-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் Darren Sammy யினை உதாரணம் காட்டியதன் நோக்கம் இருவரையும் குறைந்து காட்டுவது நோக்கமில்லை. Saamy பல போட்டிகளில் மற்றைய பந்து வீச்சாளர்களுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்குவார். இடையில் ஒன்று, இரண்டு ஓவர்கள் விசுவார் அல்லது போட்டியில் பந்து வீசமாட்டார்.துட்டுப்பாட்டத்திலும் 6, 7 , 8 வது இடத்தில் களம் இறங்குபவர் என்பதால் அவருக்கு துடுபாட்டம் ஆட பெரும்பாலும் சந்தர்ப்பம் கிடைக்காது. இறுதி ஓவர்களில் கிடைக்கிற கொஞ்ச பந்துகளில் விசுக்கி 4, 6 ஒட்டங்கள் எடுப்பார். இதனால் விரைவில் ஆட்டமிழப்பார். இதனால் பெரும்பாலான போட்டிகளில் அவர் பெரியதாக சாதிக்க மாட்டார்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
If Pakistan qualify for the semi-finals, they will play in the first semi-final in Colombo on March 4. If Pakistan do not qualify, that semi-final will be played in Kolkata. The second semi-final will be played on March 5 at the Wankhede Stadium in Mumbai. If India qualify, they will play in the second semi-final. ESPN.comPakistan complete Super Eight line-up for T20 World Cup 2026In the Super Eight stage, India, Zimbabwe, West Indies and South Africa will be in Group 1, and England, New Zealand, Pakistan and Sri Lanka in Group 2 | ESPN.com.auhttps://www.espn.com.au/cricket/story/_/id/47963949/t20-world-cup-2026-pakistan-complete-super-eight-line-up
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவர் பாகிஸ்தான் அரை இறுதிக்கு போனதை சரியாகதான் சொல்லியிருக்கிறார். ஆனால் பாகிஸ்தான் அரை இறுதிக்கு போகாமல் இந்தியா அரை இறுதிக்கு போனால் (சூப்பர் குழுவில் முதலாவதாக அல்லது இரண்டாவதாக வந்தால் ) இரண்டாவது போட்டியில்தான் விளையாடும். முதலாவது போட்டியில் விளையாடமாட்டினம். கிருபன் அவர்கள் முதலாவது போட்டி சூப்பர் குழு 1 முதலிடம் எதிர் சூப்பர் குழு 2 இரண்டாமிடம் என்று சொல்லியிருக்கிறார். இந்தியா சூப்பர் குழு ஒன்றில் முதலிடம் பெற்றும் பாகிஸ்தான் அரை இறுதி போட்டியில் தெரிவாகாத காரணத்தாலும் இரண்டாவது அரை இறுதிப் போட்டிக்கு விளையாட போகினம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
2028 t20 போட்டிகள் அவுஸ்திரேலியா நியூசிலாந்து 2029 சாம்பியன் கிண்ணம் இந்தியா 2030 t20 போட்டிகள் இங்கிலாந்து , வேல்ஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து 2031 50 ஓவர் உலக கிண்ண போட்டி இந்தியா, வங்காளதேசம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓமானுக்கு எதிரான போட்டியில் 20 பந்துகளில் 50 ஒட்டங்கள் பெற்று சிறந்த ஆட்டக்காரர் விருதை பெற்றார். இவர் மேற்கு இந்தியா அணியின் முன்னாள் தலைவரும் இந்நாள் பயிற்சியாளருமான டரன் சாமி போல. டரான் சாமி அணித்தலைவராக இருந்தபோதுதான் இருமுறை மேற்கிந்தியா அணி வெற்றி பெற்றது. ஆனால் பல போட்டிகளில் பெரிதாக துடுப்பாட்டமும் பந்து வீச்சும் செய்து இருக்க மாட்டார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
2024 இலும் மேற்கிந்தியா, அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியிலும் இதே முறைதான். இம்முறை பாகிஸ்தானும் இந்தியாவும் அரை இறுதியில் மோதினால் இந்தியா முதலாவது போட்டியில் கொழும்பில் விளையாடும். மோதவிட்டால் சூப்பர் 8 குழு ஒன்றில் இந்தியா முதலாவது அல்லது இரண்டாவது வந்தால் மும்பையில் (2 வது போட்டியில்) விளையாடும். 2024 t20 போட்டி, சென்றவருடம் நடைபெற்ற மகளிர் கிண்ணப்போட்டி போல இந்தியா அணிக்கு அரை இறுதி போட்டி எங்கே விளையாடும் என்பது முதலில் தெரியும். t20, பெண்கள் மகளிர் போட்டி போல சூழல் பந்துக்கு சாதகமான மைதானத்தில் இந்தியா விளையாடுகிறது. @கிருபன் நடாத்தும் இந்தப்போட்டியில் பலர் சூப்பர் 8 இல் குழு ஒன்றில் முதலாம் இடத்தில் இந்தியா வந்தால் முதலாவது அரை இறுதி போட்டியில் ( பாகிஸ்தான் அரை இறுதிக்கு தெரிவகாட்டாலும்) விளையாடும் என்று விடை எழுதி இருக்கிறார்கள். ஆனால் அரை இறுதியில் இந்தியா பாகிஸ்தான் இடையில் போட்டி நடந்தால் மட்டுமே முதலாவது போட்டியில் இந்தியா விளையாடும். இந்தியா குழு ஒன்றில் ஒன்று அல்லது இரண்டாவதாக வந்தால் எப்போதும் 2 வது அரை இறுதியில் மும்பையில் விளையாடப்போகிறது. இதனால் குழு 2 இல் தெரிவாகும் நாடுகளும் விளையாடப்போகும் போட்டிகளும் இடமாற வாய்ப்பு இருக்கிறது. இதனால் பலருக்கு புள்ளிகள் கிடைக்காத சந்தர்ப்பம் ஏற்படப்போகுது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
குரூப் B யில் முதல் பிடிக்கும் அணி எது என அவுஸ்திரேலியாவை தெரிவு செய்தவர்கள் இனி கவலை படத்தேவை இல்லை. ஒருத்தருக்கும் புள்ளிகள் கிடைக்காது. இதேபோல அடுத்த சுற்றிலும் சிம்பாவே ஒரு சில போட்டிகள் வென்றால் கவலை இல்லாமல் இருக்கலாம் 😄
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
4 குழுவிலும் முதல் இடம் பிடித்த 4 அணிகள் சூப்பர் 8 இல் ஒரே குழுவில் விளையாடப் போகினம் .
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிம்பாவேயும் நன்றாக விளையாய்டுகிறது . 101-2 ( 12 ஓவர் முடிவில்)
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா மைதானங்களும் இலங்கை மைதானங்களும் வித்தியாசமானவை. இங்கிலாந்து இலங்கையில் சிறப்பாக விளையாடலாம் என நினைக்கிறேன் பிரேமதாசா மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானவை. இங்கு இலங்கை நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இங்கு மிச்சல் சாண்டருடன் இஷ் ஸோதியும் விளையாடுவார் என நினைக்கிறேன் அவுஸ்திரேலியாவை வென்றதைவைத்து இலங்கை இனிமேலும் சிறப்பாக விளையாடும் என்றும் சொல்லமுடியாது. நான் பாகிஸ்தான், இங்கிலாந்தினை அடுத்த சுற்றுக்கு செல்லும் அணிகள் என்று விடை எழுதியிருக்கிறேன் நிசாங்க , ரத்நாயக்க, கமிண்டு மெண்டிஸ் , குசால் மெண்டிஸ் போன்றவர்கள் கவனமாக விளையாடினால் இலங்கைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மற்றைய அணிகளும் பலமானவை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல் போட்டி இங்கிலாந்துடன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மூன்று முட்டைகள் எடுத்தும் ஐசிசி தரவரிசையில் முதலாம் இடத்தில் தற்போது இருப்பவர் அபிஷேக் சர்மா.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ்திரேலியா போட்டி pallekelle மைதானத்தில் நடந்தது. பந்து வீச்சாளர்களுக்கு பெரிதாக உதவவில்லை. இலங்கை சிம்பாவே போட்டி பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. பந்து வீச்சாளர்களுக்கு உதவலாம். இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தெரிவாகி இருக்கிறது. இதனால் இதுவரை விளையாடாத வீரர்களுக்கு இந்தியா( வாஷிங்டன் சுந்தர்) , தென்னாப்பிரிக்கா போன்று வாய்ப்பு சிலவேளை வழங்கலாம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அபிஷேக் சர்மா இன்று 3 வது முட்டைகளை எடுத்தார்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் அரை இறுதிக்கு தெரிவானால் பாகிஸ்தான் விளையாடும் போட்டி கொழும்பில் நடைபெறும் , பாகிஸ்தான் அரை இறுதிக்கு தெரிவாகமால் இருந்தால் போட்டி கொல்கத்தா மைதானத்தில் போட்டி நடைபெறும். இந்தியா அரை இறுதிக்கு தெரிவானால் இந்தியா விளையாடும் போட்டி மும்பாய் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்து இருக்கிறது. சூழல் பந்து விச்சுக்கு சாதகமான மும்பை மைதானத்தில் விளையாட இந்தியாவுக்கு சார்பாக ஐசிசி முடிவு எடுத்து இருக்கிறது. சென்ற மகளிர் உலக கிண்ண போட்டியும் இந்தியாவுக்கு சாதகமாக அரை இறுதி போட்டி மும்பையில் நடைபெற்றது. ஓமானுக்கு இன்னுமொரு போட்டி இருக்கிறது.