மாணவர்களை பெருமைபடுத்த வாருங்கள்…!!!!
தோல்வியின் கதைகளை தொடர்ந்து எழுதுதல் எப்போதும் அயர்ச்சியையே தருகிறது, பல நாட்களுக்கு பிறகு மீண்டும் வெற்றியின் கதையை எழுதுகிறேன்… சமகால மாணவர்களின் வெற்றிக் கதையை எழுதுகிறேன்… உலக பெரியண்ணன் அமெரிக்காவை அசைத்து பார்த்த… பணிய வைத்த மாணவர்களின் வெற்றிக் கதையை பதிவு செய்த ‘அறப்போர்’ ஆவணப்படம் குறித்து எழுதுகிறேன்.
அறப்போர் – இனப்படுகொலைக்கு எதிராக மாணவர்களின் அறப்போராட்டங்கள் குறித்து எடுக்கப்பட்ட மாணவர் வரலாற்று ஆவணப்படம்.
இப் படத்தில் ஒரு பகுதிக்கு ஒளிப்பதிவு செய்தவன் என்ற முறையிலும்… படத்தின் முன் தயாரிப்பில் (Pre-Production) வேலை செய்தவன் என்ற முறையிலும் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்…
2007 இல் தொடங்கிய நான்காம் கட்ட ஈழப்போர், தமிழகத்தில் 80களுக்குப் பிறகு பிறந்து உலகமயமாக்கலின் மடிகளில் தவழ்ந்த பல இளைஞர்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இலட்சங்கள் சம்பளம் கொடுத்த வேலையை உதறி, ஈழ போர் குறித்து பிரசாரம் செய்ய வீதிக்கு வந்த இளைஞர்களை நானறிவேன்…! உறவுகள் மடிந்து கொண்டிருக்கும் போது திருமணம் வேண்டாம் என காதலித்த பெண்ணை ஓராண்டு காத்திருக்க வைத்த நண்பர்களையும் நானறிவேன்… ஈழ போர் குறித்து படம் ஆவணப்படம் எடுப்பது போர் குறித்த புத்தகங்களை வெளியிடுவது என கைகாசுகளை செலவு செய்து களப்பணி செய்த காலங்கள் அவை…!
இலங்கை அரசை கோபமடைய செய்யும் செயல்களை யாரும் செய்ய வேண்டாம் என்று பதறிய தமிழகத் தலைவர்களை இளைஞர்கள் முன் அம்பலபடுத்திய காலகட்டம் அது. போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொல்லியவர்களையும்… மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்றவர்களையும் நம்பிப்பயனில்லை என இளைஞர்கள் உணர தொடங்கினர்.
முள்ளிவாய்க்காலோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று எண்ணிய சில தலைவர்களுக்கு 2013ல் தமிழக மாணவர்கள் திசைவழி காட்டினர். இனி சமரசவாதிகளை நம்பி பயனில்லை என மாணவர்கள் களதிற்கு வந்தனர்… தனி மாகாணமோ, சுயாட்சியோ தீர்வல்ல. நாங்கள் கேட்பது தனி ஈழம் மட்டுமே என்று களதிற்கு வந்தனர். எப்போது defensive ஆகவே இருக்கும் தமிழினம், மாணவர்களினால் offensive ஆக செயல்பட்டது.
அனைத்துத் தலைவர்களும் மாணவர்களின் போராட்டத்துக்கு கருத்து தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பபட்டனர்… தி.மு.க மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறியது… இத்தனையும் செய்த மாணவர்களின் போராட்டம் பதிவு செய்ய வேண்டிய ஒன்று….
அதை எந்த சார்ப்பும் சமரசமும் இல்லாமல் ‘அறப்போரில்’ பதிவு செய்யபட்டுள்ளது வெறும் உணர்வுவையபட்டு மட்டும் அணுகாமல், தர்க்கங்களோடு அணுகி உள்ளது இப்படம்.
மிகுந்த பொருட்செலவில், நவீன தொழிற்நுட்பங்கள் கொண்டு இப்படம் தயாரிக்கபட்டுள்ளது… வழக்கமான ஆவணப்படம் பார்க்கும் அயர்ச்சியை நிச்சயம் ’அறப்போர்’ தராது…
இந்த படத்தின் வெளியீடு மற்றும் திரையிடல் இன்று (28, ஞாயிறு 2013)… ஸ்பென்சர் பிளாசா எதிர்புறம் உள்ள புக்பாயிண்ட் அரங்கில் நடக்கிறது. நம் சமகால மாணவர்களின் அறப்போரட்டத்தை அங்கீகரிக்க வேண்டியது நம் கடமை. உங்களின் வருகை மாணவர்களை பெருமைபடுத்தும் அது அவர்களின் அடுத்தகட்ட போராட்டத்துக்கு உந்து சக்தியாக அமையும். மாணவர்களை பெருமைபடுத்த வாருங்கள்…!!!
Face Book [ 28 July 2013 ]
Students' Federation For Free Eelam - SFFE via Niyas ahmad
அறப்போர் -தமிழகத்தில் 28.07.2013 அன்று வெளியீடு
http://www.yarl.com/forum3/index.php?showtopic=125833&utm_source=rss_links&utm_medium=front_rss_tn_students&utm_campaign=yarl_front_rss
எங்கள் தமிழ் மக்கள் கட்டாயமாக பார்க்கவேண்டிய ஆவணப்படம்: அறப்போர் http://www.yarl.com/forum3/index.php?showtopic=125613&utm_source=rss_links&utm_medium=front_rss_tn_students&utm_campaign=yarl_front_rss
"அறப்போர்" ஆவணப்படம்பற்றி "பாலை" திரைப்பட இயக்குனர் ம.செந்தமிழன்
வழங்கிய நேர்காணல்