பிரேஸில் என்பது சரியான விடை. பாராட்டுக்கள் நுணா.
ரதி, தமிழ் சிறி உங்கள் முயற்சிக்கும் எனது பாராட்டுக்கள்.
இத்தாலி 4 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1934, 1938, 1982, 2006). இதில் 1934 இல் 2வது உலகக் கிண்ணப் போட்டி இத்தாலியில் நடைபெற்றது.
ஜேர்மனி 3 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1954, 1974, 1990). இதில் 1974 இல் 10வது உலகக் கிண்ணப் போட்டி ஜேர்மனியில் நடைபெற்றது.
ஆர்ஜென்டீனா 2 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1978, 1986). இதில் 1978 இல் 11வது உலகக் கிண்ணப் போட்டி ஆர்ஜென்டீனாவில் நடைபெற்றது.
உருகுவே 2 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1930, 1950). இதில் 1930 இல் 1வது உலகக் கிண்ணப் போட்டி உருகுவேயில் நடைபெற்றது.
பிரான்ஸ் 1 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1998). இதில் 1998 இல் 16வது உலகக் கிண்ணப் போட்டி பிரான்ஸில் நடைபெற்றது.
இங்கிலாந்து 1 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1966). இதில் 1966 இல் 8வது உலகக் கிண்ணப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது.
பிரேஸில் 5 தடவை உலகக் கிண்ணத்தை வென்றிருக்கின்றது (1958, 1962, 1970, 1994, 2002). இதில் எந்த ஒரு கிண்ணமும் பிரேஸிலில் வைத்து வெல்லப்படவில்லை.
1958 - சுவீடன் (6வது உலகக் கிண்ணப் போட்டி)
1962 - சிலி (7வது உலகக் கிண்ணப் போட்டி)
1970 - மெக்ஸிக்கோ (9வது உலகக் கிண்ணப் போட்டி
1994 - அமெரிக்கா (15வது உலகக் கிண்ணப் போட்டி)
2002 - தென்கொரியா/ஜப்பான் (17வது உலகக் கிண்ணப் போட்டி)
1942 மற்றும் 1946 ஆண்டுகளில் 2வது உலகப் போர் காரணமாக உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரத்துச்செய்யப்பட்டன.