மதிப்பிற்குரிய நிர்வாகத்திற்கு நன்றிகள் என்னுடைய இரண்டு நாள் வேண்டுகோளை ஏற்றதற்கு.
இந்தத்திரியில் என்னுடைய பெயர் மாற்றம் சம்பந்தமாக தங்கள் ஆதங்கங்களை வைத்த நண்பர்களுக்கு முதற்கண் என்னுடைய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஒரு திரியில் ஏற்பட்ட கலகத்தின் நிமித்தம் என்னுடைய பெயர் மாற்றத்தை வேண்டினேன் ஆனால் இரண்டு நாட்கள் ஆற யோசித்தபோது என்னுடைய அடையாளத்தை இழப்பதற்கு ஒப்பான ஒன்றை விட்டுக்கொடுக்க முடியாது என்பதை ஆணித்தரமாக உணர்ந்து தொடர்ந்தும் வல்வை சகாறாவாகவே பயணிக்கப்போகின்றேன்.
சிந்தித்துப் பார்த்தபொழுது என்னுடைய இந்தப் பெயரில் இருந்தபடி எங்குமே பிரதேசவாத்தை தூண்டி இதுவரை என்னுடைய எழுத்துக்கள் பயணிக்கவில்லை. இனிமேலும் என்னுடைய எழுத்துக்கள் எந்த இடத்திலும் பிரதேசவாதத்தை முன்வைக்கப்போவதில்லை அப்படி இருக்கும்போது நான் அப்பெயரை மாற்றுவது என்பது எனக்கே என்மீதான நம்பிக்கையீனத்தைத்தானே குறிக்கும். எனக்கு என்மீதான நம்பிக்கை எள்ளளவும் குறையவில்லை காட்சிப்பிழைகள் தவறான கண்ணோட்டத்தைத் தூண்டிவிடுமோ என்று சிறிது அச்சமுற்றது என்னவோ உண்மைதான்... நான் யார்? எனக்கும் இந்தப்புனைபெயருக்குமான உறவு எங்கிருந்து ஆரம்பித்தது? என்ற அடிப்படைக் கேள்விகள் என்னுடைய பாதையை செம்மையுற நிர்ணயம் செய்கின்றன. ஏற்கனவே இந்தப் பெயருடன் நீண்ட தூரம் கடந்து விட்டேன் இப்போது மாற்றுவதென்பது நான் இதுவரை எழுதிய என் எழுத்துக்களைக் களங்கத்திற்கு உள்ளாக்கிவிடும். ஆகவே பொதுமைத்தளத்தில் பிரதேசவாதத்தைத் தூண்டாத என் எழுத்துகள் இந்த வல்வைசகாறா என்ற பதத்தினூடே பயணிப்பதில் எத்தவறும் இல்லை. இது எனது அடையாளம் இது எனது முகவரி. இதுவே என்னுடைய ஒவ்வொரு எழுத்திற்கும் வல்லமை கொடுக்கும் பூமி. இந்தப் பூமியில் விளைவதெல்லாம் கதிர்களாக இருக்குமே தவிர களைகளாகாது. இதுவரை எனைத் தீண்டாத பிரதேசவாதம் இவ்வளவு பக்குவம் அடைந்தபின்னா.. என்னை தீண்டப்போகிறது. மீண்டும் என் பெயர் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாத நண்பர்களுக்கும் சில விடயங்களை தெளிவுபடுத்திய கருத்தாளர்களுக்கும் மிகப்பெரிய நன்றியைக் கூறி மீண்டும் வல்வை சகாறாவாக உங்களுடன் பயணிக்கிறேன். நன்றி