட்ட மேலதிகப்படங்கள்.

p9250025yz5.jpg

p9250026gq5.jpg

p9250027io2.jpg

சொக்கலேட்டினை மலையின் மீது பூசியது போல மலைகளில் சில காட்சியளித்தன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் நியுசிலாந்துக்கு அடிக்கடி போறனான் அங்கே என்னுடைய மாமா இருக்கிறார் வன்டவுள் பிளேஸ்

;)

  • தொடங்கியவர்

புகைப்படக்கருவியினால் எடுக்கப் பட்ட மேலதிகப் படங்கள்

p9250028yy0.jpg

p9250029pc8.jpg

p9250030hh2.jpg

p9250031bh7.jpg

  • தொடங்கியவர்

Arthur's pass க்கு போகிற வழியில் Castle Hill basin என்ற இடத்தில் Cave Stream Scenic Reserve என்ற குகை இருக்கிறது. நாங்கள் போன நேரத்தில் காலனிலை சரியில்லை. நான் நியூசிலாந்துக்கு சென்ற நேரத்தில் இக்குகையைப்பற்றிய சுற்றுலா மையங்களும், இணையத்தளங்களும் பெரிதாகச் சொல்லவில்லை. ஆனால் தற்பொழுது 2006க்கு பிறகு இதனை , Christchurch க்கும் Arthurs Pass க்கும் இடையில் உள்ள பிரதேசங்களில் முக்கியமான இடங்களில் சேர்த்துள்ளார்கள். இணையத்தளத்தில் சுட்ட படத்தின் இங்கே இணைக்கிறேன்.

cavestreama223ij4.jpg

mednzcaveentranceqh9.jpg

Edited by Aravinthan

  • 1 month later...
  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்த சோனாவுக்கு நன்றிகள்

நானும் நியுசிலாந்துக்கு அடிக்கடி போறனான் அங்கே என்னுடைய மாமா இருக்கிறார் வன்டவுள் பிளேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.