Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழரை பலவீனப்படுத்த புகுத்தப்படும் தலித்தியம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20071031161315dalitconferenceparis406x152.jpg

இலங்கை தலித் பிரச்சினை: பாரீஸ் கூட்டம் பற்றிய சிறப்புப் பெட்டகம்

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

------------------------------

ஈழத்தில்.. ஈழப்போராட்டம் ஆரம்பமாகிய பின ... தலித்தியம் என்ற அடிப்படையின் கீழ் சமூகப்பிரிவினைகள், இந்தியாவில் உள்ளது போன்று, ஆழப்படுத்தப்பட்டு அரச நிர்வாக அலகில் செல்வாக்குச் செய்யும் அளவுக்கு என்று எதுவும் கிடையாது.

ஆனால் புலம்பெயர்ந்த சில தமிழின தேச விரோத சக்திகள் அந்நிய அருவருடிகளின் காசுக்கும் தங்களின் சுய இலாபத்துக்கும், புகழுக்கும் என்று ஈழத்தமிழ்மக்களைப் பிரித்தாளும் தந்திரோபாயத்துக்கு விலை போய் ஈழத்தில் தலித்தியம் என்பது உள்ளதாகக் காட்டி அல்லது நிறுவி.. அதற்கு உரிமைக்குரல் எழுப்ப முனைகின்றனர்.

ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமானது வெறுமனவே சிங்கள பெளத்த பேரினவாத ஆதிக்கத்துக்குள் இருந்தான விடுதலை என்பதற்கும் மேலாக அனைத்து வித சமூக விடுதலையையும் ஒருங்கிணைத்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகர்ந்து வந்துள்ள காலக்கட்டங்களில் கூட எழாத தலித்தியவாதம் இன்று புலம்பெயர்ந்து சொகுசு வாழ்க்கை வாழும் சிலரால் புகழுக்காகவும் பிற தீய சக்திகளின் தேவைக்காவும் முன்னிறுத்தப்படுவது குறித்து ஈழத்தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இந்த சக்திகளுக்கு பிபிசி தமிழில் உள்ள சில இந்திய தலித்தியவாத சுவாசத்தில் குளிர்காய்பவர்களும் பிரச்சார அனுசரணையாளர்களாக இருந்து பாரீசில் நடந்த ஒரு குட்டி மாநாட்டுக்கு பெரிய தோற்றம் கொடுக்கும் வேலையை முடுக்கிவிட்டுள்ளனர்.

ஈழத்தில் சிங்கள பேரினவாத ஆதிக்கத்தை மூடிமறைத்து தமிழர்களின் அடிமைத்தனத்தை மறைத்து அரசியல் செய்ய முனைந்த முன்னாள் தமிழ் அரசியல்வாதிகள், சாதி மற்றும் பிரதேச வாதங்களை முன்னிலைப்படுத்தி மக்களை பிரித்தாண்டு தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டனர்.

ஆனால் அந்தக் குள்ள நரி அரசியல்வாதிகள் ஈழப்போராட்ட சக்திகளின் உருவாக்கத்துக்குப் பின்னர் இருந்த இடம் தெரியாமல் அந்நிய தேசங்களுக்கு ஓடிப்போயினர்.

மீண்டும் கருணா போன்ற சந்தர்ப்பவாத தமிழினத் துரோகிகள் பிரதேசவாதத்தைக் கையில் எடுத்து தமிழீழ தேசத்தை இரு கூறாக்கி தமிழர்களின் பாரம்பரிய நிலத்தொடர்ச்சியை சிதைக்க முனையும் சர்வதேச மற்றும் சிங்கள பேரினவாத சக்திகளுக்கு உதவி தங்கள் சொகுசு வாழ்க்கையை தீர்மானிக்க முற்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில்..

தலித்தியம் என்ற போர்வையில் தலித் மக்கள் என்று தமிழ் மக்களுக்குள்ளேயே பிரிவினைகளை தோற்றுவித்து ஆழப்படுத்தி தமிழ் தேசியத்தின் வழி ஒற்றுமைப்பட்டுள்ள ஈழத்தமிழ்மக்களை தலித்து சாதி என்ற சமூகப் போலிகளால் கூறுபோட்டு பிரித்தாண்டு தமிழ் தேசிய இருப்பை இந்தியாவில் சீரழித்தது போன்று ஈழத்திலும் சீரழிக்க சில அந்நிய சக்திகளும் சிங்களப் பேரினவாத சக்திகளும் முனைப்புக்காட்டி வருவதை இன்று அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

ஈழத்தைப் பொறுத்தவரையும் புலம்பெயர் தேசங்களைப் பொறுத்தவரையும் மனித அடிப்படைத் தேவைகளான கல்வி சுகாதாரம் இருப்பிடம் உணவு போன்றவற்றிற்கு எந்த சமூகப்பாகுபாடும் காட்டப்படுவதில்லை. தகமை அடிப்படையில் தொழில் வழங்குதல் என்பது சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பால் அனைவருக்கும் அனைத்தும் என்ற நிலையை வழங்கியுள்ளது. ஈழத்தில் இலவசக் கல்வி மூலம் எல்லா மக்களுக்கு கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. கல்வி அறிவுமிக்க சமூகம் ஒன்றில் தலித்தியம் என்ற பிரிவினை நோக்கம் கொண்ட தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தக் கூடிய நச்சுக் காரணி ஒன்றை உள்நுழைப்பதையிட்டு மக்கள் விழிப்புடன் இருப்பதுடன் தமிழ் தேசியத்தை, இந்தியாவில் திராவிட வாதம், இந்திய தேசிய வாதம் மூலம் சீரழித்தது போன்று ஈழத்திலும் பிரதேசவாதம் தலித்தியவாதம் என்ற சமூகப் பிரிவினைவாதங்களை உள்நுழைத்து சீரழிக்க முனைவதற்கு இடமளிக்கக் கூடாது.

அதுமட்டுமன்றி இந்த தலித்தியவாதத்தை ஈவெ ராமசாமி அடியார்களாக தங்களை இனங்காட்டிக் கொள்ள விரும்பும் சில தமிழீழ தேச விரோத சக்திகள்... ஈழத்தமிழர் மத்தியில் பிரிவினையை விரும்பும் சக்திகள் "தலித்திய உரிமை வேண்டுதல்" என்ற கவர்ச்சிகர தலைப்பின் கீழ் ஈழத்து தமிழ் மக்களுக்குள் சமூகப் பிரிவினைகளை ஆழப்படுத்தி அதனை தங்கள் சுய இலாபத்துக்காகப் பயன்படுத்த முனைகின்றனர்.

தலித்தியம் என்பதன் மூலம் புலம்பெயர்ந்துள்ள எமது எதிர்கால சந்ததிக்குள்ளும் சாதியப் பிரிவினை என்ற நச்சு விதையை ஊன்றிவிட முனைகின்றனர். தமது வெட்டிப் புகழுக்காக ஈ வெ ராமசாமியை தலையில் தூக்கி வைத்து ஆடும் இந்தக் கும்பல்கள் தமிழகத்தில் உள்ளது போன்று ஈழத்திலும் சாதிய அடிப்படையில் மக்களைக் கூறுபோட்டு அந்திய சக்திகளுக்கும் அவர்களின் தேவைக்கும் ஏற்ப, தமிழ் தேசிய அடிப்படையில் அமைந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த புலம்பெயர் தமிழ் மக்களின் தமிழீழ விடுதலைப் போராட்ட உணர்வை.. ஆதரவுத்தளத்தை கூறுபோட அல்லது பலவீணப்படுத்த வழிவகைகளை செய்ய முற்படுகின்றனர்.

இந்த சக்திகள் தொடர்பில் மக்கள் மிக அவதானமாக இருப்பதுடன், ஈழத்தில் தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தின் மூலம் பிரதேச சாதி மத சமூக பொருளாதார வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைந்திருப்பதையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு தமது பங்களிப்பை தமிழர்கள் என்ற வகையில் தமது தேசத்துக்காக தொடர்ந்து வழங்கி வருவதையும் முழு உலகுக்கும் என்றும் தமது ஒற்றுமையின் மூலம் எடுத்துக்காட்ட முனைய வேண்டும்.

தமிழீழ விடுதலைப்புலிகளை தமிழ் மக்களிடமிருந்து பிரித்துக்காட்டி அவர்களை தனிமைப்படுத்தி தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க முனையும் சர்வதேச வல்லாதிக்க சக்திகளும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளும் சிங்களப் பேரினவாதிகளும் இப்படியான சமூகப் பிரிவினைகளைத் தூண்டும் கும்பல்களை "சமூக உரிமைக் காப்புப் பணி" என்ற வகைக்குள் அடக்கி அதற்கு மனிதாபிமானச் சாயம் பூசி ஆதரவளித்து வருகின்றதை பாரிஸ் தலித்திய மாநாட்டுக்கு பிபிசி தமிழ் அளித்த முக்கியத்துவம் எடுத்துக்காட்டுகிறது.

தமிழ் மக்கள் பெரும் தியாகங்கள் மூலம் கடந்த 3 தசாப்தங்களாக முன்னெடுத்து வரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய கட்டத்தில் இன்று நின்று கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் இவ்வகைச் சூழ்ச்சிகளை மதிநுட்பத்தால் புரிந்து கொண்டு இவற்றில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு இந்த போலி வேசக்கார அருவருடிகளின் செயல்கள் தொடர்பில் வழிப்புணர்வுடன் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிதைக்க முனையும் ஒட்டு மொத்த சக்திகளுக்கும் பதிலடி வழங்க தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

எமது இனத்துக்கான விடுதலையை உணர்ந்த எமக்கு எமது சமூகத்துக்கான உரிமைகள் தொடர்பில் இவர்கள் பாடம் எடுக்க வேண்டிய தேவை இல்லை என்பதை இப்படியான சக்திகளின் செயற்பாடுகளை முற்றாகப் புறக்கணிப்பதன் மூலம் அவர்களுக்கும் உணர்த்தி இவர்களை உலகுக்கும் இதர தேசங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு சரிவர அடையாளம் காட்ட வேண்டும். தலித்தியம் பேசி தமிழ் மக்களை கூறு போட முனையும் எல்லா சக்திகளுக்கும் இது ஒரு படிப்பினையாக அமைய வேண்டும். அதற்கான கடமை தமிழ் மக்களின் கையில் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை உணர்ந்து செயற்படுவீர்களாக.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தலித்தியம் பற்றிக் கதைத்தவர்களில் ஒருவர் ஆரம்ப கால புலிகள் இயக்கத் தலைவர்களில் ஒருவரான ராகவன் ஆவார்.. தமிழின தேச விரோதிகள், அந்நிய சக்திகளின் அடிவருடிகள் போன்றோர் தற்போது இந்த விடயங்களைக் கையில் எடுப்பதால் இல்லாத சமூக அடக்குமுறையை ஊதிப் பெருப்பிக்கிறார்கள் என்று சிலர் ஊளையிடவும் வசதியாகப் போய்விட்டது..

சமூக அடக்குமுறை ஒடுங்கிவிட்டது, எனினும் முற்றாக அழிந்துபோய்விடவில்லை. சிலவேளை தாயகத்தில் அன்றாடம் உயிர்வாழ்வதற்கே ஓடுப்பட்டுத் திரியும் இந்நாட்களில் இதைப் பற்றி எவரும் சிந்திக்காமல் விடலாம். எனினும் உயிராபத்தற்ற புலம்பெயர் நாடுகளில் வசிப்போர் சமூக அடக்குமுறையை வெவ்வேறு வடிவங்களில் தொடரவே செய்கின்றனர். குறிப்பாகத் திருமண சம்பந்தம் பேச்சுக்களில் "background" என்னவென்று அறிய விழைவது வெறும் குணம் குறைகளை அறிய மட்டுமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ராகவன் ஆரம்பகால உறுப்பினராக இருக்கலாம். ஆனால் அவர் தற்போது நேர்எதிரான போக்குடையவர்.

சாதி என்ற சிந்தனை அழியாமல் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்புவர்கள் தான் சாதி அழியாமல் இருக்க வேண்டும் என்று இருப்பார்கள்.

இன்றைக்கு இவர்கள் தலித் என்று என்று சாதிச்சங்கத்தைக் கூட்டினால், நாளைக்கு ஒவ்வொருவரும் தங்களின் சாதி தொடர்பாக சங்கம் அமைக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? வெள்ளாளர் சங்கம், நவிதனர் சங்கம்,.... என்று ஒவ்வொருவனும் தங்களுடைய சாதிகளைப் பேண வெளிக்கிட்டால் ஒரு போதும் சாதி அழியப் போவதில்லை.

இது வந்து தொடர்ந்து சாதி பற்றிப் பிழைப்பை ஓட்டுகின்ற கும்பல்களுக்கும், தமிழ் சமூகத்தைப் பிரிக்க முனைகின்ற அயலக எதிரிகளுக்கும் தான் வாய்ப்பாகப் போகும்.

திருமணத்தில் சாதி பார்க்கின்றார்கள் எனவே சாதி இருக்கின்றது இப்போது இருக்கின்றது என்பது பொருத்தமான வாதம் அல்ல. அன்று மற்றவர்களைக் குறுக்குக்கட்டோடும், கையைக் கட்டியும் நிற்கவிட்ட யாழ்பாணத்துச் சாதி வகுப்பில் இருந்து அழிந்து போய் இப்போது திருமணத்தில் தான் எஞ்சி நிற்கின்றது என்பது சாதி பற்றி முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டதன் வெளிப்பாடாகத் தான் காணலாம். நாளைய தலைமுறை நிச்சயம் அதையும் கைவிடத் தான் செய்யும்.

ஆனால் தொடர்ந்து நாங்கள் என்ன சாதி என்று வாயாரச் சொல்லிக் கொண்டிருப்பது ஒரு போதும் சாதிப் பிளவுகளை நீக்க உதவப் போவதில்லை. சாதியை வைத்து, சாதி ஒழிக்கின்றோம் என்று பிழைப்பு நடத்துகின்ற எச்சில் கும்பல்களுக்குத் தான் வாய்ப்பைக் கொடுக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலித்தியம் பற்றிக் கதைத்தவர்களில் ஒருவர் ஆரம்ப கால புலிகள் இயக்கத் தலைவர்களில் ஒருவரான ராகவன் ஆவார்.. தமிழின தேச விரோதிகள், அந்நிய சக்திகளின் அடிவருடிகள் போன்றோர் தற்போது இந்த விடயங்களைக் கையில் எடுப்பதால் இல்லாத சமூக அடக்குமுறையை ஊதிப் பெருப்பிக்கிறார்கள் என்று சிலர் ஊளையிடவும் வசதியாகப் போய்விட்டது..

சமூக அடக்குமுறை ஒடுங்கிவிட்டது, எனினும் முற்றாக அழிந்துபோய்விடவில்லை. சிலவேளை தாயகத்தில் அன்றாடம் உயிர்வாழ்வதற்கே ஓடுப்பட்டுத் திரியும் இந்நாட்களில் இதைப் பற்றி எவரும் சிந்திக்காமல் விடலாம். எனினும் உயிராபத்தற்ற புலம்பெயர் நாடுகளில் வசிப்போர் சமூக அடக்குமுறையை வெவ்வேறு வடிவங்களில் தொடரவே செய்கின்றனர். குறிப்பாகத் திருமண சம்பந்தம் பேச்சுக்களில் "background" என்னவென்று அறிய விழைவது வெறும் குணம் குறைகளை அறிய மட்டுமல்ல.

புகலிடத்தில் ஈழத்தமிழர்களால் ஈழத்தமிழர்கள் மீதான சமூக அடக்குமுறை என்பதன் மூலம் நீங்கள் எதை இனங்காட்ட விரும்புகிறீர்கள் என்பதை கொஞ்சம் கூற முடியுமா..??!

பின்புலமறிதல் என்பது தனிநபர்களின் சொந்தப் பிரச்சனை. அதுவே சமூகத்தின் நிலை என்ற எல்லைக்குள் வைத்து நோக்க முடியாது. உதாரணத்துக்கு 75 வயது ஈ வெ ராமசாமி 25 வயது மணியம்மையை மணந்தது சமூகப் புரட்சி என்றாகுமா..??! அது தனிமனித நடத்தையின் வெளிப்பாடு. அதுவே சமூக நிலை என்பதை எங்கணம் வரையறுக்க முயல்கிறீர்கள்.

வெள்ளையர்களும் தான் திருமணத்துக்கு முன்னர் பணப் பின்புலம் உட்பட பல பின்புலங்களைப் பார்கின்றனர். அங்கும் தலித்தியம் என்றதை உச்சரிக்க இந்த தேசத்துரோகக் கும்பல்கள் தயாரா..???!

ஈழத்தில் எந்தப் போராளி அமைப்பும் சரி சாதியத்தை ஒரு கட்டமைப்புப்படுத்திய வாத நிலைக்குள் கொண்டு வந்து அதை சமூக அரசியலாக்க முனையவில்லை. குறிப்பாக இந்தியாவில் உள்ளது போன்று. அவர்கள் தலித்தியம் என்பதைக் கட்டிக்காக்க முனையாமல்.. சாதி இருப்பை அழிக்க முனைந்தனர். அதில் பல நிலை வெற்றிகள் கிடைத்தன. இன்றும் சில நிலைகளில் அது மீதமிருப்பினும் இந்தியா போன்று ஒரு சமூக அபாயகர நிலையில் அது இல்லை. மீண்டும் அந்த அபாயகர அளவுக்கு ஈழத்திலும் சரி புலம்பெயர் தேசங்களிலும் சரி அது உருக்கொள்ளப் போவதும் இல்லை. ஈழத்தமிழ் மக்கள் கல்வி அறிவுமிக்கவர்கள். அவர்கள் போலித்தனமான சாதிய கட்டமைப்புக்குள் அதிகம் சிக்கி இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

ஆனால் தலித்திய உரிமை என்ற கோசத்தின் கீழ் சாதிப்பிரிவினைகளை ஆழப்படுத்தும் செயலானது மிக மோசமான பின்விளைவுகளை நோக்கி சமூகத்தை இட்டுச் செல்லும். அதுவும் போராட்ட சூழலில் இருந்து தனிமைப்பட்டுள்ள தமிழ் மக்கள் மத்தியில் அது மோசமான தாக்கத்தைச் செய்ய முனையலாம்.

ஒரே மக்கள் இனத்துள் வேறுபட்ட நிலைகளில் சமூக நிலைகள் உள்ள போது அதை தலித்திய உச்சரிப்புக்கு அப்பால் நின்று அவர்களின் நிலைகளை ஒரே நிலைக்கு உயர்த்த வாய்ப்பிருக்கும் போது, ஏன் சாதி மற்றும் தலித்து உச்சரிப்புக்கள் என்பதே கேள்வி.

மேற்குநாடுகளில் கூட சமூகத்தில் பல மட்டங்களில் மக்கள் உள்ள போதும் அவர்களுக்கிடையே தெளிவான வேறுபாடுகளை சமூக ரீதியில் பேண மக்கள் முனைகின்ற போதும் அரசுகள் தலித்தியம் என்ற பார்வைக்கு அப்பால் மக்களை அரசியல், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக ஒரு தரமான நிலைக்கு இட்டு வர உதவுவதை உதாரணமாக்கி கணக்கில் எடுக்காமல்.. தலித்தியவாதம் செய்ய முற்படுகின்றனர். இது சாதி இருப்பை பேணிக் கொண்டு தமிழர்களை பிளவுபடுத்தும் கீழ்த்தரமான பழைய தமிழ் அரசியல்வாதிகளின் அடியொற்றிய கேவலமான சமூக விரோதச் செயலே அன்றி வேறாக அடையாளம் காணப்பட முடியவில்லை.

ராகவன் போன்றவர்கள் போராட்டத்தை விட்டு ஒதுங்கியவர்கள். புலியை விட்டு ஓடியவர்கள் புலிக்குள் இருந்தே காட்டிக் கொடுத்தவர்கள் எல்லாம் புலியாகிட முடியாது. தெளிவாக அவர்கள் துரோகிகள் என்றே இனங்காணப்படுகின்றனர். ராகவன் என்பவரைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் ஆரம்ப காலத்தில் இணைந்து செயற்பட்ட போதும் பின்னர் கருத்து ஒருமிப்பற்று தேசவிடுதலையின் மீது அக்கறையற்று சுயநலத்தின் மீது காதல் கொண்டு வெளிநாட்டுக்கு ஓடிவந்தவர்கள் என்பதற்கு போதுமான சான்றுகள் உண்டு. அவர்கள் தங்கள் சுயநலத்துக்காக தலித்தியம் அல்ல இப்படிப் பலதும் பேசுவர். தங்கள் செல்வாக்கை புகலிடத்தில் எப்படியாவது நிறுவி தாங்களும் சவால் மிக்க சக்திகளாகவே உள்ளதாக காட்டுவதற்கு அவர்கள் எந்தப் பேயோடும் கூட்டுச் சேரவும் தயங்கமாட்டார்கள் என்பது தமிழ் மக்கள் நன்கறிந்த விடயம்.

தலித்திய உச்சரிப்புகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் சமூக நிலை வேறுபாடுகளை களைய வாய்ப்பிருக்கும் போது எதற்காக தலித்தியம்..???! சாதியம் போன்ற சமூகப் பிளவுத்தளங்களை நிறுவவே இந்த உச்சரிப்புக்கள்..???! இவை சுயநலத்துக்காக மட்டுமே அன்றி வேறிற்கல்ல..!

இதை இங்கும் சிலர் வலியுறுத்துவது ஏனெனில்.. சாதிய எதிர்ப்பு என்ற போர்வையின் கீழ் வேளாள சாதியை கட்டிக்காத்து அதைப் பழிப்பது போல பழிச்சு அதன் மீது தங்கள் வக்கிரத்தனமான வார்தைகளை அள்ளி வீசிக் கொண்டு தங்கள் சாதிய விசுவாசத்தை சாதி எதிர்ப்பு என்ற போலி நிலைப்பாட்டின் கீழ் நிலைநிறுத்த முனைவதாகவே பார்க்கப்பட வேண்டும். இந்தியாவில் ஒரு காலத்தில் எழுந்த சாதி அழிக்கிறன் என்று சொல்லி பிராமணர்களை ஒழிப்போம் என்பது போன்ற ஒரு சமூகவிரோதக் கூச்சலுக்கு சமாந்தரமானதே இந்த தலித்தியக் கூச்சல்.

சமூக பிளவுத்தளங்களை ஆழப்படுத்தி தங்களின் தேவைகளை செல்வாக்கை சமூகத்தில் நிலைநிறுத்த முனைவதும் அதன் மூலம் ஆதிக்க சக்திகளின் கைப்பாவைகளாக செயற்பட்டு தமது வருவாயை பெருக்கிக் கொள்வதுமே இத்துரோகிகளின் முதன்மை நோக்கமாகும். இவர்களிடம் சமூகம் பற்றிய உண்மையான அக்கறை எள்ளளவும் கிடையாது என்பதற்கு இவர்கள் குந்தி இருக்கும் இடமே சாட்சி. :wub::lol:

Edited by nedukkalapoovan

இந்த மாநாடு பற்றிய நேரடி வர்ணணை

http://koluvithaluvi.blogspot.com/2007/10/...4.html#comments

நன்றி கொழுவி :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.