Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே முதலாம் நாள் 'நீதிகோரி 1000 கிலோ மீற்றர்கள்

Featured Replies

மே முதலாம் நாள் 'நீதிகோரி 1000 கிலோ மீற்றர்கள்'- அனைத்துலக மக்களவையின் அறிக்கை

மே முதலாம் நாள் 'நீதிகோரி 1000 கிலோ மீற்றர்கள்' என்ற தலைப்பில் டென்மார்க் நாட்டிலிருந்து செருமனியூடாக நெதர்லாந்து நாட்டில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கி தமிழினவழிப்புத் தொடர்பான விசாரணையை முன்னெடுத்து தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரக்கோரி மிதிவண்டிப் பயண கவனயீர்ப்புப் போராட்டத்தை தொடங்கவுள்ளார்கள்.

மே 18ஆம் நாள் நெதர்லாந்து நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்து, அவ்விடத்திலே நீதிகோரி உரிமைப் போராட்டத்தை நடாத்துவதோடு, அனைத்துலக ரீதியாக சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களுடன் மனுவும் கையளிக்கப்படவுள்ளது என்பதை அனைத்துலக மக்களவைகள் அறியத்தருகின்றனர்.

அனைத்துலக மக்களவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஈழத்தீவு சுதந்திரம் பெற்றுக்கொண்ட நாள் முதல் இன்று வரை தொடருகின்ற தமிழினவழிப்பில் கடந்த 2009 இல் நடைபெற்ற தமிழினப் படுகொலை என்பது தமிழ் மக்களை குறிப்பிட்ட ஒரு வலயத்திற்குள் வரவைத்து தமிழர்களின் பாதுகாவலர்களாக, பிரதிநிதிகளாக விளங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போரில் தமிழ் மக்களை கொன்று குவித்துள்ளது.</p>

இதன்போது போரியல் விதிகளை மீறி பாதுகாப்பு வலயம் மீதும் மருத்துவமனைகள், பாடசாலைகள், மக்கள் குடியிருப்புக்கள், நிவாரணம் வழங்கும் பொது இடங்கள் போன்றவற்றை இலக்கு வைத்து சிறீலங்கா அரசு விமானக் குண்டு வீச்சு, எறிகணை வீச்சு, கொத்துக் குண்டு, நச்சு வாயு, மற்றும் இரசாயன ஆயுதத் தாக்குதலை நடத்தி பல்லாயிரக்கணக்கில் அப்பாவிப் பொதுமக்களை ஆண், பெண், சிறுவர்கள், குழந்தைகள் என்ற வேறுபாடின்றி மிகக் கொடூரமாகத் தமிழ் மக்களை கொன்று குவித்துள்ளது.

சிங்கள அரசினது இனவெறியின் உச்சக்கட்டம் தான் முள்ளிவாய்கலில் 1 46 679 தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள முடியாமல் உள்ளது. சிறிலங்கா பேரினவாத அரசு மே 2009 இல் தமிழின அழிப்பை நடாத்தி ஓராண்டாகியிருந்த பின்னும் அனைத்துலகம் போர் குற்றங்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுத்திருக்காத நிலையில் சிறிலங்கா அரசு மேற்கொண்ட தமிழினப் படுகொலையை உலகறியச் செய்யவும், அப்படுகொலையில் அநியாயமாகக் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரவும் என மே 18ம் நாளை 'போர் குற்றவியல் நாள்' (றுயச ஊசiஅநள னுயல) என ஈழத்தமிழ்மக்கள் பிரகடனப்படுத்தியிருந்தார்கள்.

குறிப்பாக போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் அவை வெளிக்கொண்டுவந்துள்ள இவ்வேளையில் ஏப்பிரல், மே மாதங்களை தமிழினப் படுகொலையை நினைவுகூர்ந்து வெளிப்படுத்தும் மாதங்களாகவும், மே 18ம் நாளை போர்க்குற்றவியல் நாளாக உணர்வு பூர்வமான முறையில் நினைவு கூர வேண்டும். இந்நாட்களில் வாழிட நாட்டு அரசுகளுடனானதும் அரச பிரமுகர்களுடனானதுமான தொடர்புகளைப் வலுப்படுத்தி, வெளிநிகழ்வுகள் மூலம் போர்க்குற்ற விசாரணை என்னும் நடவடிக்கைகளை அனைத்துலகம் முன்னெடுக்க ஊக்குவிப்பதற்கும், அவ்வாறு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மூலம் தமிழினப்படுகொலையை உலகறியச்செய்து தமிழினத்திற்கான நியாயமான தீர்வாக அமையக்கூடிய தமிழீழத்தை அனைத்துலகம் அங்கீகரிக்கக் கோரியும் தமிழ்மக்கள் இந்நாளை இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டுமென்பதை காலம் உணர்த்தி நிற்கின்றது.

தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனித்துப் போன நாள் முதல், தாயகத்தில் வாழுகின்ற உறவுகளின் குரல் முற்றுமுழுதாக நசுக்கப்பட்டிருக்கின்ற சூழலில் புலம்பெயர்மக்கள், தமிழினப்படுகொலையை நினைவு கூருகின்ற ஏப்ரல்-மே மாதங்களிலும் போர்க்குற்றவியல் நாளை முன்னிட்டும் பல்வேறுபட்ட கவனயீர்ப்பு, ஊர்வலங்கள், ஒன்றுகூடல்கள், உண்ணாநோன்பு, மிதிவண்டிப் பயணம், பத்திரிகையாளர்கள் மாநாடு, கண்காட்சிகள், கருத்தரங்குகள் போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

அந்த வகையில் மே முதலாம் நாள் 'நீதிகோரி 1000 கிலோ மீற்றர்கள்' என்ற தலைப்பில் டென்மார்க் நாட்டிலிருந்து செருமனியூடாக நெதர்லாந்து நாட்டில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கி தமிழினவழிப்புத் தொடர்பான விசாரணையை முன்னெடுத்து தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரக்கோரி மிதிவண்டிப்பயண கவனயீர்ப்புப் போராட்டத்தை தொடங்கவுள்ளார்கள்.

மே 18ஆம் நாள் நெதர்லாந்து நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்து, அவ்விடத்திலே நீதிகோரி உரிமைப்போராட்டத்தை நடாத்துவதோடு, அனைத்துலக ரீதியாக சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களுடன் மனுவும் கையளிக்கப்படவுள்ளது என்பதை அனைத்துலக மக்களவைகள் அறியத்தருகின்றனர்.

இவ்வாறு அனைத்துலக மக்களவைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={6B3F70CE-C7E4-4F96-B4AE-B60F8DA980B2}

  • கருத்துக்கள உறவுகள்

May 2, 2011 / பகுதி: செய்தி /

டென்மார்க்கில் இருந்து நெதர்லாந்து நோக்கிய நீதி கேட்கும் மிதிவண்டிப்பயணம்

டென்மார்க்கில் வாழும் தமிழீழத் தமிழர்களான திரு பார்த்தீபன் தம்பிராசா, திரு மனோகரன் மனோரஞ்சிதன் ஆகியோர் நீதி கேட்கும் மிதிவண்டிப்பயணத்தை இன்று, மே முதலாம் நாள் முற்பகல் 9:00 மணியளவில் தொடங்கியுள்ளனர்.

நூற்றுக்கணக்கான டென்மார்க் வாழ் தமிழீழ மக்களும், டெனிஸ் மக்களும் கலந்து கொண்டு இவர்களின் மிதிவண்டிப் பயணத்தை டென்மார்க் ஸ்ருவர் நகரின் மையப்பகுதியில் தொடக்கி வைத்தனர். மே 18ம் நாள் நெதர்லாந்து கேக் நகரைச் சென்றடையவுள்ள இவர்கள், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பின்வரும் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தமது மிதிவண்டிப்பயணத்தை மேற்கொள்கின்றனர்.

1. இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதே போல நெதர்லாந்து நாட்டின் கேக் நகரில் அமைந்திருக்கும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இதைப் போன்ற விசாரணைகளை நடாத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

2. சிறீலங்காவில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகால சட்டம் ஆகியவற்றை நீக்கி, வதைமுகாம்களில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அனைத்துலகம் சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

3. இனப்படுகொலையை மேற்கொண்ட சிறீலங்கா அரசுமீது அனைத்துலகம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழீழ மக்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்.

4. சுயாதீன ஊடகங்கள், அனைத்துலக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தடைகளற்று இயங்க சிறீலங்கா அரசுமீது அனைத்துலகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

5. தமிழீழ மக்களின் தன்னாட்சியுரிமையை அனைத்துலகம் அங்கீகரிக்க வேண்டும்.

6. 1977 ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலும், 2009-2010 ஆம் ஆண்டுகளில் புலம்பெயர் வாழ் தமிழீழ மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலும் தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைப்பதற்கு அனைத்துலகம் உதவவேண்டும்.

இக் கோரிக்கைகளை முன்வைத்து டென்மார்க் தமிழர் பேரவையானது 2010 ம் ஆண்டிலிருந்தே நீதிகேட்கும் போராட்டத்தை நடாத்திவருகிறது. அதன் தொடர்ச்சியாகவே போர்க்குற்ற நாளை முன்னிட்டு இன்று அனைத்துலக மக்களவைகள் இப்போராட்டத்தில் இணைந்துள்ள அதேவேளையில் இக்கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் கையெழுத்துக்களைச் சேகரித்து அனைத்துலக போர்க்குற்றவியல் நீதிமன்றத்தில் கையளிக்கப்படவுள்ள மனுவில் இணைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

டென்மார்க் தமிழர் பேரவை

pathivu.com

  • கருத்துக்கள உறவுகள்

May 4, 2011 / பகுதி: செய்தி /

டென்மார்க்கில் நீதி கேட்கும் மிதிவண்டிப்பயணம் இன்று யேர்மன் நாட்டுக்குள் வருகை

டென்மார்க்கில் வாழும் தமிழீழத் தமிழர்களான திரு பார்த்தீபன் தம்பிராசா திரு மனோகரன் மனோரஞ்சிதன் ஆகியோர் நீதி கேட்கும் மிதிவண்டிப்பயணத்தை மே முதலாம் நாள் Struer எனும் நகரத்தில் நூற்றுக்கணக்கான தமிழ்ஈழ உணர்வுள்ள மக்களின் மத்தியில் இருந்து ஆரம்பித்தனர் .

மே 18ம் நாள் நெதர்லாந்து கேக் நகரைச் சென்றடையவுள்ள இவர்கள் பின்வரும் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தமது மிதிவண்டிப்பயணத்தை மேற்கொள்கின்ற இவர்கள் இன்று யேர்மன் நாட்டுக்குள் Flensburg நகரத்துக்குள் வருகின்றனர். Flensburg நகரத்தில் மிக குறைவான தமிழ் மக்கள் வாழுகின்ற போதிலும் அவர்கள் இவர்களை மிக உணர்வோடு வரவேற்க காத்திருக்கின்றனர் .

அத்தோடு தொடர்ந்து யேர்மன் நாட்டுக்குள் 5 நகரங்கள் ஊடாக செல்ல இருக்கும் மிதிவண்டிப் பயணம் அவ் நகரங்களில் யேர்மன் அரசில் கட்சிகளுடனும் மற்றும் தமிழ் மக்களுடனும் சந்திப்புகளை மேற்கொள்ள அவ் நகர மக்கள் ஒழுங்கு செய்துள்ளனர் .

பின்வரும் இவர்களின் கோரிக்கைகளுடன் உறுதி தளராமல் நான்காவது நாளாக தொடரும் இவர்களின் பயணம் போர்குற்ற நாளான மே 18ம் நாள் நெதர்லாந்து கேக் நகரைச் சென்றடையும்.

1. இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.இதே போல நெதர்லாந்து நாட்டின் கேக் நகரில் அமைந்திருக்கும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இதைப் போன்ற விசாரணைகளை நடாத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

2. சிறீலங்காவில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம்இ அவசரகால சட்டம் ஆகியவற்றை நீக்கிஇ வதைமுகாம்களில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அனைத்துலகம் சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

3. இனப்படுகொலையை மேற்கொண்ட சிறீலங்கா அரசுமீது அனைத்துலகம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுஇ தமிழீழ மக்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்.

4. சுயாதீன ஊடகங்கள்இ அனைத்துலக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தடைகளற்று இயங்க சிறீலங்கா அரசுமீது அனைத்துலகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

5. தமிழீழ மக்களின் தன்னாட்சியூரிமையை அனைத்துலகம் அங்கீகரிக்க வேண்டும்.

6. 1977 ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலும்இ 2009-2010 ஆம் ஆண்டுகளில் புலம்பெயர் வாழ் தமிழீழ மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலும் தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வூ கிடைப்பதற்கு அனைத்துலகம் உதவவேண்டும்.

18 நாட்கள் தமது சுயவாழ்வை தள்ளி வைத்து கடுமையான காலநிலை மாற்றங்கள் மத்தியிலும்இ தற்போதைய புலம்பெயர் மக்களின் மத்தியில் நிலவும் சூழ்நிலையிலும் இ எவ்வித மனச்சோர்வும் அடையாமல் தமிழீழ மக்களின் உரிமைக்கான போராட்டத்துக்கு செயல் வடிவம் கொடுக்கும் இவர்களை அனைத்து புலம்பெயர் மக்களும் உற்சாகம் கொடுக்கும் வண்ணம் செயல்பட வேண்டும் என தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் அனைத்து தேசிய உணர்வுடன் இயங்கும் தமிழ் ஊடகங்கள் இணையத்தளங்கள் இவர்களின் செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர்களது மிதிவண்டிப்பயண தகவல்களை, செய்திகளை பிரசுரிக்குமாறு பணிவாக உரிமையுடன் வேண்டிக்கொள்கின்றோம் .

இக் கோரிக்கைகளை முன்வைத்து டென்மார்க் தமிழர் பேரவையானது 2010 ம் ஆண்டிலிருந்தே நீதிகேட்கும் போராட்டத்தை நடாத்திவருகிறது. அதன் தொடர்ச்சியாகவே போர்க்குற்ற நாளை முன்னிட்டு இன்று அனைத்துலக மக்களவைகள் இப்போராட்டத்தில் இணைந்துள்ள அதேவேளையில் இக்கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் கையெழுத்துக்களைச் சேகரித்து அனைத்துலக போர்க்குற்றவியல் நீதிமன்றத்தில் கையளிக்கப்படவூள்ள மனுவில் இணைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

May 5, 2011 / பகுதி: செய்தி /

ஐந்தாவது நாளாக தொடரும் 1000 Km நீதி தேடி மிதிவண்டிப்பயணம்.

சிங்கள அரசினால் செயலாக்கப்பட்ட , கற்பனைக்கெட்டாத ,மனிதாபிமானமற்ற கொடூரமான இனவழிப்பு என்னும் பாதகச்செயலின் மூலம், தமிழ்த் தேசியத் பிரச்சனை இன்று உலக அரங்கில் முன்னிலைப்படுத்தப்படுகின்றது.

கடந்த ஆண்டு டென்மார்க் தமிழர் பேரவையால் போர்க்குற்றத்தில் நேரடியாக ஈடுபட்ட அத்தோடு பங்கெடுத்த அதன் பின்னர் வெளிநாடுகளுக்கு தூதுவர்களாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் இராணுவத்தளபதிகளுக்கு எதிரான வழக்கு பதிவு சம்மந்தமாக அவர்களின் சட்டத்தரணி ஊடாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்ட கோரிக்கைகளுக்கு, பல தடவை கடிதங்கள் ஊடாக கேட்ட பின்னரும் , இன்றுவரை எவ்வித மறுமொழியும் கிடைக்காத படியால் , இம் முறை அதை வலியுறுத்தும் முகமாக திரு பார்த்தீபன் தம்பிராசா, திரு மனோகரன் மனோரஞ்சிதன் ஆகியோர் நீதி கேட்டு டென்மார்க்கில் இருந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நோக்கி மிதிவண்டிப்பயணத்தை மே முதலாம் நாள் Struer எனும் நகரத்தில் இருந்து ஆரம்பித்தனர் .

ஐந்தாவது நாளாக தொடரும் இப் பயணம் இன்று யேர்மன் நாட்டுக்குள் Flensburg நகரத்தில் இருந்து Neumunster நகரத்தின் ஊடாக சனிக்கிழமை 7 .05 .2011 அன்று Hamburg நகரத்தை சென்றடைய உள்ளார்கள் .அங்கு வாழும் தமிழ் மக்கள் இவர்கள் வரவேற்க ஆவலோடு இருக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாகவே போர்க்குற்ற நாளை முன்னிட்டு இன்று அனைத்துலக மக்களவைகள் இப்போராட்டத்தில் இணைந்துள்ள அதேவேளையில் இக்கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் கையெழுத்துக்களைச் சேகரித்து அனைத்துலக போர்க்குற்றவியல் நீதிமன்றத்தில் கையளிக்கப்படவுள்ள மனுவில் இணைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.சொல்லில் அடங்கா துயரத்தில் துடிக்கும் எம் உறவுகளின் உரிமைக்கு இவர்களின் உறுதி தளராத நீதி கேக்கும் பயணத்தை அனைத்து புலம்பெயர் தமிழ் மக்களும் ஆதரிப்பதோடு அவர்களுக்கு வாழ்த்தும் உற்சாகமும் வழக்கும் முகமாக அவர்களை தொடர்புகொள்வதற்கு பின்வரும் தகவல்களை இங்கே குறிப்பிடுகிறோம். இத்தோடு யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை பிரசுரித்த செவ்வியையும் இங்கே வழங்குகின்றோம் .

நேரடித் தொடர்பு : (0049 ) 01746356387

மின்னஞ்சலில் மற்றும் முகப்புத்தகத்தில் உங்கள் வாழ்த்து செய்திகளை அனுப்புவதற்கு

forum@dansktamilskforum.dk

Facebook : 1000 km for retfærdighed - War Crimes Day

நன்றி

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

May 10, 2011 / பகுதி: செய்தி /

எட்டாவது நாளாக தொடரும் 1000 Km நீதி தேடி மிதிவண்டிப்பயணம்.

கடந்த ஆண்டு டென்மார்க் தமிழர் பேரவையால் போர்க்குற்றத்தில் நேரடியாக ஈடுபட்ட அத்தோடு பங்கெடுத்த அதன் பின்னர் வெளிநாடுகளுக்கு தூதுவர்களாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் இராணுவத்தளபதிகளுக்கு எதிரான வழக்கு பதிவு சம்மந்தமாக அவர்களின் சட்டத்தரணி ஊடாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்ட கோரிக்கைகளுக்கு, பல தடவை கடிதங்கள் ஊடாக கேட்ட பின்னரும் , இன்றுவரை எவ்வித மறுமொழியும் கிடைக்காத படியால் , இம் முறை அதை வலியுறுத்தும் முகமாக திரு பார்த்தீபன் தம்பிராசா, திரு மனோகரன் மனோரஞ்சிதன் ஆகியோர் நீதி கேட்டு டென்மார்க்கில் இருந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நோக்கி மிதிவண்டிப்பயணத்தை மே முதலாம் நாள் Struer எனும் நகரத்தில் இருந்து ஆரம்பித்தனர்.

எட்டாவது நாளாக தொடரும் இப் பயணம் ஞாயிற்றுக்கிழமை 8.05 .2011 இன்று யேர்மன் நாட்டுக்குள் Hamburg நகரத்தில் இருந்து Bremen நகரத்தை வந்தடைந்தது. Bremen நகரத்தில் இன்று சர்வதேச மனிதஉரிமை பிரேமன் அமைப்புடன் சந்திப்பு நடைபெறுகிறது.

அங்கு வாழும் தமிழ் மக்கள் இவர்களை ஆவலோடு வரவேற்றனர் .இதன் தொடர்ச்சியாகவே போர்க்குற்ற நாளை முன்னிட்டு இன்று அனைத்துலக மக்களவைகள் இப்போராட்டத்தில் இணைந்துள்ள அதேவேளையில் இக்கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் கையெழுத்துக்களைச் சேகரித்து அனைத்துலக போர்க்குற்றவியல் நீதிமன்றத்தில் கையளிக்கப்படவுள்ள மனுவில் இணைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சொல்லில் அடங்கா துயரத்தில் துடிக்கும் எம் உறவுகளின் உரிமைக்கு இவர்களின் உறுதி தளராத நீதி கேக்கும் பயணத்தை அனைத்து புலம்பெயர் தமிழ் மக்களும் ஆதரிப்பதோடு அவர்களுக்கு வாழ்த்தும் உற்சாகமும் வழக்கும் முகமாக அவர்களை தொடர்புகொள்வதற்கு பின்வரும் தகவல்களை இங்கே குறிப்பிடுகிறோம் .

நேரடித் தொடர்பு : (0049 ) 01746356387

மின்னஞ்சலில் மற்றும் முகப்புத்தகத்தில் உங்கள் வாழ்த்து செய்திகளை அனுப்புவதற்கு :forum@dansktamilskforum.dk

Facebook : 1000 km for retfærdighed - War Crimes Day

நன்றி

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

பதிவு

  • தொடங்கியவர்

பத்து நாட்களை கடந்து, நீதி தேடி விரைந்து செல்லும் மிதிவண்டிப்பயணம்

முதலாம் திகதி மே மாதம் டென்மார்க் நாட்டில் இருந்து ஆரம்பம் ஆகிய மிதிவண்டிப்பயணம் இன்று பத்து நாட்களை கடந்து யேர்மனியில்Osnabrück எனும் நகரத்தை வந்தடைந்தது . திரு பார்த்தீபன் தம்பிராசா, திரு மனோகரன் மனோரஞ்சிதன் ஆகியோர் தமது நீதி தேடி செல்லும் பாதையில் 09.05.2011 அன்று Bremenநகரத்தில் சர்வதேச மனிதஉரிமை அமைப்பினருடன் சந்திப்பை மேற்கொண்டனர் .

இவர்களின் பயணம் இறுதியாக 18.05.2011 போர்குற்றவியல் நாள் அன்று அனைத்துலக போர்க்குற்றவியல் நீதிமன்றத்தின் முன்றலில் வந்தடையும் .

கடந்த ஆண்டு டென்மார்க் தமிழர் பேரவையால் போர்க்குற்றத்தில் நேரடியாக ஈடுபட்ட அத்தோடு பங்கெடுத்த அதன் பின்னர் வெளிநாடுகளுக்கு தூதுவர்களாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் இராணுவத்தளபதிகளுக்கு எதிரான வழக்கு பதிவு சம்மந்தமாக அவர்களின் சட்டத்தரணி ஊடாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்ட கோரிக்கைகளுக்கு, பல தடவை கடிதங்கள் ஊடாக கேட்ட பின்னரும், இன்றுவரை எவ்வித மறுமொழியும் கிடைக்காத படியால், இம் முறை அதை வலியுறுத்தும் முகமாக திரு பார்த்தீபன் தம்பிராசா, திரு மனோகரன் மனோரஞ்சிதன் ஆகியோர் நீதி கேட்டு டென்மார்க்கில் இருந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நோக்கி மிதிவண்டிப்பயணத்தை ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சொல்லில் அடங்கா துயரத்தில் துடிக்கும் எம் உறவுகளின் உரிமைக்கு இவர்களின் உறுதி தளராத நீதி கேக்கும் பயணத்தை அனைத்து புலம்பெயர் தமிழ் மக்களும் ஆதரிப்பதோடு அவர்களுக்கு வாழ்த்தும் உற்சாகமும் வழக்கும் முகமாக அவர்களை தொடர்புகொள்வதற்கு பின்வரும் தகவல்களை இங்கே குறிப்பிடுகிறோம்.

நேரடித் தொடர்பு : (0049 ) 01746356387

வலைத்திரையில் டென்மார்க்கில் இருந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நோக்கிய மிதிவண்டிப்பயணம்

மின்னஞ்சலில் மற்றும் முகப்புத்தகத்தில் உங்கள் வாழ்த்து செய்திகளை அனுப்புவதற்கு : forum@dansktamilskforum.dk

Facebook : 1000 km for retfærdighed – War Crimes Day

நன்றி

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

http://rste.org/2011/05/11/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.