Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கிலீக்ஸ்; புலனாய்வின் சவாலும் நிஜத்தன்மையின் தாக்குதலும்

Featured Replies

பேரழிவுக்கான ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறி 2003 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி ,அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அதன் நேசநாடுகள் ஈராக்கின் மீது போர்தொடுத்தன. 2002 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் 1441 நிறைவேற்றியது.

அது ஈராக்கை ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுத ஆய்வாளர்கள் ஈராக்கிடம் பேரழிவிற்கான எந்த வித ஆயுதமும் இல்லை என்பதனை உறுதிப்படுத்த ஒத்துழைக்குமாறு கூறியிருந்தது.ஐக்கிய நாடுகள் கண்காணிப்பு சரி பார்த்தல் மற்றும் சோதனைக் குழு பேரழிவிற்கான எந்த வித ஆயுதங்களும் ஈராக்கிடம் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை.இருப்பினும் ஈராக்கின் ஆயுத இருப்பு அறிக்கையின்படி நிச்சயமாக கூறமுடியவில்லை என்று கூறியது.

அமெரிக்காவால் அனுப்பப்பட்ட ஈராக் ஆய்வுக்குழு 1991 ஆம் ஆண்டிலேயே ஈராக் தனது அணு,இரசாயனம் மற்றும் உயிரியல் ஆயுதங்கள் குறித்த திட்டங்களை நிறுத்திவிட்டதாகவும் கூறியது.சில அமெரிக்க அதிகாரிகள் ஈராக் அதிபர் சதாம் உசேன் அல்கொய்தாவிற்கு உதவியவராக குற்றம் சாட்டினர். ஆனால் அதற்கான எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இருப்பினும் பேரழிவுக்கான ஆயுதங்களை ஈராக் வைத்திருப்பதாகவும் தீவிரவாதிகளுக்கு சதாம் உசேன் உதவி செய்து வருவதால் தீவிரவாதத்தை ஒழிக்கவும் ஈராக்கில் மக்களாட்சியை அமைத்து அமைதியை நிலைப்படுத்தவும்தான் இந்தப் போர் என்று கூறி ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டது.இந்த போர் சட்டவிரோதமானது என்று ஐக்கிய நாடுகள் சபையின் அப்போதைய செயலர் கொஃபி அனான் பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு (2004 செப்டெம்பர்) பேட்டியளித்தார்.

ஈராக் பாடி கவுண்ட் என்ற இணையத்தளத்தின் கணக்கீட்டின் படி போர் தொடங்கிய காலம் முதல் ஏப்ரல் 2010 வரை இறந்த மக்களின் தொகை ஏறத்தாழ 96,813 முதல் 105563 ஆகும். இந்தப் போரில் 2007 ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று வான் ரோந்து வந்த அமெரிக்க இராணுவத்தின் இரண்டு கெலிஹொப்டர்களில் வந்தவர்கள் பாக்தாத் நகரில் 12 அப்பாவிகளை சுட்டு வீழ்த்தினர். இதில் ரியுச்சர்ஸ் பத்திரிகையை சேர்ந்த 2 பத்திரிகையாளரும் அடக்கம்.மேலும் 2 குழந்தைகளும் படுகாயமடைந்தனர்.

இந்த வீடியோ படக்காட்சியை விக்கிலீக்ஸ் என்னும் இணையத்தளம் 2010 ஏப்ரல் 5 ஆம் திகதி அன்று தன்னுடைய வலைப்பகுதியில் வெளியிட்டது. இது ஒட்டுமொத்த உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட அமெரிக்கா மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானது.இந்த வீடியோ எவ்வாறு விக்கிலீக்ஸுக்கு கிடைத்தது என்ற விபரம் கிடைக்காததால் இப்போதைக்கு எந்த நடவடிக்கையும் கிடையாது என்று அமெரிக்க இராணுவ தலைமை செயலகமான பென்டகன் அறிவித்தது.

ஆனால், இந்த வீடியோவை விக்கிலீக்ஸுக்கு அளித்தவர் ஈராக் போரில் பணிபுரிந்த நுண்ணறிவு பகுத்தாய்வாளர் பிராட்லிமேனிங் என்பவர் என்று அட்ரியன் லேமோ என்ற முன்னாள் கணிப்பொறி தாக்குநர் அமெரிக்க அரசுக்கு தகவலளிக்கிறார்.இவ்விடயத்தை விக்கிலீக்ஸுக்கு நான்தான் கொடுத்தேன் என்று தன்னுடன் கணினியில் உரையாடியதை அட்ரியன் லாமோ அமெரிக்க அரசின் புலனாய்வு நிறுவனமான FBI யிடம் தெரிவித்து விட்டார். இந்த வீடியோ அல்லாமல் 2009 மே 4 அன்று ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவம் நிகழ்த்திய காரானி வான் தாக்குதல் குறித்த வீடியோவும் அமெரிக்க இராணுவத்தின் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர் முனை தந்தி தகவல்கள் தூதரக தந்தி பரிமாறல்கள் 2,60,000 தன்னிடம் உள்ளதாகவும் அதை விரைவில் வெளியிடப்போவதாகவும் விக்கிலீக்ஸ் அறிவித்திருந்தது.இந்தக் காரானி வான் தாக்குதலில் கொல்லப்பட்ட ஏறத்தாழ 140 பேரில் 90 க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள்.

இந்த பாக்தாத் அப்பாவி மக்கள் படுகொலை வீடியோ ஆப்கானிஸ்தான் காரானி வான் தாக்குதல் மற்றும் தந்திச் செய்திகளை தங்களுக்கு அளித்தது பிராட்லி மேனிங்கா என்று எங்களுக்கு தெரியாது.இருப்பினும் அவரைப் பாதுகாக்க வேண்டியது விக்கிலீக்ஸின் கடமை என்றும் ஆனால் 2,60,000 தந்தி செய்திகள் (இச்ஞடூஞுண்) தங்களிடம் இல்லை என்றும் விக்கிலீக்ஸ் கூறியது. ஆனால் எத்தனை உள்ளது என்பது பற்றி எதுவும் கூறப்படவில்லை.இது தொடர்பாக பிராட்லிமேனிங் கைது செய்யப்பட்டு குவைத்தில் தடுப்பு காவல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் அவர் மீது இதுவரை எந்த வழக்கும் போடப்படவில்லை.

நுண்ணறிவு பகுத்தாய்வாளர் அலுவலராகப் பணிபுரிந்த பிராட்லி மேனிங் உபயோகித்த கணிப்பொறியின் சி.டி. வாஷிங்டன் கொண்டு வரப்பட்டு அதில் அவர் பதிவிறக்கம் செய்த ஆவணங்கள் குறித்த தகவலை அறிய அமெரிக்க அரசு முயன்று வருவதாக ஜூன் 11,2010 அன்று அமெரிக்க அரசின் மக்கள் தொடர்பு துணை செயலர் பிலிப் ஜே. கிரெலி கூறியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

http://www.thinakkural.com/publication_west/content.php?contid=5374&catid=9

  • தொடங்கியவர்

இன்று வெளிவர இருக்கும் பக்கங்கள் அடங்கிய விக்கி லீக்ஸ் இனை மீள் வெளியீடு செய்ய வேண்டாம் என "பென்ரகன்" அமெரிக்க இராணுவ தலைமையகம் கோரிக்கை:

1. The Pentagon is braced for its biggest-ever security breach of classified information as Wikileaks, the website that publishes leaked official documents, prepares to release 400,000 intelligence files related to the Iraq war.

http://www.telegraph.co.uk/news/worldnews/northamerica/usa/8069766/Pentagon-braced-for-the-release-of-400000-Iraq-files-on-Wikileaks.html

2. Pentagon asks media not to publish war leaks

http://www.google.com/hostednews/ap/article/ALeqM5jx-sXTZTeL7XcvPKPQTY0m2nnNHQ?docId=d5b73a41095b4228909dc00e96b65bc3

3. Pentagon Preparing Response to Iraq Secrets Release by WikiLeaks Website

http://www.bloomberg.com/news/2010-10-18/pentagon-preparing-response-to-iraq-secrets-release-by-wikileaks-website.html

  • தொடங்கியவர்

ஈராக்குடனான அமெரி்க்க போர் குறித்து 5 லட்சம் ஆவணங்களை வெளியிடப்போவதாக விக்கிலீக் இணையதள பத்திரிகை ‌தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் முன்‌னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் கடந்த 9 ஆண்டுகளாக அமெரிக்கா ‌மேற்கொண்ட போர் குறித்த 70,000 ரகசிய ஆவணங்களை கடந்த ஜூலை மாதம் விக்கிலீக் எனும் இணையதளம் வெளியிட்டு பரபரப்பூட்டியது. மிகவும் ரகசியமான வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் ‌எப்படி வெளியானது என்பது குறித்து இன்னமும் விடைகிடைக்காமல் பென்டகன் திணறி வருகிறது.

இந்நிலையில் ஈராக்கில் அமெரிக்கா மேற்கொண்ட போர் நடவடிக்கை குறித்து 5 லட்சம் ஆவணங்களை அடுத்த வாரம் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியானது . இதனால் பென்டகன் கலக்கமடைந்துள்ளது.

ஈராக்கின் அமெரிக்க ‌‌போர் நடந்த காலங்களில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், அபு காரியாப் சிறைச்சாலையில் போர் கைதிகளை சித்ரவதை செய்தது. நடந்து முடிந்த ‌பொதுத்தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் , அரசியல்வாதிகளை கைப்பாவையாக நடத்தியது , போரின் அப்பாவி மக்கள் பலியானதை குறைந்து எண்ணிக்கையினை அறிவித்தது என ஒவ்வொன்றாக நடந்த சம்பவங்களை விளக்கி ஆவணங்களை வெளியிட விக்கிலீக் முடிவு செய்துள்ளதாக தகவல்களை வெளியாகியுள்ளன. இதனை முறியடிக்க பென்டகன் 120 பேர் கொண்ட குழுவினை அதிரடியாக நியமித்துள்ளது. ஆவணங்கள் வெளியிடவுள்ள இணையதளத்தினை தீவிரமாக கண்காணிக்க இவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூபர்ட்‌ஸ் கேட்ஸ் கூறுகையில், விக்கிலீக்கின் இந்த செயல் நாட்டின் பாதுகாப்பு நலனனுக்கு உகந்ததல்ல என்றார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=108736

  • தொடங்கியவர்

ஈராக் போர் குறித்த அமெரிக்க ஆவணங்கள்: விக்கிலீக் இணையதளம் ஐப்பசி 23 வெளியானது.

ஈராக்கில் அமெரிக்கா போர் குறித்த ஆவணங்களை வெளியிட்ட விக்கிலீக் இணையதளம் மீண்டும் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கி 9 ஆண்டுகளாக அமெரிக்கா ஈராக்கில் இருந்த போது கைதிகளை சித்ரவதை செய்தது. சிறைக்கொடுமைகள் ஆகியவற்றினை விக்கிலீக் இணையதள பத்திரிகை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளதால் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கலக்கமடைந்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் விக்கிலீக்கின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். விக்கிலீக் இணையதளம் கடந்தசிலமாதங்களுக்குமுன்புதான் அமெரிக்காவில் ஆப்கானிஸ்தான் போர் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=112288

விக்கிலீக்ஸ் இன் இணையத்தளம்: http://www.wikileaks.org/

யுத்த குறிப்புகள்: http://warlogs.owni.fr/#vl-tabs-1'>http://warlogs.owni.fr/#vl-tabs-1

http://warlogs.owni.fr/

http://en.wikipedia.org/wiki/Iraq_War_Logs

=====================================================

அமெரிக்க அரசி பல குற்றங்களை விசாரிக்க தவறி விட்டது

http://www.reuters.com/article/idUSTRE69L54J20101023

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.