Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு தினக்குரல் தினசரியை 3 மாதங்களில் மூடிவிடுவதற்கு திட்டம்?

Featured Replies

கொழும்பு தினக்குரல் தினசரியை 3 மாதங்களில் மூடிவிடுவதற்கு திட்டம்? ஊழியர்கள் மீது அச்சுறுத்தல்!

23 கோடி ரூபாவுக்கு எஸ்.பி.சாமியிடமிருந்து தினக்குரல் நிறுவனத்தை அண்மையில் வாங்கிய வீரகேசரி முகாமைத்துவம் மூன்று மாதத்துக்குள் தினக்குரலை மூடிவிடுவதற்குத் தீர்மானித்துள்ளமை தொடர்பாக இந்த இரு நிறுவனங்களுக்கும் பொதுமுகாமையாளராகப் பணியாற்றும் கந்தசாமி கூறியிருப்பதாக தொழிற் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினக்குரல் ஊழியர்களிடமிருந்து இராஜினாமா கடிதங்கள் பலவந்தமாகப் பெறப்படுவதாதகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தொழில் திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்று தொடர்பில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்ட போதே மூன்று மாதகாலத்தில் தினக்குரலை மூடிவிடும் திட்டம் தொடர்பாக கந்தசாமி குறிப்பிட்டதாக தொழிற் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பிலிருந்து கடந்த 15 வருட காலமாக வெளிவரும் தினக்குரல் பத்திரிகையை மூன்று மாதங்களுக்கு முன்னர் வீரகேசரி நிர்வாகம் வாங்கிக்கொண்டபோது தினக்குரல் பத்திரிகை தொடர்ந்தும் வெளிவருமா என்ற கேள்வி பல்வேறு வட்டாரங்களிலும் எழுப்பப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இயங்கிக்கொண்டிருந்த தினக்குரலை முன்னேற்றுவதற்காகவே இந்தப் பேரம் இடம்பெறுவதாக இரு நிர்வாகத்தினரும் ஊழியர்களைச் சமாதானப்படுத்தியிருந்தார்கள். ஆனால், கடந்த மூன்று மாத காலமாக இரு தரப்பினருக்கும் இடையிலான பேரம் இழுபறியில் இருந்த அதேவேளையில், தினக்குரல் ஊழியர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதங்களைத் தரவேண்டும் என கடந்த ஒரு வார காலமாக வற்புறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நிறுவன ஊழியர்களிடம் இராஜினாமா கடிதங்களைப் பலவந்தமாகக் கோருவது தொழிற்சட்டங்களுக்கு விரோதமானது என்பதால் அது தொடர்பில் பகிரங்க அறிவித்தலையோ அல்லது எழுத்து மூலமான சுற்றுநிருபத்தையோ அனுப்புவதற்கு விரும்பாத தினக்குரல் நிர்வாகத்தினர், ஊழியர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக முகாமைத்துவப் பணிப்பாளரும் எஸ்.பி.சாமியின் மகனுமான கேசவராஜாவின் அறைக்கு அழைத்து இராஜினாமா கடிதங்களைச் சமர்ப்பிக்குமாறு பலவந்தப்படுத்தியுள்ளார்கள். பெண் ஊழியர்கள் உட்பட பெருபாலான ஊழியர்கள் முகாமைத்துவப் பணிப்பாளர் கேசவராஜாவினாலும், நிறுவனர் எஸ்பி.சாமியினாலும் கடுமையாக அச்சுறுத்தப்பட்டதுடன், இராஜினாமா கடிதங்களைத் தரவில்லை எனில் வீதியில்தான் நிற்கவேண்டி வரும் எனவும் எச்சரிக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினக்குரல் பத்திரிகை கடந்த பதினைந்துவருட காலமாக வெற்றிகரமாக வெளிவந்துகொண்டிருக்கின்ற போதிலும், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சட்டப்படி கட்டவேண்டிய ஊழியர் சேம லாப நிதியத்துக்கான கொடுப்பனவுகள் கட்டுப்படுவதில்லை என்பதுடன், தனியார் துறை ஊழியர்களுக்குப் பொதுவாக இருக்க வேண்டிய வேறு எந்தவிதமான நலன்புரித் திட்டங்களும் தினக்குரல் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. ஊழியர்களின் சம்பளத்தில் சேமலாப நிதியத்துக்கான தொகை மாதாந்தம் கழிக்கப்படுகின்ற போதிலும், நிர்வாகத்தினர் அதனை தமது வேறு தொழில் முயற்சிகளுக்கே பயன்படுத்திக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தினக்குரல் ஒரு குடும்பத்தின் நிறுவனமாக இருந்தமையால் இதனையிட்டு யாராலும் தட்டிக்கேட்க முடியவில்லை. இந்த நிலையில் வீரகேசரி கொடுத்த தொகையில் 15 வருடகாலமாக கட்டாமலிருந்த ஊழியர் சேமலாப நிதியத்துக்கான தொகை கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குரிய வட்டி கட்டப்படாது எனவும் கூறப்பட்டிருக்கின்றது.

இது ஒருபுறம் இருக்க, கடந்த ஒரு வாரகாலமாக இராஜினாமா கடிதங்களைச் சமர்ப்பிக்குமாறு தந்தையும் மகனுமாக தினக்குரல் நிர்வாகத்தினர் கொடுத்த உளவியல் ரீதியான சித்திரவதையைத் தொடர்ந்து பெண் ஊழியர்கள் உட்பட பலர் இராஜினாமாக் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளார்கள். இராஜினாமா கடிதங்களைத் தராவிட்டால் உங்களுக்கு சம்பளமும் கிடைக்காது, வீதியில்தான் நிற்க வேண்டிவரும் எனவும் சில ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் சிலர், ஒரு குழுவாகச் சென்று தொழில் திணைக்களத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்கள். இதனையடுத்து தொழில் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தினக்குரல் பொது முகாமையாளர் கந்தசாமியுடன் தொடர்புகொண்டு இது தொடர்பாகப் பேசியுள்ளார். அப்போது பலவந்தப்படுத்தி இராஜினாமா கடிதங்களைப் பெற்றுக்கொள்வது சட்டவிரோதமான செயற்பாடு என தொழிற்திணைக்கள அதிகாரிகள் எச்சரித்ததையடுத்து தினக்குரல் ஊழியர்களை நிர்ப்பந்திப்பதை நிர்வாகத்தினர் செவ்வாய்கிழமையுடன் இடைநிறுத்திக் கொண்டுள்ளனர்.

ஊழியர்களிடமிருந்து இராஜினாமா கடிதங்களைப் பெற்றுக்கொள்வது சட்டவிரோமானது எனவும், இவ்வாறான செயற்பாட்டை எதற்காக மேற்கொள்கின்றீர்கள் எனவும் தொழில் திணைக்கள அதிகாரிகள் பொது முகாமையாளரிடம் அப்போது கேள்வி எழுப்பியுள்ளார்கள். இதற்குப் பதிலளித்த கந்தசாமி, தாம் பலவந்தப்படுத்தி இராஜினாமா கடிதங்களைப் பெற்றுக்கொள்ளவில்லை எனச் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால், இது தொடர்பாக தமக்குப் பெருமளவு முறைப்பாடுகள் வந்திருப்பதாலேயே இவ்விடயத்தில் தாம் தலையிட்டதாக தொழில்திணைக்கள அதிகாரிகள் கந்தசாமியிடம் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் தினக்குரலை வீரகேசரி நிர்வாகம் எடுத்திருந்தாலும் 3 மாத காலத்துக்கு இலாபத்தில் செல்கின்றதா என்பதைப் பார்த்துவிட்டு தினக்குரலை மூடிவிடுவதுதான் தமது நோக்கம் எனவும் கந்தசாமி தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கூறியிருக்கின்றார். அவ்வாறு தினக்குரல் மூடப்படுமானால் அதன் ஊழியர்களுக்கு புதிய நிர்வாகமே நட்டஈடு கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால்தான் தாம் முன்ஜாக்கிரதையாக இப்போதே இராஜினாமா கடிதங்களைக் கோருவதாகவும் அவர் தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் விளக்கியிருக்கின்றார்.

இதற்குப் பதிலளித்த தொழில் திணைக்கள அதிகாரிகள் ஊழியர்கள் எவரும் சொந்த விருப்பத்தின் அடிப்படையில்தான் இராஜினாமா கடிதங்களைச் சமர்ப்பிக்கலாமே தவிர அவர்களை நிர்ப்பந்தித்து அதனைப் பெற்றுக்கொள்வது தவறு என எச்சரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒருவாரகாலமாக தினக்குரல் ஊழியர்களிட்டம் இராஜினாமா கடிதங்களைப் பெற்றுக்கொள்வதற்காக நிர்வாகத்தினர் மேற்கொண்ட அடாவடித்தனமான நடவடிக்கையால் தினக்குரலில் பதற்ற நிலை காணப்படுகின்றது. இராஜினாமா கடிதங்களை நிர்வாகத்தினர் பலவந்தமாகக் கேட்பதும், தினக்குரல் நிறுவனத்தை மூடிவிடும் திட்டம் இருப்பதாக பொது முகாமையாளர் கந்தசாமி அறிவித்திருப்பதும் தினக்குரல் நிறுவன ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களுடைய ஜீவனோபாயமும் கேள்விக்குறியாகியுள்ளது.

15 வருடங்களாக ஊழியர்களின் கடின உழைப்பால் உருவாகிய தினக்குரலின் நன்மதிப்பை 23 கோடிக்கு விற்றுக் காசாக்கிப் பொக்கற்றுக்குள் போட்டுக்கொண்ட சாமி குடும்பத்தினர், ஊழியர்களை வெறுங்கையுடன் நடுவீதியில் இறக்கிவிடுவதற்குத் தயாராகிவருவதைத்தான் அங்கு இடம்பெறும் நிகழ்வுகள் மூலம் உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருப்பதாக தினக்குரலுடன் தொடர்புடையவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={3625B320-8549-49C6-A909-C17A10B045D3}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.