எல்லாருக்கும் பிறந்த தின வாழ்த்து தெரிவிப்பது நல்ல விடயம் தான். அனைவரையும் சமமாக மதிப்பது நல்லது தான். ஆனால் ஒரு பதிவையும் எழுதாத அல்லது பல காலமாக பதிவிடாது காணாமல் போனவர்களை வாழ்த்தும் போது அப்படி செய்யாமல் தொடர்ந்து பதிவுகளை இட்டு களத்துடன் இணைந்து நிற்பவர்களின் பிறந்த தின வாழ்த்தும் அடிபட்டு போகாதா?
களத்துடன் தொடர்ந்து இணைந்து இருப்பவர்களின் பிறந்த தினம் வரும்போது வாழ்த்துகையில் 'பிறந்த நாள் வாழ்த்து திரி' முன்னுக்கு வரும் போது "இன்று களத்தில் தொடர்ந்து இருக்கும் முக்கியமான ஒரு உறவுக்கு பிறந்த தினமாக்கும்" என என்று ஆவலுடன் வந்து வாழ்த்துபர்கள் பலர். இதனால் இது நாள் வரைக்கும் ஒரு உயிர்ப்புடன் இந்த திரி இருந்தது என்று நினைக்கின்றேன்.