தோழர்களே நேற்று கொளத்தூர் மணி அண்ணன் கைது இன்று நெடுமாறன் அய்யா கைது, நாளை வைகோ ஐயாவும், சீமான் அண்ணனும் கைது செய்யப்படலாம்.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு நமக்கான ஆட்சியை கைப்பற்றுவது மட்டுமே, நம் வீட்டிற்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம் அதையெல்லாம் நாம் பிறகு பேசி தீர்த்துக்கொள்வோம், இல்லை பிறகு மோதிக்கொள்வோம்,
ஆனால் இன்றைய உடனடித்தேவை அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, சி.பி.எம் ஆகிய கட்சிகளை துடைத்தெறிவது தான்.
எனவே இந்த பாராளுமன்ற தேர்தலில் மதிமுக எந்த தேசிய கட்சிகளோடும் கூட்டணி வைக்காமல் தமிழக வாழ்வுரிமை கட்சி, SDPI போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும், சீமான் அண்ணன் அவர் ஏற்கனவே மதிமுக தனித்து நின்றால் பிரச்சாரம் செய்வேன் என்று சொல்லியுள்ளது போல் இந்த கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும்.
மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பது உண்மை குறைந்தபட்சம் இந்த அணி மூன்றாவது இடமாவது பெறும், இதே கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தலை சந்தித்தால் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆளும்கட்சியோ எதிர்கட்சியோ அது நாமாகத்தான் இருக்க வேண்டும். மக்களுக்காக இந்த தேர்தல் கூட்டணி அமைய வேண்டும்.
(facebook)