Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு – கிழக்கிற்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் – விக்கிரமபாகு கருணாரட்ண!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு – கிழக்கிற்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் – விக்கிரமபாகு கருணாரட்ண!

ஏகாதிபத்தியசக்திகள் தமது தேவைகளுக்காக விடுதலைப்புலிகளை தோற்கடிக்க முழு அளவில் உதவினர். தற்போது தமது தேவைகளுக்காக மகிந்த ராஜபக்சவின் அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கின்றனர். இறுதிக்கட்ட யுத்தத்தில் ஒரு இலட்சம் பேருக்கு என்ன நடந்தது என்ற பிரச்சினை எழுந்ததாலேயே ஐ.நா. இலங்கை விவகாரத்தில் தலையிட முழுக்காரணமாக இருந்தது. இவ்வாறு நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ஒஸ்வின் பாடசாலையில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை வெளிவந்த தும் பல்வேறுபட்ட சர்ச்சைகள், விவாதங்கள், குற்றச்சாட்டுக்கள் வந்துள்ளன.

அரசாங்கம் இதற்கெதிராக தமது சக்திகள் அனைத்தையும் திரட்டி செயற்படுகிறது. உலகம் முழுவதும் ஆதரவு வேண்டி பயணங்களை மேற்கொண்டுள்ளது. உண்மையில் 2009 இல் நடைபெற்ற இறுதி யுத்தகாலப் பகுதியில் மிகப்பெரிய மக்கள் அழிவு இடம்பெற்றிருந்தது. ஒரு இலட் சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். 12 ஆயிரம் இளைஞர்கள் சிறை வைக்கப்பட்டனர். 2 லட்சத்து 86 ஆயிரம் மக்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டனர். உடைமைகள் யாவும் அழிக்கப்பட்டன. அவசரகாலச் சட்டம் பயங்கரவாத தடைச்சட்டம் இன்றும் அமுலில் உள்ளது. வடக்குக் கிழக்குப் பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இன்றும் உள்ளது.

ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் எங்கே என்ற கேள்வி அரசாங்கம் கூறிய கணக்கிலிருந்தே வெளிக்கிளம்பியது. யுத்தம் தொடங்கும் போது 3 லட்சத்து 86 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியில் இருந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. யுத்தம் முடிந்த பின்னர் 2 இலட்சத்து 86 ஆயிரம் பேரே வந்துள்ளதால் மிகுதிப் பேருக்கு என்ன நடந்தது என்பதற்கு இன்றுவரை பதில் இல்லை. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் புலித்தேவன், நடேசன் போன்றோர் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும்போது கொல்லப்பட்டனர். இதனால் மிகப்பெரிய சர்ச் சையை உருவாக்கியிருந்தது. எனவே இவை அனைத்துக் காரணிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டுக்கு வழிவகுத்தது.

என்னைப் பொறுத்தவரை பான் கீ மூனினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையை நான் ஒரு விதத்தில் ஆதரிக்கின்றேன். அவருக்கு நன்றியும் கூறுகின்றேன். ஏன் என்றால் நாம் தொடர்ந்து கூறி வந்தவற்றை வலியுறுத்தியதை அவர் ஏற்றுக்கொண்டு அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக நான் லண்டன் நாடாளுமன்ற வளாக மண்டபத்தில் இதை கூறியமைக்காகவே தேசத்துரோகி என குற்றம் சுமத்தப்பட்டு நாடு திரும்பும் போது விமான நிலையத்தில் தாக்கப்பட்டேன். தற்போது நான் கூறியவற்றை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

இன்று தாய் நாட்டை நேசிப்பவர்கள் என்று தம்மை அழைப்பவர்கள் பான் கீ மூனின் அறிக்கைக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளனர். ஏகாதிபத்தி சக்திகளே இத்தகைய செயற்பாட்டின் பின்னணியில் இருப்ப தாகவும் இந்த ஏகாதிபத்திய சக்திகளுடன் விடுதலைப் புலிகள் செல்வாக்கு கலந்திருப்பதாகவும் கூறுகின்றனர். யுத்தத்தில் தாம் ஏகாதிபத்திய உதவி இல்லாமல் வெற்றி பெற்றதாக அறிவிக்கின்றனர்.

மறுபுறம் பான் கீ மூனின் அறிக்கை வந்தவுடன் எல்லாமே ஈடேறிவிடும் என்ற தரப்பும் உள்ளது. உண்மையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு முழு அளவில் உதவின.

தமது நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்தன. அவர்களின் நிதியை முடக்கினர். உறுப்பினர்களை கைது செய்து சிறைவைத்தனர். இன்றும் தடை அமுலில் உள்ளது.

இலங்கை அரசாங்கம் யுத்தத்தில் வெற்றி பெற ஆயுதங்கள், தகவல் தொழில் நுட்ப உதவிகள் என எல்லாவற்றையும் செய்தன. தமிழ் மக்கள் மிகப்பெரிய அழிவுக்குள் நிற்கும் போது பார்த்துக்கொண்டு நின்றன. ஜனாதிபதியால் ஒன்றும் செய்ய முடியாது என தாய் நாட்டுப்பற்றாளர் வாதிடுகின்றனர்.

இது அவர்களின் அறிவு வளர்ச்சியின் பற்றாக்குறையைக் காட்டுகின்றது. தனக் கிருக்கும் அதிகாரத்தைக் கொண்டு சம்பவம் தொடர்பான விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா. செயலாளரால் குழுவை நியமிக்க முடியும். அந்த அறிக்கையை அவர் பெற்றதும் மேல் நடவடிக்கைக்கு செல்லமுடியும். தமிழ் மக்களின் எழுச்சிக்கு அரசியல் தீர்வை வழங்கி தீர்த்திருக்கலாம்.

முன்னாள் இராணுவ அதிகாரியான மறைந்த டென்சில் கொப்பேகடுவ, இராணுவத் தீர்வு பலன் தராது, அரசியல் தீர்வே உகந்தது என்றார். கெரில்லா இயக்கம் மக்கள் இயக்கமாக இருந்தது. எனவே அதை அழிக்க முயன்றால் பாரிய மக்கள் அழிவு ஏற்படும்.

வன்னிப் போர் முனையில் அதுவே நடைபெற்றது. ஆனால் தமிழ்மக்களுக்கு ஏதாவது அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கிறது. தமிழ் தலைமைகளை இணைத்து செல்லுமாறு கோருகிறது. மகிந்த விற்கு இதுவே பிரச்சினையாவுள்ளது. இன்று இந்தியா ஒவ்வொரு முனையிலும் மகிந்த வுக்கு அழுத்தத்தை கொடுக்கிறது. கடலில், கிரிக்கெட் விளையாட்டில், மீள் கட்டுமானத் தில் மகிந்த பணிந்தே வருகிறார். இந்தப் பிரச்சினையில் சீனா, ரஷ்யா எமக்கு உதவும் என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. சீனா, ரஷ்யா, சூடானைகை விட்டதும், லிபியா மீது தாக்குதல் நடத்த அனுமதித்ததும் யாவரும் அறிந்த உண்மையா கும். மேலும் ஜி8 தற்போது ஜி20 ஆகியுள்ளது. உலகமய சக்திக்குள் சீனா, ரஷ்யா உள்ளன. எனவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இணங்கியே போகும்.

உண்மையில் இந்த நாட்டில் அமைதி ஏற்படுமானால் வடக்குக் கிழக்கிற்கு சுயாட்சி வழங்கவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் நீக்கப்பட வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். காணாமல் போனவர்கள் கண்டறியப்பட வேண்டும். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நஷ்டஈடு வழக்கப்பட வேண்டும். என கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி - சரிதம் இணையம்

to: vamabahu@gmail.com

Subject: Devolution of power to Tamil minority

Dear Dr. Vickramabahu Karunaratne,

Thanks you for being a lone ranger in voicing Tamils' rights in their traditional homeland. Had the pas Sihalese leaders had a vision of tolerance, acceptance and devolution, Sri Lanka would have been another successful Singapore. And we could have avoided any many riots since 1956 and armed uprising of Tamil youth.

One would hope with the UN report, the leaders of Sri Lanka have the vision and courage to reconcile divided communities.

Sincerely,

தற்காலிக தீர்வாக கூட இதைதான் புலம் பெயர்தமிழர் நாம் வலியுறுத்த வேண்டும்.

தனிதேசம் என்பதற்கு முதல் படியாக அமையட்டும் .பின் காலம் கை கூடி வரும்.

என் சந்ததி ,என் நிலம் எதிரி யிடம் இருந்து பாதுகாக்க பட வேண்டும்.

தலைவர் கூட தான் செல்லும் போது ஆத்திரம் கொட்டி எந்த கேடும் சிங்களத்துக்கு செய்யாமல் அமைதியாக ஆயுதத்தை மவுனித்தார்.

உலக அரங்கில் எங்கள் கோரிக்கை எடுபட தான் தீங்கு செய்தவனாக இருக்க கூடாது என்ற தன் மக்கள் மீது கொண்ட நம்பிக்கையின் பால்

தான் அவர் அப்படி செய்தார். நான் அப்[படி தான் உணர்கிறேன்.

நாங்கள் எங்கள் அடுத்த சந்ததியின் பாதுகாப்புக்கு ஏற்ற தீர்வை தற்காலிகமாக பெற வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் அகூதா! பாராட்டுகள்.

நேசனுக்கு ஒரு பச்சை.

இன்றைய அரசியல் சூழலுக்கேற்ப, காலத்திற்கேற்ப என்ன விடயங்களில் சாதுரியமாக நகர வேண்டுமோ. அனைத்திலும் தமிழர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதனூடாக எமது தேசிய இருப்புக்கும், விடுதலைக்குமான பங்கை அனைவரும் ஆற்ற முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.